02/03/2018

நான் விஜயநகரப் பரம்பரை கன்னட ஈ.வே. ராமசாமி...


சட்ட எரிப்புப் போராட்டத்தின் போது பிரதமர் நேருவிற்கு தான் என்ன பரம்பரை என்பதை தெளிவாகவே கூறியுள்ளார்.

அது பின் வருமாறு...

இவர்களாவது பரம்பரை கருமாதி பண்ணி பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பம்..

என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா?

இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டிய, நாயக்கன் ஆண்டு இருக்கிறார்களே…

விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருக்கின்றானே?

இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது, ஆண்ட சின்னங்கள் இருக்கிறதே, மறுக்க முடியுமா?

ஆதாரம் : தமிழ்நாடு தமிழருக்கே, நூல் பக். 80...

சிண்டிகேட் வங்கி உட்பட 16 வங்கிகளில் 4000 கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு செய்துள்ளது கான்பூரை சேர்ந்த ஸ்ரீலட்சுமி காட்ஸின் லிமிடெட்...


சுவருடன் உரையாடு.. தியான யுக்தி...


உனது அறையில் உட்கார்ந்து கொண்டு தனிமையில் பேசு. நீ பேசுவதை கவனிக்க யாரும் அங்கிருக்க தேவையில்லை.

உண்மையில் யார் கவனிக்கிறார்கள் ?

நீ சுவருடன் பேசலாம், அது இன்னும் அதிக மனித்தன்மையுடையதாக இருக்கும்.

ஏனெனில் நீ யாருக்கும் எந்த பிரச்னையையும் உருவாக்கப் போவதில்லை. நீ யாரையும் கொடுமைப்படுத்துவதில்லை, நீ யாருக்கும் சலிப்பை ஏற்படுத்துவதில்லை.

ஆனால் அமுக்கி வைக்காதே. அடக்கி வைத்தல் உன்னுள் ஒரு சுமையை ஏற்படுத்தும். சுவரின் எதிரே உட்கார்ந்து நல்லதொரு உரையாடலை செய்.

ஆரம்பத்தில் அது சிறிதளவு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், ஆனால் அதை அதிக அளவு செய்ய செய்ய அதில் உள்ள அழகை உன்னால் பார்க்க இயலும். அதில் குறைந்த அளவு வன்முறையே உள்ளது. அது யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை, ஆனால் அது அதே வழியில் அதே வேலையை செய்கிறது. நீ சுமை குறைந்ததை உணர்கிறாய்.

சுவருடன் நடக்கும் ஒரு நீண்ட பேச்சுக்குப் பின் நீ மிகமிக தளர்வாக உணர்கிறாய். உண்மையில் ஒவ்வொருவரும் அப்படி நடக்க விரும்புகின்றனர்.

மக்கள் சுவருடன் உரையாட ஆரம்பித்துவிட்டால் இந்த உலகமே இன்னும் சிறப்பானதாகவும் அதிக அமைதியானதாகவும் இருக்கும்.

முயற்சி செய்து பார். இது ஒரு ஆழமான தியானமாகும். சுவர் கவனிப்பதில்லை என்று மிகவும் நன்றாக தெரியும், ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்பதால் இது ஒரு நல்ல தியானமாகும்...

மத்திய அரசு விருது பெற்ற ஸ்ரீதேவிக்கு இந்திய கொடி போர்த்தியது சரியென்று சொல்லும் பாஜக பத்தாள்கள் இப்போது பதில் சொல்லுங்கள்...


கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க 14 நாள் போலீஸ் காவல் தேவை - நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்...


நேற்று முழுவதும், கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் இருந்ததால் விசாரிக்க முடியவில்லை - சிபிஐ வாதம்...

கனடா பிரதமர் ஜஸ்டின் அவர்களை ஏன் தமிழினம் கொண்டாடுகிறது என்று கேட்பவர்களுக்கு...


வெளிநாடுகளில் பாலைவனங்களிலும் விளைச்சலுக்கு உதவாத வறண்ட நிலங்களிலும் மட்டுமே மீத்தேன் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்...


நம் நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக காவு வாங்கப்படும் நெடுவாசல் நிலத்தின் பசுமையை சென்று பாருங்கள்...

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி அமெரிக்கா கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சி...


கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான CBI யின் FIR...



சிதம்பரத்தின் சொத்து.. கண்ணை கட்டுதே...

சென்னையில் 12 வீடுகள், 40 மால்கள் , 16 சினிமா தியேட்டர்கள் , 3 சபாக்கள்..

தமிழ்நாட்டில் 300 ஏக்கர் நிலங்கள்..

நாடு முழுவதிலும் உள்ள 500 வாசன் கண் மருத்துவமனைகள்..

ராஜஸ்தானில் 2000 ஆம்புலன்ஸுகள்..

பிரிட்டனில் 88 ஏக்கர்..

ஆப்பிரிக்காவில் 3 திராட்சைத் தோட்டம் + குதிரைப் பண்ணைகள்..

இலங்கையில் 3 ரிசார்ட்கள்..

