19/04/2018

சத்தியமா சிரிப்ப அடக்க முடியல என்னால... அரைமணி நேரமா நிறுத்தாம சிரிச்சிகிட்டுருக்கேன்...


இந்த கார்டூன வரைஞ்சவன் சத்தியமா ஒரு தீர்க்கதரிசி. அதுவும் ஒரே மைதானத்துக்குள்ள இப்படி தமிழக அரசியலையே ஒட்டுமொத்தமா அடைச்ச அந்த கார்டூனிஸ்ட்டோட ஆக்கதிறமைய எவளோ பாராட்டினாலும் தகும்.

இதுல சில விஷயங்கள் ஏற்றுகொள்ள முடியாதுதான் ஆனாலும் அத பெருசா எடுத்துக்காம நகைச்சுவையா மட்டும் பாருங்க. இது முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே..

அதிலும் நம்ம திமுக செயலு வேற லெவலு...

ஆழ்மனத்தின் அற்புதம்...


மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.

பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.

எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.

ஆம் அப்படித் தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.

நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.

அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.

அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.

அதே போல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்...

அடேய் ஆன்டி ஹிந்தியன்களா...


யார் உவன் ?


1989ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான சீன மக்கள் அன்றைய சீன அரசை எதிர்த்து போராடினர்..

போராட்டத்தை கலைக்க அரசு ராணுவத்தை பயன்படுத்தியது. அரசு நடத்திய வெறியாட்டத்தில் 300இல் இருந்து 1000 பேர் வரை அன்று கொல்லப்பட்டிருக்கலாம்.

போராட்ட குழுவை நோக்கி சீன ராணுவ பீரங்கிகள் செல்லும் பொழுது ஒற்றை ஆளாய் ஒருவன் வழிமறித்தான். அணிவகுத்த பீரங்கிகள் முன் நிராயுதபாணியாக நின்று எதிர்த்தான் அந்த மாவீரன்.

இன்று வரை அவனது உண்மையான  அடையாளம் தெரியாது...
அவனது நோக்கம் அரசின் அடக்குமுறையை எதிர்ப்பதே..

அவனே உவன்...

அதிகாரத்தை எதிர்த்த அடையாளமற்றவன்...

தமிழ்நாடும்.. தமிழ் மக்களும் நாசமா போனாலும் பரவாயில்லை.. பாஜக மோடியின் காலை அதிமுக நக்கி கொண்டு இருப்பது இப்படி ஆட்டயப் போட தான்....


ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவு முட்டையில் ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் என மாபெரும் ஊழலை செய்திருக்கிறது தமிழக அரசு.

இதுகுறித்து, டெல்லியிலுள்ள மத்திய அரசின் 'காம்பட்டிஷன் கமிஷன் ஆஃப் இண்டியா' ஆணையம் இந்த ஊழலை அதிரடியாக விசாரிக்க ஆரம்பித்திருக்கிறது...

பாஜக நிர்மாதேவிக்கு இதனால் தான் மிரட்டல்கள்...


உத்திரமேரூர் - " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாமே அழிவின் விளிம்பில்...


உத்திரமேரூர் -ஆயிரம் ஆயிரம் வரலாறு கொட்டிக்கிடக்கின்றது, " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாம் காணப்பெறுகின்றது, ஆனால் இன்றைக்கு எல்லாமே அழிவின் விளிம்பில்...

இந்த படத்தில் இருப்பது தான் " ரகசிய அறை " - போர் மூளும் போது, சிலைகள், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், பதுங்குவதற்க்கும் இது போன்ற அறைகளை உருவாக்கி உள்ளனர். 

பொன்னியின் செல்வன் " புத்தகத்தில் "நிலவறை" குறித்த செய்திகள் கூட உள்ளது ,சுமார் ஆறு அடி உயரமும், பனிரெண்டு அடி நிகளமும் கொண்ட இந்த அறை, அழகாக உள்ளே கல்லில் கட்டப்படிருக்கின்றது.

