அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலைக்கு ஆள் எடுக்கப்படும் என்ற பெயரில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மறைமுகமாக ஊழல் செய்து அதாவது வேலைக்கு ஒருவர் 7 லட்சம் தரவேண்டும் என்ற திமுக MLA அனிதா ராதாகிருஷ்ணன்...
01/11/2021
தொட்டாற் சுருங்கி செடி...
சிறுபிள்ளைகளாக இருக்கும் சமயம் இந்த செடியைப் பார்த்தால் தொட்டு விளையாடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒரு விளையாட்டு, ஆச்சர்யமும் கூட...
இப்போதும் இந்த அதிசயச் செடியின் மருத்துவ குணங்களைப் படித்தாலே அதே ஆச்சர்யம் அடைவீர்கள்...
மருத்துவ குணங்கள்...
தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும்..
இதன் வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி சலித்து வைக்க வேண்டும். இந்த சூரணத்தை 10 கிராம் வீதம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் கடுப்பு நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்.
உடல் சூடுபிடித்தால் சிறுநீர் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதை குணமாக்க 10 கிராம் தொட்டாற் சுருங்கி இலையை தயிரில் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். இவ்வாறு 5 முதல் 6 நாட்கள் சாப்பிட்டால் அந்த எரிச்சல் குணமாகும்.
ஆண்மை பெருக இரவில் 15 கிராம் இலையை பசும்பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.
இதன் இலையை ஒருபிடி அரைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும், உடல் குளிர்ச்சியாகும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.
ஒரு பங்கு இலைக்கு 10 பங்கு கொதிக்கிற தண்ணீர் ஊற்றி ஆறின பின் வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை குடித்து வந்தால் நீர் அடைப்பு, கல்லடைப்பு சரியாகும்.
இலை மற்றும் வேரை உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு பசுவின் பாலில் போட்டு குடித்துவர மூலம் குணமாகும்.
இதன் இலைச்சாற்றை மூல பவுத்திர ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறிவிடும்.
தொட்டாற் சுருங்கியின் இலையை மெழுகு போல அரைத்து விரை வாதம் மற்றும் கை கால் மூட்டுகளின் வீக்கம் இவைகளுக்கு வைத்து கட்ட குணமாகும்.
இந்த இலைச்சாற்றை பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களின் மீது தடவி வர ஆறும்.
இதன் இலையை ஒரு பெரிய மண் பானையில் போட்டுச் தண்ணீர் விட்டு வேக வைத்து மிதமான சூட்டில் இடுப்பிற்கு ஊற்றி நீவி விட இடுப்பு வலி நீங்கும்...
ஒரு ஆண் கொட்டும் மழையில் நனைந்தபடியே வந்து கொண்டிருந்தான்...
அதைப்பார்த்து பரிதாபப்பட்ட ஒரு அழகான இளம்பெண் "இப்படி நனைஞ்சிட்டீங்களே! குடைக்குள்ள வாங்க!" என்றாள்...
வேண்டாம் சகோதரி நன்றி ! என்று கூறிவிட்டு விறுவிறுன்னு மழையிலேயே நடந்தான் அவன்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து என்னன்னா....?
இதுல கருத்து, குருத்துனு கிடையாது...
பின்னாடியே அவன் பொண்டாட்டி ராட்சசி வந்துக்கிட்டிருந்தா....
அவ்வளவு தான்...
😃😃😃😃😃
சித்தராவது எப்படி - 42...
இந்த நொடியின் நடப்பில் பிடிப்பு...
கடவுள் வரவுக்காக ஏங்கி தவிக்கும் மனித குலம் இந்த நொடியிலும் தன் கருணையை வாரி வழங்கி கொண்டு இருப்பதை உணராத நிலையே அஞ்ஞான நிலையாகிய மதி அற்ற நிலை..
எல்லா மதங்களும் கடவுள் வரவுக்காக தங்களை ஏன் தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் ஒரு மிக பெரிய சதி திட்டம் மிக மிக நுணுக்கமாக மிக மிக இரகசியமாக யாரும் அறியாத வண்ணம் பிண்ணி பிணையப் பட்டு உள்ளது..
இந்த நிகழ் கால நிஜம், இந்த உயிரோட்டமான உண்மை, வெளிப்பட்டால் அத்தனை சர்சுகளும் மசூதிகளும் கோவில்களும் மடாலயங்களும் கேட்பாரற்று அநாதைகளாய் போய் புராதன நினைவு சின்னங்களாய், மாறி போவதை யார்தான் பொறுத்துக் கொள்வார்கள் ? யார் தான் ஒத்துக் கொள்வார்கள் ?
