24/04/2017

ஆசியாவிலேயே 3 வது அசுத்தமான நகரம் மும்பை 4வது அசுத்தமான நகரம் டெல்லி....


பாஜக மோடியின் கிளீன் இந்தியா க்ளீன் போல்டு...

சித்தராவது எப்படி - 34...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் பத்து...

விழிப்பு நிலை இல்லாமையின் விபரீத போக்கு...

விழிப்பு என்றால் வெறும் கண்ணை திறந்து இருக்கும் நிலையென்று மிகவும் அடி மட்ட அர்த்ததோடு மனித குலம் நினைத்துக் கொண்டு இருக்கிறது.. கடவுள் நிலைக்கு அழைத்துச் செல்லக்கூடியதும் அதுவே..

தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை காண முடியாமல் இருப்பதற்கு காரணம் விழிப்பு நிலை இல்லாததே,, அப்படி கண்ட கடவுளிடம் வரங்கள் எதுவும் பெற முடியாததும் விழிப்பு நிலை குறைபாடே.. அப்படி பெற்றதை பயன் படுத்த தெரியாததும் விழிப்பு நிலை குறைபாடே..

விழிப்பு நிலை குறைபாட்டால், இதிகாச நாயகர்கள் பட்ட அவதிகள் கொஞ்சம் அல்ல.. தருமரின் விழிப்பு நிலை குறைப்பாட்டால், சூதாட்டத்தில் தன் இராஜ்ஜியம் மட்டும் அல்ல திரௌபதியையும் இழக்கவேண்டிய நிலைவந்தது..

இராமனே தன் மனைவி சீதையை இராவணிடம் பறி கொடுக்கக் கூடிய நிலை வந்தது.. சிவனார் சூரபத்மனனுக்கு வரம் அளித்து பட்ட அவஸ்தை அனைவரும் அறிந்ததே..

திரு மூலரே கூடு விட்டு கூடு பாயும் போது தன் தேகம் இழந்து முடிவில் மாடு மேய்பவரின் உடம்பில் புக வேண்டியதாயிற்று..

இப்படி ஆயிரம் ஆயிரம் உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.. எல்லா மகான்களும் விழிப்பு நிலை குறைப் பாட்டாலே மறைந்து போனார்கள்..

வாழ்ந்த காலம் சிறப்பாக இருந்தாலும் விழிப்பு நிலை குறைபாட்டால் மறைந்து போக வேண்டிய நிலை வந்தது..

விழிப்பு நிலை குறைப்பாட்டாலே தேகம் சிறுக சிறுக சிதைவடைந்து முடிவில் மரணம் நிகழ்கிறது..

இது இறைவன் அவதாரம் என்று சொல்லிக் கொண்ட அனைத்து மகான்களுக்கும் பொருந்தும்..

தங்கள் மறைவிற்கு பல பல சமாதானங்கள் சொன்னாலும், விழிப்பு நிலை கருத்துக்கு முன்னால் எல்லாமே பொய்யாய் போய் விட்டனர்.. இதை சற்று விழிப்பு நிலையில் உணர்ந்தால் மட்டுமே விளங்கும்..

எந்த மதத்தின் கதாநாயகர்களும் விழிப்பு நிலை என்ற ஒன்றை உணராமல் போய் இருந்து இருக்கலாம்.. அல்லது அதைப் பற்றி தெரியாமல் போய் இருந்து இருக்கலாம்..

அவர்கள் மேல் மிகுந்த பற்று கொண்டவர்கள் விழிப்பு நிலை குறைபாட்டால் அந்த மகான்கள் அடைந்த மறைவுதனை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை..

அதனை ஜீவ சமாதி என்ற கௌரவப் பட்டம் கொடுத்து பூஜிக்கத் தொடங்கி விடுகிறார்கள்..

மதங்களில் சொல்லப் படும் அனைத்திலும் விழிப்புக்கு முக்கியத்துவமும் பயிற்சியும் சொல்லப் படாததால், இன்று மதமே விழிப்பு நிலைக்கு எதிராக செயல் படுகிறது..

எல்லா மதங்களும் மயக்க நிலை நோக்கி வேகமாக நகரத் தொடங்குவதால் எல்லா மதங்களும் உலக சமாதானத்திற்கும் அமைதிக்கும் முதல் சவாலாக உள்ளன..

நெஞ்சை பதற வைக்கும் அராஜக செயல்களுக்கு கடவுளிடமிருந்து இன்று வரை தகுந்த உடனடி தீர்வு வராததால், கடவுளே விழிப்பு நிலையின்றி மயங்கி கிடக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது..

என்ன தான் விடிவு என்று எண்ணிப் பார்க்கையில் அனைத்திற்கும் ஒரே தீர்வு நம் அக குருவினை எழுப்பி விட செய்வதே.. அககுருவின் விழிப்பு நிலையால் அனைத்து செயல் கூடும்..

மயக்கமும் மோன நிலையை தரும் பயிற்சிகளையும், பரவசம் பேரானந்தம், பொய்யான சமாதானம் தரும், விழிப்பு நிலையற்ற பக்தி மார்க்கங்களையும், தகுந்த அடையாளம் காட்டி, நம்மை நேர் வழியில் வழி நடத்தும் தகுதி, அந்த அக குருவிடம் மட்டுமே உள்ளது..

அந்த அக குருவினை எழ செய்யும் சிவ கலப்பு யோகம் இப்போது புது பொலிவோடு வர தொடங்கி விட்டதால் அறிவு என்ற ஆகாய வானில் நம்பிக்கை நட்சத்திரம் உதிக்கத்தொடங்கி விட்டது..

அது சூரியனை போல் பிரகாசிக்க தொடங்கி, விழிப்பு என்ற பெரும் பிரகாசத்தை வாரி வழங்க, அந்த சூரிய கனலில் நிறை நிலை மனிதன் அல்லது சித்தர் உருவாகும் காலம் வெகு தூரம் இல்லை என நம்புவோமாக..

இறைவனே தான் படைத்த ஜீவர்கள் அந்த நிலைக்கு உயரட்டும் என்று காத்துக் கொண்டும் இருப்பார் போலும்..

சுவாச ஒழுங்கிலே தொடங்கி பல படிகளில் அளவற்ற விழிப்பு நிலை பெருக்கத்தால் எல்லாம் செயல் கூடும் என்பது திண்ணம்... சத்தியமும் கூட...

அதை, மறவாது நம்பிக்கையோடு பயின்று, செம்மை, சிவநிலை பெறுவோமாக...

பாஜக ஏமாற்று மோடியின் தயாரிப்பின் ஏமாற்று உபி முதல்வர்...


இரண்டே இரண்டு செட் ட்ரெஸ் வெச்சிருக்க உத்தமனுக்கு ஏன் இவ்ளோ சொத்து காசு? பதில் சொல்லுங்கோ காவிகளா...

கோவில்களில் பாலியலில் சிற்பங்கள் போதிக்கும் தத்துவம்...


இவ்வகையான பாலியல் சிற்பங்கள் கோபுரத்தின் வெளிப்புறத்தில் தான் காணப்படும்.

ஒரு மனிதன் பாலியலில் உச்சத்தில் இருக்கும் போது  நான் என்ற சிந்தை இல்லாமல் இருப்பான்.

நான் என்ற சிந்தை எந்த தருணத்தில் அறுந்து போகிறதோ அந்த தருணத்தில் அவன் இறைத்தன்மையை அடைகிறான்.

ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக நான் என்ற அகந்தையற்ற சிந்தனை காமத்தில் 1 நிமிடம் கூட நீடிப்பதில்லை. இதன் காரணமாகவே இதனை சிற்றின்பம் என்று கூறுகிறார்கள்.

இத்தகைய நிலையை தியானத்தின் மூலமாக மட்டுமே ஒரு மனிதனால் நிரந்திரமாக அடைய முடியும். அதனால் இதை பேரின்பம் என்று கூறுகிறார்கள்.

காமத்தை எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும் அது வெறும் வெளிப்புற இச்சையாகவே கருதப்படுகிறது. அதன் காரணத்தினால் தான் இத்தகைய சிற்பம் வெளிப்புறமாக செதுக்கப்பட்டிருக்கிறது.

நான் என்ற அகந்தையற்ற சிந்தனையை ஒரு மனிதனால் தியானத்தின் மூலமாக மட்டுமே நிரந்திரமாக பெற்று முக்தியடைய முடியும்.

இங்கே தியானமானது மனதால் மட்டுமே சித்தமாகும் விசயம்.