இலங்கையில் உள்ள பிரபலமான சுற்றுலா பொழுதுபோக்கு நிறுவனமான... 'லங்கா பார்ட்சூன் ரெசிடன்ஸ்'ன் பெரும்பாலான பங்குகளை கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் வாங்கியுள்ளது.

(இலங்கை சொத்துக்கள் அனைத்தும் ஈழ இனப்படுகொலை நடத்த உதவியதற்காக சிதம்பரத்துக்கு ராஜபக்சேவால் அன்பளிப்பாக தரப்பட்டது)..

சிங்கப்பூர், மலேசியா & தாய்லாந்தில் சொத்துக்கள்.

பார்சிலோனாவில் (ஸ்பெயின்) 4 ஏக்கரில் 11 டென்னிஸ் கோர்ட்டுகளோடு டென்னிஸ் அகடெமி.

இதேபோல கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிதிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து... சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக் தொடர்பில் பங்கேற்கும் ஒரு அணியையும் விலைக்கு வாங்கியுள்ளது.

துபாய், பிரான்ஸ் ல நிறைய்ய்ய முதலீடுகள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு...

பல நூறு கோடி, பல ஆயிரம் கோடி அல்ல பல லட்சம் கோடி..

மொத்தம் 14 நாடுகளில் - லண்டன், துபாய், சவுத் ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவு, பிரான்ஸ், அமெரிக்கா, சுவிசர்லாந்து, கிரீஸ், ஸ்பெயின்..... முதலிய நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடாக பணம் முதலீடு செய்துள்ளார்.

இந்த முதலீடுகள் அனைத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகே நடைபெற்றுள்ளது

இங்கிலாந்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் பவுன்ட் மதிப்பிலான சொத்து... கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மூலம் வாங்கப் பட்டுள்ளது.

இதே போல துபையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்... 'டெசர்ட் டியூன்ஸ் லிமிடெட்', `ஃபேல் துபை எப்.எக்ஸ். எல்எல்சி' நிறுவனங்களும்... கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.

கார்த்தி சிதம்பரத்தின் சிங்கப்பூர் நிறுவனம் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து... மலேசியாவில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும்... தாய்லாந்து நாட்டில் 16 நிலங்களை வாங்கியிருப்பதும்... அமலாக்கத் துறை கைப்பற்றிய ஆவனங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் 'அட்வான்டேஜ் ஸ்ட்ரடிஜிக் கன்சல்டிங்' நிறுவனத்தின் மூலமே ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்தின் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பணியாற்றிய 2006 முதல் 2014 ஆண்டு வரையிலான காலக்கட்டத்திலேயே
கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உங்களுக்கு வேண்டுமானால் சிபிஐயிடம் கேட்டு தகவலை
பெற்றுக் கொள்ளலாம்...

இவையனைத்தும் உண்மையான தகவல்களேயாகும். கேட்டால் நாங்கள் பிறக்கும் போதே  'அரச குடும்பம்'  என்பான் சிதம்பரம்...

சிரியா போரின் பிண்ணனி பற்றி என்னால் இயன்றவரை எளிமையாக கூறியுள்ளேன்...


பாஜக வின் தேசப்பத்தி சாதனைகள்...


நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து பேரணி செல்ல முயன்ற "மதுரை" மாணவர்கள் பலவந்தமாக கைது செய்யப்பட்டனர்...


ஹைட்ரோகார்பன் - மீத்தேன் திட்டம் எதிர்த்து பேரணி செல்ல துவங்கிய மதுரை மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50 பேரை காவல்துறை தடுத்தது. வலுக்கட்டாயமாக அனைவரையும் இழுத்து கைது செய்து இருக்கிறது. அதில் இரண்டு மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட சட்டம், பொறியியல், கலை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் கைது செய்து மதுரை கே.கே.நகரில் உள்ள வேலாயுதம் நாடார் மஹாலில் அடைந்துள்ளது காவல்துறை. போராட்டம் வெல்லட்டும். பரவட்டும்.

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் மூடும் வரை போராடுவோம்....

உரிமைக்கோரலை தேச விரோதம் என பொய்ச்சாயம் பூசி தான் ஈழத்தை அழித்தார்கள்...


இங்கும் அதே தான் நடக்கின்றது..

நம் உரிமையைக் கேட்டால் அவர்களால் நாம் தேச விரோதி என அழைக்கப்படுகிறோம்..

இங்கு எத்தனை தேச விரோதிகள் இருக்கின்றனர்..?

ஸ்காட் கார்னி என்பவர் பல வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் நடக்கும் எலும்பு வர்த்தகத்தை ரெட் மார்கெட் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்...


நோக்குவர்மம்...


நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்புதான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.

நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவுதான்.

அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.

இதுக்கு ஒரு குட்டி உதாரணம்..

உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.

இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).

பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.

புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.
நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள்.

அந்த தெளிவு உங்களை கூட்டி செல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும்.

புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது. தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும்.

நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.

இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...

காவல்துறையின் சீரிய பணியால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - எடப்பாடி பழனிசாமி...


