27/02/2019

என்றும் இளமையோடு வாழ எளிய வழி...


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், வெப்பம் (உஷ்ணம்), காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

வெப்பத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை எல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்...

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் வெப்பம் (உஷ்ணம்), வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்...

மது ஆலை , வங்கி என அனைத்தும் மக்களை அடிமைபடுத்த கூடியதே அதை நிர்வகிப்பவனுக்கு சட்டம் கிடையாது...


தமிழர் என்ன பாவம் செய்தோம்...


இந்திய விடுதலை போரில் அதிக விலை கொடுத்தவர்கள் நாம்..

இந்திய நாட்டிலும் அதை காட்டிலும் கீழான அடிமை நிலை..

அதிகாரத்தை மீட்போம்...

பாட்டளி மக்கள் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகர் ரஞ்சித் அறிவிப்பு...


தொண்டர்களின் கருத்துக்களை கேட்காமல் அதிமுக - உடன் கூட்டணி - ரஞ்சித் பேட்டி...

இன்று காலை சரியாக 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் சுமார் 1 டன் வெடி குண்டுகளை வீசி பாகிஸ்தானின் ஜெய்சி முகமது தீவிரவாதிகள் சுமார் 300 பேரலை கொன்று குவித்தது இந்திய விமானப்படை..


பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலாகோட் மற்றும் முசாபாராபாத் இடங்களை துவம்சம் செய்தது இந்தியா.12 போர் விமானங்கள் பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது...

திமுக கூட்டணியில் தேமுதிக...


தமிழர்களை ஏமாற்ற திராவிடம் என்ற தெலுங்கர்கள் கூட்டணி தயார்...

https://youtu.be/JZ0QVNvaImw

Subscribe the channel for more news...

பாமக அன்புமணி ராமதாஸ்...


கடுமையான விமர்சன கேள்விகள் வரும் என்று தெரிந்தும் பத்திரிக்கையாளர்களை அழைத்து விவாதம் பண்ணிய கெத்து தமிழகத்தில் வேறு எந்தக் தலைவருக்கும் கிடையாது.

தங்களை "ஜனநாயக" வழியில் கேள்வி கேட்க "அனுமதிக்கும்" கட்சிக்கு வாக்களியுங்கள்.

முட்டாள்களுக்கு வாக்களிக்தாதீர்...

பாமக கூட்டணி குறித்து திமுக ஸ்டாலினை விலாசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி...


https://youtu.be/VmSAH3WGhdg

Subscribe the channel for more news...

பழைய மைசூர் மாநிலத்தில் தமிழ்க் கல்வெட்டுகள் (வரைபடம்)...


தமிழ் மொழியிலான கல்வெட்டுகள் அதிகமாக பழைய மைசூர் நாட்டின் எல்லை மாவட்டங்களான கோலார், பெங்களூரூ, மைசூரின் பகுதிகளில்,
வட-தென் பெண்ணையாறுகளின் படுக்கை பிரிவுகள் தொடங்கி தென்மேற்காக காணப்படுகின்றன.

Source: Tribes and castes of Mysore (Vol.1) by L K A Iyer...

மருத்துவ மாப்பியா...


தமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்..

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்..

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."

- கணக்கதிகாரம்

விளக்கம்...

பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்...

கல்வியும் கார்பரேட் வியாபாரமும்...


என்னடா இது புது புறளியால்ல இருக்கு...


தீபம் ஏத்துனா நல்லது நடக்கும்,
மெஸேஜ 15பேருக்கு பாரவர்ட் பன்னா நல்லது நடக்கும்னுட்டு ,என்னமோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

தேர்தல் முடியறதுக்குள்ள அக்கா  நம்மள ஒரு வழி ஆக்காம விடமாட்டாங்க போல...

50 வருசம் தானா ? ரொம்ப கம்மியா இருக்கே... பாஜக மோடி ஜி...


ஆமணக்கின் மருத்துவ பயன்கள்...


ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. ஆமணக்கு யூஃபோர்பியேசி என்ற ஒற்றைப் பூவிதழ் வட்டத்தையுடைய இரு விதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக்குறைய இந்தியா, இலங்கை முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதை, ஆமணக்கு என்றும் சிற்றாமணக்கு என்றும் கூறுவர்.

இலை...

சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிவதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.

இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும்.

ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், இரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வர இரத்தக் கசிவு மறையும். ரணம் ஆறும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.

வேர்...

ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது, ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.

விதை...

ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்றிக் காயளவு கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும். கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை போகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும்.

எண்ணெய்...

ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றினை எண்ணெய் என்பனவாகும். தினசரி காலை, மாலை இரு வேளை மூன்று மி.லி. அளவு உள்ளுக்கு கொடுக்க நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலக்கட்டு, மூட்டுவலி போன்றவை மறையும்.

குடல் இறக்கம் (hernia), வயிற்றுப் பூச்சிகள், சமிபாட்டுக் கோளாறு, போன்றவற்றிற்கும் மூன்று மில்லி எண்ணெய்யை தினசரி காலை மாலை உள்ளுக்கு கொடுக்கலாம். சிறுநீர் கோளாறுகள், எரிச்சல், சிறுநீர் பாதையில் எரிச்சல் போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்கலாம்.