அதனால் தான் கருவறை முதல் தியான மண்டபம் வரை கோவிலின் உள்ளே இருக்கிறது.

அக புறத்தில் கிடைக்கும் 1 நிமிட இறைத்தன்மையை காட்டிலும் அகத்தின் மூலமாக நித்திய இறைத்தன்மைக்கு வழி வகை செய் என்பதை உணர்த்தவே பாலியல் சிற்பம் கோவிலின் வெளிப்புறம் நிறுவப்பட்டுள்ளது...

கள்ளத்தனமாக சாராயம் விற்பனை, விருதுநகர் ஜமீன் சல்வார்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்...




ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 34...


மந்திர தியானம்...

அடுத்ததாக இன்னொரு எளிமையான, சக்தி வாய்ந்த தியானமான மந்திர தியானத்தைப் பார்ப்போம். மந்திரம் என்றால் அது இந்து மத தியானம் என்பது போல் ஒரு எண்ணம் தோன்றலாம். ஆனால் இது சர்வ மதத்தினரும், மதங்களைச் சாராதவர்களும், நாத்திகர்களும் கூட பின்பற்றக் கூடிய வகையில் அமைந்த தியானம் என்பதே உண்மை.

மந்திரம் என்பது சக்தி வாய்ந்த சொல் அல்லது சொற்றொடர். இந்த மந்திரங்களின் சக்தியை இந்தியர்களும் திபெத்தியர்களும் பண்டைய காலத்திலேயே நன்றாக அறிந்திருந்தார்கள். ஓம் என்கிற ஓங்காரத்தில் இருந்தே அனைத்தும் தோன்றின என்கின்றது இந்து மதம். ஓம் மந்திரமும் காயத்ரி மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களாக இந்துக்கள் கருதுகிறார்கள்.

ஆதியில் வசனம் இருந்தது. அந்த வசனமே தெய்வத்துடையதாக இருந்தது. அந்த வசனமே தெய்வமாக இருந்தது என்று பைபிள் கூறுகிறது. (In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. New Testament, John1:1-2)
அரபுக்கதைகளிலும் சில மந்திரச் சொற்கள் அற்புதங்களை நிகழ்த்துவதாகக் கூறுவதை நாம் படித்திருக்கிறோம். ஆக உலகமெங்கும் மந்திரங்களை சக்தி வாய்ந்தவை என பலரும் பல காலமாக அங்கீகரித்திருப்பதை நாம் உணரலாம்.

இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப் படுகிறது. ஒரு காலத்தில் அது குருவால் தரப்படும் இரகசியச் சொல்லாக இருந்தது. அது நாமாகத் தேர்ந்தெடுக்கும் சொல்லாக இருந்ததில்லை. குரு மூலம் பெறும் அந்த சொல்லிற்கு மிகுந்த சக்தி இருப்பதாக நம்பப்பட்டதால் அந்த மந்திர தியானம் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டது. அன்றும் இன்றும் பிரபலமான தியான முறைகளில் ஒன்றாக இது இருந்து வருகிறது.

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்திலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு மந்திரம் தியானத்திற்காகத் தரப்படுகிறது. தியானத்தின் போது அந்த மந்திரச்சொல்லில் முழுக்கவனத்தையும் வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

மந்திர தியானம் மதங்களைக் கடந்து பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு சுவையான உதாரணத்தைச் சொல்லலாம். ஜான் மெய்ன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க ஐரிஷ் பாதிரியார் இரண்டாம் உலகப் போரின் போது அரசுப்பணியில் மலாயாவிற்கு அனுப்பப்பட்டார்.

அப்போது கோலாலம்பூரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்த ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியை சந்தித்த போது ஆன்மிக விஷயங்களைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி தியானங்கள் பற்றி விவரித்தது ஜான் மெய்னை மிகவும் கவரவே தங்கள் மதத்திற்கேற்ப தியானம் செய்ய முடியுமா என்று அவர் ஸ்வாமியைக் கேட்டார்.

தியானம் மதங்களைக் கடந்தது என்று சொன்ன ஸ்வாமி ஜான் மெய்னுக்கு ஒரு கிறிஸ்துவ புனித வார்த்தையை உபதேசம் செய்து அந்த மந்திரத்தின் மீது தினமும் இருமுறை தியானம் செய்யச் சொன்னார். அந்த மந்திர தியான முறையையும் ஸ்வாமி அவருக்குச் சொல்லித்தந்தார். அவர் சொல்லித் தந்தபடியே தியானத்தை செய்த ஜான் மெயின் வாரா வாரம் ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதியின் ஆசிரமத்திகே வந்து அந்தத் தியானத்தை ஸ்வாமியுடன் சேர்ந்து செய்தார். அதனால் சிறப்பான ஆன்மிக அனுபவத்தைப் பெற்றதால் ஜான் மெயினின் ஆன்மிக வாழ்க்கையின் அங்கமாக அந்த தியானம் மாறியது.

இங்கிலாந்து திரும்பிய பின்னர் அந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் அவரது தலைமை பாதிரியாரிடமிருந்து எதிர்ப்பை சந்தித்தார். இந்த தியான முறை கிறிஸ்துவ சம்பிரதாயத்திற்கு எதிர்மாறானது என்று தலைமை பாதிரியார் தடுத்தார். சிறிது காலம் அந்த தியான முறையை நிறுத்திக் கொண்ட ஜான் மெய்ன் ஏதோ இழந்தது போல் உணர்ந்தார்.

பின் கிறிஸ்துவ நூல்களை ஆழமாகப் படித்த போது மிகப் பழைய காலத்தில் இது போன்ற தியான முறை கிறிஸ்துவர்களிடமும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார். பலரிடமிருந்து வந்த கடும் விமரிசனங்களைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தான் கடைப்பிடித்து வந்த தியானத்தைத் தொடர்ந்த ஜான் மெய்ன் தனது தியானத்திற்கு ’கிறிஸ்துவ தியானம்’ என்று பெயரிட்டு பரப்பினார். 1982ல் அவர் மறைந்தாலும் கிறிஸ்துவ தியானம் பல நாடுகளில் பிரபலமாகி பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி மந்திர தியானம் உலகில் பல வடிவங்களில், பல மதத்தினரால், பல பெயர்களில் இக்காலத்தில் பின்பற்றப்படுகிறது.

மந்திரத் தியானம் செய்யும் முறையை அறியும் முன் ஒரு மந்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது முக்கியம். அந்த மந்திரத்தை நீங்கள் ஒரு குருவிடம் இருந்து பெறலாம். இல்லா விட்டால் நீங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மந்திர தியானத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் மந்திரம் இரண்டு தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக அந்த மந்திரம் சுருக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக அது ஓரிரு வார்த்தைகளாக மட்டும் இருப்பது நல்லது. (காயத்ரி மந்திரம் மிக உயர்ந்த மந்திரமானாலும் அது ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் நீண்டு இருப்பதால் இது போன்ற மந்திர தியானங்களுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).

நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த மந்திரம் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு மிக உயர்ந்ததாகவோ, சக்தி வாய்ந்ததாகத் தோன்றுவதாகவோ இருக்க வேண்டும். அப்போது தான் மந்திர தியானத்தில் நீங்கள் பெறும் பலன் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (அந்த மந்திரத்தின் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. உதாரணத்திற்கு மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானத்தில் பங்கு பெறும் அமெரிக்க, ஐரோப்பிய நபர்களுக்கு மந்திரமாக தரப்படுபவை பெரும்பாலும் வேதங்களில் இருக்கும் சம்ஸ்கிருத சொற்கள் தான். அது புனித சொல், சக்தி வாய்ந்த மந்திரம் என்பது மட்டும் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது).

மந்திர தியானத்திற்குப் பொதுவாக பலரும் பயன்படுத்தும் சில மந்திரங்களையும், மந்திர தியானம் செய்யும் முறையையும் அடுத்து விரிவாகப் பார்ப்போம்.....

திமுக வின் மது ஒழிப்பும் ஸ்டாலினின் நமக்கு நாமே நாடகமும்...


சிந்து வெளியில் கூட சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன, ஆனால் தமிழகத்தில் கீழடியில் ஏன் கிடைக்கவில்லை?


