27/07/2018

திமுக கருணாநிதி க்காக தயாராகும் மெரீனா...


அண்ணா சமாதி அருகே பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்து குழி வெட்டுரீங்க..


ராஜாஜி அரங்கத்தை சுத்தம் செய்து மின்விளக்குகளை பொருத்துகிறீர்கள்...

அரசு மரியாதையோடு கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய ஸ்டாலினோடு டீல் போட்டுடீங்களாடா அடிமைகளா..

2009 போர் நடக்கும் வரை ந்டந்த அடக்குமுறைகள் இவை...


1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார்.

2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது.

3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

5. கருணாநிதி ஆட்சி மாறும் வரை ’தமிழீழம்’, ’புலிகள்’, ‘ முத்துக்குமார்’, ‘இலங்கை’ என்று பேசும், எழுதப்பட்ட எந்த வித துண்டறிக்கைகளோ, சுவரொட்டிகளோ அச்சகங்கள் அச்சடிக்க தடையை திமுக அரசு விதித்திருந்தது. இதை அச்சிட்ட அச்சகங்களை கண்டறிந்த காவல்துறை சிலவற்றை மூடியதும், வழக்கு பதிவு செய்து அச்சுக் கூடங்களை கையகப்படுத்தியதும் நடந்தது.

6. கடற்கரை ஓரத்தில் காவல்துறை கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டு தமிழீழத்தில் இருந்து வருபவர்களை கைது செய்வதும், உதவி பொருட்கள் அனுப்பபடுவது தடுக்கபட்டும் செய்யப்பட்டது.. மறைந்த தோழர். புதுக்கோட்டை முத்துக்குமார். இதை சொல்லி இருக்கிறார்.

7. கருணாநிதியை விமர்சனம் செய்தார்கள் என்பதற்காக சிவனடியார்களை மூன்று மாதம் பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டார்கள்.

8. தமிழீழ போர் சி.,டிக்களை தமிழக காவல்துறை பறிமுதல் செய்தது. அத்தகைய சி.டிக்களை நகல் எடுக்க முடியாமல் தடை செய்தது. காரைக்குடிக்கு சி.டிக்களை கொண்டு வந்த எங்களது தோழர் திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

9. போரை நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களை தாக்கி போராட்டத்தை உடைத்தது திமுக அரசு.

10. சுவரொட்டிகளை திமுக அரசின் காவல்துறை இரவோடு இரவாக கிழித்துப் போடுவார்கள் . அல்லது சுவரொட்டிகள் பறிமுதல் செய்யப்படும். ஒட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

11. தமிழீழப் படுகொலையை கண்டித்தும், திமுக அரசினை விமர்சித்து பேசினார் என்பதற்காக புஇமு தோழர் நெல்லையில் கடுமையாக காவல்துறையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பொய் வழக்கில் அடைக்கப்பட்டார்.

12. முத்துக்குமார் தீக்குளித்ததும் அவர் தமிழ் தீவிரவாதி என தனது ஊடகங்களில் செய்தி வெளியிடச் செய்தார். பிணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றார்.

13. இரண்டாவது ஈகியரான பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து இறந்ததும். கடன் தொல்லையாலும்., உடல் நலக் கோளாறினாலும், குடித்துவிட்டும் தற்கொலை செய்தார் என செய்தி வெளியிட வைத்தது அரசு. பின்பு இதை மாற்றி எழுதவைக்க போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.

14. தமிழீழ தேசியதலைவர் புகைப்படத்தை சுவரெழுத்தில் கூட அழிக்க உத்தரவிட்டிருந்தார் கருணாநிதி.. விடுதலை சிறுத்தைகளுக்கே கூட இது ந்டந்தது. அவர்களின் சுவரெழுத்தில் பிரபாகரன் படம் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது.

15. மூன்றாவது ஈகியரான சென்னை அமரேசன் எழுதி வைத்திருந்த கடிதம் காவல்துறையால் கைப்பற்ற பட்டு அழிக்கப்பட்டது. இன்று வரை கிடைக்கவில்லை.

16. அனைத்து ஈகியரின் நினைவு ஊர்வலமும் உடனடியாக நடத்த கோரி நெருக்கடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டது.

17. தமிழீழ போர் காட்சிகள் தொலைக்காட்சியிலோ, ஊடகத்திலோ வெளியிடக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தடுத்தார்.

18. போர்காட்சிகளை வெளியிடலாம் என உயர் நீதி மன்றத்தில் சென்று உணர்வாளர்கள் உத்தரவு வாங்கி வந்த உடன் ‘மக்கள்’ தொலைக்காட்சி அதை வெளியிட்டது. உடனடியாக அந்த தொலைக்காட்சி அலுவலகத்தில் காவல்துறை குவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படாவிடில் உள்ளே நுழைந்து கைப்பற்றுவோமென காவல்துறை மிரட்டி அதை நிறுத்தியது.

19. போர்காட்சிகள் 2011 ஏப்ரல் திமுக ஆட்சியில் இருக்கும் வரை அச்சகங்கள் அச்சடிக்கவில்லை. மறைமுகமாகவே இவை அச்சடிக்கப்ப்ட்டன.

20 சென்னை மற்றும் இதர இடங்களில் உள்ள அரசு கருத்தரங்க கூடங்கள் தமிழீழ பிரச்சனைக்கும், தமிழீழம் சாரத தமிழர் பிரச்சனை, தமிழ் மொழி பிரச்சனை என்ற எதற்கும் கருத்தரங்கம் நடத்த அனுமதி மறுக்கப்ப்ட்டது.

21. சென்னை தேவ நேய பாவணர் அரங்கம் ஒவ்வொருமுறையும் காவல்துறை அனுமதி பெற்று ந்டத்தவேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. போர் முடியும் வரை இங்கு எந்த நிகழ்வும் தமிழர் பிரச்சனை சார்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை..

22. தமிழீழப் போரை நிறுத்த வேண்டும் என்று பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக கொளத்தூர்மணி, மணியரசன், சீமான் கைது செய்யப்ப்ட்டனர் சனவரியில்.

23. பின்னர் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டார் பேசியதற்காக. நெல்லையில் இருந்து அவர் தலைமறைவாக வெளியேறி பல ஊர்களுக்கு பயணம் செய்து பேச வேண்டி இருந்தது. சீமானும், அமீரும் கைது செய்யப்பட்டார்கள்.

24. நாஞ்சில் சம்பத்தும், கொளத்தூர் மணியும் திரும்பவும் கைது செய்யப்பட்டார்கள்.

25 சோனியாவிற்கு கருப்பு கொடி காண்பிக்க முயற்சி செய்து, திரள அனுமதி மறுக்கப்ப்ட்டதால் ‘கருப்பு பலூனை’ பறக்க விட்டார்கள் என்பதற்காக இயக்குனர். பாரதிராஜா உள்ளிட்ட திரைப்பட உணர்வாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

26. கோவை ராணுவ வண்டி தாக்குதலுக்காக பல உணர்வாளர்களை வேட்டையாடி கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்தது.

