20/04/2017

அம்மா மீது ஆணையாக விசாரனை நடத்த வேண்டும், மோடியிடம் விசாரனை நடத்த சொல்வாரா பன்னீர் செல்வம் ?


சிகிச்சை அளித்தது மத்திய அரசு டாக்டர்கள், சும்மா இங்க வந்து ஆதாயத்திற்காக பேசுகின்றார் - தினகரன் ஆதரவு எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் பேட்டி...

60 நாள் முதல் அமைச்சராக இருந்தது இவர், அப்பொழுதெல்லாம் விசாரனை நடத்தவில்லை, உண்மையிலேயே சத்தியமாக விசாரனை நடத்த வேண்டும், கூப்புடுங்க மோடிய, கூப்புடுங்க, மத்திய அரசு டாக்டர்களை, கூப்புடுங்க லண்டன் சிங்கபுர் டாக்டர்களை, விசாரனை நடத்துவோம்..

சும்மா எத்தன நாளைக்கு பன்னீர் செல்வம் இதையே சொல்லிகிட்டு இருப்பாரு என தமிழ்ச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைய வெயில் அளவு...


தூங்கும் முறை அரிய விளக்கம்....


தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்..

இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது.

உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போது தான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர்.

இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க
மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற
வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய்
கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்.

இதன் விளக்கம் : இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்..

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான பிராண வாயு (Oxygen) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விசமாக நேரிடும்...

கொளுத்தும் வெயிலிலும் ராசிபுரம் பகுதியில் நல்ல மழை...


அடுத்த மாதத்தில் இருந்து மோடி தனது வெளிநாட்டு பயணத்தை துவக்குகின்றார், ஜுலை வரை ஷெடியுல் போடப்பட்டுள்ளது...


இலங்கை, அமெரிக்கா, ரஷ்யா , ஜெர்மனி , ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்த மாதத்தில் இருந்து பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்யவுள்ளார்...

சாமளாபுரத்தில் ADSP பாண்டியராஜன் தாக்குலில் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரனை...



சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தாக்குதல் குறித்து விசாரனை நடத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது...

பாஜக தான் அதிமுக வை இயக்கிறது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...


நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள்.. (Neanderthal Cave Burials)...


சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள்,  பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்..

சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்...

http://www.youtube.com/watch?v=gpCned5EYuk

எல்லா பொருத்தமும் அம்சமா அமையுதே...


பன்னீர் செல்வத்திற்காக சசிகலா குடும்பத்தை நீக்க வில்லை...


இன்னும் கொஞ்சம் போனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு பன்னீர் செல்வம் தான் காரணம் என்பார்கள் - அமைச்சர் ஜெயகுமார் பேட்டி...

பாஜக பொன். ராதா ஒரு எச்ச புரோக்கர் பொறுக்கி பையன் நேத்து பெரிய இவன் மாதரி பேசுனான் ஆனால் இன்னிக்கு போலீஸ் கூடாரத்தை கலைக்கிறது...


செத்துப்போ. செத்துப்போ...


விசுவாசத்தின் மறு உருவம் அண்ணன் பன்னீர்செல்வம் - C R சரஸ்வதி...


போன மாசம் இதே டயலாக்க எனக்கு சொன்னியேடி - சசிகலா...

எல்லோரும் போன் நம்பர  save செஞ்சி வெச்சிருக்கீங்க தானே...

வேலூர்ல 108 டிகிரி... திருவள்ளூர்ல 111 டிகிரியாம் வெயில்....


பிரபல கோவிலில் வெளிநாட்டினர், அறைகுறை உடை அணிந்து மது பாட்டில்களுடன் தரிசனம், கண்காணிப்பு சரியில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு...


கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள பிரபல Virupaksha கோவிலில் வெளிநாட்டினர் அறைகுறை ஆடை அணிந்து கையில் மது பாட்டில்களுடன் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றனர்.


கோவில் நிர்வாகம் இதை கட்டுப்படுத்த தவறியுள்ளது என கோவிலுக்கு வரும் பக்கதர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்...