கோவில்பட்டி அருகே பிறந்து 5மணி நேரம் ஆன பச்சிளம் குழந்தை சாக்குமூட்டையுடன் குப்பையில் வீச்சு...


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே குப்பையில் சாக்குமூட்டையில் கிடந்த பிறந்து 5மணி ஆன பச்சிளம் பெண் குழந்தையினை அப்பகுதி மக்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து யார் குழந்தை ? குழந்தையை வீசி சென்றது யார் என்று குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

நண்பர்களே அப்படியே இந்த இணைப்பிலுள்ள செய்தியையும் வாசித்துவிட்டு செல்லுங்கள்...


https://tamil.oneindia.com/news/international/syrian-women-forced-exchange-sex-uno-aid-312913.html

பாஜக மோடியால் அதிகரித்து வரும் தனியார்மயம், தாரளமயம் எதைக் குறிக்கின்றன...


தமிழக விபச்சார செய்தித்தாள்...


மக்களே.. கடந்த மூன்று நாட்களாக   சுதந்திரந்த போராட்ட தியாகி ஸ்ரீதேவி மரணத்தை தலைப்பு செய்தியாக போட்டு மிகுந்த வருத்ததில் இருக்கும் தினதந்திக்கு தங்கள் ஆழ்ந்த இரங்களை தெரிவியுங்கள்...

ரொம்ப நல்லாவே ஒழிங்கடா, இதல்லாம் பாக்க கூடாதுனு தான் அந்த அம்மா செத்து போச்சு போல...


கன்னடன் கமலின் கொள்ளை.. தமிழின அழிப்பே...


இந்த பதிவையும் எதிர்ப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விருப்பப்படுகிறேன்..

தஞ்சாவூர் என்ற இடம் தென் இந்தியாவிற்கே நெல்களை ஆண்டு முழுவதும் வழங்கக் கொண்டு இருந்தது..

அதனால் உங்கள் கொள்கைகளும், மேம்பாடும் கிராமங்களுக்கு தேவையில்லை...

பண்டைய நாகரிகங்கள்...


கீழே உள்ள குறிப்புகளின் அடிப்படையில், நாம் யாரைப் பற்றி பேசப்போகிறோம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

பல மொழிகள் பேசும், பலவகையான வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள் இந்த மக்கள். இந்தியா, எகிப்து போன்ற நாடுகளிடம் இந்தக் கலாசாரத்தின் தாக்கம் இருக்கிறது.

சுமார் 10,600 வருடங்களுக்கு முன்பாகவே, வீடுகளில் செடி, கொடி, மரங்கள், மிருகங்கள் வளர்த்தார்கள்.

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மிருகங்களைத் தனியாக வளர்ப்பதிலிருந்து முன்னேறி, ஆட்டு, மாட்டு மந்தைகளைப் பராமரித்தார்கள்.

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பாகவே, மீன் பிடிக்கும் வழக்கம் இருந்தது.
பேச்சு மொழி, ‘கல்தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த’ மொழி. ஆனால், எழுத்து வடிவ மொழி சுமார் 6200 வருடங்களுக்கு முன்பாகவே நடைமுறையில் இருந்தது.கி.மு. 6000ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்க்கையில் கணிதம் அங்கம் வகித்தது. நிலங்களை அளப்பதற்காகப் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டது. 60 இலக்கங்கள் (Numerals) இருந்தன.

கண்டறிய முடிந்ததா? இன்னும் ஒரு க்ளூ. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தனை பிரமாண்ட முன்னேற்றங்களைக் கண்டுவிட்டதால் உலகின் எல்லா நாகரிகங்களையும்விட, இந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கை முறைதான் முந்தையது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இதனால், நாகரிகத்தின் தொட்டில் என்றும் இவர்கள் வாழ்ந்த பிரதேசம் அழைக்கப்படுகிறது.

ஆம், நாம் இங்கே முதலில் பார்க்கப்போவது மெசபடோமியா. இங்கே வாழ்ந்த மக்கள் சுமேரியர்கள்.

பூகோளம்...

இன்றைய இராக் நாட்டோடு சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் மெசபடோமியா என்றால் இரண்டு நதிகளுக்கு நடுவே உள்ள இடம் என்று பொருள். அந்த இரு நதிகள், யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ்.

வடக்குப் பாகம் மலைகளும் சமவெளிகளும் இருந்தன. பருவ மழை தவறாமல் பெய்ய, இந்த நில அமைப்பே காரணம். இதனால், காலம் பொய்த்தாலும், இந்த நதிகள் பொய்க்கவில்லை. வட பகுதியான மெசபடோமியா பொன் விளையும் பூமியாக இருந்தது.

உலகத்தில் எல்லா நாகரிகங்களும் தோன்றுவதும் வளர்வதும் நதிக்கரைகளில்தாம். இதற்குக் காரணம் உண்டு. மனிதனின் அடிப்படைத் தேவை உணவு. வயிறு நிறைந்திருந்தால்தான் அவனால் வாழ்க்கையின் பிற அம்சங்களில் கவனம் செலுத்தமுடியும். இசை, இலக்கியம், விளையாட்டு என்னும் கலைகளில் ஈடுபட முடியும், கலைகளை வளர்க்கமுடியும். இந்த வளர்ச்சிதானே நாகரிகம்! மெசபடோமிய நாகரிக வளர்ச்சிக்கும் ஜீவநாதம் யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் ஆறுகள்தாம்.

