27/11/2018

வால்நட் (அக்ரூட்)...


வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதய நோய்களை தடுக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.

இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.

உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே, இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்.

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்த போது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரிய வந்தது.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்...

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா.

சுருக்கங்கள்...

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்று நோய்கள்...

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி...

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்...

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்
தேவையானவை...

ஓட்ஸ் 1 கப்
பாதாம் பருப்பு 10
வால்நட் 10
முந்திரிபருப்பு 10
பிஸ்தா பருப்பு 10
கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை 10
தேன் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை...

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட், முந்திரிபருப்பு, பிஸ்தா நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக் கொள்ளவும்.

கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை
சேர்த்து கொதிக்க விடவும். கம்பி பாகு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் பொடி பண்ணிய ஓட்ஸ் ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை, வறுத்த எள், பொறித்த திராட்சை, தேன், நெய் சேர்த்து அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.

வால்நட் முந்திரி பர்ஃபி
தேவையானவை...

வால்நட் பருப்பு - ஒரு கப்,
முந்திரி - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் - அரை கப்.

செய்முறை..

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.

கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது.

வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

வால்நட், பாதாம் பாயாசம்..

வால்நட் : 25 gm
பாதாம் : 10 pcs
சர்க்கரை : 100 gm
நெய், ஏலம் : சிறிது

வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அந்தக் கலவையை சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வந்தவுடன் அதில் சர்க்கரையைப் போட்டு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும்...

தமிழா சிந்தித்து எழு...


சாதி தீண்டாமையை ஒழிக்க துவங்கப்பட்ட சீர்திருத்த இயக்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற வேறுபாட்டை மட்டும் சுட்டிகாட்டி..

தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி ஆகியோரை ஒருங்கிணைப்பு செய்தது..

விளைவு தமிழர்நாடு தமிழர் அல்லாதோரின் வேட்டைக்காடாகி போனது ..

கலையும் பண்பாடும் சீர்குலைந்தது..

ஆரிய வைசிய மகாசன சங்கம்,
நாய்டு மகாசன சங்கம்,
தெலுங்கு மகாசன சங்கம்,
கேரளா மகாசன சபை,
சௌராஷ்டிர அமைப்புகள்,

போன்றன முளைத்துவிட்டன..

ஆட்சி அதிகாரங்களை கைபற்றி கொண்டு தமிழனை ஒட்டு போட மட்டும் அழைக்கிறது திராவிடம்...

தமிழன் ஏமாந்து போனதுக்கு ஒரே காரணம் இந்தியமும் திராவிடமும் தான்..

நாம் தமிழர்கள், நம் நாடு தமிழர்நாடு..

திராவிடன் தமிழன் அல்ல என்பதை உணர வேண்டும்..

இன பற்று கொள்ளத வரை எழ முடியாது, எழ மறுக்கும் இனம் பிணத்திற்கு சமம்..

சினம் கொள்ள மறுத்தால்
நீயும் ஒரு பிணம்...

தமிழர்நாடு தமிழர்களுக்கே...

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நெல் ஜெயராமனை, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்...


தமிழக துரோகி பாஜக வானதி சீனிவாசன் அவர்களே...


NDRF அதாவது National Disaster Response Fund னு ஒன்னு இருக்கு... வருடம் வருடம் பட்ஜெட் ல அதுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும், தெரியுமா, தெரியாதா?

2015 குஜராத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது ரூ 500 கோடி relief package ஐ உடனடி நிவாரணமாக பிரதமர் மோடி அறிவித்தாரே, அது என்ன நிதி?

National Disaster Response Fund (NDRF)

The DM Act defines "disaster" to mean ‘a catastrophe, mishap, calamity or grave occurrence in any area, arising from natural or man-made causes, or by accident or negligence which results in substantial loss of life or human suffering or damage to, and destruction of, property, or damage to, or degradation of, environment, and is of such a nature or magnitude as to be beyond the coping capacity of the community of the affected area.'

http://www.arthapedia.in/index.php?title=National_Disaster_Response_Fund_(NDRF)

பாஜக - அதிமுக வின் கார்ப்பரேட் அரசியல்...


தமிழினத் தலைவர் மேதகு வே. "பிரபாகரன்" என தலைப்பிடப்பட்ட நூலிலிருந்து....


தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னையில் (1984) தங்கியிருந்த போது பெசன்ட் நகரில் ஒரு வீட்டில் முதன் முதலாக நேர்காணல் நடத்த காத்திருந்தார் ஊடகவியலாளர் அனிதா பிரதாப்....

சூப்பர்மேன் வருவாரென எதிர்பார்த்திருந்த அனிதா சற்று உயரம் குறைவாக வந்தமர்ந்த தலைவரைப் பார்த்து இயக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்த அனிதா, ஜன்னலுக்கு வெளியே தலைவரைத் தேடி தன் பார்வையை ஓட்டினார்.

புரிந்து கொண்ட தலைவர்.. சற்று மௌனத்திற்கு பிறகு 'நான் தான் பிரபாகரன்' என்றவரின் மென்மையான குரலைக் கேட்டதும் அனிதா வியந்தாராம்.

அவரது நேர்காணலில்..

எதிர்காலத்தையும் எதிரிகளையும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலும், அவருடைய ஒரே இலக்கு தமிழீழத்தை தவிர வேறில்லை என்பதும், அவர் எவ்வளவு கூர்மையாக உன்னிப்பாக நிகழ்வுகளை விடயங்களை உற்று நோக்குகிறார் என்பதும் புரிந்தது.

மேலும் தலைவர் சொன்ன விடயம், (இந்த விடயத்தை அனிதா பிரதாப் வெளியிடவில்லையாம்) என்றாவது ஒரு நாள் நாங்கள் இந்தியாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம்.

(அதாவது இந்திய அமைதிப்படையுடன் பின்னாளில் ஏற்படப்போகும் போரினை முன்கூட்டியே கணித்திருக்கிறார்).

இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சியடைந்து
இந்தியா உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோறூட்டும் கைகளையே கடிப்பீர்களா? என வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த தலைவர், தமிழீழம் அமைவதை இலங்கையை விட இந்தியா விரும்பாது. ஏனென்றால் இந்தியாவில் ஐந்துகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாராம்...

பேய்கள் ஜாக்கிரதை...


நாம வாழுற இந்த பிரபஞ்சத்தித் பல விதமான விதிகள் இருக்கு. ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில இயங்குது.

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிது.

ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து, தூண்டபடும் சக்தி நிலைக்கு உயருது. இவ்வாறுதான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது. அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது.

ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை. உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது.

நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே. அதே போல நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது. நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே.

சூட்சம உடல் தெரிவதில்லை. ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல். மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது.

சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித்திரிகிறது. பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது. ஒளி உடல் இருக்கும் வரை எண்ண பதிவின் தொடர்பு இருக்கும்.

தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான்.

ஆவியை அடிக்கடி நினைத்து பயம் கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டு விடுகிறது. பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது.

உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றிசுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது. அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது.

வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறது. அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது.

அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது. பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது.

ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும். சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும்.

ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டு பிடிக்கும் காலம் விரைவில் வரலாம்...

தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியாவதற்கு தயாரா உள்ள நிலமையில் எனோ இன்னும் வரவில்லை...


தமிழில் இந்த திரைப்படத்தின் பெயர் நான் திரும்ப வருவேன்...

புயல் பாதிப்பு: அரசு ஊழியர்கள் 1 நாள் ஊதியம் நிவாரணமாக வழங்க முடிவு...


தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்ட ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்க இருக்கிறோம் -  ஜாக்டோ - ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் தியாகராஜன் சேலத்தில் பேட்டி...

திருவாரூர் தொகுதியில் பிப்.7க்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்- மாநில தலைமை தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உறுதி...


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும் சைவ உணவுகள்...


உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு சிறுநீரகக் கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால், அத்தகைய சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

மேலும் சிறுநீரகம் தான் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி, இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அவ்வாறு நச்சுக்களை வடிகட்டும் போது, அந்த நச்சுக்களானது சிறுநீரகத்திலேயே தங்கிவிடுவதால், அவற்றை உடலில் இருந்து வெளியேற்ற சரியான உணவுகளை சாப்பிட வேண்டும்.

மேலும் சிறுநீரகத்தை சுத்தப்படுத்துவதற்கு பல உணவுப் பொருட்கள் உள்ளன. இத்தகைய உணவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை மட்டுமின்றி, ஆபத்தான பல கெமிக்கல்களை முற்றிலும் வெளியேற்றிவிடும். அதிலும் பூண்டு, வெங்காயம் மற்றும் மீன் போன்றவை சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது.

ஆனால் பலர் இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டார்கள். குறிப்பாக சைவ உணவாளர்கள், இந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஆகவே தான், அத்தகையவர்களுக்காக மிகவும் சிறந்த சைவ உணவுப் பொருட்களை பட்டியலிட்டுள்ளோம்.

அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது தண்ணீரையும் அதிகம் பருக வேண்டும்.

முட்டைகோஸ் : இந்த பச்சை இலைக்காய்கறியானது சிறுநீரகத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின் கே அதிகமாகவும் நிறைந்துள்ளது.

சிவப்பு திராட்சை : சிவப்பு நிற திராட்சையில் ஒருசில ஃப்ளேவோனாய்டுகள் நிறைந்துள்ளன. அதிலும் ரெஸ்வெராட்ரால் என்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் ஃப்ளேவோனாய்டு அதிகம் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மக்னீசியம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்ற சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

பார்ஸ்லி : சைவ உணவாளர்கள், இந்த கீரையை அதிகம் உணவில் சேர்த்தால், சிறுநீரகம் மற்றும் உடல் முழுவதுக்கும் நல்லது. அதிலும் இதனை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிட்டால், சிறுநீரக கற்களானது கரைந்துவிடும்.

காலிஃப்ளவர் : இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு உணவுப் பொருளாகும். ஏனெனில் காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

ஆப்பிள் : ஆப்பிள் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை சீராக வைக்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி அதிகம் நிறைந்திருப்பதால், அது உடல் முழுவதுக்கும் மிகவும் நல்லது.

ப்ளூபெர்ரி : ப்ளூபெர்ரியில் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் அந்தோசையனின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.

இஞ்சி : சைவ உணவாளர்கள் உணவில் இஞ்சியை சேர்த்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது, சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, இரத்தத்தையும் சுத்திகரிக்கும்.

தயிர் : தயிரும் செரிமானத்தை அதிரிக்கும் மற்றும் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. தயிரில் உள்ள ப்ரோபயோடிக் பாக்டீரியா இருப்பதால், அது சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. முக்கியமாக இந்த உணவை சைவ உணவாளர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

ஆலிவ் ஆயில் : ஆலிவ் ஆயில் நிறைந்துள்ள நன்மைக்கு அளவே இல்லை. ஏனெனில் அத்தகைய எண்ணெயை உணவில் சேர்த்தாலும், சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது...

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்...


புதுச்சேரி: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரள அரசு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பதை கண்டித்து புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக அறிவித்திருந்தது. அதன் படி இந்த பந்த் போராட்டம் என்பது இன்று காலை 6 மணிக்கு தொடர்ந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த பந்த் போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், ஒருசில ஆட்டோக்கள
 இயங்கவில்லை. மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சில தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயப்படுகினறன. ஆனால் பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும் தமிழக அரசு, புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகினறன.

