19/04/2018

திருமானூர் கொள்ளிடம் ஆற்றை பிளாட் போட்டு விற்கும் போராட்டம்...


மணல் குவாரிகளை கொள்ளிடம் ஆற்றில்  அனுமதித்தால் டெல்டா பகுதியான  திருமானூர், டி பழூர் பாலைவனமாகி விளை நிலங்கள் பிளாட்டாக மாறும் அபாயம் உள்ளது.  தமிழக அரசைக் கண்டித்து, விவசாயிகளைக் காக்க வேண்டிய அரசு விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி மணல் குவாரிகளை செயல்படுத்த நினைக்கும் அரசின் முடிவினை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம்.
கொள்ளிடத்தில் செயல்படுத்தப்படும் கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு பேராபத்து வரும்.

மேலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது இதனால் நீர் உப்புத் தன்மை கொண்டதாக மாறி உள்ளதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம்

நேரம்:-  காலை 11 மணி
தேதி: 20/04/2018
வெள்ளிக் கிழமை
இடம்:- கொள்ளிடம் ஆறு

பிளாட் போடும் திட்டத்திற்கு தலைமை வகிப்பவர...

உயர்திரு அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அவர்கள்...

பிளாட் விற்பனையை துவக்கி வைப்பவர்...

மாண்புமிகு தலைமை கொறடா இராஜேந்திரன் அவர்கள்...

இவண்..
கொள்ளிடக் கரையோர பாசனம் பெறும் அனைத்து விவசாயிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.