உடல் எடை அதிகமானால் நீரிழிவு நோய், மூட்டுவலி, முதுகுவலி, என எல்லா நோய்களும் ஒவ்வொன்றாய் வர ஆரம்பிக்கும்.
உடலில் கொலஸ்ட்ரால் உடலுக்கு தேவையான சக்தியாக மாறி நமக்கு அன்றாட வேலை செய்ய ஆற்றல் தருகிறது.
ஆனால் இந்த கொலஸ்ட்ரால் அதிகமானால்இதயத்தின் ரத்த தமனிகளில் சென்று படிந்துவிடும். பின் இதய நோய்வரும் அபாயம் உள்ளது. கூடவே ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி என வரவேற்கத் தொடங்கி விடுவீர்கள்.
கொழுப்புமிக்க உணவுகளை சாப்பிட்டு, அதன் பின் நோயினால் வாழ்நாள் முழுவதும் ஏன் மருந்து மாத்திரைகளில் நாம் கழிக்க வேண்டும்? எனவே எதுவும் அளவோடு சாப்பிடுங்கள்.
உணவுக்கட்டுப்பாட்டின் மூலமாக கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். அதேபோல் உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமனாக இருப்பவர்கள் இந்த பானத்தை குடித்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறையும்.
தேவையான பொருட்கள்...
வாழைப்பழம்- 1
ஆரஞ்சு- 1
பட்டைபொடி- அரை ஸ்பூன்
சோயா மில்க் - அரைக்கப்
வாழைப்பழத்தில் எல்லா விட்டமின்களும் உள்ளன. முக்கியமாய் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது ரத்தக்கொதிப்பை அண்ட விடாது.
ஏனெனில் பொட்டாசியம் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவைக் கட்டுபடுத்தும்.
ஆரஞ்சுபழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. அது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும். சோயா மில்க்கில் அதிகமாய் புரோட்டின் உள்ளது.
உடலுக்கு தேவையான போஷாக்கினை அளித்து அதிக கலோரிகளை எரிக்கிறது. பட்டை சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
வாழைப்பழம் ஆரஞ்சு, தோலை நீக்கி துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்த பின் அதனுடன்சோயா மில்க் சேர்க்கவும். இதனை கிளாஸில் ஊற்றி அதனுள் பட்டைபொடியை சேர்த்து கலந்து பருகவும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் சேராது.
மேலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நாளடைவில் குறைந்து விடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.