25/03/2019

இந்த படங்களில் இருப்பவர்கள் நடிகர் நாசரின் தந்தையும், தாயும் தான்...


செங்கல்பட்டில் வசிக்கும் இவர்கள் தங்களின் அடிப்படை தேவைக்கும், அன்றாட சாப்பாட்டுக்கும் சிரமப்படும் மிக வறுமை நிலையில் உள்ளனர், நாசரின் இன்னொரு தம்பி தான் இவர்களை சிரமப்பட்டு கவனித்துக் கொள்கிறார், நாசர் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, இவர்களை கண்டு கொள்வதே இல்லை, வந்து பார்ப்பதும் கூட இல்லை, இதற்கு முக்கிய காரணம் நாசரின் மனைவி கமீலா நாசர் தான், வீட்டையே கவனிக்காதவர் எப்படி நாட்டைக் கவனிப்பார்?

கோடிகளில் புரளும் நடிகர் நாசர், தனது வயதான பெற்றோரை கவனிக்காமல் தெருக்கோடியில் விடலாமா?

இப்படிப்பட்ட நிலையில் நாசரின் மனைவி திருமதி கமீலா நாசர் மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மாமனார், மாமியாரை ஒரு வேளை சாப்பாட்டிற்கே கையேந்த வைத்த இவருக்கா உங்கள் ஓட்டு...?

மத்திய சென்னை தொகுதி மக்களே சிந்திப்பீர்....

இதோ ஓட்டு கேட்டு வருகிறார்கள்....


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையை விதைத்து, மாணவர்கள், பொதுமக்களை ஓட ஓட விரட்டி அடித்தவர்கள் இன்று உங்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள்...

மொழியறிஞர் காலின் மாசிகா...


தென்னாசியாவில் மிகப்பழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதைமொழி இருந்துள்ளது. அதுவே தொல்தமிழ்...

மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய் கடி விஷம் நீங்க - சித்த மருத்துவம்...


பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விஷங்களை நீக்குவது பற்றி நாம் பேசுவோம்.

பொரும்பாலும் இந்த நச்சு விஷங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விஷங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும். எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே எந்த விஷமனாலும் அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும்.

நாய்க்கடி...

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும்.

(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விஷம் நீங்கும்.

சீத மண்டலி...

சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்.

குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விஷம் முறியும்.

வண்டுகடி...

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விஷம் நீங்கும்.

செய்யான் விஷம்...

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் நீங்கும்.

எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விஷம் முறியும்.

பூரான்...

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும்.

குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விஷம் நீங்கும்.

சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம். அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம். விஷம் முறியும்.

விரியன் பாம்பு கடித்தால்...

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும்.

இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விஷம் நீங்கும்.

நல்ல பாம்பு கடித்தால்...

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விஷம் வெளியேறும்.

தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விஷம் நீங்கும்.

வெள்ளருகு கொண்டு வந்து மென்று தின்ன விஷம் முறியும்.

தேள் கடித்தால்...

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் முறியும்.

நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விஷம் முறியும்.

எலிக்கடிகள்...

அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விஷம் முறியும்.

அவுரி மூலிகை பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விஷம் முறியும்.

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள்).

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விஷம் நீங்கும்.

இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்து கொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்...

தேர்தலில் அமமுக டிடிவி தினகரன் போட்டியிடாதற்க்கு காரணம் இது தானாம்...


https://youtu.be/GOkankz5HRc

Subscribe The Channel For More News...

அண்டர் (Hunter) எழுதிய இந்தியா என்ற நூலில்...


தொலை நாடுகளில் எல்லாம் அன்று பேசப்பட்ட மொழி தமிழே...

1956க்கு முன் வந்தவர்களை எல்லாம் தமிழ் தேசியர்களாகக் கருத வேண்டுமாம்...


சிலர் தமிழ் தேசியம் என்ற பெயரில் இயங்குபவர்கள் சொல்கிறார்கள்.

