17/02/2019

வாயு முத்திரை...


வாயு முத்திரை என்பது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு செய்வது.

பலன்கள்...

ஆட்காட்டி விரல் வாதம் தொடர்புடையது என்று தெரியும்.

இது நம் உடலில் அதிகமாக உள்ள காற்று மூலத்தை குறைக்க உதவுகிறது.

சோறு தின்னதுக்குப் பின் உடல் மதமதன்னு இருந்தால் இம்முத்திரையை வஜ்ரானத்தில் அமர்ந்து செய்தால் சரியாகும்.

நடுக்குவாதம் (Parkinson)  உள்ளவர்களின் சிரமம் குறைக்கவும் இது உதவும்.

கீழ்வாதம் உள்ளவர்களின் சிரமமும் இதனால் குறையும்...

காஷ்மீர் தாக்குதல்.. ஜம்முவில் விஹெச்பி, பஜ்ரங் தள் போராட்டம்.. வாகனங்கள் எரிப்பு, 144 தடை உத்தரவு செய்தி...


நியாயமா பார்த்தால் இவனுங்க எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் கூட தானே சண்டை போடணும்? ஏன் பொதுமக்கள் சொத்தை சேதம் செய்கிறானுங்க..?

பாஜக அரசியல் ஆதாயம் அடைவதற்க்கு அப்பாவி இராணுவ வீரர்கள் உயிர் தான் கிடைச்சதா......


http://www.indiatimes.com/news/india/bjp-leader-s-kin-alleged-it-cell-member-among-11-arrested-for-running-isi-spy-ring-in-madhya-pradesh-271308.html

பாஜக வின் பிண அரசியல்...


காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடந்து விட்டது ஆகவே பிஜேபிக்கு வாக்களியுங்கள் - பிஜேபி...

பிஜேபி ஆட்சியில் ராணுவத்தின் மீது தாக்குதல் நடந்து விட்டது ஆகவே பிஜேபிக்கு வாக்களியுங்கள் - அதுவும் பிஜேபி....

பிணத்திற்கு வாக்குரிமை இருக்குமென்றால் இந்திய மக்கள் அனைவரையும் கொன்று தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்கள்..

பாஜக எனும் பிணம் தின்னி கழுகுகள்...

தீவிரவாத தாக்குதல்களில் சில இசுலாமிய கமாண்டோக்கள் உண்டு.. ஆனால் ஒரு பிராமணன் கூட கிடையாது ஏன் இந்த போலி தேசபற்று...


கஷ்மீர் பகுதிக்கு செல்ல வேண்டாம் , அங்கு ஆயுத சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. 13 ஆம் தேதியே தன் நாட்டு மக்களை எச்சரித்த அமெரிக்கா...


traveldotstatedotgov என்ற அமெரிக்காவின் அரசு இணையதளத்தில் கடந்த 13 ஆம் தேதி அன்றே இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

பாஜக விற்கு ஏற்கனவே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை வேறு...


மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன?


மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். தமிழில் கூறவேண்டும் என்றால் பறக்கும் நெருப்பு. சாதாரணமாக விளக்கு எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது ஒருவித வெப்பம் உண்டாகும். ஆனால் இந்த மின்மினி பூச்சிகள் எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது எவ்வித வெப்பமும் ஏற்படுவது கிடையாது.

Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் தற்போது உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம். ஆச்சரியமாக இல்லை?

இப்பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்று பார்ப்போம். இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல் (biochemical) முறையாகும். இம்முறை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று அழைக் கப்படுகிறது.

பொதுவாக எங்குமே எரிபொருள் எரிந்துதான் வெளிச்சம் கிடைக்கும். இங்கும் மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும். இப்படிதான், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன.

பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு வரும் குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்.

இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் இரசாயன பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும். அப்போது அதன் உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள் கூட ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றன...

திருட்டு ஊடகங்களுக்கு ராணுவ வீரனின் சரமாரி கேள்விகள்...


இனியாவது திருந்துமா திருட்டு ஊடகங்கள்.?

https://youtu.be/yzBs1qHoCoo

Subscribe the channel for more news...

ஆழ்நிலை தியானம்...


ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது. அத்துடன் இதன் பண்பும், பயனும் பல அறிவியல் ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே இப்பயிற்சி முறை மொழி, சமயம், மார்க்கம் போன்ற குறுகிய எல்லைகளையெல்லாம் கடந்து பரந்து விரிந்து நிற்கிறது. மன இறுக்கமும், மனத் தொய்வும், மகிழ்ச்சியின்மையும் மாற்றுகின்ற ஒரு அரிய மருத்துவ முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பரபரப்பு, மனக்கலக்கம், மனத்தவிப்பு, மனத்தொய்வு, தூக்கமின்மை, மன இறுக்கம், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், மாதவிடாய்க்கு முன் தோன்றும் வேதனை, மலக்குடல் குறைபாடு போன்ற பல குறைபாடுகளை நீக்கவல்லது.

