27/07/2017

ரூ 1500 போனும், அம்பானியின் சூட்சமமும்…


அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்று தான் சொல்ல வேண்டும்….

1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள சூட்சமம் யாருக்காவது புரிகிறதா?

தோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்..

1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப கொடுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்து விடுகிறது.

2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்.

3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்….. அதிலிருந்து லாபமும் பெற முடியும்….

4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது.

5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை.

6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்….

மாஸ்டர் பிளான்… இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்….. அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது சாமர்த்தியம் தான்…..

ஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது… இதை ஏன் BSNL செய்ய முன்வரவில்லை….?

திராவிடம் பேசுகிறவனெல்லாம் யோக்கியனுமல்ல... தமிழ்தேசியம் பேசுகிறவனெல்லாம் அயோக்கியனுமல்ல...


1. நீதிமன்றத்தில் தமிழ் இல்லை

2. வங்கிகளில் தமிழ் இல்லை

3. அரசு கோப்புகளில் தமிழ் இல்லை
4. தொடர்வண்டித் துறையில் தமிழ் இல்லை

5. அறிவிப்புப் பலகைகளில் தமிழ் இல்லை

6. வானூர்தி சேவையில் தமிழ் இல்லை

7. ஆட்சி மொழியில் தமிழ் இல்லை

8. அஞ்சல் துறையில் தமிழ் இல்லை

9. தமிழன் பெயரிலும் தமிழ் இல்லை

10. மேற்படிப்புகளில் தமிழ் இல்லை

11. பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை

12. அரசு ஒப்பந்தங்களில் தமிழ் இல்லை

13. அரசியல்வாதி வீட்டிலும் தமிழ் இல்லை

14. கோயில்களில் தமிழ் இல்லை

15. வணிக நிறுவனங்களில் தமிழ் இல்லை

16. நாளிதழ்களில் தமிழ் இல்லை

17. வானொலிகளில் தமிழ் இல்லை

18. தொலைக்காட்சிகளில் தமிழ் இல்லை

19. இசையில் தமிழ் இல்லை

20. விளையாட்டில் தமிழ் இல்லை

21. தொலைத்தொடர்பு நிறுவனங்களில் தமிழ் இல்லை

22. சட்டப்படிப்பில் தமிழ் இல்லை

23. ........................

அயோக்கியர்களுக்கு காவடி தூக்கும் யோக்கியவான்களே,

தமிழ்த்தேசியம் பற்றி ஒரு தமிழன், தமிழ்நாட்டில் பேசாமல் வேறு எந்த நாட்டில் பேசுவதாம்?

ஒரு மொழிக்கு அதன் சொந்த மண்ணிலேயே எந்த மரியாதையும் இல்லாமல் போகுமென்றால்..

பின் என்ன மயித்துக்குதான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதாம்?

தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று கடந்த 50 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருட்டு திராவிட அரசியல்வாதிகளே பதில் சொல்லுங்கள்...

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகைளை பின்பற்றுங்கள்...


1. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால், உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

2. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும், விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

3. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.

4. பூண்டு சாப்பிட்டீர்களென்றால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

5. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

7. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

8.வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள் ஆகும்.

9. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் நெருங்காது.

10. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்...

ரெய்க்கி மருத்துவம்...


ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது..

எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.

ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..

திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.

ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர். கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர். இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.

ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.

ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசை தான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.

ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.

கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.

ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.

கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.

நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...

பாஜக மோடியும் ஊழல் ஒழிப்பும்...


ஒரு கிணற்றை வைத்து ஊர் மக்களிடம் விளையான்ட உத்தமர் ஓபிஎஸ்...


தேனீ மாவட்டம், பெரியகுளம் அருகே ஓபி எசுக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் இருநூறு அடி ஆழத்திற்கு தொண்டபட்டு அமைக்கபட்ட கிணற்றால், அந்த பகுதியின் நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டதால், அந்த பகுதி மக்கள் ஓபி எசுக்கு எதிராக திரண்டனர்.

அந்த கிணற்றை அந்த கிராம மக்களுக்கு "தானமாக" தருவதாக கூறினார், பின்பு அந்த கிணறு அதை சுற்றி உள்ள நாற்பது ஏக்கர் நிலத்தையும் விற்பதாக கூறினார். அவர் பேச்சை நம்பி கிராம மக்கள் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூபாய் இருபது ஆயிரம் வீதம் தருவதாக வசூலிக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த ஒபீஸ்  இரவோடு இரவாக, வேறு ஓருவருக்கு "முன்பே" விற்று விட்டதாக தற்போது ஆவணத்தை காட்டி ஏமாற்றி உள்ளார்.

