04/08/2017
ஆழ்மனதின் அற்புத சக்திகள்-3...
என் மகளை நீங்கள் தான் குணப்படுத்திக் காப்பாற்ற வேண்டும் என்று உள்ளூர் செல்வந்தர் ஒருவர் எட்கார் கேஸ் என்பவரிடம் போய் வேண்டிக் கொண்டார்.
அவரது ஐந்து வயது மகள் தன் இரண்டு வயதில் ·ப்ளூவால் தாக்கப்பட்ட பிறகு படுத்த படுக்கையாகவே இருந்தாள். தினமும் வலிப்புகள் பல முறை வந்து தாக்க மகள் துடித்த துடிப்பை அவராலும், அவர் மனைவியாலும் சகிக்க முடியவில்லை. மூளை, மன வளர்ச்சிகளும் அந்த சிறுமிக்கு பாதிக்கப் பட்டிருந்தன. செல்வந்தரான அவர் பல மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துப் பார்த்தும் எந்தச் சிகிச்சையும் பலனளிக்கவில்லை. அப்போது தான் அவர் உறங்கும் ஞானி என்று பலராலும் அழைக்கப்பட்ட எட்கார் கேஸைப் பற்றிக் கேள்விப்பட்டார்.
எட்கார் கேஸ் ஆறாம் வகுப்பு வரை தான் படித்தவர். மருத்துவத்தைப் பற்றி எதுவும் அறியாதவர். சிறு வயதில் நோய்வாய்ப் பட்டு கோமா நிலைக்குப் போன அவர் தனக்கு எந்த மருந்து எப்படித் தர வேண்டும் என்று கோமா நிலையிலேயே சொல்ல அதிர்ந்து போன மருத்துவர்கள் அப்படியே தந்து பார்க்க அவர் உடனடியாக குணமான பிறகு அவரிடம் தங்கி விட்டது அந்த அபூர்வ சக்தி. எட்கார் கேஸ் ஒருவித அரைமயக்க நிலைக்குச் சென்று பலருடைய நோய்களுக்குத் தக்க மருந்துகள் சொல்ல அது பலர் நோயைத் தீர்க்க உதவியது. இதைக் கேள்விப்பட்ட போது அந்த சிறுமியின் தந்தை கேஸின் உதவியை நாடுவதில் நஷ்டமெதுவும் இல்லை என்று தோன்றியிருக்க வேண்டும்.
எட்கார் கேஸ் அரைமயக்க நிலைக்குச் சென்று அந்தச் சிறுமி ·ப்ளூவால் தாக்கப்படுவதற்குச் சில தினங்கள் முன்பு கீழே விழுந்ததில் தண்டுவடத்தின் அடிப்பாகத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றது, அந்தப் பகுதியின் வழியாகத் தான் ·ப்ளூவின் கிருமிகள் சென்று தாக்கியிருக்கின்றன, அந்தப்பகுதியைச் சரி செய்தால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்த முடியாது என்று தெளிவான குரலில் கூறினார். எந்த மாதிரியான சிகிச்சை செய்து அப்பகுதியைச் சரி செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.
கேட்டுக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் திகைத்துப் போனார்கள். ஏனென்றால் குழந்தை ·ப்ளூ காய்ச்சலால் தாக்கப்படுவதற்கு முன் கீழே விழுந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. 1902ல் இந்தக் காலத்தைப் போல் ஒரு வியாதிக்கு முழு உடலையும் பரிசோதனை செய்யும் முறையோ, இன்றைய நவீன பரிசோதனை எந்திரங்களோ இருக்கவில்லை. பெற்றோர்கள் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு மருத்துவர்களிடம் விரைந்தார்கள். மருத்துவர்கள் எட்கார் கேஸ் சொன்னதைப் போல அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அவர் கூறிய படியே சிகிச்சையும் செய்தனர். சிறுமி குணமாகி பிறகு விரைவில் தன் வயதையொத்த மற்ற குழந்தைகளைப் போலவே மாறி விட்டாள். அவளுடைய பெற்றோர் பெற்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எல்லா மருத்துவர்களும் முயன்று தோற்ற இந்த சிறுமி விஷயத்தில் எட்கார் கேஸ் சொன்ன சிகிச்சை குணப்படுத்தியது என்ற செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. அது வரை உள்ளூரில் மட்டும் ஓரளவு பிரபலமாயிருந்த எட்கார் கேஸ் புகழ் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
வெஸ்லி எச்.கெட்சும் என்ற இளம் டாக்டர் எம்.டி பட்டம் பெற்றவர். திறமைசாலி. அவரிடம் ஒரு நாள் ஒரு இளைஞனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்த அந்த இளைஞன் சுய நினைவுக்கு வந்த போது அவனால் பேசவோ, செயல்படவோ முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒருசில நேரங்களில் ஆம் அல்லது இல்லை என்று மட்டும் தெளிவில்லாதபடி சொல்ல முடிந்த அவன் மற்ற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடி ஒரு ஜடமாக அமர்ந்திருந்தான். அவனுடைய பிரச்னை மூளையில் என்பதை உணர்ந்த டக்டர் கெட்சும் பல சோதனைகள் செய்து பார்த்தும் அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. நியூயார்க்கின் பிரபல மூளை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பினார். அவர் அனைத்து சோதனைகளும் செய்து பார்த்து விட்டு மூளையில் ஏற்பட்ட அந்த கோளாறு நிவர்த்தி செய்ய முடியாதது என்று சொல்லி விட்டார். அந்த இளைஞனின் பெற்றோர் எப்படியாவது குணப்படுத்துங்கள் என்று டாக்டர் கெட்சுமிடம் கெஞ்சினார்கள். அப்போது அவருக்கு எட்கார் கேஸ் பற்றி கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது.
அவருக்கு கேஸ் மீது பெரிதாக நம்பிக்கை இருக்கவில்லை என்றாலும் பரிசோதித்து விடுவது என்று எண்ணி அவர் யாருக்கும் தெரிவிக்காமல் கேஸ் இருந்த ஊருக்குப் பயணம் செய்தார். அங்கு சென்று எட்கார் கேஸிடம் அந்த இளைஞன் பெயர், வயது, அவன் இருக்கும் ஆஸ்பத்திரி விலாசம் மட்டும் தந்து இந்த இளைஞனுக்கு என்ன நோய் என்று சொல்ல முடியுமா என்று கேட்டார். அரை மயக்கநிலைக்குச் சென்ற எட்கார் கேஸ் "அந்த இளைஞன் மூளை தீயில் உள்ளது போல் சிவந்து தகிக்கிறது. நீங்கள் உடனடியாக மருத்துவம் செய்யா விட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிப்பது உறுதி" என்று சொன்னார்.
அவர் சொன்னது சரியாயிருந்ததால் "என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று டாக்டர் கெட்சும் கேட்க, கேஸ் அவ்வளவாக பிரபலமாகாத ஒரு மருந்தைச் சொல்லி அதை தினமும் மூன்று வேலையும் அவனுக்குத் தர வேண்டும் என்றார்.
கேஸிற்கு மயக்க நிலையிலிருந்து மீளும் போது தான் என்ன சொன்னோம் என்பது நினைவிருப்பதில்லை. கடினமான மருத்துவச் சொற்றொடர்களையும் சரளமாக உபயோகித்த அவர் ஆறாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார், சுயநினைவில் இருக்கும் போது மருத்துவத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்பதைக் கேள்விப்பட்ட டாக்டர் கெட்சும் சொன்னார். "கேஸ். நீங்கள் மிகப்பெரிய பொய்யரா, இல்லை அற்புத மனிதரா என்று எனக்குத் தெரியவில்லை."
ஆனால் அவர் சொன்ன மருந்தை கெட்சும் அந்த இளைஞனுக்குத் தர ஆரம்பித்தார். முதல் மாதம் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றாலும் இரண்டாம் மாதத்தில் அந்த இளைஞன் குணமாக ஆரம்பித்து பின் பூரண நலமடைந்தான். அதன் பின் கெட்சும் மிகவும் கடினமான சிகிச்சைகளுக்கு கேஸிடம் ஆலோசனைக்கு வர ஆரம்பித்தார். பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளிகளின் நிலைமையையும், செய்ய வேண்டிய சிகிச்சையையும் மிகச்சரியாக கேஸ் சொன்னார். ஒரு முறை அப்படி சொல்லிக் கொண்டிருக்கையில் நிறுத்தி கேஸ் சொன்னார். "அந்த மனிதர் இறந்து விட்டார்". உண்மையில் அவர் சொன்னது போலவே அதே நேரத்தில் தான் அந்த நோயாளி இறந்து விட்டார் என்பதை பின்னர் டாக்டர் தெரிந்து கொண்டார். நாளடைவில் கெட்சுமைப் போலவே வேறு பல மருத்துவர்களும் கேஸிடம் வர ஆரம்பித்தனர்.
பல சமயங்களில் கேஸ் சொன்ன மருத்துவம் அக்கால மருத்துவத்திற்கு சிறிதும் ஒத்துப் போகாததாக இருந்தது. ஆனாலும் அவர் சொன்னபடி மருந்தை உட்கொண்டவர்கள் அனைவரும் குணமானார்கள். சில சமயங்களில் கேஸ் சிகிச்சைக்கு சில மருந்துகளின் கலவையைச் சொல்வார். ஒரு மருந்தின் தயாரிப்பே அப்போது நின்று போயிருந்தது. அதன் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு அந்த மருந்தின் உட்பொருள்களையும், கலந்த விகிதத்தையும் கேட்டு தயாரிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மருந்து அடுத்த மாதம் தான் வெளி வருவதாக இருந்தது. எங்கு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கேஸ் சொல்ல கேள்விப்பட்ட அந்தத் தயாரிப்பாளர்களே திகைத்துப் போனார்கள். 'மார்க்கெட்டுக்கே வராத மருந்தைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்?'