இந்த தியான முறையெனக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூப்படைவதையே இத்தியான முறை தடை செய்யக் கூடும் என ஒரு ஆய்வு முடிவு உறுதிப்படுத்துகிறது.

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவது தான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.

ஆழ்நிலை தியானத்தின் நன்மைகள் பற்றிப் பேசுகின்ற போது “ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனத்தின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்த கற்றுக் கொள்வது என்பது உடல் நலம் பேண உதவுகின்ற ஒரு நல்ல முறையாகும். நாள் தோறும் நமது நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற தேய்மானங்களை நீக்கி நரம்புகளை நெறிப்படுத்தி உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியும், புது உணர்வும் தருவதுடன் நமது தடுப்பாற்றல் சக்தியை உயர்த்தவும் மனநிலை தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது” என்று தமது ‘மெடிடேசன் பார் எவிரி படி’ (பெண்குயின்) என்னும் நூலில் குறிப்பிடுகிறார் புகழ் மிக்க உளவியலாரான லூயி புரோடோ.
இலக்கின்றி அலைகின்ற மனதை அடக்கி, அதன் பொருளற்ற புலம்பல்களை நிறுத்தி உள்ளத்தில் சாந்தியும், அமைதியும் நிலவச் செய்வதே தியான முறையாகும். ஆனால் இதைச் செய்கின்ற வழி ஒவ்வொரு தியான முறைக்கும் வேறுபடுகிறது.

ஆழ்நிலை தியானத்தைப் பொருத்தவரை அமைதியான முறையில் அமர்ந்து ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் மனதிற்குள் ஜெபம் செய்வதாகும். மனப்பாடம் செய்கின்ற காலத்தில் மனம் சில நிமிட நேரம் மனத்தில் ஒன்றலாம். சில நேரம் விலகியும் போகலாம். அது பற்றிக் கவலை கொள்ளாமல் திரும்பத் திரும்ப மனதை ஒரு முகப்படுத்த வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல, பழக்கம் மனதில் படியப், படிய தொடர்பில்லாத சிந்தனைகள் வருவதும் மனம் அலைபாய்வதும் மட்டுப்படும். மேற்பரப்பில் உயர்ந்தும், தாழ்ந்தும் அலை அலைபாய்கின்ற கடலின் அடியில் சென்று பார்த்தால் நீரின் கீழே ஒரு ஆழ்ந்த அமைதி தென்படுவது தெரியும். அந்த நிலையை ஆழ்நிலை தியானத்தின் மூலம் மனதிற்குள் உணர முடியும்.

‘பீல் கிரேட் வித் டி.எம்’ என்னும் தமது நூலில் டி.எம் என்னும் இவ்வரிய பயிற்சி, மன முறுக்கினை அவிழ்த்து, உடற் தசைகளைத் தளர்வித்து இதுவரை உணராத ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது”, என்று கூறுகிறார்கள். ஜிம் ஆண்டர்சனும், பில் ஸ்டீவன்சனும், அமைதியான நிலையில் எழுகின்ற சிந்தனைகள் வலுமிக்கதாகவும், ஆழ் மனதிலிருந்து எழுவதாகவும் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

உரத்த குரலில் ஜெபிப்பதும், மனப்பாடம் செய்வதும் புத்த மதத்தினரின் ஸென் எனப்படும் தியான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில் ஒரே சீராக மூச்சு விடுவதும் மார்பு உயர்ந்து தாழ்வதுமே உணரப்படுகிறது. விபாஸ்ஸனா என்னும் மற்றுமொரு வகைப் புத்த மதத்தினரின் தியான முறையில் உடலிலிருந்து விடுபட்ட நிலையில், வெளியிலிருந்து கொண்டு, உடலையும், மனதையும் உற்று நோக்குதல் பயிலப்படுகிறது.
தய் சூ ச்சுஹான் என்னும் போர்க் களப் பயிற்சி முறையும் அய்க்கிடோ என்னும் ஜப்பானியப் பயிற்சியும் அசைவு அல்லது இயக்கத்தின் மூலம் செய்யப்படுகின்ற தியான முறைகள் என்று கருதப்படுகின்றன.