புதுச்சேரி பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் இயங்காததால் கிராம பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பயணிகளுக்காக அரசு பேருந்துகள் கிராமபுற செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்துகளுக்கு கல்வீச்சு போன்ற அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமில்லாமல் கிராம பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே போல பெட்ரோல் பங்குகளும் இன்று வழக்கம் போல இயங்குகின்றன. ஒருசில கடைகள் மட்டும் தான் அடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கோ, சட்ட ஒழுங்குக்கோ எந்த பிரச்சனையும் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த பந்த் போராட்டத்தில் எந்த பிரச்சையும் ஏற்பட கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 6 மணிக்கு முன்பாக லாஸ்பேட்டை பகுதியில் தமிழக அரசு பேருந்து கண்ணாடியும் அதேபோல கிராம பகுதியில் ஒரு தனியார் பேருந்து கண்ணாடியையும் மர்ம நபர்கள் கல் வீசி பேருந்தை தாக்கினர். பின்பு சிறிது நேரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்த 4 பாஜகவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்....

ஈழத்தை மட்டும் படி...


திடீர் கோடீஸ்வரி பாஜக வானதி சீனிவாசன்...


ஊழலை ஒழிக்க வந்த ஆர்எஸ்எஸ் உத்தமர்களில் தமிழக உத்தமர் வானதி சீனிவாசனின் ஊழல்கள்..

வானதி சீனிவாசன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மின்விசிறியை தவணை முறையில் வாங்கி அதில் கடைசித் தவணை கட்ட முடியாத ஒரு எளிய நடுத்தர வர்க்க குடும்பத் தலைவியாக இருந்திருக்கிறார்.

அக்காவை கூட்டம் மற்றும் போராட்டங்களில் பேச அழைக்கும் பா.ஜ.கவினர் அவருக்கு போக்குவரத்து மற்றும் வழிச்செலவுக்கு பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர்.

ஆனால் இன்று அக்கா வானதி சீனிவாசன் சில பல கோடிகளுக்கு அதிபதி. இதை நாம் சொல்லவில்லை. இதைச் சொன்னது அதே பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவரும், திருச்செந்தூரில் இருக்கும் முக்கிய பிரமுகருமான பாலசுப்பிரமணிய ஆதித்யன். இனி அவரே பேசுகிறார், கேளுங்கள்.

கடந்த 2003 -ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம்.

அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன்.

அது மட்டுமல்ல மையிலாப்பூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

யாரும் சற்றும் எதிர்பாராத வண்ணம் இன்று தாங்கள் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கின்றீர்கள் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 48,29,891 , அசையாச் சொத்துக்கள் ரூ. 68,80,000 , கடன் ரூ.  50,000. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,16,59,891.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார் வானதி சீனிவாசன். அப்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவரது சொத்து மதிப்புகள்...

அசையும் சொத்துக்கள் ரூ. 1,17,51,853, அசையாச் சொத்துக்கள் ரூ. 5,30,50,000, கடன் ரூ. 35,17,344. ஆக, மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,12,84,509.

ஐந்தாண்டுகளில் அக்காவின் சொத்து மதிப்பு சுமார் ஐந்து மடங்கு அதாவது 525 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறுகிய காலத்தில் இவ்வளவு பணமும் சொத்துக்களும் எப்படி வந்தன?

அத்தனையும் தானும் தனது கணவர் சீனிவாசனும் வழக்குறைஞர் தொழில் செய்து சம்பாதித்தவை என்று வானதி சமாளிக்கக் கூடும். வழக்கறிஞர் ஊதியம் எவ்வளவு...? மத்திய அமைச்சர் பினாமி என்ற கருத்து வேறு..? உறுதிப்படுத்துவதாக உள்ளது வருமானம்.

ஆனால், இந்தச் சொத்துக்கள் வானதி குடும்பத்தினர் ஊழல்களாலும், தங்களது அரசியல் சொல்வாக்கை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்தவை என்று அம்பலப்படுத்துகிறார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்யனும், பா.ஜ.க-வைச் சேர்ந்த அவரது நண்பர் சங்கரநாராயணனும். சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) என்ற நிறுவனத்தில், வானதி சீனிவாசன் திட்டமிட்டு அவரது தம்பி சிவகுமார் கந்தசாமியை களமிறக்கி நடத்திய வங்கி மோசடியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

சென்னையிலுள்ள சைலாக் சிஸ்டம்ஸ் (Zylog Systems) 1995 -ம் ஆண்டு துவங்கப்பட்ட மென்பொருள் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக வானதியின் கணவர் சீனிவாசன் இருந்திருக்கிறார்.  வானதியின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின் படி அந்நிறுவனத்தின் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார்.

சைலாக் சிஸ்டம்ஸ், ஜூலை 20, 2007 அன்று ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,600,000 பங்குகளை வெளியிட்டது. வர்த்தகம் தொடங்கும் போது அதன் ஆரம்ப விலை ரூ. 350-ஆக நிர்ணயிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு, யார் வசம் எவ்வளவு பங்குகள் உள்ளன, எத்தனை பங்குகள் சந்தையில் வெளியிடப்படுகின்றன போன்ற இதர விவரங்களை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) கொடுக்க வேண்டும்.

சைலாக்கின் நிறுவனர்கள் தங்கள் வசமுள்ள பங்குகளைப் பற்றி பொய்யான மற்றும் தவறான தகவல்களை கொடுத்ததாகக் கண்டறிந்த செபி, இந்நிறுவனதையும், அதன் நிறுவனர்கள் சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோரையும் பங்கு சந்தையிலிருந்து தடை செய்து 2012 -ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தன. இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்தவர் வானதியின் கணவர் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி, இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் வசூலித்த சேவை வரி சுமார் ரூ.3 கோடியை அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

மேலும், 2012 -ம் ஆண்டு காலகட்டத்தில் தனது ஊழியர்களுக்கு பல மாதங்கள் ஊதியம் கொடுக்காமலும் இருந்துள்ளது. ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியையும் (PF) அரசிடம் செலுத்தாமல் மோசடி செய்துள்ளது.