இன்னொரு சமயம் கேஸ் சொன்ன மருந்து அவர் சொன்ன கடையிலேயே இல்லையென்று சொல்லி விட்டார்கள் என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொன்ன போது கேஸ் அரை மயக்க நிலைக்குச் சென்று அந்தக் கடையில் உள்ள மேல் அலமாரியில் அந்த மருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதைக் கூடத் தெரிவித்தார். பின்பு அந்த கடைக்காரர் அசடு வழிந்து கொண்டே அந்த மருந்தை அவர் சொன்ன இடத்திலிருந்து தேடி எடுத்துத் தந்திருக்கிறார்.
எட்கார் கேஸ் புகழ் நாடு முழுவதும் பரவியது. 9-10-1910 அன்று புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அவரைப் பற்றி வியப்புடன் எழுதியது. "சுய நினைவில் இருக்கையில் மருத்துவத்தைப் பற்றி எள்ளளவும் அறியாத எட்கார் கேஸ் அரை மயக்கநிலையில் மருத்துவர்களுக்கே விளங்காத பல நோய்களுக்கு மருத்துவம் சொல்வதை மருத்துவ உலகம் ஆர்வத்துடன் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது". அவர் ஆரம்பத்தில் குணப்படுத்திய ஐந்து வயதுச் சிறுமி தற்போது மிக நலமாக இருப்பதையும், அவருடைய வேறு சில சிகிச்சைகளையும் பற்றி அக்கட்டுரையில் எழுதியிருந்தது.
1945ல் இறந்து போன கேஸ் ஒவ்வொரு சிகிச்சைக்காகவும் சொன்ன சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துக்களின் முறையை இன்றும் விர்ஜீனியா பீச்சில் உள்ள ஒரு அசோசியேஷன் (Association for Research and Enlightenment in Virginia Beach, VA 23451, USA) பாதுகாத்து வருகிறது. சுமார் 14000க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை இன்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இரத்தம் மனிதனின் ஒட்டு மொத்த உடல்நலத்தைப் பிரதிபலிக்கிறது என்று எட்கார் கேஸ் சொன்னார். "மனிதர்களின் ஒரு துளி இரத்தத்தை வைத்து எத்தனையோ விஷயங்களை பரிசோதனையின் மூலம் அறியலாம்" என்றும் சொன்னார். அவர் இறந்து சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு தான் இரத்தப் பரிசோதனை முறை அறியப்பட்டு நடைமுறைக்கு வந்தது. மேலும் அவர் சொன்ன சில வித்தியாசமான மருந்துக்களையும், சிகிச்சை முறைகளையும் அவர் மரணத்திற்குப் பின்னும் பலர் பயன்படுத்தி குணமடைந்த விவரங்கள் அந்த அசோசியேஷனில் பதிவாகி உள்ளன.
எட்கார் கேஸ் மருத்துவம் சம்பந்தமாக மட்டுமல்லாமல் வரவிருக்கும் உலக நிகழ்வுகளையும் பற்றி பல சொல்லியிருக்கிறார். அவற்றில் பல பலித்தன. சில பலிக்கவில்லை. ஆனால் மருத்துவத்தில் மட்டும் அவர் சொன்னது பலிக்காமல் போனதேயில்லை. அந்த அபூர்வ சக்தி அவர் காலத்தில் மட்டுமல்ல அவர் காலம் கழிந்த பின்னும் பயன்படுகிறது என்பது ஆச்சரியமே அல்லவா?
மருத்துவத்தில் அவரே அறியாத பல பிரம்மாண்டமான உண்மைகளை அவரால் எப்படிச் சொல்ல முடிகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் சுவாரசியமானது.....
போர் வரட்டும், ஓடி வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு ஜுன் மாத இறுதியில் ஓடிப் போன மராட்டியன் ரஜினி, அதன்பின் எங்கு போய்த் தொலைந்தான் என்றே தெரியவில்லை...
'ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வந்திருவேன்'னு சொல்ற மாதிரி நேற்று சரியாக வந்து விட்டான். திரைப்பட தொழிலாளர்கள் பெப்சி வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்' னு சொல்லி இருக்கான்.
நெடுவாசல் பற்றி பேச வரவில்லை, கதிராமங்கலம் பற்றி பேச வரவில்லை, காவிரி மேலாண்மை பற்றி பேச வரவில்லை , நீட் தேர்வு பற்றி பேச வரவில்லை, வேறு எந்த விஷயத்துக்காகவும் அதன்பின் அவன் பேச வரவில்லை. பெப்சி விவகாரத்துக்கு மட்டும் பேச வந்து விட்டான்.
ஏன்.... இந்த வேலை நிறுத்தத்தால் அவன் நடிக்கும், 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாய் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் பேசுகிறான். . விஷயத்தோடு தான் பேசுவான் காரியவாதி. விஷாலுக்கு எச்சரிக்கையும் செய்து இருக்கிறான். வேலை நிறுத்தத்தை வளர்க்காதே.. முடித்து கொடு ' என்று கட்டளை இட்டு இருக்கிறான். '
தன் காரியத்துக்கு மட்டும் வாயைத்திறந்து பேசும் இந்த ரஜினி தான் தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறானா.? செருப்பைக் கழற்றி அடிக்கணும் அவனை... பார்த்தவிடத்தில் பார்த்த மாத்திரத்தில் அடிக்கணும்... சோமாறி பயல்...
தமிழருக்கு மட்டுமா சாதி பிரச்சனை ?
தமிழர்களுக்கு சாதி இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருப்பது ஏனென்றால்...
மற்ற மொழிக்காரர்களுக்கு அவர்கள் இனவரலாறே சிறிதாக இருக்கும் போது, அதை விட நீளமான வரலாறு இங்கே ஒவ்வொரு தமிழ்ச் சாதிக்கும் இருக்கிறது..
தமிழின் பழமையோடு ஒப்பிடும் போது தூண் முன் துரும்பாகத் தெரியும் சாதியப் பழமையை தூக்கிப் போடுங்கள்.
அப்போது தான் தனிநாடு பெற்று ஆராய்ச்சிகள் செய்து தமிழின் பழமையை நிறவ முடியும்...
தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில் உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள்... கடுக்காய் தான் அது...
அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.
மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.
கடுக்காய் வகைகள்...
பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.
இவை தவிர..
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.
பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.
கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.
செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.
பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்.
என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.
கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.
உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.
மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.
கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம்.
அதே போல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.
பசியின்மையைப் போக்கும் கடுக்காய்...
பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.
ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.
சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்...
கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.
கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக் கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.
திரிபலா பெருமைகள்...
திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.
எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.
எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு சித்தர்கள் தரும் சிறப்பு டிப்ஸ்...
பாஜக மோடியின் டிமானிட்டைசேஷன் முதல் காஸ் மானியம் ரத்து வரை... மோடி அரசு சாமானியனுக்கு வைத்த செக் பாயின்ட்ஸ்...
மோடி, ஆட்சியில் அமர்ந்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்கானது என்றே அவர் பிரகடனம் செய்தார். ஆனால், ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதையே ஊகிக்க முடியாத அளவில்தான் நிலைமை இருக்கிறது.
மக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக எனச் சொல்லப்பட்டு எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. கேட்டால் மோடி முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை பொறுத்திருங்கள். இதற்கான பலனை அடைய சில ஆண்டுகள் ஆகும் என்று வாயடைத்து விடுகிறார்கள். மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, தனிநபர்கள் மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்...
மோடி, ஆட்சியில் அமர்ந்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் அவர் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்கானது என்றே அவர் பிரகடனம் செய்தார். ஆனால், ஒவ்வொரு நடவடிக்கைக்குப் பின்னாலும் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதையே ஊகிக்க முடியாத அளவில்தான் நிலைமை இருக்கிறது.
மக்களின் நலனுக்காக, நாட்டின் வளர்ச்சிக்காக' எனச் சொல்லப்பட்டு எடுக்கப்பட்ட எந்த நடவடிக்கையும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. கேட்டால் மோடி முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை `பொறுத்திருங்கள். இதற்கான பலனை அடைய சில ஆண்டுகள் ஆகும்' என்று வாயடைத்துவிடுகிறார்கள். மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, தனிநபர்கள் மீது அவை ஏற்படுத்திய விளைவுகள் என்ன என்பதைப் பார்ப்போம்...
ஆதார் கட்டாயம்:
நின்றால் ஆதார், அமர்ந்தால் ஆதார் என எல்லாவற்றுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியது. ஆதார் எண் மூலம் அனைத்து சேவைகளும் விரைவாக நடத்த முடியும் எனக் கூறப்பட்டது. ஆனால், முன்பு எந்த வேகத்தில் இந்த அரசு இயந்திரமாகச் செயல்பட்டதோ, அதே வேகத்தில்தான் இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதார் எண்ணை இணைத்த பிறகும்கூட அரசின் மானியங்கள் பெரும்பாலானவர்களுக்கு ஒழுங்காக வந்து சேரவில்லை. ஆதார் கார்டு மூலம் விரைவாகக் கிடைப்பது ஜியோ சிம் மட்டுமே. ஆதார் கார்டு இல்லாததால், மாணவர்களுக்கு மதிய உணவு நிராகரிக்கப்பட்ட சம்பவத்தையெல்லாம் என்னவென்று சொல்வது? இதில் ஆதார் கார்டு தகவல்கள் எல்லாம் கசியத் தொடங்கியுள்ளன.
டிமானிட்டைசேஷன்:
‘கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்' எனச் சபதமிட்டு ஆட்சியில் அமர்ந்தவர் மோடி. 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்று, கறுப்புப் பணத்தின்மீது போர் தொடுத்ததாக அவர் கூறினார். இந்த நடவடிக்கையால் மக்கள் படாத துன்பமில்லை. 100-க்கும் மேலானோர் பலியானார்கள். ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பணமும் வங்கிக்கு வந்தது. ஆனால், மோடி சொன்ன கறுப்புப் பணம் மட்டும் வரவே இல்லை. உடனே டிமானிட்டைசேஷன் தோசையை டிஜிட்டலைசேஷனாகத் திருப்பிப் போட்டார் மோடி. இதனால் நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கியது. சிறு, குறு தொழில்முனைவோர்கள் எல்லாம் காணாமல் போனார்கள்.