தீராத மூட்டு வலி, மூட்டு பிடிப்பு, மூட்டு வாதம், எலும்பு தேய்வு, மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கும் 2 – 3 மி. லி. தினசரி எண்ணெய்யை உள்ளுக்கு கொடுக்கலாம். வீக்கம், உடல் வலி, போன்றவற்றிலும் விளக்கெண்ணையை உள்ளுக்கு கொடுக்க நல்ல பலன் தெரியும்.

பச்சை எண்ணெய்...

ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகடிள அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும்.

ஊற்றின எண்ணெய்...

ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்புகளை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின் மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந்துள்ள நீரை, அனலில் வைத்து போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும்.

இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர்கள் சூல் கொண்டவர்கள், பிள்ளை பெற்றவர், சீதக் குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது.

மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மல வாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும் வயிற்று வலியினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றிலும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணையைத் தடவி, ஒற்றடம் இட வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும்.

உடம்பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும், தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணையும், தாய்ப்பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும்.

முலைக்காம்பு புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் முறைகளில் ஆமணக்கெண்ணெய் சேர்க்கப்படுகிறது.

ஆமணக்கு எண்ணெய்...

ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.உள்ளுக்கு 5 மி.லி. வீதம் உட்கொள்ள சமிபாட்டுக் கோளாறுகள் சீராகும். குடல் இறக்கம் பிரச்சனை குறையும்...

பாமக கொடுத்துள்ள பதிலடி.. யாருக்கு தெரியுமா..?


https://youtu.be/rZ645y1lcWA

Subscribe the channel for more News...

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...


ஏனென்றால் அது ஒன்றுதான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது.

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத்தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித்தன்மையை மதி.

பிறர் தனித்தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போதே நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலர முடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது.....

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு,

சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு,

ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள் - அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு, அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு,

மத குருமார்களின் எதிர்பார்ப்பு. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்.

நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது.

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...

திமுக தெலுங்கர் தயாநிதி 1000 கோடி ஊழல்...


திராவிடன் என்பவர்கள் யார்?


நடைமுறை அரசியல்களத்தில் திராவிடர் என்பது கேரளத்தில் வாழும் மலையாளியைக் குறிக்காது. ஆந்திராவில் வாழும் தெலுங்கர்களைக் குறிக்காது. அல்லது கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களையும் குறிக்காது.

அப்படியானால் தமிழ்நாட்டில் வாழும் தமிழரை மட்டும் அது எப்படிக் குறிக்கும்?

அது தமிழ்நாட்டில் வாழும் பிற இனத்தாரைக் குறிக்கிறது. குறிப்பாக தெலுங்கு, கன்னட, மலையாளிகளைக் குறிக்கிறது.

திராவிடம் என்பது அவர்களின் வல்லாதிக்கத்திற்கான கொள்கையைக் குறிக்கிறது. அது எப்படி தமிழருக்கு நன்மை பயக்கும்?

அந்த திராவிடத்தின் சூத்திரதாரி கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியார்.

அவர் எப்படி இந்த வீழ்ந்து கிடக்கிற தமிழ் இனத்தில் ஓர் விடுதலைக்கான அடையாளமாவார்?

பெரியார் எனும் பலிஜா கன்னட ராமசாமி நாயக்கர் விட்டுச் சென்ற பணியை சில அடிமைகள் தொடர்கிறது...


கேரளாவில் மலையாளி மேனன்னாகவும், நாயராகவும், நம்பூதிரியாகவும் தன் சாதி அடையாளத்தை இழக்காமல் மலையாளி என்ற இன உணர்வோடு வாழ்கிறான்….

ஆனால் இங்கே தமிழனுக்கு எதிரி தமிழரின் அடையாளமாகிய சாதி தான் என பொய் பிரசாரம் செய்து அதை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு தமிழர்களிடையே நிரந்தர பகைமை உணர்வை வளர்த்து திராவிடம் என்ற இல்லாத ஒன்றை நிலைநாட்டி தெலுங்கரையும், கன்னடரையும், மலையாளிகளையும் இங்கே ஆளவிட்டது தான் வெங்காயத்தின் சாதனை..

அந்த வெங்காயம் விட்டுச் சென்ற பணியை தொடர்கிறார்கள் வெங்காயத்தின் வழிகாட்டிகள்...

மீத்தேன் னும்.. தமிழின அழிப்பு திட்டமும்...


இது 1971 ஆம் ஆண்டில் துருக்மெனிசுதானில் ரஷ்ய பொறியாளர்களால் மீத்தேன் வேண்டி தோண்டப்பட்டது...

விஷவாயு பரவும் அபாயத்தால் இது செயற்கையாக எரிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் அணைந்து விடும் என்று நம்பினார்கள்.

ஆனால் அப்படி நடக்கவில்லை...

கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அதாவது நாம் இந்த செய்தியை படிக்கும் இந்த நொடி வரை தொடர்ச்சியாக மீத்தேன் வெளியேறுவதால் இன்றுவரை இது எரிந்து கொண்டிருக்கிறது...

இதன் பெயர் தான் நரகத்தின் கதவு (Door to Hell)...

வல்லாரை கீரை...


தமிழ் தந்த சித்தர்கள் வல்லாரை / சரசுவதிக் கீரை / Centella asiatica மனநோய்க்கு மா மருந்து...

செயலில் வல்லாரை..
அறிவில் வல்லாரை..
ஆற்றலில் வல்லாரை..

வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே என்பது பழமொழி..

வன்மை கொண்ட மானுடர்கள் எல்லாம் மென்மை கொண்ட மூலிகையாம் - நடமாடும் சரஸ்வதியாம் வல்லாரையைச் சரணடைந்து வளம் பல பெறலாம் தேவ மருத்துவராகிய தன்வந்திரி சித்தர் தன் சீடர்களின் நினைவாற்றலும் அறிவுக் கூர்மையும் மேம்படும் பொருட்டு, அவர்களுக்கு வல்லாரை தொடர்பான மருந்துகளைக் கொடுத்து வந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் குறிப்பிடுகின்றன.

மனநோய்க்கு மா மருந்து! இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது ..

மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும்..

வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து ' சி 'மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரசுவதிக் கீரை யென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்...

இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.

உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.

தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.

மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.

இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.

சளி குறைய உதவுகிறது.

காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

காலை வேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது..

இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம் , சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்...

மானம், சூடு, சூரணை உள்ள திமுக தொண்டனுக்காக... திமுக vs தேமுதிக...


https://youtu.be/Z2JGoYyXsM4

Subscribe the channel for more News...

கலர் கலரா க்ளூக்கோஸ் விளம்பரமும்... ஏசி விளம்பரமும்...


அத வாங்க முடியாத பரம ஏழை எப்படி வெயில சமாளிப்பான்...? இல்ல அத கூட யோசிக்க தெரியாத முட்டாளா இந்த நகர கூட்டம்...? உங்கள் பார்வைக்கே...

ஆய கலைகள் 64...


1. எழுத்திலக்கணம்
2. எழுத்தாற்றல்
3. கணிதவியல்
4. மறை நூல்
5. தொன்மம்
6. இலக்கணவியல்
7. நய நூல்
8. கணியக் கலை
9. அறத்துப் பால்
10. ஓகக் கலை
11. மந்திரக் கலை
12. நிமித்தகக் கலை
13. கம்மியக் கலை
14. மருத்துவக் கலை
15. உறுப்பமைவு
16. மறவனப்பு
17. வனப்பு
18. அணி இயல்
19. இனிதுமொழிதல்
20. நாடகக் கலை
21. ஆடற் கலை
22. ஒலிநுட்ப அறிவு
23. யாழ் இயல்
24. குழலிசை
25. மத்தள நூல்
26. தாள இயல்
27. வில்லாற்றல்
28. பொன் நோட்டம்
29. தேர்ப் பயிற்சி
30. யானையேற்றம்
31. குதிரையேற்றம்
32. மணி நோட்டம்
33. மண்ணியல்
34. போர்ப் பயிற்சி
35. கைகலப்பு
36. கவர்ச்சியியல்
37. ஓட்டுகை
38. நட்பு பிரிக்கை
39. மயக்குக் கலை
40. புணருங் கலை
41. வசியக் கலை
42. இதளியக் கலை
43. இன்னிசைப் பயிற்சி
44. பிறவுயிர்மொழி
45. மகிழுறுத்தம்
46. நாடிப் பயிற்சி
47. கலுழம்
48. இழப்பறிகை
49. மறைத்ததையறிதல்
50. வான்புகுதல்
51. வான் செல்கை
52. கூடுவிட்டு கூடுபாய்தல்
53. தன்னுறு கரத்தல்
54. மாயம்
55. பெருமாயம்
56. நீர்க் கட்டு
57. அழற் கட்டு
58. வளிக் கட்டு
59. கண் கட்டு
60. நாவுக் கட்டு
61. விந்துக் கட்டு
62. புதையற் கட்டு
63. வாட் கட்டு
64. சூனியம்...

காடுகள் அழிப்பு... திட்டமிட்ட சதிகள்...


உன்னுள் நுழைவதே தியானம்...


எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்..

நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது..

உன்னால் ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..

அற்புதம் என்பது பெருங் கடல்..

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே..

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..

யோசிக்க ஆசை வரும்..

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...

Benefits Of Rice water / அரிசி தண்ணீர் நன்மைகள்...


https://youtu.be/BfJRMQmC2ls

Subscribe the channel for more tips...

ஆணாக 56 ஆண்டுகள் வாழ்ந்த பெண்...


மராண்டா ஸ்டூஆர்ட் ( Dr.ஜேம்ஸ் பாரி ) ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார்.

பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை.

ஆங்கிலேயரின்ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார்..

ஆணாகவே வாழ்ந்தாள்.

அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம் செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டு பிடித்தார்..

எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார்...