இந்த தியான முறையில், பயிற்சி பெறுபவர்க்கு ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்ல வேண்டும் இந்த மந்திரத்தை தினம் காலையிலும் மாலையிலும் 1/2 மணி நேரம், மனதுக்குள்ளேயே ஜபிக்க வேண்டும். இதற்காக பத்மாசனத்தில் தான் உட்கார்ந்து ஜபிக்க வேண்டும் என்பதில்லை. நாற்காலியில் உட்கார்ந்து கூட ஜபிக்கலாம். ஜபிக்கும் போது மனது அலைபாய்ந்து எண்ணங்கள் சிதறினாலும், விடாமல் மந்திரத்தை சொல்லிக் கொண்டே (மனதுக்குள்) இருக்க வேண்டும். ஆழ்நிலை தியானத்தை பயின்றவர்கள் மனதை ஒரு முகப்படுத்துவது இந்த முறையால் சுலபமாகிறது என்கின்றனர்...

ஜம்மு கஷ்மீரில் நடைபெற்றுள்ள வரலாறு காணாத பயங்கர தற்கொலை படை தாக்குதலுக்குள்ளான பஸ்சில் பயணித்த, நம் 42 ராணுவ வீரர்களின் பெயர் பட்டியல்...


CRPF பஸ்சின் மீது வாகனத்தை மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..

அந்த பஸ்சில் பயணித்த 42 வீரர்களின் பெயர் பட்டியல்! இந்த தாக்குதலில் 42 ராணு வீரர்கள்  பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது...

இது தான் பாஜக வின் திருட்டு அரசியல்...


இந்தியா வும் சுதந்திரமும்...


1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால்...

இந்தியா இன்னும் இங்கிலாந்து க்கு கீழ் தான் செயல் படுகிறது (அ) எலிசபெத் ராணி நம் நாட்டை மறைமுகமாக ஆளுகிறார் என்னும் கருத்தை நான் முன் வைத்தால், உங்களில் சிலர் நம்புவீர்களா..?

இதை நான் சொல்வதற்கு சில ஆதாரங்கள் காரணங்கள் பல இருக்கிறது..

அதை இரத்தின சுருக்கமாக கூறுகிறேன்..

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்  பல நிபந்தனைகள் போடப்பட்டது, அதில் இந்தியா என்றும் British common wealth மையத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்று.

பின்னாளில், British common wealth என்னும் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதற்காக "common wealth nations" என்று பெயரை திருத்தி வைத்தார்கள்.

இந்த common wealth அமைப்பில் 52 நாடுகள் இருக்கின்றன, இதற்கு தலைமை எலிசபெத் அம்மையார்.

இப்போ, எங்கள் பக்கத்தில் ஒரு மூன்று நான்கு எடிட்டர் இருக்கிறோம் , என்ன தான் நங்கள் சுதந்திரமாக எழுதினாலும், மீம்ஸ் போட்டாலும், எங்களுக்கு அட்மின் ஒருவர் தலைமை வகுக்கிறார்..

நாங்கள் அட்மின் க்கு கீழ் தான் செயல் படுகிறோம், என்று கூறலாம்.

அதுபோல என்ன தான் வெவேறு நாடாக இருந்தாலும், சுதந்திரமாக இருந்தாலும்
காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் 52 நாடுகளையும் எலிசபெத் தான்  மறைமுகமாக ஆளுகிறார்.

அதில் சிறிதாய் இருக்கும் சில நாடுகளை மட்டும் நேரடியாக ஆளுகிறார்.

காமன்வெல்த் என்னும் அமைப்பு
நவீன கால பிரிட்டிஷ் காலனி என்றும் கூட கூறலாம்.

1992 ஆம் ஆண்டு எலிசபெத் இந்தியா
வந்தார்..

இவ்வருகை எலிசபெத்க்கு கீழ் தான் இந்தியா உள்ளது என்னும் கருத்தை உறுதிப்படுத்தும் படி அமைந்தது.

உங்களுக்கு தெரியும் நாம் வெளிநாட்டை சுற்றிப்பார்பதற்கோ அல்லது அங்கு வேலை செய்வதற்கோ நமக்கு விசா வேண்டும்.

விசா (அ) நுழைவானை என்பது குறிப்பிட்ட ஒரு அந்நிய நாட்டிற்கு செல்வதற்கோ அல்லது அங்கு தங்குவதை அணுமதிக்கும் ஓர் ஆவணம் ஆகும்.

ஆனால் நம் சொந்த நாட்டில் தங்குவதற்கு, வருவதற்கு விசா தேவையில்லை.

இதே அடிப்படையில் தான் எலிசபெத் அவர்கள் நம் நாட்டிற்கு விசா இல்லாமல் வந்தார்.

(அல்லது இப்படி கூறலாம்,)

இதே அடிப்படையில் தான் எலிசபெத் அவர்கள் , அவர் ஆளும் நாட்டிற்கு விசா இல்லாமல் வந்தார்.

