28/07/2021

கொசு தொல்லை தாங்க முடியலைன்னு சொல்வாங்களே அது இதுதான்...🤣

 




தூங்கும் முன் மகள் அப்பாவிடம் கேட்டாள்..

ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....

அது எப்ப அப்பா தூங்கும்?

அது தூக்கம் வரும்போது தூங்கும்...

எப்ப தூக்கம் வரும்பா?

அது சாப்பிட்டவுடன் தூங்கும்...

கொசுக்கு வீடு எங்கப்பா?

அதுக்கு வீடே இல்லை...

ஏம்பா வீடே இல்லை?

அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல...

நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே.....

இது அப்பா உனக்கு கட்டி தந்தது...

அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா.

அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா.. அதான் அதுக்கு வீடு இல்ல...

கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?

கடவுள்...

கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?

கடிக்காது...

ஏம்பா கடிக்காது?

கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...

அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?

வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு...

கடவுள் நல்லவராப்பா?

ரொம்ப நல்லவர்....

அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?

அது அப்படித்தான் நீ தூங்கு...

கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?

அதுக்கு பசிக்குது...

கொசு இட்லி சாப்பிடுமா?

அதெல்லாம் பிடிக்காது...

கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?

வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்...

ஒரே ஒரு கேள்வி அப்பா ?

கேட்டுத் தொலை..

கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?

அதுக்கு பல்லே இல்லை...

பிறகு எப்படி கடிக்கும்?

அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...

பேயைக் கொசு கடிக்குமா அப்பா?

இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா?

நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?

😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.