21/07/2020
தலை சுற்றுகிறதா?
யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம்.
ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள்.
அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம்.
கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது.
அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்..
முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.
இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம்.
உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.
உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம்.
ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.
14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.
உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், முட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் முலம் பெருக்கிக் கொள்ள முடியும்.
இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்...
Organ mafiya? கொரோனா வை வைத்து உடல் உறுப்பு திருட்டு... இராஜஸ்தான் , மக்கள் ஆத்திரம்...
கொரோணா பாதிப்பால் இறந்ததாக கூறி உடலை பார்க்க விடாமல் அடக்கம் செய்ய முயற்சி , சந்தேகப்பட்டு பார்த்தால் உடல் உறுப்பு திருட்டு இனி யார் இறந்தாலும் சந்தேகப்படுங்கள்..
இந்த காணொளியை பாருங்கள்..
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=RD3p0hASd80
திலீபனின் இறுதி உரையிலிருந்து…
என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது.
நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.
நான் திருப்தி அடைகிறேன்.
இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.
ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.
நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.
நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.
நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.
ஆனால் பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.
நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.
நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.
மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..
இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.
எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.
எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது.
இதில் பிழைகள் இருக்கலாம்.
இதை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...
கீழடியில் 12 கோடியில் பிரமாண்ட அருங்காட்சியகம்-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்...
கீழடியில் 12 கோடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட அகழாய்வு பணிகளில், முதல் 3 கட்ட அகழாய்வு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது.
பின், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை தமிழக தொல்லியல்துறை வெளியிட்டது. அதன் மூலம் வைகை கரையின் நகர நாகரீகம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது. அதன் பின்னர் கீழடி அகழாய்வு பகுதிகளை விரிவுபடுத்தி அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை பாதுகாத்து பராமரிக்கும் வகையில், கீழடியில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க பட்ஜெட்டில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25 வயது மருத்துவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை...
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 25வயது மருத்துவர் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது, மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன், காலை 5 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
பணிச்சுமை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என மருத்துவத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. நேற்று இரவு வரையிலும் கொரோனா வார்டு பணியைக் கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர் கண்ணன், தற்கொலை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும்,மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நலனின் அக்கறை செலுத்த வேண்டும் பணிச்சுமையை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் மருத்துவர்களை கவனிக்க வேண்டும் என மருத்துவர் ரவீந்திரநாத் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்...
மோடி அநியாயத்துக்கு அந்த 27 % OBC இட ஒதுக்கீட்டை மாநிலங்களுக்கான All India Quota வில் ரத்து பண்ணிட்டாருங்க - திமுக உபிஸ்...
அப்படியா? எந்த வருஷத்துல இருந்து? - நான்...
2017 NEET வந்ததுல இருந்துங்க - உபிஸ்...
அப்போ 2016 ல NEET இல்லாதபொழுது குடுத்துட்டிருந்தாங்களா? - நான்...
இல்லிங்க - உபிஸ்...
அப்போ 2013 ல காங்கிரஸ் ஆட்சியில குடுத்தாங்களா? - நான்...
இல்லிங்க - உபிஸ்...
அப்போ 2008 ல திமுக பாமக லாம் கூட்டணியில் இருந்தப்ப குடுத்தாங்களா? - நான்...
இல்லிங்க - உபிஸ்...
அப்பறம் என்ன ம*குடா ஏதோ புதுசா ரத்து பண்ண மாதிரி பீலா விடறீங்க? இல்லாத ஒன்னை எப்படிடா ரத்து பண்ண முடியும்? படுவா ராஸ்கல்.. எழுந்திருச்சு ஓடிப்போடா - நான்...
எங்களை பொறுத்த வரை...
.திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக எல்லாம் வெவ்வேறு பெயரிலுள்ள ஒரே தத்துவத்தின் கட்சி...
அதாவது தமிழர்களுக்கு எதிரான கட்சி...
தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...
தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி..
சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.
இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.
இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...
மக்கள் தொகை குறைப்பும்.. பில்கேட்ஸ்சின் கொரோனா அரசியலும்...
தற்போதுள்ள கால சூழ்நிலையில், மக்கள் தொகையை, கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலும் மிக முக்கிய பங்கினை, Bill and Melinda Gates Foundation, Monsanto, Dow Chemical ஆகிய மூன்று நிறுவங்களும் செய்து வருகின்றன...
Bill and Melinda Gates Foundation...
மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குறைப்பில் மிக முக்கிய நிறுவனம். இவனின் கருத்தடை மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள், சொட்டுமருந்துகள், முக்கியமாக தடுப்பூசிகள், போன்றவற்றினால், குழந்தையின்மை, கருச்சிதைவு, கர்ப்பப்பை புற்றுநோய், ஆண்மை குறைபாடு, மூளை சோர்வு மற்றும் பல நோய்கள் உற்பத்தி செய்யும் பங்கு இந்த Bill and Melinda Gates Foundation-க்கு உண்டு.
பில் கேட்ஸ் மற்றும் அவரின் தொண்டு நிறுவனம் பற்றிய, Genetically Modified Organism -GMO Foods and seeds, Pushed Lap Crowd meet, (செயற்கை முறை இறைச்சி தயாரித்தல், மரபணு மாற்றம் செய்யப்படும் கொசு உற்பத்தி, ரசாயனத்தால் சூரியனை மறைக்கும் திட்டம், 5G முதலீடு, என பல சதித்திட்டங்கள், பல மோசடிகளை பற்றி பலரும் அறிந்திருப்போம்.
Monsanto ( Bayer )...