மேலே இருந்து பார்த்தால் நிச்சயம் இதுபோன்ற ஒரு அறை இருப்பது தெரியாது, அந்த மேல் கல்லை நீக்கினால் மட்டுமே இவ்வளவு பெரிய அறை இருப்பது தெரிய வரும்.

அவ்வளவு அழகாக,நேர்த்தியாக திட்டமிட்டு கட்டி இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு இது கேட்பாறற்று கிடக்கின்றது.

இந்த கோயிலை சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது.

தன்னுடைய இனத்தின் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய தமிழர்கள், இதை மதிக்க தவறிவிட்டதால், இன்றைக்கு "குடி" மக்கள் சுற்றி இருக்கும் வரலாற்றை மறந்து குடிப்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்...

பாஜக தமிழக ஆளுநர் கலாட்டா...


காவிரிக்கு பயன்பாடாத கவர்னர் லெட்டர்பேடு என்ன கருமத்துக்கெல்லாம் பயன்படுது...


அப்ப இந்திய அரசாங்க முத்திரைக்கு ஒரு தனித்துவம் இருந்தது..

இப்ப என்னத்த சொல்ல...

உலக அளவில் பாஜக மோடியின் மானம் கப்பல் ஏறியது...


பொருளாதார அரசியலை புரிந்து கொள்ளாமல் இந்த அரசியல் அமைப்பை என்றைக்கும் நீங்கள் புரிந்துக்கொள்ள முடியாது...


ஏனெனில் இந்த அமைப்பு பொருளாதார வல்லுநர்களின் ஆணைக்கிணங்க இந்தியா அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டது..

நவம்பர் 8, 2016 மோடி கொண்டுவந்த முட்டாள்தனமான பணமதிப்பிழப்பு கொண்டு வந்தது இந்தியா மக்களுக்காக இல்லை..

அது குசராத்திகள் மற்றும் இந்திய வணிகர்களுக்கு ஆணைக்கிணங்க மோடி என்ற அடிமையால் நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை..

வணிகர்கள் தங்கள் பணத்தை எளிமையாக கொண்டு செல்வதற்கும், தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை நேர்மையான பணமாக மாற்றிக் கொள்வதற்கும் கொண்டு வரப்பட்டதே பணமதிப்பிழப்பு..

நீங்கள் நினைக்கும் இந்திய தங்கத்தின் விலை நிர்ணயம் பங்குச்சந்தையை பொருத்தது இல்லை, அது தங்க வணிகர்களின் தங்கத்தின் இருப்பை பொருத்தது...

மராட்டியன் ரஜினிக்காக காத்திருக்கிறார்கள்...


எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களைதான் அழிக்க திட்டம்..

ஆனால் மக்களுக்கோ எதுவும் தெரியாது டிசைன் அப்படி...

சித்தர் ஆவது எப்படி ? - 6...


புத்தியின் கனல் தன்மை
மனிதன் இரண்டாக பிளவு பட்டு இருக்கிறான்..

மனம் கொண்ட மனிதன் தன் மனதில் கனலாகவும் வெளிச்சமாகவும் இரண்டாக பிளவு பட்டு இருப்பதையே இதை குறிக்கின்றது...

வெளிச்சமான உருவ பூதங்களான மண் நீர் பூதங்களை காட்டவும், கனலாய் அருவ பூதங்களான புத்தி அறிவினை வலு ஊட்டவும், ஆக இரு செயல்களை மனம் செய்கிறது...

வெளிச்சத்தை மனம் காட்ட காட்ட மனிதன் விலங்கியல் நிலைக்கும், கனலாய் மாற மாற மனிதன், தெய்வநிலைக்கும் செல்லுவதை முன்பே பார்த்தோம்..

இயல் நிலையில் மனிதன் வெளிச்சமாய் உள்ள நிலையில் யோக பயிற்சியின் மூலம் கனலை பெருக்கி தெய்வீக நிலைக்கு போகிறான்..

கனலை பெருக்காத நிலையில் தெய்வ நிலையை அடைய முடியாமல், மனிதன் மனிதனாக ஜென்ம ஜென்மாக பிறவி எடுக்கிறான் என மகான்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்...

