21/10/2020

நீங்கள் துவாளு (Tuvalu) என்ற நாட்டை பற்றி கேள்வி பட்டதுண்டா...?

அந்த நாட்டை பற்றி சிறிது கூறிவிட்டு பிறகு விஷயத்திற்கு வருகிறேன்....

ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து பசிபிக் பெருங்கடலுக்கு நடுவில் உள்ள தீவு, வெறும் 26 சதுர கி.மீ பரபளவு கொண்ட குட்டி நாடு. உலகிலே சிறிய நாடுகளில் இது நான்காவது சிறிய நாடு.

இந்த தீவின் மொத்த மக்கள் தொகையே வெறும் 10000 சொச்சம் தான்.

தனி தேசிய கொடியும், 12 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றமும் உண்டு, பிரதமர், அமைச்சர்கள், அவை தலைவர் எல்லாம் உண்டு.

அரசியல் கட்சி எல்லாம் கிடையாது, சமுக அந்தஸ்து கொண்ட நபர்களையே ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்கிறார்கள்.

திரும்பும் திசையெல்லாம் பச்சை பசேனென்று என்று காட்சியளிக்கும் இயற்கை வளங்களுக்கு, அழகிற்கும் இங்கு குறைவில்லை.

எந்த நாடும் படையெடுத்து வரமுடியாத இந்த தீவுக்கு இப்பொழுது மிக பெரிய பிரச்சனை....

அது என்னவென்றால் புவியின் வெட்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலகம் முழுவதும் கடல் மட்டம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே, இந்த தீவு இதனால் பேராபத்து எதிர் நோக்கி இருக்கிறது...

கடல் மட்டத்துக்கும், இந்த தீவுக்கு தற்போது 4.6 மீட்டர் உயரம் மட்டுமே வித்தியாசம்.....

இதே நிலை தொடர்ந்தால் அந்த தீவு விரைவில் கடல் முழுமையாக விழுங்கி விடும் என்பது சத்தியமா உண்மை ....

ஆகையால் தான் அந்த நாட்டின் பிரதமர் கரியமில வாயு வெளியேற்றப்படுவதை உலக நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்று திரும்ப திரும்ப குரல் கொடுக்கிறார்....

அதனால் இனி வரும் காலங்களில் நாம் முடிந்த அளவு வாகனங்கள் உபயோகிப்பதை கட்டு படுத்துவோம், வீட்டில் ஏ.சி, பிரிட்ஜ் உபயோகிப்பதை குறைப்போம்.... கடல் மட்டம் உயர்வதை தடுப்போம்....

இன்று துவாளு நாடு, நாளை நமது தமிழ்நாடாக கூட இருக்கலாம்....

வெறும் 10000 மக்கள் தானே அவசியம் ஏற்பட்டால் வேறு நாட்டிற்கு வந்து விடுங்கள் என்று ஜ.நா சபை கோரிக்கை விட்ட போது அந்த நாட்டு மக்கள் இப்படி சொன்னார்களாம்..

எங்களுக்கு என்று ஒரு தேசம், மொழி, பண்பாடு, கலாசாரம் என சுயமரியாதையோடு வாழ்கிறோம், அகதி என்ற அடையாளத்தோடு இன்னொரு நாட்டில் வாழ எங்கள் மனம் ஏற்கவில்லை....

சபாஷ் துவாளு நாட்டு மக்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.