20/04/2019

கிராம்பின் மருத்துவ குணங்களை அறிவோம்…


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது...

இந்தியாவில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள்...


இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த
பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும்
அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும்.

இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்
இந்தியாவின் இரண்டாம் பிரதம
மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966
ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்ட சில மணிநேரங்களில்
மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அரை நூற்றாண்டை கடந்த போதிலும்,
இன்று வரை அவர் மரணத்தில் மர்மம்
நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009
ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற
பத்திரிகையாளர், சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின்
கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அவரின் மரணத்தின் போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்...

அதிமுக கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்டது தமிழக முதல்வர் எடப்பாடி அதிரடி...


https://youtu.be/vM7ohQxcy5Q

Subscribe The Channel For more News...

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை...


உலக அதிசயப்படியலில் இடம் பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்...

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான ச,ரி,க,ம,ப,த,நி என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது.

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது. இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை, உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

சரி இது எதற்காக பயன்பட்டது ?

அந்தக்காலத்தில் இருந்த இசைக் கலைஞர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக் கருவியை கூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்துள்ளனர். இது போன்றவை உலகில் எந்த இடத்திலும் இல்லை என்பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது.

இந்த இசைத்தூண்களை "மிடறு” என்று அழைத்தார்கள். இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான அலைகற்றையை உருவாக்குகின்றது.

எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது?

இந்திரா காந்தி அணுஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார்" என்பவரும் அவருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளிந்துள்ள" இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய்ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்றும் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.

"In situ metallography" (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது" தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள்" என தெரிய வந்தது.

" spectral analysis "என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களில் வரும் இசையானது" தன்மைக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றயினால்" சப்தம் உருவாவதாக தெரிவிக்கின்றது.

சப்தம் உருவாவதே ஒரு அதிசயாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினாலே இசை எழுகின்றது?

நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்தியலை கொண்டு அடிக்கப் போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்.

இசை என்பது காற்றை உள்வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை.

இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த" இசைத்தூண்கள்" ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது.

நெல்லையப்பர் கோவிலில் உள்ள இசை தூண் போன்ற இசை தூண்கள் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கின்றதா என தெரியவில்லை.. அப்படியே இருந்தாலும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போமா என்பது தெரியாதது.

ஆகையால் தாமதப்படுத்தாமல் இதுபோன்ற இடங்களுக்கு சென்று நம் முன்னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள், இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழியில் வந்த நாம் புதிதாக எதுவும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக்காப்போம்...

நரம்பு தளர்ச்சி நீங்க அருமையான இயற்கை மருத்துவம்...


https://youtu.be/GwiYv951zVQ

Subscribe The Channel For More News...

சங்கீதம், தாளம்...


கீதமானது தூய்மை செய்யப்பெற்றுக் குற்றம் இன்றி விளாங்கும்போது அது இசையாகின்றது (சங்கீதமாகின்றது). சங்கீதமென்றால் "ஸம் கீதம்- சம்யக் கீதம்- சங்கீதம்". சிறப்பினும் சிறப்பான மாண்புபெற்ற கீதமானது சங்கீதமாகும். கீதம் என்பதற்குச் சுரமென்றும், சுரக் கூட்டமென்றும் பொருள் உள்ளது. இந்த சங்கீதமாகிய இசையானது தொண்டையின் விரிவினாலும் ஒடுக்கத்தினாலும் இனிய ஒலி உருவத்தோடு வெளி வருவதாகும்..

சங்கீதம்: "கீத வாத்ய நிருத்யஞ்ச த்ரயம் ஸங்கீத முச்யதே" (சங்கீத இரத்தினாகரம்). இலக்கியத்தில் பேச்சும், எழுத்தும், விவகாரமும் இருப்பனபோலவும், கூத்தில் மெய்பாடும், கரணவகைகளும், தாளத்தின் சதி அடைவுகளும் இருப்பன போலவும், இசையாகிய சங்கீதத்தில் கீதம், வாத்தியம், நிருத்தியம் ஆகிய இம்மூன்றும் அடங்கின.

தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தற்போது எழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்."பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை,அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும்போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்."

ஏழு தாளங்கள்...

துருவ தாளம், மட்டிய தாளம், ரூபக தாளம், ஜம்பை தாளம், திரிபுடை தாளம், அட தாளம், ஏக தாளம்...

அமமுக வில் சசிகலாவிற்கு பதில் டிடிவி. தினகரன் பொதுச்செயலாளர் ஆனார்...


https://youtu.be/UDD4mfgeB24

Subscribe The Channel for More News...