சரி 1956க்கு முன் சென்னை மாகாணப் பகுதிகளில் இருந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் வலுக்கட்டாயமாக ஆந்திராவிலும் கர்நாடகவிலும் கேரளாவிலும்  மாநிலப் பிரிவினை என்பதன் பேரால் ஆந்திரர்களாகவும் கன்னடர்களாகவும் மலையாளிகளாகவும் மாற்றப்பட்டு விட்டார்களே..

இதற்கு நவீன தமிழ் தேசியர்களின் பதில் என்ன?

கரடியே காறி துப்பிய நேரம்...


அம்மான் பச்சரிசி...

                             
காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்.

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க...

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க...

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க...

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற...

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க...

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட...

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்...

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த சிறுவன் சொன்ன அதிர்ச்சி தகவல்...


https://youtu.be/BoFBixezi7M

Subscribe The Channel For More News...

மூச்சுப் பயிற்சி...


மூச்சுப்பயிற்சி என்றாலே அது ஒரு சிக்கலான விஷயம் என்பதுபோல நினைக்க வேண்டியதாக இருக்கிறது.

காரணம் அது சம்பந்தமாக விதிக்கப்படும் அல்லது சொல்லப்படும் பயிற்சி முறைகளே.

எதற்காக மூச்சுப்பயிற்சி செய்கிறோம்? சுவாசத்தை சிரமமில்லாமல் எளிதாக்குவதற்கு.

எதற்காக சுவாசத்தை எளிதாக்கவேண்டும்? அப்போதுதான் நிறையக் காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் முடியும்.

எதற்காக நிறையக்காற்றை உள்ளிளுக்கவும் வெளிவிடவும் வேண்டும்?

அப்போதான் உள்ளிழுக்கப்படும் காற்றில் பிராணவாயு கூடுதலாக இருக்கும்.

எதற்காகப் பிராணவாயு கூடுதலாக இருக்கவேண்டும்? அப்போதுதான் இதயத்திலிருந்து சுத்திகரிப்புக்காக நுரையீரலுக்கு வரும் ரத்தம் உடனுக்குடன் பிராணவாயுமூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தடையில்லாமல் மீண்டும் இதயத்துக்கும் அதைத் தொடர்ந்து உடல் முழுவதும் வேகமாக எடுத்துச் செல்லப்படும்.

அப்படி வேகமாக எடுத்துச் செல்லாவிட்டால் என்ன ஆகும்? அதற்காகக் காத்திருக்கும் உடல் கட்டமைப்புகளில் இருக்கும் உட்கூறுகள் தங்களின் இயக்கத்துக்குத் தேவை யான சுத்த ரத்தம் உடன் கிடைக்காத நிலையில் திணறவேண்டி வரும்.

அது சரிப்படுமா? சாதரணமாகவே திணறல் ஏற்பட்டால் கடுமையாக உழைக்கும்போது, விளையாடும்போது, ஒடும்போது, படி ஏறும்போதெல்லாம் அதிகசக்தி தேவைப்படுவதால் அதிக ரத்த ஒட்டம் தேவைப்படுமே அதற்கு என்ன செய்வது?

அதற்குத்தான் பயிற்சியின்மூலம் நிறையக் காற்றை உள்ளிழுக்கவும் அதை நுரையீரலில் வைத்து சுத்திகரித்து உடனுக்குடன் தேவைக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் அனுப்பப் பயிற்சி மேற்கொள்வது.

அந்தப் பயிற்சியின்போது என்ன ஆகிறது?

சாதாரணமாக அதிகப்படியான வேலையோ விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கமோ இல்லாதவர்களுக்கு நிறைய பிராணவாயு தேவைப்படாததால் காற்றிலிருந்து பிராணவாயுவைப் பிரித்தெடுக்கும் பணி நுரையீரலில் அதிகமாக நடக்காததால் அந்தப் பணி நடப்பதற்கான நுண்ணறைகள் குறைவான அளவே இயங்கு நிலையில் இருக்கும். மற்றவை எல்லாம் சுருங்கியோ அல்லது வேறு சிலவற்றால் அடைபட்டோ இருக்கும்.