சைலாக் நிறுவனம் தனது தொழில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக 2009-2013 காலகட்டத்தில், யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஆந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் பல நூறு கோடிகளை கடனாகப் பெற்றது. ஆனால், அவற்றை தொழில் வர்த்தகத்திற்கு பயன்படுத்தாமல், முறைகேடாக பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தனர் அதன் நிறுவனர்கள். அவற்றுள் சைலாக்கின் ஐரோப்பிய கிளை (Zylog systems Europe Ltd) வாங்கிய சொத்துக்களும் அடக்கம். அதாவது இந்திய வங்கிகளில் வாங்கிய கடனைக் கொண்டு வெளிநாட்டில் முறைகேடாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த கால கட்டத்தில் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி இருந்துள்ளார்.

மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் நிலுவைத் தொகையையும் கட்டாமல் ஏமாற்றி வந்துள்ளது இந்நிறுவனம். இதனால் 2013-ம் ஆண்டு அவ்வங்கிகள் சுமார் ரூ.740 கோடியை வராக்கடனாக அறிவித்தன. அத்துடன், மத்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்திய பொதுத்துறை வங்கிகளை பட்டை நாமம் போட்டு ஏமாற்றிய கயவர்கள் பட்டியலில் மல்லையா மற்றும் இதர முதலாளிகள் மட்டுமல்ல, சைலாக் நிறுவனர்களான சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் இராமானுஜம் ஷேஷரத்தினம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-காரர்களின்  நிறுவனங்களும் உள்ளன. ஆம், வானதியின் வர்க்கம் மேம்பட ‘வர்த்தக’ வசதி செய்து கொடுத்த சைலாக் நிறுவனத்தின் மூலவர்கள் சாட்சாத் ஸ்வயம் சேவகர்கள்.

கடன் கொடுத்த வங்கிகள், கடன் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தன. அதில் அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட நவம்பர் 2014 -ல் தீர்ப்பளித்தது, சென்னை உயர் நீதிமன்றம்.

மோடி அரசு பதவியேற்ற பின் நவம்பர், 2014-ல் வானதியின் கணவர் சு. சீனிவாசன் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்படுகிறார். இதற்குப் பின் 2015 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சைலாக் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வானதியின் தம்பி சிவக்குமார் கந்தசாமி சைலாக் தாய் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்க பரிந்துரைக்கப் படுகிறார்.

மோடி அரசு, “என் நாடு, என் அரசு, என் குரல்” என்ற முழக்கத்துடன் அரசில் மக்கள் பங்கேற்கும் திட்டத்தை அறிவித்து ’என் அரசு’ (mygov.in) என்ற வலைத்தளத்தை நடத்தி வருகிறது. அந்த வலைத்தளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை சைலாக் நிறுவனம் 2015 -ம் ஆண்டில் பெற்றது.

இப்போது எல்லாப் புள்ளிகளையும் இணைத்து பாருங்கள். தலை மோடி அரசு முதல் வால் வானதி வரை இந்த ஊழல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை ஆற்றியுள்ளார்கள்.

இதனிடையே சைலாக் நிறுவனத்தின் துணை நிறுவனமான சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் 2009 -ம் ஆண்டு யூனியன் வங்கியிலிருந்து ரூ.61.5 கோடியை குறுகிய கால கடனாகப் பெற்றுள்ளது. இணைய சேவை வழங்கல் தொடர்பான வைஃபை (WiFi) திட்டத்தில் பொருட்களை வாங்க முதலீடு செய்வதற்கென்று இந்தக் கடன் பெறப்பட்டது. இந்தக் கடனை சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம் திருப்பி செலுத்தவில்லை.

அது மட்டுமல்ல, போலியான நிறுவனங்களை உருவாக்கியும், போலியான ரசீதுகளை உருவாக்கியும் பொருட்களை வாங்கியதாக கணக்குக் காட்டியது சைலாக் சிஸ்டம்ஸ் இந்தியா நிறுவனம். அப்படி உருவாக்கப்பட்ட பெயர்ப்பலகை நிறுவனங்களின் மூலம், வங்கியில் பெறப்பட்ட நிதியை வெளியேற்றி விட்டு, நட்டமடைந்து விட்டதாக ஏமாற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டறிந்த யூனியன் வங்கி, சைலாக் நிறுவனர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்பிடம் (சி.பி.ஐ) புகார் அளித்தது. மோசடி மற்றும் குற்றச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் ஜனவரி 30, 2017 அன்று முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இப்பேர்ப்பட்ட யோக்கியர்கள் தான் மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் போது  தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்தை மீட்பதற்கு நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்கள். ஏடிஎம் வரிசையில் நின்று செத்த மக்களைக் கொச்சைப் படுத்தினார்கள்.

ஆயினும் வானதி சீனிவாசனின் இந்த ஊழலை மறுப்பதற்கு அவரோ அவரது பக்தாள் கூட்டமோ கடப்பாறையை விழுங்க வேண்டியிருக்கும்...

ஈழத்தை மட்டும் படி...


தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை...


குமரிக்கண்டத்து இசை...

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே.

தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.

குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர்...

சாகர்மாலா திட்டத்திற்காக தமிழகத்தை அழிப்பதை திட்டமாக சொல்லுகிறது பாஜக...


நியூட்டனின் F = MA என்ற விதியை தெளிவாக போதிக்கும் திருமூலர்...


அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகர வுகார மிரண்டு மறியல்
அகார உகார மிலிங்கம் தாமே.
- (திருமந்திரம்: 1753)

பொருள்:

அகரமாகிய சிவம் எல்லாவற்றுக்கும் முதலாய் எல்லாவற்றுடன் கலந்தும் விளங்கும். உகாரமாகிய சத்தி யாவற்றுக்கும் முதலாய் அவை உயிர் பெற்று நிற்க உதவும். இங்ஙனம் அகரம் சிவம் என்றும், உகரம் சத்தி என்றும் அறிந்தால், அகர உகரங்களே சிவலிங்கம் என்பது தெரிய வரும்.

அறிவியல்:

நியூட்டனின் F(Force) = M(Mass) * A(Acceleration) போதிப்பது யாதெனில் திடப்பொருளுடன் சக்தி சேரும் போது அங்குதான் இயக்கம் ஏற்படுகிறது என்பதாம்.