27. முத்துக்குமாரை இழித்து பேசினார் என்பதற்காக ஈ.வி.கே.எஸ் வீட்டில் அருகே சென்று முற்றுகையிட சென்ற இயக்குனர் செந்தமிழன், அருணா பாரதி உள்ளிட்ட 40 பேர் ஒரு மாதத்திற்கும் மேல் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

28. முத்துக்குமாரின் மரணத்தின் ஊர்வலத்தின் போது கல்லூரிகள், பள்ளிகள் காலவரையின்றி அடைக்கப்பட்டன.

29. கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தை தாக்கினார்கள் என்று தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

30. போரில் காயமடைந்து எவரேனும் தமிழகத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வருகிறார்களா என்று கண்கானிக்கப்பட்டு நடவெடிக்கை எடுக்கப்பட்டது. மருந்துகள், ரத்தம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழீழத்திற்கு அனுப்பமுடியாமல் செய்யப்ப்ட்டது. இதையும் மீறி ரத்தம் மருந்து பொருட்களை அனுப்பினார் என்பதற்காகத்தான் திமுக அரசால் 2010இல் புதுக்கோட்டை முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியில் தான் அவர் கொலையும் செய்யப்பட்டார்.

31. மே மாதம் 2009இல் பெரியார் திக அலுவலகத்தை தாக்கிய திமுக குண்டர்கள், பெரியாரின் சிலையையும் உடைத்தார்கள்.. பெதிக அலுவலகம் அண்ணா அறிவாலயத்திலிருந்து குறைந்த பட்ச தூரத்திலேயே உள்ளது. கருணா நிதியின் கோபாலபுர வீடு இருக்கும் அதே பிரதான சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

32. இது தவிர இது தவிர இவை அனைத்தும் போர் நடக்கும் போது அங்கு 420,000 மக்கள் இருக்கிறார்கள் என அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சொல்லிகொண்டிருந்த போது பிரணாப் மட்டும் 70,000 தமிழர்கள் மட்டுமே இருப்பதாக சென்னையிலும், பிர ஊரிலும் பொய் பேசியதை திமுக கண்டிக்கவே இல்லை...

33. தஞ்சையில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்களது இல்லம் உட்பட பல த.தே.பொ.க. தோழர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனையிட்டது காவல்துறை. ஈரோட்டில் பெ.தி.க. செயலாளரின் வீட்டில் குறுந்தகடுகளைக் கைப்பற்றி அவரை ரிமாண்ட் செய்தது காவல்துறை.

34. தஞ்சையில் இந்திய அரசின் விமானப்படைத் தளத்திலிருந்து, இலங்கையின் பலாலி விமானத்தளத்திற்கு ஆயுதம் அனுப்புகிறார்கள் என்று செய்தியறிந்து, தஞ்சை விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்ட, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், பெ.தி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி, த.தே.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன் உள்ளிட்ட தலைவர்களும், பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்ட தோழர்களுமாக 275 பேரை கருணாநிதியின் காவல்துறை ரிமாண்ட செய்தது. இரவு 4 மணிக்கு நீதிபதி வீட்டில் வழக்கறிஞர்கள் பலரும் போராடி பிணை வாங்கி அனைவரும் அதிகாலை 5 மணியளவில் விடுதலையாயினர்.

2009 போர் நடக்கும் வரை ந்டந்த அடக்குமுறைகள் இவை..

போர் நடந்த பிறகு 2009-2011 இரண்டு வருடங்களில் செய்த அயோக்கியதனம் இன்னும் அதிகம்...

நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள் 27.7.1879...


1937ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு பல்வேறு மாகாணங்களில் வெற்றி பெற்றது. அதில் சென்னை மாகாணமும் ஒன்று. அப்போதைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி வேறு எந்த மாகாண முதல்வரும் செய்யத் துணியாத  காரியமொன்றைச் செய்தார். தொடக்கப் பள்ளிகளில் இனிமேல் இந்தி கட்டாயப் பாடமாக புகுத்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அப்போது இந்தித்திணிப்பிற்கு எதிராக முதன்முறையாகத் தமிழறிஞர்கள் ஒன்று கூடிப் போர்க்குரல் எழுப்பினர்.

அக்காலத்தில் முப்பத்தைந்து ஆண்டு காலமாகக் காங்கிரசுக் கட்சிக்குத் தம்மை ஒப்படைத்து இந்திய  விடுதலைக்குப் போராடி வந்த தமிழறிஞர் ஒருவர் அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழறிஞர்களோடு இணைந்து போராடினார். அவர் வேறு யாருமல்லர்; நாவலர் என்றழைக்கப்படும் சோம சுந்தர பாரதியார் ஆவார். அவரின் வாழ்க்கை வரலாற்றை இனி காண்போம் .

எட்டையபுரத்து அரசரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தவர் சுப்பிரமணிய நாயகர். இவர் சென்னையிலிருந்து எட்டையபுரத்திற்குக் குடிபெயர்ந்து வந்ததால் “எட்டப்ப பிள்ளை ” என்று அழைக்கப்பட்டார் . எட்டப்ப பிள்ளை – முத்தம்மாள் இணையருக்கு மகனாக 27.07.1879 இல் பிறந்தவர்தாம் சோமசுந்தரம்.

எட்டையபுரம் அரண்மனையில் பணியாற்றி வந்த சின்னச்சாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும் அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறுவயது முதலே நல்ல நண்பர்கள் .தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவையாய் பரந்த அரண்மனையில் பாடிப் பறந்து வலம் வந்தனர் .

எட்டையபுரம்  அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர் . ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார் . அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி , பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார். இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்து “இதுவன்றோ , அருமைப்பாடல் ” எனக்கூறி இருவருக்கும் “பாரதி” பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

அன்றுமுதல் சோமசுந்தரம் “சோமசுந்தர பாரதி” என்றும் அழைக்கப்பட்டார் .

1905ஆம் ஆண்டு சென்னையில் சட்டத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார் . அப்போது வ.உ.சி.யோடு நெருக்கம் கொண்டு பழகியதன் மூலம் இந்திய விடுதலையின் மீது தீராப் பற்றுக் கொண்டார் .

வ.உ.சி.தோற்றுவித்த கப்பல் நிறுவனத்திற்குப் பொறுப்பேற்று செயல்படவும் பாரதியார் துணிந்தார். அதன் காரணமாகவே , வ.உ.சி. “இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே” என்று விளையாட்டாக மற்றவரிடம் பேசுவதுண்டு. அதாவது “எஸ்.எஸ்.பாரதி ” என்பதை (steam ship ) “தமிழ்க் கப்பல் ” என்று வ.உ.சி. விளித்துக் கூறுவது வழக்கம் .

வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை விட்டு நீங்கினால் பெரும் பதவி கிடைக்குமென்று ஆசை வார்த்தைகளை ஆங்கிலேயர் கூறி வந்தனர் . அவற்றுக்கு சோமசுந்தர பாரதியார் மயங்கிட மறுத்தார். மாறாக,  ஆங்கிலேயர் வ.உ.சி. , சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீது தொடுத்த இராசதுரோக வழக்குகளை எதிர் கொண்டு வாதாடினார்.