விஐபி கலாச்சாரத்தை மாற்றுவதற்காக அனைத்து மத்திய அமைச்சர்களின் காரில் இருந்தும் சிகப்பு விளக்கை நீக்கும் படி உத்தரவு...


மே 1 முதல் அமலுக்கு வரும் என இன்று நடைபெற்ற மத்திய அரசின் கேபினட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் அமைச்சராக நிதின்கட்கரி தனது காரில் உள்ள சிகப்பு விளக்கை அகற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்...

தேங்காய் பற்றிய அதிசய உண்மைகள்...


தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .

மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

இது சிவனின் மூல சக்தியாக உள்ளது இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது.

தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி சுழன்று கொண்டே இருக்கும்.

கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறை சக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது. இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது.

ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கே பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும்.

முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது.

ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்று கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும்.

வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும்.

மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .

இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமிவரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.

முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும்.

இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம்.

அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும்.

குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி ( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் ஞாபக சக்தி கூடும்.

வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும்.

வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் காரியம் சித்தியாகும்.

(அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்).

சும்மா இல்லீங்க நம் முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது...

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


அதிமுக வையும் இரட்டை இலையையும் பன்னீருக்கு கொடுத்து அந்த பன்னீரோடு கூட்டனி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜக ஆயத்தம்...

ஆட்சி கலையனும் இல்லை பன்னீர் முதல்வர் ஆகனும்.... இதில் ஏதாவது ஒன்று நடக்கும்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 26...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது தீர்க்கதரிசன தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் இந்த உலகில் நடக்கக்கூடிய முக்கிய சம்பவங்களை பற்றிய நிகழ்வுகளாகும். இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் வருங்காலத்தை பற்றிய செய்திகளாகும்.

இந்த வருங்காலத்தை பற்றிய ஒவ்வொரு குறிப்புகளும் இறைவனோடும், இந்த மக்களோடும் நெருங்கிய தொடர்புடைய முக்கிய நிகழ்வுகள் என்று இறை தீர்க்க தரிசன கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாட்டு மக்களும் மிக, மிக ஆவலுடன் எதிர்நோக்கும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தின் மூலம் மக்கள் சமூகம் அறிந்து கொள்ள முடியும் என   இறை தீர்க்க தரிசனங்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய 26-வது தீர்க்க தரிசனம் ஒரு மகத்தான நிகழ்வைப் பற்றிய குறிப்புகளை நமக்கு தெரிவிக்கின்றன.

அதாவது இந்த பூவுலகில் கடவுள் பற்றிய சிந்தனை இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லையென சொல்லலாம். அதாவது இந்த உலகில் கடவுள் என்ற ஒரு நிலை இல்லவே இல்லை என்று சொல்லும் மனிதன்கூட கடவுள் சார்ந்த கேள்விகளை தனக்குள் எழுப்பிய வண்ணம் வாழ்ந்து வருகிறான் என்று 26-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

அதாவது இந்த உலகில் கடவுளின் நிலைப்பற்றிய அவநம்பிக்கை கொண்டோரும் இனி கடவுளின் மீது முழு நம்பிக்கை கொள்ளும் படியான ஒரு அதிசய சம்பவம் பூமியில் நடக்கும் என 26-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

அதாவது பல நாடுகளுக்கு இடையே பல விவாதங்கள் நடக்கும் சமயத்தில் இந்தியாவில் கடவுளின் வருகையைப் பற்றிய விழிப்புணர்வு துவங்கிவிடும் என்றும்,

இது இந்தியாவில் உள்ள அனைத்து மதத்திலும் துவங்கிவிடும் என்றும்,

அச்சமயத்தில் தமிழகத்தின் ஒரு மாவட்டத்தில் அகழ்வராய்ச்சி நடக்கும் அளவிற்கு கடவுள் சார்ந்த ஒரு அதிசயம் நடக்கும் என்றும்,