அதாவது ஒரு கல் ஒரு இடத்தில் அசையாதிருந்தால் அது வெறும் திடப்பொருள்தான் அந்த கல்லை ஒருவன் உருட்டி செல்கிறான் எனில் அங்கு உந்து சத்தி (Acceleration) ஏற்பட்டு கல்லானது இயக்கத்திற்கு உள்ளாகிறது.
இங்கே கல்லானது இயங்கும் திடப்பொருளாக உருமாறுகிறது.

இதைத்தான் திருமூலர் M(Mass) ஐ சிவமாகவும், A(Acceleration) சத்தியாகவும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சத்திதான் உயிர் கொடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு பொருளின் இயக்கித்திற்கு தேவை சத்தி மட்டுமே..

சிவசத்தியின் கூட்டு சேர்கையே உயிரோட்டத்தின் அச்சானி...

நகரமயமாக்கல்...


கஜா புயலினால் சேதமடைந்த சவுக்கு மரங்களை தமிழ்நாடு காகித நிறுவனம் ( TNPL ) கொள்முதல் செய்து கொள்கிறது...


தஞ்சை , நாகை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நேரடியாக கீழ்கண்ட எண்ணில் தொடர்புகொள்ளலாம்....

திரு. சுரேஷ் . டிவிஷனல் மேனேஜர் .
TNPL.  செல்; 9442591417...

கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கரும் தமிழின அழிப்பும்...


மண்டை மேல இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துட்டார் பலிசா நாய்டு, சாதி வெறியன், தமிழின அழிப்பின் ஆணிவேர், பெரியார் என்று பொய்யாக அழைக்கப்பட்ட கன்னட தெலுங்கன் ஈ.வே.ராமசாமி..

ஆதி தீராவிடர்கள் (மறையர்கள்) தமிழ் அரசர்கள், மூவேந்தர் காலத்தில் தான் மிக கேவலமாக நடத்தப்பட்டனர் என்கிறார்,

சரி தமிழ் அரசர்களின் ஆட்சிக் காலம் எதுவரை இருந்தது?

சோழர்கள் கி.பி 1100 வரையே, அதற்க்குப்பின் தெலுங்கர்கள்  ஆண்டனர் (தமிழகத்தில் வாழ்ந்த தமிழர்களை அழித்து), இடையில் சிற்றரசர்களாக பாண்டியர்கள் சிறிது காலம் ஆண்டனர்.

பின் முகமதியர் ஆட்சிக் காலம், இவர்களிடமிருந்து இந்துக்களை காப்பாற்ற, கி.பி.1336 ல் விசயநகர வடுக தெலுங்கு அரசு உள்நுழைந்தது (வீர நாயக்கர் இன வரலாறு) இது கிட்டத்தட்ட கி.பி 1746 வரை நீடித்தது, அதற்க்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சி.

பின் 1920 ல் இருந்து இன்று வரை தீராவிடர்கள் (தெலுங்கு வந்தேறி, மலையாள வந்தேறி, கன்னட வந்தேறி) ஆட்சி (இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்).

இப்போது ராமசாமியார் (தமிழின அழிப்பின் ஆணிவேர்) தமிழ் அரசர்கள் தான் மறையர்களை மிக கேவலமாக நடத்தினர் என்கின்றார்.

சுமார் அவர் காலத்துக்குக்கு 1000 வருடங்களுக்கு முந்தைய மூவேந்தர்களின் வரலாற்றை பேசியவர், இந்த தெலுங்கு, வடுக விசயநகர அரசைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இவர்களுடைய ஆட்சி நல்லாட்சியாக இருந்திருந்தால் மூவேந்தர் காலத்தில் அடிமைகளாக இருந்த (பலிசா நாய்டு பொய்யாக கூறுவதைப் போல)..

மறையர்கள் இக்காலத்தில் விடுதலை அடைந்திருக்கலாமே? எழுச்சி அடைந்திருக்கலாமே?

இன்று இவர் இதைப் பற்றி பேச வேண்டிய நிலை வந்திருக்காதே? ஏன் நிகழவில்லை?

மழை விடாது பெய்த காரணத்தால் தெலுங்கு, கன்னட, மலையாள பிராமணர்களுக்கு உணவளிக்க முடியாது போனது..

அதைக்கண்டு வேதனையடைந்து தன் அரண்மணையின் ஒருப்பகுதியை இடித்து அதிலுள்ள தூண்கள் மற்றும், இதர மரங்களை வைத்து சமைத்து உணவளித்தது இந்த விசயநகர அரசு காலக்கட்டத்தில் தானே?

ராச ராச சோழன் காலத்தில் கோயில்களில் தமிழில் தானே பூசை செய்யப்பட்டது?

பின் வந்த வடுக தெலுங்கு அரசு அம்முறையை மாற்றி கோயில்களில் சமசுகிருத தெலுங்கு பேரிரைச்சலை உண்டாக்கியதே?

புலவர்க்கெல்லாம் புலவரான கிருட்டிண தேவராயராயர் சமசுகிருத, தெலுங்கு நூல்களை இயற்றி மகிழ்ந்தாரே?

கிருட்டிண தேவராயரின் அமைச்சர் தெனாலி ராமன் தெலுங்கு பிராமணர் தானே?

அரண்மணைகளிலும், செல்வந்தர் வீடுகளிலும் மலம் அள்ளுவதற்க்கென்றே வரும் போது ஒருச் சாதியினரை கொண்டு வந்தனரே?

தேவதாசி முறையை கொண்டு வந்ததும் இவர்கள் தானே? (ஆதாரம் 1113ல் கர்நாடக அலஹனப் பள்ளியில் உள்ள கல்வெட்டு -மருதம் நூல்).

மூவேந்தர் காலத்தில் மறையர்கள் இழிவாக இருந்திருந்தால் அவர்கள் தானே மலம் அள்ளியிருக்க வேண்டும்?

அவ்வாறு இருந்ததால்? அப்படி இருந்திருந்தால் இந்த வடுக தெலுங்கு அரசின் காலக்கட்டத்தில் புதிதாக ஒரு சாதியினரை கொண்டுவர அவசியம் இல்லையே?

