26/11/2020
இந்தியாவிலேயே முதன்முதலில் சுற்றுச்சூழல் அமைப்பை தொடங்கியது எந்த கட்சி..?
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்பை இந்த ஆண்டு தொடங்கிய திமுகவும், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நாம் தமிழர் கட்சியும் - நாங்கள் தான் முதலில் தொடங்கினோம் என்று போட்டிப்போட்டு பிரச்சாரம் செய்தன.
இதுகுறித்த உண்மையை சோதித்த youturn எனும் அமைப்பு - முதன்முதலில் 1995 -லியே சுற்றுச்சூழல் அமைப்பை தொடங்கியது பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று தெரிவித்துள்ளது...
ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல.. சுற்றுப் புறத்துக்கே நல்லது...
நம் வீடுகளில் திருமணம், புதுமனைப் புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம்.
அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர்.
ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர்.
ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.
இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது.
ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும்.
யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.
நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்.
அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல.. சுற்றுப் புறத்துக்கே நல்லது...
திராவிடம் அல்லது தென்னிந்தியம் - கால்டுவெல்...
திராவிடம் என்ற சொல்லை உருவாக்கிய கால்டுவெல் கூட அது எதைக் குறிக்கிறது என்பதில் உறுதியாக இல்லை.
அவர் எழுதிய நூலில் தலைப்பின் பாதியை பலரும் மறைக்கிறார்கள்.
அவர் எழுதிய நூல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இல்லை,
திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம் என்பதே.
திராவிட என்ற சொல்லை அவர் எடுத்ததாகக் கூறும் அனைத்தும் வடமொழி தரவுகள்...
பெரியார் எனும் கன்னட பலிஜா தெலுங்கர் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் எதிர்த்தது தமிழர்களாகிய பார்ப்பனரை மட்டும் தான்... பிராமணரை அல்ல...
தமிழரை தவிர்த்து மற்ற அனைவரும் பிராமணர் என அறிந்துக் கொள்க...
உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.
மறந்தும் உங்கள் வாயில் பிராமணன் என்று வரக் கூடாது. பார்ப்பான் என்று கூறுங்கள். கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது - ஈ.வே.ரா (விடுதலை 30.06.1957)...
கம்யூனிசம் என்றால் என்ன.?
இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..
கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல்
அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.
ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.
உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.
அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.
இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.
இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.
அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.
லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.
இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.
பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,
'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.
அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.
ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.
நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.
இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான்,தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.
ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...
திமுக வை மன்னிக்கவே மாட்டோம்...
தமிழர்கள் நாங்கள் கதறிக் கொண்டிருந்த போது நீங்கள் சொக்கத்தங்கம் சோனியாவிற்கு பாலீஸ் போட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் இன்னும் மறந்து விடவில்லை கருணா அவர்களே..
உங்கள் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக மக்கும்.. நீங்கள் பார்ப்பீர்கள்..
உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்...
ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்...
பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை?
இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்.
உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை.
இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்?
இதை நாம் ‘பேடண்ட்’ எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்..
தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று..
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று.
ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்.
தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள், டாதி ஒன்பது எழுத்துக்கள், பாதி ஐந்து எழுத்துக்கள், யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31 எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்.
சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை.
1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை.
காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம் சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது.
உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர்.
ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!
அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்‘புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்..
இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது. எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.
நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது.
பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர கிரகணம் தோன்றும், கிரகண அளவு (பரிமாணம்) இவ்வளவு, இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள். அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது. கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?
சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு. அதுவும் ஒரு வகை விஞ்ஞானம். வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.
ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள். இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்து கொண்டு வாழ்த்துகிறது.
இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை. அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி...
குகை மர்மங்கள்...
நாம் பொதுவாக அமானுஷ்ய இடங்களையும், நிகழ்வுகளையும் தேடி அலைவதிலும் தெரிந்து கொள்ள முயல்வதிலும் வியப்பில்லை. பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள அண்ட வெளியில் ஆராய்கிறோம், பல கிலோ மீட்டர் அடியில் உள்ள கடலுக்கடியில் ஆராய்கிறோம்.
ஆனால் நம் அருகிலேயே நிலத்தில், மலையடிவாரத்தில், மலையில், பாறைகளில் உள்ள குகைகளை விட்டு விடுகிறோம், ஆராய்கிறோம் எனினும் முழுவதுமாக ஆராயபடவில்லை என்பதே உண்மை.
எந்த ஒரு இடத்தை பார்த்ததும் நம் உள் மனதில் ஒரு தயக்கம் கலந்த மர்மமான பயம் வருகிறதோ அது தான் அமானுஷ்ய பகுதி. அந்த வகையில் குகைகளை குறைத்து மதிப்பிட இயலாது. கற்பனைக்கு எட்டாத, எண்ணிலடங்காத மர்மங்கள் அதில் காணப்படுகிறது. நம் ஊர் குகைகளில் உள்ள அதிசயஙகள் நம்மை ஆச்சரியபடுத்தும் அளவு உள்ளது.
பொதுவாக குகைகள் போர் காலங்களிலோ அல்லது அவசர ஆபத்து, விபத்து காலங்களில் சுரங்கங்களின் வழியாக தப்பி செல்ல உதவும் பாதையாக கையாளப்படுவது நமக்கு தெரியும்.