காந்தியடிகள் சென்னைக்கு வந்த போது  அவரை சோமசுந்தர பாரதியார் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பொதுக் கூட்டங்களில் உரையாற்றும்படி செய்தார். காங்கிரசுப் பேரியக்கத்தில் தான் மட்டுமல்லாது , தம் புதல்வன்   இலட்சுமிரதன் பாரதி , புதல்வி இலக்குமி பாரதி , மருமகன் கிருஷ்ணசாமி பாரதி ஆகியோரை ஈடுபடுத்தி சேவையாற்றும்படி கேட்டுக் கொண்டார் .

1933ஆம் ஆண்டு அண்ணாமலை அரசரின் வேண்டு கோளுக்கிணங்க வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப்   பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு  “தீ” கொழுந்து விட்டெரிந்தது.

10.8.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் உரையாற்றிய முதல்வர் இராசாசி “இந்தியில் பாடநூல்கள் விரைவில் எழுதப்படும் ” என்று அறிவிப்பொன்றை வெளியிட்டார் .

27.8.1937இல் கரந்தை தமிழ்ச் சங்கம் சார்பில் த.வே.உமா மகேசுவரனாரும் , 29.08.1937இல் திருநெல்வேலித் தமிழ்ப் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மா.வே. நெல்லையப்பப் பிள்ளையும் இராசாசியின் இந்தித் திணிப்பைக் கண்டித்து முதல் குரல் எழுப்பினார்.

அதன் பிறகு இந்தித் திணிப்பிற்கு எதிரான குரலை சென்னையில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும். 05. 09.1937இல் சென்னை செளந்தரிய மண்டபத்தில் பாரதியார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருவாளர்கள் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சகஜானந்தம் , ‘ஜஸ்டிஸ்’ இதழாசிரியர் டி.ஏ.வி.நாதன், சி.என்.அண்ணா துரை, பண்டிதை நாராயணியம்மாள் உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப் பெருமக்கள் வந்திருந்தனர்.

அக்கூட்டத்தின் தலைவராகிய பாரதியார் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்: “இந்தி மொழி, இலக்கண இலக்கியச் சிறப்பில்லாத வெறுமொழி, அம்மொழி பயிலுவதால் தமிழ் மொழியும், தமிழர் நாகரிகமும் கெட்டு விடும். தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் இந்தியை கட்டாயப் பாடமாக்குவதைத் தமிழ் மக்கள் முழு வன்மையோடு கண்டித்து ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும். அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக் காட்டும். அவ் வெதிர்ப்பினால் ஏதாவது கேடு வருமானால் அதனை பெறத் தாம் முன்னணியில் இருப்பேன்” என்று இரத்தம் துடிதுடிக்கப் பேசினார்.

இந்தக் கூட்டத்தின் அடுத்த படிநிலையாக 04.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மாபெருங் கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். “தமிழ்க் கடல் ” மறைமலையடிகள் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் பாரதியாரின் உரை கோடை இடியாய் அமைந்தது.

காங்கிரசுத் தலைவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்பதால் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதா? என்றும், முதல் மந்திரியாருக்கு தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளிக்க யாதொரு உரிமையும் இல்லையென்றும் கடுஞ்சினங் கொண்டு பேசினார்.

இதில் பரலி சு.நெல்லையப்பப் பிள்ளை, வச்சிரவேல் முதலியார், கே.எம்.பாலசுப்பிரமணியம், சி.என்.அண்ணாதுரை, முத்தையா முதலியார் ஆகியவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். இக்கூட்டத்தில் சட்டசபையிலும், நீதிமன்றங்களிலும், கல்லூரிகளிலும், அரசியல் அலுவல் கூடங்களிலும் தாய் மொழியாகிய தமிழ் மொழியிலேயே எல்லாக் காரியங்களும் நடைபெறுதல் வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சென்னையில் நடைபெற்ற தொடர் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக மாவட்டந்தோறும் இந்தி எதிர்ப்பு மாநாடுகள் முளைவிடத் தொடங்கின. பல்வேறு ஊர்களுக்குப் பாரதியாரும் பயணம் மேற்கொண்டு வீர உரையாற்றி மக்களை எழுச்சி கொள்ளும்படி செய்தார்.

‌26.12.1937இல் பாரதியார் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு இந்தி எதிர்ப்புப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றது. 2500க்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி முதன்முறையாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில்தான் பெரியாரும் முதன்முறையாக பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை மாநாடுகள் கூட்டியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும் கட்டாய இந்திப்பாட ஆணையைத் திரும்பப் பெற முடியாது எனும் ஆணவத்தில் இராசாசி உறுதியாய் இருந்தார். மேலும், இந்தி கட்டாயப் பாட ஆணை 21.04.1938இல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பும் செய்தார்.

இந்நிலையிலே, திருச்சியில் 28.05.1938இல் கூடிய மந்திராலோசனைக் கூட்டத்தில் பாரதியார் ” சத்தியாக்கிரகம் அதில் வெற்றி கிடைக்காவிடில் சட்ட மறுப்பு த் தொடங்க வேண்டியதைத் தவிர வேறில்லை” என்று போர் முரசம் கொட்டி முழங்கினார்.

உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராகப் பாரதியார் அவர்களும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும், உறுப்பினர்களாக ஈ.வெ.ரா. , உமா மகேசுவரனார், ஊ.பு.செளந்தர பாண்டியன், கே.எம்.பாலசுப்பிர மணியம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பாரதியார் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் மறியல், நாள்தோறும் சிறை என்ற நிலைக்குப் போராட்டம் வளர்ந்தது. தொடர் போராட்டங்கள் இராசாசி அரசை கலங்கடிக்கச் செய்தது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையும் இருந்ததால் ஏராளமான தொண்டர்கள் போராடிச் சிறை சென்றனர். பெரியார் ஈ.வெ.ரா. தளைப்படுத்தப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன. 1) மொழிவழித் தமிழ் மாகாணம்,  2)தமிழ்நாடு தமிழருக்கே ,

இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கத்திலும் பாரதியாரின் பங்கு அளப்பரியது. தன் வாழ்நாளின் இறுதிவரை இக்கோரிக்கைகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் தான் மொழிவழி அடிப்படையில் தமிழ்த்தேசிய இனம் தன்னைத்தானே அடையாளங் கண்டது. அப்போராட்டத்தின் மூலமாக உருவான மொழிவழி மாகாணக் கோரிக்கையும், தமிழ்நாடு தமிழருக்கே முழக்கமும் அப் போராட்டத்தில் ஈடுபட்ட பெரியார் அவர்களால் (பெல்லாரி சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு) திராவிடன், திராவிட நாடு என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.

அந்த இந்தி எதிர்ப்புப் போரில் உருவான தமிழ் மொழி, தமிழின அடையாளத்தை  இழக்க சோமசுந்தர பாரதியாருக்கு மனம் வரவில்லை. பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தர பாரதியார் ஒப்புக் கொள்ள மறுத்தார்.  ஆரியர் x தமிழர் என்பதே அவரது கொள்கை நிலைப்பாடாகும்.