இந்த அதிசய சம்பவம் வரலாற்றில் இடம் பெறக்கூடிய அளவில் அமையும் என்றும் 26-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

26-ம் தீர்க்க தரிசனத்தின் படி கடவுளின் வருகை என்பது உறுதியான ஒரு விஷயம் என்றும்,

அது உலக நாடுகளிலேயே இந்தியாவில் மட்டுமே நடக்கும் பிரபஞ்சம் வியக்கும் அதிசயமாக அமைய உள்ளதாக 26-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

ஆனி மாதம் 7-ம் தேதி மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டிய முக்கிய தினம் என்றும்,

அன்றைய நாளில் எனது வருகையின் பதிவுகள் இந்த பூமியெங்கும் இருக்கும் என்றும்,

இதுவே இறைவன் பூமியை வழிநடத்தும் முதல் நாளாக அமையும் என்றும்,

அன்று முதல் சத்திய யுகத்தின் பொற்காலம் துவங்கிவிட்டதற்கான உண்மைநிலை என்று 26-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மல்யுத்தம் நடைபெறும் ஒரு ஊரில் வீர சிவாஜியின் நினைவு நாள் அன்று ஒரு இறை அதிசயம் நிகழும் என்றும்,

அது கடவுளின் வருகைக்கு முன்பாக நிகழக்கூடிய அதிசயம் என்று 26-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

மகத்துவங்களே மனிதனுக்குள் மாற்றத்தை தரும் என்றும், அது இறை வருகைக்கு முன் இந்த பூமியில் நடக்கக்கூடிய அதிசயங்கள் என்றும், கட்டாயம் பல மாற்றங்கள் பூமி எங்கும் ஆரம்பமாக உள்ளதாக 26-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது..


சேலம மக்கள் மனதில் பதிய வேண்டிய முக்கிய குறிப்பின் பெயர் என்றும்,

தமிழகத்தின் தலையெழுத்தை மற்றுமின்றி உலகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய முக்கிய பொறுப்பில் இந்நகரம் திகழும் என்றும்,

ஸ்ரீசைலம் என்ற மாற்றுப் பெயரை விரைவில் தாங்கி நிற்கும் என்றும்,


இதுவே கடவுளின் வருகையை உறுதிபடுத்தும் முக்கிய இடமாக திகழும் என்றும் 26-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

பல்வேறு மொழி பேசும் அனைத்து மக்களும் இந்த கடவுளின் வருகையை ஆணித்தரமாக நம்புவார்கள் என்றும்,

அவர்கள் அனைவரும் கடவுளை வரவேற்க தயாராகி விட்டனர் என்றும் 26-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது..

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

கண்ணதாசன் ஆவிகளைப் பற்றித் தனது அனுபவங்களைக் கூறுகிறார் ...


இறந்து போனவர்ளுடைய ஆவிகள் தங்கள் குடும்பத்தினரைக் கண்காணிக்கின்றன என்பதற்கு, மறுக்க முடியாத ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆவி உலகில் உலவுகிற சிலர், தங்களுக்குப் பிரயமானவர்களின் உடலில் புகுந்து கொண்டு, அவர்களையே மீடியமாக வைத்து, மறவர்களோடு பேசுகிறார்கள் என்பதும் உண்மை.

அண்மையில் தினமணி கதிர் பத்திரிகையில் காங்கிரஸ் பிரமுகர் திரு. பி.ஜி. கருத்திமன் அவர்கள், இதுபற்றி இரண்டொரு கட்டுரைகள் எழுதியிருந்தார்கள்.

இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு.

எனக்கே இதில் அனுபவம் உண்டு.

1941 - ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார்.

அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு.

அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு.

ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக் கொண்டிருக்கும் போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும்.

அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்.

சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும்.

மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும்.

மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும்.

இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன்.

ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன.

இறந்து போனவர்களுக்குப் பிரியமான பதார்த்தங்களை செய்து நாம் படையல் நடத்துகிறோம் அல்லவா? அந்தப் பதார்த்தங்களை ஆவிகள் உண்ணுகின்றன என்பது ஐதீகம்.