அந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் வேலை செய்தாலோ மாடிப்படிகள் ஏறினாலோ கொஞ்சதூரம் ஓடமுயன்றாலோ வேகமாக நடந்தால்கூட வியர்த்து விறுவிறுத்து மூச்சிரைக்க ஆரம்பித்துவிடும். காரணம் அந்த கூடுதல் வேலைக்குத் தேவையான அளவு கூடுதல் ரத்த சுத்திகரிப்புப் பணி நுரையீரலில் நடக்க முடியவில்லை என்பதுதான் காரணம்.

இப்போது ஏன் மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அறிந்து கொண்டோமல்லவா?

அதை எப்படிச் செய்வது?

இந்த இடத்தில் ஒரு சிக்கல் உள்ளது. ஆதாவது இந்தத் துறையில் உள்ள யாராவது ஒருவரைக் கேட்டால் அவர் சொல்வதைப் பின்பற்றுவது அப்போதைக்கு எளிதாகத் தெரியும் ஆனால் பின்னால் அதைப் பெரும்பாலோர் செய்யமாட்டோம்.

காரணம் மூச்சுப்பயிற்சிக்கென்றே சொல்லப்பட்டிருக்கும் சில பல முறைகளைச் சொல்வார்.

நிச்சயம் பிராணாயாமத்தைச் சொல்வார். பிராணாயாமம் என்பது ராஜயோகம் கற்றுக்கொள்பவர்கள் அதன் எட்டுப்படிகளில் நான்காவது படியாக பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி வருகிறது. அதை அவர்கள் முழுமையாகப் பயின்றால்தான் அடுத்தடுத்த படிகள் வழியாக சமாதி நிலை என்னும் உச்ச நிலைக்குச் செல்ல முடியும்.

அதற்காக மூச்சை எப்படி இழுக்கவேண்டும், எப்படி விடவேண்டும், இரண்டு நாசிகளையும் மாற்றிமாற்றி எப்படிச் செய்யவேண்டும் உள்ளிளுப்பது, உள்ளே அடக்கி நிறுத்துவது, வெளியே விடுவது, வெளியில் நிறுத்துவது இப்படிப்பட்ட நிலைகளை எப்படிக் கையாள்வது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை வினாடிகள் எடுத்துக்கொள்வது, அந்த நேரத்தைப் படிப்படியாக எந்ந அளவு உயர்த்துவது போன்ற பலவிதமான முறைகளில் பயிற்சியைப் பெறவேண்டும்.

இதுவெல்லாம் சாதாரண வாழ்க்கை வாழ்பவருக்கு நடைமுறை சாத்தியமானது அல்ல. நிறையப் பேரைப் பார்க்கலாம். ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து மூச்சுப் பயிற்சிக்குப் போவார்கள். போகும் வரை நான் யோகா வகுப்புக்குப் போகிறேன் என்று பெருமையாகச் சொல்வதைத் தவிர அதன்படி நடப்பவர் ஒரு சதவிகிதம்கூடப் பார்க்கமுடியாது.அதனால் என்ன பயன்?

ஆகையால் மூச்சுப் பயிற்சியால் என்ன பயனோ அதனைமட்டும் அடைவதற்காக நாம் சில எளிய முளைகளைக் கையாளலாம்.

ஆதாவது கீழே ஒரு விரிப்பின்மேல் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டோ அல்லது பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டோ ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பயிற்சியைத் துவங்கவேண்டும். உடம்பை வளைக்காமல் நேராக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குப் பக்கத்தில் சுவற்றில் ஒரு கடிகாரம் இருப்பது நல்லது. கீழே தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில்கூட நேராக நிமிர்ந்து வசதியாக உட்கார்ந்து கொள்ளலாம்.

அதன்பின் ஒரு பத்துத் தடவை முடிந்த வரை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவேண்டும். சுவாசம் சீரானதும் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளிழுக்கத் துவங்கும்போதும் சுவர்க்கடிகாரத்தில் ஒலிக்கும் வினாடிமுள் நகரும் சப்தத்தை எண்ணிக்கொள்ளவேண்டும்.