கொதிப்படைந்த அந்த பகுதி மக்கள் கிணறு முற்றுகை போராட்டம் நடத்தி பலர் கைதும் ஆகி உள்ளனர். அதிரடி படையினரை அங்கே குவித்து, போராடும் மக்களுக்கு எதிராக அடக்குமுறைய கட்டவிழ்த்து உள்ளார் திருவாளர் ஓபி எஸ்.

கொசுறு செய்தி - மிகவிரைவில், ஒ பி எஸ் அணி பிஜேபியில் ஐக்கியம் ஆக உள்ளது. அதற்குண்டான முன்னேற்பாடுகள் டில்லியில் தொடங்கி உள்ளன. கூட்டி கழித்து பார்த்தல், இனி தனது சொந்த தொகுதியில தலிவருக்கு இனி சங்குதான்...

குடியரசு தலைவர் vs துணை குடியரசு தலைவர்...


சேலம் ஒமலூரில் வைரஸ் காய்ச்சலுக்கு இரண்டு பள்ளி குழந்தைகள் பலி, பெருகும் மர்ம காய்ச்சலும் மரணங்களும்...


கட்டுப்படுத்த தவறுகிறதா அரசு ? பாதிக்கப்பட்டோர் கேள்வி...

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு பேனர் , மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் கைது...



குட்கா தொடர்பான குற்றச்சாட்டில் டிஜிபிக்கு எதிராக தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி டிஜிபி ராஜேந்திரன் அவர்களை விமர்சித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் மதுரையை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் இன்று பேனர் வைத்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து செந்தில் முருகன் கைது செய்யப்பட்டார்...

கதிராமங்கல விவசாயிகளுக்காக காஞ்சிபுரம், சோழிங்கநல்லூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்...


விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து அழைத்து சென்றனர்...

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய யூனியன்... தமிழினம் மீண்டெழும்...


பெட்ரோ கெமிக்கல் மண்டலம்: நோக்கமே தெரியாமல் அரசு அனுமதி அளிப்பதா - மருத்துவர் ராமதாஸ் அறிக்கை...


தமிழ்நாட்டு அமைச்சர்கள் எந்த அளவுக்கு திறமையற்றவர்களாகவும், மக்கள் நலனில் அக்கறையற்ற மனிதர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்கும் பெட்ரோக்கெமிக்கல் மண்டலம் என்ன நோக்கத்திற்காக அமைக்கப்படுகிறது என்பது, அதற்கு அனுமதி அளித்த அமைச்சருக்கே தெரியாமல் இருப்பது தான். இத்தகைய பொறுப்பற்ற தன்மை கண்டிக்கத்தக்கது.

கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கடலோரப்பகுதிகளில் உள்ள 45 கிராமங்களில் பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதாக தமிழக அரசின் அரசிதழில் கடந்த 19-ஆம் தேதி அறிவிப்பு வெளிவந்த நாளில் இருந்து அப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் தூக்கத்தையும், நிம்மதியையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள். கடலூர், நாகை மாவட்டங்களின் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ மத்திய எஜமானர்களின் கட்டளைக்கு பணிந்து பெட்ரோக்கெமிக்கல் மண்டலத்தை விரைவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

45 கிராமங்கள் பெட்ரோக்கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றில் உள்ள 57,345 ஏக்கர் நிலப்பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நகரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நகரியத்தை நிர்வகிக்க உறுப்பினர்&செயலர் நிலையில் ஓர் அதிகாரி அமர்த்தப்படுவார் என்றும், அங்கு அமைக்கப்படவுள்ள பெட்ரோலியம், இரசாயனம் மற்றும் பெட்ரோக்கெமிக்கல் சார்ந்த அனைத்து தொழில்களுக்கும் உறுப்பினர் செயலரே அனுமதி அளிப்பார் என்றும் தமிழ்நாடு வீட்டுவசதித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவித்திருக்கிறார். நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலியம் மற்றும் இரசாயனக் காடுகளாக மாற்றும் தொழில்களுக்கு அனுமதி அளிப்பதில் தமிழக அரசு எவ்வளவு வேகம் காட்டுகிறது என்பதை இதிலிருந்தே தெரிந்துக் கொள்ள முடியும். இப்பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராடாவிட்டால் நாம் உறங்கி எழுவதற்குள் மொத்த மாவட்டத்தையும் தமிழக அரசு அழித்துவிடக்கூடும்.