முக்கிய மன்னர்கள்...

மெசபடோமியாவை மன்னர்கள் ஆண்டார்கள். இவர்களுள், முக்கியமானவர்கள் மூவர்...

1. கில்காமேஷ் (Gilgamesh)...

இவர் கி. மு 2600ல் வாழ்ந்தார். மெசபடோமியாவின் ஒரு பகுதியான உருக் (Uruk) என்கிற ஆற்றங்கரைப் பகுதியை 126 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் மறைந்து ஐந்து நூற்றாண்டுகளுக்குப்பின் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கில்காமேஷ் காவியம் என்று எழுதி வைத்தார்கள். உலகத்தின் மிகப் பழமையான இலக்கியப் படைப்பு இதுதான் என்பது அறிஞர்கள் கணிப்பு. இந்தக் காவியம் களிமண் பலகைகளில் 12 பாகங்களாக எழுதப்பட்டது. இந்த நூலின் பல பகுதிகள் கிடைத்துள்ளன. வீர சாகசம் நிறைந்தவராக, மனிதராகப் பிறந்த கடவுள் அவதாரமாக இந்தக் காவியம் கில்காமேஷை வர்ணிக்கிறது.

2. ஹம்முராபி (Hammurabi)...

இவர் கி. மு. 1792 ல், தன் பதினெட்டாம் வயதில், மெசபடோமியாவின் பகுதியான பாபிலோன் சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாகப் பதவியேற்றார். ஒன்றுபட்ட மெசபடோமியாவை உருவாக்கினார்.

அந்த நாட்களில் எது நியாயம், எது தவறு, எந்தக் குற்றங்கள் செய்தால் என்ன தண்டனைகள், என்பவை வரையறுக்கப்படவில்லை. இவற்றை ஒழுங்குபடுத்தியவர் ஹம்முராபி. 282 குற்றங்களும், ஒவ்வொன்றையும் செய்தால் என்னென்ன தண்டனை என்னும் விவரங்களும் பட்டியலிடப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் தெரிந்துகொள்வதற்காக, இவை 12 களிமண் பலகைகளில் எழுதப்பட்டு பிரம்மாண்டமான தூண்போன்ற அமைப்பில் பதிக்கப்பட்டன. இவை ஹம்முராபி சட்டங்கள் (Hammurabi Code) என்று அழைக்கப்படுகின்றன.

ஹம்முராபி சட்டங்கள் உள்ளடக்கியிருக்கும் அம்சங்கள் – மதம், ராணுவ சேவை, வியாபாரம், அடிமைகள், தொழிலாளர்களின் பொறுப்புகள் போன்றவை. இன்றைய சூழலில், சில சட்டங்கள் விநோதமாகத் தோன்றினாலும், அன்றைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பவை என்னும் கண்ணோட்டத்தில் நாம் இந்தச் சட்டங்களைப் பார்க்கவேண்டும்.

யாராவது இன்னொருவர் மேல் குற்றம் சாட்டினால், இருவரும் நதிக்கரைக்குப் போகவேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் நதியில் குதிக்கவேண்டும். மூழ்கினால், அவர் குற்றவாளி என்று அர்த்தம். அவருடைய மொத்த சொத்துக்களும் குற்றம் சாட்டியவருக்கு சொந்தம். தண்ணீரில் மூழ்காமல் தப்பித்தால், அவர் நிரபராதி. குற்றம் சாட்டியவருக்கு மரண தண்டனை. அவர் சொத்துகள் முழுக்க, பொய்க் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு அளிக்கப்படும்,

ஒரு வியாபாரி, வியாபாரத்தில் முதலீடு செய்ய, தரகரிடம் பணம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.இந்தப் பணம் நஷ்டமானால், அதைத் தரகர் வியாபாரிக்கு ஈடு கட்டவேண்டும்.

3. நெபுகாட்நேஸர் (Nebuchadrezzar II)...

கி. மு. 605 முதல் நாற்பது ஆண்டுகள் பாபிலோன் பகுதியை ஆண்டவர். சாலைகள் அமைத்தும், கால்வாய்கள் வெட்டியும், கோயில்களைப் புதுப்பித்தும், பல முன்னேற்றங்கள் செய்தவர். பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கு தோட்டம் இவருடைய உருவாக்கம்தான். கட்டடக் கலையில் மெசபடோமியரின் அற்புதமான திறமையைத் தொங்கு தோட்டம் பறை சாற்றுகிறது.

இது ஓர் அடுக்குத் தோட்டம். பெரிய பெரிய தூண்களை எழுப்பி அவற்றின்மேல் பல அடுக்குத் தளங்களை எழுப்பி ஒவ்வொரு அடுக்கிலும் தோட்டங்கள் போடப்பட்டன. செயின் பம்ப் (Chain Pump) என்கிற அமைப்பின் உதவியால் யூப்ரட்டீஸ் நதியின் தண்ணீர் தொங்கு தோட்டத்தின் உச்சிக்குக் கொண்டுபோகப்பட்டது. பின்னாளில் வந்த பூகம்பம் தொங்கு தோட்டத்தை அழித்துவிட்டது.