1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை நிறுவினார். தமிழ்மொழி ஆக்கத்திற்கும், இந்தி எதிர்ப்புக்கும், தமிழர் முன்னேற்றத்திற்கும் வெவ்வேறு பெயர்களில் அமைக்கப் பெற்ற இயக்கத்தினர்களெல்லாம் தமிழர் கழகக் கிளைகளை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று பாரதியார் பேரழைப்புக் கொடுத்தார். பிறகு ‘தமிழர் கழகம்’ எனும் இதே பெயரில் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் அமைப்பைக் கட்டிய போதும் அதன் தலைவராக பாரதியார் பொறுப்பு வகித்தார்.

1942 இல் பெரியாரின் திசை மாறிப்போன ‘திராவிடநாடு திராவிடர்க்கே’ முழக்கம் காதைப் பிளந்து வந்த நிலையில், சி.பா.ஆதித்தனார் ‘தமிழ் இராச்சியக் கட்சி’யை உருவாக்கினார். அப்போது அதனை மனமுவந்து தொடங்கி வைத்தவரும் பாரதியார் என்பது நினைவு கூரத்தக்கது.

நீதிக்கட்சியில் பெரியார், அண்ணா இருந்த போதும், தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய போதும் திராவிடம் குறித்தத் தமது மறுப்புக் கருத்தை பாரதியார் வெளிப்படுத்திய தருணங்கள் பல உண்டு. 

14.3.1943இல் சேலத்தில் நடந்த ‘கம்பராமாயண எரிப்புப் போர்’ உரையாடலின் இறுதிப் பகுதியில் பாரதியார் கூறுகிறார்:

“தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்” என்று இடித்துரைத்தார்.

1950ஆம் ஆண்டு மே மாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் ‘முத்தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதில் மாநாட்டுத் திறப்பாளராக கலந்து கொண்ட பாரதியார் அவர்கள் மீண்டுமொரு முறை திராவிடத்தின் மீது குட்டு வைத்துப் பேசினார். அது வருமாறு:

“இந்நாளில் பலர் திராவிடர், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன் இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்? இனியாவது தமிழ் தமிழர் என்று சொல்லுங்கள். தமிழருக்குத் தமிழரே பகைவர் ” என்றார்.

பாரதியாருக்கும் ஒரு படி மேலே சென்று அம்மாநாட்டிலே தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல் தங்கோ ‘திராவிடம்’ என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது என்று சொன்னாரே பார்க்கலாம். அண்ணாவோ பதைபதைத்துப் போனார். முத்தமிழ் மாநாடு திராவிடத்திற்கு விளக்கம் சொல்லும் மாநாடாக மாறிப் போனது.

1953ஆம் ஆண்டு அண்ணல் தங்கோ தமிழக எல்லைத் தற்காப்பு மாநாட்டை நடத்தினார். கருணாநிதி, கி.ஆ.பெ.விசுவநாதம், பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், டார்பிடோ சனார்த்தனம், திருக்குறள் முனுசாமி ஆகியோர் பங்கு கொண்ட மாநாட்டில் அதன் தலைவராகிய பாரதியார் ,

“நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று”

என்று பேசிய போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் கூட்டத்திலே பங்கு பெற்றவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் தவிர, மற்ற ஏனையோர் திராவிடச் சார்பாளர்கள் என்பதே உண்மையாகும்.

திராவிட இயக்கத்தவரின் ஆரிய எதிர்ப்பில் உடன்பாடு கொண்டவராக இருந்த போதிலும், அந்த ஆரிய எதிர்ப்பையும் கூட தாம் சுய மரியாதை இயக்கத்தால் கற்றுக் கொள்ள வில்லை என்பதை தெளிவுபடுத்தி கூறவும் பாரதியார் துணிந்தார். அது வருமாறு:

“ஆரியருக்கு அடிமைப்படாத எண்ணம் எனக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது. என்னுடைய 14 வயதில் திருமணம் நடைபெற்றது. என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப்பண்டிதர் கூறும் சைவமல்ல, உண்மையே எனக்குச் சிவம். எனக்குத் திருமணம் பார்ப்பனரை வைத்து செய்வதாகக் கூறினார்கள். சைவ ஆகமங்களின் படி பார்ப்பனர்கள் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு (கொடி மரத்துக்கு) அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகி விடும் என்று ஆகமம் கூறுவதால் அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு திருமணம் செய்யாமல்  சைவ குருக்களை வைத்து திருமணம் செய்தேன். எனது சிறிய வயதிலேயே எனக்கு அந்த நோக்கம் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தாலோ, அண்ணாதுரையாலோ அந்த நோக்கம் எனக்கும் வரவில்லை. அது முதற்கொண்டு இதுவரை நான் தமிழருக்கு தன்மானம் வரவேண்டுமென்று உழைத்து வந்திருக்கின்றேன்.”

பாரதியார் தமிழ் நூல்களிலே உள்ள ஆரியத்திற்கு வலுசேர்க்கும் கருத்துகளை புறந்தள்ள வேண்டுமென்று வற்புறுத்தும் அதே வேளையில் நல்ல கருத்துகள் இருக்கும் பட்சத்தில் போற்றிடவும் தயங்கக் கூடாது என்பார்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர். அறிவாகிய கடவுளுக்கு 6 முகம் உள்ளது, 12 கையுள்ளது என்று கூறுவது எப்படிப் பொய்யோ, அப்படித்தான் நச்சினார்க்கினியர் உரையும். நச்சினார்க்கினியன் உமிழ்ந்த எச்சில் என்றால் அதை நக்கவா வேண்டும்? என்று கடுமையாகச் சாடினார். ( நச்சினார்க்கினியர் ஒரு பிராமணர், தொல்காப்பியத்திற்கு ஆரிய மரபு சார்ந்த சில விளக்கங்கள் தந்தவர்)

அதே பாரதியார்தாம் அண்ணா கம்ப ராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது அதை வன்மையாகக்  கண்டித்தார். அப்போது அவர் “ஒரு சிறந்த காவியத்தை எரிப்பது நல்லதன்று. அது தமிழ் நெறியன்று. ஆபாசக்கருத்துகளை எரிக்கச் செய்யப்படும் முயற்சிக்கு வேண்டுமானால் நான் துணை நிற்பேன். அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்? கம்பனைப் போல் சிறந்த கவியை கண்டதில்லை ” என்று கம்பனைப் போற்றினார். இன்று கம்பன் கவி நயத்தை, தமிழ் அமுதை கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட திராவிட இயக்கத்தவர்கள் பலரும் போற்றுவதைப் பார்க்கிறோம்.

தசரதன் குறையும் கைகேயி நிறையும், அழகு சேரர் தாய முறை, சேரன் பேரூர், தமிழும் தமிழரும், திருவள்ளுவர், தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை ஆகியவை நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய நூல்களில் மிக முக்கியமானவையாகும்.

27.07.1959 அன்று பாரதியாரின் 80வது அகவை நிறைவு விழா மதுரையில் தமிழ்ச்செம்மல் கி.பழனியப்பனார் ( பழ.நெடுமாறன் அவர்கள் தந்தையார்) முயற்சியில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

அந்நிகழ்வே நாவலர் பாரதியாரின் இறுதி நிகழ்வாகும். 14.12.1959இல் அவர் தமது தமிழ் மூச்சை நிறுத்திக் கொண்டார்.

