இவ்வகையான பாலியல் சிற்பங்கள் கோபுரத்தின் வெளிப்புறத்தில் தான் காணப்படும்.
ஒரு மனிதன் பாலியலில் உச்சத்தில் இருக்கும் போது நான் என்ற சிந்தை இல்லாமல் இருப்பான்.
நான் என்ற சிந்தை எந்த தருணத்தில் அறுந்து போகிறதோ அந்த தருணத்தில் அவன் இறைத்தன்மையை அடைகிறான்.
ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக நான் என்ற அகந்தையற்ற சிந்தனை காமத்தில் 1 நிமிடம் கூட நீடிப்பதில்லை. இதன் காரணமாகவே இதனை சிற்றின்பம் என்று கூறுகிறார்கள்.
இத்தகைய நிலையை தியானத்தின் மூலமாக மட்டுமே ஒரு மனிதனால் நிரந்திரமாக அடைய முடியும். அதனால் இதை பேரின்பம் என்று கூறுகிறார்கள்.
காமத்தை எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும் அது வெறும் வெளிப்புற இச்சையாகவே கருதப்படுகிறது. அதன் காரணத்தினால் தான் இத்தகைய சிற்பம் வெளிப்புறமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
நான் என்ற அகந்தையற்ற சிந்தனையை ஒரு மனிதனால் தியானத்தின் மூலமாக மட்டுமே நிரந்திரமாக பெற்று முக்தியடைய முடியும்.
இங்கே தியானமானது மனதால் மட்டுமே சித்தமாகும் விசயம்.
அதனால் தான் கருவறை முதல் தியான மண்டபம் வரை கோவிலின் உள்ளே இருக்கிறது.
அக புறத்தில் கிடைக்கும் 1 நிமிட இறைத்தன்மையை காட்டிலும் அகத்தின் மூலமாக நித்திய இறைத்தன்மைக்கு வழி வகை செய் என்பதை உணர்த்தவே பாலியல் சிற்பம் கோவிலின் வெளிப்புறம் நிறுவப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.