ஆனால் அதை விட வேறு முக்கியமான ஒரு விடயம் அதில் உள்ளது. நமது சித்தர்கள் ஏன் பெரும்பாலும் குகைகளில் வசிக்கிறார்கள் அல்லது குகைகளில் தவம் செய்கிறார்கள் என்று யோசித்ததுண்டா?
குகைகளில் உள்ள கல் சுவர் குளிர்ச்சியை (மன அமைதி மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்) தரும், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு, தனிமை என பல காரணங்கள் இருப்பினும் இன்றியமையாத காரணம் உள்ளது.
யாதெனில் சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் அவர்கள் வேற்று உலகை தொடர்பு கொள்ளவும் அங்கிருந்து பூமிக்கு வரும் பாதையாக குகைகளை பயன்படுத்துகின்றனர்.
அது ஏன் நிலத்தின் மேற்பகுதியை பயன்படுத்த வில்லை எனில். நிலத்தின் அடியில் அல்லது குகைகளில் தான் பிரபஞ்ச இணைப்பு (wormhole) அதாவது வெவ்வேறு பிரபஞ்சங்களுக்கு இதன் வழியாக ஒரு நொடியில் செல்லலாம்.
அந்த wormhole கள் நிலத்திற்கு கீழே திறப்பனவாக இருக்கலாம். இதை தான் அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தி வேற்றுலக தொடர்பை கொண்டுள்ளனர்.
ஆனால் நாம் அந்த பிரபஞ்ச இணைப்பை அறிவதில் சிக்கல் உள்ளது.
குகைகளின் உள்ளே உள்ளவை மிகப்பெரும் சுரங்க வழிகளும், மர கிளை போன்ற அமைப்புடன் அதிக எண்ணிக்கையிலும் குகைகள் காணப்படும். இதில் நாம் பிரபஞ்ச இணைப்பை கண்டறியும் போது தான் மிகப் பெரிய மர்மங்களுக்கு விடை கிடைக்கும்.
இதை பற்றி முழுவதுமாக ஆயாய்ந்து தெரிய முற்படும் போதே விடை கிடைக்கும்.
அது மட்டும் அல்லாது இன்றும் பல பகுதிகளில் பார்த்ததாகக் கருதப்படும் சித்திர குள்ளர்களும் பூமிக்கு அடியில் தான் வசிக்கிறார்கள்.
அவர்களும் அவ்வப்போது குகைகளின் வழியாகவே வெளிப்படுகிறார்கள்.
பூமிக்கு அடியில் இன்னொரு பூமி போன்றே மலை, காற்று, நீர் உயிரினங்கள் இருக்கின்றன என்பது தனிக்கதை { Hollow earth }. இது போதாது என்று வேற்றுகிரக வாசிகளும் குகைகளில்....
ஆந்திரா தமிழகத்தைத் தின்கிறது...
காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை...
20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.
போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.
தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.
தமிழ் மண் சுருங்கிக் கொண்டே வருகிறது...
ம.பொ.சி கேட்ட தமிழ்நாடு (வரைபடம்)...
மண்மீட்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய ம.பொ.சி அவர்கள் 1950 மே மாதம் வெளியிட்ட வரைபடம்.
இதில் தற்போது கர்நாடகாவில் உள்ள கோலார் பகுதியின் ஒரு துண்டும்..
தற்போது ஆந்திராவில் உள்ள சித்தூரில் பெரும்பகுதியும் நெல்லூரில் ஒரு துண்டையும்..
தற்போது கேரளாவில் உள்ள இடுக்கி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளன...
இறைவன் எந்த மதத்தவன்?
இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்..
கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.
உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?
பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.
இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது.
ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.
இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?
தமிழர்களின் எழுச்சியை திசை திருப்பும்.. திராவிடர்கள் எனும் வந்தேறி தெலுங்கர்கள் கூட்டம்...
நவம்பர் 26 தமிழின தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள். அந்நாளை தமிழகத்தில் மடை மாற்றம் விதமாக திராவிடர்களின் புது உருட்டு...
தமிழகத்தில் ராமசாமியின் போலி பிம்பம் உடைந்து மக்கள் மனதில் தலைவரின் உருவம் பதிவதை திராவிடர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை என்பதற்கு இதுவே ஒரு சான்று...
ஏன் மற்ற நாளே கிடைக்கவில்லையா? இல்லை மற்ற நாளில் வைத்தால் அந்த நாளெல்லாம் ஓடி விடுமா?
சூட்சும உலகங்கள்...
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.
தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.
சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),
புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),
கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),
வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),
தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),
மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)
ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது.
இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.
இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.
உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?
தமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது ஒரு உதாரணம்...
கொரியநாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி. அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.
இங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள் நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.
அந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி. அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பிவிட்டார்கள்.
பேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்ட போது அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம், அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.
இதற்கேற்றார்போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.
இதை கொரியர்களும் ஏற்றுக் கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக் கொண்டார்கள்.
செம்பவளம், படகு மூலமாகச் செல்லும் போது படகை Balance செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.
தமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை....தொடர்ந்து தேடுவோம்...