தர்க்கத்திற்கு இது நிற்க முடியாது. என்று வாதிடுவோரும் உண்டு.

ஆனால் இறந்து போனவர்களுடைய ஆவி பற்றிய பல சம்பங்களைத் தம் வாழ்யாளிலேயே கண்டிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்.

அவர் கூறியுள்ள சில அனுபவங்களை அப்படியே இங்கு எடுத்துக்கொடுப்பது வாசகர்களைச் சிந்திக்க வைக்கும்.

அவர் சொல்லியுள்ள பல விஷயங்களில் சிலவற்றை மட்டுமே நான் இங்கே தருகிறேன்.

இறந்தவர்கள் மீடியமாக இருப்பவர்களுக்குத் தெரியாத பாஷையில் அறிவித்தல்:

தூத்துக்குடியில் வருமான வரி ஆபீசராக இருந்த ஓர் இஸ்லாமியர், இறந்தவர்களோடு பேசுவதன் உண்மையை அறிய வேண்டும் என்று, எமது தம்பியார் வீட்டிற்கு வந்து இருந்தார்.

அவர் தாமும் பேசிப் பாக்க வேண்டும் ஆனால் தமிழைத் தாய் பாஷையாக்க் கொண்ட மூடியம் மூலம், அந்த மீடியத்திற்குக் கொஞ்சமும் பழக்கமில்லாத பாஷையாகவும் தமது தாய் பாஷயாகவும் இருக்கும் உருது பாஷையில் கேள்விக்கேட்டு பதிலும் உருது பாஷையில் வந்தால்தான், அது மீடியத்தில் ஏற்பட்ட பதில் அல்ல, இறந்தவருடைய வாக்கே என்று உறுதியாக் கூற முடியுமென்று சொன்னார்.

தம்பியார் யாரும் இவ்வாறு இதுவரை யோசித்துப் பார்க்கவில்லை. ஆபிஸர் சொல்வது சரியான சோதனையோ சோதித்துப் பார்ப்போமே என்றுபார்த்தார்.

உருது ஒரு வார்த்தையும் தெரியாத பிராமணச் சிறுவன் மீடியாமாக இருக்க, அவன் மூலம் உருது பாஷையில் பதில் வரவே ஆபீசரும்  மற்றவர்களும் திகைத்துப் போனார்கள். மேற்கொண்டு பேச வேண்டும் என்று ஆபீசரும்  விரும்பவே ஆவி உலகத்திலிருந்து அவருடைய கொழுந்தியாள், ‘இப்பொழுது மேற்கொண்டு பேச வேண்டாம்; இங்கு பேசுகின்ற முறையிலேயே வீட்டில் வைத்துப் பேசுங்கள்; வீட்டில் இருக்கும் மகள் மீடியமாக இருக்கிறாள்’ என்று  அறிவித்து விட்டாள்.

அதன்படி அவர்கள்  வீட்டில் வைத்துப் பேசவும், அதன் உதவியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் ஆரம்பித்து விட்டார்.

ஆதலால்  நல்ல சக்தி வாய்ந்த மீடியமாக இருந்தால், மீடியத்திற்கு தெரியாத பாஷைகளிலும் பேச்சு நிகழ்த்தலாமென்பதும், அதில் மீடியத்தினுடைய அறிவின் விளக்கமோ மீடியம் கள்ளத்தனமாக வேண்டுமென்ற தன்னுடைய கருத்தை போலித்தனமோ, ஓர் அணுவளவும் முடியாதென்பதும் பெறப்படுகின்றதல்லவா?

பாஜக மோ(ச)டி ஆட்சியில் முற்றிலும் தடம்புரண்ட இரயில்வே நிர்வாகம்.. ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்...


மத்திய இரயில்வேயின் நிர்வாகம் மிக மோசமான நிலைக்கு சரிந்திருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Trainsuvitha.com என்ற இணையதளம்
வெளியிட்டுள்ள இந்த ஆய்வு விவரங்கள்...