பெட்ரோக்கெமிக்கல் திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் எழுப்பிய வினாவுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் அளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ‘‘ பெட்ரோக் கெமிக்கல் மண்டலம் அமைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அதுபற்றி நான் ஆய்வு செய்வேன். அதன்பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் நான் விவாதிப்பேன். (I am not aware about the aim of the PCPIR. I will study it and discuss the further course of action with the chief minister)’’ என்று தெரிவித்துள்ளார். அதாவது கடலூர், நாகை மாவட்டங்களில் வாழும் 45 லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் குறித்து அமைச்சருக்கு எதுவும் தெரியவில்லை.

2012-ஆம் ஆண்டில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தலைமையிலான மத்திய உரம் மற்றும் இரசாயன அமைச்சகம் தயாரித்த இத்திட்டத்திற்கு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஒப்புதல் அளித்தது. காவிரி பாசன மாவட்டத்தைச் சேர்ந்த, அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் தான் அனைத்து அனுமதிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனாலும், தற்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் தான் நிலம் ஒதுக்கீட்டுக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவர் நினைத்தால் இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய முடியும். ஆனால், அவரோ இத்திட்டத்தின் நோக்கமே தெரியாது என்கிறார். பெட்ரோக்கெமிக்கல்ஸ் திட்டத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் அதற்கு அமைச்சர் எப்படி அனுமதி கொடுத்தார்? அவரது அனுமதியுடன் தான் இத்திட்டத்திற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டதா? அல்லது அவருக்கே தெரியாமல் அரசாணை பிறப்பிக்கப்பட்டு விட்டதா? என்பதை அமைச்சர் இராதாகிருஷ்ணன் விளக்க வேண்டும்.

பெட்ரோக்கெமிக்கல் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களுமே முப்போகம் விளையும் வளமான நிலங்கள் ஆகும். சிப்காட் மற்றும் பரங்கிப்பேட்டை சாய ஆலையால் கடலூர் மாவட்டத்திலும், அனல் மின் நிலையங்களால் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோக்கெமிக்கல் திட்டத்தால் இரு மாவட்டங்களும் வாழத் தகுதியற்றவையாக மாறுவதை அனுமதிக்க முடியாது. என்ன விலை கொடுத்தாவது இத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து நிறுத்தும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களை பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வரும் 5-ஆம் தேதி சனிக்கிழமை சந்தித்து பேசவுள்ளார். 5&ஆம் தேதி காலை கடலூர் மாவட்ட மக்களையும், மாலை நாகை மாவட்ட மக்களையும் அவர் சந்தித்து பெட்ரோக்கெமிக்கல் திட்டம் குறித்து பேசவுள்ளார். இம்மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது இந்த பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீர்மானிக்கப்படும்...

நியூட்டனின் 3ம் விதியும், தமிழரின் தலை விதியும்...


தமிழன் போராடவே மாட்டான்.
தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது.
தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது.
தமிழனுக்காகப் போராடினால் நல்ல சாவுகூடக் கிடைக்காது.

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு..

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.

எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும்தானே,

எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்

இதை விளங்க ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.

(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப்போவது தான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.

இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

சரி; தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும்விட வரலாற்றில் வலுவாகத் தடம்பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக்கொள்கின்றனர்.

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும்தானே?

அதுதான் தமிழரின் மந்தப்போக்கு.

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே..

தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்? என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத்துப்பாக்கிக்கோ அல்லது தோள்துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்கவைப்பது எளிது. ஆற்றலும் குறைவு.

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்... வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்து போகும்..

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்.
அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம் (5லட்சம்) தமிழர், தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே..

ஆனால், இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர், மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி, இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம் (25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேரா?

என்றால் நாம் இந்த உலகில் பத்துகோடித் தமிழர் இருக்கிறோமே..?

நாம் ஒன்றிணைந்தால்..
நினைக்கவே நடுங்கிறது இல்லையா...

அடுத்த பூதம் வருகிறது உஷார்...