மத நம்பிக்கைகள்...

கில்காமேஷ் மன்னர், மூன்றில் இரண்டு பங்கு தெய்வம், மூன்றில் ஒரு பங்கு மனிதர் என்று கில்காமேஷ் காவியம் வர்ணிக்கிறது. மன்னர்களுக்கும், மக்களுக்கும் அதீதக் கடவுள் நம்பிக்கை இருந்தது.

உலகம் தட்டையான வடிவம் கொண்டதாக சுமேரியர்கள் நம்பினார்கள். பூவுலகுக்கு மேலே, கடவுள்கள் வாழும் சொர்க்க லோகம். பூவுலகையும், சொர்க்கத்தையும் சுற்றி வளைத்து நான்கு பக்கங்களிலும் கடல். இந்தக் கடலிருந்துதான் பிரபஞ்சம் உருவானது.

நிலம், நீர், காற்று, நெருப்பு , ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள்தாம் முதல் கடவுள்கள்.

இவர்களுள் வாயு பகவான் பிறரைவிட அதிக சக்தி வாய்ந்தவர். பஞ்ச பூதங்களுக்கு எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருந்தன. ஆரம்பத்தில் கடவுள்களை ஊருக்கு நடுவே பெரிய மேடைவைத்து வழிபட்டார்கள். இந்த மேடையைச் சுற்றிக் கட்டடம் எழுப்பினார்கள்.

கிமு 2200 – 500 இடைப்பட்ட காலத்தில் ஸிகுரட்கள் (Ziggurats) என்னும் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்பட்டன. ஸிகுரட் என்றால் கடவுளின் மலை என்று பொருள். இவை வெறும் கட்டங்களல்ல, அழகு கொஞ்சும் பிரம்மாண்டங்கள். கோட்டைபோல் களிமண் செங்கல்லாலும் உட்பக்கம் சுட்ட செங்கற்களாலும் உருவாக்கப்பட்டவை. சுற்றிலும் பிரமிட்போல் சரிந்த சுவர்கள், அவற்றில் ஏராளமான படிகள். கோவிலுக்குள் மேடைமேல் கடவுள் சிலை. பிரம்மாண்ட வடிவம், சிறப்பான கட்டமைப்பு, சுவர்களில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், சிற்பங்கள், உலோகங்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், பளபளப்பும் வழவழப்புமான தரை ஆகியவை ஸிகுரட்களின் சிறப்புகள்.

கோயில்கள் மத குருக்களால் பராமரிக்கப்பட்டன. சமூகத்தில் அதிக மரியாதை பெற்றவர்கள் மதகுருக்கள்தாம். மக்கள் மட்டுமல்ல, அரசர்களும் இந்தப் பூசாரிகளை ஆண்டவனின் மறுவடிவமாக நம்பினார்கள். மன்னர்களும் மக்களும், எல்லாப் பிரச்னைகளுக்கும் மத குருக்களை நாடினார்கள். அவர்கள் முடிவுதான் இறுதியானது. குருமார்களின் தேவைகளுக்கும் கோயுலின் பூஜை, நைவேத்தியச் செலவுகளுக்குமாக அரசாங்கம் எல்லாக் கோவில்களுக்கும் விவசாய நிலங்கள் அளித்தது. இவற்றைப் பராமரித்து, கோயில்களுக்குத் தேவையான செலவுகள் செய்து, மிச்சத்தை மதகுருக்கள் வைத்துக்கொள்ளலாம். கணிசமான வருமானம், சமூக அந்தஸ்து ஆகிய காரணங்களால், பூசாரி ஆவதற்கு எக்கச்சக்கப் போட்டி இருந்தது...

கன்னடன் கமலின் கொள்ளை.. தமிழின அழிப்பே...


திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்...


1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. இரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல் - 100 பாக்கள்
8. வைத்திய சூத்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூத்திரம் - 30 பாக்கள்
11. வாத சூத்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்

இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக் கிடைக்கிறது.

ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்...

தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலையின் மகத்துவம்...


ஆள் பாதி ஆடை பாதி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. ஒருவர் அணிந்திருக்கும் ஆடை அவரது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர். ஆடை என்பது ஒருவரை அடையாளம் காட்டுவதற்குரிய ஒன்று.

ஒருவர் அணிந்திருக்கும் ஆடையை அடிப்படையாகக் கொண்டு, அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர், எந்தச் சமயத்தைச் சார்ந்தவர், எத்தகைய தட்பவெப்ப நிலையில் வாழ்கின்றவர் என்பன போன்றவற்றை அறிய இயலும். அதோடு மட்டுமல்லாமல், ஒருவர் அணியும் ஆடையும் ஒருவரது பண்பாட்டை வெளிப்படுத்தும்.