பின் முகமதியர் காலத்தில் சிறிது இழிவு நிலை மாறியது என்றுள்ளார்,

(துலுக்கர்களின் ஆட்சி கொடுமையை எதிர்த்து விசய நகரை உருவாக்கின்றது வெற்றி கொள்கின்றது, மேற்கும் தெற்கும் தங்கள் இனத்தை பரப்புகின்றது.).

இது வீர நாயக்கர் வரலாற்றில் இருந்து எடுக்கப்பட்டது, ஆதி தீராவிடர்கள் இழிவுநிலை துலுக்கர்களால் நீங்கும் போது..

அதை விசயநகர அரசு தடுக்க வேண்டிய அவசியம் என்ன? இன்று போராட வேண்டிய நிலை உண்டாகுமா?

அப்புறம் கிறித்துவ அரசர்கள், கும்பினிப் படை செய்த அட்டூழியத்தை மறைக்க முயலுகிறாரோ?

இன்னும் பத்தாண்டுகள் அவகாசம் கொடுத்தால் அனைவரையும் கருப்பு ஆங்கிலேயராக மாற்றி விடுவேன் என்றது இவர்கள் தானே?

கால்டுவெல் முதன் முதலில் திருநெல்வேலியில் தானே கால் வைத்தார்?

அங்கு தானே சாதியக் கொடுமைகள் தலைவிரித்து ஆடியது? பலரும் கிறித்துவத்துக்கு மாறியது இங்கு தானே?

சரி அங்கு அதற்க்கு முன் ஆண்டது யாரு? வீரபாண்டிய கட்ட பொம்மன் என்று பொய்யாக அழைக்கப்பட்ட தெலுங்கு வந்தேறி கொள்ளைக்காரன்  கெட்டி பொம்முலு தானே?

அப்புறம் முருகனை சுப்பிரமணியனாக மாற்றியது, தை ஒன்றை சித்திரை ஒன்றாக மாற்றியது, சாதியக்கொடுமை, தீண்டாமை கொடுமை, இரட்டை குவளை என பல அட்டூழியங்களை அரங்கேற்றிய தெலுங்கன் திருமலை நாயக்கர் போன்றோரை, நம்ம பலிசா நாய்டு, சாதி வெறியன் ராமசாமி நாயக்கருக்கு தெரியாமல் போனது ஏனோ? தெலுங்கு இனப்பாசமோ?

1000 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை பேசத்தெரிந்த ராமசாமி நாயக்கருக்கு, அதற்க்கு பிந்தைய வரலாறு தெரியாமல் போனது வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் உள்ளது..

இன்னும் தகவல் உள்ளது கை வலிப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்...

பாஜக வும் மக்கள் வரிப்பண வீண் செலவும்...


3000 கோடி செலவில் வல்லபாய் பட்டேல் சிலையை தொடர்ந்து தற்போது மேலும் ஆயிரம் கோடி யில் ராமர் சிலை...

குஜராத்தில் 3000 கோடி ரூபாயில் 182 மீட்டர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சிலை அமைத்ததை தொடர்ந்து தற்போது உத்திரபிரதேச பாஜக அரசு 221 மீட்டர் செலவில் (செலவை நீங்கள் கணக்கீட்டு கொள்ளுங்கள் )  வெங்கல ராமர் சிலையை அமைக்க போவதாக கூறியுள்ளது.

தமிழகம் தரும் வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கே நமக்கு வருகிறது. உத்திரபிரதேச வரி வசூலிப்பைவிட பிற மாநிலங்களில் இருந்து பெறும் பணம் அதிகம்

அப்படி இருக்கையில் நம் மக்கள் டெல்டாவில் உயிர் உடமை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதை கண்டும் காணாது உள்ள மத்திய பாஜக அரசு அவர்கள் ஆளும் மாநிலங்களில் சிலை விழா எடுக்கிறார்கள்.

நமக்கு நிதி ஒதுக்கீடு நம் பணத்திலிருந்து கேட்கவே நாம் கெஞ்சிக் கொண்டு இருக்கிறோம்...

தமிழினமே விழித்தெழு...


சேற்றுக்குள் சிக்கிய தேசிய இனங்கள் முண்டியடித்துக் கரையேற நினைக்கும் நேரத்தில் திராவிடம் என்னும் முதலை தமிழரின் காலைக் கவ்வி இழுக்கிறது..

முதலையை முறியடிப்பது எப்போது?
சேற்றிலிருந்து எழுவது எப்போது?

நீ தமிழனில்லை, திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.. இல்லை, இந்தியன் என்கிறது இன்னொரு கூட்டம்..

திராவிட வணிகம் தமிழகத்தில் களைகட்டி நடந்த காரணத்தால், ஆட்சி எப்போதுமே திராவிடர்கள் கையிலேயே இருக்கிறது..

தமிழரோ தொண்டராக, எடுபிடியாக, ஏமாளியாக, இளித்தவாயனாக வளம் வருகின்றார்கள்..

வணிகமோ மலையாளிகள், மார்வாடிகள் கையில் குவிந்து கிடக்கிறது.

அரசியல் தெலுங்கர், கன்னடரிடம் மாட்டிக் கொண்டுள்ளது..

தமிழ்க் கலைகள் களவாடப்பட்டு தமிழர் ஓட்டாண்டியாக மட்டுமல்ல.. தமிழில் பாடினாலாயே தீட்டு என்கிற நிலையைத் தமிழகத்தினுள்ளேயே கொண்டு வந்துவிட்டனர்..

கோவிலில், வழக்கு மன்றத்தில், பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது..

ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் சமஸ்கிருதமும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன..

இதுதான் திராவிடம் செய்த கோலம்..

தமிழகச் சட்டமன்றத்திற்கே தமிழரல்லாத தெலுங்கர் ஒருவரின் பெயரைச் சூட்டும் அளவிற்குத் தமிழகம் தாழ்ந்து போனது..