‛ஆர்செப்' என சுருக்கமாகவும், ஆர்.சி.இ.பி., - 'ரீஜினல் காம்ரிஹென்சிவ் எகானமிக் பார்ட்னர்ஷிப்' எனும், மண்டல பொருளாதார புரிந்துணர்வு கூட்டமைப்பு தான் அந்த புதிய பூதம்..

டபிள்யு.டி.ஓ., எனப்படும், உலக வர்த்தக மையத்தின் ஆட்டங்களையும், அதன் கேடுகளையும் நாமறிவோம். அதனால் வந்த பல உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், அவற்றின் பின்விளைவுகள், கேடுகளையும் நன்கு அறிவோம்.

(உலகமயமாக்கல், திறந்த பொருளாதாரம் என்றெல்லாம் கதை விட்டு, இதன் பிறகே பல கேடுகளும் வரத் துவங்கின. பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள், பல சந்தைகளை கைப்பற்றுவதும், ஆளுமை செய்யும் யுக்திகளுடன் இயங்குவதும், இதற்கு பிறகே. சுரண்டலும்,  எளியோரை விரட்டுதலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதும், சிறு அங்காடிகளை அழிப்பதும், இதன் பிறகே பெரிதாக உருவெடுத்தது)

ஆனாலும், நம் அரசுகள் கற்றதாக தெரியவில்லை. அரசு மாற்றம் ஏற்பட்டாலும், தீங்கு விளைவிக்கும் கொள்கைகளிலும், பேராபத்தான ஒப்பந்தங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.

இந்தியா, சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா மற்றும் பத்து தெற்காசிய நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு இது; பல நாடுகளுக்கான புரிந்துணர்வு- ஒப்பந்தம் இது.

இதனால் பல பிரச்னைகள் வரும் என, பல வல்லுனர்களும் எச்சரிக்கை விடுகின்றனர். பெரிய நிறுவனங்களுக்கு சாதகமான பல ஷரத்துகள் இதில் உள்ளன.

அவை, பெரும் சக்தி பெற்று, அரசுகளின் மீது சர்வதேச அரங்கில் வழக்கு தொடர சாதகமான ஷரத்துகள் அவை. அவர்களின் நிறைவேற்றாத ஒப்பந்தங்களுக்கு, தவறான பொருள்களுக்கு, அபராதமோ, தண்டனையோ இல்லை.

முதலில், இம்மாதிரி ஒப்பந்தங்களில் இறக்குமதி வரிகள் தகர்க்கப்படும். உதாரணமாக, சமீபத்தில் கோதுமை. கடந்த செப்டம்பரில், 25 சதவீத இறக்குமதி வரியிலிருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட்டு, பின், டிசம்பரில், வரியே இல்லாமல் ஆக்கப்பட்டது.

அப்படியென்றால், மகசூலின் போது நம் நாட்டில் விளையும் கோதுமைக்கு என்ன விலை கிடைக்கும்?


இந்த, ஆர்செப்-ஆல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் பாலுக்கு சந்தை ஏற்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், பெரிய அடி விழும்.

உள்நாட்டு முதலீட்டாளர் போல, பன்னாட்டு நிறுவனங்களும் நடத்தப்பட வேண்டும் என்கிறது, ஒரு ஷரத்து.

அரசு உதவியுடன், நில அபகரிப்பு நிகழும். பல நாடுகளில், அன்னியர் நிலம் வாங்குவது கடினம். அந்த ஷரத்துகள் அசைக்கப்படும்; மாற்றப்படும். மொத்தத்தில், சிறு, குறு விவசாயிகளும், பழங்குடியினரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாவர்.

விதை -- ஒரு பெரிய சந்தை. இன்று, உலகின் பெரிய, ஆறு நிறுவனங்கள், ஒன்றை ஒன்று வாங்கி, மூன்றே மூன்று நிறுவனங்களாக திகழ்கின்றன. அவர்களின் சந்தை பசியும், கோர தாண்டவமும், மேலும் பெருகும்.
விதை, அதுவும், அடுத்த தலைமுறைக்கு தாக்கு பிடிக்க முடியாத சோதா விதைகளும், மரபணு விதைகளும் திணிக்கப்படும். விதை சட்டத்திற்கு வழி வகுக்கப்படும் என, தெரிகிறது.