இவ்வளவு ஏன் நமது தேசிய கீதமே
எலிசபெத்தின் புகழ் பாடுவதை தான் எழுதப்பட்டது என்னும் ஒரு கருத்து வேற உலாவுகிறது.

சட்டப்படி எலிசபெத் க்கு கீழ் இந்தியா உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் குறைவாக தான் இருக்கிறது.

ஆனால் , உங்களில் பலர்க்கு தெரியும் இந்தியாவை மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளை corporate company தான் ஆட்டி படைக்கிறது என்று.

அதாவது ஒரு நாட்டின் பல்வேறு அசைவுகளுக்கும் , விளைவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பின்னால் ஒரு corporate company இருக்கும்.  (தனி ஒருவன் படம்)..

அது போல் நம் நாட்டில் உலாவரும் பெரிய கம்பெனிகளுக்கெல்லாம் தலையானது..

Hindustan unilver ltd என்னும் கார்பொரேட் கம்பெனி..

Hindustan unilver கம்பெனி யை பற்றி சொல்ல ஆரம்பித்தால், இப்பதிவு இன்னும் நீளமாக போகும்.

அக்கம்பணியை பற்றி  பார்த்தவுடன் புரிந்து கொள்ள கீழ்  உள்ள படத்தை காணுங்கள்.

ஆக இப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் hindustan unilver இன் தயாரித்த ஒரு பொருளையாவது உபயோக படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

hindustan என்னும் பெயர் கொண்டதால் அது இந்திய கம்பெனி என்று நினைக்கலாம்.

ஆனால் hindustan unilver கம்பெனி uniliver என்னும் பன்னாட்டு கம்பெனி யின் கீழ் செயல் படுகிறது.


ஆனால் uniliver கம்பனியே Crown properties என்னும் கம்பெனி க்கு கீழ் மறைமுகமாக செயல் படுகிறது.

அந்த crown properties க்கு தலைமை யார் என்று பார்த்தால்.... வேற யாரு நம்ம எலிசபெத் அம்மையார் தான்....

இப்பொழுது மேலே  போட்டிருக்கும் பதிவை படியுங்கள்...

பாஜக வின் தேர்தல் நாடகம்...


மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம்...


அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

மனதை அடக்க நினைத்தால் அலையும்.

அதை அறிய நினைத்தால் அடங்கும்.

தவறு செய்வதும் மனம் தான்.

இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.

அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.

குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.

வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.

அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.

அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.

இன்னும் சொல்லப் போனால் கவலையின் போது பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும்.

தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.

தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.

திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப் பிடித்தால் போதும்...

Viral Video : லஞ்சம் கேட்ட போலீஸ் அதிகாரியை பேருந்து முன் பக்கத்தில் வைத்து இழுத்து சென்ற டிரைவர்...


https://youtu.be/UyOJs43smss

Subscribe the channel for more news...

அட மானங்கெட்ட தமிழா.. இது தான் உன் இந்தியா...


இந்திய இராணுவத்திற்கு ஆயுதம் வாங்குவதே.. தமிழனை அழிக்க தான்...

கூடாங்குளத்திற்கு அனுமதி.
கெயிலுக்கு அனுமதி.
மீத்தேனுக்கு அனுமதி.
சார்ட்டிலைட்க்கு அனுமதி.
நியூட்ரீனோக்கு அனுமதி.
சாகர்மாலாக்கு அனுமதி.

கடைசித் தமிழன் சாகும் வரை விட மாட்டான் இந்தியன்.

உலகாண்ட இனம் உருக்குலைந்து போகட்டும்.

அயலாருக்கும் அன்னமிட்ட இனம் அழிந்து போகட்டும்.

தமிழா நாயினும் கீழாய் தாழ்ந்து போ..

நக்கிக் குடி அதை நல்லதென்று சொல்..

இழந்து வாழ் இந்தியன் என்று கூவு....

மானங்கெட்ட ஜென்மங்களா...
இன்னுமா டா நீங்கள் இந்தியன்...

இந்த உணவுகளால் புற்று நோய் ஏற்படலாம். இதைத் தினசரி உணவில் இருந்து ஒதுக்கி வைப்பது நல்லது...


பழந்தமிழர் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த கருப்பட்டி இன்று தமிழர்களால் முற்றிலும் மறக்கப்பட்டு வருகிறது...


ஆளுக்கொரு பனங்கருப்பட்டி பயன்படுத்தினால் பல லட்சம் பனைமரங்கள் வெட்டாமல் காக்கப்படும் என்பதே மறைமுக உண்மை.