வேட்டி : தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான ஆடையாகவுள்ள வேட்டி,  தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு  கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவது ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்பவர்கள் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிய முற்பட்டிருந்ததினால்  ஒன்றும் வியப்புக்குரியதல்ல. அந்த வகையில் தமிழர்களின் ஆடையாக வேட்டி அணிதல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வேட்டி அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் வேட்டியணிதல் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். தொல்காப்பியகாலம், சிலப்பதிகார காலத்தில் வேட்டி அணியும் வழக்கம் இருந்துள்ளது என்பர்.

சேலை : தமிழ்ப் பெண்கள் சேலை அணிவது, நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் ஒரு பழக்கம். இப்பழக்கத்தின் பின்புலம் தமிழர் பண்பாட்டின் ஒரு கூறு.

பொதுவாகக் குளிர் மிகுந்த பகுதிகளில் வாழ்பவர்கள், உடலின் பெரும் பகுதியையும் ஆடையால் போர்த்திக் கொள்வர். பூமத்திய ரேகைக்குப் பக்கத்திலிருப்பவர்கள் மிகவும் குறைந்த அளவு ஆடையையே அணிந்து கொள்வர். ஆனால், பூமத்திய ரேகைக்குப் பக்கத்து நிலத்தில் வாழும் தமிழர்கள் குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் உடலின் பெரும்பகுதியை மறைக்கும் சேலையை ஏன் அணியவேண்டும்?

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கும் தமிழ்ப் பெண்களிடம் எதிர்பார்க்கக் கூடிய பண்பு நலன்கள். இவை அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எதிர்பார்க்கப்படுபவை. அச்சமும், நாணமும் கொண்ட பெண், தான் அணியும் ஆடையின் வாயிலாகவும் அவற்றை வெளிப்படுத்துகிறாள். எனவே, தன் உடலின் பெரும்பகுதியையும் போர்த்தக் கூடிய ஆடையாகிய சேலையை அணிகிறாள். இது தமிழர் பண்பாட்டின் ஒரு கூறாகத் திகழ்கிறது...

பாஜக மோடியின் நண்பர் நீரவ் மோதி கலாட்டா...


எனக்கு பல நாடுகளில் வேலை இருப்பதால்.. தற்ப்போது இந்தியா வர முடியாது என்று சிபிஐக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் நிரவ் மோதி...

தமிழர்களே சிந்தியுங்கள் ? நீங்கள் நடத்தும் திருமணத்தில் புரோகித பார்ப்பான் சொல்லும் மந்திரத்தின் தமிழாக்கம் இதோ பாருங்கள் பின்பு பகுத்தறிவு பெறுங்கள்...


ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

மந்திரம்: உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா மஸேத்வா அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ!

பொருள்: விசுவாசு என்னும் கந்தர்வனே இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. உன்னை வணங்கி வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத் தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக.

மந்திரம்: உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வா வஸீந் நமஸ கீர்ப்பிரீடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜநுஷா தஸ்ய வித்தி

பொருள்: இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக. இந்தப் பெண்ணுக்குக் கணவன் இருக்கிறான் அல்லவா? விசுவாவசுவான உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பன் வீட்டிலிருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாதவளுமான வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. அந்த உன்னுடைய பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்பதை நீ அறிவாயாக.

விளக்கம்: கலியாணம் நடந்து நான்கு நாள்கள் தம்பதிகள் ஒரே படுக்கையில் படுக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அவர்கள் உடலுறவு கொள்ளக் கூடாது. நான்கு நாள் கழிந்த பிறகு மேற்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும். அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)

இனிமேலும் இந்த சாஸ்திரம் சடங்குகள் மற்றும் மந்திரங்கள் தேவையா தமிழர்களே சிந்தியுங்கள் ?

அது என்ன டா வந்து குடியேறிவர்கள் மட்டும் மதம், நாட்டுப்பற்று, மனிதநேயம் என்று மாநிலம் கடந்த விடயங்களை வலியுறுத்துகிறீர்கள்?



திருட்டு நாய்களா...

அதை போய் உங்கள் மாநிலத்தில் உன் இனத்தாரிடம் சொல்லுங்கடா வந்தேறிகளா..

பாஜக மோடியும் தமிழின அழிப்பு திட்டமும்...


காவிரி மேலாண்மை அமைக்க முடியாது - பாஜக...

தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர்களை தடுத்து.. அதன் மூலம் விவசாயத்தை அழித்து.. வரண்ட பூமியாக மாற்றி.. அதில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தி கொள்ளை அடிக்கவும்...

இதன் மூலம் தமிழினத்தை பாதி விரட்டியும்.. பாதியை அழித்து விடலாம்.. மீதியை எதாவது விபத்து ஏற்பட்டால் தானாக மொத்த தமிழினமும் அழிந்து விடும் எனும் திட்டத்தில் தான்...

உச்சநீதிமன்ற கொடுத்த தீர்ப்பை தடுத்து நிறுத்தியது.. பக்கத்து மாநிலத்தில் அணை கட்டவும் வைக்கிறது...