அவர்காட்டிய வழியில் ஆரியத்தை வீழ்த்திட, திராவிடத்தைப் புறந்தள்ளிட , தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்திட உறுதி ஏற்போம். நாவலர் பாரதியாரை தமிழர்களிடம் கொண்டு செல்வோம்...

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பதால்...?


அடிக்கடி நோயினால் பாதிப்புக்குள்ளானவர்கள் நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்த அடிக்கடி கற்றாழை ஜூஸை குடித்தால் பலனை பெறலாம். உயர் ரத்த  அழுத்தம் குறையும். சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்.

கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு பலன் கிடைப்பதை விட இரு மடங்கு அழகை தரும். உள்ளிருந்து ஊட்டம் அளித்து  உங்களை இளமையாக்கும்.

ஹார்மோன் சமநிலையில் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை  சீர்படுத்துகிறது.

கற்றாழை ஜூஸை குடித்து வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும். கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.

கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வரஉடல் சூட்டினால்  முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால்தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்...

அரசியல் விளையாட்டுக்கள்...


இன்றைய சந்திர கிரகணத்திற்கு பலியிட வேண்டாம்...


இந்த முறை சந்திரகிரகணத்திற்கு குலதெய்வத்துக்கு பலியிட வேண்டாம் நண்பர்களே.

குலதெய்வத்தை சென்று வணங்கலாம். ஆனால் பலியிட வேண்டாம்.

எல்லா சந்திரகிரகணத்திற்கும் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, இந்த முறை மட்டுமே வேண்டாம்...

மேலும்.. இன்றைய சந்திரகிரகணம் என்பது பல வருடங்களுக்கு ஒரு முறை வரும் அபூர்வ கிரகணம்...

இந்த கிரகணத்தை வழிபட வேறு ஒரு முறை உள்ளது... அதன் படி வழிபட்டால் இத்தனை ஆண்டுகளாக நிறைவாத விடயம் நிறை வேற தொடங்கும்...

ஆனால் அந்த வழிமுறையை இங்கு சொல்ல முடியாது மன்னிக்கவும்...

2019 டிசம்பர் 26 தேதி வர இருக்கும் கிரகணம் தான் தமிழ்நாட்டை மீட்க போகும் கிரகணம்...


அது நேரடியாக தமிழ்நாட்டின் மீதே நிகழபோகிறது. அதுவும் பகல் 12 மணிக்கு. தமிழ்நாடே இருளில் மூழ்கும். அனைத்து கருப்புகளின் கட்டும் உடையும் நேரம் அது.

அதே 2019 டிசம்பர் மாதம் இந்தியா என்ற நாடு இரண்டாக உடையும் USSI என்ற நாடு தென்னிந்தியாவாக உருவாக்கும் திட்டம் நடைபெறுகிறது.

அதற்கு முன்பே உலகப்பொருளாதாரம்  வீழ்ச்சி அடைந்து அமெரிக்கா உலகத்தை ஆளும் தகுதி இழந்து அதன் அதிகாரமையம் தென்னிந்தியாவாக உருவாகும்.

உலகத்தை ஆளும் மன்னர் குடும்பம் அதன் பூர்வீக இடத்திற்கு 2020 ல் வந்து சேர்ந்துவிடும்.

அதன் பாதுகாப்பிற்காக தான் தமிழ்நாட்டில் Defense Corridor அமைக்கப்பட்டு வருகிறது.

துறைமுகங்கள் வழுப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த வருட தொடக்கத்திலேயே இங்கே பலிகொடுக்க தடை அமலுக்கு வந்துவிடும். இந்த திட்டத்தை உடைக்க இருக்கும் ஒரே வாய்ப்பு டிசம்பர் 26 ல் வரும் சூரியகிரகணம் தான்.

உலக வரலாற்றில் மன்னர் குடும்பத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து நாகரீகங்களும் அழிக்கப்பட்டது சூரியகிரகணத்தில் தான்.

வரலாறு மீட்சி பெற காத்து இருக்கிறது. அதற்கு நாமும் ஒரு சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு நாம் நம்மை வெளிப்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும்.

ஆய்வாளர்கள் அனைவரும் தங்களை தாங்களே மறைத்து கொண்டு இருப்பதும் இதே காரணத்திற்காக தான்.

பலி கொடுத்தலை ஊக்குவிக்கும் அனைவரையும் கண்காணித்து கொண்டு இருக்கிறது RAW உளவு அமைப்பு. அதன் ஆட்கள் நம்முடனே மறைமுகமாக பயணித்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நாம் நமது கவனத்தை 2019 சூரிய கிரகணத்தின் மேல் தான் வைக்க வேண்டுமே தவிர நடுவில் வருபவற்றை பெரிதுபடுத்தி அனைவரையும் கைஉயர்த்த சொல்லி காட்டி கொடுக்க வேண்டாம் என்பதற்காக இந்த முறை பலிகொடுக்க வேண்டாம் என சொன்னோம்.

ஆனால் சிலரின் பேச்சால் ஒரு திட்டத்தை கூட வெளிப்படையாக சொல்லி எங்களை நிறுபிக்க வேண்டிய சூழலை உருவாக்கிவிட்டனர்.

இவர்களை போன்றவர்கள் எது செய்தாலும் எதிர்செயல் செய்ய கூடியவர்களாகவே இருக்கிறனர்.

ஒரு சில நேரம் அது நம்மை சோர்வடைய வைக்கிறது. இதற்கு மேல் அவர் அவர் விருப்பம். நன்றி...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


எம்ஜிஆர் ரோடு மலையாளிகளின்
ஆட்சி முடிந்தது...

ஜெயலலிதாவுடன் கன்னடர்களின் ஆட்சி முடிந்தது...

கருநாநிதியுடன் தெலுங்கர்களின் ஆட்சி முடிந்தது...

இனி தமிழகத்தில் தமிழனின் ஆட்சித்தான் விரைவில் இறையாண்மையுள்ள தமிழரின் ஆட்சியே...

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

இந்தப் பதிவை பார்த்து யாரும் சிரிக்க கூடாது...


திமுக கலாட்டா...


பிறந்த எவருக்கும்  மரணம் உண்டு...
ஏற்றுத்தான் ஆகவேண்டும்...
இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல்
கதறிக்கொண்டு இருக்குறானுங்க
உளுத்தம் பருப்புகள்...

தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட் 23, ஜூலை 2018. சென்னை...



பிரித்தானிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆர்சனிக்கை தினமும் 2 முதல் 21 டன்கள் அளவு வரை (சராசரியாக 7.8 டன்கள்) வெளியிட்டிருக்கிறது என்று ஸ்டெர்லைட் நிறுவனமே வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்செனிக் பொருண்ம மதிப்பீட்டின் (Arsenic Mass Balance) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேதாந்தாவின் ஆலோசகரான NEERI, 2005-இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், உள்ளீடு செய்யப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு 0.0579 சதவிகிதம் என்று அனுமானித்ததன் மூலம், ஆர்செனிக் உமிழ்வுகளின் அளவையும் மிகக்குறைவாக பதிவு செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட்டின் இறக்குமதி தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், 2009-இல் இருந்து 2010 வரை அந்நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட்ட, செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு, 0.12 முதல் 0.64 சதவிகிதம் வரை இருந்துள்ளது என்பதே. இந்தக் குறைந்த தரத்திலான தாதுவை வாங்குவதற்காக, ஏற்றுமதியாளர் 4.8 கோடிகள் விலைக்குறைப்பு செய்தார் என்றும் அந்தத் தரவு தெரிவிக்கிறது.