2,000 ரூபாய் நோட்டு:
2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அதன் படம் சமூக வலைதளங்களில் உலா வந்தது. மோடி அரசின் ரகசியம் காக்கப்படும் தன்மையைச் சொல்ல இது ஒன்றே போதும். கறுப்புப் பணம் வைத்திருந்த முதலைகள் எல்லாம் வங்கிகளோடு கைகோத்துக்கொண்டு கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிய சம்பவங்களைக் கண்கூடாகப் பார்த்தோம். அவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒன்றிரண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த சாமான்யர்களுக்குச் சில்லறை கொடுக்க ஆள் இல்லை.
பினாமி சட்டம்:
டிமானிட்டைசேஷனில் கறுப்புப் பணத்தைக் கைப்பற்ற முடியவில்லை. கறுப்புப் பணம் எல்லாம் பினாமி சொத்துகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பதால் `பினாமி சட்டம்' கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி `எல்லோரும் தங்களின் சொத்துகளுக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும்' எனச் சொல்லப்பட்டது. சொத்துகளுக்குத் தகுந்த ஆதாரங்கள் இல்லாவிட்டால், அவை பறிமுதல் செய்யப்படும் என்பதே திட்டம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
ஆதார் - பான் இணைப்பு:
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டது. அப்போதுதான் ஒருவரது வருமானத்தை, சொத்துகளைச் சரியாகக் கணக்கிட முடியும்; பதிவுசெய்ய முடியும் என அரசு தரப்பு கூறியது. `இனி வருமானவரி, சொத்துவரி போன்றவையெல்லாம் எளிதில் தாக்கல் செய்ய முடியும், அனைத்தும் விரைவாக நடைபெறும்' எனச் சொல்லப்பட்டது. ஆனால், ஆதார்-பான் இணைப்பிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள். பெயரில் சிறு மாற்றங்கள் இருந்தாலும்கூட இரண்டையும் இணைக்க முடியவில்லை. வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் ஆதார் - பான் இணைப்பு செய்யப்படாத பான் கார்டுகள் ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திவால் சட்டம்:
நிறுவனங்கள் எல்லாம், மக்களின் பணத்தை வங்கிகளிடமிருந்து கடனாக வாங்கி, புதிய புதிய பெயர்களில் பதவிகளை உருவாக்கி, தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் அதிகச் சம்பளம் கொடுத்து, விளம்பரத்துக்குக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவுசெய்வது என எல்லாவற்றையும் இஷ்டத்துக்குச் செலவு செய்துவிட்டு லாபம் ஈட்ட முடியாமல் முடங்கிப்போகின்றன. அவற்றின் கடன்களை மீட்க, திவால் சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அந்த நிறுவனங்களின் கடன்களை அரசே தன் சிரமேற்கொண்டு அவற்றின் சொத்துகளை விற்று, கடனை அடைக்கத் திட்டமிட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டத்தின்படியே பல்வேறு தில்லுமுல்லுகளைச் செய்து பணத்தைச் சுருட்டியதற்கெல்லாம் யாருக்கும் எந்தத் தண்டனையும் இல்லை. வாழும் உதாரணம் விஜய் மல்லையா.
நீட் தேர்வு:
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. எவ்வளவோ எதிர்ப்புகள் எழுந்தும் அனைத்தும் வீணானது. தரமில்லாத கல்வியைப் படித்துவிட்டு கனவுகளை வளர்த்துக்கொள்ளும் மாணவர்களுக்கு, தேர்வுகள் எல்லாம் தலைவலிகளாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சமயத்தில் மேலும் மேலும் தேர்வுகள் புதிதாகக் கொண்டுவரப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களை மானபங்கப்படுத்தாத குறையாக நடத்தினார்கள் தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள்.
ஜிஎஸ்டி:
`ஜிஎஸ்டி வரி மசோதா வந்துவிட்டால், நாடே தலைகீழாக மாறிவிடும்', `விலைவாசி குறையும்', `பேக்கிங் செய்யப்படாத பொருள்களுக்கு வரி இல்லை' என்றார்கள். பேக்கிங் செய்யப்படாத பொருள்களின் விற்பனை ஓர் இலக்க சதவிகிதத்தில் சுருங்கிப்போய் பல ஆண்டுகள் ஆகின்றன என்பதை மறந்துவிட்டதா அரசு? உயிர் காக்கும் மருந்துகளுக்குக்கூட வரி விதிக்கப்பட்டிருக்கிறது. எதிலும் விலை குறையவில்லை. மாறாக, சாதாரண மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழுந்ததுதான் மிச்சம்.
200 ரூபாய் நோட்டு:
2,000 ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறப்போவதாகச் செய்திகள் உலாவருகின்றன. அரசு தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், 200 ரூபாய் நோட்டுகள் வரப்போவதை அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அப்படியெனில், 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மீண்டும் மக்கள் எல்லோரும் வங்கியில் வரிசையில் நிற்கவேண்டிய நிலை வருமோ?
காஸ் மானியம் ரத்து:
இலவச காஸ் இணைப்பு கொடுத்து, `மகளிருக்குப் பெருமை கிடைத்தது' என விளம்பரப்படுத்திக்கொண்டார் மோடி. ஆனால், காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்துசெய்து, அதே மகளிருக்குக் கூடுதல் செலவை வைத்துவிட்டார். காஸ் மானியத்தைத் தானாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் கோரிக்கையை வைத்தபோதே இப்படியெல்லாம் நடக்கும் என முன்பே சொன்னார்கள். நடந்துவிட்டது. வரி இல்லாமல் இருந்த காஸ் சிலிண்டருக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்ததோடு மட்டுமல்லாமல், இப்போது மானியத்தையும் ரத்துசெய்துவிட்டது.
அனைத்துக்கும் மக்களைப் பழக்கப்படுத்தும் முயற்சியில் இந்த அரசு இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. எவ்வளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் அரசு அசைவதாகவும் இல்லை. வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது போதாத நிலையில், யாரை எதிர்ப்பது? அனைத்தையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்தாக வேண்டிய நிலைதான் மக்களின் நிலையாக இருக்கிறது...
செய்தி - விகடன்
கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரின் முகத்தில் கரிபூசிய ஜின்னா...
1940ஆம் ஆண்டு தந்தை பெரியார் மும்பைக்குச் சென்று ஜின்னா, அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் சந்தித்துப் பேசிய நிகழ்வை வரலாற்றின் முக்கிய நிகழ்வாக திராவிட இயக்கத்தவர் குறிப்பிடுவர். அந்தச் சந்திப்பில் பெரியார் திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவளிக்க வேண்டுமாறு ஜின்னாவை வற்புறுத்தினார் என்று ஒற்றை வரியில் சொல்லி மழுப்பி விடுவார்கள்.
உண்மையில் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஆதரவு தந்தாரா? இல்லையா? எனும் கேள்விக்கு விடை சொல்வார் எவருமில்லை. பெரியாரும், அண்ணாவும் கூட இந்தச் சந்திப்பு குறித்து திறந்த மனதோடு கூறிட முன்வரவில்லை. அதற்குக்காரணம் திராவிடநாடு விடுதலை என்பது மக்களின் விருப்பமானதும் அல்ல. சாத்தியமானதும் அல்ல என்பதை ஜின்னா தெளிவுபடுத்தி விட்ட காரணத்தால் இதனை தமது இயக்கத்தவர்களிடம் கூற வேண்டியிருக்கும். இதன் காரணமாக இயக்கத்தவர் நம்பிக்கை இழந்து விடுவர் என்பது தான். இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
8.1.1940 மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை ஜின்னா, அம்பேத்கர், பெரியார் சந்திப்பு கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பில் அண்ணா பங்கேற்காமல் தாராவி சென்று விடுகிறார். இந்தச் சந்திப்பு குறித்து அண்ணா கூறுவதை பார்ப்போம். "தோழர் ஜின்னாவை நமது தலைவர் சந்திக்க விரும்பிய போது நான் உடன்வர மறுத்தேன் என்றும் நான் அப்போது துரோகம் செய்தேன் என்றும் சமீபத்தில் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். நான் உடன்போக மறுத்தது உண்மை தான். தோழர் ஜின்னாவை ஒரு திட்டமான முடிவை வைத்துக் கொண்டு பாருங்கள். வெறும் உபச்சாரத்திற்காகப் பார்ப்பதில் பலனேதும் இல்லை என்று சொன்னேன். தலைவருடைய சந்திப்பு உபச்சார சந்திப்பு என்று நான் அறிந்து கொண்ட காரணத்தினால் தான், நான் உடன் போக மறுத்தேன்.
தலைவரோடு சண்டே அப்சர்வர் ஆசிரியர் தோழர் பி.பாலசுப்பிரமணியம், சைவச்சீலராக விளங்கும் தோழர் கே.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியவர்கள் உடன் சென்றார்கள். மூவரும் திரும்பி வரும்போது 'மனக்கசப்போடு' தான் வந்தார்கள். சந்தர்ப்பம் அப்போதெல்லாம் தவற விடப்பட்டது. தோழர் அம்பேத்கரைச் சந்தித்த வாய்ப்பும் பயனற்றே போயிற்று. இப்படியாக தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்" (சி.என்.ஏ.பரிமளம்- அறிஞர் அண்ணாவின் தன் வரலாறு)
அண்ணா மூவரும் மனக்கசப்போடு தான் வந்தார்கள் என்று கூறுவதன் மூலம் ஜின்னா திராவிடநாடு விடுதலைக்கு ஒப்புதல் அளிக்க வில்லையென்பதை சுட்டிக் காட்டுகிறார்.
