ஆகையால் என்னிடம் வந்து ஈ.வெ.ரா பற்றி முழுமையாக தெரியாமல் பேச வேண்டாம் என்று சொல்லாதீர்கள்..
தீண்டாமை என்பது ஒரு வழக்கம். அதை மாற்றுவதற்கு.. பிராமண அழிப்பு என்பது எந்த வகையில் எல்லாம் உதவும் என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.
கடவுள் சிலை அழிப்பு எந்த வகையில் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
தீண்டாமை என்பதை நீங்கள் சாதியடிப்படையில் பார்க்கிறீர்கள்.
ஆனால் உண்மையில் அது பொருளாதார அடிப்படையில் எழுந்திருக்கிறது.
செல்வந்தனான ஒரு பிற்படுத்தப்பட்டவன் உயர்ந்த நிலைக்கு வந்ததும் எப்படி மதிக்கப்படுகிறான். அங்கு தீண்டாமை இயல்பாகக் கலைகிறது.
மக்கள் எல்லோரும் பொருளாதார சமமாக உயர்வு நிலை அடைகின்ற போது இந்த தீண்டாமைகள் என்பது இயல்பாக இல்லாமல் போகும்.
மேற்குலக நாடுகளில் பாருங்கள். தீண்டாமை என்ற சொல்லே அரிது. நிற வேறுபாட்டில் அமைந்ததைத் தவிர.
காரணம் மக்களின் பொருளாதார மேம்பாடும்.. பொருளாதார சம தராதர நிலையுமே.
இதற்கு ஈ வெ ராமசாமியின் உளறல்கள் எங்கனம் உதவும் என்று கூறுங்கள் பார்க்கலாம்.
ஈ.வெ.ரா வின் கொள்கைகளை தமிழ் நாடு தாண்டியே மக்கள் கருத்தில் கொள்ள பிரியப்படாத போது.. தமிழர்களுக்கு மட்டும் ஏன் ஈ வெ ரா அரசியல்..?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.