அவைகளை காப்பாற்ற, பொய்யை ஏற்றுக் கொண்டு, பொய்யை பரப்பி தான் மடிந்தாலும் இந்த உலக மக்கள் அனைவரும் மடிந்தாலும் பரவாயில்லை என்ற சமயத்துறவிகள், சமய தியாகிகள் சமய இலட்சியங்கள் கொண்டோர் வழி முறைகளே, முன்னிலை படுத்தப் பட்டு கொள்கைகளாக, இன்று உலகம் முழுமைக்கும் நடமாடிக் கொண்டு இருக்கின்றன..
அககுருவின் சமாதி என்றோ கட்டப்பட்டு விட்டது.. ஆனால் மிக சத்தியமான உண்மை என்னவென்றால் இந்த அககுருவின் சமாதி தான் உண்மையான ஜீவ சமாதி.. ஏனைய சமாதிகள் எல்லாம் பாவ சமாதிகள்..
திகைப்பூட்டும் இந்த உண்மை புரிந்து கொள்ள வேண்டும்..
ஆத்திரமோ கோபமோ கொள்ளாமல் அந்த உண்மையான ஜீவ சமாதியில் உயிரோட்டமாக இருக்கும் அக குருவை வேண்டிக் கொண்டால், உண்மை தானாக வெளிப்படும்...
மற்ற ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் ஒவ்வொரு உயிரின் உள்ளும் இருக்கின்ற அந்த ஜீவ சமாதியின் அதிர்வலைகளால் தான் அதை தாங்கிய உடல் உயிர் வாழுகிறது என்பது தான்..
மனிதன் உலகின் கபட, அஞ்ஞான தந்திர வழிகளில் சிக்கி, தன்னில் இருக்கும் ஜீவ சமாதியை, பாவ சமாதி ஆக்கும் வரை, ஆக்கப் படும் வரை, அந்த அககுருவின் அதிர்வலைகள் மனிதனை காத்துக் கொண்டு இருக்கிறது..
உலகின் பிரமாண்டமான பொய்களின் வெளிபாடாய் விளங்கும் பிரமாண்டமான மசூதிகளும் சர்சுகளும் கோவில்களும் ஏற்படுத்தும் பிரமாண்டமான கவர்ச்சிக்கு முன்னால், இந்த நிகழ்கால நொடிக்கு நொடி பிரபஞ்ச ஆற்றல் மூச்சின் வழியாக உயிர் காத்துகொண்டு இருப்பது எப்படி மனம் ஏற்றுக்கொள்ளும்?
அந்த பிரமாண்ட கவர்ச்சி தோற்றத்திற்கு முன்னால் தோன்றா நிலையில் இருக்கும், இந்த சுவாச காற்றின் மகிமை, காற்றோடு காற்றாய் பறந்து போய் விடுவது ஒன்றும் வியப்பு இல்லை..
அப்படி பட்ட பிரமாண்டமான மத கட்டிடங்களுக்கு சொந்தமான மதவாதிகள் இந்த கவர்ச்சியற்ற சுவாசத்தின் மகிமையை வைத்து எப்படி பிழைக்க முடியும் ? எப்படி ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வாகிக்க முடியும் ?
ஆகவே உண்மைக்கு எதிராக பொய்யை சொல்லி கவர்ச்சியை காட்டக் கூடிய பொய் கருத்துக்களை சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.. இதை இப்படியே விட்டு விடலாம்..
தோன்றா நிலையில் இருக்கும் நடப்பில் செயல்படும் அந்த சுவாசத்தை பிடிப்பத்தின் மூலம் நம்மில் ஜீவ சமாதியில் இருக்கும் அந்த அககுரு எழ செய்ய வேண்டிய வழியில் பயணப் படுவோம்.. சத்தியத்தை உண்மையை கைகொள்ளுவோம்..
கவர்ச்சி அற்ற அந்த பயணத்தில் சிறிதும் தளர்ச்சி அடையாது அன்பு அற்ற பன் மார்க்க நெறியாளர்களிடம் சிக்கி கொள்ளாமல், அன்பையே ஆதாரமாக கொண்டு மர்ம யோகத்தின் மூலம் நிறைநிலை மனிதாய் விளங்கி என்றும், உயிரோட்டமாய் திகழும் இந்த அண்ட ஆற்றலுக்கு நன்றி கடன் செலுத்துவோமாக...
சித்தராவது எப்படி - 41...
மூடமும்,போகமும் நீங்க,நீக்க,வேண்டிய அவசர நிலை...