இது மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேளாண் உயிர்த்தொழில்நுட்ப நிறுவனமாகும், (Genetically Modified Organism -GMO). ஒவ்வொரு நாட்டிலும் "பசுமை புரட்சி" என்ற பெயரில் களமிறங்கி விவசாய நிலங்களை நாசமாக்குவது, அதிக மகசூல் உற்பத்தி, இரட்டிப்பான லாபம் என ஆசை வார்த்தை கூறி, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்து, நம் மண் வளங்களை கெடுப்பது, மேலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் விதைகள், விளைவிப்பது இவனின் முக்கிய மோசடி தொழில். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மூலம், புது, புது, நோயினை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய மருத்துவ வணிகத்தை உருவாக்குவது. நாம் சாகும் வரை மாத்திரை உண்ண முக்கிய காரணமே இவன் தான்.
கொடுமை என்னவென்றால் இதன் 5,00,000 பங்கினை, அதாவது 23 பில்லியன் மதிப்புள்ள பங்கு Bill Gates-க்கு சொந்தமானது.
Dow Chemicals...
உலகில் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் மற்றும் ஆராய்ச்சி செய்யும் மிக முக்கிய இரண்டாவது பெரும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் முக்கிய பங்கு, Bill Gate-க்கும், Monsanto-க்கும், தேவையான வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி செய்து தருவது அல்லது உற்பத்தி செய்ய வேதிப்பொருட்கள் தருவது. மேலும் மருந்து மாத்திரைகள், உணவு உற்பத்திக்கான வேதிப்பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாய உரம் தயாரிக்க தேவையான வேதிப்பொருட்கள், PVC உற்பத்தி, சானிடைசர், இவ்வுலகில் வேதிப்பொருள்களால் தயாரிக்கும் அணைத்து நிறுவனங்களுக்கும் இவனே chemical உற்பத்தி செய்து தருபவன். Locusts பாலைவனம் வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு இவனிடம் மட்டுமே பூச்சிக்கொல்லி மருந்து உள்ளது. இன்னும் சிலர், சமீபகாலமாக Dow நிறுவனம் வீழ்ச்சியில் உள்ளது, இதனை சரிகட்டவே வெட்டுக்கிளிகளின் தாக்குதல் உருவாக்கப்பட்டது என்ற தகவலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று நிறுவனங்களும், மனிதகுலத்திற்கு மிக மோசமான பாதிப்பை உருவாக்கக்கூடியவை. இனி வரும் காலங்களில் இந்த மூன்று நிறுவங்களும் அதிவேகமாக செயல்படும்...
அப்படியென்றால், மனிதர்களுக்கு, நோயினை உருவாக்கி, மனிதர்களின் ஆயுட்காலங்களை இன்னும் வேகமாய் குறைக்கும் பணியினை விரைவாக்கும்...
தமிழ்த் தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே...
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்...
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்...
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..
ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே...
மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்.
நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்).
அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாட வைத்து விட்டனர்.. இந்த திராவிட வந்தேறி..
நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவி வருகிறோம்.
தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...
நமக்கு தெரிந்த தெரியாத உலகின் எட்டாவது கண்டம்...
உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் இருக்கின்றன என்று கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளன என்று அனைவரும் சொல்லி விடுவார்கள்.
ஆனால் வில்லியம் பீப் என்ற அறிஞரோ உலகில் மொத்தம் எட்டு கண்டங்கள் இருக்கின்றன என்கிறார்.
இந்த எட்டாவது கண்டம் யாருக்கும் தெரியாத ஒன்று.
இது தரையில் இருந்து 200 அடி உயரத்தில் இருக்கிறது என்கிறார்.
இது ஒரு வித்தியாசமான உலகம் என்றும் கூறுகிறார்.
இந்த உலகில் 100, 200 அடி உயரம் வளர்ந்து நிற்கும் மரங்கள் லட்சகணக்கான சதுர மைல்களில் பரவி நிற்கின்றன. இந்த மரங்களின் உச்சியில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.
அதுதான் உலகின் எட்டாவது கண்டம் என்கிறார் அவர்...
1980ம் வருடம் வன ஆராய்ச்சியாளர் டெர்ரி இர்வின் அமேசான் காடுகளில் அலைந்த போது அவர் மீது சில பூச்சிகள் வந்து விழுந்தன.
அந்த பூச்சிகளை பற்றி இதற்கு முன் அவர் தெரிந்து வைத்திருக்கவில்லை.
பூச்சிகள் சம்பந்தமான புத்தகங்களிலும் அவற்றை பற்றிய குறிப்பு இல்லை. அது இதுவரை உலகம் அறிந்திராத புதுவகையான பூச்சியினம்.
அதிசயித்து போன இர்வின், மரத்தின் மீது ஏறி அதன் உச்சியை ஆராய்ந்தார்.
என்னவொரு ஆச்சர்யம். அங்கு இதுவரை காணாத பல புதிய பறவைகள், பூச்சிகளை கண்டு பிடித்தார்.
அடர்த்தியான மரக்கிளைகள் இருப்பதால் பறவைகளோ, பூச்சுகளோ கீழே வர வாய்ப்பு இல்லை. மரத்தின் உச்சியிலே இனப்பெருக்கம் செய்து அங்கேயே வளர்ந்து அங்கேயே அவை மடிந்து போகின்றன. மனிதன் மேலே ஏறி பார்த்தால்தான் புதிய இன கண்டு பிடிப்புகள் சாத்தியம்.
எட்டாவது கண்டத்தில் மட்டும் 3 கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
இவற்றை ஆராயும் பணிக்கு ‘காட்டுக்கூரை’ என்று ஐக்கிய நாடுகளின் இயற்கை பராமரிப்பு நிறுவனம் பெயரிட்டிருக்கிறது.
இந்த காடுகளின் கூரை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த எட்டாவது கண்டத்தில் மனிதனின் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி நம்புகிறது...
Subscribe to:
Posts (Atom)