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொதுசேவை என்ற பெருமையைப் பெற்ற இந்திய இரயில்வேயின் எதிர்காலம் கேள்விக்குறியாகி  இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

பொதுவாக இரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதில் ஏற்படும் தாமதம் சராசரியாக 15 மணி நேரங்களாக அதிகரித்துள்ளது.

அதாவது கடத்த 4 ஆண்டுகளில் இரயில்களின் தாமதம் 800 % சதவீதம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமன்றி மோசமான இரயில் விபத்துக்களும்
அதிகரித்துள்ளதாகவும்.

பாட்னா இடையே நடந்த ரயில் விபத்தால் 150 பேர் பலியானதை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறது.

இரயில்வேயில் 2016 ஆண்டு மிக மோசமான ஆண்டு என்றும் மொத்த வருவாயில் 14 ஆயிரம் கோடி வருவாய் குறைந்து இருப்பதையும் இரயில்வே அமைச்சர் ஒப்புக்கொண்டதாகவும்,
மேலும் பல விசயங்களில் இரயில்வேயில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்துகிறது...

வைகோ நாயூடு கலாட்டா...


எந்த சிறையில் பகலில் தூங்க அனுமதி தருகிறார்கள் என்று தெரியவில்லை..

சிறையில் போட்டோ எடுக்க கூட அனுமதி தருகிறார்கள் போல...

போட்டோ எடுக்கிறது நம்ம கோபாலுக்கே தெரியாதாம்...

1000 ஓவா கொடுத்தா ஜாமீனில் போற பொட்டிக் கேசுக்கு வாண்டடா உள்ள படுத்துகிட்டு... என்னா பில்டப்பு...

31 டிசம்பர் 2016 சசிகலா முதல்வராக வேண்டும் - ஆர்.பி.உதயக்குமார்...


19 ஏப்ரல் 2017 தியாகத்தின் மறு உருவம் ஓபிஎஸ் - ஆர்.பி.உதயக்குமார்...

அந்த வாயில்லா பூச்சிய இப்படி பன்னிட்டீங்களேடா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 26...i


ஆழ்மன சக்தியைப் பெறமுடியுமா?

ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.

இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.

ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது.

உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது.

நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.

இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை.

டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.

அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை.

இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India) , பரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi) போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.

ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது.

பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன.

இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் என்ற நூலை எழுதினார்.

ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.

இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள்.

மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.

ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.

எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை எளிமையாக இனி பார்ப்போமா?

மேலும் பயணிப்போம்....

நம்ம சவுண்டு சர்வீஸ் குரூப்ப நினைச்சாத்தான் ஒரே சிரிப்பா வருது...


அட்டாங்க யோகப் பயிற்சிகள்...


அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர்.

இவை இயற்கை அளித்த திறமை கள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன.

இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சிகளால் பெற்றனர்.

அத்தகைய சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது..

அட்டாங்க யோகப் பயிற்சிகள்...

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின் அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா, திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா, சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி, பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே...

1. அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறிய தாகக்காட்டுவது/ ஆக்குவது. பிருங்கி முனிவ ர் முத்தேவர்களைமட்டும் வலம் வருவதற்கா க சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

2. மஹிமா: சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருட்ண பரமா த்மா அர்ஜூனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

3. லஹிமா: கனமான பொருளை இலேசான பொருளா க ஆக்குவது. திருநாவுக் கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்ட போது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

4. கரிமா: இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது. அமர்நீதி நாயனாரி டம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்த போது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடை சியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரிசெய்த சித்தி கரிமா.

5. பிராத்தி: எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது. திருவிளையாடற் புராணத்தில் எல்லாம்வல்ல சித்தரான படலம் என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்த தாக வரும் சித்தி பிராத்தி.

6. பிரகாமியம்: வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன் றுதல். அவ்வையார் இளவயதி லேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக் கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண் வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்..