அதிகமாக உணவு உள் கொள்பவரை போகி என்பர்.. காரணம் உண்ட உணவு கொழுப்பு பொருளாக உடம்பில் சேகரித்து வைக்கப் படுவதால், தேகத்தின் திறன் பாதிக்கப் படுகிறது...
சராசரி எடை கொண்ட ஒரு மனிதன் செய்யும் வேலையை மிக பருமனான ஒருவர் செய்ய முடிவதில்லை... இதனை திறன் என்பர்..
அப்படியானால் தேகம் திறன் உடையதாக இருக்க வேண்டுமானால், தேகம் ஒரு அளவிற்கு மேல் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.. தேகத்தை ஒரு வரையறை அல்லது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்...
தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்ட தேகம் மீதியை கொழுப்பாக சேமிக்கவே செய்யும்..
தியானமும் அவ்வாறே என்பது ஒரு ஆச்சரியமான விசயம்..
தியானத்தில் அதிகமாக ஈடுபாடு கொள்பவர்கள் மனதின் எழும் எண்ண ஆதிக்கத்தின் விளைவான ஆசையின் நிமித்தம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது ஒரு மிதமிஞ்சிய ஓய்வின் விளைவாக பெறப்படும் மிகைப் பட்ட ஆற்றல் தேகத்திற்கு நல்லதல்ல..
ஒரு குறிப்பிட்ட அளவே ஆற்றலை தாங்கும் தேகம், அதிகமான ஆற்றலை பெறும் போது தேக திசுக்கள் செயல் இழந்து ஒரு மூடம் தேகத்தை கவ்விக் கொள்ளும்.. இதனால் தேகம் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் குறைந்து விடுவதை கண்கூடாக பார்க்கலாம்..
இந்த மூடத்தால் வாழ்வே சிதைந்து போகும் ஆன்மீகவாதிகள் ஆயிரம் ஆயிரம்... இந்த மூடம் கவ்விய நோய்க்கு சரியான மருந்து இல்லை எனலாம்..
வெளி உணவால் எப்படி அதிக கொழுப்பு சேர்ந்து தேகம் தன் திறனை இழந்து விடுகிறதோ அதே போலவே அதிக ஆற்றலை பெற்ற தேகம் பெற்ற ஆற்றலை மூடமாக தேகம் தன்னை மாற்றி விடும்..
கொழுப்பை கரைப்பது போன்று மூடத்தை அவ்வளவு எளிதாக நீக்க முடியாது..
இப்படி மூடம் கவ்விய ஆன்மீக வாதிகள் தான் தோன்றித்தனமாக வீதிகளில் பைத்தியகாரர்களாக திரிந்து உலகில் எந்த பிடிப்பும் இல்லாமல், அரைகுறை அல்லது நிர்வான ஆடைகளிலோ இருப்பதை தவறாக நாம் எடுத்து கொள்கிறோம்..
அவர்கள் உலகப் பற்று நீங்கிய ஞானிகள் என்றும், அமுதப் பால் உண்டவர்கள் என்றும், ஞானம் அடைந்தவர்கள் என்றும் தவறாக மக்கள் புரிந்து கொள்கிறார்கள்..
உண்மையில் அவர்கள் மூடம் கவ்விய நிலையில் உலகியல் இயக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாத மன நோயாளிகளே..
இப்படி பட்ட மனநோயாளிகள் மிக அதிகம் இருக்கும் இடமும் அதிக நோயாளிகளை உருவாக்கும் இடமும் எதுவென்றால் நமது பாரத நாடு தான்..
அதனால் தான் இந்த நாட்டை பழங்கால முதல் வெளி நாட்டவர்கள் மிக எளிதாக இந்த நாட்டை கைப்பற்றி இங்கே உள்ள வளங்களை சூறையாட முடிந்தது..
இன்றைக்கும் இந்த மூடம் கவ்விய சூழ்நிலை நீங்காமல் இருப்பதால் மக்களிடையே விழிப்பு உணர்ச்சி மிக குறைவாக இருப்பதின் காரணமாக அடிதள மக்களின் வாழ்க்கை தரம் துளியும் முன்னேற வில்லை..
இந்த மூடம் தரும் அற்ப சுகத்தையே வியாபாரமாக்கி மிக தந்திரமாக கோடி கோடியாக சம்பாதிக்கும் ஆன்மீக வாதிகள் இங்கே தான் இருக்கிறார்கள்..
இப்படி பெற்ற ஆற்றலால் மூடம் கவ்வாமல், மயக்க நிலையை தவிர்க்கவே, நமது சுவாசத்தில் சந்திர கலையாகிய உள் வாங்கும் மூச்சையும் இறைவன் அமைத்துள்ளான்..