அடுத்து, ஜின்னா சந்திப்பு குறித்து பெரியாரிடம் ஆனந்த விகடன் இதழுக்காக (11.4.1965) சாவி, மணியன் ஆகிய இருவரும் பேட்டி கண்டனர். அதில் பெரியார் வெள்ளைக்காரன் அதிகார ஒப்படைப்பை தன்னிடம் அளிக்க மறுத்து விட்டதை தெரிவித்து விட்டு ஜின்னா சந்திப்பை கூறுகிறார்: "இத்தோட விட்டு விடக் கூடாதுன்னு ஜின்னாவைப் பார்த்துப் பேசறதுக்காக பம்பாய் போயிருந்தேன். அவரைக்கண்டு எல்லா சங்கதியையும் பேசினேன். நான் சொல்லறதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்டு, சரி நான் மெட்ராசுக்கு வரப்போ முஸ்லிமும் ஜஸ்டிஸ் பார்ட்டியும் சேர்ந்து சப்ஜெக்ட்டை ஒண்ணா டேபிள் பண்ணுவோம்னு சொன்னாரு....
கேள்வி: ரெண்டு பேரும் சேர்ந்து டேபிள் பண்ணலாம்னு சொன்ன விஷயம் என்ன ஆச்சு?
பெரியார் பதில்: உன் கொச்சனைத் (பிரச்சனை) தனியாகவே எடுத்து சொல்லிக் கோன்னுட்டுப் போயிட்டாரு. அப்பதான் ஜின்னா ராமசாமி மூஞ்சியிலே கரியைப் பூசிட்டாருன்னு பத்திரிகையிலே எழுதினாங்க".
பெரியார் பேட்டியில் ஜின்னா சொல்ல வந்ததை மறைத்து விட்டு உன்பிரச்னை என்று கூறியதாக தெரிவிக்கிறார். திராவிடநாடு என்பது பெரியாரின் அகநிலைக் கருத்து என்பதே ஜின்னாவின் திட்டவட்ட முடிவாகும்.
26.1.1941இல் நீதிக்கட்சி பிரமுகர் வி.வி.இராமசாமி நாடார் மற்றும் 'நாடார்குல மித்திரன்' இதழாசிரியர் எம்.ஏ.முத்து நாடார் இருவரும் மும்பை சென்று ஜின்னாவை சந்தித்து திராவிட நாடு குறித்துப் பேசினர்.
வி.வி.இராமசாமி: எங்களுடைய திராவிடநாடு கோரிக்கை கதி என்ன?
ஜின்னா: 'உங்களுடைய திராவிட நாட்டினுடைய ஜனங்களின் விருப்பம் இன்னாதெனத் தெரிய வேண்டும்' என்றார். மிகச்சரியாக ஓராண்டு முடியும் நிலையில் ஜின்னா நினைவாற்றலுடன் தான் இதைக் கேட்டுள்ளார். (செ.அருள் செல்வன்-அண்ணாவின் அரசியல்குரு 'சண்டே அப்சர்வர்' பி.பாலசுப்ரமணியம்)
அன்று பெரியார்- ஜின்னா பேச்சை மொழிபெயர்த்தவர் பி.பாலசுப்பிரமணியம். அப்போது ஜின்னா கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பெரியார் திணறியுள்ளார். இந்த தகவலை தனது தந்தையார் பாலசுப்பிரமணியம் தன்னிடம் தெரிவித்ததாக அவரின் மகள் ஜெயா தெரிவித்ததையும் மேற்படி நூலில் அருள்செல்வன் குறிப்பிடுகிறார்.
9.8.1944இல் பெரியார் ஜின்னாவிற்குப் பாகிஸ்தான் கோரிக்கையையும் ஒன்றாக இணைத்துக் காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்துமாறு ஒரு கடிதம் எழுதினார். அப்போது ஜின்னா அதற்கு கோபம் கொப்பளிக்க பதில் தந்தார். அது வருமாறு:
"எனக்கு எப்போதும் மதராஸ் மக்களிடம் பரிவு உண்டு. அவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் பிராமணர் அல்லாதவர். திராவிட நாட்டை அமைக்க நினைத்தால் அதைப்பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது. உங்களுக்காக நான் பேச முடியாது. உங்களுடையை நடவடிக்கைகளை கவனித்து வருகிறேன். உங்களது செயல்பாடுகளில் உறுதியில்லை" . (Dr.E,Sa.Viswanathan- The Political Career of E.V.Ramasami Naicker)
பெரியார் இந்தக்கடிதத்தில் தனக்குச் சாதகமாக உள்ள பகுதிகளை மட்டும் வெளியிட்டதாகவும் அதைக் கேள்விபட்ட ஜின்னா தனக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றத்தை செய்தி ஏடுகளுக்கு கொடுத்ததாகவும் மேற்படி நூலாசிரியர் விசுவநாதன் கூறுகிறார்.
திராவிட நாட்டு விடுதலையை தமிழரல்லாத தெலுங்கர் கன்னடர், மலையாளி ஆகிய மூன்று இனத்தவரின் பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்பதை வடநாட்டில் பிறந்த ஜின்னாவால் கூற முடிகிற போது...
தமிழர்களுக்காக போராடியதாக சொல்லிக் கொள்ளும் ஈ.வே. ராமசாமி நாயக்கரால் இதை ஏன் கூற முடியவில்லை என்பது தான் தமிழர்கள் மனதில் எழும்புகின்ற கேள்வியாகும்...
ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா?
ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழாவில் பாரதிதாசன் எதிர்ப்பு...
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 57வது பிறந்த நாள் விழா 26.8.1963இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. அதில் குன்றக்குடி அடிகளார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர். (புகைப்படம் மேலே) அதில் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரை வருமாறு:
அடிகளார் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதன் முதலில் என்னுடைய மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே நாம் கூடி இருப்பது நம் சிவஞானம் அவர்களை வாழ்த்துவதற்காக. 'சிவஞானம்' என்று சொல்லும் போது எல்லோருக்கும் சிவ உணர்வு வருவதில்லை. தமிழ் உணர்வு தான் வரும். சிவஞானம் என்று சொன்னவுடன் 'சிலம்புச் செல்வர்' நினைவுதான் வருகிறது.
சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் நம் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாதவர். அந்த அளவுக்கு தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காக தொண்டு செய்து வருகிறார்.
இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் அடைந்து வரும் இன்னல் சிறிதன்று, இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட தமிழுக்காகப் பரிந்து கேட்க முன் வரவில்லை.
நம் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. ஆனால் தமிழை முன் வைத்துத் தொண்டு செய்ய அவர்கள் முயல வில்லை. நம் சிவஞானம் அன்று முதல் இன்று வரை தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காகத் தொண்டு செய்கிறார். அன்று அவர் கிழித்த கோட்டிலிருந்து தவறவில்லை.
இங்கே நாம் இரண்டு காரியங்களுக்காகக் கூடி இருக்கிறோம். ஒன்று நம் சிவஞானம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்த. இரண்டாவதாக. சிவஞானம் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்துக்கு நாம் மனமார ஆதரவு தெரிவிக்கவும் கூடி இருக்கிறோம்...
தமிழ்மொழிக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு காலமாக தமிழ் நெருக்கடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப் போகவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியதால் தமிழுக்கு ஏற்பட்ட நெருக்கடி மிகப் பெரியது.
மாதர்கள் கூட நூற்றுக்கு இருபத்தைந்து சதவிகிதம் தான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். 75 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் பெரிய கலகமே ஏற்படுகிறது.
சென்னை நகர மக்கள் நாட்டுப்புறத்திற்குப் போனால், அங்குள்ள மக்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். காரணம், நாட்டுப்புற மக்களுக்கு இடை இடையே ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் அவர்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். இதைக் கூர்ந்து கவனித்த சிவஞானம் ஆங்கிலத்தை 'வரவிடாதே' என்று சொல்கிறார். ஆங்கிலத்தை நாம் எதிர்க்க வேண்டும்.
சிலர் "இந்தி, ஆங்கிலம் இரண்டும் வேண்டாம், தமிழ் போதும் என்கிறார்கள். சிலர், "இந்தி வர வேண்டாம்" என்று சொல்கிறார்கள். சிலர் "தமிழ் ஆங்கிலம்" என்று சொல்கிறார்கள். மூவர் சொல்வதும் விஷயம் ஒன்று தான். மூன்று கட்சிகள் இருக்கின்றன.
தமிழ் ஆட்சிமொழியாக, பாடமொழியாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதோ பேதப்பட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் உணர்ந்து சிவஞானத்தை ஆதரிக்க வேண்டும். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தீமை நீங்க வேண்டும்...
ஒரு பெரிய கட்சித் தலைவர் "ஆங்கிலமே தாய்மொழியாக இருக்கலாம் என்று சொல்கிறார். நீண்ட நாளாக தமிழ் உணர்ச்சி இல்லாததால் அத்தகைய சோம்பேறித்தனம் வந்து விட்டது.
இன்னொருவர், ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர், "தமிழில் என்ன இருக்கிறது?" என்று கேட்கிறார். இப்படி கேட்கும் துணிவு எங்கிருந்து வந்தது? சென்னையில் நாம் பார்க்கிற இடம் எல்லாம் தமிழில் இல்லை. பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது.
சரி, கோயிலுக்குப் போனால் சிவபெருமான் இருக்கிறார். அவர் நம்ப ஐயா! எவனோ நம்மிடம் காசை வாங்கி ரெக்கமென்டஷன் செய்வதை சமசுகிருதத்தில் செய்கிறான். உன்தாய் மொழி எங்கே போயிற்று? தமிழ்நாட்டில் தமிழ் இல்லையா? தேவாரத்தில் இன்னின்ன வர்ணமெட்டு என்று இருக்கிறதே!
தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் "தருமத்தின் பெயரால் நாங்கள் ஒன்றுபட்டு விட்டோம்" என்று அரை அணா கார்டு எழுதினால் போதும். நான் வரவில்லை என்று வடநாட்டான் சொல்லி விடுவான். நம்மிடம் அத்தகைய உணர்வு இல்லை.