இலுமினாட்டி - நம்மை இயக்கும் மர்ம குழுமம்...


நம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்…

அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.

நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டு விட்டோம் என…

நம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்…

முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப் பற்றி பார்ப்போம்…

இலுமினாட்டி (Illuminati)…

பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த இலுமினாட்டி ஐக்கூற வேண்டும்..

உலகின் புதிய கட்டளை (New world order) எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது.

எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.

20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.

தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது.

அவர்கள் தான் உலகின் கிங் மேக்கர் களாக இருகிறார்கள்..

யார் இவர்கள் -  நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன.

13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது… இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள்.

இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப் பேணுவதில்லை…

காரணம், தமது இலுமினாட்டி தன்மைக்குரிய மரபணுக்களைப் பேணுவதற்காகத் தான். மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.

இவர்களின் நோக்கம் தான் என்ன…

சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…

ஒரு உலகம்.. ஒரு அரசு என்பது தான் இவர்களின் நீண்டகாலத் திட்டம்.

இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும்..

இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…

இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்தி வருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.

உதரணமாக -  சில வகை இசை வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.

மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.

முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு.

அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது..

எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும்…

மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத் தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு…

நீக்கப்படுவார்கள் - ஒழிக்கப்படுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்களின் மிகப்பெரிய தலையிடி…
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்…. இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்… இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள்..

அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


வாழ்வின் இலட்சியம்...


நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும்.

பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும்.

அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள்.

அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள்.

இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல்.

இந்தச் சொல்லைத் தெரிந்திருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்...

ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு விரைவில் திமுக உயர்மட்ட குழுவில் முக்கிய பதவி...


https://youtu.be/SfVx_7Gc1O4

Subscribe The Channel For More News...

இன பற்று இழிவானதா?


இதே தமிழ்நாட்டில், ஒரு காலத்தில் நாட்டுப்பற்றை விட உயர்வான ஒன்றாகப் போற்றப்பட்டது இனப்பற்று...

ஆனால் இன்று இனப்பற்று என்னும் சொல்லையே யாரும் பயன்படுத்துவதில்லை; ‘இன உணர்வு’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

மேடையில் மார் தட்டுபவர்கள் கூட ‘இன உணர்வு’ என் இரத்தத்திலேயே ஊறியத என்றுதான் முழங்குகிறார்கள்! அந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது இனப்பற்று.

இனம், தமிழ், தமிழன் என்று பேசுவதெல்லாம் இன்று அநாகரிகமாகி விட்டது. இப்படிப் பேசுபவர்களையெல்லாம் பிற்போக்குத்தனம் உடையவர்களாக, குறுகிய மனப்பான்மை உடையவர்களாக, இழிவானவர்களாகப் பார்க்கிறது இன்றைய தமிழ்நாட்டுச் சமுதாயம். குறிப்பாக இளைஞர்கள், அதிலும் பெருநகர இளைஞர்கள் பலர் இன்று இன உணர்வு பற்றி இப்படித்தான் நினைப்பு கொண்டிருக்கிறார்கள்.

இன உணர்வு என்பதும் ஏதோ சாதி உணர்வு போன்ற ஒரு குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு எனவும், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு எனவும் கருதுகிறார்கள்.

ஆனால் தங்களைத் தவிர வேறு யாராவது இந்தியாவில் இப்படிக் கருதுகிறார்களா என்று தமிழர்கள் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆந்திரர்களோ, வங்காளர்களோ, கன்னடர்களோ, காஷ்மீரிகளோ யாராவது இப்படி நினைக்கிறார்களா?

இந்தியப் பிரதமர் கூடத் இன்றும் தன் தாய்மொழியிலும் இன அடையாளத்தோடு தானே காட்சியளிக்கிறார்?

சீக்கியர் சீக்கியராகவும், மராத்தியர் மராத்தியராகவும், குஜராத்தியர் குஜராத்தியராகவும் இருந்தாலெல்லாம் கெட்டுவிடாத இந்திய ஒருமைப்பாடு தமிழர் தமிழராக இருந்தால் மட்டும் கெட்டுவிடுமா என்று தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இப்படி இந்தியாவில்தான் என்றில்லை. உலகில் எந்த இனத்து மக்களும் தங்கள் இன அடையாளத்தை ஒருபொழுதும்

எதற்காகவும் கைகழுவுவது இல்லை. வெளிநாட்டுத் தமிழர்கள் உட்பட!

இனப்பற்று என்பது குறுகிய மனப்பான்மை என்றால் உலகத்திலேயே தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தவிர மற்ற எல்லாருமே குறுகிய மனப்பான்மை படைத்தவர்களா?

