28/07/2021

புரட்சி தோற்றதாக வரலாறே இல்லை...

 


இருபதாம் நூற்றாண்டு பல இணையற்ற புரட்சிகளை பதிவு செய்தது, இவ்வுலகிற்கு பல வீர தீரம் மிக்க போராளிகளை அடையாளம் காட்டியது.

பாரெங்கும் பண்ணையர்கள் கூட்டம் திண்ணை நிலத்தையும் விடாது அபகரித்த காலம், செங்கொடி ஏந்தி செருப்படி கொடுத்து அவர்கள் செருக்கை அடக்கினார்கள்; சமவுடமை பிறந்தது.

செங்குருதிகள் ஆறாக உடலங்கள் சிதறி வேறாக உலகையே உலுக்கியது இனப்படுகொலைகள், புரட்சிகள் பூத்தன, இப்பூக்கள் காயாகின, கனியாகின, கனிகள் விதையாகின, விதைகள் பல மரங்களாகின‌, புதிதாய் பல தேசங்கள் மலர்ந்தன.

கொள்ளையிட வந்த கூட்டம் கோட்டையை நிறுவி கொடியினை ஏற்றையிலும், வெள்ளையனை வெளியேற்று அன்றேல் வீரமரணம் எய்து என்ற வெறியே; விடுதலை எனும் வெற்றிக்கனி.

அறிவுப்புரட்சிகள், தொழிலாளர்களின் புரட்சிகள், இன, மொழிப் புரட்சிகள் என ஏராளம் மக்கள் புரட்சிகள் வெற்றி கண்டன.

எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்ட மக்கள் புரட்சிகள்  இன்று எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றன.

உலக புரட்சிகளை எல்லாம் புரட்டி புரட்டி படிக்கிறோம், புரட்சியாளர்களை எல்லாம் பூப்போட்டு வணங்குகிறோம்..

ஆனால் எம் இனத்தின் இழிவை தீர்க்க எந்த புரட்சியையும் நாம் செய்யத் தயாராக இல்லை என்பதுதான் வெட்கமான செய்தி.

எகிப்திலும் லிபியாவிலும் எதற்காக புரட்சிகள் நடைபெற்றன?

வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பின்மை, அடக்குமுறைகள், ஊழல் அரசாங்கம், முற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட குடும்ப ஆட்சி போன்ற காரணங்களுக்காகவே மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். இவை எதுமே தமிழ்நாட்டில் இல்லையா?

குடும்ப ஆட்சியும் ஊழல் நிறைந்த அரசும் தமிழ்நாட்டை அறுபது ஆண்டுக்கு மேலாக சீரழித்து வருகிறதே அதற்கெதிராக எப்பொழுதாவது மக்கள் புரட்சி வெடித்ததா?

அரசியல் கட்சிகள் தான் இவற்றுக்காக குரல் கொடுக்கின்றன‌. விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பின்மை, மின்வெட்டு போன்ற காரணங்களுக்காக அரசியல் கட்சிகள் தான் கண்டன போராட்டங்களில் ஈடுபடுகின்றன அதிலும் அரசியல் உள்நோக்கங்கள் கலந்திருப்பதால், இதை ஒரு அரசியல் பழிவாங்கல்கள் அல்லது எதிர்க்கட்சிகளின் யதார்த்த எதிர்ப்பியல் என்றே பொதுவாகப் பார்க்கப்படுகின்றது.

காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லை பெரியாரில் தண்ணீர் தரவில்லை, ஒக்கனேக்கல்லில் தண்ணீர் இல்லை என்றால் எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவிப்பார்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள். மக்கள் பேசாமல் வேடிக்கை பார்ப்பார்கள்.

வெறும் ஐந்து நாட்கள் எகிப்திலே ஏற்பட்ட மக்கள் போராட்டத்தினால், முற்பது ஆண்டுகால குடுப்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடியுமானால்; அறுபது ஆண்டுகால குடும்ப, ஊழல், அடக்குமுறை அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியாதா?

மெளனத்தின் வலியோடு வாழுகின்ற எம் மக்கள் எவ்வித புரட்சிகளும் செய்யாதது ஏன்?

மக்களை நொந்து என்ன பயன். இலவசங்களோடு எம்மை வாழப்பழக்கி விட்டார்கள் எம் அரசியல் தலைவர்கள், இலவச தொலைக்காட்சி, இலவச வீடு, இலவச சோறு, இலவச மனைவி...

உழைத்து வாழ்ந்து உயர்ந்து நின்ற ஒரு இனத்தையே உறங்கி வாழுங்கள் என சோப்பேறியாக்கி விட்டார்கள் இந்த அரசியல்வாதிகள்.

எல்லாம் நிச்சயமாக ஒருநாள் மாறும் மாறாது என்ற சொல்லைத்தவிர மற்றெல்லாம் மாறிவிடும் என்று சொல்லுகிறான் மார்க்ஸ்.

மாற்றம் நிகழும் ஆனால் அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டுமா தமிழா?

மாற்றம் வேண்டும் அதை நாம் தானே மாற்றவும் வேண்டும்.

மக்கள் புரட்சி என்றைக்குமே தோற்றதில்லை. வன்முறை வேண்டாம் அறிவாயுதம் ஒன்றே போதும்.

புரட்சி செய்யும் மனதோடு பூத்திரு, காலம் நம் கைகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க காத்திருக்கிறது...

பிராடு பாஜக Vs திருட்டு அதிமுக...