பிரபஞ்ச ஆற்றலை புத்தியின் மூலம் சுத்த கனலாக பெற்றுக்கொண்ட மனம் அதை வெளிச்சமாக மாற்றி உலகியலில் தொடர்புக்கு தன்னுடைய பஞ்ச பொறி புலன்களுக்கு செலவழிக்கிறது..

அப்படி செலவு செய்து பழக்கப் பட்ட மனம், பெற்ற மொத்த ஆற்றலையும், பொறி புலன்களுக்கே செலவு செய்ய துடிக்கிறது..

ஆனால் புத்தி அதனை தடுத்து விட்டாலும், புத்தியின் செயலில் தோய்வு ஏற்பட்டாலும், புத்தியின் பலத்தைக் காட்டிலும் மனம் மிகுந்த பலத்தோடு செயல் படுகின்ற பொழுது, புத்தி செயல் இழந்து போகும் போது, மனம் தான் பெற்ற கனல் சக்தி முழுமையையும் பொறி புலன் வாயிலாக தான் பெற்ற அனைத்து கனலையும் வெளிச்சமாக மாற்றி விடுகிறது...

அப்படி வெளிச்சமாக மாறும் போது, எண்ண அலைகளை உருவாக்குகின்றது..

அப்படி உருவான எண்ண அலைகள் சித்தத்தில் உள்ள அதற்கு ஒத்த பழைய எண்ண பதிவுகளையும் தூண்டி எண்ண குவியல்களை ஏற்படுத்துகிறது..

இந்த எண்ண குவியலின் ஆதிக்கமே புத்தியும் அறிவும் தாராளமாக செயல் பட முடியாமல் தடையாய் அமைகிறது..

இந்த நிலையில் தான் புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் ஏற்படுகின்றது...

மனம் புத்தியிடம் இருந்து பெற்ற ஆற்றலை அதாவது கனலை வெளிச்சமாக மாற்றுவதை குறைக்க, குறைக்க; புத்தியில் கனல் பெருகி புத்தியின் செயல் திறன் அதிகமாகிறது...

வலுவடைந்த புத்தி அறிவினை முழுமையாக பயன் படுத்திகொள்ளும்..

ஏதோ ஒரு வகையில் ஒட்டு மொத்தமாக சிக்கி கொண்ட நாம், மனதின் செயல் பாட்டால் அதாவது கனலை வெளிச்சமாக பூரணமாக மாற்றிய விதத்தால், அனைவரும் ஒட்டு மொத்தமாக புத்தி தடுமாற்றம் அறிவு தடுமாற்றம் உடையவர்களாக உள்ளோம்...

முதலில் எண்ண குவியலில் இருந்து விடுபட்டு பின் தனி தனி எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டால் ஒழிய வெளிச்சம் மூலமாக ஆற்றல் குறைந்த அவல நிலையிலிருந்து மீள முடியாது...

இப்போது நம்மை யார் மீட்பது என்பது தான் மிக பெரிய கேள்வி...

தடுமாற்றம் அற்ற திடமாற்றம் காண என்ன வழி ?

புத்தி என்பது பூரண கனல்.. கனலான ஒன்றே ஆற்றலானது..

புத்தியில் கனல் நிறைந்து புத்தி வலு பெற வேண்டும் என்றால் புத்தியிடமிருந்து கனலை கிரகிக்கும் மனதின் செயல் பாட்டை நிறுத்த வேண்டும்..

புத்தியிலிருந்து ஒரு குறிபிட்ட அளவிற்கு மேல் மனம் கனலை பெற முடியாது..

புத்தியானது தன் தேவைக்கு வேண்டிய அவசியமான கனலை தன் பால் வைத்துக்கொண்டு சதாகாலமும் செயல் பட்டுக் கொண்டு இருக்கும்..

மனம் ஆனது புத்தியின் தேவைக்கு மேல் உள்ள கனலை பெறுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கனல் இல்லாமல் சோர்ந்து தூங்கி விடும்..

ஆனால் புத்தி மட்டும் சதா காலமும் விழித்துக் கொண்டே இருக்கும்..

