02/03/2018

நோக்குவர்மம்...


நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியமே...

இந்த பதிவை படிக்கும் முன் செய்ய வேண்டியவை .. முதலில் நீங்கள் தளர்வு நிலையில் இருக்க வேண்டும் மற்றும் உங்களுக்குள் இருக்கும் கருத்துகளை சிந்தித்து கொண்டு படிக்க வேண்டாம். திறந்த மன நிலையில் படியுங்கள்.

நோக்கு(நோக்கம்) + வர்மம்(கலை) நம் கண்ணால் பார்க்கும் அணைத்து உயிரையும் தன் வசபடுத்துதல் என்பது பொருள்.

இந்த பிரபஞ்சத்திலேயே மனித ஆற்றலுக்கு மேலே எந்த சக்தியும் இருந்தது இல்லை. இந்த பூமியின் உயிரினங்களினுடைய பரிணாம வளர்ச்சியில் உச்சநிலையே மனித உடம்புதான்.

மனிதன் மிருகமாகவும் வாழலாம் தெய்வமாகவும் வாழலாம். அந்த தெய்வீக நிலையில் இருப்பவருக்கு நோக்குவர்மம் கை வந்த கலை.

நான் தலைப்பில் எழுதியதை போல நோக்குவர்மம் அனைவருக்கும் சாத்தியம். நோக்குவர்மம் கற்று வருவது கிடையாது. அது ஒரு நிலை அவ்வளவுதான்.

அந்த நிலையை அடைய முதலில் உங்களுக்கு தேவை தெளிவு.

தெளிவு என்று நான் குறிப்பிடுவது உங்கள் சுமையை இறக்கி வைக்க வேண்டும். சுமை என்றால் உங்கள் சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள். அதுதான் உங்கள் தெளிவை மறைத்து உங்களை ஏமாற்றிவிடும்.

இதுக்கு ஒரு குட்டி உதாரணம்..

உங்கள் அருகில் இப்போது இருக்கும் பொருளை கையில் எடுத்து ஒரு 15 நிமிடம் வைத்து பாருங்கள். உடனே உங்கள் கை மரத்து போய்விடும் பின் வலி தான் மிச்சம்.

இதே தான் உங்கள் எண்ணத்தில் ஓடும் நபரையோ இல்லை உங்கள் குடும்பத்தையோ எப்போதும் சுமந்து கொண்டு உங்கள் மூளையை மரத்து விட செய்கிறீர்கள்.

உங்களுக்கு நோக்கம் (இலக்கு) மட்டும் தான் இருக்க வேண்டும். இப்படி நோக்கம் மட்டுமே இருக்கும் போது வாழ்க்கை இனிப்பாக மாறும். அந்த தெளிவு உங்களை உண்மையின் அருகில் எடுத்து செல்லும்.

நீங்கள் தெளிவுடன் நடந்து செல்லும் போது உங்கள் முன் வரும் அனைத்தையும் நீங்கள் தெளிவுடன் பார்க்கும் போது வெற்றியின் வாசல் படியில் நீங்கள் கால் எடுத்து வைப்பீர்கள்.

அந்த நொடியில் தான் நோக்குவர்மம் விதை உங்களுக்குள் வந்து விழும். அந்த விதை விழுந்த உடன் நீங்கள் உடல் மனம் என்ற குறுகிய எல்லையை கடந்து உயிர் தான் நிரந்திரமானது என்ற உண்மையை உங்களுக்குள் நிலை நிறுத்துவீர்கள் (அனுபவபூர்வமாக).

பின் நீங்கள் பார்க்கும் அனைத்தும் உங்கள் கட்டு பாட்டுக்குள் வர தொடங்கும். உங்கள் சிந்தனைகள் எண்ணங்கள் சாயிந்து விடும். இப்போது இங்கே நோக்கம் மட்டும் தான்.

புத்தர் குள்ளும் இது தான் நிகழ்தது. அவர் நோக்கு வர்மத்தில் வல்லவர்.

உங்களுக்குள் விழுந்த அந்த விதை வளர தொடுங்கும் போது. நீங்கள் எந்த உயிர் முன் சென்றாலும் உங்கள் நோக்கம் அவருக்கு தெரிந்து விடும். அவர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அந்த செயலை செய்வார்.
நீங்கள் யாரை பார்த்தாலும் அனைவரும் உங்கள் கட்டுபாட்டுக்குள் வருவார்கள்.

அந்த தெளிவு உங்களை கூட்டி செல்லும் இடமும் அப்படித்தான் இருக்கும். உங்கள் பேச்சு முற்றிலும் குறையும்.

புரியாத விஷயம் என்று எதுவுமே இருக்காது. தியானம் தானாகவே உங்கள் அங்கமாகி விடும்.

நீங்கள் இந்த நிலையில் வாழும் போது உங்கள் முன் வரும் அணைத்து உயிரின் என்ன ஓட்டத்தை எளிதாக வாசிக்க முடியும்.

இப்போது நீங்கள் தெளிந்த நீரோடை போல மாறி விடுவீர்கள். உங்கள் கண்களில் அன்பும் அமைதியும் வேரூன்றி நிற்கும். எண்ணங்கள் காணமல் போய்விடும் நோக்கம் (இலக்கு) மட்டும் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.