கீழடியில் இதுவரை கிடைத்துள்ள ஏறத்தாழ 5000  பொருட்களை ஆய்வு செய்கையில் ஒன்றில் கூட மதம் தொடர்பான அடையாளங்கள், குறிகள், கோயில்-ஆலய கட்டுமான சிதைவுகளோ, சிலை, பூஜை சம்பந்தமான ஒன்று கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனென்றால், பழங்காலத் தமிழர்களின் பண்பாடு இறந்த-மூத்தோர் வழிபாடு, போரிலோ, சண்டையிலோ , காட்டு விலங்குகளுக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் சண்டையிலோ இறந்த வீரர் நினைவாக நடுகல் நட்டு அதை வழிபாடு செய்வதே ஆதித் தமிழர் பண்பாடாகும். பிற்காலத்தில் தான் மதங்கள் தோன்றியிருக்க வேண்டும்.

சங்க இலக்கியங்கள் கூறுகின்ற, மதங்கள் தோன்றுவதற்கு முந்தைய நாகரிகத்தின் அடையாளம் தான் கீழடி..

அதனால் தான் இந்த ஆய்வை, அதன் துவக்க நிலையிலேயே, நிறுத்தி வைப்பது என்ற முடிவை பாஜக மத்திய அரசு எடுத்துள்ளது...

பாஜக மோடியின் பரம ஏழை உபி முதலமைச்சர்...



அமைச்சரவையில ஒருத்தன் மங்குனியா இருந்தா பரவாயில்ல....



அமைச்சரவையே மங்குனியா இருந்தா.....

அதுவும் ஊழல் குற்றவாளிக்கு சர்வதேச தரத்தில் நினைவிடமாம்...

உங்க சொந்த பணத்தில் கட்டுங்கடா...

கிராமங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாக வேண்டுமா?


தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி  (21/04/2017) சென்னையில் அரசு மருத்துவர்கள் சார்பில் நடைபெற்ற உரிமை மீட்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை மக்களுக்கு பாமக எடுத்துரைத்த போது...

வடகொரியா சும்மா சீருமா ? தமிழச்சி ஆண்ட மண்ணு...


தமிழச்சி கொடுத்த வீரத்தை பார்...

அமெரிக்கா என்ன சைனா என்ன?
போர் தொடுப்போம்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 34...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனம் 34-ம் பகுதியாகும். இந்த 34-ம் தீர்க்க தரிசனம் பல குறிப்புகளை தனக்குள் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.

34-ம் தீர்க்க தரிசனத்தின்படி இந்திய அரசியல் அமைப்பில் பல புதிய சட்டங்களை மக்களவை உருவாக்கும் தருணத்தில் இருக்கும் என்றும், பல புதிய முயற்சிகளை இந்திய அரசு மக்களின் நலனுக்காக எடுக்கும் என்றும், இது பல கட்டமைப்புகளை தனக்குள் உள்ளடக்கிய தொகுப்பாக அரசு வெளிப்படுத்தும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல திருத்த மசோதாக்களை மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும், இதனால் இந்திய மக்களிடையே பல மறுமலர்ச்சிகள் உருவாகிட சூழ்நிலைகள் உருவாகும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில குறிப்புகளை தருகிறது.


இந்திய அரசு ஆன்மீக துறையில் பல நல்ல வாய்ப்புகளை மக்கள் மேற்கொள்ளும்படி பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், இதற்கு பிற அரசியல் அமைப்புகள் எதிர்ப்புகளை காட்டினாலும் இறுதியில் அரசின் முயற்சிகள் வெற்றி பெறும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.

இந்திய அரசியல் அமைப்பில் வரும் 2015-ம் ஆண்டு மக்களுக்கான ஒரு ஆண்டாக அமையும் என்றும், தமிழக உள்ளாட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் பல புதிய முயற்சிகளும் தமிழ் மக்களுக்கு சிறப்பானதொரு முயற்சியாக இருக்கும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்குல் பல இணக்கமான சூழல்கள் ஏற்படும் படியான திடீர் திருப்பங்களும் ஏற்படும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் சிறப்பான ஒரு குறிப்பை தருகின்றது.

காலத்தால் மாறாத ஒரு காவியம் விரைவில் இந்திய மண்ணில் உருவாகிடும் சூழல் இந்த 2015-ம் ஆண்டு அமைய உள்ளதாகும், இதனால் இந்திய அரசு அச்சூழலில் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்தும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை உடனே நிறைவேற்றும் என்றும், அச்சமயத்தில் ஒரு அரசியல்வாதி நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளது தெரியவரும் என்றும், அதனால் இந்திய அரசியலமைப்பில் சில கூச்சல்களும், குழப்பங்களும் உருவாகும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது. இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் பல மாற்றங்கள் உருவாகும் என்றும், மூத்த அரசியல்வாதி ஒருவரின் பணி அங்கு திடீரென்று உருவாகும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


இந்திய வான்வெளி ஆராய்ச்சியில் பல திருப்பு முனைகள் ஏற்படும் என்றும், இதுவரை உலக வான்வெளி அமைச்சகம் மேற்கொள்ளாத சாதனையை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள் என்றும், அச்சமயத்தில் உலகமே வியப்படையும்படியான ஒரு சம்பவம் இந்திய தேசத்தில் நடக்கும் என்றும், இது இந்தியாவிற்கு பேரையும், புகழையும் ஏற்படுத்தும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

மாநில அரசுகளுக்குள் உருவாகும் கடும் வாக்குவாதம் ஒரு சில தினங்களில் முடிவிற்கு வரும்படி சில நல்ல சம்பவங்கள் திடீர் என்று ஏற்படும் என்றும், இச்சமயத்தில் பிரபல நடிகர் ஒருவர் தனது அறிக்கையை திடீர் என்று பத்திரிக்கையின் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிடுவார் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தில் பல வேண்டாத சம்பவங்கள் நடைபெறும் என்றும், இதனை யாராலும் தடுக்க முடியாது என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

ஆன்மீக துறையில் உள்ள ஒரு இளம் சன்னியாசி தனது தகாத செயலால் மாட்டிக்கொள்வார் என்றும், அச்சமயத்தில் அவரைப்போன்றே ஒரு மடத்தின் மடாதிபதியும் தகாத செயலுக்காக காவல்துறையால் கைது செய்யப்படுவார் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகிறது.


தமிழக மக்களுக்கு மிகவும் நன்கு அறிமுகமாகிய ஒரு மூத்த அறிஞர் திடீரென்று மரணமடைவார் என்றும், அச்சமயத்தில் தென் தமிழகத்தில் ஒரு பிரிவினைவாதம் உருவாகும் என்றும், அச்சமயத்தில் அரசியல் தலையீடுகள் அங்கு காணப்பட்டாலும், மக்களின் ஒற்றுமையினால் அங்கு ஏற்படும் சூழல் உடனே சரியாகிவிடும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

தென் தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற ஒரு மடத்திலும், ஒருவரின் சமாதி அமைந்த இடத்திலும், தெய்வீக சங்கல்பங்கள் ஏற்படும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடையும்படி ஒரு மாபெரும் தெய்வீக சங்கல்பம் திடீரென்று ஏற்படும் என்றும், இந்திய வரலாற்றில் இதுவே பெரிய நிகழ்வாக இருக்கும் என்று 34-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

இலுமினாட்டி யும் பாகுபலி படமும்...


பாஜக மோடி மற்றும் அமித்ஷா வின்.. அடுத்த திட்டம்...


தமிழகத்தில் மத கலவரம் மற்றும் சாதி கலவரத்தை உண்டாக்கி.. வளர்ந்து வரும் தமிழர் கட்சியான பாமக வை உடைத்து மக்களிடம் அவப்பெயர் உண்டாக்குவது..

தமிழர்களே விழிப்போடு இருங்கள்...

பாஜக மோடியும் கேடுகெட்ட அரசியலும்...


சமூக அக்கறை கொண்டு எந்த ஒரு செயல்களும் செய்திடாதவர்...

மக்களுக்கான ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கும், உணர்வுபூர்வமான காரியங்களுக்கும் குரல் கொடுக்காதவர்...

எண்ணற்ற அறிஞர்கள் ஏராளமானோர் இருக்க... இவரை பரிந்துரைப்பது முட்டாள்தனம்...

நடிகர் என்பதைத் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது...?

செய்தி - தமிழக முரசு

தேனி மாவட்டத்தைக் கைப்பற்றத்துடிக்கும் கேரள அரசு...


தமிழக மக்களை எள்ளி நகையாடுவதிலும், தமிழக மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நீர் உரிமைகளையும் தொடர்ந்து மறுத்துவரும் கேரள அரசு, தற்போது தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் தேனி மாவட்டப்பகுதியை கைப்பற்றத் துடிக்கிறது.