பனை வளர்ப்பு பற்றி பெரிதாக பேசும் நாம் இருக்கும் பனைகளை காப்பதற்கு அதை சார்ந்து வாழும் மக்களை வளப்படுத்துவோம்.

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.

வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.

கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.

சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

பாமக - அமமுக கூட்டணியை நான் வரவேற்கிறேன்... இது நடந்தால் மிக்க மகிழ்ச்சி...


திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கூட்டணியை  தவிர்க்க வேண்டும்...

மகாபாரதப் போரும் தமிழர்களும்...


மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா?

உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும்.

இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது?

ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது.

எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது.

என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம்.

அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம்.

இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்...

தமிழ் மன்னர்கள்...

தொல் தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார்.

இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர்.

இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள்.

ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன் : பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.

தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன் : குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா.

பீமன் : மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா.

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று).

சகாதேவன் : நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா.

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன் : பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா.

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன்.

தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்...

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தொல் தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும்.

இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படை வீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது.

அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல் தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படை வீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்து கொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்...

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417...

தமிழக அரசின் இந்த திட்டத்தத்தை வரவேற்போம்...


அலைகழிப்பு...


நீங்க ஒரு செயலுக்காக பல முறை அலைகழிக்கபட்டால் உங்கள் மனம் வெறுத்து போய் " சே என்னப்பா ஒரு சின்ன விஷயத்திற்கு இத்தனை அலைகழிப்பு என்று மனம் வேதனையோடு எதிர்மறையான சொற்களை பயன்படுத்துவது வழக்கம்.

அதனால் உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை அதிர்வுகள் உருவாகும் அது இதோடு நில்லாமல் உங்கள் பிற விஷயங்களிலும் தடை, ஏற்படுத்தும்.

மனம் எப்போதும் அந்த ஒரு விஷயத்தில் முன்னிருத்தும்.

அதனால் இன்று ஒரு காரியமாக சென்றோம் நாளை வர சொன்னார்களா , சரி ஐயா மகிழ்ச்சி நன்றி என்று சொல்லி வாருங்கள்.

முதலில் உங்கள் மனம் சாந்தமாகும்,

இரண்டாவது உங்களை மறு தினம் வர சொன்ன நபரின் எண்ணம் உங்கள் மகிழ்ச்சி நன்றி என்ற வார்த்தையை பற்றி யோசிக்கும்.

மூன்றாவது உங்களை நாளைக்கு வாருங்கள் என்று சொன்ன அந்த நபரே ஐயா தாங்க இப்போதே முடித்து தருகிறேன் என செயல் பட தொடங்கி விடுவார்.

நல்ல நேர்மறை எண்ண அலைகள் நம்மை சுற்றி இருப்பவர்களை நம்மோடு ஒன்றினக்க செய்யும்.

முயன்று பாருங்கள் வெற்றி நம்ம பக்கம் தான்...

இந்தியா ஜனநாயக நாடா ?


68 ஆயிரம் காஷ்மீரிகளைக் கொன்ற ஒரு இந்திய ஒன்றியத்தை  ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை..

குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்றும் கூற தகுதியில்லை..

இலங்கையுடன் கூட்டு சேர்ந்து 2 இலட்சத் தமிழர்களை கொன்று குவித்த இந்தியம் அமைதிக்கான தேசமும் அல்ல...

பாஜக மோடி 4000 கோடி ஊழல்...


RMS Queen Mary - கப்பலில் ஆவிகள் உலவும் திகில் மர்மம்…


RMS குயின் மேரி.. இது டைட்டானிக் கப்பல் கட்டப்பட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட பிரம்மாண்ட கப்பல்..

இது இப்போது கலிபோர்னியாவின் லாங் பீச் கடற்கரை மணல் திட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட ஹோட்டல்.

இந்த கப்பலில் இரவு தங்கும் சூயுட்ஸ்கள் (365) , டைனிங் ஹால்கள், பங்விட் [Banquet ] எனப்படும் இரவு நினைவு பார்டிகள், வரலாற்று தேடல்களுக்கான சுற்றுலா, எல்லவற்றிற்கும் மேலாக ஆவி மற்றும் பிசாசு அனுபவங்களை பெற அழைப்பு விடுக்கிறார்கள்.

இந்த ஹோட்டலுக்கு ஆண்டுக்கு 1.4 மிலியன் பேர் வந்து செல்கிறார்கள்..

ஹவுண்டேட் பகுதியாக சொல்லப்படுகிற இந்த பிரம்மாண்ட கப்பல் குறித்த தகவல்களை காண்போம்..