இந்த சந்திரகலையை மதியாக்கும் நுணுக்கம் அறியாத காரணத்தில் தான் இந்த நாடே பல நூற்றாண்டுகளாக சீரழிவினை சந்திந்து வருகிறது..
மதியான அந்த அககுரு எழவிடாமல் என்ன என்ன வழிமுறைகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் இம்மியும் பிசகாமல் சதி திட்டமாக நடை பெற்று வருகிறது..
இந்து மதத்தின் சிவகலப்பு என்ற வாழ்வியல் நெறி முறைகள் அடியோடு வேரறுக்கப் பட்டு, இன்று மூடம் தரும் கருத்துக்களாக இந்து மதமும் மற்ற வெளி மதங்களும் மாறி விட்டன..
புத்த மதம் இங்கே மூடம் தரும் மதமாக பெரும்பாலும் உள்ளது.. அதே புத்தமதம் ஜப்பானில் ஆக்கம் தரும் மதமாக மாறி விட்டது..
இங்கே மூடம் பரப்பும் சதியை முறியடித்தால் ஒழிய நம் பாரத நாட்டிற்கு என்றைக்கும் விமோச்சனமே இல்லை போல் தோன்றுகிறது..
விரைவில் நம்மில் அககுருவை எழுப்பி வல்லதொரு சித்தனாக மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து இனியேனும் செயல் பட தொடங்குவோமாக...
பொய் நிறைந்த உறவுகள்...
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு உறவுகளிடமும்
உண்மையை தேடி தேடி
உண்மையான உறவென்று
எண்ணி எண்ணி
என்னிதயம் ஏமாற்றம்
கண்டு கண்டு
அனைத்தும் பொய் பொய்
என்றே எண்ணுகிறது...
வெறுத்து விடுகிறேன்
இறுதி வரை உறவுகள்
நிலைத்து நிற்பதில்லை...
கோபத்தில் ஏமாற்றங்களில்
வலிகளில் என்னையே நான்
வெறுத்துவிடுகிறேன் மொத்தமாய்....
சரியோ தவரோ
எனக்கான உறவுகளிடம்
உண்மையுடன் பழகுகிறேன்....
அதை என்னை சார்ந்த
உறவுகளிடம் எதிர்ப்பார்ப்பதால்
ஏமாற்றம் காண்கிறேன்...
வெறுத்து விட்டேன்...
இன்று மொத்தமாய்....
நேசித்த உறவுகளை...
சளி பிடித்தவர், மது குடிப்பவரிடம்...
ஏங்க, பிராந்தி குடிச்சா சளி போயிடுமாங்க?
நிச்சயம் போய்விடும்..
கண்டிப்பாக போயிடுமாங்க?
கண்டிப்பாக போயிடும்..
எப்படிங்க இவ்வளவு உறுதியாக சொல்றீங்க?
ஏய்யா இந்த குடியினால..
மானம் போச்சு,
மரியாதை போச்சு,
வேலை போச்சு,
குடும்பம்
புள்ளை குட்டிங்க
எல்லாம் போச்சு..
இவ்வளவும் போகும் போது
இத்துனூண்டு சளி போகாதா?
🤣🤣🤣🤣
கத்தாழையை பத்தி தெரிந்துக் கொள்ளலாமா?
இளமையா இருக்க ஆசையா?
குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும் என்கிறது சித்த மருத்துவம்.
குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
அலோவேரா சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு..
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.
கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.
இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும்.
கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!
சோற்றுக் கற்றாழைக்கு சித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங்களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணி பற்றாமல் இருப்பதற்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத் தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.
தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது...
எனக்கான நிம்மதி...
தாயின் கருவறை நிம்மதி...
சுயநலமற்ற குழந்தைப் பருவம் நிம்மதி...
தோழியின் தோள் சாயும்
வேளை நிம்மதி...
கடவுளே...
உன்னை சரணடைந்தேன்...
என் வேண்டுதலை நிறைவேற்றினால் நிம்மதியோ நிம்மதி..
பூமித்தாயின் மடியில்
துயிலுவதே நிம்மதி...
வாழ்க்கை...
ஆறாத அழுகை
வற்றாத கண்ணீர்
குறையாத பாரம்
தீராத சோகம்
சுயநல மனிதர்கள்...
வாழும் ஆசையில்லை
குடியேற வேண்டும் மீண்டும்
என் தாயின் கருவறையில்...
வேண்டாம்..
வந்த இடத்திற்கே சென்றால்?
மீண்டும் வரக்கூடும்..
அதனால் செல்ல வேண்டும்
திரும்ப முடியா இடத்திற்கு...
என் கல்லறைக்கு...