தேனி மாவட்டம், கம்பமெட்டில் கடந்த சில மாதங்களாகவே கேரள அதிகாரிகள் தமிழக எல்லையோரத்தைச் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் கம்பமெட்டில் தமிழக வனப்பகுதிக்குள் கேரளாவின் கலால் மற்றும் ஆயத்தீர்வு துறையினர் அத்துமீறி நுழைந்து சோதனைச் சாவடி அமைத்தனர். அதைத் தடுக்க முயன்ற தமிழக சோதனைச் சாவடி பணியாளர்களை, கேரள போலீஸார் தள்ளிவிட்டுக் கண்டபடி தாக்கியுள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டது.

பின்னர், இருமாநில அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தைக்குப் பின்னர், இரண்டு மாநிலத்தவர்களின் முன்னிலையில் சர்வே பணிகள் மும்மரமாக நடந்தன.

சோதனைச் சாவடி தமிழக எல்லைப் பகுதியில் இருப்பது இறுதியில் உறுதியானது. இதனால், கேரள அதிகாரிகள் அமைதி காத்தனர்.

மேலும், தமிழக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தைக்கு வராமல் கேரள அதிகாரிகள் இழுத்தடித்து வந்தனர். இதனால் கேரள சோதனைச் சாவடி தமிழக பகுதியிலேயே கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி இரவு, கேரள ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், தமிழக எல்லைப்பகுதியில் கொடிக்கம்பம் நட்டு கட்சிக்கொடி ஏற்றினர். இதனையறிந்த வனத்துறை ஊழியர்கள் கொடிக்கம்பம் ஊன்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கட்சிக்காரர்களுக்கும் வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இப்பிரச்னை குறித்து தமிழக வனத்துறை ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் நேற்று மாலை உத்தமபாளையம் டிஎஸ்பி அண்ணாமலை தலைமையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தமிழக எல்லைப்பகுதியில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இதனால் ஆளுங்கட்சியினர் சிலர் கோஷம் எழுப்பினர். மேலும் தமிழக காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கேரள காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் எல்லைப் பகுதியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையறிந்த தமிழக செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கேரள ஆளுங்கட்சியினர் மற்றும் கேரள காவல்துறையினர், தமிழக பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசி தாக்க முயற்சி செய்தனர். இதனால் தமிழக - கேரள எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது...

பாஜக காரர்கள் பதவிக்காக எந்த கேடுகெட்ட செயலும் செய்வார்கள் என்பதற்கு உதாரணம்...


மோடியை காமராசரோடு ஒப்பிட்ட தமிழிசை தறுதலையே...


நீ வால் பிடிக்கும் கும்பல் பற்றி இதோ காமராசர் சொல்கிறார் கேள்...

திராவிட நாடு என்று தமிழர் தேசத்தை ஏமாற்றும் தீய சக்திகள்?


கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். தமிழர்களே படியுங்கள்...

திராவிடத்தின் ஆளுமையை உணறுங்கள். மறத் தமிழன் கூவம் நதிக் கரையில்?

உதாவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?

தமிழர் தேசத்தை தமிழரே ஆள வேண்டுமென்று உறுதியெடுப்போம்..

ஆரிய திராவிட கூட்டுக் களவானிகளை கருவறுப்போம்..

கருணாநிதி தி.மு.க. தெலுங்கர்
ஆற்காடு வீராச்சாமி தி.மு.க. தெலுங்கர்
கே.என். நேரு தி.மு.க. தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தி.மு.க. தெலுங்கர்
எ.வ. வேலு தி.மு.க. தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் தி.மு.க. தெலுங்கர்
நெப்போலியன் தி.மு.க. தெலுங்கர்
தயாநிதி மாறன் தி.மு.க. தெலுங்கர்
மு.க. அழகிரி தி.மு.க. தெலுங்கர்

வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்

விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் தே.மு.தி.க. தெலுங்கர்

வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்

தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்

கி. வீரமணி தி.க. தெலுங்கர்

விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்

கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்

கொளத்தூர் மணி கன்னடர்...

இன்னும் பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்...

இப்படி அந்நியர்கள் எல்லாம் திராவிட போர்வையில் தமிழர்களை ஏமாற்றி தமிழர் வளங்களை கொள்ளையடித்து.. தமிழனையே அடிமையாக்கி வாழவே திராவிடம் தேவைப்படுகிறது...

திராவிட திருடர்களே பதில் சொல்லுங்கள்...


ஏன் தமிழரின் அடையாளத்தை அடகு வைத்து திராவிடத்தை புகுத்திய ஈ வெ ராமசாமி நாயக்கரை மட்டும் பகுத்தறிவுவாதியாக இனங்காணப்பட வேண்டும்...

மனிதன் நாகரிக அறிவை விட்டு விலங்குகள் போல புணர்ந்து வாழுதல் தானா மனித சமூகத்துக்கு பாதுகாப்பானது..?

திருமணம் பெண்களுக்கு அவசியமில்லை.. பிள்ளை பெறுவது கேடு என்றால்.. (திராவிட சொம்புகள் இதை ஏன் செய்யவில்லை)..

மனித இனம் உலகில் எப்படி நிலைத்திருக்கும்...

அடிப்படை உயிரியல் அறிவு கூட இல்லாத ஒரு முட்டாள் தனமான வாதத்தை பகுத்தறிவு என்று காட்டுவது வெட்கமாக இல்லையா..?

இதனால் மக்கள் என்ன அறிவூட்டலைப் பெறப் போகின்றனர்..?

நாகரிகம் தொலைத்த ஈ வெ எதிர்பார்த்த காட்டுமிராண்டிகளா தமிழர்களை ஆக்குவது தான் பகுத்தறிவின் நோக்கமா..?

பெரியார் தொண்டன் கேள்வி...


பெரியார் கன்னடியர் என்பதற்காக கன்னடர்களுக்கு சாதகமாக என்ன செய்தார்?

என் பதில்...

(கன்னடர்கள் தப்பி விட்டனர்)

திராவிடம் என்ற அகண்ட கோணிக்குள் அடக்கி தமிழர்களின் தமிழின உணர்வை.. தேசிய உணர்வை அழித்ததும் தனித் தமிழ்நாடு உருவாவதற்கு எதிரான கருத்துக்களை விதைத்ததும்.. தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு என்பதன் மூலமான சாதியப் பிளவுகளை ஆழப்படுத்தியதும்.. மொத்தத்தில் தமிழகத்தை சமூக அளவில் பலவீன நிலையில் வைத்திருந்ததும் தான் கர்நாடகம் இன்று முதன்மை கொண்டிருக்க உதவியுள்ளது...

கன்னடர்களிடம் அடி வாங்கும் வரை திராவிடப் போர்வைக்குள் குளிர்காய்ந்து கொண்டிருந்த தமிழர்கள்.. அடி வாங்கியதும்.. வள்ளுவர் சிலையை உடைத்த போதும்.. அதை உணரத்தப்பட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியுமா...?

பெரியார் தொண்டன் கேள்வி...


ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவை திராவிடம் என்று நீங்கள் புறந்தள்ளும் தி.க. மற்றும் தி.மு.க. - தான் என்பதை மறுத்தவிட முடியுமா?

என் பதில்...

திமுக தனது அரசியல் கருதி குரல் கொடுத்தது. ஈழத்தில் இந்தியப் படைகளின் அட்டூழியங்களைத் தடுக்க முடிந்ததா.. சிறீலங்கா அரசுக்கு உதவுவதை தடுக்க முடிந்ததா..?

ஏன் மனிதாபிமான உதவிகளை அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பத்தான் முடிந்ததா..?

ஐநா பொதுச்செயலரே உதவி தேவை என்று 1995 யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது வேண்டுகோள் விடுக்க.. தமிழக அரசு திராவிடக் கட்சி அரசு என்ன உதவியைக் கொண்டோடி வந்தது..?

உதவி விடுதலைப் புலிகளுக்கல்ல. ஐநா தமிழ் மக்களுக்காகக் கோரியது.. என்ன செய்தார்கள். அறிக்கை விடுவதெல்லாம் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்ய என்பதை தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகள் பரிதவித்த முறையில் தெரிந்து கொள்ள முடிந்தது.

ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு சம உரிமை வழங்கி பாதுகாக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைத்து சந்தேகத்தோடு சிலோன் காரன் என்று நடத்துகின்றனர்.