எத்தனை வினாடிகள் உள்ளிழுப்பதற்கு ஆகிறது என்று எண்ணிக்கொண்டு உள்ளிழுக்க முடியவில்லை என்றால் உடனே வெளிவிடத் துவங்க வேண்டும். வெளிவிடும் நேரம் எவ்வளவு என்பதையும் கணக்கிட்டுக்கொண்டு வெளிவிட முடியவில்லை என்றால் உடனே உள்ளிழுக்கவேண்டும்.

உள்ளிழுப்பதைவிட வெளிவிடுவதற்குக் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகும். உள்ளிழுக்கும் நேரமும் வெளிவிடும் நேரமும் சேர்ந்ததுதான் ஒரு மூச்சுக்கான நேரம்.

ஒரே மாதிரி நேரக் கணக்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூச்சு விட்ட பின்பு மிகவும் எளிதாக இருந்தால் மூச்சின் நேரத்ததை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விநாடிகள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதை ஒரே நாளில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக எப்போது முடியுமோ அப்போது உயர்த்திக் கொள்ளலாம். மூச்சுத் திணறாத அளவு எந்த அளவு வேண்டுமானாலும் நேரத்தைக் கூட்டிக்கொண்டே கொள்ளலாம்.

இந்தப் பயிற்சியின் காரணமாக நுரையீரலின் காற்றை உள்ளிழுக்கும் திறனும் அதன்மூலம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பணிக்காகப் பிராணவாயுவை அளிக்கும் திறனும் அதிகரிக்கின்றது. காரணம் அதுவரை நுரையீரலின் திறக்காத அறைகளெல்லாம் திறக்கிறது. அங்கு இதற்கு முன் நடக்காத வேலைகள் எல்லாம் நடக்கிறது. அவ்வளவே!

இந்தப் பயிற்சிக்கு சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. கெட்ட பழக்கங்கள் இல்லாமல் உடலைத் தூய்மையாக வைத்திருக்குமளவு இதன் பயன் கூடுதலாக இருக்கும்.

இந்தப் பயிற்சியினால் இதயத்துக்கும் ஓரளவு பயிற்சி கிடைக்கும்...

எவ்வளவு பெரிய சிறுநீரக கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம் பழம்...


https://youtu.be/1dscIgWzwJ4

Subscribe The Channel For More Tips...

ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெருங்காப்பியங்கள்...


சிலப்பதிகாரம்: சிலம்பு என்பது மகளிர்அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு)

மணிமேகலை: ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இக்காவியம் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு)..

குண்டலகேசி: குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல்அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு)..

வளையாபதி:  வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)..

சீவகசிந்தாமணி:  சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)...

கார்பரேட் வியாபார இரகசியம்...


கறிவேப்பிலை ஆச்சரியமூட்டும் தகவல்கள்...


கறிவேப்பிலை இருவகைப்படும். நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக ்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.

என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட...

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய...

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் பாட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்...

திமுக வுக்கு செந்தில் பாலாஜியை அனுப்பி வைத்தது யார் தெரியுமா? அம்பலப்படுத்திய டிடிவி அணி நிர்வாகி...


https://youtu.be/QigCR1foM_s

Subscribe The Channel For More News...

தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம்...


தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம்..

மொழி என்பது மனித வளர்ச்சியின் விரிவில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. ஆதிமனிதன் தன்மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றைய மனிதர்களுடன் சைகையால் பரிமாறிக் கொண்டான். அதனால் சைகைமொழி பிறந்தது. சைகைமொழியும் புரியாதவர்களுக்கு தனது எண்ணக் கருத்துக்களை விளக்குவதற்கு உருவங்களைக் கீறியே புரியவைத்தான்.

