1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.
2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம் போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.
3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.
4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் ,அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.
5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.
6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.
7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.
8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்து விடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால்கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்து விடலாம்.
10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.