இதுதான் தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாடா. அல்ல. இது திராவிடன் என்ற மாயையின் வெளிப்பாடு.

தமிழ் உணர்வும்.. தமிழ் தேசிய உணர்வும் இருந்திருந்தால்.. மண்டபம் அகதி முகாம் தேவைப்பட்டிருக்காது.

ஒவ்வொரு ஈழத்தமிழனும் தமிழக தமிழர்களின் விருந்தினராகி இருப்பர். அந்த நிலை எங்கே போனது.. யாரால்..?

பெரியார் தொண்டன் கேள்வி...


பெரியாரியத்தால் தமிழக பொருளாதாரம் எப்படி நசிந்து போனது என்று காட்டமுடியுமா?

என் பதில்...

பெரியாரால் தான் தமிழக பொருளாதாரம் மிளிரத் தொடங்கியது என்பதைக் காட்ட முடியுமா..?

மத்திய அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தமிழகத்திலும் செல்வாக்குச் செய்தது.

பெரியார் தான் சொல்லிட்டாரே.. வடநாட்டான் பிரதமராவதா..? இந்திய அரசியல் அமைப்பு தேவையில்லை.. நீதிமன்றங்கள் தேவையில்லை என்று..

பிறகெதற்கு இன்னும் இந்திய சட்டத்துக்கு அமைவாக சத்தியப் பிரமாணம் செய்து மாநில ஆட்சி நடத்துகின்றனர். பிரிந்து போக வேண்டியது தானே பெரியார் கொள்கைப்படி... திராவிட நாடாக அன்றி தமிழ்நாடாக. இதெல்லாம் நடந்திருந்தால்.. பெரியார் தமிழர்களுக்கு உதவினார் என்று சொல்லி வாதிடலாம்.

ஆனால்.. பேச்சும் செயலும்.. தமிழ் விரோதப் போக்கை வளர்க்க விரிவாக்கத் தான் உதவியுள்ளது...

இதென்னடா பாஜக மோடிக்கு வந்த சோதனை...


பெரியார் தொண்டன் கேள்வி...


பெரியாருக்கு முன்பு ஏன் தமிழ் உண்ர்வு எழவில்லை? பெரியாருக்கு முன்பு தமிழ்நாடே இல்லை என்பதாவது தெரியுமா? பெரியார் இயக்கம் ஆரம்பித்த போது நான்கு மாநிலங்களும் சென்னை மாகாணம் அல்லது மெடராஸ் பிரசிடென்ஸியாக இருந்ததாவது தெரியுமா?

என் பதில்...

ஏன் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சியில்.. தமிழினம் செழிப்புற்று இருக்கவில்லையோ..?

தமிழனுக்கு என்று நாடு படை கொடி மதம் மொழி கலாசாரம் பண்பாடு மனித விழுமியம் என்றெல்லாம் இருக்கல்லையோ..?

நீங்கள் இப்படி ஒரு வினாவைத் தொடுக்க வைத்ததே இந்தத் திராவிடம் என்ற மாயைக் கருத்துருவாக்கத்தின் விளைவுதான்.

இதை இனங்காட்டுவது தான் எனது இந்தப் பதிவின் நோக்கமுமே...

வாயாலே வடை சுடுவதில் பாஜக தொண்டர்களை மிஞ்ச முடியாது....


தமிழர்களே சிந்திப்பீர்...


இன்று நாம் சாதியாலும் மதத்தாலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளோம்...

மதவாத கட்சிகள் நம்மை தமிழர்களாக உணர வைக்காது, நம்மை மதவாதிகளாக குறுகிய வட்டத்திற்குள் அடைத்து வைத்து மற்ற மதங்களுடன் நம்மை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன.

திராவிடமோ சூழ்சியால்  நம்முள் சாதி சண்டை எற்படுத்தி குளிர் காய்க்கிறது..

தமிழர் ஒற்றுமையை மதத்தாலும் சாதியாலும் சீர்குலைத்து விட்டனர்.

தமிழர்கள் என்றுமே சாதி மதவாதிகள் அல்லர். இருந்தும் நம்மை பிரித்தாளும் சூழ்ச்சியை திராவிடர்களும் மதவாதிகளும் தொடர்ந்து செய்து வருகின்றனர் .

தமிழர் என்ற இன அடையாளத்தை சிதைத்து வருகின்றனர்...

இன உணர்வு என்பது நவீன சமூகத்தின் அதாவது 19-ஆம் நூற்றாண்டின் கண்டு பிடிப்பு என்பதாவது தெரியுமா?


நாம் 21 இல் இருந்து கொண்டும்.. இன்னும் அந்ந உணர்விழந்து நிற்கிறோமே..

நமது தமிழினத்தின் வரலாற்றுச் சான்றை அறிவியல் கொண்டும் அகல்வாராய்ச்சி கொண்டும் தேடல் செய்யலாம்.. திராவிடத்துக்குள் ஏன் பதுங்கி இருக்க வேண்டும்..

இன உணர்வுருவாக்கத்தின் பின்னாவது திராவிட மாயைவிட்டு ஏன் தமிழகத் தமிழர்கள் வெளிவரவில்லை.

தமிழகத்தில் உள்ள தமிழர்களில் சில பகுதிகளில் இன்று வேற்று மாநில பூர்வீகத் தமிழ் மொழி பேசுவோரே தமிழர்களாக தங்களை இனங்காட்டி வாழ்கின்றனர். அதற்கு காரணமும்.. இந்தத் திராவிடம் தான்..

தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளங்களை சிறுகச் சிறுக அழித்து வருவதையே அல்லது மறந்து போவதையே இது காட்டுகிறது...

தமிழர்கள் எந்த மதத்தை சார்ந்தாலும், மதம் சாராதவராக இருந்தாலும் எந்த சாதி ஆனாலும் சரி தாங்கள் முதலில் தமிழர் என்றே கருதுதல் வேண்டும்...


இனத்தால், மொழியால் நாம் அனைவரும் தமிழர்களே என்று உணருதல் வேண்டும்...

மதங்களுக்குள் இருக்கும் பிற பிரிவினர், சாதியினர் அனைவருமே தமிழர்கள் தான்..

நம்முடைய சாதி மத கருத்தியல் வேற்றுமைகள் களைந்து நாம் அனைவரும் தமிழர்களே என்று உலகிற்கு உரக்கச் சொல்வோம் .

நம்மை பிரித்தாளும் மதவாதத்தையும், திராவிடத்தையும் துரத்தி அடிப்போம்.

தமிழர்களாக ஒன்றினைவோம்.
தமிழர் என்பதே நம் அடையாளம்.
சாதியாய் மதமாய் பிரிவது அவமானம்...

இந்தித் திணிப்புக்கு குடியரசு தலைவர் கொடுத்த ஒப்புதல் மக்களாட்சி என்னும் சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட இறுதி ஆணி...


இப்போது இந்திய கடவுச்சீட்டை பெறும் விண்ணப்பத்தை இந்தியில் தாக்கல் செய்யலாம். கடவுச்சீட்டு அலுவலகத்தில் உள்ள கணினி அனைத்தும் இந்தியில் இயங்கும். அங்கு இந்தி திணிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்தி தெரியாதவர்களுக்கு அவர்கள் பாடம் எடுப்பார்கள்.

நாம் தமிழில் கடவுச்சீட்டு வேண்டும் என்று குரல் எழுப்பாதவரை இவர்கள் இந்தியை மேலும் மேலும் கடவுச்சீட்டில் திணிப்பார்கள். என் கடவுச்சீட்டை கூட என் மொழியில் கிடைக்காத அவலம் இந்திய நாட்டில் மட்டுமே நடக்கும்.

பதிவு - இந்தி திணிப்புக்கு எதிரான மக்கள் இயக்கம்...

திராவிடத் திருடர்களே பதில் சொல்லுங்கள்...


தமிழர்கள் மத ரீதியா கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள்.. ஏன் இஸ்லாமாக இருக்கிறார்கள்.. அதையெல்லாம் சுலபமாக மறந்துவிட்டு.. இந்து மதத்தைப் பின்பற்றும் தமிழர்கள் மீதுதான் பெரியாரின் கவனம் திரும்பியது.. காரணம் என்ன..?

கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் தமிழர்களிடையேயும் சாதிப் பிரிவுகள் உண்டு. இல்லை எங்கிறீர்களா.. அப்படி பார்க்கின்ற போது.. இந்து என்பதை மட்டும் நோக்கித் தாக்குவது ஏன்..?