போதுமான அளவு பசுமை வளையங்கள் அமைக்காதது, தேவையான அளவைவிடக் குறைந்த உயரத்தில் புகைபோக்கிகளை அமைத்தது, போன்ற தரங்குறைந்த மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளும், அதிக அளவிலான ஆர்செனிக் உமிழ்வுகளும், இந்த ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீவிரமான நச்சுத்தன்மை மிக்க சூழலை உருவாக்கியிருக்கும் என்று இந்தத் தகவலை வெளியிட்ட சென்னை ஆதரவுக் குழு கூறியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யின் கெமிக்கல் எஞ்சினியரிங் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர். டி. சுவாமிநாதன் அவர்களின் அறிவியல்பூர்வமான கருத்துப்படி, ஸ்டெர்லைட்டின் சல்ப்யூரிக் ஆசிட் ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரத்திலான புகைபோக்கிகளின் விளைவாக, அந்த ஆலையில் இருந்து 1.6 கி.மீ தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 125 மைக்ரோகிராம்/மீட்டர் க்யூப் ஆக இருக்கும். காற்றின் திசையைப் பொறுத்து, டி.வீரபாண்டியபுரம், மேலவிட்டான், பண்டாரப்பட்டி போன்ற கிராமங்களும் பாதிக்கப்படும். உருக்கு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள புகைபோக்கிகளின் உயரம், 60 மீட்டராக உள்ளது. ஆனால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி அது 102.8 மீட்டராக இருக்க வேண்டும். இந்தப் புகைபோக்கிகளில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகளின் விளைவாக, அங்கிருந்து 811 மீட்டர் தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 104 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப் என்ற அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுச்சூழல் காற்றுத் தரத்தின் நிர்ணயங்களின் படி, சல்பர்-டை-ஆக்ஸைடின் அளவு 80 மைக்ரோகிராம்/மீட்டர் கியுப் என்ற அளவிலேயே இருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அளவுகளுமே இதை விட அதிகமாக உள்ளன.

ஆர்செனிக்கால் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதும் இல்லாமல், அதன் மூலம் இலாபமும் ஈட்டியுள்ளது ஸ்டெர்லைட். பசுமை வளையங்கள், காற்று மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஆகியவை அமைப்பதற்கு குறிப்பிட்ட அளவு நிலம் தேவைப்படும். மாசுக் கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்புகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததன் மூலம் இன்னும் செலவைக் குறைத்துள்ளது அந்நிறுவனம்.

வருடத்திற்கு 400,000 டன் உற்பத்தி செய்யும் உருக்கு ஆலைக்கு, 2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியின்படி, திடக்கழிவு கிடங்கிற்கு 65 ஹெக்டேர் நிலம், காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்கு 1.5 ஹெக்டேர் நிலம் என, மொத்தம் 172.17 ஹெக்டேர் நிலம், இந்நிறுவனத்தின் கைவசம் இருக்க வேண்டும். ஆனால் அதனிடம் இருப்பதோ 102.31 ஹெக்டேர் மட்டும் தான். சுற்றுப்புறச்சூழல் அனுமதி வாங்கும் பொழுது, தன்னிடம் இருப்பதாக கூறிய நிலத்தின் அளவை விட இது மிகக் குறைவு.

மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைச் சுற்றி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படும் அடர்ந்த தாவரச் செறிவே பசுமை வளையங்கள் எனப்படும். நன்கு உருவாக்கப்படும் பசுமை வளையங்கள், தொழிற்சாலைகளின் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி, ஸ்டெர்லைட் போன்ற பெரிதான, நச்சுப்படுத்தும் தொழிற்சாலைகள், 500 மீட்டர் அகலத்துடனான பசுமை வளையங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தனக்காக அதை 25 மீட்டராக குறைத்துக் கொண்டுள்ளது ஸ்டெர்லைட். அதற்கான நிலம் தன்னிடம் இல்லை என்பதால் இதைக்கூட நிறைவேற்றவில்லை அந்நிறுவனம்.

2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச் சூழல் அனுமதியில், 172.17 ஹெக்டேர் நிலத்தில், 43 ஹெக்டேருக்கு பசுமை வளையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கையில் இருந்ததோ 102.31 ஹெக்டேர்கள் தான். ஆதலால் அந்நிறுவனம் அதை அமைக்க தவறி விட்டது...

பதில் கிடைக்காத கேள்விகள்.?


1.குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக செய்து வரும் நிலையில் தனியாருக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?

2.மாநகராட்சி குடிநீர் சேவை செய்ய முன்வராதபோது, தனியார் நிறுவனம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு தானே இயங்கும்; அப்படியான நிலையில், பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் செலவு செய்ய வேண்டியது வருமே; குடிநீரை வணிகமாக்குவதுதான் அரசின் திட்டமா.?

எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?


இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள்.

ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே.

பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும்.

எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது.

ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது. ‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’ ‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. ‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’  இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. ‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ ‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான்.

சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர்.

சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார்.

எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.
‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’  என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார்.

அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வது போலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார். பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்...

அரசாங்கமே அதை விலைக்கு விற்று வருகிறது. எச்சரிக்கை...


தனியார் பள்ளி முதலாளிகள் கோரிக்கை மனு. கிழித்து வீசிய கல்வி அமைச்சர்.. அரசு பள்ளிகளுக்கு பொற்காலம்...


தமிழக அரசியலில் ஜெயலலிதா இறந்தபின்பு நடக்கும் ஆட்சி, மோடி அதிமுக ஆட்சி என்று அனைவர் மத்தியிலும் பேசப்பட்டு வந்தபோதிலும் கூட. அதிமுக அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடி வருகிறது.

அதுவும் அந்த ஒரே ஒரு துறையால் மட்டும்தான். அதுதான் பள்ளிக் கல்வித்துறை, இதன் அமைச்சர் செங்கோட்டையன். இந்தத் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் இவர்களின் நடவடிக்கையால் அரசுப் பள்ளிகளுக்கு மவுசு கூடிவருகிறது.

பிளஸ்-2 ரிசல்ட்டின் போது முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண் முறைகளை மாற்றினார்கள். இதுதான் தனியார் பள்ளிகளுக்கு விழுந்த முதல் அடி, இரண்டாவதாக 11ம் வகுப்புக்கும் அரசு பொதுத் தேர்வு என்று அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளின் அஸ்திவாரத்தையே ஆட்டிப்பார்த்துவிட்டது.