 


காவிரி தமிழர்களின் தாய்மடி..



நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டு விட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க..

அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள் தான் ஆனது போல இருக்கு..

ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்து கொண்டு தான் இருந்தது.

அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்து கொண்டே தான் இருந்தது.

ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகு தான்.

அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்த்துக் கொண்டே இருந்தது.

KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.

அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக் கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

(KRS அணையை தொடர்ந்து கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்ட போதும் அப்படித்தான்)

நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக் கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா?

கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்..

அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.

நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.

புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது. அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது.

ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது. கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.

அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.

நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.

அணைகள் பற்றி பேசுவோம்.

கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.

கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான். ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை.

காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.

இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.

சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.

ஆம். கேள்வி சரிதான். கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.

காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும்.

அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.

நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.

ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.

டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும். உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.

இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.

சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.

நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!

முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக் கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?

பிராடு பாஜக நிர்வாகி சிக்கினான்...

 


அதிமுக கலாட்டா...

 


அன்பின் பரிசு...

 


இஸ்லாம் நெறிகளில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த சுலைமான், மரணத்துக்குப் பின் சொர்க்கம் அடைந்தார்.

இறைவன் கேட்டார் : சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?

சுலைமான் சொன்னார் : ஆண்டவனே, உம்மை நாள்தோறும் முறை தவறாமல் ஐந்து முறை தொழுததனால் எனக்கு கடவுளின் கருணை கிடைத்திருக்கலாம். 

இறைவன் சொன்னார் : இல்லை மகனே, ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா? அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்.

சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை. தொழாமல் இருந்ததற்குப் பரிசா?

இறைவன் தொடர்ந்தார் : மகனே, ஒரு குளிர் காலக் காலைப் பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு அவசரமாய்ப் புறப்பட்டாய். கடுமையான பனியில் வாடி, குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறு பூனைக்குட்டியை ஓடிச் சென்று அள்ளி அணைத்து விரல்களால் அதன் உடலை வருடி, ஆறுதல் அளித்தாய். மார்புறப் பூனையைத் தழுவியதால் உன் உடல் வெப்பம் கிடைத்து குட்டி சம நிலையை அடைந்தது. நெஞ்சில் அணைத்த பூனையை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது, பள்ளிவாசல் தொழுகை முடிந்து விட்டது. 

பிற உயிர்களிடம் காட்டும் பெருங்கருணை தான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல். 

என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது...

பிராடு விஜய் மல்லையா கலாட்டா...

 


ஜெயலலிதா போட்டோ எங்கடா 🙄

 


கோவலன் பொட்டல்...


கோவலன் பொட்டல் என்ற இடம் தென்மதுரையை சேர்ந்த பழங்கனாதம் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது.

இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர்.

இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர்.

அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்...

கொசு தொல்லை தாங்க முடியலைன்னு சொல்வாங்களே அது இதுதான்...🤣

 




தூங்கும் முன் மகள் அப்பாவிடம் கேட்டாள்..

ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....

அது எப்ப அப்பா தூங்கும்?

அது தூக்கம் வரும்போது தூங்கும்...

எப்ப தூக்கம் வரும்பா?

அது சாப்பிட்டவுடன் தூங்கும்...

கொசுக்கு வீடு எங்கப்பா?

அதுக்கு வீடே இல்லை...

ஏம்பா வீடே இல்லை?

அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல...

நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே.....

இது அப்பா உனக்கு கட்டி தந்தது...

அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா.

அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா.. அதான் அதுக்கு வீடு இல்ல...

கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?

கடவுள்...

கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?

கடிக்காது...

ஏம்பா கடிக்காது?

கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...

அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?

வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு...

கடவுள் நல்லவராப்பா?

ரொம்ப நல்லவர்....

அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?

அது அப்படித்தான் நீ தூங்கு...

கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?

அதுக்கு பசிக்குது...

கொசு இட்லி சாப்பிடுமா?

அதெல்லாம் பிடிக்காது...

கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?

வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்...

ஒரே ஒரு கேள்வி அப்பா ?

கேட்டுத் தொலை..

கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?

அதுக்கு பல்லே இல்லை...

பிறகு எப்படி கடிக்கும்?

அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...

பேயைக் கொசு கடிக்குமா அப்பா?

இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா?

நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?

😁😁😁

Doctor Vs Lady Adult joke 😁

 


Doctor to Lady: U r looking so weak and exhausted... 

Are U properly taking 3 meals a day as I had advised ?

Lady: Oh my God.. I heard 3 Males per day...

Doctor : 😳😳😳

காலை வணக்கம் மக்களே...

 


துரோகியே...

 




தூக்கம் என் கண்களை தழுவுகிறது ...

ஆனால்...

தூங்கினால் நீ என் கனவில் வருவாயே..

உன்னை கனவில் கூட
காண வேண்டாம் என்று தான்...

கண்களை மூடாமலே கழிகிறது
என் இரவு...

ஆனால்...

இருளில் கூட என் முன் தோன்றி...

அழ வைக்கிறது...

உன் கண்களும் அதில் தெரியும்
உன் துரோகமும்....

தமிழ்நாட்டுல எப்பவுமே நோட்டா வுக்கு கீழ தான்டா பாஜக 😂🤣😅

 


உனக்கு கற்ப்பிக்கப்பட்ட மாயையில் இருந்து முதலில் வெளியே வா...