தமிழக பாஜக தலைவர்களோ.. பதவி, பணத்திற்காக தமிழ்நாட்டையும் தமிழனையும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்... விழித்தெழு தமிழா...

சிரியா நாட்டை பற்றி இணையத்தில் அதிகம் தேடியது தமிழர்களே...


இது சாதாரண விடயம் அல்ல தோழர்களே...

சினிமாக்காரியையும் ஒதுக்கித் தள்ளி உலக அரசியலை ஆராய்ந்த உன்னை இக்கணம் நான் நினைத்து பெரிதும் மகிழ்கிறேன்...

அத்தனை பேருக்கும் இவ்வெற்றி சமர்ப்பணம்...

ஆன்மிகம் ஒரு அறிவியல்...


இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம்...

ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும்.

சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த விஷ உயிர்கள் நமது உடலிலும் உடையிலும் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

இவைகளை உடனடியாக அப்புறப்படுத்தினால் தான் நமக்கு பாதிப்புகள் வராது.

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தால் நமக்கோ நம்மை தொடுகின்ற குழந்தைகளுக்கோ நிச்சயம் பாதிப்பு வரும்.

அதனால் தான் சாவுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு வேறொரு காரணமும் இருக்கிறது..

இறந்தவர் நமக்கு வேண்டப்பட்டவராக இருக்கலாம். நம் அன்பிற்கு பாத்திரமானவர்களாகவும் இருக்கலாம். அவர்களின் நிரந்தர பிரிவு நம் மனதை வாட்டி வதைக்கும். மனம் வாடும் போது உடலும் சோர்ந்து விடும்..

அந்த நேரத்தில் குளிர்ச்சையான நீர் உடலை தொடுவதினால் சிறிது மலர்ச்சி ஏற்பட்டு மனதிற்கு ஓரளவு தெம்பும், தைரியமும் கிடைக்கும்.

இந்த உண்மைகளை எல்லாம் நமது ஜனங்களிடம் வெட்ட வெளிச்சமாக சொன்னால் அசட்டை செய்து விடுவார்கள் என்று கருதி நமது முன்னோர்கள் ஆவிகளின் பெயரை சொல்லி குளிக்க வைத்தார்கள்.

நல்லதிற்காக பொய் சொன்னால் தப்பில்லை என்பது அவர்கள் கொள்கை...

பாஜக எச்ச. ராஜா சர்மா.. இப்போ சொல்லு டா.. யார் ஆன்டி இந்தியன்...


ஒரு தலைவரை ஒரு நாடே ஏற்று பல வருடங்களாக அவரை தலைவராக நேசிக்கின்ற போது, அமெரிக்காவிற்கு அதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா..?


ஒரு தலைவன் மக்களால் எந்த பிரச்சினைகளும் இல்லாமல் வளர்கிறான் என்றால் அந்த நாடும் வளர்கிறது என்று அர்த்தம்..

கியூபா உலக அரங்கில் தனியாக நின்றது..

தனியாக நின்றால் தான் அமெரிக்காவிற்கு பிடிக்காது அல்லவா..

வழக்கம் போல் கொல்ல முயற்சித்தது, முடியவில்லை...

தெலுங்கு திமுக கட்சிக்கு மாமா வேலை செய்வதற்கு எதற்கு உனக்கு எழுச்சி தமிழர் பட்டம்.. விசிக மானங்கெட்ட திருமா...


கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு முறை கூட தனித்து நிற்க நெஞ்சில் துணிவில்லை...

தமிழின எதிரிகளுடன் கட்டி பிடித்து கொஞ்சி பரிசு வாங்கிட்டு பிரியாணி எலும்பு துண்டு திண்ணுட்டு...

தமிழர் யாரும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே.. இறுதிவரை தெலுங்கர்களுக்கு மாமா வேலை செய்து.. சாதி சண்டை உருவாக்கி.. நீ மட்டும் சொத்து சேர்த்து வாழுற..

இந்த மானங்கெட்ட பொழப்புக்கு உனக்கு எழுச்சி தமிழர்  பட்டம் ஒரு கேடா..?

ஏர்செல் நிறுவனம் திவால் ஆனது , அதிகாரப்புர்வமாக அறிவிக்க ஏர்செல் நிறுவனம் National Companies Law Tribunal (NCLT) இடம் கோரிக்கை...


15500 கோடி கடன் ஏற்பட்டுள்ளதாக ஏர்செல் நிறுவனம் மனுவில் தகவல்...

ஏப்ரல் 15 நிறுவனம் மூடல்...

பிரபஞ்சம் இரகசியம்...


இந்த பிரபஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை அனைவரும் அறிவோம்.

ஒரு இரகசியத்தை இங்கே கூற போகிறேன்..

இதை நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி. நான் சொல்வது சத்தியம்.

ஆம் எனக்கு உங்களிடம் பொய் சொல்லி சன்மானம் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இந்த இயற்கை எனக்கு அருளியதை உங்களுக்கு நான் அருளுகிறேன் அவ்வளவே.

இதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

இங்கே உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு செடி கொடிகளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணர்வு உண்டு.