மற்ற இனத்தவர்களெல்லாம் அவரவர் இன அடையாளங்களோடு வாழும்பொழுது தமிழர்கள் மட்டும் தங்களுடைய இன அடையாளங்களைக் வெறுப்பது அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாக, அவர்களுடைய தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக ஆகாதா என்பதை ஒவ்வொரு தமிழரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகில் ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு மொழி, பண்பாடு, வரலாறு போன்றவை இருக்கின்றன.

இனம் என்கிற ஓர் அடையாளத்தை நாம் புறக்கணிப்பதால் பெருமைக்குரிய இத்தனை அடையாளங்களையும் இழக்கிறோம். கூடவே நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகள், அவர்களின் சாதனைகள் எனப் பல அறிவுசார்ச் சொத்துகளையும் இழக்கிறோம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வேம்பு, மஞ்சள், பாசுமதி அரிசி முதலான பதினெட்டு விளைபொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை வாங்கியபொழுது அவற்றையெல்லாம் வழக்காடி மீட்க முடிந்ததே இங்குள்ள பல்வேறு இனங்களைச் சேர்ந்த முன்னோர்களால் கண்டு பிடிக்கப்பட்டவைதாம் அவை என்பதை நிரூபிக்க முடிந்ததால்தான். அப்படி நிரூபிக்க முடிந்ததே, இன்றும் தம் இனப் பழக்கவழக்கங்களையும் அடையாளங்களையும் துறக்காத மக்கள் இங்கு இருப்பதால் தான்.

எனவே இனம் என்பது வெறும் குழு அடையாளத்தைத் தருவது மட்டும் இல்லை. கலை, அறிவியல் எனப் பல்வேறு துறைகளிலும் நம் முன்னோர்கள் என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்களோ, எவ்வளவெல்லாம் சாதித்திருக்கிறார்களோ அந்த அறிவுசார்ச் சொத்துகளுக்கெல்லாமான வாரிசு உரிமையை நமக்குத் தருவதும் கூட!

அது மட்டும் இல்லை. இனம் என்பது இந்நாளில் ஒரு பன்னாட்டு அடையாளம் (International Identity).

எல்லா இனத்து மக்களும் அவரவர் எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்த வரை மொழி என்பது வெறும் ஊடகமாகவும், இனம் என்பது வெறும் குழு அடையாளமாகவும்தான் இருந்தன. ஆனால் எல்லா நாட்டு மக்களும், எல்லா இனத்து மக்களும் உலகின் எல்லா நாடுகளிலும் கலந்து வாழத் தொடங்கிவிட்ட இந்த உலகமயமாக்கல் காலத்தில் (Globalisation Era) நாட்டின் பெயரை விட இனத்தின் பெயரும் மொழியின் பெயரும்தான் ஒருவருடைய உண்மையான பன்னாட்டு அடையாளமாக விளங்குகின்றன!

அதுவும் இந்தியாவைப் பொறுத்தவரை இங்குள்ளவர்களுக்கு இன அடையாளம் என்பது எந்தக் காலத்திலும் இன்றியமையாதது. ஏனென்றால் உலகில் மற்ற நாடுகளுக்கெல்லாம் அந்தந்த நாட்டுக்கென்று மொழி, பண்பாடு, உணவுமுறை, ஆடைமுறை, வரலாறு முதலானவை இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு அப்படி இல்லை. இங்குள்ள பதினான்குக்கும் மேற்பட்ட தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும், வரலாறும்தான் இந்தியாவின் மொழி, பண்பாடு, வரலாறு எல்லாம்.

மற்றபடி இந்தியாவுக்கென்று தனிப்பட்ட அடையாளம் எதுவும் கிடையாது. எனவே மற்ற நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த இன அடையாளங்களை இழந்தாலும் அவர்கள் வாழும் நாட்டுக்கென்று இருக்கும் பண்பாட்டு, வரலாற்றுப் பின்னணி அவர்களின் அடையாளமாக நிலைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியர் ஒருவர் அவ்வாறு தன் தாய்மொழியையோ இன அடையாளத்தையோ மறந்தால் அவர் பன்னாட்டு அளவில், சொந்த அடையாளம் (International Self Identity) எதுவுமே இல்லாத ஒருவராகத்தான் ஆகி விடுவார்.

தனித்தன்மை பேணுதல் (Character Maintenance) என்னும் பெயரில் நடை, உடை, பாவனை, தோற்றம், பேசும் முறை, சிந்திக்கும் முறை போன்ற சிறு சிறு அடையாளங்களைக் கூட விட்டுக் கொடுக்காமல் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படிப் பன்னாட்டு அடையாளமாகத் திகழும் இனத்தையும் மொழியையும் விட்டுக் கொடுக்கலாமா?