7. ஈசத்துவம்: ஐந்து தொழில்களை நடத்துதல். திருஞான சம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பி யமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

8. வசித்துவம்: ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலிய வற்றைத் தம்வசப்படுத்துதல். திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்...

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த முதியவர் வெயிலின் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பு...


தமிழகத்தில் அனல் காற்று மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தகவல்...

பிரதமரை சந்தித்த பின் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளையும் சந்திப்பார் எனத் தகவல்...


நான் அப்படிப்பட்டவள் இல்லை, எதையும் நேராக எதிர்கொள்வேன் - நாஞ்சல் சம்பத்திற்கு தமிழிசை பதில்...


அதிமுக கட்சியை கவிழ்க்கின்றேன் பாக்குறியா பந்தயம் வைத்துக் கொள்ளலாமா என தனக்கு தெரிந்த நபரிடம் தமிழிசை கூறியதாக நாஞ்சில் சம்பத் கூறியிருந்தார்...

சித்தராவது எப்படி - 26...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் இரண்டு...

இது இரண்டாம் நிலை பயிற்சி.. முதல் நிலை பயிற்சியில் மேன்மை அடைந்தவர்களிடம் ஏற்படும் அனுபவங்களின் விளைவாகவும், அந்த அனுபவங்களை முறை படுத்துவதற்காகவும் இந்த இரண்டாம் நிலை பயிற்சி தர வேண்டிய அவசியம் ஆகிறது..

முதல் நிலையான சுவாச ஒழுங்கில் மேன்மை அடையாதவர்கள் இந்த இரண்டாம் நிலை பயிற்சிக்கு வந்தால் குழப்பமே உருவாகும்...

முதல் நிலையில் மேன்மை அடைந்தவர்கள் பேரண்ட ஆற்றலை அதிகம் பெற்ற காரணத்தினால் உடம்பில் சில நகரும் ஊறல்கள் ( moving feeling ) தோன்றுகிறது.. அதுவே குண்டலினி சக்தி பயணமாகும்..

இந்த சக்தி பயணம் சூட்சும தேகத்திற்கே உரியது.. இந்த பயணத்தை முறை படுத்துவதின் மூலம் மிக பெரிய அளவில் ஆன்ம இலாபம் பெறலாம்..

சுவாச ஒழுங்கு ஆரம்பத்தில் சில இடங்களில் உறுத்தல் உணர்வுகள் ( spot feeling ) தோன்றி பின்பே அது நகரும் ஊறல் உணர்வாக மாறும்
ஆனாலும் நாம் தூல உடம்பிலே இயங்கும் சுவாச ஒழுங்கிற்கு குறை ஏற்படுத்தினால் இந்த குண்டலினி சக்தி பயணமும் தடை படும்.. இதை மறக்காமல் செயல் பட வேண்டும்..

இந்த இரண்டாம் நிலை பயிற்சி முற்றிலும் சூட்சும தேக பயிற்சி ஆகும்...

அதிகபடியான ஆற்றலை சூட்சம தேகத்தில் முறை படுத்தும் நெறி ஆகும்.. ஆகவே சுவாச ஒழுங்கினை எந்த காரணம் கொண்டும் விட்டு விலகி செல்லக் கூடாது...

சுவாச ஒழுங்கு மேன்மை அடையும் போது பெறப்படும் அளவற்ற ஆற்றல் சூட்சம தேகத்தின் ஆதார சக்கரங்களில் தன்னிச்சையாக ஓட தொடங்கும் போது அதை முறை படுத்த வேண்டிய அவசியம் ஆகிறது..

முதல் அப்பியாசமாக அச்சக்தியை மூலாதாரத்திலிருந்து பிடரி ஆதாரத்திற்கு பயணப் பட வைத்து பிடரியை பலப் படுத்த வேண்டும்.. அது நினைவகம்..

நினைவு இல்லையென்றால் உயிரிடம் துளியும் முன்னேற்றம் ஏற்படாது..

உயிருக்கு அடுத்த படியாக முக்கியமான இடத்தில் இருப்பது நினைவகம் தான்..