கொலம்பியா மற்றும் பல நாடுகளில் இப்போது கொண்டு வரப்பட்ட தீவிர விதை சட்டங்கள்,- விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, பரிமாறவோ, விற்கவோ கூடாது என்பது போல கொண்டு வர, திட்டமிருப்பதாக தெரிவிக்கின்றன.

இதனால், நம் விதை இறையாண்மை மட்டுமல்லாது, விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும், நம் கை விட்டு செல்லும். விதைகளின் விலையும், 200  - 400 சதவீதம் அதிகரிக்கும் எனவும், வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

காப்புரிமை, அறிவுசார் சட்டங்கள் என, பல வடிவிலும் அழுத்தங்கள். விதை பன்மயம் மற்றும் உயிரி பன்மயமும் அழியும் அபாயம்.
நியூசிலாந்தின், பொன்டெர்ரா எனும், பெரிய, அரக்கன் போன்ற, பால் நிறுவனம், நம் நாட்டுக்குள் இவ்வளவு நாள் வர முடியவில்லை. உலகின் பெரிய பால் ஏற்றுமதி நிறுவனம் இது.

நம் சந்தையின் மீது நெடுங்காலமாக கண் வைத்திருந்தது. இப்போது வெளிப்படையாகவே நம் பால் சந்தையை, 'அமுல்' போன்ற நிறுவனங்களிடம் இருந்து, பறிப்போம் என, சவால் விடுகிறது, இந்த ஒப்பந்தம்.

சிறு, குறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் கதி என்னவாகும்?
தரக்கட்டுப்பாடு எனும் பெயரில், ஜப்பான், ஆஸ்திரேலியா நிறுவனங்களுக்கு, கம்பளம் விரிக்கப்படும். தரம் மற்றும் சுகாதாரம் தேவை தான். ஆனால், அவையே சிறு வியாபாரிகளால் கையாள முடியாத ஷரத்துகளாக மாறினால், கஷ்டம் தான்.

ரசாயன விவசாயத்திற்கு கடை விரிப்பு..

இன்று, உலகின் பெரிய விவசாய, ரசாயன உற்பத்தி நிறுவனம், 'சைனீஸ் கெம்!' அவர்களது கொடிய ரசாயனங்களுக்கு சந்தை தேடுவர்... இல்லையா?

அதனால், கொடிய ரசாயன விற்பனை, உபயோகம் பெருகி, மேலும் பல இன்னல்கள் பெருகும். கால்நடை மருந்துகள், பண்ணை இயந்திரங்கள் என, எல்லாவற்றிலும் சுரண்டல், ஆதிக்கம் பெருகும்.
பெரிய அரக்கன் போன்ற நிறுவனங்கள், பெரிய அளவிலான வியாபாரம் போன்றவற்றால், சிறு வியாபாரிகள், தெருமுனை கடைகள் அழியும்.

இதனால், சாதாரண நுகர்வோரான நமக்கு பெரும் நஷ்டம். தொலை நோக்கில் பல பெரிய பிரச்னைகள் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் புறம் தள்ளப்படுவர். பலரின் வாழ்வாதாரங்கள் அழியும். விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

இப்படி, பெரிய வணிகம் அமைந்த நாடுகளில், விவசாயிகளுக்கு பெரும் இன்னல்களே- கிடைத்துள்ளன.

ஆன்லைன் சில்லரை வியாபாரம் வேறு, பல இன்னல்களை கொண்டு வரும். மொத்தத்தில், சில மேலை நாட்டு நிறுவனங்களின் வியாபாரமும், கொள்ளை லாபமும் பெருக, நம் அனைவரது நல்வாழ்வும், வாழ்வாதாரமும், வாழ்கை தரமும், சமரசம் செய்யப்படும்.

இதில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களான விவசாயிகள், பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் மாநில அரசுகள் என, யாரையும் கலந்து ஆலோசனை செய்யாமல், ஒளிவு மறைவுடன் நடக்கும் இந்த ஒப்பந்தங்கள், நல்லதே அல்ல. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

நாம் என்ன செய்யலாம்?

நாம் அனைவரும் முதலில், இந்த மாதிரியான திருட்டு ஒப்பந்தங்களின் மறைமுக செயல்திட்டத்தையும், கொடிய விளைவுகளையும் பொதுதளத்தில் அலசி, அரசுக்கும், ஊடகங்களுக்கும், இவற்றை எதிர்த்து குரல் கொடுத்து எழுத வேண்டும்.
பிரதமருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் நம் ஆட்சேபங்களை எழுதி, தெரிவிக்க வேண்டும்.