தமிழ் இனம் சிந்திக்கட்டும்...

பஞ்சாங்கம் எச்சரிக்கை... 2019 சென்னை யை அழிக்கப் போகும் புயல்...


https://youtu.be/fKVQA-darUc

Subscribe The Channel For More News...

அருகம்புல்...


அருகம்புல் அதிசயமான மருத்துவ குணங்களைக்கொண்டது. அதன் தாவரவியல் பெயர்: சினோடன் டாக்டிலோன். அருகு, பதம், தூர்வை போன்ற பெயர்களும் இதற்கு உண்டு.

மனிதனின் பிணி நீக்கும் மூலக்கூறுகள் அதில் அதிகம் இருந்தாலும், அருகம்புல் காணும் இடமெல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

எல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.

இந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது. மங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அரு கம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக 2 நாட்களில் புழுக்கள் உருவாகி விடும்.

ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக்கவனிப்பதில்லை. புல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.

அருகுவே. புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்.. என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.

அது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்' என்கிறது சித்த மருத்துவம். இதை 'விஷ்ணு மூலிகை' என்றும் சொல்கிறார்கள்.

பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குரு மருந்து' என்றும் அழைக்கிறார்கள். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. அருந்தினால் நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுப்படும்.

அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.

இதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.

இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.

தளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்..

அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்...

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது.

எப்போதும் எல்லோராலும் அருகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.

அருகம்புல் - இஞ்சி ஜூஸ்...

தேவையான பொருட்கள்..

இளசான அருகம்புல் - ஒரு கட்டு
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்
தேன் - ஒரு கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - 1/2 சிட்டிகை

செய்முறை...

இஞ்சியை தோல் சீவி வைக்கவும்.

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைக்கவும்.

அரைத்த கலவையை நன்றாக வடிகட்டி அதனுடன் எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, ஐஸ் சேர்த்துப் பருகவும்...

இதை நான் சொன்னால் தேச துரோகி...


சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு...


சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான் (Kublai Khan)...

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில்...

சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக
விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான் (Kublai Khan)...

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டு பிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்...

கால பயணம் எனும் டைம் டிராவல் பற்றி அற்பதமான உண்மைகள்...


https://youtu.be/CPaDtLCVbUQ

Subscribe The Channel For More News...

தாய்லாந்தில் தமிழ்...


கீழ்க்காணும் படம் - தாய்லாந்தில்
கண்டெடுக்கப்பட்ட கி.பி இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழி எழுத்து படிந்த மட்பாண்டம்.

தாய்லாந்து (தாய்) மொழியில் தமிழ்
சொற்களின் வேர்கள்..

தாய்லாந்து நம் தமிழ் மன்னர்களால்
ஆளப்பட்டது, அக்காலத்தில் தமிழ்
மொழியில் இருந்து பலச் சொற்கள்
தாய்லாந்து மொழிக்குத்
தருவிக்கப்பட்டன.

தாய்லாந்து மொழி தமிழ் மொழியின்
துணையோடு தான் வளர்ச்சிக் கண்டிருக்கக் கூடும்.

அதில் சிலச் சொற்கள் பின்வருமாறு...

1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய...

தினமும் வேக வைத்த பூண்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா.?


 https://youtu.be/FAawAadmguA

Subscribe The Channel For More News...

ஐன்ஸ்டீனின் மூளை...


படத்தில் இருப்பது மாபெரும் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளை. இன்றைக்கும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவருடைய மூளையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் வியந்து போய் பேசுகிறார்கள்.

இத்தனைக்கும் அவரது மூளையில் 3 சதவிகிதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாம், அது பத்து சதவிகிதமாக இருந்திருந்தால் என்னென்ன கண்டு பிடிப்புகள் வந்திருக்குமோ...

இத்தகு பெருமைமிக்க ஐன்ஸ்டீனிடம், மனித கண்டு பிடிப்புகளில் உங்கள் மனதை வெகுவாக கவர்ந்தது எது என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டதாம், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக புத்தகங்கள் என்று பதில் சொன்னாராம்.

அத்தகு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நமக்கு இன்று மெச்சத்தகுந்த அளவில் இருக்கிறதா?

பல் துறை நிபுணர்கள் எழுதிய நூல்கள், பல விலை உயர்ந்த புத்தகங்கள் குவிந்திருக்கும் இடம் நூலகம். இத்தகு நூல்களை நூலகங்களில் மட்டுமே ஒருங்கே நாம் கண்டு, பயன்படுத்திட முடியும்.

