நான் நாட்டுக் கோழிடா..😠
21/10/2020
நீங்கள் துவாளு (Tuvalu) என்ற நாட்டை பற்றி கேள்வி பட்டதுண்டா...?
அந்த நாட்டை பற்றி சிறிது கூறிவிட்டு பிறகு விஷயத்திற்கு வருகிறேன்....
ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் உள்ள தீவு, வெறும் 26 சதுர கி.மீ பரபளவு கொண்ட குட்டி நாடு. உலகிலே சிறிய நாடுகளில் இது நான்காவது சிறிய நாடு.
இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே வெறும் 10000 சொச்சம் தான்.
தனி தேசிய கொடியும், 12 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றமும் உண்டு, பிரதமர், அமைச்சர்கள், அவை தலைவர் எல்லாம் உண்டு.
அரசியல் கட்சி எல்லாம் கிடையாது, சமுக அந்தஸ்து கொண்ட நபர்களையே ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்கிறார்கள்.
திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேனென்று என்று காட்சியளிக்கும் இயற்கை வளங்களுக்கு, அழகிற்கும் இங்கு குறைவில்லை.
எந்த நாடும் படையெடுத்து வரமுடியாத இந்த தீவுக்கு இப்பொழுது மிக பெரிய பிரச்சனை....
அது என்னவென்றால் புவியின் வெட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இந்த தீவு இதனால் பேராபத்து எதிர் நோக்கி இருக்கிறது...
கடல் மட்டத்துக்கும், இந்த தீவுக்கு தற்போது 4.6 மீட்டர் உயரம் மட்டுமே வித்தியாசம்.....
இதே நிலை தொடர்ந்தால் அந்த தீவு விரைவில் கடல் முழுமையாக விழுங்கி விடும் என்பது சத்தியமா உண்மை ....
ஆகையால் தான் அந்த நாட்டின் பிரதமர் கரியமில வாயு வெளியேற்றப்படுவதை உலக நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திரும்ப திரும்ப குரல் கொடுக்கிறார்....
அதனால் இனி வரும் காலங்களில் நாம் முடிந்த அளவு வாகனங்கள் உபயோகிப்பதை கட்டு படுத்துவோம், வீட்டில் ஏ.சி, பிரிட்ஜ் உபயோகிப்பதை குறைப்போம்.... கடல் மட்டம் உயர்வதை தடுப்போம்....
இன்று துவாளு நாடு, நாளை நமது தமிழ்நாடாக கூட இருக்கலாம்....
வெறும் 10000 மக்கள் தானே அவசியம் ஏற்பட்டால் வேறு நாட்டிற்கு வந்து விடுங்கள் என்று ஜ.நா சபை கோரிக்கை விட்ட போது அந்த நாட்டு மக்கள் இப்படி சொன்னார்களாம்..
எங்களுக்கு என்று ஒரு தேசம், மொழி, பண்பாடு, கலாசாரம் என சுயமரியாதையோடு வாழ்கிறோம், அகதி என்ற அடையாளத்தோடு இன்னொரு நாட்டில் வாழ எங்கள் மனம் ஏற்கவில்லை....
சபாஷ் துவாளு நாட்டு மக்களே...
தமிழக டூபாக்கூர் பெண்ணியவாதிகள்...
தோனி மகளை மிரட்டுனா, கண்டுக்க மாட்டோம்.
அகதிப் பெண்களை அசிங்கப் படுத்துனா, சான்சே இல்ல.
தமிழ்ப் பெண்களை உயிரோடயோ செத்த உடலையோ அவமானப் படுத்தினவனா, தேடிப் போயி கை குலுக்கிட்டு சிரிச்சுப் பேசிட்டு வருவோம்.
காசுமீரப் பெண்களை வட கிழக்கு மாநில ஆயுதப் படை கொண்டு அட்டூழியம் செய்த கட்சியா, டெல்லி போயி கூட்டணி வைப்போம்.
ஆனா, விசய் சேதுபதி மகளை மிரட்டுனா, சும்மா விட மாட்டோம். உடனடியா வரிஞ்சு கட்டி கம்ப்ளெயிண்ட் குடுப்போம்.
- திராவிட காமிடி பெண்ணிய வில்லன்கள் & வில்லிகள்...
தமிழனை வீழ்த்தியது ஆரியன் என்னும் திருட்டு திராவிடனே (வடுகர்கள்)...
மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை.
அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது?
இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்?
காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்..
தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா?
எந்த ஆரிய பார்ப்பன் தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா?
வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு.
இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.
பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.
அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கர்நாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல்..
மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.
'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.
அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm
தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும்.
குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.
என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர்.
சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே. அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை.
இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும்.
பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார், கருணாநிதி, வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது...
ஆகாச முத்திரை...
ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக் கொண்டிருப்பது.
பலன்கள்...
இதுவும் வாதம் மூலத்துடன் தொடர்புடையது. இம்முத்திரை ஆகாயத்தை அதாவது வெளியை நம் உடலில் உண்டாக்கும்.
இது எழும்புகள் பலமாக உதவும் முத்திரை. எழும்பு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்தது.
மூட்டுவலி, பற்கள் பலமில்லாமல் இருப்பவர்கள், தாடை பலமில்லாமல் உள்ளவர்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இசிடிராய்டு (steroid) போன்றவற்றால் உண்டாகும் பின் விளைவுகளை குறைக்க உதவும்.
நடக்கும் போது இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்...
உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?
The World’s only living civilization...
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் ஒரு காலத்தில் அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும் தோன்றியிருக்கின்றன.
மிகப் பழமையான கிரேக்க, ஏத்தன்சு, ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும் போது அடுக்கடுகான அமைவிடங்கள் இருப்பது தெரியவந்தது.
அதாவது அந்த நகரம் புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம் மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்கள்.
நகரம் மட்டும் இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை “The World’s only living civilization” என்று டிசுகவரி தொலைக்காட்சியின் “The Story of India” ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல் வுட்சு.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள் மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில் சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்) கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் இறந்தோரைப் புதைத்த இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த இடத்தின் மீது அடையாளமாய் கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும் நாகரீகத்திற்கும் முந்தையது.
இந்த இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும் கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட நாட்களில் வந்து பூசித்து வழிபடும் வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர். அவர்களை விசாரித்த போது பரம்பரை, பரம்பரையாக பாரம்பரியமாக வழிபடுவதாகவும்; இதற்கான காரணம் தெரியாது, அங்கு முன்னோர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அது அவர்களது முன்னோர்கள் புதையுண்ட இடம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர். ஆம் நண்பர்களே சுமார் 6000வருடமாக தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம் கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன் இட்ட பெயர் அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக் கடைகள் பிரசித்தம். அவற்றை அல் அங்காடி என்று கூறுவதுண்டு.
இதன் காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆறாயிரம் ஆண்டுகளாக உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும், கலாச்சாரத்தையும், மொழியையும் சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம் மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய விடயம் தானே!
குறிப்பு...
அன்றைய மதுரை என்பது இன்றைய மதுரயைக் காட்டிலும் மிகப் பெரிய அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக கொண்டு செயல்பட்டது மேலும் கீழ் திசையில் நெல்லை வரையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது...
மன்னிக்க மறக்காதீர்கள்...
மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது...
நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும் போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.
மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.
கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச் சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.
மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.
மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.
இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.
ஒரு மனிதன் தேவ நிலையை அடைய வேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும் என்கிறது பகவத் கீதை.
இஸ்லாம் கடவுளை அல் கபிர் என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.
மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது என்கிறது கிறிஸ்தவம்.
ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?
நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்ையை தெரிந்து கொள்ள முடியும்..
மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.
மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும் போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்து விடும்.
அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.
குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.
பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.
மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.
மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்...
மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்...
வள்ளுவத்தின் வீழ்ச்சி புத்தகத்தில் இருந்து...
சங்கதமாக்குதல் (Sanskritisation) என்பதே ஒருவகையான திருட்டு போல உள்ளது.
உண்மையை மறைப்பது, வரலாற்றைத் திரிப்பது, பொய்யுரைப்பது, அரசியல் செய்வது என்று பல உள்நோக்கத்தோடு இவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதைப் பற்றி பக்கம் 417 -இல் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது:
"சங்கதமாக்கம் என்னும் பெயரிலேயே தமிழ்த் தெய்வங்கள் ஆரிய மயமாக்கப்பட்டன.
இவ்வாறே, தமிழரின் வரலாற்று நாயகர்களும் தலைசிறந்த முனிவர்களும் சங்கதப்படுத்தப்பட்டனர்.
அகத்தியன் என்ற தமிழ் மாமுனியும் ஆரியமயமாக்கப்பட்டார். தமிழரின் பெருந்தெய்வங்களும், சிறுதெய்வங்களும், பெண் தெய்வங்களும், போர் தெய்வங்களும்கூடச் சங்கதப்படுத்தப்பட்டன.
பாகத மொழியில் 'விண்ஃஉ' (Vinhu) என்றிருந்ததே விஃழ்ணு (Vishnu) என்றானது.
விண்டு என்னும் தமிழ்ப்பெயரின் திரிபுகளே அவையாகும்.
அதேபோல், 'கண்ஃஅ' (Kanha) என்றிருந்ததே சங்கதத்தில் 'கிருஃழ்ண' (Krishna) என்று திரிந்தது.
'கண்ஃஅ' என்பது கண்ணன் என்னும் தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே என்பதைச் சொல்லித்தானா தெரிய வேண்டும்?
தமிழிலிருந்த மூலப்பெயர்களைச் சங்கதப்படுத்தியதனால் வரலாறே குழப்பப்பட்டுத் திசை திருப்பப்பட்டது.
ஆந்திரன் என்ற காரணத்தாலேயே கண்ணன் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறுவர்.
இருக்கு வேதத்தில் இக் கண்ணன், இந்திரனுக்குப் பகைவனான ஓர் அரக்கன் ஆவான்...
பிராடு மோடியின் நண்பன் முகேஷ் அம்பானியின் அடுத்த பித்தலாட்டம் மக்களே உஷார்...
எந்த சூழ்நிலையிலும் 5G நெட் உபயோகிக்காதீர்கள்... அது அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தானவை நினைவில் கொள்...
ஆன்லைன் சூதாட்டம்...
ஒரு நடிகை , நடிகன் "ஆன்லைன்ல ரம்மி விளையாடுங்க.."ன்னு விளம்பரம் பண்ணிட்டு இருக்காங்க..
இன்னொரு விளம்பரம், இரண்டு பொண்ணுங்க, இரண்டு பசங்க உட்காந்துருக்காங்க. அதுல ஒருத்தன், "நான் ஆன்லைன ரம்மி விளையாடும் போது தான் இந்த பொண்ண பாத்தேன். இப்ப நாங்க இரண்டு பேரும் காதலிக்கிறோம். அதே மாதிரி என் ப்ரெண்டும் அவன் லவ்வரும் இவங்க"ன்னு பேசிட்டு இருந்தான்..
இது எல்லாமே காசு கட்டி விளையாடும் விளையாட்டுகள் தான். ஒரு வகைல உங்கள இதுக்கு அடிமையாக்குற தன்மை (Addiction) உண்டு.
இன்று படிச்ச ஒரு செய்தி.. புதுச்சேரியில் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாடி 30 லட்சம் கடனாளி ஆகி மன அழுத்தத்தில் தீக்குளித்து இறந்துள்ளார்.. இந்த மாதிரி ஆன்லைன் சூதாட்டத்துல விளையாண்டு, கொஞ்சம் காசு ஜெயிச்சதும், "அட இதுலையே நிறைய சம்பாதிக்கலாம் போலையே"னு மேலும் மேலும் விளையாண்டு, கடைசில கடன் கழுத்தை நெறிக்கவும், தற்கொலை செய்து கொண்டார்..
இப்ப இதுக்கு கூத்தாடிகளா பொறுப்பேத்துக்க போறாங்க?? இல்ல இந்த சூதாட்டத்த நடத்துறவன அரசு சட்டம் தண்டிக்கப் போகுதா?
இதுல என்ன காமெடின்னா, நமக்கு எதிரா விளையாடுறது மனுஷனான்னு கூட நமக்கு தெரியாது.இதுல தான் நம்மாளுங்களும் ஏமாந்து காசையும் உயிரையும் உடுறாங்க.
திண்னைல உட்காந்து சூதாடுனா குத்தம், போலீஸ் புடிக்கும். லாட்டரி சீட்டு வாங்குனா கைது சிறை எல்லாம் போடுவாங்க.
அதோ செல்போன்ல ஆடுனா குத்தம் இல்லை.. செத்தா அதுக்கு யாரும் பொருப்பும் இல்ல ?!என்னங்க இது சட்டம்? பெரிய கம்பெனி நடத்தினா அது சூதாட்டம் இல்லையா?
சிந்தித்து பாருங்கள்...
வாயு முத்திரை...
வாயு முத்திரை என்பது ஆள்காட்டி விரலின் நுனியை கட்டை விரலின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு செய்வது.
பலன்கள்...
ஆட்காட்டி விரல் வாதம் தொடர்புடையது என்று தெரியும்.
இது நம் உடலில் அதிகமாக உள்ள காற்று மூலத்தை குறைக்க உதவுகிறது.
சோறு தின்னதுக்குப் பின் உடல் மதமதன்னு இருந்தால் இம்முத்திரையை வஜ்ரானத்தில் அமர்ந்து செய்தால் சரியாகும்.
நடுக்குவாதம் (Parkinson) உள்ளவர்களின் சிரமம் குறைக்கவும் இது உதவும்.
கீழ்வாதம் உள்ளவர்களின் சிரமமும் இதனால் குறையும்...