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதி கொங்கு மண்டலம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். இதனால் தனியார் பள்ளி முதலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைச்சரைச் சரிக்கட்ட சென்னைக்கு பயணமாகினர். அமைச்சரையும் சந்தித்தனர். அப்போது உங்களது இந்த அறிவிப்புகளால் எங்கள் பிழைப்புக்கு பாதிப்பு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான எதிர் கால நலத் திட்டம், இந்தத் திட்டங்களில் இருந்து யாருக்காகவும் அரசு பின்வாங்காது என்று கறாராகத் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு பாடங்களை நடத்துவது கிடையாதாம். 9ம் வகுப்பிலேயே, 10ம் வகுப்பு பாடங்களை நடத்துமாம். அப்படி இரண்டு வருடமாக 10ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர்.

அதுபோல பிளஸ் 1, வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்துவதுதான் வழக்கமாம். இதுவும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

அரசுப் பள்ளிகளில் நீட்,உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிக்கு சற்றும் குறையாத அளவு அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே இலட்சிமாக அமைச்சர் செங்கோட்டையன் செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதனால் தனியார் பள்ளிகளின் முதலாளிகள், விரைவில் தலையில் துண்டு போடும் நிலை உருவாகும் எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்...

உப்பு இருக்கா, மிளாகாய் பொடி இருக்கா?


வாயில் துற்நாற்றாமா இதை பயன்படுத்தினால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்?

பல் ஈர்களிலிருந்து வரும் ரத்தகசிவை போக்க வேண்டுமா?

இது போன்ற விளம்பரங்களில் இருந்து வெளியே வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் பதிவிடுகிறோம்...

வட சென்னைக்கு ஆபத்து....


இனி அனைத்தும் தனியார்மயமாக்கப்படும்...


ஏனெனில் அவர்கள் அனைத்தையும் முடிவு செய்து விட்டார்கள்...

அதற்கு முன் தனியார் தான் அனைத்தையும் சிறப்பாக கொடுக்கும் என்று உளவியலும் விதைக்கப்படும்..

உளவியல் ரீதியான தாக்குதலில் இருந்து நீங்கள் வெளியேறினால் மட்டுமே,

இந்த கட்டமைப்பை பற்றி உணர முடியும்...

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்...


புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும்.
பித்தத்தைக் குறைக்கும்
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்...

பாஜக மோடி கலாட்டா...


திருமந்திரம் - 334...


அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம்செய் மேல்பா லவனொடு
மங்கி உதயம்செய் வடபால் தவமுனி
எங்கும் வளம்கொள் இலங்கு ஒளி தானே.

மூலாதாரத்தில் இருந்து எழுந்த நாதமானது அக்னி வடிவாய் சிரசின் முன் பக்கம் நிறுத்தும் சாதகனான அகஸ்தியன், அதை சிரசின் பின்பக்கம் விளங்க செய்து, பின் அது சிரசு முழுவதும் ஒளி வடிவாய் நிலை பெற செய்பவராம்...

காய்கறிகளை எடுத்து செல்ல சிறப்பு பேருந்துகள்...


லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலியால் நீலகிரியில் இருந்து காய்கறிகளை எடுத்து செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னைக்கு 100 காய்கறி மூட்டைகளை எடுத்து செல்ல ரூ.45 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது...

பாஜக விற்கு மாமா வேலை பார்க்கும் தந்தி டிவி யின் உண்மை நிலை இது தான்...


விலங்கு ஆவி...


விலங்கு ஆவி உருவாவதற்கான காரணங்கள் மனித ஆவி உருவாவதற்கான காரணங்களை ஒத்ததாகவே காணப்படுகிறது.

எனினும் விலங்கு ஆவிகளால் மனிதருக்கு பெரிதாக எந்த அச்சுறுத்தலும் இல்லை.

சில சமயங்களில் இவை மனிதரை ஆவிகளிடமிருந்தும், ஆபத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கின்றன...

இதயத் துடிப்பை சீராக்கும் கிவி பழம்...


இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க கிவி பழம் பெரிதும் துணைபுரிகின்றது. மட்டுமின்றி இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது..

உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

மாரடைப்பிற்கு முன்னர் பல்வேறு வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவையாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றது.

இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு இயற்கையாக உள்ளது.

வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் இந்த கிவி. கிவி பழத்தில் FOLATE என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.

இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.

கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது...

அதிமுக ஒபிஎஸ் சின் குடிக்கார தம்பி பாலமுருகன்...


நியூட்டனின் 3ம் விதியும், தமிழரின் தலை விதியும்...


தமிழன் போராடவே மாட்டான்.
தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது.
தமிழனுக்கு உணர்ச்சியே கிடையாது.
தமிழனுக்காகப் போராடினால் நல்ல சாவுகூடக் கிடைக்காது.

என்றெல்லாம் வசைபாடுபவர்கள் கவனத்திற்கு..

எந்த ஒரு விடயத்திற்கும் ஒரு சரியான காரணம் உண்டு.

எளிதாகப் புரிய இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூறுகிறேன்.

நியூட்டனின் மூன்றாம் விதி தெரியும் தானே...

எந்த ஒரு விசைக்கும் சமமான நேர்எதிர்விசை ஒன்று இருக்கும்

இதை விளங்க ஒரு கைத்துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள்.

(என்றாவது ஒருநாள் நீங்கள் உண்மையில் எடுக்கப்போவது தான்).

நாம் விசையை அழுத்தியதும் தோட்டாவிற்குள் இருக்கும் வெடிமருந்து தீப்பிடித்து வெடித்து தோட்டா முன்னே பாய்கிறது.

இதற்கு சமமான எதிர்விசை துப்பாக்கியையும் உங்கள் கையையும் பின்னோக்கித் தள்ளுகிறது.

இந்தவிதி எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

சரி; தமிழரைக் குறைகூறும் பலர் தமிழர் மற்ற எந்த இனத்தையும்விட வரலாற்றில் வலுவாகத் தடம்பதித்ததையும் தமிழரின் பெருமையையும் திறமையையும் ஒப்புக்கொள்கின்றனர்.

மற்ற மக்களிடம் இல்லாத ஒரு சிறப்பு தமிழரிடம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

என்றால் அதற்கு சமமான எதிர்விளைவு அவர்களிடம் இருக்கும் தானே?

அதுதான் தமிழரின் மந்தப்போக்கு.

மற்ற இனங்கள் சிறிய சீண்டலுக்கே எகிறி அடிக்கிறார்களே..

தமிழர்கள் ஏன் எல்லாவற்றையும் பிடுங்கிய பிறகும் அசமந்தமாக இருக்கிறார்கள்? என்று நன்கு யோசித்ததில் இந்தப்பதில் கிடைத்தது.

மற்றவர்கள் கைத்துப்பாக்கிக்கோ அல்லது தோள்துப்பாக்கிக்கோ ஒப்பானவர்கள் அவர்களை வெடிக்கவைப்பது எளிது. ஆற்றலும் குறைவு.

ஆனால், தமிழர்கள் பீரங்கிக்கு சமமானவர்கள்... வெடிக்கவைப்பது கடினம் ஆனால் வெடித்தால் கோட்டைகளே தகர்ந்து போகும்..

ஈழத்தில் புலிகள் வெறும் முப்பதாயிரம்பேர்.