இப்படிப்பட்ட புண்ணியவான்களுக்குப் பின்னால் நம் ஒற்றுமையை ஏன் காட்டக் கூடாது. சிவஞானம் அவர்களின் கொள்கையைக் கொண்ட இரண்டு கட்சிகள் இருக்கின்றன. அவர்களை இங்கே காணோம். மற்ற ஒரு கட்சி வராது. அதை நினைத்து வருத்தப்படத் தேவையில்லை.
கட்சிகள் நாட்டு ஒற்றுமையை முன் வைத்து பணியாற்ற வேண்டும். இதற்கு இன்னார் தலைவரா? நாம் இரண்டாம் பட்சமா? என்று நினைத்தால் எங்கே உருப்படுவது? அவர்களுக்கு உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்..."நீண்ட நாள் செல்லாது உங்கள் வாலாட்டம்".
தமிழ்ப்பற்று என்று சொல்லி ஏமாற்றிக் கட்சி நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் எல்லோரும் ஒன்றுபட்டு விட்டோம் என்று தமிழ்ப்பகைவர்களுக்குக் காட்டினால் போதும். 14 மணி நேரத்தில் சரியாகி விடும்.
நமது ம.பொ.சி. நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தியும், அவரது கருத்துக்கு நாம் பேராதரவு தர வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி: செங்கோல் (7.8.63)
குறிப்பு: 1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் உயர்கல்வியில் தமிழ்ப்பயிற்றுமொழி திட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். அப்போது ஆங்கிலத்திற்கு ஆதரவாக பெரியார், முதல்வர் காமராசர் ஆகியோரின் குரல்கள் உயர்ந்தன. இதன் காரணமாக தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனை எதிர்த்து ம.பொ.சி., பாரதிதாசன் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். அப்போது பெரியார் "தாய்ப்பால் பைத்தியம்" என்று கிண்டல் செய்தார். பாரதிதாசன் தன்பேச்சின் ஊடே எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்...
திராவிடநாடு மோசடிக்கு வாய்தா கேட்ட அறிஞர் அண்ணா...
தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று மாற்றப்பட்டது.
அப்போது தோன்றிய 'திராவிடநாடு' கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது. அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் அது உண்மையல்ல. 'திராவிடநாடு' கோரிக்கை சாத்தியமற்றது என்று தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன.
அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு தனது கட்சிக்குள் 'காலம் கனியும் போது கைவிடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல் "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு...
திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.
திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா, "என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...! என்று சொன்னார். உடனே, சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?" என்று கேட்டார்.
அதற்கு அண்ணா "அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு"ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்" என்றார்.
"மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. "ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட 'ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்' என்று புத்தகத்தை எழுதிவிட்டு, 'என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே' என்றுதான் சொன்னான் அண்ணா!" என்றார்.
சம்பத் சொன்னார். "இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்" என்றார் சம்பத்.
அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 'கைவிட முடியாது' என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்" என்றார்.
எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?" என்று அதட்டி அனுப்பினார்.
மேற்கண்ட இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல் மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது. ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.
ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல, அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல; 'திராவிடம்' என்ற சொல்லே மோசடி தான். இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு விடிவு பிறக்கும்....
தமிழ்த் தேசியப் போராளி ம.பொ.சிவஞானம் சென்னை மீட்ட வரலாறு...
ஆயிரம் விளக்கின் சால்வான் குப்பத்தில் எளிய குடியில் பிறந்தாலும், அயராத உழைப்பால் ஆற்றலால், ஏற்றம் பெறலாம் என்பதை உணர்த்தியவர் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். கொடிது கொடிது இளமையில் வறுமை! மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத வறுமை நிலையிலும் தன் முயற்சியில் கற்றார்.
சிற்றாள், நெசவுத் தொழிலாளி, அச்சுத் தொழிலாளி என வாழ்வியல் நிமித்தம் பல்வேறு தொழில்களைச் செய்தார். பி. வரதராஜுலு நாயுடு நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் அச்சுக் கோப்பாளராகப் பணியாற் றியபோது குறித்த தேதியில் சம்பளம் கொடுக்கக் கோரித் தொழிலாளர்கள் செய்த வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியபோது அவருடைய போராட்ட குணம் வெளிப்பட்டது.
பின்னர் காந்தியத்தின்பால் ஈர்க்கப்பட்டு, 1927ஆம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். உப்புச் சத்தியா கிரகம், சட்ட மறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களிலும் ஈடு பட்டார். கள் இறக்கு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தாலும் சென்னைப் பெருநகர மது விலக்குக் குழுச் செயலாளராகப் பொறுப்பேற்று தீவிர மதுவிலக்குப் பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் சாதி மக்களின் பகையைத் தேடிக் கொண்டார்.
கட்சி ஊழியராகப் பணியைத் தொடங்கிய ம.பொ.சி., அச்சமின்றி சோர்வு தவிர்த்துத் தன் கடும் உழைப் பால் தலைவர்களின் நன் மதிப்பைப் பெற்று சென்னை மாவட்டக் காங் கிரஸ் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆகஸ்டுக் கிளர்ச்சி துவங்கி, ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கம் நாடு முழுவதும் ஒலிக்கத் துவங்கிய காலம். மா.பொ.சி.யும் போராட்டத்தில் ஈடுபட்டு, 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் நாள் கைதாகி, இரண்டாண்டுக் கடுங்காவல் தண் டனை பெற்று, வேலூர் சிறையில் வைக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்டு 30ஆம் நாள் மத்தியப் பிரதேசத் திலுள்ள அமராவதி சிறையில் வி.வி.கிரி, கு. காமராசர், முத்துரங்க முதலியார், சத்தியமூர்த்தி, சஞ்சீவி ரெட்டி போன்ற தலைவர்களுடன் அடைக்கப்பட்டார். கடும் நோய் வாய்ப்பட்டு 1944இல் எலும்புக் கூடாக வெளியே வந்த ம.பொ.சி., இந்தியப் பெருநாட்டின் விடுதலைக் காலம் நெருங்குவதை உணர்ந்து, அதன் அடுத்த கட்டம் நோக்கிச் சிந்தித்தார்.
சிறை வாழ்க்கையில் இலக்கியம் பயின்று, அதன்வழி தன் அரசியல் சிந்தனைகளைச் செம்மையாக வளர்த் தெடுத்தவரின் உள்ளம் இந்திய விடு தலையோடு இன உணர்வையும் இணைத்துப் பார்த்தது. சங்க இலக் கியங்களும் சிலப்பதிகாரமும் பாரதி பாடல்களும் அவர்க்குத் துணை நின்றன. புதிய தமிழகம் படைக்கும் எழுச்சியுடன் 1946ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் தமிழரசுக் கழகத்தைக் காங்கிரசுக்குள் இருந்த படியே ஒரு கலாச்சார இயக்கமாகத் தோற்றுவித்தார். 1947இல் இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங் களும் கிளர்ந்தெழுந்த கால கட்டத்தில், இந்தியாவில் இருந்த பிற மொழி வழி இனத் தலைவர்கள் தங்களுக்கென இன, மொழி வளர்ச்சிக்காகத் தனி மாநிலக் கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டங்களைத் தொடங்கினர்.
ஆந்திர மக்கள் ‘விசால ஆந்திரம்’ கோரி ‘ஆந்திர மஹா சபை’ என்ற பேரியக்கத்தின் கீழ் போராடினர். கர்நாடக மக்களும் ‘சம்யுக்த கர் நாடகத்திற்காகப்’ போராடினர். பம்பாய் மாநிலத்திலிருந்க கன்னடப் பகுதிகளையும் ஹைதராபாத் சமஸ் தானத்தைச் சேர்ந்த கன்னடப் பகுதி களையும் இணைத்துப் புதிய மாநிலம் அமைக்க வேண்டும் என்பது அவர் களது கோரிக்கை. கேரள மாநிலத் தவரும் சென்னையுடன் இணைந் திருந்த கேரளப் பகுதிகளைப் பிரித்து ‘ஐக்கிய கேரளம்’ அமையப் போராடி னர். குஜராத் மாநிலத்தவரும் மகா ராஷ்டிர மாநிலத்திலிருந்து பிரிந்து ‘தனி குஜராத்’ மாநிலம் அமைய ‘மஹா குஜராத் ஜனதா பரிஷத்’ என்னும் இயக்கத்தைக் கண்டனர். மகாராஷ் டிர மக்களும் தங்கள் மாநிலம் தனியாக அமையப் போராட என்றே ‘சம்யுக்த மஹாராஷ்டிர சமிதி’ என்னும் அமைப்பை உருவாக்கினர்.
ஆனால் தமிழகத்தில் மொழி வாரித் தனியரசு கோர ஓர் இயக்க மில்லை. எல்லைப் பகுதிகளைக் காக்க வும் மீட்கவும் எந்தத் தலைவரும் முயற் சிக்கவும் இல்லை. திராவிடத் தனி நாடு கோரியவர்களும் கூட அதற் கென எந்த முயற்சிகளையும் முன் னெடுக்காத வேளையில், தமிழ் இன உணர்வாளர்களும் தேசிய வாதிகளும் பிளவுபட்டிருந்த நேரத்தில் தமிழின உணர்வும் உரிமையும் இந்திய ஒருமைப் பாடும் வேறு வேறல்ல என்பதைத் தலைவர்களுக்கும் பிரிவினைக் கோருபவர்களுக்கும் உணர்த்தும் வகையில் ‘உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம்’ என்று முழங்கித் தேசிய இன உணர்ச்சி, மொழி உணர்ச்சி என்ற இரண்டையும் வளர்த்தெடுத்தார். ம.பொ.சி.யின் இந்த முழக்கமே எல்லைப் போர், மொழியுரிமைப் போர், மாநில சுயாட்சிப் போர் என்ற எல்லா வற்றுக்குமான சூத்திரம். இதையே ‘சுயாட்சித் தமிழகம்’ படைக்கும் தேவைக்கான கொள்கையாகவும் எடுத்துரைத்தார்.