அதனால் உலகிலுள்ள பண்டைய மொழிகளின் எழுத்துக்கள் யாவையுமே உருவங்களால் கீறிய படங்களிலிருந்தே முகிழ்ந்த வையாகும். பண்டைய தமிழரும் தமது எண்ணங்களை உருவங்களாகவே எழுதினர். தமிழ் இலக்கணநூலான “யாப்பெருங்கல விருத்தியும்” படவெழுத்தை அதாவது உருவெழுத்தைப் பற்றிக் கூறுகின்றது.

பண்டைய தமிழர் எழுதிய உருவங்களைக் கொண்டு அவற்றின் பண்பு கெடாது சங்ககாலத்திற்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் எழுத்தின் வரிவடிவங்களை உருவாக்கினர். அவ்வரிவடிவங்கள் அவர்களின் எண்ணக் கருத்துக்களை மிகஇலகுவாக எழுத உதவின.

அந்த வரிவடிவங்கள் ஒலிவடிவத்தையும் பெற்றிருந்தன. சங்ககாலப்புலவர்கள் இந்த ஒலிவடிவத்திற்கு இந்த வரிவடிவம் என்று அவ்வரிவடிவங்களை வரையறுத்தனர். அதன் காரணமாக அந்த வரியெழுத்துக்களை ஒலிஎழுத்துக்கள் என்றும் நம் முன்னோர்கள் அழைத்திருக்கின்றனர்.

அவ்வுண்மையை கி.பி 13ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட நன்னூல் காண்டிகையுரை எனும் தமிழ்மொழி இலக்கணநூல் “மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து” எனச்சொல்வதால் நாம் அறியலாம். இதிலே வரும் “அணுத்திரள் ஒலி எழுத்து” எனும் சொற்பிரயோகம் கிடைத்தற்கரியதொன்றாகும்.

இந்த நன்னூற்சூத்திரம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பிற்கு விஞ்ஞான முறையில் எமக்கு விளக்கம் தருகின்றது. அதாவது தமிழ் எழுத்துக்களின் ஒலிவடிவம் உண்டாக அணுத்திரள்களின் ஒலியே முதற்காரணம் என்கிறது. தமிழருக்கு அறிவியல் தெரியுமா? எனக்கேட்கும் தமிழர்கள் கொஞ்சம் நிதானமாக இச்சூத்திரத்தை படித்து அறிதல் நன்று.

இடிமுழக்கம், பெய்யும்மழை, வீசும்காற்று, சீறும் பாம்பு, கூவும்குயிலென உலகில் எத்தனையோ வகையான ஒலிகள் இருக்கின்றன. விஞ்ஞான ரீதியாகப் பார்ப்போமேயானால் இந்த எல்லாவித ஒலிகளையும் நாம் வேறுபடுத்திக் கேட்பதற்கு அணுத்திரள்களே காரணமாகும்.

காற்றில் ஏற்படுத்தப்படும் அதிர்வின் போது அணுத்திரள்களின் அசைவினால் ஒலியலைகள் தோன்றுகின்றன. இந்த ஒலியலைகளில் உருவாகும் மிகநுண்ணிய வித்தியாசங்களால் நாம் வெவ்வேறுவகையான ஒலிகளைக் கேட்க முடிகின்றது. மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒலிவேறுபாட்டிற்கு முக்கிய காரணமாயிருப்பது அணுத்திரள்களேயாகும்.

மேலே குறிப்பிட்டவை போன்ற இயற்கை ஒலிகளோ அன்றேல் பட்டாசு வெடித்தல், கை தட்டல் போன்ற செயற்கை ஒலிகளோ இன்றும் அறிவியல் மூலம் மொழியாக்கப்படவில்லை.

நன்னூல் சொல்வது போல் மொழிக்கு முதற்காரணமாக இருப்பது எழுத்துக்களின் ஒலியே. அந்த எழுத்துக்களின் ஒலிக்குக் காரணம் அணுத்திரளே. அதாவது அணுக்கூட்டத்தின் சேர்க்கையால் எழுத்தின் ஒலி உண்டாகி அவற்றின் சேர்க்கையால் மொழி பிறக்கின்றது.