ஜான் ப்ரெளண் கம்பெனி (ஸ்காட்லாந்து) மற்றும் குனார்ட் ஸ்டீம்சிப் நிறுவனத்தால் பொருளாதார நெருக்கடியினால் முக்கால் பாகம் கட்டி முடிக்கப்பட்டு ஒன்பது தளங்கள் கொண்டு முழுமையாக முடியாத நிலையில் 1931 ல் இருந்தது..

பின்னர் இந்த நிறுவனம் வைட் ஸ்டார் லைன் கம்பெனியுடன் இணைந்து இந்த கப்பலை 1936 ல் உருவாக்கினார்கள்..

இந்த வைட் ஸ்டார் லைன் தான் புகழ் பெற்ற டைட்டானிக் கப்பலை நடத்தி வந்த நிறுவனம்..

அதனுடைய சாயல்கள் இந்த கப்பலில் பார்க்கலாம்.. அதை விடவும் இது பெரியது.

இந்த பிரம்மாண்ட கப்பலின் நீளம் 1019.5 அடி, உயரம் 181 அடி புகைகூண்டு வரை,எடை 81,237 டண்கள், இதன் எஞ்சின் 1,60,000 குதிரைதிறன் கொண்டது. 3000 பேர் சொகுசாக பயணிக்கலாம். இக்கப்பலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் கிரே கோஸ்ட்…

மே 27, 1936 ல் வெள்ளோட்டத்தை துவக்கி சிறப்பித்தவர்கள் எட்டாம் எட்வர்ட் அரசர், ராணி மேரி, இளவரசி எலிசபத், டச்சு பிரபுக்கள்.

1001 அட்லாண்டிக் பயணங்களை முடித்து செப்டம்பர் 19, 1967 ல் ஓட்டத்தை நிறுத்தியது அதாவது 31 வருடங்கள் உழைத்தது.

இதனுடைய பெரிய உருவம் காரணமாக பனாம கால்வாய் வழியாக செல்ல முடியவில்லை.

அமானுஸ்யம் மற்றும் ஆவிகள் [ஸ்ப்ரிட்] குறித்த ஆராய்சியாளர் பீட்டர் ஜேம்ஸ். 1991 இல் இருந்து இக்கப்பலில் இது பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர்.

அவர் இப்படி கூறுகிறார்...

எனது ஆராய்சியின் படி குயின் மேரி அதித பேய்கள் நடமாட்டப் பகுதியாக கருதுகிறேன். பேய் குறித்த ஆராய்சிகள் உலகின் பல பகுதிகளில் மேற்கொண்டேன்.

இந்த கப்பலில் 600 பேய்கள் ஆக்டிவாக இருக்கு, அநேக துர் மரணங்கள் இந்த கப்பலில் ஏற்பட்டது காரணமாக இருக்கலாம்.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 16000 துருப்புகளை ஏற்றி இறக்கி உள்ளது.

இந்தியப் பெருங்கடலின் அதிக வெப்பத் தாக்குதல் காரணமாக அதிக அளவில் இறந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை அச்சமயத்தில் ஒருமணியில் 7 நிமிடங்களுக்கு ஒருவர் இறந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் U.S கூட்டணி துருப்புகள் பிடித்த ஜெர்மன் மற்றும் இத்தாலிய போர்க்கைதிகள் இதில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.

சிறைக்கொடுமைக்கு பயந்து அநேகர் தற்கொலை செய்து கொண்டனர்.

சரியான மருத்துவ வசதி மறுக்கப்பட்டும் பலர் இறந்தனர். [ எண்ணிக்கை தெரியவில்லை…] அந்த கால கட்டங்களில் சர்வீஸ் ராணுவத்தின் கையில் இருந்திருக்கிறது.

இதன் குராகோ எனும் பாதுகாப்பு [எஸ்கார்டு போட்டுகள்] கப்பல்களின் மேல் மோதி 300 பேர் வரை அப்போர் சமயத்தில் மூழ்கி இறந்தனர்.

இக்கப்பலில் விநோத சப்தங்களும்.. காப்பாற்றச் சொல்லும் கூக்குரல்களும் ஓலங்களும் சில பகுதிகளில் கேட்கிறது.

இதில் இருந்த நீச்சல் குளத்தில் பல பேர் செத்துள்ளார்கள். 13 நம்பர் அறை காற்று புகாவண்ணம் அடைக்கப்பட்டுள்ளது.

கப்பலின் மையப்பகுதியில் முதல் தர நீச்சல் குளத்தின் அருகில் 4 – 5 வயதுள்ள சிறுமி தன்னோடு பேசியதாகவும்.. கப்பலின் மற்றொரு நீச்சல் குளத்திற்கு அழைத்ததாகவும்.. இச்சிறுமியின் பெயர் ஜாக்கி எனவும்.. சில சமயங்களில் இவளைத் தேடி சாரா எனும் நடுத்தர பெண்மணி ஒருவரும் வந்து சென்றதாகவும் கூறுகிறார்.

