19/04/2018

உத்திரமேரூர் - " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாமே அழிவின் விளிம்பில்...


உத்திரமேரூர் -ஆயிரம் ஆயிரம் வரலாறு கொட்டிக்கிடக்கின்றது, " ராஜ ராஜ சோழனுக்கு " முந்தைய " பராந்தக சோழன் " கல்வெட்டுகள் எல்லாம் காணப்பெறுகின்றது, ஆனால் இன்றைக்கு எல்லாமே அழிவின் விளிம்பில்...

இந்த படத்தில் இருப்பது தான் " ரகசிய அறை " - போர் மூளும் போது, சிலைகள், மற்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும், பதுங்குவதற்க்கும் இது போன்ற அறைகளை உருவாக்கி உள்ளனர். 

பொன்னியின் செல்வன் " புத்தகத்தில் "நிலவறை" குறித்த செய்திகள் கூட உள்ளது ,சுமார் ஆறு அடி உயரமும், பனிரெண்டு அடி நிகளமும் கொண்ட இந்த அறை, அழகாக உள்ளே கல்லில் கட்டப்படிருக்கின்றது.

மேலே இருந்து பார்த்தால் நிச்சயம் இதுபோன்ற ஒரு அறை இருப்பது தெரியாது, அந்த மேல் கல்லை நீக்கினால் மட்டுமே இவ்வளவு பெரிய அறை இருப்பது தெரிய வரும்.

அவ்வளவு அழகாக,நேர்த்தியாக திட்டமிட்டு கட்டி இருக்கிறார்கள் ஆனால் இன்றைக்கு இது கேட்பாறற்று கிடக்கின்றது.

இந்த கோயிலை சுற்றி ஏகப்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றது.

தன்னுடைய இனத்தின் பொக்கிஷமாய் பாதுகாக்க வேண்டிய தமிழர்கள், இதை மதிக்க தவறிவிட்டதால், இன்றைக்கு "குடி" மக்கள் சுற்றி இருக்கும் வரலாற்றை மறந்து குடிப்பதற்கு மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.