இந்த அறிவியல் கருத்தைச் சொல்லும் நன்னூலே, இன்னெரு சூத்திரத்தில் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என தமிழ் எழுத்தின் வடிவம் பற்றிக் கூறுகின்றது. பண்டைக்கால (தொல்லை) வடிவத்துடனேயே எழுத்துக்கள் யாவும் இருந்தன எனச் சொல்வதால் எழுத்துக்கு வடிவத்தைக் கொடுத்த அணுத்திரள் ஒலி எழுத்தும் பழைமையானது என்பது பெறப்படும்.

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களின் பிறப்பின் இயல்பை “உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலையி பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்றமைய….” எனக் கூறியுள்ளார். எழுத்துக்கள் யாவுமே தொப்பூழில் இருந்து உண்டாகும் காற்றில் தோன்றி தலையிலும் தொண்டையிலும் நெஞ்சிலும் நின்று பல், இதழ், அண்ணம், நாக்கு போன்ற உறுப்போடு உறுப்பு சேர்வதால் பிறக்குமாம். தொடர்ந்து உயிரெழுத்துக்களின் பிறப்புப்பற்றிக் கூறுமிடத்தில் “அவ்வழி பன்னீருயிரும் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலே சொன்னபடி அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ என்னும் பன்னிரெண்டு உயிரெழுத்தும் தொண்டையில் நின்ற காற்றால் ஒலியைப் பெறுகின்றதாம். இவ்விதம் தமிழ் எழுத்துக்களின் பிறப்பை ஒலிஎழுத்துக்களின் வாயிலாக மிகவிரிவாக தொல்காப்பியம் கூறுகின்றது.

ஒலியெழுத்து வரியெழுத்தாக மாறிய பின்னர் பல மாற்றங்களுக்கு உட்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. உதாரணமாக மலை என்பதைக் குறிக்கும் “ΛΛΛ” இந்த உருவெழுத்தானது இப்படி வரியெழுத்தாக மாறி பலப் பல நிலைகளைக் கடந்து வட்டெழுத்தாக வளர்ந்து இன்று நாம் எழுதும் “∆” என்னும் எழுத்தாக வந்துள்ளது.

குகைகளிலும் பாறைகளிலும் எழுதிவந்த உருவெழுத்தை காலப்போக்கில் தேவை கருதி களிமண் தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் எழுதினர். இப்படி களிமண்தட்டுகளிலும் மரப்பட்டைகளிலும் மாவுக்கல்லிலும் எழுதியவற்றை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வது மிகக்கடினமான காரியமாக இருந்தது. தமிழர்களின் கல்வியறிவு மேலும் மேலும் வளர எழுதுவதற்கான தேவையும் அதிகரித்தது. அத்துடன் கல்வியறிவு அரசன் தொடக்கம் சாதாரண குடிமகன் வரை பெரும் நகரமாயினும் குக்கிராமமாயினும் எங்குமே பரவியிருந்தது. இந்த உண்மையை சங்ககாலப் புலவர்கள் பாடிய சங்கப்பாடல்களால் அறியலாம்.

இவ்வாறு தமிழர்கள் கல்வியில் மிகஉன்னத நிலை அடைந்ததால் தாம் எழுதியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சங்கப் புலவர்களின் அவைக்கும், அரசசபைகளுக்கும் எடுத்துச்சென்று பரிசுபெற ஏதுவாக பனை ஓலையில் எழுதத் தொடங்கினர். நாம் புத்தகங்களை எடுத்துச் செல்வது போல் அவர்கள் ஓலைச் சுவடிகளை எடுத்துச் சென்றார்கள்.

களிமண்தட்டு, செம்புத்தகடு, போன்றவற்றில் கோணல்களாகவும் சதுரங்களாகவும் எழுதிய வரியெழுத்தை பனை யோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது ஓலை கிழிந்தது. பனைஓலை மிக இலகுவாகக் கிடைத்தபோதும் அதில் எழுதுவது மிகக்கடினமாக இருப்பதைக் கண்டனர்.