பிற மாநிலத்தில் இருந்த காங்கிர சார் மொழி வழி உணர்வுகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடிய காலத்தில், தமிழ்நாட்டின் நிலை தலைகீழாக இருந்தது. இந்நிலையில் தான், ம.பொ.சி., தமிழரசுக் கழகத்தை முற்று முழுதாகத் தேசிய இனத்தின் இயக்கமாக நடத்தினார். மொழி வாரி மாநிலம் அமைய வேண்டும். தமி ழகத்தின் எல்லைகளைக் காக்க வேண்டும் என்பதையே கழகத்தின் கொள்கையாகக் கொண்டு இயங்கியது தமிழரசுக் கழகம்.
1948ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க அன்றைய பாரதப் பிரதமர் நேரு, நீதிபதி தார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். மீண்டும் 1954ஆம் ஆண்டில் பசல் அலி தலைமையில் குழு அமைந்தது. 1956 நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலமானது. ஆனால் அப்போது ஏற்பட்ட தமிழக- ஆந்திர எல்லைச் சிக்கலைத் தீர்க்க, மத்திய சட்டத் துறை அமைச்சர் எச்.வி.படஸ்கர் தலைமை யில் குழு அமைக்கப் பட்டது.
முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு என்கின்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் உண்ணாவிரதம் இருந்து ஆந்திரப் பிரிவினையைக் கோரினார். சென்னையில் இராயப் பேட்டை நெடுஞ்சாலையில் இருந்த புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரத் தலைவரின் இல்லத்தில் தனது உண்ணாவிரதத்தை 1952ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் தொடங் கினார். ஆந்திரத் தலைவர்களான பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன் றோர் அவரை ஆதரித்தனர். சென் னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைய வேண்டும் என்பதே அவர்தம் கோரிக்கை. ‘மதராஸ் மனதே’ என்பதே அவர்களது முழக்கமாக இருந்தது.
பட்டினி கிடந்த ஸ்ரீராமுலுவைக் காணச் சென்ற ம.பொ.சி.யிடம், பிரகாசம், ஸ்ரீராமுலுவின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்று கோர, அதற்கு ம.பொ.சி. “சென்னை நகர் மீது உரிமை கொண் டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர் களுடன் பூரணமாக ஒத்துழைக்கும்” என்று பதிலுறுத்தார். பிரகாசம் விடாமல், “ஆந்திர அரசு தற்காலிக மாகவேனும் சென்னையிலிருக்க அனுமதித்தாலும் போதும், விசால ஆந்திரம் அமையும் போது எங்களுக்கு ஐதராபாத் கிடைத்து விட்டால் நாங்கள் போய் விடுவோம், இதற்கு நீங்கள் இசைந்து விட்டால் மற்ற வர்கள் எதிர்க்க மாட்டார்கள்” என்று கூறிய போதும் ம.பொ.சி. பிடிவாத மாய் “ஆந்திர அரசுக்கு தற்காலிகமாகச் சென்னையில் இடமளிக்க மற்றவர்கள் இசைந்தாலும், நான் இசைய மாட் டேன்” என்று உறுதியாகக் கூறி விட்டுத் திரும்பினார்.
1952 டிசம்பர் 15ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்த நிலையிலேயே உயிர் துறந்தார். அப்போது ஆந்திராவில் ஏற் பட்ட கலவரம் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தது நிலைமை மேலும் மோச மாகுமென்ற அச்சத்தால், ஆந்திர மாநிலம் 2.10.1953 அன்று பிரிக்கப் படும் என்று நாடாளு மன்றத்தில் நேரு அவரசமாக அறிக்கை வெளியிட்டார். சென்னை நகரம் அல்லாத - தகராறுக்கு இடமில்லாத, தெலுங்கு வழங்கும் மாவட்டங்களைக் கொண்டு - சித்தூர் மாவட்டம் முழுவதையும் சேர்த்து ஆந்திர மாநிலம் அமையும் என்றும் தலைநகர் பற்றிப் பின்னர் அறிவிக்கப் படும்’ என்றும் நேரு தம் அறிவிப்பில் விளக்கியிருந்தார்.
சித்தூர் மாவட்டத்தின் தெற்கே யுள்ள பகுதிகள் தமிழகத்தில் சேர்க்கப் பட வேண்டும் என்று ஏற்கெனவே தமிழரசுக் கழகம் கோரி வந்த நிலை யில் சித்தூர் ஆந்திராவில் சேர்க்கப் படுவதாக அறிவிக்கப்பட்டதும், பிரகாசம் மீண்டும் ‘சென்னையை இரு பகுதியாகப் பிரித்துக் கூவத்தை நடுவில் வைத்து வடசென்னையை ஆந்திரத் துக்கும் தென்சென்னையைத் தமிழ் நாட்டுக்குமாகப் பங்கு போட வேண் டும் அல்லது சென்னை நகரம் ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் பொது நகராகச் செய்ய வேண்டும்’ என்று அறிக்கை விட்டதும் தமிழகத்தின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.
அப்போது சென்னை மாநக ராட்சியின் ஆல்டர்மேனாக இருந்த ம.பொ.சி. தமிழரசுக் கழகத் தொண் டர்களுடனும், ‘தலையைக் கொடுத் தேனும் தலைநகரைக் காப்போம்’ என்ற முழக்கத்துடனும் பெரும் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போதைய சென்னை மேயர் செங்கல்வராயனின் உதவி யுடனும் தமிழக முதல்வர் இராஜாஜியின் ஆதரவுடனும் திருவலலிக்கேணிக் கடற்கரையில் கட்சிச் சார்பற்ற நிலையில் அனைத்துத் தலைவர் களையும் அழைத்து ஒரு பொதுக்கூட் டத்தையும் நடத்தினர். இராஜாஜி, பெரியார், எஸ்.எஸ். கரையாளர், பக்தவசலம் போன்ற தலைவர்களுடன் ம.பொ.சியும் அக்கூட்டத்தில் பேசினார்.
அத்துடன் நில்லாமல், உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரிக்குத் தமிழ்நாடு முழுவதுமிருந்து தந்திகள் அனுப்பவும் ஏற்பாடு செய்தார். மேலும் மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டச் செய்து ‘தலை நகரம் தமிழர்க்கே’ என்பது பற்றிய தீர்மானத்தையும் கொணர்ந்தார். நீண்ட விவாதத்திற்குப் பின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது தந்தி வடி வில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், சென்னை மாநில முதல்வர் ஆகியோருக்கு மேயரால் அனுப்பப்பட்டது. இறுதியாக 25.3.1953இல் தில்லி நாடாளு மன்றத்தில் நேரு, மத்திய அரசின் சார்பில் அதிகார பூர்வமான பிரகடன மொன்றை வெளியிடுகையில் ‘ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே இருக்கும்’ என்று அறிவித்தார்.
தலைநகர் காப்பாற்றப்பட்ட போதும் மாநிலம் பிரிப்பதில் எல்லைச் சிக்கல் நீடித்தது. திருத்தணி போராட்ட வீரர் மங்கலங்கிழாரின் அழைப்பின் பேரில் தமிழகத்தின் வடக்கெல்லைப் பகுதிக்குச் சென்ற ம.பொ.சி. சித்தூர் மாவட்டதின் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து மக்களைக் கிளர்ச் சிக்குத் தூண்டினார். தலைநகர்ப் போரில் கை கொடுத்த தலைவர்கள் கூட, வடக்கெல்லைக் கிளர்ச்சியில் ம.பொ.சிக்கு ஆதரவாக இல்லை, இராஜாஜி உள்பட.
ஆனால் ம.பொ.சி. அந்தப் பகுதிவாழ் தமிழ் மக்களின் துணை யுடன் தொடர்ந்து 15 நாட்கள் மறியல் போராட்டம் நடத்தினர். 144 தடை யுத்தரவை மீறிய குற்றத்திற்காக ஆறு வாரக் கடுங்காவல் தண்டனை பெற்றார். இதைத் தொடர்ந்து ரெயில் நிறுத்தம். சட்டப் பேரவை முன்பு ஆர்ப்பாட்டம் அமைச்சர்கள் எதிரே கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என்று போராட்டம் எழுச்சி பெறத் தொடங்கியது. இறுதியில் இதற்காக அமைக்கப்பெற்ற படங்கர் தலைமை யிலான குழு, திருத்தணியைத் தமிழ் நாட்டுடனும் திருப்பதியை ஆந்திரத் துடனும் இணைத்துப் பரிந்துரைத்தது. இதன் மூலமாக, வள்ளிமலை, திரு வாலங்காடு, திருத்தணி, ஓசுர், சித்தூரின் முப்பது கிராமங்கள் அகியவன தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டன. 1957இன் இறுதியில் பரிந்துரைக்கப் பட்டும் 1960 ஏப்ரல் 1இல் தான் இது சட்டரீதியாக நடைமுறைக்கு வந்தது.
இத்துடன் அன்றி, தமிழகத்தின் தெற்கெல்லையைப் பாதுகாத்ததிலும் ம.பொ.சிக்குப் பங்குண்டு. ‘தமிழ் நாடு’ என்ற பெயர் சுட்டவும் அறப் போர் நடத்தினர். பயிற்சி மொழி யாகத் தாய்மொழியாம் தமிழ் மொழியே இருக்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அதனை இலக்காக்கினார். ஆல்டர்மேனர்க இருந்தபோது ஆங்கிலேயர் வடிவ மைத்திருந்த சென்னை மாநகராட்சி யின் கொடியை மாற்றி சேர, சோழ, பாண்டியரின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவற்றைக் கொண்டு மாற்றியமைத்தார், மாநகராட்சியின் வரவு - செலவுக் கணக்கையும் தமிழிலே தாக்கல் செய்து முன் மாதிரி யானார். இது பற்றிக் குறிப்பிடும் தமிழரசுக் கழகத் தொண்டர்கள் ‘ரிப்பன் மாளிகையில்’ அவர் ஆற்றிய பங்கை மதித்து அம் மாளிகைக்கு, ம.பொ.சி. மாளிகை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலை வராகவும் சட்ட மேலவை உறுப்பின ராகவும், சட்ட மன்ற உறுப்பினராக வும் சட்ட மேலவைத் தலைவராகவும், நூலக ஆணைக் குழுவின் தலைவராக வும் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் செனட் உறுப்பினராகவும் தமிழ் வளர்ச்சி உயர்மட்டக் குழுத் தலைவ ராகவும் பணியாற்றி அனைத்திலும் செம்மையாய் நின்றவர் அவர். மூன் றாம் வகுப்பே படித்த ஒருவர் அறிஞர் நிறைந்த மேலவைக்குத் தலைமை தாங்கி அவைத்தலைவராய் இருந்த பெருமை அவர் ஒருவரையே சாரும்.