ஆம் நீங்கள் எதை மனதார நேசிக்கிறீர்களோ அது மட்டுமே உங்களிடம் தங்கும் உங்களுக்கு நிலைக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வைத்துக் கொள்வோம்...

இந்த பொருளை நீங்கள் உணர்வு பூர்வமாக அணுகும் போது அது உங்கள் நடத்தையை அறிந்து உங்கள் செயலுக்கு எதிர்வினை புரியும் என்று உங்களுக்கு தெரியுமா?

இதுதான் உண்மையிலும் உண்மை..

நீங்கள் உங்கள் இருசக்கர வாகனத்திடம் உணர்வு பூர்வமாக பேசுங்கள். எந்த சூழலிலும் என்னை விட்டுவிடாதே என்று அதனிடம் கூறுங்கள்.

சத்தியமாக அது உங்களை மிகப்பெரிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

ஆம் அதும் உணர்வு பூர்வமானதே.

அதற்கு உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தி உள்ளது.

இது உங்களை நிச்சயம் காப்பாற்றும்.

அதற்கு அறிவு உண்டு.

ஒவ்வொரு அணுவிற்கும் அறிவு உண்டு..

இதை நீங்கள் தயவுசெய்து கடை பிடியுங்கள்.

அது உங்களுக்கு நிச்சயம் செயல்விடை அளிக்கும்.

ஆம் ஒவ்வொரு பொருளையும் மனதார உணர்வு பூர்வமாக நீங்கள் அணுகினால் அது அழிந்தாவது உங்களை காப்பாற்றும்.

நீங்கள் மனதார உணர்வுபூர்வமாக நேசிக்கும் எந்த ஒரு பொருளும் உங்களை விட்டு சத்தியமாக போகாது.

மீறி போனாலும் அது உங்களை எந்த வழியிலாவது வந்தடையும்...

டாக்டர் உடையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த மனநோயாளி...


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மனநோயாளி டாக்டர் உடையணிந்து மருத்துவம் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது மருத்துவமனை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள அசட்டையை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை அடுத்த செங்கல்பட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை புற நோயாளிகளுக்கு மருத்துவ அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. அப்போது கழுத்தில் ஸ்டெத்தஸ்கோப் மற்றும் டாக்டர் அணியும் வெள்ளைநிற கோர்ட் அணிந்தபடி ஒரு பெண் வந்தார்.
சிகிச்சைக்காக வரிசையில் நின்றிருந்த நோயாளிகளை பார்த்து வரிசையாகவும் அமைதியாகவும் வரும்படி கூறினார். மருத்துவமனை ஊழியர்களை சரியான நேரத்துக்கு வரவேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஒரு சில நோயாளிகளை அவரே அழைத்து ஸ்டெத்தஸ்கோப் வைத்து செக்கப் செய்தார். அவரது செயலைப் பார்த்த ஊழியர்கள் புதியதாக வந்த பெண் டாக்டர் போல இருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனை ரூல்ஸ் தெரியாமல் இருக்கிறார். டிரான்ஸ்பரில் செங்கல்பட்டிற்கு வந்து இருப்பார் போல தெரிகிறது என்று நினைத்து இருந்தனர்.
அதில் சிலர் புது டாக்டரின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு மருத்துவமனை டீன் உஷா சதாசிவன், நிலைய துணை மருத்துவ அலுவலர் தீனதயாளன் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார். மருத்துவமனை டீனிடம், அந்த புது டாக்டர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கல்பட்டு டீன் அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று விசாரித்தார். அப்போதுதான் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் செங்கல்பட்டு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செங்கல்பட்டு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது டாக்டர் உடையில் வந்த பெண் ஷகீலா பாபி (33) என்பதும் அவர் மதுராந்தகம் அடுத்த மேற்கு செய்யூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவரது கணவர் விஜயகுமார் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்றவர்கள் என்பது தெரியவந்தது.

இவர் எம்எஸ்சி நர்சிங் படித்துவிட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களாக அவருக்கு ஆதரவு யாரும் இல்லாததால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர். செங்கல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மன நல காப்பகத்தில் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்...

விபச்சார ஊடகங்களும் உண்மைகளும்...


இங்கு மதம் என்பது யாராலும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை...


அனைத்து மதங்களும் ஒரே கருத்தை தான் காலத்திற்கேற்ற மாதிரி பல்வேறு கோணங்களில் கூறுகின்றன..

ஆனால் மனிதன் அதை எப்படி பார்க்கிறான் என்பது தான் இங்கு பிரச்சனை...

சாலையில் அப்பாவி இளைஞரை தாக்கிய விசிக கட்சியினர்.. பொதுமக்கள் தட்டிக் கேட்டதும் பயந்து ஓட்டம்...

கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, அடிதடி போன்ற சமூக விரோத செயலுக்காக மட்டுமே ஒரு கட்சி இருக்கு என்றால் அது விசிக தான்...

ஏன் தேர்தல் ஆணையம் விசிக வை தடைச் செய்யக் கூடாது..?

இந்த விசிக கட்சியால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை மாறாக தமிழர்களுக்கு எதிரான செயல்களை மட்டும் தான் செய்கிறது...