எழுதப்படும் பொருளைப் பொறுத்தும் எழுத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டனர். பனையோலையில் எழுதுவதற்கு ஏற்றவாறு எழுத்தை மாற்றி அமைத்தனர். அப்படி அவர்கள் மாற்றியமைத்த எழுத்தை நாம் வட்டெழுத்து என அழைக்கின்றோம். பண்டைய தமிழர்கள் அவ்எழுத்தை கி பி 2ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை எழுதி வந்துள்ளனர். அதற்கான கல்வெட்டாதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. பண்டைய நாணயங்கள் நடுக்கற்கள், பானையோடுகள், ஏட்டுச்சுவடிகள், கோயிற்சுவர்கள் யாவற்றிலும் இவ்வட்டெழுத்து காணப்படுகின்றது.

கிரே என்வர் மாலைதீவின் வட்டெழுத்தை பண்டைய தமிழரின் வட்டெழுத்தை தழுவிய அல்லது சிறிது மாற்றியமைக்கப்பட்ட எழுத்து எனக்கூறியுள்ளார்.

பண்டைய தமிழ் வட்டெழுத்தின் தாக்கத்தை மாலைதீவு மட்டும் அல்லாமல் பர்மா, கம்போடியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, யாவா போன்ற உலகின் பல நாடுகளின் கல்வெட்டுகளிலும் காணலாம்.

வட்டெழுத்தின் காலத்திற்கு முன்பிருந்தே சங்கத்தமிழர் தாம் எழுதிய எழுத்தை இரண்டு வகையாகப் பிரித்து பெயரிட்டு அழைத்தனர்

1. கோலெழுத்து
2. கண்ணெழுத்து.

கோலால் எழுதிய எழுத்தை கோலெழுத்து என்றனர். அதாவது வண்ணமையில் தோய்த்த தூரிகை, எழுதுகோல் போன்றவற்றைக் கொண்டு துணியின் மேலோ தோலின் மேலோ எழுதுவதை கோலெழுத்து என்றழைத்தனர்.

இரண்டாயிர வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எழுதுகோல் பாவித்து எழுதி வந்திருக்கிறார்கள் என்பதை “எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல்” எனும் திருக்குறள் அடி எமக்குச் சொல்கிறது. மையைத் தொட்டு எழுதும் பேனாவை நாமும் எழுதுகோல் என்றுதானே அழைக்கிறோம்.

கோலால் மையைத்தொட்டு எழுதும் பொருளின் மேற்பரப்பில் எழுதாது அதன் மேற்பரப்பை உட்குழிந்து எழுதிய எழுத்தே கண்ணெழுத்து. (கண் என்பதற்கு குழி என்ற கருத்தும் இருக்கின்றது.)

ஊருக்குள் புதிதாக வருபவர்கள் கண்ணெழுத்தால் எழுதிய தமது பெயர் பொறித்த பொதிகளைக் கொண்டு திரிவார்கள் என்றும் கண்ணெழுத்தை எழுதியவர்களை கண்ணெழுத்தாளர் எனவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. “வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் எழுதுகிறோம் தானே.. அதுபோல் அன்றும் எழுதியிருக்கிறார்கள்...

தூத்துக்குடி மக்களே பாஜக வை நினைவில் கொள்ளுங்கள்...


மனமும் நோயும்...


ஒரு கடிகாரத்தை உருவாக்கியவன் அதன் செயல்பாடுகளை நன்கு அறிவான். அவனால் எப்போதும் அதை பிரிக்கவோ சேர்க்கவோ சரி செய்யவோ முடியும். ஏனெனில் அதைப் பற்றிய முழு அறிவும் அவனிடம் உள்ளது.

அதே போல் இந்த உடலை உருவாக்கிய முடிவில்லா பேரறிவுக்கும் அனைத்து செயல்பாடுகளும் தெரியும். ஆழ்மனத்தில் இந்த உடலை பற்றிய அனைத்து அறிவும் உள்ளது.