அந்த குறிப்பிட்ட நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது. மேற்படி இருவரும் அந்த நீச்சல் குளத்தில் முழ்கி இறந்தவர்கள்… கப்பலின் கேப்டன் ஸ்டார்க் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும்.. ஸ்பிரிட் சிறுமி ஜாக்கி நகர்த்திய பொம்மை பற்றிய வீடியோ டேப் பதிவு உள்ளதாகவும். இச்சிறுமியை தான் மட்டுமல்ல நூறுபேர் ஒரே சமயத்தில் பார்த்துள்ள சாட்சி இருக்கிறது என்கிறார்…

சாரா நகத்தால் கையில் பிராண்டியது…
இப்படி பல தகவல்களை பீட்டர் ஜேம்ஸ் அடுக்குகிறார்..

ரூபின் வாக்னர் எனும் பெண்மணி, இதன் மார்கெட்டிங் கம்யூனிகேசன் டைரக்டர்..

ஒரு கால கட்டத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவு, விமான பயண அதிகரிப்பு, அதிகரித்த செலவு இவை காரணமாக இக்கப்பல் பயணம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்.

ஐரோப்பா மற்றும் யூனைடேட் மாகாணத்திற்கிடையே இக்கப்பல் இயங்கிவந்ததாகவும் இதன் பெரிய உருவம் காரணமாக பனாமா கால்வாய் கடல் பகுதியில் நுழையாமல் போனதாலும் இதன் இயக்கம் நிறுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கிறார்.

அவருக்கு ஸ்ப்ரிட் அணுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் ஆனால் சக ஊழியர்களுக்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் தன்னோடு பகிர்ந்து கொள்ளப்ப்பட்ட தாகவும் சொல்கிறார்.

அலுவலக ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் தானாக திறந்து மூடும் கதவுகள். பழங்கால உடையணிந்த உருவங்களின் நடமாட்டம். கப்பலின் வெவ்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்ட தலைகள். கை. கால்கள். உருவங்கள் தோன்றி மறைதல்… என பல சம்பவங்கள் சொல்லப்படுகின்றன.

முனுமுனுக்கும் குரல்கள், அடித் தொண்டையில் வெளிப்படுத்தப்பட்ட சப்தங்கள்.. சர்சில் சூயூட் பகுதியில் ரூமின் சுவரில் அவரின் நேம் போர்டு தோன்றி மறந்த நிகழ்வு. [கப்பலில் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது] சுருட்டு புகை.. வாசனை நடுநிசி மர்மங்கள். சில்லிட்ட உணர்வு.. சில ரூம்களில் கட்டில் நகர்வு… சுவரினுள்ளிருந்து வெளியே தோன்றி மறைந்த உருவங்கள்.. அணைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரிந்து அணையும் மர்மம்..

இவையெல்லாம் கேட்பதற்கு ஏதோ சினிமா காட்சிகள் போலவே இருக்கிறது. ஆனால் உண்மை என்கிறார்கள் சென்று அனுபவப்பட்டவர்கள்...

Benefits Of Ginger / இஞ்சியின் நன்மைகள்...


https://youtu.be/bX3yTIHHc6A

Subscribe the channe for more tips...

நீங்கள் காதலர்தினம் கொண்டாடுபவரா.?


இந்த நாள் எதுக்கு உருவாக்கப்பட்டது என்று பார்ப்போம்...

1. செயின்ட்.வேளன்டெயின் இறந்தது, பிறந்தது பிப்ரவரி14 இல்லை
அப்பரம் என்ன மயித்துக்கு பிப்ரவரி14 காதலர்தினம்..

ஒரு நாட்டின் பாரம்பரிய விழாவை அழிக்கவே இந்த பிப்ரவரி14 தேர்வு செய்யப்பட்டது..

லூப்பர் கேடஸ் இதுதான் ஐநூறு வருஷத்துக்கு முன்பு பேகன் மத மக்களால் கொண்டாடப்பட்ட லவ்வர்ஸ் டே..

இது எப்படி இருக்கும் தெரியுமா ஒவ்வொருத்தனும் அவுங்க லவ் பன்ற பொண்ணுங்கள சாட்டையாலயும் கல்லாலயும் அடிச்சு ரத்த களரியா ஆக்குவானுங்க.. அதுக்கு அப்புறம் அவ கூட செக்ஸில் ஈடுபடுவார்கள் அவ எந்த அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்துறாளோ அந்த அளவுக்கு புனிதமானவள் என்று அர்த்தம்.. எப்படி லவ்வர்ஸ் டே..