மிகவும் சதித்திட்டம் நிறைந்த மற்றும் ஜனநாயக விரோதமான ஒப்பந்தம் இது என, பறைசாற்ற வேண்டும்.

விவசாய தலைவர்கள், வி வசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களும், உடனே அரசுக்கு எழுத வேண்டும். இவற்றை பொது அரங்கில் விவாதிக்க வேண்டும்.

நம் மாநில அரசை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத சொல்ல வேண்டும். நம் அண்டை மாநிலமான கேரளா ஏற்கனவே, ‛ஆர்செப்'பை எதிர்த்தும், கண்டித்தும், மத்திய அரசுக்கு எழுத வேண்டும்.

பலதளங்களில் இதன் கேடுகளை எடுத்துரைத்து, உண்மையை பரப்பி, இது வந்துவிடாமலிருக்க ஆவண செய்ய வேண்டும்.

சரி செய்ய முடியாத, மீட்டெடுக்க முடியாத, பல ஷரத்துகள் நிறைந்தது இது. ஆகவே,‛ஆர்செப்'பில் மாற்றங்களை நாம் கேட்க வேண்டாம். ஒட்டு மொத்த ரத்து தான், நம் கோரிக்கையாக இருக்க வேண்டும்.

அனந்து, ஒருங்கிணைப்பாளர்,
பாதுகாப்பான உணவிர்கான கூட்டமைப்பு...

தமிழினமே தெரிந்துக் கொள்...


இதே போல் திருக்குறளை திருவள்ளுவர் எழுதவில்லை என்று படத்துடன் நூல் எழுதுவார்கள்...


ஏற்கனவே கல்லணையை கரிகாலன் கட்டவில்லை என்று நூல் புனைந்து ஆக்ஸ்ஃபோர்டு அனுப்பியாச்சு,

இதே போல் மற்ற மாநிலங்களில் போய்ட்டு அவர்களுக்கு எதிராக இது போல் எழுதினால் சும்மா விடுவார்களா?

இல்லை உயிரோடு தான் விடுவார்களா?

தான் பிறந்த தாய் மொழியைப் பற்றி உண்மையை அறியாத பிழைப்புவாதிகள் இப்படி விருந்தாளியாக வந்து தங்கிக் கற்றுக் கொண்ட தமிழ் மொழியைப் பற்றி வரலாற்றை சொல்கிறானாம்..

அடேய்... முதலில் உன் வீட்டை பாருடா... அப்புறம் பக்கத்து வீட்டை பற்றிப் பார்ப்போம்..

ஆனால் தன் உண்மை வரலாற்றை திரித்து எழுதினாலும் கண்டுக் கொள்ளாமல் இருக்கும் ஒரே சூடு சூரனை இல்லாத இனம் தமிழகத்திலுள்ள தமிழினம்  மட்டுமே...

பாஜக மோடியும் ஏமாற்று வேலைகளும்...


திமுக வும் தமிழ் அழிப்பும்...


சமஸ்கரித்ததை நுழைய விட மாட்டடோம்... ஹிந்தியை நுழைய விட மாட்டோம் என்று கருணாநிதி முழங்கி கொண்டிருக்க..

அவரது பேத்தியும் ஸ்டாலினின் மகளுமான வாரிசின் பள்ளிக்கூடத்தில் பிரெஞ்சு கட்டாயமாம்.... தமிழ் கட்டாயமில்லையாம்...

- சென்ற வருடத்தின் மலரும் நினைவுகள்...

இதயத் துடிப்பை சீராக்கும் கிவி பழம்...


இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க கிவி பழம் பெரிதும் துணைபுரிகின்றது. மட்டுமின்றி இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது..

உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பிற்கு முன்னர் பல்வேறு வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவையாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றது.

இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு இயற்கையாக உள்ளது.

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் இந்த கிவி. கிவி பழத்தில் FOLATE என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது...

ஈழப் போர் நடக்கும் போது காங்கிரசுடன் மத்தியில் மந்திரியாக பாமக அன்புமணி துணை நின்றார் என்று பொய் சொல்பவருக்காக இந்த காணொளி...


குண்டாஸு குண்டாஸு முழு பாடல்...


நன்றி - வினவு.. கேட்டு மகிழுங்கள்...