நீங்கள் உறங்கும் போது உங்களை உயிரோடு வைத்துள்ளதும், சுவாசிக்க செய்வதும், இதயத்தை இயங்க செய்வதும் இந்த ஆழ்மன அறிவு தான்.

வெளிமனம் உண்மையென நம்பும் அனைத்தும் ஆழ்மனத்தில் பதியும். ஆழ்மனத்தில் பதிந்த அனைத்தும் உங்கள் அனுபவத்தில் வரும்.

உங்களின் உணர்வுகளுக்கு ஒத்தவாறே உங்கள் உடல் செயல்படுகிறது. நோய்க்கான காரணம் உங்கள் மனதில் ஏற்படும் சமநிலை மாறுபாடே.

பயம் கோபம் பழியுணர்வு விரக்தி போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளே நோயாக வெளிப்படுகிறது. உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை உங்கள் நேர்மறையான எண்ணங்களால் முறியடிக்க முடியும் என்பதே நிதர்சனம்.

புறவுலகில் இருக்கும் கடவுளைவிட உன்னுள் இருக்கும் கடவுளே சிறந்தவர். ஆம் பிரமாண்டமான சக்தி உங்களுக்குள் தான் உள்ளது. அதை உங்கள் சிந்தனை சக்தியால் தட்டி எழுப்புங்கள்...

காபி தூளை வைத்து வடுக்கள், தழும்புகள் மறைய வைப்பது எப்படி.?


https://youtu.be/miAFHE7UkTE

Subscribe The Channel For More News...

இதுதான் உங்களது பாஜக சாதனைகளா...?


இந்த ஒவ்வொரு திட்டத்திலேயும் எவ்ளோ உயிர் பலி கொடுக்கப்பட்டது, எவ்ளோ பலி கொடுக்கப்பட போகிறது என்று தெரியுமா உங்களுக்கு...?

அதிமுகவில் இணைந்த நடிகர் விஜய்.... ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்ய முடிவு...


பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்...

நாடு முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. நடிகர், நடிகைகளை தங்களுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வைக்க, அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில், ஐந்துமுனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் தங்கள் நடிகர்களை இழுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் விஜய் கணேஷ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ரசிகன் என்பதால் அதிமுகவில் இணைந்ததாக விஜய் கூறியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வாக்கு சேகரிக்க, தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும் அவர் கூறினார்...

பாஜகவை கண்மூடித்தணமாக ஆதரிக்கும் நாடார் சங்கங்களின் பார்வைக்கு...


பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் களமிறங்கும் 28 பேர் கொண்ட நிபுணர்கள் குழு...


புகார் தெரிவிப்பவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதி, முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, வழக்கறிஞர்கள் அருள்மொழி, அஜிதா, சுதாராமலிங்கம், உளவியலாளர் ஷாலினி, பத்திரிகையாளர் கவின்மலர் உள்ளிட்ட 28 முக்கிய பெண் பிரமுகர்கள் உறுப்பினராக உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 9994368566 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல்களையும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்தக் குழுவில் யாரிடம் நம்பிக்கை கொண்டு பேச விரும்பினாலும், அதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். இந்த எண் பெண் ஒருவராலே கையாளப்படுகிறது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உளவியல் ரீதியாக மட்டுமில்லாமல், சட்ட உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் உதவத் தயாராக உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படுகிற தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் சி.பி.ஐ விசாரணையின்போது இவை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இந்தக் குழுவினரால்  சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசியில் அல்லாமல் நேரில் சந்திக்க விரும்புவோர் உசேன் இல்லம், எஸ். 7, கொண்டிசெட்டி தெரு, சென்னை - 600001 என்கிற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெற்றிருந்தால் அவர்களும் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சிறப்பான முன்னெடுப்பு...

உன்னை கேளிக்கையில் அடிமையாக்கி உனக்கான வளங்களை எல்லாம் கொள்ளையடிக்கிறான் வணிகன்...


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்...


இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்...

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள்.

இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்.

நான்கு கப் மூன்றாக குறையும்.

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....

சுவையாகவும் இருக்கும்...

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...