தாழ்ந்த தமிழகம் தலை நிமிர.. இழந்த பகுதிகளை மீட்டாக வேண்டும், அழிந்த கலைகளை உயிர்பிக்க வேண்டும், விட்டுக் கொடுத்த உரிமைகளை எட்டிப் பிடித்தாக வேண்டும்..

தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும்..

தமிழரின் அறிவும் ஆற்றலும் உலகிற்கு பயனுற விளங்க வேண்டும்...

தனி நாடாக இருந்திருந்தால், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ்நாடு உலகில் 17வது நாடு...


ஸ்டெர்லைட் மீதான பாஜக அடிமை அதிமுக அரசின் சீராய்வு மனு - தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்...


ஸ்டெர்லைட் மீதான தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் நிலத்தடி நீர், விவசாயம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து 100-ஆவது நாள் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு சீல் வைத்தது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும் பசுமை தீர்ப்பாய விசாரணை தடை கோரியும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை நிராகரித்ததோடு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து விட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அந்த சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

தமிழினத் துரோகி விசிக திருமா...


ஒரு நாள் வாழும் ஈசல் மகிழ்ச்சியாக இருக்கும் போது...


பல வருடங்களுக்கு மேல் வாழும் மனிதனால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதா ?

மனிதனின் மனம் மட்டுமே காரணம்
மனதை திசை திருப்புங்கள் உண்மையை தேடி..

உங்கள் கண்களை முற்றிலும் இயற்கையை  திறந்து பாருங்கள்
ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக  கற்று கொள்ளுங்கள் அதனிடம்..

கடைசியில் முடிவு மகிழ்ச்சி மட்டுமே விடை வரும்..

ஒவ்வொரு இயற்கையும் மகிழ்ச்சியாக சிரித்து கொண்டே இருக்கிறது.

மனிதர்களை தவிர...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


இது ஒரு தென்மேற்கு ரஷ்யாவில் நடந்த பறக்கும் தட்டு மற்றும் வேற்றுகிரக பார்வையாளர்கள் பற்றிய சம்பவம். இது ஒரு ஏமாற்று வேலையோ அல்லது மன உறுதியற்ற ஒரு அடையாளம் அல்ல, ஆர்வத்தை வரைவதன் மூலம் உள்ளூர் சுற்றுலாத் துறையைத் தூண்டுவதற்கான முயற்சியோ அல்ல, சோவியத் செய்தி ஊடகம் Tass ரஷ்யாவிற்கான ஒரு வேற்று கிரக பயணத்தை அழைத்த விவாதத்தில் இதை வலியுறுத்தியது.

தென்மேற்கு ரஷ்யாவின் ஒரு நகரம் தான் வோரோனெஜ். வோரோனெஜ் நகரின் வசிப்பவர்கள், செப்டம்பர் 17, 1989 அன்று, மூன்று கண்களைச் உடைய உயிரினங்கள். ஒரு உள்ளூர் பூங்காவில் தரையிறங்கியதை கண்டதாகவும், ஒரு பயணத்திற்காக சென்ற, உத்தியோகபூர்வ பத்திரிகை நிறுவனமான Tass. அன்று நடந்த நிகழ்வைப் பற்றிய ஒரு அறிக்கையாக வெளியிட்டதாகவும், அவை முற்றிலும் உண்மையாக இருந்தது என்று இன்றும் வலியுறுத்திகின்றர். அது ஒரு ஆப்டிகல் மாயை அல்ல '' என்று அந்த பத்திரிகை ஆசிரியர் லியுட் கூறினார்.

வோரோனெஜ் மாவட்ட காவல் நிலையத்தின் செர்ஜி ஏ.மட்வேவ் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறினார், அன்று லெப்டினென்ட் மேட்வேவ் அவர்கள் விசித்திரமான மற்றும் 'வானத்தில் பறக்கும் உடல்' ஒன்றை பார்த்ததாக கூறினார், '' மிக உயர்ந்த வேகத்தில் மற்றும் மிகக் குறைந்த உயரத்தில் அமைதியற்ற முறையில் நகர்ந்தது என்றார்.

அவர் முதலில் அந்த பொருளைக் கண்டபோது, அது ஒரு சிறிய சந்தேகத்திற்குரிய மாயையாக இருக்கலாம் என்றிருந்தேன். நான் மிகவும் சோர்வாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் என் கண்களை தொய்த்துப் பார்த்தபோது அதன் உண்மை தான். பறக்கும் இயந்திரம்.
என்று அவர் கூறினார்.

பிறகு Tass, பத்திரிகை நிறுவனம், U.F.O இன் மேலும் விவரங்களை வழங்கியுள்ளது. அந்த பறக்கும் இயந்திரம் மாஸ்கோவின் தென்கிழக்காக சுமார் 300 மைல் தொலைவிலுள்ள வோரோனேஜ் நகரில் இறங்கியது.
Tass பத்திரிகையின் செய்தித் தாளாளர் சோவ்ட்ஸ்கா. கல்குராவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், செப்டம்பர் 27 ம் திகதி சூடான மாலையில் திடீரென ஒரு பூங்காவில் இரண்டு சிறுவர்கள் மற்றும் உள்ளூர் பள்ளியில் இருந்து வஸ்ஸ சுரின், ஜெனியா ப்லினோவ். ஆகியோர் கடத்தப்பட்டதாக தகவலை கூறினார்.

மேலும் பூங்காவில் உள்ளவர்கள் தந்த தகவல் படி அவர்கள் வானத்தில் ஒரு இளஞ்சிவப்பு பளபளப்பாக்குவதைக் கண்டார்கள், பின்னர் ஒரு பனிக்கட்டி சிவப்பு வண்ணமாக மாறியது.
அப்போது வானில் ஒரு கூட்டம் கூடியது, '' அவர்களின் பந்து போன்ற பறக்கும் இயந்திரத்தின் கீழ் பகுதியில் ஒரு கதவு திறந்தது. திறந்த கதவின் இறங்கிய ஒரு உருவம். மனித உருவத்தை ஒத்ததாக தெளிவாக பார்க்க முடிந்தது.