இந்த நினைவகத்தில் மையம் கொண்டுள்ள பழைய அனுபவத்தின் தொடர்சியாகத்தான் புதிய அனுபவங்களுக்கு நகர்ந்து செல்லுகிறோம்..

இல்லையேல் மீண்டும் மீண்டும் பழைய அனுபவத்தை அனுபவப் படவே வாழ்ந்து கால விரையும் செய்து கொண்டு விலங்கு போல் இருப்போம்..

இந்த நினைவகம் பலப்பட பலப்பட வாழ்க்கையில் புதுமைகளை புகுத்து கொண்டே இருப்போம்.. இந்த பிடரி ஆதாரத்தை சித்தம் எனவும் சொல்லலாம்..

அனுபவங்களை தாங்கி நிற்கும் வலிமை உடைய இந்த சித்தம் என்னும் பிடரி ஆதாரம், மீண்டும் அதே அனுபவங்களை ஏற்றுக் கொள்ளாமல் அந்த அனுபவத்திலேயே நிறைவு கொண்டு இருக்கும்..

புகை பிடிப்பவர்கள் மது அருந்துபவர்கள் இந்த பிடரி ஆதாரத்தை பலப்படுத்திய உடனே அந்த பழக்கங்களின் தொடர் நிகழ்வு நின்று விடும்... கெட்ட பழக்கங்கள் காணாமல் போய் விடும்..

இப்படியாக சித்தமான பிடரி ஆதாரத்தை பலப் படுத்தியவர்கள் தான் சித்தர் ஆவதற்கான முதல் தகுதி பெறுகிறார்கள்..

இந்த சித்தர்கள் ஏன் உலகியல் விவகாரங்களில் அதிகம் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்கள்..

ஏற்கனவே அனுபவித்த உலகியல் அனுபவங்கள் அதன் வீரியம் குறையாமல் பலம் வாய்ந்த சித்தத்தில் தக்க வைத்து கொண்டிருப்பதால் அவர்களின் அந்த பழைய அனுபவங்களுக்கான ஏக்கம் மிகவும் தளர்ந்த குறைந்த அல்லது நீங்கிய நிலையில் பூரண நிறைவு காரணமாக மீண்டும் பழைய செயலில் ஈடுபட விரும்பாமல் போவதே..

இந்த பிடரி ஆதாரம் பலப்படும் பொழுது பழைய அனுபவங்களும் நினைவாற்றலால் பலம் ஆகி அந்த அனுபவங்களுக்காக ஏக்கமும் நீங்க ஆரம்பித்து, மீண்டும் அந்த அனுபவங்களுக்கு ஆசை படாத நிலையும் உருவாகும் அற்புதமும் நடக்கிறது..

சில ஆழமான அழுத்தமான ஆசைகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்..

சுவாச ஒழுங்கில் மூலம் பெறப் படும் அதிக ஆற்றலை மூலாதாரத்திலிருந்து பிடரிக்கு அனுப்பி பிடரி ஆதாரத்தை வலுவாக்குவதின் மூலம் ஆசைகளை வேரறுக்கும் சூத்திரமும் இரகசியமும் இது தான்..

உள் நகைத்தல் மூலம் குண்டலினி சக்தி ஓட்டத்தை அடையாளம் தெரிந்து கொண்ட நாம் அதிகப் பட்ட ஆற்றலை மூலதாரத்திற்கும் பிடரிக்கும் பயணப் பட வைத்து பிடரி ஆதாரமான சித்தத்தை வலு படுத்துவதின் மூலம் அதிக பலன் பெற முடியும் என்பதை நினைவில் கொண்டு எல்லாவற்றிக்கும் சுவாச ஒழுங்கே அடிப்படையானது என்பதை மறவாது சுவாச ஒழுங்கிலே இருக்க முனைவோமாக...

அடுத்த பதிவில் பிடரியில் இருந்து சுழுமுனை ஆதாரத்திற்கு பயணப் படும் முறையையும், சுழுமுனையின் மேன்மையும் தெரிந்து கொள்வோமாக...