நம்மில் எத்தனை பேருக்கு தொடர்ந்து நூலகம் செல்லும் வழக்கம் இருக்கிறது?

இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் ஓர் நகரத்தில் 20 நூலகங்களாவது இருக்க வேண்டும். ஆனால் இருக்கும் ஒரு நூலகத்தில் கூட்டத்தை காணோம்.

ஆனால் இருக்கவே கூடாத டாஸ்மாக் கடைகள் 20 இருக்கின்றன, அத்தனையிலும் கூட்டம் அலை மோதுகிறது. இதுதான் இன்றைய தமிழ்க்குடிகளின் நிலைமை.

சமீபத்தில் ஒரு சர்வே கூறுகிறது.7 கோடி மக்கள் கொண்ட தமிழகத்தில் ஒரு கோடியே முப்பது லட்சம் மக்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாம். அதில் 50 லட்சம் பேர் தினமும் குடிப்பவர்களாம். 30 சதவிகிதம் பேர் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாம். கொடுமை.

இந்த நிலை தொடர்ந்தால் வெள்ளப் பெருக்கினால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம் போல், கடற்கோளினால் அழிந்த குமரிக்கண்டம் போல், கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்ற பெருமைமிக்க சமுதாயம் டாஸ்மாக்கினால் அழிந்தது என்ற நிலை இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது...

இந்த 5 ராசிகாரர்கள் தான் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அசால்டாக அடிச்சு தூக்குவாங்களாம்...


https://youtu.be/QMcbu_ASySQ

Subscribe The Channel For More News...

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி?


அலாவுதீனின் பூதத்தை போல ஈர்ப்பு விதியும் உங்களுடைய ஒவ்வோர் ஆணையையும் நிறைவேற்றும்..

நீங்கள் விரும்பியவற்றை பெற மூன்று எளிய படிகள் உருவாக்க , படைப்பியக்கச்  செயல்முறை உங்களுக்கு உதவும், அவை கேளுங்கள், நம்புங்கள், மற்றும் பெறுங்கள்  ஆகியவை.

உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடம் கேட்கும் போது , உங்கள் விருப்பம்  குறித்த தெளிவை நீங்கள் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

நீங்கள் கேட்டது ஏற்கனவே கிடைத்து விட்டது போல நடந்து கொள்வது, பேசுவது மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும். கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் நீங்கள் ஒளிபரப்பும் போது அதை நீங்கள் பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை , நிகழ்வுகளை , மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

உங்களது விருப்பம் நிறைவேறிவிட்ட பிறகு நீங்கள் எப்படி உணர்வீர்களோ அத்தகைய மனவுனர்வை உண்டாக்கிக் கொள்வது பெற்றுக் கொள்ளுதலின் முக்கியமான அம்சம். மகிழ்ச்சியான மன நிலையுடன் இருப்பது, உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் அலைவரிசையில் உங்களை வைத்து விடும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் , கவனத்தை எடைக் குறைப்பில் காட்டாதீர்கள். மாறாக, கச்சிதமான எடையில் உங்களது கவனத்தைக் குவியுங்கள். உங்களுடைய கச்சிதமான எடையை உணர்வுப் பூர்வமாக உணருங்கள், அது உங்களை நோக்கித் தானாகவே ஓடி வரும்.

நீங்கள் விரும்புபவற்றை உங்களுக்கு அளித்திடப் பிரபஞ்சத்திற்குச் சொடுக்குப் போடும் நேரம் கூட ஆகாது. ஒரு டாலரைத் தருவிப்பது எவ்வளவு எளிதோ அதே அளவு எளிதானது தான் ஒரு மில்லியன் டாலரைத் தருவிப்பதாகும்.

ஒரு டம்ளர் காபி அல்லது கார் நிறுத்தும் இடம் போன்ற சிறிய விசயங்களில் துவங்குவது , ஈர்ப்பு விதி மீது நம்பிக்கை ஏற்படச் சிறந்த வழி , ஏதாவது சிறிய விஷயம் ஒன்று தேவை என்று சக்தியுடன் கேளுங்கள். ஈர்க்கக் கூடிய உங்கள் சக்தியை நீங்கள் உணர உணர பெரிய விசயங்களை ஈர்ப்பது பெரிய காரியமாக இருக்காது.

நாளைய தினம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ , அதை முன்கூட்டியே சிந்தனை மூலம் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையையும் உங்களது நோக்கப்படி உங்களால் அமைத்துக் கொள்ள முடியும்...