ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்தவை திராவிடம் என்று நீங்கள் புறந்தள்ளும் தி.க. மற்றும் தி.மு.க. - தான் என்பதை மறுத்தவிட முடியுமா?
என் பதில்...
திமுக தனது அரசியல் கருதி குரல் கொடுத்தது. ஈழத்தில் இந்தியப் படைகளின் அட்டூழியங்களைத் தடுக்க முடிந்ததா.. சிறீலங்கா அரசுக்கு உதவுவதை தடுக்க முடிந்ததா..?
ஏன் மனிதாபிமான உதவிகளை அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பத்தான் முடிந்ததா..?
ஐநா பொதுச்செயலரே உதவி தேவை என்று 1995 யாழ்ப்பாணப் பெரும் இடம்பெயர்வின் போது வேண்டுகோள் விடுக்க.. தமிழக அரசு திராவிடக் கட்சி அரசு என்ன உதவியைக் கொண்டோடி வந்தது..?
உதவி விடுதலைப் புலிகளுக்கல்ல. ஐநா தமிழ் மக்களுக்காகக் கோரியது.. என்ன செய்தார்கள். அறிக்கை விடுவதெல்லாம் ஈழத்தமிழரை வைத்து அரசியல் செய்ய என்பதை தமிழகத்துக்கு வந்த ஈழ அகதிகள் பரிதவித்த முறையில் தெரிந்து கொள்ள முடிந்தது.
ஐரோப்பாவில் கனடாவில் அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு சம உரிமை வழங்கி பாதுகாக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து வைத்து சந்தேகத்தோடு சிலோன் காரன் என்று நடத்துகின்றனர்.
இதுதான் தமிழன் என்ற உணர்வின் வெளிப்பாடா. அல்ல. இது திராவிடன் என்ற மாயையின் வெளிப்பாடு.
தமிழ் உணர்வும்.. தமிழ் தேசிய உணர்வும் இருந்திருந்தால்.. மண்டபம் அகதி முகாம் தேவைப்பட்டிருக்காது.
ஒவ்வொரு ஈழத்தமிழனும் தமிழக தமிழர்களின் விருந்தினராகி இருப்பர். அந்த நிலை எங்கே போனது.. யாரால்..?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.