உண்மையான தமிழ் சமூக அக்கறை உள்ளவரா பெரியார் என்ற ஈ வெ ராமசாமி நாயக்கர் இருந்திருந்தால் திராவிட வாதத்தை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்களின் தேசிய வாதத்தை இந்திய தேசியத்துக்கு முன்னால் நிலை நிறுத்தி இருக்க வேண்டும்.

மா பொ சி போன்றவர்கள் தனித் தமிழ்நாடு.. தமிழராட்சி என்பவற்றை முன்மொழிந்த போது அதை நீங்கள் கூறும் தமிழர்கள் மீது அக்கறையிருந்த பெரியார் ஏன் ஆதரித்து நிற்கவில்லை..?

மதங்களை இனக்கோட்பாட்டுக்குள் கலப்படம் செய்யாதீர்கள். மதங்கள் மனிதனுடைய நாகரிக வளர்ச்சியின் ஒரு காலத்தில் ஆதிக்கம் செய்தவைதான். இன்று அந்த நிலை உலகெங்கும் அருகி.. அறிவியல் தான் ஆதிக்கம் செய்கிறது. இதற்காக யாரும் மதங்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிக் கொண்டு திரியவில்லை.

அறிவியல் மூலம் மக்களின் கேள்விகளுக்கு பதிலிறுக்கின்ற போது மதங்கள் காட்டும் மூட நம்பிக்கைகள் இனங்காணப்பட்டு கைவிடப்பட சமூகத்துக்கு நன்மை பயக்கக் கூடிய விடயங்கள் நிலைத்துவிடுகின்றன.

இந்துமதமும் அதற்கு விதிவிலக்கல்ல. முன்னொரு காலத்தில் வைணவம் சைவம் என்று அடிபட்டவர்கள் இன்று அந்த நிலையிலின்றும் மாறுபட்டு இல்லையா..?

கருத்தியல் உலகும் அறிவியல் உலகும் மனிதப் பரினாம வளர்ச்சியோடு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மனிதனின் கருத்துருவாக்கதால் உருவான மதமும் அதன் நிலைகளை மாற்றிக் கொள்ளும்.

எனவே அடிப்படையில் கல்வி மற்றும் அறிவியல் அறிவுதான் மக்களுக்கு அவசியம்.

இனம் என்ற அடையாளப்படுத்தலுக்கு திராவிடம் என்ற போர்வை தமிழர்களுக்கு அவசியமில்லை.

தமிழர்களுக்கு என்று தனித்துவமான பாரம்பரிய கலாசாரம் நிலம் மொழி பண்பாடு என்று இனத்துவ அம்சங்கள் உள்ளன.

அவற்றை திராவிடத்துக்கு வெளியில் நின்று நாம் இனங்காண்பதும்.. அதைக் கொண்டு தமிழினத்தின் தேசிய இருப்பை பாதுகாப்பதும் அவசியமாகும். அதற்கு திராவிடம் தடையாகவே இருக்கிறது. இருக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை.!

காரணம் தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்தி சொத்து சேர்க்கனுமே...

ஆர் எஸ் எஸ் என்றால் என்ன ? ஒரு சிறு குறிப்பு.....


இன்றைய இளைஞர்கள் பலருக்கு ஆர் எஸ் எஸ் இயக்கம் என்னவென்று தெரியாது.

அதனால் இந்த சிறு குறிப்பு....

1. ஆர் எஸ் எஸ் என்பது - ராசிடிரிய சுயம் ஷேவக் சங்கம் - இது இந்து மத வெறி
என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட பிராமணர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம்.

2. இதுக்கு உலகெங்கும் உள்ள பிராமண
மதவெறியர்கள் நன்கொடை அளித்து
நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு
இது.

3. இதுதான் கோட்சே மூலம் காந்தியை சுட்டு கொன்றது. இன்று இந்தியாவில்
இருக்கும் மத கலவரங்களுக்கும், சாதி
மோதல்களுக்கும் இதுதான் காரணம்.

4. இந்தியாவில் பயங்கரவாத செயல்கள்
இன்று அரங்கேற காரணம் இந்த
அமைப்பு தான்.

5. இதன் நோக்கம் பிராமணர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதும் மற்றவர்கள் அடிமையாக , தீண்ட தகாதவர்களாக இருக்க வேண்டும் என்பதுவே இதன் குறிக்கோள்.

6. இது உலகின் மிக பெரிய பாசிச
அமைப்புகளில் பயங்கரமானது.

7. இந்த அமைப்பில் ராணுவ தளபதி
முதல், நீதிபதி வரை உறுப்பினர்களாக இருப்பார்.

பெரும்பாலும் பிராமணர்கள்
அதிகாரத்தில் இருப்பர்.

8. இந்த அமைப்பில் அடியாளாக ஆதிக்க சாதி இளைஞர்கள் இருப்பார்கள். ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கொலைகள் - குற்றங்கள் நடத்த பயன்படுத்தபடுவர்.


9. இவர்கள் மக்களிடம் அதிகமான மூட
நம்பிக்கை கருத்துக்களை பரப்புவர்.

புராணத்தில் சொல்லப்பட்ட கதா
பாத்திரங்களை உண்மையான கடவுள்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை மூட நம்பிக்கையில்
புதைப்பார்கள்.

ராமன் என்பவன் ஒரு கதையின் கதா பாத்திரம் அதை உண்மை கடவுள் என்று மக்களிடம் பரப்பி..  அந்த கடவுளின் கோவில் பாபர் மசூதி உள்ள இடத்தில் முன்பு இருந்தது என்று பொய் சொல்லி அப்பாவி இந்துக்களை இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி பாபர் மசூதியை குண்டு வைத்து இடித்து இந்த நாட்டில் பயங்கரவாதத்தை வித்திட்டனர்.

11. விநாயகர் ஊர்வலம் ஒன்று முன்பு வடநாட்டில் மட்டுமே இருந்த ஒன்றை இங்கே தமிழ் நாட்டிலும் கொண்டு வந்து மதநல்லிணக்கத்தை சிதைத்தனர்.

அந்நேரங்களில் சட்ட ஒழுங்கு அழிக்கபடுகிறது..

12. இவர்கள் அரை டவுசர் போட்டு,
கையில் தடியுடன் , பொது சாலையில் இஸ்லாமியருக்கு எதிராக முழக்கம் போட்டு ஊர்வலம் போவார்கள்....

இவர்களுக்கு, முழு டவுசர் போட்ட காவல் துறை முழு பாதுகாப்பு கொடுக்கும்.

13. இவர்களது அமைப்புக்கு ஒய்வு
பெற்ற காவல்துறை அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆயுத பயிற்சி, துப்பாக்கி சுடுதல், குண்டு வைத்தல் ஆகிய பயிற்சிகளை கொடுப்பார்கள்.

14. ராணுவ கிடங்கிலிருந்து மிக
எளிதாக இவர்களுக்கு ஆயுதங்கள் கிடக்கும்.

15. பெரும்பாலான அரசுகள் (மத்திய -
மாநில அரசுகள் ) இவர்களின் அமைப்பு
மீது பெரிய குற்றவியல் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்காது என்பது யதார்த்தம்.

16. இந்த அமைப்புகளின் தலைவர்கள்
மாற்று மதத்தினரை இழிவு படுத்தும்
உரைகளை பொது இடங்களில் வாசிப்பர் - அரசு இயந்திரம் கண்டு கொள்ளாது.

17. சமஸ்கிருதம், இந்தி இவை இரண்டையும் எல்லோரும் படிக்க வேண்டும் என வற்புறுத்துவார்கள்.

பசு மாட்டை தெய்வம் என்று சொல்லி
மாட்டு கறி உண்பதை தடை செய்வார்கள். ஆனால் இவர்கள் தான் மாட்டு இறைச்சி வியாபாரத்தில் முதலாம் இடத்தில் இருப்பவர்கள்..


18. அதிகமான அம்மண-சாமியார்கள் -
பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிவார்கள்.. அவர்களை இவர்கள் ரிஷிகள் அமைப்பு என ரவுடிகளாக
பயன்படுத்தி கொள்ளுவார்கள்.

19. இவர்களின் மூட நம்பிக்கை
கருத்க்க்களை எதிர்க்கும் -
அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் ,
அரசியல்வாதிகள் ஆகியோர்களை தாக்கி கலவரம் செய்வர் - பல நேரங்களில் கொலையும் செய்வர்  இப்படி பல அறிஞர்களை கொலை
செய்திருக்கின்றனர்.