தூக்கத்தில் ஏதாவது சத்தம், அதிக வெளிச்சம் அல்லது தட்டி எழுப்புதல் மூலம், தேக உணர்வு அதிகமானால் புத்தி மனதை விழிப்பு அடைய செய்து வெளிச்சத்திற்கு வரும்..

அதாவது பொறிகள் மூலம் புலன்கள் வேலை செய்ய தொடங்கும்...

தியானத்தின் ஒரு செயல், பெற்ற கனலை மனம் வெளிச்சம் ஆக்காமல் புத்தி தடுத்து தன்பால் புத்தியானது கனலை தக்க வைத்துக் கொள்வது தான்...

புத்தியானது வேண்டிய அளவிற்கு மட்டுமே மனதிற்கு கனலை கொடுக்க தொடங்கி விட்டால் மனம் புத்தியின் பூரண கட்டுப் பாட்டில் வந்து விடும்...

மனதிற்கு தொல்லை கொடுப்பது, சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமே..

இந்த எண்ண பதிவுகளை மனம் கையாள அல்லது கட்டு படுத்த எந்த வகையிலும் முடியாது...

ஆனால் சித்தத்தை கட்டு படுத்த புத்தியால் மட்டுமே முடியும்..

பொறி புலன்களை ஆதிக்கம் செய்வதற்காகவே மனம் படைக்கப் பட்டு இருக்கிறது.. பொறி புலங்களின் மேல் புத்தி, மனம் இல்லாத போது மட்டுமே ஆதிக்கம் செலுத்தும்..

இப்படியான கட்டமைப்பினை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்...

நமக்கு இப்பொழுது முக்கியமான தேவை, தனக்கு தேவையான கனலை தக்க வைத்து உள்ள , ஆனால் மனத்தின் ஆதிக்கத்தால் செயல் பாடு குறைந்துள்ள, புத்தியை தட்டி எழுப்புவதே...

புத்திமதி யார் வழங்குவார்.. ஒரு குரு தானே வழங்குவார்.. குருவின் துணை யின்றி எதுவும் நடக்காது..

புத்திமதி என்பது புத்தியின் விழித்து எழுந்த நிலை..

ஆம் புத்தியின் நிலையிலே இருந்து கொண்டு குரு செய்யும் பணியை செய்வது இந்த புத்தி என்ற எழுந்த பூதம் தான், முதலில் எழ வேண்டும்.. எழுந்த புத்தியே குருவாக முடியும்....

எழுந்து பலப்படவேண்டும்.. பலப் பட்ட பின் தான் குருவினுடைய ஆதிக்கம் தொடங்கும்.. பின் ஒவ்வொன்றாக சீர் அடைய தொடங்கும்..

சதா காலமும் விழித்து கொண்டு இருக்கும் இந்த புத்தி என்ற பூதம் முதலில் தான் செய்ய வேண்டியது இன்னதென்று அறியாத, புத்தி கெட்ட நிலையில் உள்ளது..

அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய ஒரு இடத்தை காண்பித்து விட்டால், போதும் மற்றவை எல்லாவற்றையும் சித்தராகக் கூடிய நிலைவரை அதுவே குருவாக இருந்து வழி நடத்தி செல்லும்..

ஒரு தீக்குச்சி பெரும் காட்டு தீயிக்கு வழி வகுப்பது போல், அதற்கு தொட்டு காண்பிக்க கூடிய தகுந்த ஒரே ஒரு இடத்தையும் அங்கு புத்தி பலம்கெட்ட நிலையிலிருந்து புத்தி பலப்பட்ட நிலையை அடையும் நுணுக்கத்தையும் அடுத்த பகுதியில் விளக்கமாக பார்க்கலாம்...

ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனமும்.. பாஜக மோடியும் இனைந்து சதி...


திருமானூர் கொள்ளிடம் ஆற்றை பிளாட் போட்டு விற்கும் போராட்டம்...