500வருடங்கள் முன்பு ரோம் நகரை கெளிடியஸ் மன்னன் ஆட்சி செய்து வந்தார்..

அவரு போரை அதிகமாக விரும்பினாரு ஆனா அந்த நாட்டு காரனுங்க லவ் பன்னனும் பொண்டாட்டி கூட சந்தோசமா வாழனும்னு ஆசை பட்டானுங்க (எல்லாருக்கும் இருக்குற ஆசை தான்)..

ஆனா அவரு இனி பேகன் மதத்தை சேர்ந்தவர்கள் யாரும் கல்யாணமே பண்ணக்கூடாது னு சட்டம் போட்டாரு..

அந்த நேரம் கிருஸ்தவ மதம் சிறிய அளவில் தான் இருந்தது அதனால அவங்கள கண்டுக்கல..

ஆனா இந்த பேகன் மதத்தை சேர்ந்தவர்கள் கிருஸ்தவ முறையில் கல்யாணம் பண்ண ஆரம்பிச்சானுங்க..

அந்த கல்யாணத்த நடத்தி வச்சதுதான் வேளன்டெயின்..

அவரு வர்றவங்க யார்யவருன்னு பார்க்க மாட்டார் ஜோடியா வந்தா கல்யாணம் பன்ணி அனுப்பிடுவாரு ஏன்னா அப்பதான் அவுங்க மதத்தை பரப்ப முடியும்..

கெளிடியஸ் காண்டாயிட்டாரு என்னடா இது நம்ம கல்யாணம் பண்ணாம போருக்கு வாங்கடான்னா சொன்னா இந்தாளு கல்யாணம் பண்ணி ரூமுக்கு அனுப்பி வைக்கிறானே அப்படினு வேளன்டெயின்னை கைது பண்ணி ஜெயிலில் அடைச்சாரு..

அங்க அவருக்கு ஒரே ஒரு சின்ன டாஸ்க்கு கொடுத்தாங்க வெளிய போயி செஞ்சு வச்ச கல்யாணத்த செல்லாதுன்னு சொல்லனும் அவ்வளவு தான் ஆனா அவரு முடியாது மன்னா அப்படீன்னு கலாய்ச்சுட்டாரு..

ரைட்டு இவன முடிச்சுற வேண்டியதுதான் அப்படினு போட்டு தள்ளிட்டாரு கெளிடியஸ்..

கிறிஸ்தவ மத போதகர்கள் ஒன்னு சேர்ந்து வேளன்டெயின்க்காக ஒரு நாள நினைவுதினமா கொண்டாடனும்னு முடிவு செஞ்சாங்க அத அவரு செத்த அன்னைக்கு வைக்க வேண்டியதுதான அதுலயும் மதத்தை எப்படி பரப்பளாம்னு யோசிச்சானுங்க..

ஏற்கனவே இவுனுங்க பிப்ரவரி15 லூப்பர் கேடஸ் னு ஒருவிழா கொண்டாடுரானுங்க.. அதுல பொண்ணுங்கள சாணியடி சக்கையடி அடிப்பானுங்க..

நம்ம பிப்ரவரி14 வேளன்டெயின்ஸ் டே அப்படினு ஒன்னு கொண்டாடுவோம் அதுல பிடிச்ச பொண்ணுகிட்ட காதலை சொல்லி பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து நைட் ரூமுக்கு கூட்டிட்டுபோயி கொண்டாடட்டும் அப்படினு முடிவு செஞ்சானுங்க..

இது ரோம்ல நடந்தது. எப்படி உலகம் முழுவதும் பரவுனதுனா வியாபாரம் செய்ய மட்டும் தான்..

நல்லா யோசிங்க லவ்வர்ஸ் டே அன்னைக்கு கேக்  கிப்ட். நகை  ட்ரெஸ் சினிமா காண்டம் எவ்வளவு வியாபாரம் நடக்கும்னு..

ஏன் ஐநூறு வருஷத்துக்கு முன்னாடி நம்ம தமிழன் யாரும் லவ் பண்ணுனதே இல்லையா...

அப்பரம் என்ன மயித்துக்கு இந்த பிப்ரவரி14 காதலர் தினம் மானங்கெட்ட ஈத்ர நாய்களா..

உண்மையா காதலிச்சா உங்களுக்கு தினமும் லவ்வர்ஸ் டே தான்டா..

இல்லை நான் லவ்வர்ஸ்டே கொண்டாடியே தீருவேன் அப்படினா பிப்ரவரி15 லூப்பர் கேடஸ் கொண்டாடுங்க முடியுமா ஏன்னா அதுதானே முதலில் கொண்டாடப்பட்ட லவ்வர்ஸ் டே....