20. இவர்கள் பல துணை அமைப்புகளை
வைத்துள்ளனர்..

 அவைகள்:

விஷ்வ ஹிந்து பரிசத்
பஜ்ரங் தள்
ஹிந்து முன்னணி
ஹிந்துஸ்தான் விராத்
நிர்மான் சபா
ஹிந்து சபா
அகில பாரத் வித்யார்த்தி
பவன் என்ற மாணவர் அமைப்பு
சேவா தள்
இந்து மக்கள் கட்சி மாநில சுயாட்சி கொண்ட சிவசேனா
இந்து முன்னணி
ரன்பீர் சேனா (பிகாரில் நில பிரபுக்கள் படை )
மற்றும் அரசியல் கட்சியாக - பாரதிய ஜனதா பார்டி. BJP.

21. பெயருக்கு தேச பற்று என்று
கூச்சலிடுவார்கள் - இந்திய தேசிய மூவண்ண கொடியை இவர்களது
அமைப்பு எப்போதும் ஏற்றுக் கொள்ளாது.

22. இவர்களின் தலைமை பீடம் (RSS )
நாக்பூரில் , சென்ற ஆண்டு வரை
தேசிய கொடி ஏற்ற படவே இல்லை.

23. இவர்களின் அமைப்பு சமூக நீதிக்கு
- இடஒதுகீட்டு எதிரானது.

24. இவர்களது அமைப்பு  சமத்துவத்தை
எதிர்க்கும் ஒரு பாசிச அமைப்பு.

25. உரிமை - ஜனநாயகம் அதற்க்கான போராட்டம் - இவற்றை அடிப்படையிலே
மறுக்கும் கொள்கை கொண்டது - அந்த
தருணத்தில் - ரத்தகளரி கொண்டு போராட்டங்களை ஒடுக்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டது - அங்கங்கு உள்ள அரசு இயந்திரங்கள் மூலம் அதை செய்து கொண்டு இருக்கிறது.

26. இந்தியாவில் இதுவரை 10000
மேற்பட்ட கலவரங்களை தூண்டி
லட்சக்கனக்கான மக்களை காவு வாங்கி
உள்ளது.

26. உயர் சாதி - கிழ் சாதி - தீண்டாமை
என்பவை - மனுதர்ம -வர்ணாசிரம
கொள்கையை உயிர் மூச்சாக
கொண்டவை.

27. இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் எல்லா சாதி அமைப்புகளிலும் இவர்கள் தான் தலைமை பொறுப்பை கைபற்றி கொண்டனர்.

(கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் கூட ஆர்.எஸ். எஸ் அமைப்பினன் என்பது குறிபிடத்தக்கது)..

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் என்ற கன்னடத்தவர் பற்றி எனக்கு வேண்டியளவு அறிந்து விட்டுத் தான் எழுதவே ஆரம்பித்தேன்...


ஆகையால் என்னிடம் வந்து ஈ.வெ.ரா பற்றி முழுமையாக தெரியாமல் பேச வேண்டாம் என்று சொல்லாதீர்கள்..

தீண்டாமை என்பது ஒரு வழக்கம். அதை மாற்றுவதற்கு.. பிராமண அழிப்பு என்பது எந்த வகையில் எல்லாம் உதவும் என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

கடவுள் சிலை அழிப்பு எந்த வகையில் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

தீண்டாமை என்பதை நீங்கள் சாதியடிப்படையில் பார்க்கிறீர்கள்.

ஆனால் உண்மையில் அது பொருளாதார அடிப்படையில் எழுந்திருக்கிறது.

செல்வந்தனான ஒரு பிற்படுத்தப்பட்டவன் உயர்ந்த நிலைக்கு வந்ததும் எப்படி மதிக்கப்படுகிறான். அங்கு தீண்டாமை இயல்பாகக் கலைகிறது.

மக்கள் எல்லோரும் பொருளாதார சமமாக உயர்வு நிலை அடைகின்ற போது இந்த தீண்டாமைகள் என்பது இயல்பாக இல்லாமல் போகும்.

மேற்குலக நாடுகளில் பாருங்கள். தீண்டாமை என்ற சொல்லே அரிது. நிற வேறுபாட்டில் அமைந்ததைத் தவிர.

காரணம் மக்களின் பொருளாதார மேம்பாடும்.. பொருளாதார சம தராதர நிலையுமே.

இதற்கு ஈ வெ ராமசாமியின் உளறல்கள் எங்கனம் உதவும் என்று கூறுங்கள் பார்க்கலாம்.

ஈ.வெ.ரா வின் கொள்கைகளை தமிழ் நாடு தாண்டியே மக்கள் கருத்தில் கொள்ள பிரியப்படாத போது.. தமிழர்களுக்கு மட்டும் ஏன் ஈ வெ ரா அரசியல்..?

திருட்டு திராவிட டூபாக்கூர்கள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 33...


சில எளிய தியானப் பயிற்சிகள்...

தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும்.

நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.

ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.

முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.

முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.

1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.

2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.

3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.

4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு....

5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.

6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.

7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.

8) ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.

இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம்.

இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.

இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்...

மேலும் பயணிப்போம்.....

இதுக்கே அசந்தா எப்படி தேனி மக்களே...


அடுத்து அண்ணன் தார் பாயோட வரப்போறாரு...

இதுக்கு எவன் எத்தனை லட்சம் செலவு கணக்கு எழுதினானோ....


அரசியல்வாதிகளை வரிசையா நிக்க வெச்சி சுடனும் போல கடுப்பாகுது....

நல்லா யோசிச்சி பாருங்க மக்களே....


அந்த அந்த மாநிலத்து பிஜேபி காரன் அந்த அந்த மாநிலத்துக்கு ஆதரவாத்தான் பேசுவான் விட்டுக் கொடுக்க மாட்டான்....

ஆனா தமிழ்நாட்டு பிஜேபி காரன் தமிழ்நாட்டுக்கு எதிராத்தான் பேசுவான்...

மாநில நலன்களை விட்டுக் கொடுத்து தான் பேசுவான்... ஏன்னா அவனுங்க எச்சைங்களுக்கு .. பதவி மட்டும் தான் முக்கியம்...

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை தாக்கிய காவல் துறை அதிகாரியை கண்டித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது...


தேன் இஞ்சி...


பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி
வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்..

இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை,
மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகள் குணப் படுத்தி ஜீரண சக்தியை கொடுக்கும்...

சித்தராவது எப்படி - 33...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஒன்பது...

சுவாச ஒழுங்கு என்ற சக்தி ஊற்று..
குழந்தை பிறக்கும் போது தேகத்தில் ஜீவ சக்தி ஊற்று மூச்சாக திறக்கப் படுகிறது.. இறக்கும் தருவாயில் அந்த ஊற்று அடைக்கப் படுகிறது... அண்ட சக்தி பிண்டத்தில் பாயும் போது அது குண்ட சக்தியாக அதாவது குண்டலினி சக்தியாக மாற்றம் அடைகிறது..

அதாவது லயப்பட்டு லயப்பட்டு ஒடுங்கி ஒடுங்கி ஒரு சுருண்ட சக்தியாக ஒடுக்க நிலை நோக்கி நகரத் தொடங்குகிறது.. ஒரு குறிபிட்ட ஒடுக்கத்திற்கு பிறகு மேலும் ஒடுங்க நினைக்கும் போது, அங்கு அழுத்தம் இறுக்கம் உண்டாக அதன் காரணமாக மீண்டும் விரிவடைய நினைக்கின்றது.. இதன் காரணமாகத் தான் மூச்சு உள்வாங்களும் வெளி விடுவதுமான செயல்பாடு நடக்கின்றது..

இந்த இறுக்கத்தின் காரணமாகத்தான் மனம் என்ற அதிவலைகள் இறுக்கத்தை குறைப்பதற்கான தேடலை துவங்குகிறது.. அந்த தேடல் இறுக்கத்தை குறைப்பதற்கான முயற்சியை மேல் கொள்ளாமல் இன்னும் இன்னும் ஒடுக்கத்தை ஏற்படுத்தி இன்னும் இறுக்கத்தை அதிகப் படுத்தவே பார்கின்றது..

மனம் என்பது குண்டலினி சக்தியின் இறுக்கத்தால் அழுத்ததால் வெளியேற துடிக்கும் ஒரு பகுதி ஆற்றல் என்பதை மறந்து விடக்கூடாது..