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு, தமிழகத்தில் பிற மொழியினர், விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியத்தில் இனவுணர்ச்சி, ஆங்கிலம் வளர்த்த மூட நம்பிக்கைகள், எனது போராட் டம், விடுதலைப் போரில் தமிழகம் உள்ளிட்ட 150 நூல்களை எழுதி யிருக்கும் ம.பொ.சி. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ நூலுக்காக 1966இல் சாகித்ய அகாதெமியின் பரிசினையும் பெற்றார். வாழும் போதே அவ ருடைய நுலான ‘விடுதலைப் போரில் தமிழகம்’ அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் நாட்டுடைமை யாக்கப்பட்டு ஒரு இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. ம.பொ.சி. யின் நூற்றாண்டு விழா நடைபெற்ற 2006இல் அவரது நுல்கள் அனைத்தும் நாட்டுடமை யாக்கப்பட்டு, முதல்வர் கருணா நிதியால் இருபது லட்ச ரூபாய் அவருடைய சந்ததியினர்க்கு வழங்கப் பட்டது.
அரசியலும் இலக்கியமும் தம் இரு கண்களெனக் கொண்ட ம.பொ.சி. இலக்கியத்துகுச் செய்த பங்களிப்பும் மகத்தானதே. சிலப்பதி காரத்தை உயிர்ப்பித்துக் கொடுத்த உ.வே. சாவின் வழி நின்று சிலம்பை அனைவரிடத்திலும் கொண்டு சென்று புத்துயிரூட்டினார். கட்ட பொம் மனை, கப்பலோட்டிய தமிழனை, மருது பாண்டியனை, தமிழருக்கு நினைவூட்டி, நிலைநாட்டி வரலாறாக் கியவர் ம.பொ.சி. வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப் பாட்டை எளிமைப்படுத்தி விளக்கினார். மேலும் விரிக்கின் பெருகும் வர லாற்றை உடையவர். தமிழக வரலாற் றின் ஒரு பகுதியைத் தம் வரலாறாகவும் பெறும் பேறு பெற்றவர் தமிழால் உயர்ந்தவர்; தமிழுக்கும் வளம் சேர்த்தவர். சிந்தை - சொல் - செயல் என்ற மூன்றாலும் தமிழுக்கும் தமி ழினத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் ஆக்கம் பயந்தவர். இத்தகைய சிறப்பு கள் பெற்ற பெருமகனார்க்கும் தலை நகராம் சென்னையில் சிலை அமைக் கவும் அஞ்சல்தலை வெளியிடவும் ஆவன செய்வதாக உறுதியளித்து அன்னாரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆகஸ்டு 15, 2006இல் அஞ்சல்
தலை முதல்வரின் கரங்களாலேயே தலைமைச் செயலகத்தில் வெளியிடப் பட்டது. ஆனால் ‘சிலை’ அறிவிப்பு அளவிலேயே நின்று விட்டது.
இதே போராட்டத்தை முன் வைத்து நின்ற பொட்டி ஸ்ரீராமு லுவுக்கு ஆந்திரத்தில் உள்ள மரியாதை என்னவென்று நோக்கினால், அவர் உண்ணாவிரதம் இருந்த இராயப் பேட்டை நெடுஞசாலையில் உள்ள புலுசு சாம்பமூர்த்தியின் இல்லம் ஆந்திர அஞ்சல் நினைவிடமாகப் பாதுகாக்கப்படுகிறது. ‘அமர ஜீவி’ என்று ஆந்திர மக்களால் இன்றளவும் போற்றப்படுகிறார். 2000ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் நாள் அவர் நினைவாக அஞ்சல் தலை வெளியிடப்பட் டுள்ளது, அவர் பெயரால் ஹைதரா பாத்தில் பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக் கழகம் நிறுவப்பட்டுள்ளது. அவர் நினைவாக 2008 ஜுனில் நெல்லூர் மாவட்டத்தை ‘ஸ்ரீ பொட்டி ஸ்ரீராமுலு நெல்லூர் மாவட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இப்போராட்டத்தில் அவருக்கு ஆதரவாக நின்ற பிரகாசம் அவர்களின் பெயராலும் ஆந்திராவில் மாவட்டம் உள்ளது. அவருக்கு பாராளு மன்றத் தில் சிலை அமைத்துள்ளனர். ‘பிர காசம் சாலை’ என்று சென்னையின் முக்கியமான பகுதியிலே ஒரு சாலை உள்ளதோடு, பொட்டி ஸ்ரீராமுலு பிரகாசம் இருவருக்கும் சென்னையின் முக்கியமான பகுதியிலே சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால், சென்னையைத் தமி ழர்க்கு மீட்டுக் கொடுத்த ம.பொ.சி க்குச் சென்னையில் சிலை இல்லை. இந்தக் குறையைப் போக்க தமிழக முதல்வர் தாம் அறிவித்தபடி சென்னை யின் மையப் பகுதியில் ம.பொ.சி.க்கு சிலை நிறுவவேண்டும். இது தாமத மாகிக் கொண்டே போவது, ம.பொ.சி.யின் மணி விழாவில் ம.பொ.சி. பற்றி அண்ணா குறிப்பிட் டதைத்தான் தவிர்க்க முடியாமல் நினைவில் எழுப்புகிறது. “நாம் உழுது கொண்டேயிருப்போம். யாராவது அறுவடை செய்து கொண்டே போகட்டும். மிச்சம் மீதி என்றேனும் நாட்டுக்குக் கிடைக்கும். அதுவரை நாம் உழுது கொண்டே இருப்போம் என்றெண்ணி அவர் உழவராகவே வாழ்ந்து வருகிறார்.”
குறிப்பு : ம.பொ.சி.யின் நூல்கள் அனைத்தையும் மயிலாப்பூர் பூங் கொடி பதிப்பகம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது. ம.பொ.சி. பற்றி மேலும் அறிய விரும்புவோர், ம.பொ.சி.யின் சிந்தகைளை கற்க விரும்புவோர், இந்தப் பதிப்பகத்தில் உள்ள நூல்களை வாங்கிப் படித்துப் பயன் பெறலாம்.
பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்குத் தெரு,
மயிலாப்பூர், சென்னை - 600 004...
பாண்டி மகன் சபரி மலை ஐயப்பன்...
நீங்கள் சபரிமலைக்கு ஜோதி தரிசனத்திற்கு போகிறீர்களா?
கேரளாவின் பதிவு எண் (KL) கொண்ட வாகனத்தில் போனால் பம்பா நதி வரை வாகனம் போகலாம்..
இன்னும் சில வருடம் போகட்டும் மலையாளியாக இருந்தால் பதினெட்டாம்படி வரையேகூட வாகனம் செல்லும் வசதி கிடைக்கலாம்.
அதே தமிழ்நாட்டின் பதிவு எண் (TN) கொண்ட வாகனத்தில் போனால்... ஐயோ பாவம்...
வெகு தூரத்திலேயே நீங்கள் உங்கள் வாகனத்தை விட்டு இறங்கி நடந்து செல்ல வேண்டும்.
மலையேறி சாமி கும்பிட்டு உடல்சோர்ந்த பின்னரும் சுமார் ஒன்பது கிலோ மீட்டர் நடந்த பின்னர்தான் உங்கள் வாகனத்தை அடைய முடியும்.
ஏனென்றால் நீங்கள் தமிழன்.
பயணப்பாதைகளிலும்கோயிலிலும் பெரும்பாலும் ஐயப்பா சேவாசங்கம்
நடத்துவது தமிழர்கள் தான். அங்கு எல்லோருக்கும்சம உரிமை உண்டு.
ஆனால், மலையாளிகள் நடத்தும்கடைகள், சன்னிதானக் கடைகள் இவற்றில் தமிழனுக்கு என்றால் விலை அதிகம். சன்னிதான அலுவலகத்தில் தமிழன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.
கண்கூடாக் காணமுடிவது மலையாள போலீஸாரின் அராஜகம்.
எந்த ஒரு விஷயம் என்றாலும் மலையாளிகளிடம் மென்மையாகவும், தமிழர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்வார்கள்.
2012ல் சபரிமலையில் ஒரு சென்னைத் தமிழனை மலையாள டீக்கடைக்காரன் வெந்நீர் ஊற்றிக் கொன்றான்.
அதை கொலை முயற்சியாக பதியாமல் விபத்து என்று பதிவு செய்தது மலையாளக் காவல்துறை.
இதிலிருந்து அவர்களின் இன வெறிப்போக்கை தெரிந்து கொள்ளுங்கள்.
மலையாள போலீசார் இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் சன்னிதானத்தில் நுழைந்ததும் அப்படியே பதினெட்டாம் படியேறி ஐயப்பனிடம் இருமுடியைக் கட்டிவிட்டு பிறகு தான் முடியைப் பிரிக்க வேண்டும் என்பார்கள்.(மலையாளிகளுக்கு அதெல்லாம் கிடையாது).
தமிழன் வளர்த்த சபரிமலையில் மலையாளிகள் தமிழனைப் புறக்கணிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிறது.