மணல் குவாரிகளை கொள்ளிடம் ஆற்றில்  அனுமதித்தால் டெல்டா பகுதியான  திருமானூர், டி பழூர் பாலைவனமாகி விளை நிலங்கள் பிளாட்டாக மாறும் அபாயம் உள்ளது.  தமிழக அரசைக் கண்டித்து, விவசாயிகளைக் காக்க வேண்டிய அரசு விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மணல் குவாரிகளை செயல்படுத்த நினைக்கும் அரசின் முடிவினை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம்.
கொள்ளிடத்தில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு பேராபத்து வரும்.

மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது இதனால் நீர் உப்புத் தன்மை கொண்டதாக மாறி உள்ளதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம்

நேரம்:-  காலை 11 மணி
தேதி: 20/04/2018
வெள்ளிக் கிழமை
இடம்:- கொள்ளிடம் ஆறு

பிளாட் போடும் திட்டத்திற்கு தலைமை வகிப்பவர...

உயர்திரு அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள்...

பிளாட் விற்பனையை துவக்கி வைப்பவர்...

மாண்புமிகு தலைமை கொறடா இராஜேந்திரன் அவர்கள்...

இவண்..
கொள்ளிடக் கரையோர பாசனம் பெறும் அனைத்து விவசாயிகள்...

பாஜக வும் தில்லு முல்லுகளும்...


சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழரசன்...


ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக் கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்று விட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்.

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது...

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,
கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.

அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்..

நேரடியாக மோத பயந்துகொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.

அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி.

எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார்.. கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும் போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.

மக்கள் தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரை விட்டார்.

குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்..

காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக்கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக் கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது எம்.ஜி.ஆர் ஆட்சி.

தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து.

கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது.

பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் கொலை செய்யப்பட்டார்...

இங்கிலாந்தில் பாஜக மோடிக்கு உற்சாக வரவேற்பு...




வெற்றி என்றால் என்ன?


வெற்றி என்பதற்கு தனியாக எந்த ஒரு விளக்கமும் கூற முடியாது..

எளிமையான முறையில் சொல்வதென்றால் நாம் நினைத்தது நமக்கு கிடைத்து விட்டால் நாம் நினைத்த இலக்கை நாம் அடைந்துவிட்டால், நாம் இருந்த நிலையை விட ஒரு நிலை மேலே அடைந்து விட்டால் அதனை வெற்றி என்று போற்றுகின்றோம்.

சிலருக்கு பணம் கிடைத்தால் வெற்றி, சிலருக்கு புகழ் கிடைத்தால் வெற்றி, சிலருக்கு சேவை செய்தலில் கிடைக்கும் மகிழ்ச்சியில் வெற்றி, பிடித்த பெண் அல்லது பிடித்த ஆண் துணையாக கிடைத்தால் வெற்றி.

இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வெற்றியின் இலக்கணம் வெவ்வேறாக இருக்கும்.

இப்படி வெற்றிக்கான இலக்கணம் ஒவ்வொருவருக்கும் மாறுபட காரணமாக இருப்பது நம்முடைய மனம் மட்டுமே..

குறிப்பாக வெற்றி என்பதை ஒரு வரியில் விள்ளக்க வேண்டுமேயனால் மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி ஆகும்.

ஆனால் ஒவ்வொருவருடைய மனமும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதாலோ அல்லது குறிப்பிட்ட அல்லது பிடித்த அந்த இலக்கை அடைந்தாள் மட்டுமே வாழ்க்கையில் முழு மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

ஆகவே நீங்கள் வெற்றியாளர் ஆக வேண்டுமேயானால் உங்களின் மனதிற்கு பிடித்த அந்த செயல் என்னவென்று நீங்கள் அறிந்திருக்க வேண்டும்...

இந்தியாவின் தனிமனித சுதந்திரம்...


ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா...


தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்...

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல் தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய் விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால் தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது.
மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன.

திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது.

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.

கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது.

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்.

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள்,
ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை.

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று.
இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

முக்கிய குறிப்பு: இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் பொருந்தும்...

தூத்துக்குடியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு.. எட்டாம் வகுப்பு மாணவன் நதிபன் மரணத்தை தழுவினார்...


முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கும் சமையலறைப் பொருட்கள்..


தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளியின் சாற்றினை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்குகளை உடனே நீக்கலாம்.

தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


உயிர்களுக்கு மூலாதாரமே சூரிய ஒளி தான்...


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சூரிய ஒளி ஆகும்.

சூரியன் பெருமளவு ஐதரசன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், பிராணவாயு ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds),ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது.

சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.

இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது...

நியூட்ரீனோ யாரும் மறக்க வேண்டாம்...


ஒவ்வொரு முறையும் அவர்கள் நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள்...


மக்களை எளிமையாக திசைதிருப்பி விடலாம்..

மக்களும் அவ்வாறே திசை திரும்புகின்றனர்..

எங்கே..? அந்த காவேரி வேண்டும் எனவும்

எங்கே..? ஸ்டேர்லைட்டை தடைசெய் எனவும்

எங்கே..? எங்கே..? என ஒரு பட்டியலை தயாரிக்கலாம், இந்த மக்களின் மறதி என்னும் வியாதிக்கு..

நான் பலமுறை கூறிவிட்டேன், நாம் ஒன்றை தவிர்த்து மற்றொன்றின் மீது கவனம் செலுத்தும்போது,

அவர்களின் பட்டியலில் இருக்கும் வேறொன்றை எளிமையாக செய்து விடுகின்றனர்...

பாஜக இந்திய பொருளாதாரத்தை எப்போதோ திவாலாகி விட்டது மக்களே...


பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?


பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்..

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக் கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடை பிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டு விட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக் கூடாது என்ற விஷயத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...

இந்த தவறான அமைப்பின் அடித்தளத்தை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே...


இந்த அமைப்பில் இருந்து வெளியே வருவதற்கான வழிகள் தெரியும்..

அதுவரை மேல்தளத்தை குறை கூறிக்கொண்டே இருங்கள்..

அந்த நேரத்தில் அவர்கள் அடித்தளத்தை இன்னும் வலுவானதாக கட்டமைத்து விடுவார்கள்..

பிறகு அனைத்து வழிகளும் அடைக்கப்படும்...

கூட்டத்தை திசைதிருப்பி விடலாம், அது அவர்களுக்கு எளிது...


ஆனால் ஒருமித்த கருத்துகளோடு பயணிப்பவர்களே ஒருபோதும் திசைதிருப்ப முடியாது என்பதை உவன் கூறிக்கொள்கிறான்...

பாஜக மோடியே நீங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியாது...


காக்கவும் சோறும்...


நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா, எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.

மனிதன்: நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.

காக்கா: அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானே என்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...

ஓ நாங்க உங்க முன்னோர்களா.. சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க, உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...

எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா விட்டீங்களோ, முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க, செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து என்ன புண்ணியம்.

யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.

வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும்.

எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்...ஜாக்கிரதை...

தமிழக காவல்துறை யாருக்கானது என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்...


களம் அமைப்பின் சார்பாக, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி, சென்னையில் ஊர் சந்தை மயிலாப்பூரில் நடக்க இருக்கிறது...



மறக்கப்பட்ட நமது ஊர் சந்தைகளின் மீட்டெடுப்பு மற்றும் சிறுதொழில் செய்யும் நமது தோழர்களின் தரமான பொருள்களின் விற்பனை மையம் தான் இந்த ஊர் சந்தை.

சென்ற முறை நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், இந்த முறை கூடுதல் ஸ்டால்களுடன், காய்கறி பழவகைகள் போன்ற கூடுதல் பொருள்களுடன் நிகழ்வினை நடத்துகிறோம். எனவே, உங்களிடம் இருந்து இன்னும் கூடுதலான வரவேற்பை எதிர்பார்க்கிறோம். குடும்பத்தோடு வந்து, தரமானப் பொருள்களை வாங்கிச் செல்லுங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்

நாம் அனுபவிக்கும் இந்த இயற்கைவளம், நமது தாய்தந்தை நமக்கு கொடுத்த சொத்து அல்ல. நம் பிள்ளைகளிடமிருந்து நாம் வழங்கியிருக்கும் கடன்...