அவர்கள் கட்டுப்பாட்டில் நேரடியாக உதவியவர்கள் வெறும் ஐநூறாயிரம் (5லட்சம்) தமிழர், தூரத்திலிருந்து ஆதரவளித்தவர்கள் வெறும் இருநூறாயிரம் தமிழர் மட்டுமே..

ஆனால், இவர்களை அழிக்க ஐம்பதாயிரம் சிங்களப்படையினர், மூன்று வல்லரசு நாடுகள் நேரடி உதவி, இருபத்தியைந்து நாடுகள் தூரத்திலிருந்து உதவி.

வெறும் இருபத்தி ஐநூறாயிரம் (25லட்சம்) தமிழருக்கே இவ்வளவு பேர் என்றால்..?

நாம் இந்த உலகில் பத்துகோடித் தமிழர் இருக்கிறோமே..?

நாம் ஒன்றிணைந்தால்..
நினைக்கவே நடுங்கிறது இல்லையா...

செயற்கை நுண்ணறிவு...


திருச்சி காவிரி ஆற்றுப்பாலம் உடைந்து safety supervisor ஆற்றில் விழுந்து விபத்து...


திருச்சி காவிரி மேம்பாலத்தில் நடைபாதையை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளர்களை மேற்பார்வை செய்யும் சேப்டி சூப்பர்வைசர் அரவிந்த் பாலத்தின் ஸ்லாப் உடைந்து காவிரி ஆற்றில் விழுந்தார்.. ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் தாமதமாக வந்த தீயணைப்புத்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்...

இந்தப்பதிவை சாதரணமாக உங்களால் கடக்க முடியாது...


இது எதேர்ச்சையாக நடக்கிறது என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்...

தாசில்தாரின் வசூல் கறிவிருந்து.. விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு...


தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாலுகா அலுவலகத்தை பூட்டி கறிவிருந்து வைத்து தங்ககாசுகளையும், மோதிரங்களையும் அன்பளிப்பாக பெற்ற தாசில்தாரிடம் விரிவான விசாரணை நடத்த மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வாரத்தின் முதள் நாளான திங்கட்கிழமை, தாலுகா அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டி தாசில்தார் தலைமையில் கறிவிருந்து வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

பணி ஓய்வு பெற்ற நிலையில் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்று தாசில்தாராக பணியாற்றி வந்த தாமஸ் பயாஸ் அருள் என்பவர், கிராம உதவியாளர் பணி நியமனத்தில் 35 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு புகாரில் சிக்கியதால் ஓட்டப்பிடாரத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தாராக, தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி மாற்றலாகி செல்வதற்கு முன்பாக, தனக்கு நெருக்கமான ஊழியர்களை அழைத்து பிரமாண்ட கறிவிருந்துக்கு தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள் ஏற்பாடு செய்தார்..! தாலுகா அலுவலக ஊழியர்களிடம் தலா 500 ரூபாய் வீதம் வசூல் செய்து கறிவிருந்து நடத்தப்பட்டதாகவும், கறிவிருந்து முடிந்ததும், அதில் சாப்பிட்ட அத்தனை ஊழியர்களும் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருளிற்கு பரிசு பொருட்கள் வழங்கினர். குறிப்பாக கிராம உதவியாளர்கள் பலர் தங்க நாணயங்களையும், தங்க மோதிரங்களையும் பரிசாக வழங்கியதாக கூறப்பட்டது. செங்கல் சூளை அதிபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்தும் தங்க மோதிரங்களை பரிசாக பெற்றதாக தகவல் வெளியானது.

ஒரு அரசு ஊழியர், அலுவலகத்தில் வைத்து பெறும் அனைத்து பரிசு பொருட்களும் கையூட்டாகவே கருதப்படும் என்ற விதி உள்ள நிலையில், எதைபற்றியும் கவலைப்படாமல் அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தங்க காசுகளையும், தங்க மோதிரங்களையும், எலெக்ட்ரானிக் பரிசு பொருட்களையும் வாங்கி குவித்துள்ளார் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள்..! என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அவரது ஆடம்பரத்தால் திங்கட்கிழமை ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தின் பணிகள் முற்றிலும் முடங்கின. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இந்த தகவல் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

தாசில்தார் தாமஸ் பயாஸ் அருளின் வசூல் கறிவிருந்து குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தர உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். அதேபோல மணல் திருட்டுக்கு துணைபோகும் விளாத்திகுளம் தாசில்தார் லெனின் மீதும் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா என்ற பெயரில் விருந்து நடப்பது வழக்கமான ஒன்று என்று தமிழ் நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கம் அறிக்கை மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.

மக்கள் வரிப்பணத்தில் பணி செய்கிறோம் என்பதை மறந்து, பணி நேரத்தில் அலுவலகத்தை பூட்டி விருந்து வைத்து விழா கொண்டாடிய தாசில்தாரின் பணி நீட்டிப்பை ரத்து செய்வதோடு, விருந்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு நாள் சம்பளத்தில் பிடித்தம் செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...

உணர்வு அலைவரிசை...


1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம் போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் ,அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால்கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்து விடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...

அதிமுக ஒபிஎஸ் - இபிஎஸ் கலாட்டா...


அதிமுக எடப்பாடி அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பன்னீரை விசாரிக்கும், பன்னீர் பதவி விலகுவார்...

எடப்பாடி ஒருங்கிணைப்பாளராவார். அடுத்து கட்சி தேர்தல் வைத்து பொதுச்செயலாளர்... அடுத்து எடப்பாடி ஜெயலலிதா ஆகிறார்...

பாஜக நிர்மலா சீத்தாராமன் கலாட்டா...


பாஜக - அதிமுக அரசு யாருக்கானது..?


காசில்லாதவர்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் சாகலாம்...


இலவச அரிசி கிடைக்கும் ஆனால் இலவச குடிதண்ணீர் ஒரே சொட்டு கூட கிடைக்காது.

இப்படியாக ஏழையாக இருப்பவர்களுக்கான மரண தண்டனை கோவையில் நிறைவேற்றப்படுகிறது. ஏழையாக இருக்கும் தவறை யார் எப்போது செய்தாலும் அவர்களுக்கு மறு பேச்சில்லாமல் இந்த தண்டனை நிறைவேற்றப்படும். எந்த அப்பீலும் கிடையாது. கொலை கொள்ளை இது போன்ற சின்ன சின்ன தவறுகள் செய்பவர்களுக்கு மட்டுமே அப்பீல் ஜாமீன் இதெல்லாம் தரப்படும். காசில்லாதவராக இருக்கும் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்பவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை நிறை வேற்றப்படும்...

பாகிஸ்தான் தேர்தல்....


திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளது சிறுநீரக தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் யாரும் கருணாநிதியை பார்க்க வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தல்...


ஓம் என்னும் பிரணவ மந்திரம்...


ஓம் என்னும் பிரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது தமிழ் மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அ' மற்றும் 'உ' எழுத்துக்கள் சேர்ந்து 'ஓ' என்று ஒலிக்கப்படுகிறது.

முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.

ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது.

இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.

இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில் தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.

இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.

இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.

இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.

இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம்.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.

கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி...