தேனீ மாவட்டம், பெரியகுளம் அருகே ஓபி எசுக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் இருநூறு அடி ஆழத்திற்கு தொண்டபட்டு அமைக்கபட்ட கிணற்றால், அந்த பகுதியின் நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டதால், அந்த பகுதி மக்கள் ஓபி எசுக்கு எதிராக திரண்டனர்.
அந்த கிணற்றை அந்த கிராம மக்களுக்கு "தானமாக" தருவதாக கூறினார், பின்பு அந்த கிணறு அதை சுற்றி உள்ள நாற்பது ஏக்கர் நிலத்தையும் விற்பதாக கூறினார். அவர் பேச்சை நம்பி கிராம மக்கள் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூபாய் இருபது ஆயிரம் வீதம் தருவதாக வசூலிக்க ஆரம்பித்தனர். இதனை அறிந்த ஒபீஸ் இரவோடு இரவாக, வேறு ஓருவருக்கு "முன்பே" விற்று விட்டதாக தற்போது ஆவணத்தை காட்டி ஏமாற்றி உள்ளார்.
கொதிப்படைந்த அந்த பகுதி மக்கள் கிணறு முற்றுகை போராட்டம் நடத்தி பலர் கைதும் ஆகி உள்ளனர். அதிரடி படையினரை அங்கே குவித்து, போராடும் மக்களுக்கு எதிராக அடக்குமுறைய கட்டவிழ்த்து உள்ளார் திருவாளர் ஓபி எஸ்.
கொசுறு செய்தி - மிகவிரைவில், ஒ பி எஸ் அணி பிஜேபியில் ஐக்கியம் ஆக உள்ளது. அதற்குண்டான முன்னேற்பாடுகள் டில்லியில் தொடங்கி உள்ளன. கூட்டி கழித்து பார்த்தல், இனி தனது சொந்த தொகுதியில தலிவருக்கு இனி சங்குதான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.