இந்த குண்டலினி சக்தியை முறைபடுத்தக் கூடிய ஒரு நிர்வாக சக்தி அதாவது ஆளுமை சக்தி, குழந்தை பருவத்திலேயே கிடைக்கப் பெற்றாலும், உலகியல் சார்புகளின் குறுக்கீடுகளால், குண்டலினி சக்தியின் அழுத்தம் சிறுக சிறுக, பெருக தொடங்கி அந்த நிர்வாக சக்தி பலம் இழந்து விடுகிறது...

அந்த நிர்வாக சக்திதான் புத்தி என்ற காற்று பூதம்...

புத்தி பலவீனமடைவதை அனுபவப் பட ஒரு அறிவு தேவைப் படுகிறது.. அந்த அறிவு தான் ஆகாயம் என்ற பூதம்..

இந்த அனுபவ அறிவே எல்லாம் உணர தொடங்கி ஏற்ற தாழ்வுகளை சரிபார்த்து புத்தியை அப்போதைக்கு அப்போது சரி செய்ய தொடங்குகிறது..

இந்த அனுபவ அறிவும் குறைவாக உள்ள பட்சத்தில், புத்தி தன் வலு இழந்து இருக்கும் நிலையில் மனம் தன் செயல் பாட்டில் தன்னிச்சையாக இருக்கும்...

மனம் குண்டலினி சக்தியின் இறுக்கத்தை தளர்த்த தேட வேண்டியதை தேடாமல், தேடக்கூடாத இடத்தை தேடி மேலும் மேலும் இறுக்கத்தை பலப் படுத்தி ஒடுங்கி ஒடுங்கி ஒரு பெரிய அழுத்ததை தேகத்தில் ஏற்படுத்துவதால் தேக செல்கள் வலு இழந்து சோர்ந்து போவதால் உறக்கம் வருகின்றது..

அந்த உறக்கத்தில் மனமும் செயல் இழந்து போவதால் இறுக்கம் சிறுக சிறுக தளர்ந்து தேக செல்களுக்கு உகந்த ஒரு இறுக்கம் தளர்ந்த சூழ் நிலை ஏற்படும் பொழுது செல்கள் பழைய நிலைக்கு திரும்பி செயல் படக்கூடிய அளவிற்கு பலம் அடைகின்ற போது, உறக்கம் நீங்குகிறது...

செல்கள் பழைய நிலைக்கு திரும்பாமலே இருக்கின்ற சூழ்நிலையில், தேகத்திற்கு மரணம் வருகின்றது..

இந்த இறுக்கம் மேலும் மேலும் அதிகமாகாமல் செய்வது முதல் படி..

இறுக்கத்தை தளர்த்துவது இரண்டாம் படி,..

இறுக்கம் முழுமையாக தளர்த்தி ஆதி சக்தியான அண்ட சக்திக்கு இணையான ஒரு நிலையை குண்டலினி சக்தி பெற்று தேகம் சோர்வு அடையா நிலையான சம ஆதி நிலை அடைவது மூன்றாம் படி..

அனுபவ நிலையான ஆகாய அறிவு குறையாமல், புத்தியின் மூலம் மனதை கட்டுபாட்டில் வைத்து தேகம் கெடாமல் பஞ்ச பூத சமசீர் கூட்டு ஆதிக்கம் பெறுவது முடிவான நான்காம் படி ஆகும்..
இன்றைய பல யோகப் பயிற்சிகளில் குண்டலினி சக்தியின் மேல் மனதை ஒருமுகப் படுத்தி மேலும் மேலும் அதில் இறுக்கத்தை அதிகப் படுத்துகின்றார்களே தவிர குண்டலினி சக்தியை தளர்த்தும் முறையை யாரும் பின் பற்றுவதில்லை..

தேகமே, எங்கேயோ தேள் கடித்தால் எங்கேயோ நெரி கட்டும் அமைப்பில் உள்ளதால், முறையற்ற குண்டலினி பயிற்சியால்,கெட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன...

குண்டலினி சக்தி பயணத்தில் சுவாச ஒழுங்கில் சூரிய கலையில், தோன்றா நிலையாக மனம் அற்ற நிலையாக, குண்டலினி சக்தியை அடைகிறது.. அதனால் குண்டலினி எந்த பாதிப்பும் அடைவதில்லை..

சந்திர கலையில் குண்டலினி சக்தி எழும்பி வருவதால், குண்டலினி சக்தி தளர்வடையுமே தவிர, சந்திர கலையில் உள்ள மனதால் துளி அளவும் குண்டலினிக்கு பாதிப்பு இல்லை..

குண்டலினியை விட்டு மனம் மேலே ஏறும் மார்க்கத்தில் வெளியேறி செல்ல முயற்சிப்பதால், குண்டலினி சக்தி தளந்த நிலைக்கு சுலபமாக வருகின்றது....

நித்திய நிலையான பேரண்ட ஆற்றலால் உருவாக்கப் பட்ட தேகம், அந்த நித்திய நிலைக்கு சொந்தமானது.. அதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொன்னார்கள்..

ஆனால் சிறுக சிறுக அநித்திய நிலை நோக்கி நகர்ந்து முடிவில் மரணம் அடைகிறது.. அதற்கு கவர்ச்சியே காரணம்..

கவர்ச்சியில் ஈடு படும் மனம், சுவாச முரண்பாடு அடைந்து, சந்திர கலை மூலமாக சூரிய கலையிலும், பாய்ந்து, குண்டலினி சக்திக்கு இறுக்கம் மேல் இறுக்கம் சேர்த்து, நிலைமையை மோசம் ஆக்குகிறது..

இதைதான் சித்தர்கள் புலியை மேவிய மான் என்று பரி பாஷையில் சொன்னார்கள்..

கவர்ச்சி இல்லாத இந்த இயல் நிலைக்கு அதாவது பேரண்ட ஆற்றலுக்கு அழைத்துச் செல்லும் சுவாச ஒழுங்கு முற்றிலும் ஆரம்பத்தில் ஒரு கவர்ச்சி அற்ற நிலையில் இருந்தாலும் பயிற்சிக்கு பின் அது தரும் அற்புதங்களை வார்த்தைகளில் விவரிக்க இயலாது..

நுழைவதும் பயிலுவதும் கவர்ச்சியை நாடும் மனம் முதலில் இடம் கொடுக்கா விட்டாலும், பின்னால் ஏற்படுகின்ற பயன்களிலே மனம் சமாதானமாகி, இலயமாகி, பின் அடங்கி நடக்கத் தொடங்கும்..

சித்தர் நிலையிலே பிண்டத்திலிருந்து புறப்படும் குண்டலினி சக்தி அண்டம் கடந்தாலும், ஆதார நிலையான அந்த ஜீவ ஊற்று, அடைக்கப் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..

அடைப்பட்டால் ஜீவ ஆற்றல் துண்டிக்கப் பட்டு, தேங்கிய சக்தியாய் அல்லது தேடும் சக்தியாய் அகண்ட காரத்தில் உலவி கொண்டு இருக்க வேண்டியது தான்..

இதை தான் ஆவிகள் என்று சொன்னார்கள் போலும்..

அந்த ஆற்றல்கள் எல்லாம் அண்டத்தில் கரைந்த பிற்பாடுதான் மீண்டும் பிறவி எடுக்க முடியும்.. அப்படி பட்ட வலுவான ஆற்றல்களுக்கு மூலாதார தொடர்பு கொடுப்பதின் மூலம்,வசியப்படுத்தி மாந்திரவாதிகள் சில அற்புத சித்துகளை செய்கின்றனர்..

அப்படி செய்கின்ற போது தன் மூலாதார குண்டலினி சக்திக்கு அதிக அழுத்தம் கொடுத்து விரைவில் மரணமும் அடைகின்றனர்..

மாந்திரீகம் அந்த அழுத்தம் கொடுக்காமல் செய்ய முடியாது..

தனக்குள்ளே இருக்கின்ற பேராற்றலை முறையாகப் பயன்படுத்தி, பெரும் அற்புதங்களை செய்வது சித்தர் மார்க்கம்..

வெளி ஆற்றலை பயன் படுத்தி அற்ப விசித்திரங்களை செய்வது மாந்திரீகம்..

மேல் சொன்னவைகள் சுவாச ஒழுங்கின் அவசியத்தையும் குண்டலினி பற்றிய சில குறிப்புகளையும் விளங்க வைக்கும் என நம்புகிறேன்...

ரூ.20 கோடி மோசடி புகார் தொடர்பாக ஜெ.தீபாவிடம் போலீசார் நேரில் விசாரணை...


நெசப்பாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை...