07/03/2019

நீரிழிவை விரட்டும் நாவல்....


சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது.

கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது?

கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள "ஜம்புலின்' என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு கரண்டி) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்...

திமுக விற்கு பயம்.. தேமுதிக எங்கள் கூட்டணிக்குள் வந்தால் வரவேற்போம் - பாமக அன்புமணி இராமதாஸ்...


https://youtu.be/I3N5CUy9AXQ

Subscribe The Channel For More News...

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியது...


திமுக மற்றும் அமுதிக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேரம் பேசிக் கொண்டே இழுத்தடித்ததால்...

தேமுதிக வை திமுக மற்றும் அதிமுக கழற்றி விட்டது...

நிலைமை மோசமானதால்... வேறு வழியில்லாமல்...

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுக கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு கூட்டணிக்கு வருகிறோம் என்று படிந்தது தேமுதிக...

ஆகையால் தேமுதிக விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கி கூட்டணிக்குள் இனைத்துக் கொண்டது அதிமுக...

மேலும் 21 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக விற்கு முழு ஆதரவு தருவதாகவும் உறுதியாகியது...

ஆனால் தற்போது தாமக 2 தொகுதி கேட்டுக் கொண்டிருக்கிறது... ஆகையால் தாமக கூட்டணியில் உறுதியாகவில்லை.

அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள்...

அதிமுக கூட்டணி கட்சிகள்...

அதிமுக - 21
பாமக - 7 + 1
பாஜக - 5
தேமுதிக - 4
புதக - 1
புநீக - 1
புதுச்சேரி - 1

திமுக கூட்டணி கட்சிகள்...

திமுக - 20
காங்கிரஸ் - 10
கம்யூனிஸ்ட் - 2
கம்யூனிஸ்ட் - 2
விசிக - 2
மதிமுக - 1 + 1
முமுக - 1
கொங்கு - 1
ஐஜேகே - 1

இவையே இன்றைய இறுதி கூட்டணி நிலவர தகவல்...

பாஜக எம்.பி யை - பாஜக எம்.எல்.ஏ செருப்பால் அடித்ததால் உ.பி. யில் பரபரப்பு...


https://youtu.be/eiVvrvAa-rc

Subscribe The Channel For More News...

பிரதமர் முன்பு மருத்துவர் இராமதாசு அய்யா கோரிக்கை...


ஏழு தமிழர் விடுதலை செய்யப்பட வேண்டும்.

மாநில சுயாட்சி மீட்டெடுக்கப்பட வேண்டும்.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக ஆக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும்...

Go Back Modiனு சொன்னதால் தமிழர்கள் அனைவரும் பாகிஸ்தானியானர்...


தேமுதிக விஜயகாந்திற்கு திமுக - அதிமுக இரண்டும் வைத்த ஆப்பு...


அதிமுக கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் பாமக விற்கு இணையாக 7 + 1 கொடுத்தால் தான் வருவேன் என்றது தேமுதிக...

திமுக கூட்டணிக்கு வந்தால் 8 தொகுதி கொடுத்தால் தான் வருவேன் என்றது தேமுதிக...

ஆனால் அந்த அளவிற்கு எல்லாம் தேமுதிக விற்கு வாக்கு வங்கி இல்லை என்று கொடுக்க மறுத்தது இரண்டு கட்சியுமே...

ஆகையால் அதிமுக தேமுதிக வேண்டாம் என்று சொன்னதும்... திமுக பக்கம் சென்ற தேமுதிக வை துரைமுருகன் இடமில்லை என்று சொல்லி விட்டார்...

தற்போது தேமுதிக நிலை ஊஊஊ தான்...

தன் தகுதியை மீறி வீம்புக்கு ஆசைப்பட்டால் இது தான் நிலை...

இனி தேமுதிக ஒன்று தனித்து நிற்க வேண்டும்...

அல்லது டிடிவி உடன் கூட்டணி வைக்க வேண்டும்...

அதுவும் இல்லை என்றால் திமுக காலிலோ அல்லது அதிமுக காலிலோ  மீண்டும் விழுந்து கதற வேண்டும்...

பறிபோகும் தமிழர் வேலை வாய்ப்புகள்...


பூக்கும் மரங்களின் அரசு...


பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு...

எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள்கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக்கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம்கொண்டவை.

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் வி.கணபதி.

இலை...

சிறுசிறு விச வண்டுகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் இயல்பு இதற்கு உண்டு. இதனால், கிராமப்புறங்களில், வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, பூவரசு இலையில், பசுவின் சாணத்தை வைத்து, அதன் மேல் பூசணிப் பூ அல்லது பூவரசு மரத்தின் பூவினை வைப்பார்கள்.

பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு அடுத்தப்படியாக கிராமங்களில் பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்வதும் இன்று வரை வழக்கில் உள்ளது.

எவ்வளவு சூடு செய்தாலும் இதன் நிறம் கொழுக்கட்டையில் கலக்காது. மேலும், பூவரசு இலையில் இருக்கிற குளோரோஃபில் என்கிற பசுங்கனிகம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையையும் கூடுதலாக்கும்.

இதில் நிறைந்திருக்கிற லியூப்னோன், லியூப்யோல், அல்கேன்சு(ஸ்) போன்ற வேதிப் பொருட்கள் தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மைகொண்டவை.

இதில் உள்ள பாப்யுல் மீத்தேன் மற்றும் கெ(ஹெ)ர்பசெடின் போன்ற வேதிப் பொருட்கள் கருப்பையைப் பலப்படுத்தும் பலவிருத்திகளில் (Tonic) பயன்படுத்தப் படுகின்றன.

வீக்கமும் வலியும் நீங்க...

பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும். மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும்.

காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம்.

பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.

பட்டை...

பூவரசு மரக் கட்டைகளால் செய்யப்பட்ட கட்டிலைப் பயன்படுத்துவதால், உடலின் வெப்பம் குறையும்.

பூவரசுப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் தேங்காய் எண்ணெய் கலந்து மீண்டும் காய்ச்சி எடுத்துக்கொண்டு சரும வெடிப்பு மற்றும் கரும்படை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால், விரைவில் நல்ல குணமாகும்.

பட்டையை எரித்துச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயுடன் கலந்தும் சரும நோய்க்குப் பயன்படுத்தலாம். உடலில் உள்ள வெண் புள்ளிகள் மறைவதற்கு, பூவரசு மரத்தின் உள் பட்டையை நீர் விடாமல் இடித்துச் சாறெடுத்து தடவிவர வேண்டும்.

சரும வெடிப்புப் பிரச்னைக்கும் இது நல் மருந்து. வயிற்றுக் கழிச்சலுக்கு பட்டைக் கஷாயம் கை கொடுக்கும்.

காய்...

இதன் காயை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சிரங்கு, கால் சேற்றுப்புண் இவற்றுக்கு வெளிப்புறமாகப் பூச நல்ல குணம் கிட்டும். காயை இடித்துச் சாறு எடுத்து, சருமத்தில் தடவிவந்தால் தேமல் மறையும்.

தலை முடி மற்றும் மீசை, புருவத்தில் வரும் 'புழு வெட்டு’ப் பிரச்னைக்குப் பூவரசுக் காயை இடித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம். பூவரசுக் காயில் உள்ள தெசு(ஸ்)பெசின் என்ற வேதிப்பொருளுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகம்.

மேலும் வைரசு(ஸ்) தொற்றைத் தடுக்கும் தன்மையும் இந்தக் காய்க்கு உண்டு.

பூ...

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும்.

பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும்.

கிராமப்புறங்களில் கருப்பைப் பிணிகளைச் சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் (குழந்தைப் பேற்றுக்கும்) இதன் பூவைக் காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள்.

பூவரசு பூ - இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள்.

காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கரு முட்டை உற்பத்தியைத் தூண்டும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...

மோடியே திரும்ப போ உறுதியாக நிற்கும் தமிழினம்...


இன்றும் டவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் டிரன்டில் முதலில் நிற்கிறது...

வைகோ நாயூடு கலாட்டா...


இப்போ பாருங்க... தமிழின பகைவர்கள் கூட்டணியில்...

வைகோ நாயூடு 2 சீட் வாங்கி இருக்கார்..

அதுவும் 1 + 1..

தமிழினம் தெளிவடைந்து விட்டது... ஏமாற்ற முடியாது...

ஆகையால் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து தான் இந்த 1 + 1...

தன் கட்சியை சார்ந்த ஒரு ஆடு பலிகடாவாக்கி...

இவரு நேரடியா மாநிலங்களவை போய் எம்.பி யா அமர்ந்துக்குவார் பாருங்க...

கேட்டால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க.. நான் போட்டியிடவில்லை என்று ஒரு பில்டப் கொடுப்பார் பாருங்க...

உடலும் - ஆன்மாவும் பற்றி ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசம்...


https://youtu.be/n34e43nQPu4

Subscribe The Channel For More News...

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி...


கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள்  தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழே குறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்..

பறவை சப்திக்கும் நேரம்...

கரிச்சான் குருவி - 3.00 மணி.
செம்போத்து         - 3.30 மணி.
குயில்                     - 4.00 மணி.
சேவல்                    - 4.30 மணி.
காகம்                     - 5.00 மணி.
மீன் கொத்தி         - 6.00 மணி..

திமுக எனும் தெலுங்கர் சங்கரமடத்தின் கலாட்டா...


சாப்பிடுவது குறித்து தமிழில் எத்தனை நுட்பமான வார்த்தைகள்?


(1) அருந்துதல்: மிகச்சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து).

(2) உண்ணல்: பசி தீர உட்கொள்ளுதல்.

(3) உறிஞ்சல்: வாய்க் குவித்து நீரியல் பண்டங்களை இழுத்தல்.

(4) குடித்தல்: சிறிது சிறிதாக பசி நீங்க
உட்கொள்ளுதல் (கஞ்சி).

(5) தின்னல்: சுவைக்காக ஓரளவு தின்னுதல் (முறுக்கு).

(6) துய்த்தல்: சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளல்.

(7) பருகல்: நீரியல் பண்டங்களை சிறிது சிறிதாகக் குடித்தல்.

(8) விழுங்கல்: பல்லிற்கும் நாவிற்கும் வேலையின்றி  தொண்டை வழி உட்கொள்ளல் (மாத்திரை)...

உண்மையை ஒத்துக்கொண்ட பாஜக...


கைரேகையை ஆராயும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...


கைரேகையை ஆராய்வதற்காக புதிதாக ஆய்வு தொழில்நுட்பம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வில் முக்கிய பங்கு வகிப்பது குற்றவாளியின் கைரேகையாகும்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் கைரேகையை வைத்து குற்றவாளி குற்றத்தில் ஈடுபடுவதற்கு முன் போதை மருந்து உட்கொண்டிருந்தாலும், வெடி பொருட்களை கையாண்டிருந்தாலும் அதனை காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுசுத்திரேலியாவை சேர்ந்த சீ(ஷீ)ஃபீல்ட் கா(ஹா)லம் பல்கலைகழக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய கைரேகை ஆய்வு குற்றவாளியின் பழக்கவழக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை துல்லியமாக காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கண்டுபிடிப்பு குற்றப்புலனாய்வில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையிலும் தடயப்பொருள்களில் காணப்படும் ரேகையிலுள்ள கோடுகளை குற்றவாளிகளின் ரேகையுடன் ஒப்பிட்டு பார்த்தே விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.

இந்த நிலையில் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் விரலில் ஒட்டிக் கொள்ளும் பொருட்களின் நுண்ணிய துகள்களை கொண்டு அடிப்படை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதுமட்டுமன்றி உடலில் சுரக்கும் திரவங்கள் தொடும் பொருள் மீது ஒட்டிக்கொள்வதாக கூறப்படுகிறது.

எனவே ஒருவரது விரல் ரேகையிலிருந்து அவர் என்னென்ன பொருட்களை தொட்டிருந்தார் என்பது முதல் அவரது உடல் வெளியிட்ட திரவங்கள் வரை அனைத்தையும் புதிய ஆய்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

வேற்றுக்கிரக வாசிகளின் இருப்பிடம் கண்டுபிடிப்பு - நாசா...


https://youtu.be/PgMxGywawpw

Subscribe The Channel For More News...

அதிமுக - திமுக கூட்டணி கட்சிகள்...


அதிமுக கூட்டணி கட்சிகள்...

அதிமுக - 24
பாமக - 7 + 1
பாஜக - 5
தமாக - 1
புதக - 1
புநீக - 1
புதுச்சேரி - 1

திமுக கூட்டணி கட்சிகள்...

திமுக - 20
காங்கிரஸ் - 10
கம்யூனிஸ்ட் - 2
கம்யூனிஸ்ட் - 2
விசிக - 2
மதிமுக - 1 + 1
முமுக - 1
கொங்கு - 1
ஐஜேகே - 1

விரல் ரேகைகளே இல்லாத அதிசய மனிதர்கள் மரபணு மாற்றத்தின் விளைவு...


விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன.

விரல் ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி நடப்பதுண்டு. ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் மருத்துவர்கள்.

விரல் ரேகை பற்றிய ஆராய்ச்சியை "டெர்மடோகிளிபியா" என்று அழைக்கின்றனர். இசு(ஸ்)ரேலின் டெல்அவிவ் நகரை சேர்ந்த தோல்நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் இலி சு(ஸ்)பீரிச்சர் தலைமையிலான குழுவினர் விரல் ரேகை இல்லாமல் இருப்பதற்கு காரணமான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரை அமெரிக்க மனித மரபணுக்கள் இதழில் வெளியாகி உள்ளது. சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிறந்ததில் இருந்தே விரல் ரேகைகள் இல்லை.

அனைவரும் டெர்மடோகிளிபியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை மருத்துவர்கள் இலி சு(ஸ்)பீரிச்சர் குழுவினர் ஆய்வு செய்து சில மருத்துவ உண்மைகளை கண்டறிந்துள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கை, விரல், கால் விரல்கள், பாதம் எல்லாமே வழுவழுவென இருக்கின்றன.

விரல் ரேகை பதிவு செய்தால் கோடுகள், வட்டங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். குறிப்பிட்ட ஒரு மரபணு மாற்றம் தோல் பகுதியை மட்டும் பாதிக்கிறது. மற்ற உறுப்புகளை பாதிக்காது. அதுபோல் விரல் ரேகைகளை மட்டும் பாதிக்கும் புரோட்டீன் எது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் மருத்துவர் இலி.

சுவிசு(ஸ்) குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவுக்கு சென்ற போது விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொண்டனர். அவருக்கு விரல் ரேகை இல்லாததால் தீவிரவாதியை போல் நினைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு துளைத்தது குறிப்பிடத்தக்கது...

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது...


பிரபஞ்ச அலையின் தொடர்பு...


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன.

அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்.. வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

சட்டம் அனைவருக்கும் சமம்... சாமானிய மனிதனுக்கு மட்டும்...


தேடப்படும் கஞ்சா & கொலை குற்றவாளி  ஜக்கிக்கு ஆதரவாக அரசு...

எந்த கட்சியும் இவனை எதிர்க்கவில்லை...

ஆனால் அப்பாவி சின்ன தம்பி யானை யை.. தன் இருப்பிடத்தை விட்டு விரட்டி அடிக்கப்படுகிறது...

காட்டை ஆக்கிரமித்துள்ள இவன் மீது எந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.?

ஆங்கிலம் உருவானது நம் தமிழ் மொழியை வைத்து தான்...


"An etymology dictionary of the English language" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...

தமிழே ஞால முதல் மொழி, தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று நன்கு ஆய்ந்து அடித்துக் கூறிய, மலையாளியான சட்டம்பி சுவாமிகள் பற்றித் தெரியுமா தமிழர்களே?


தெரிந்துக் கொள்ளுங்கள்...

வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் (ஆகஸ்ட் 1853 - மே 5, 1924) கேரளத்தில் புகழ்பெற்றிருந்த ஒரு வேதாந்தி, யோகி.

இந்துமதச் சீர்திருத்தக்காரர். இந்து மதத்தின் பிராமணச் சடங்குகளுக்கு எதிராக போராடியவர். நாராயண குருவின் சமகாலத்தவர், மூத்த தோழர்; ஆத்மானந்தரின் ஆசிரியர்.

ஐயப்பன் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சட்டம்பி சுவாமி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள கொல்லம் அல்லது கொல்லூர் என்ற சிற்றூரில் பிறந்தார்.

தந்தை தாமரசேரி வாசுதேவ சர்மா. தாய் நங்ஹேமப்பிள்ளி. குஞ்ஞன்பிள்ளை என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.

மரபான முறையில் கல்வி கற்றார். சம்ஸ்கிருதமும் தமிழும் சோதிடமும் பயின்றபின் சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார்.

நாகர்கோயிலைச் சேர்ந்த வடிவீஸ்வரம் வேலுப்பிள்ளை ஆசான் அவரது ஆசிரியர்.

பதினைந்து வயதில் திருவனந்தபுரம் பேட்டை என்ற இடத்தில் இருந்த ராமன்பிள்ளை ஆசான் என்பவரிடம் அடிமுறையும் வர்ம வைத்தியமும் கற்றார். அவ்வாறு சட்டம்பி என்ற பெயர் கிடைத்தது. அதற்கு பயில்வான் என்று பொருள்.

அதன் பின் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் பயின்றார். இவரது குருநாதர் யார் என்று தெரியவில்லை.

நாகர்கோயிலை ஒட்டிய மருத்துவாழ் மலையில் பலகாலம் இவர் தவம் செய்திருக்கிறார். அப்போது தன் குருவை கண்டடைந்திருக்கலாம் என்கிறார்கள்.

இவர் தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என்பவர்கள் உண்டு.

சட்டம்பி சுவாமிகள் தைக்காடு ஐயாவு ஆசானிடம் ஹடயோகம் கற்றபோது இளைய மாணாக்கராக இருந்தவர் நாராயணகுரு.

1882ல் வாமனபுரம் அருகே அணியூர் என்ற ஊரில் நிகழ்ந்த கோயில் விழாவில் துறவியானபின் இருவரும் முதன்முறையாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவாழ்மலையில் இருந்த போதே நாராயணாகுருவிடம் அவருக்கு உறவிருந்திருக்கிறது.

நாராயணகுருவும் சட்டம்பி சுவாமிகளும் சேர்ந்து நீண்ட பயணங்களை மேற்கொண்டார்கள்.

மருத்துவாழ்மலையில் ஒருகுகையில் தவமிருந்தார்கள்.

அந்த குகை இப்போதும் அவர்களின் நினைவிடமாகப் பேணப்படுகிறது.

நாராயணகுரு அருவிப்புறத்தில் அவரது புகழ்பெற்ற சிவலிங்க பதிட்டையை நிகழ்த்தியபோது சட்டம்பி சுவாமி உடனிருந்தார்.

சட்டம்பி சுவாமிகள் சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவர். இந்து சமூகத்தில் அன்றிருந்த பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கெதிராக கடுமையாக எழுதியும் பேசியும் சுற்றுப்பயணம் செய்தார்.

தீண்டாமைக்கும் சாதி வேறுபாடுகளுக்கும் எதிரான சுவாமியின் தாக்குதல்கள் மிகவும் வேகம் உடையவை.

கிறித்தவ மதமாற்ற முறைகளைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புகளை அவர் பதிவு செய்திருக்கிறார்.

நீல கண்ட தீர்த்தபாதர், தீர்த்தபாத பரம ஹம்சர், ஆத்மானந்தா போன்ற யோகிகளும் கவிஞர் போதேஸ்வரன், பெருநெல்லி கிருஷ்ணன் வைத்யன்ம் வெளுத்தேரி கிருஷ்ணன் வைத்தியன் போன்ற பல இல்லறத்தாரும் அவருக்கு மாணவர்களாக இருந்தார்கள்.

சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எர்ணாகுளத்திற்குச் சென்றபோது சட்டம்பிசுவாமிகளும் அங்கே இருந்தார்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்து கூட்டத்தைக் கண்டு தூரத்திலிருந்து அவரை தரிசித்து விட்டு சென்றார் சட்டம்பிசுவாமிகள்.

சட்டம்பி சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர், அவ்வளவு பெரிய மகான் என்னைத் தேடி வருவதா என்று கூறி தாமே சட்டம்பி சுவாமிகளைக் காணச் சென்றார்.

சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி மொழி தெரியாததால், இருவரும் சமஸ்கிருதத்தில் தனிமையில் உரையாடினர். சட்டம்பி சுவாமிகளிடம் சின்முத்திரையின் பொருள் கேட்டார் சுவாமிஜி.

தமிழ் நூற்களை நன்கு கற்றிருந்த சட்டம்பி சுவாமிகள் சின்முத்திரைக்கு அருமையாக விளக்கம் அளிக்கவே, சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜியின் அசைவ உணவுப் பழக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள சட்டம்பி சுவாமிகளால் முடியவில்லை.

சட்டம்பி சுவாமிகளால் பெரிதும் கவரப்பட்டார் சுவாமி விவேகானந்தார்.

வாழ்வின் கடைசிக்காலத்தில் சுவாமி பன்மன என்ற ஊரில் தங்கியிருந்தார். கும்பளத்து சங்குப்பிள்ளை என்ற அறிஞர் அவருடைய புரவலராக இருந்தார்.

இன்று அவர் சமாதியான இடம் பன்மனை ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது.

1934ல் திருவிதாங்கூருக்கு வந்த காந்தி அடிகள் அங்கே ஒருநாள் தங்கியிருந்தார்.

சுவாமி நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவரது கைப்பிரதிகள் பல அச்சேறாமல் பின்னாளில் கண்டெடுக்கப்பட்டன.

அவர் எழுதி வெளிவந்த சிலநூல்கள் எண்பது வருடங்களுக்கு பின்னர் மறுபதிப்பு கண்டன. அவரது மலையாள உரைநடை நேரடியானது. அவருக்கு கேரள உரைநடை வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்குண்டு.

தமிழ், சமற்கிருதம், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மிகுந்த புலமை பெற்ற இவர் மிகமிக நுணுக்கமாய் ஆய்ந்து, மலையாளத்தில் எழுதிய 'ஆதி பாஷா' எனும் ஒப்பிலக்கண நூல், பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களால், 'ஆதி மொழி' எனும் பெயரில் மிக நன்றாய்த் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நூலின் விலை, உருவா நூற்றியெண்பது (180/-) மட்டுமே..

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க, போற்ற வேண்டிய நூல்...

பழங்களை எலுமிச்சை சாறில் அலசி விட்டு சாப்பிடுங்கள்...


திருட்டு திராவிட வந்தேறிகளா...


வெள்ளையனே வெளியேறு
என்று சொன்னது சரியென்றால்..

அந்நியனே வெளியேறு
என்பதும் சரிதானே...

பிறகு எப்படி டா தெலுங்கு கன்னடன் மலையாளி போன்ற வேற்றினத்தார் தமிழர் போர்வையில் தமிழ்தேசியத்திற்குள் அடங்குவான் ?

இப்படி சொல்பவன்..

ஒன்று பிழைப்புவாதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அவன் வந்தேறியாக இருக்க வேண்டும்...

விழித்துக்கொள் தமிழினமே...


மனிதர்கள் வாழ்க்கையில் வாழ்ந்ததை விட அழித்தது தான் அதிகம் இப்புவியில் இன்று வரை...


மனிதனையும், மனித ஆற்றலையும், மனித அறிவையும், உயர்த்தி பேசி வரும் பிணங்களுக்கு ஓன்று சொல்லி கொள்கிறேன்...

மனிதன் மிகவும் கீழ்த்தரமான பிறவிதான் இருக்கும் பறவைகள் விலங்குகள் மற்ற உயிரினங்கள் மரங்கள் இயற்கை முழுவதையும் விட கீழ்த்தரமான உணர்வில்லா  உயிரினங்கள்..

கடைசி வாய்ப்பு இயற்கை உணர்வுடன்  சேர்வது மட்டுமே..

இதையும் இழந்தால் பிணங்களாக வாழுங்கள் தினமும்...

தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு / செம்பருத்தி சீயக்காய் தூள்...


https://youtu.be/mncCslTGS5A

Subscribe The Channel For More Tips...

வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வெளியே வேறு கிரகங்களில் உயிர் வாழ்கிறார்களா? என்பதை அறிய அமெரிக்கா உட்பட பல வல்லாதிக்க நாடுகள் தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றன...


இதற்கு உதாரணமாக
இப்போதைக்கு எந்த ஆய்வுக்கும் கொட்டப்படாத பணத்தினை வேற்றுக்கிரக தேடலுக்காக இந்த நாடுகள் தங்கள் விஞ்ஞானிகளுக்கு முன்வைத்து வருகின்றனர். இல்லாத ஒன்றை இத்தனை சிரமப்பட்டு பணத்தினை வாரி இறைக்கும் அளவிற்கு, இவர்கள் ஒன்றும் சிந்திக்கும் திறன் அற்றவர்கள் அல்ல.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்றுகிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு சமூகமாக உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் உணவு உண்டு, தண்ணீர் அருந்தி நம்மை போலவே இருப்பார்களா? என்பது தான் சந்தேகம் என்கிறார்.

ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமமல்ல. அவர்களது இடத்தில் இருந்து இந்நேரம் பயணிக்க தொடங்கி இருந்தால், 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம் என்று கூறி உள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியிருந்தார். இந்த திட்டத்துக்காக அவரது அறக்கட்டளையிலிருந்து அடுத்த 10
ஆண்டுகளுக்கு ரூ .640 கோடி
செலவிடப்படும் .

மேலும் ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்கிறார் . இந்த திட்டத்திற்கு கேம்ரீஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த
வானவியலாளர், காஸ்மோலாகிஸ்ட்
பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ் தலைமை தாங்குகிறார் .

இந்த திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும் , மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர் ( 328 அடி ) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பால் ஹெல்யர் வேற்றுகிரகவாசிகள் குறித்து புதுவித தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதைப்பற்றி தனியாக ஒரு பதிவில் பார்ப்போம்.

அவர் கூறியதாவது...

இதுவரை 4 வகையான
வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்க
கடந்த சில ஆண்டுகளாக
வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது . பூமிக்கு வரும் வேற்றுகிரகவாசகிள் மனிதர்களின் கண்டுபிடிப்பான அணு ஆயுதத்தை பார்த்து வருத்தம் கொள்கிறார்கள் ,
ஏனெனில் அணுகுண்டானது
அண்டசராசரத்தில் பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தும் என அவர்கள் நம்புகிறார்கள்.

மேலும் , பூமியை பசுமையாக்கும் பல்வேறு யோசனைகள் அவர்கள் வசம் உள்ளன , வேற்றுகிரகவாசிகளால் பருவ
மாற்றங்களுக்கு தீர்வு காண முடியும்.சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல ஆடையணிந்து ஷாப்பிங்
சென்றுள்ளனர் . அவர்களை நான் பார்த்துள்ளேன் , ஆனால் அதற்கானஆதாரம் என்னிடம் இல்லை . அவர்களை பார்த்த நான் மட்டுமே இதற்கு ஆதாரம் என கூறியுள்ளார்.

சர்வதேச விண்வெளி மையம் நாசாவின் முன்னாள் கமாண்டர் டாக்டர் லெரொய் சியோ ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள வொல்லோங் கோங் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தார் அங்கு மாணவர்களியே பேசிய அவர் கூறியதாவ்து:-

சமீபத்தில் சனிகிரகத்தின் நிலவில் நீர் உள்ளது கண்டறியபட்டு உள்ளது . மேலும் வளிமண்டலங்களில் அமினோ அமிலங்கள் உள்ளது. பிரபஞ்சத்தில் நம்மை தவிர வேறு
வேற்றுகிரகவாசிகளும் உள்ளனர் என்ற கருத்தை இது காட்டுகிறது. எல்லா வகையான உயிரினங்களும்,
புத்திசாலித்தனமான
வேற்றுகிரகவாசிகளும் உள்ளன என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருவருக்கொருவர் கண்டுபிடிக்க முடியாதது பரந்த தூரத்தில் உள்ளதாக நான் நினைக்கிறேன்.என கூறுகிறார்.

தாமஸ்_ஹேர்: அறிவியலாளர்.

ஸ்டீபன்_ஹாக்கிங்: கோட்பாட்டு இயற்பியலாளர்.

லெரொய்_சியோ: விண்வெளி ஆய்வாளர். 

பால்_ஹெல்யர்: ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

என உலகின் முக்கிய நபர்கள் இவ்வளவு தீர்மானமாக, அறிவியல் ரீதியாக வேற்றுகிரகவாசிகள் இருக்கின்றனர் என்று கூறினால், நம்மால் நம்பமுடியாமல் இருக்க முடியுமா?

விழித்துக்கொள் தமிழினமே...


தியானம் என்பது ஒரு பரிசோதனை...


கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.......?

பரவாயில்லை. தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....?

பரவாயில்லை. தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......?

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு.......? என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்....? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம். எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன. எண்ணங்கள் மறைந்ததும், திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன. எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள். அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின், அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே-தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே-இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போதுதான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது.அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே "விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்...