சரங்குத்தியில் குத்தப்படும் ஒவ்வொரு சரமும் தமிழினத்தின் நெஞ்சில் குத்தப்படும் ஊசியாகவே மாறிக்கொண்டிருக்கிறது சபரிமலையில்.
பந்தள ராசன், தமிழ் மூவேந்தர்களில் தெற்குப் பகுதிக்குச் சொந்தமான பாண்டிய வம்சத்தில் வந்தவன் தான்.
பழசிராஜா வம்சத்திலோ, வடக்கன் வம்சத்திலோ வந்தவன் அல்ல.
தமிழர்கள் ஐயப்பனை நாடி அதிகம் வருவார்கள் நிறைய கல்லா கட்டலாம் என்று இதை மறைக்காமல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மறைக்காமல் கூறிவந்தனர்.
இப்போது சபரிமலை வரலாறு பற்றிய தமிழ் வெளியீடுகளில்தான் பந்தள ராசனுக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஆனால், ஐயப்பன் பற்றி வரும் தற்போதைய மலையாள வெளியீடுகளில் பந்தள அரசன் பெயரும் அவன் ஒரு பாண்டிய மன்னன், தமிழன் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
தமிழர்களிடம் இனியும் சபரிமலையைக் கொண்டு சேர்க்க வேண்டாம் என்ற அளவுக்கு தமிழர்கள் வரத் தொடங்கி விட்டனர் அல்லவா?
இப்போது அயாள் ஒரி பாண்டியானு... என்று மட்டும் கூறுகிறார்கள்.
பாண்டி என்ற சொல்லையே கேவலமாகச் சொல்லும் மலையாளிகளால், ஐயப்பனே அந்தப் ‘பாண்டி’யின் மகன் என்ற உண்மையை ஏற்க முடியவில்லை.
சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறி தளத்தில் நாம் நடக்கும் இடத்தில் முன்பெல்லாம் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற வாசகம் மிகப்பெரிய வடிவில் தமிழிலும் மலையாளத்திலும் வைக்கப்பட்டு இருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு தமிழைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.
ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி தனது சபரிமலை நோக்கியப் பயணத்தில் (தமிழக) செங்கோட்டை சிவன் கோயிலுக்கும் வந்து போவது காலம்காலமான ஐதீகம்.
அங்கும் வழிபடும் பக்தர்கள் ஏராளம்.அதைத் தடுத்தால் வேறு வழியில்லாமல் சிவன் கோவிலில் வழிபாடு செய்பவரும் கேரளாவிற்குள் வந்து வழிபடுவார்கள்,
இன்னும் கொஞ்சம் கல்லா கட்டலாம் என்று கேரள அரசு முடிவு செய்தபோது,ஐயப்பனின் தீவிர பக்தரான செங்கோட்டை குருசாமி நாடார் என்ற தமிழர்..
கேரள அரசின் கையில் காலில் விழுந்து அந்த உரிமையை மீட்டு வந்தார். அதற்குள் அவருக்கு நுரைதள்ளி விட்டது.
ஐயப்பன் கோயில் பயணத்தின் பெரும்பாலான பகுதிகள், தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த பகுதிகள்.
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு அவை கேரளாவோடு சேர்க்கப்பட்டு தமிழனும் தமிழும் புறக்கணிக்கப்படும் வரை அவை பெரும்பாலும் தமிழ் நிலப்பகுதிகளாகவே இருந்தன.
எனவே, சபரிமலை என்பது மலையாளிகளுக்குத் தொடர்பேயில்லாத, முழுக்க முழுக்க தமிழர்களின் கோயிலாகவே இருந்த காலம் உண்டு.
70ஆண்டுகளில் எல்லாம் மாறிப்போனது.
பழனியைப் பார்த்து பொறாமை கொண்ட மலையாளிகள் மாலைபோட்டு விரதமிருந்து கடினமான பயணம் செல்லும் வழிபாட்டு முறையை காப்பியடித்து.. ஏற்கனவே தமிழர்கள் சிறிய அளவில் சென்றுவந்த காட்டுக்கோவிலான ஐயப்பன் கோவிலை புது புராணக்கதை ஒன்று புனைந்து தமிழர்களிடமும் மலையாளிகளிடமும் நன்றாக விளம்பரப்படுத்தி காட்டை அழித்து வியாபாரமாக்கி இன்று தமிழன் மீதான இனவெறியைத் தீர்த்துக்கொள்ளும் இடமாகப் பயன்படுத்துகின்றனர்.
கடவுள் மறுப்புக்கொள்கையை வெளியே முழங்கிக் கொண்டு,தமதுவீட்டுப் பெண்களை ரகசியமாகக் கோயிலுக்கு அனுப்பிய திராவிடவாதிகளால்..
கண்ணகிக்கோயில், சபரிமலைப் பாதையின் பெரும்பகுதி, திருப்பதி, காளஹஸ்தி போன்ற தமிழனின் பக்தி கலாசாரச் செல்வங்கள் அதைச் சுற்றிய பகுதிகள் வேறு மாநிலங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன.
இன்று பல மலையாளிகள் சபரிமலைக்கு இருமுடிகூட சுமந்து வருவது இல்லை. பதினெட்டாம் படி ஏறாமல் பக்கவாட்டு வழியாக வந்து முதல்மரியாதையோடு சாமி கும்பிட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.
சபரிமலையைப் பிரபலமாக்கியவர்கள் என்றால், எம்.என்.நம்பியார் என்று சொல்வார்கள்.
ஆனால் எம்.என்.நம்பியாருக்கு சபரிமலையைப் பற்றி ஐயப்பனைப் பற்றிச் சொல்லி மாலை போட வைத்தவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்ற பச்சைத் தமிழர்.
ஐயப்பனின் தீவிர பக்தர் அவர்.
அவரது நாடகக் குழுவில் இருந்த போது தான், ஐயப்பன் என்ற கடவுள் இருப்பதே நம்பியாருக்குத் தெரிய வந்தது.
1949ல் ஐயப்பன் கோயிலில் சிலர் தீவைத்து விட்டனர்.சிலைகள் உள்பட கோயிலின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டன.
இதனால் மனம் வருந்திய கேரள பக்தர்கள் சிலர், ஐயப்ப பக்தரும் முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜனின் தந்தையுமான பி.டி.ராசனிடம்கோரிக்கை விடுத்தார்கள்.
(கோவில் தமிழருடையது அதனால் தமிழர்களிடம் புணரமைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது)..
அவரும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் சேர்ந்து ஐயப்பன் திருவுருவச்சிலை ஒன்றைச் செய்தார்கள்.
சிலை செய்யும் பணி கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் நடந்தது.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் கண் திறக்கும் சடங்கு நடந்தது.
சுவாமிமலையில் ஸ்ரீரங்கம் கொண்டு செல்லப்பட்டு நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் தோட்டத்தில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, தமிழகமெங்கும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு சபரிமலையில் நிறுவப்பட்டது.
பல கோயில்களில் ஐயப்பனை வைதீகர்கள் அனுமதிக்கவில்லை.
‘எல்லைச்சாமியான அய்யனார்தான் ஐயப்பன். (இது உண்மையோ) எனவே அவரை அனுமதிக்க முடியாது’ என்றார்கள்.
பி.டி.ராசன் அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஊர்வலத்தை சிறப்பாக முடித்து சபரிமலைக்கு ஐயப்பனைக் கொண்டு சென்றார்.
தற்போதைய ஐயப்பன் திருவுருவச்சிலையை செய்தவர் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதி (ஸ்தபதி = பெருந்தச்சன்)என்ற தமிழரே.
அந்தக் காலத்தில் பெரிய பாதையில் மலை ஏற, இப்போது இருக்கிற குறுகியப்பாதைகள் கூடக் கிடையாது.
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்கிற ஐயப்ப சாமிகள் கூட்டமாக இருமுடியோடு, தீப்பந்தங்களை கொளுத்திக்கொண்டு, கூடவே ஒரு கூரிய கத்தியும் கொண்டு செல்வார்கள்.
வழியெங்கும் செடிகொடிகளை வெட்டி பாதையமைத்துக் கொண்டே செல்வார்கள்.
அவ்வளவு சிரமப்பட்டு சபரிமலையைச் செப்பனிட்டவர்கள் தமிழர்கள்.
தமிழர்களைப் பார்த்துதான் தெலுங்கர்கள், கன்னடர்கள், வடஇந்தியர்கள் வந்தனர்.
இனவேறுபாடு காட்டாமல் தமிழர்கள் தாம் கடைப்பிடிக்கிற அதே நியமங்களோடு மற்றவர்களுக்கும் இருமுடி ஏற்றினார்கள்.
மலையாளிகள் செய்தது விளம்பரப்படுதத்துதல் மட்டுமே.
இதன் விளைவாக 75ஆண்டுகள் முன்புவரை தமிழ் வம்சாவவழி மலையாளிகள் பழனிக்குத் தந்த முக்கியத்துவம் குறைந்தது. சபரிமலை புகழ் பெற்றது.
கல்லா நிறைய ஆரம்பித்ததும் தமிழனை வெட்டிவிட நினைக்கிறார்கள் மலையாள ஆன்மீக வியாபாரிகள்.
இதே நிலைதான் கண்ணகி கோவிலிலும்.
அதுபற்றி விரிவான ஒரு பதிவு போடுகிறேன்.
ஆக, சபரி மலையை ஆண்ட மன்னன் தமிழன்.
சிலை வைத்தவன் தமிழன்.
அங்கே கோவில் கட்டி பாதையமைத்து ஆன்மீகத் தலமாக்கியவன் தமிழன்.
அந்தப் பகுதி பெரும்பான்மை மக்கள் தமிழர்கள்.
கோவிலுக்கு சேவை செய்பவர்களும் பெருமளவில் செல்பவர்களும் காசு போடுபவர்களும் தமிழர்கள்.
நிர்வாகமும் பணமும் நிலமும் மலையாளிக்குச் சொந்தமா?
இருக்குடா உங்களுக்கெல்லாம் ஒருநாள்...
Subscribe to:
Posts (Atom)