மேலும் வெளிப்படையான அமைதியாக அவர்கள் ஒன்பது அடி உயரமாகவும், வெண்மையான மேலுறைகளும் மற்றும் வெண்கல பூட்ஸ் மற்றும் ஒரு மார்பில்  பொத்தான் வடிவமைப்பு கொண்டு. மேலும் தங்கள் தலையில் மூன்று கண்களைக் கொண்ட உயிரினமாக காட்சியளித்தனர்., அவர்கள் ரோபோவை ஒத்ததாகவும் வலம் வந்தார்கள்.

பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, ஒரு பிரகாசிக்கும் முக்கோணத்தின் மர்மமான தோற்றத்தை உருவாக்கி, அங்கு உள்ள சிறுவர்களை கவர்ந்து செல்ல முற்படுகையில். ஒரு பையன் கத்தத் தொடங்கினான், ஆனால் அவர்களின் பிரகாசமான கண்களின் பார்வையால், பையன் மௌனமாக இருந்தான், முடங்கிவிட்டான்.ஒரு குழாய் போன்ற 'துப்பாக்கி' கொண்டு ஆயுதங்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கையில் குறிப்பிப்பட்ட சிருவர்களச உடனடியாக அவர்களால் கடத்தப்பட்டான். பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் இயக்குனர் விளாடிமிர் ஏ. மோஸியேவ் நகரத்தில் பரவலான பயம் இருந்தபோதிலும், எந்த ஒரு சாட்சியும் மருத்துவ உதவியைப் பயன்படுத்தவில்லை.'நிச்சயமாக நாங்கள் குழந்தைகளை கண்டுபிடிப்போம் என்று கூறினார்.

வேற்றுகிரகவாசிகளை கண்டது குழந்தைகள் மட்டுமே என்ற போதிலும், வோரோனெஜ் மாவட்ட காவல் நிலையத்தின் லெப்டினென்ட் செர்ஜி ஏ.மட்வேவ் இந்த நிகழ்வினை கண்டதாகக் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, சோவியத் அறிவியல் ஆணையம் கூறப்படும் சம்பவத்திற்கு ஒரு உத்தியோகபூர்வ விசாரணை உத்தரவிட்டது. இந்த பகுதி கதிரியக்க ஐசோடோப்பு ஸீசியாமின் சராசரியாக முன்னிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும், வோரோனேஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் உடனடியாக இது குறிப்பிடத்தக்கது என்று கருதினார்.

அன்று அந்த சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில், அத்தகைய பரிசோதனை இன்னும் நடைபெறவில்லை என்பதற்கு எந்த விளக்கமும் இல்லை. அறிக்கையை தீவிரமாக பரிசோதித்த மோரிசேவ், வோரோனேஜ், Tass ஆசிரியர்கள் உண்மையில் அந்த அறிக்கையை ஒரு தீவிர அறிவியல் நிகழ்வு என்று கருதினார்.

இந்த விவரங்கள் அப்படியே அமெரிக்க சாகாவில் இடம்பெற்ற வேற்றுகிரக பார்வையாளர்கள் சம்பவத்தை மிகவும் ஒத்ததாக இருந்தன, ஆனால் TASS நிருபர்கள் சாட்சிகளை அநேகமாக  புடிக்கவில்லை" என்று குறிப்பிட்டனர்.

பின்னர் சோசலிஸ்ட் இன்ஜினியரிங்ஸ் லைட் வெளியிட்ட ஒரு கட்டுரையில், சுயமாக பிரகடனப்படுத்தப்பட்ட UFO நிபுணர்கள். தரையிறங்கிய UFO இடங்களை விட்டு வெளியேறிய இடம் வெறுமனே எரிந்த வைக்கோல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியது என்றனர்.

பின்னர் உடனடியாக சோவியத் அரசு மற்றும் மர்மகுழு இதை கதையல்லாத கட்டுக்கதையாகக் கடப்பதற்கு முயன்றனர். உத்தியோகபூர்வ கம்யூனிஸ்ட் பத்திரிகை Tass தனது முடிவை வெளியிடக் காத்துக் கொண்டிருந்தது. பத்திரிகை எல்லாவற்றையும் வாசகர் அறிந்திருக்க வேண்டும். என அரசிடம் வழங்கிய அந்த அறிக்கை பல முறை கேட்டது, ஆனால் அந்த அறிக்கை நம்பகதன்மை அற்றது எனக் கருதி முழு விவரங்களை வெளியிட தடைவிதித்தது..

இதில் மிக முக்கியமாக, சோவியத் ஒன்றியத்திற்கான நம்பிக்கை வீழ்ச்சியடைந்த நேரத்தில், வேற்று கிரகவாசிகள் வருகை மற்றும் மாய சக்திகள் பற்றி சிந்திக்க வும். குறிப்பாக வேற்றுகிரக கடத்தல் சம்பவங்களில். கடத்தப்பட்டவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு விடிவிப்பது வழமை. ஆனால் இந்த சம்பவத்தின் மையக்கருவான அந்த குழந்தைகளின் நிலை என்னவொன்று தெரியவில்லை. இது அந்நாட்டு மக்களுக்கு மனச்சோர்வையே அளித்தது...

தமிழ் தேசிய மாவீரர்கள் நாள்...


உன்னத இலட்சியத்திற்காக.. தமது உயிரை அர்ப்பணித்த உத்தமர்களின் நினைவுகளை.. தமிழ் மக்களது மனங்களில் இருந்து அழித்துவிட முடியாது..

எமது இன விடுதலைப் போராட்டத்திற்காக தங்களுடைய உயரிய உயிரையே அர்ப்பணித்த மாவீரர்களுடைய தினம் எப்போதும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

அவர்களது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும் ஒரு போதும் முடியாது...

உடல்கள் அழிந்தாலும் உடல் கொண்ட நினைவுகளும், சிந்தனைகளும் அடுத்த தலைமுறைக்கு கடத்தபட்டு பயணித்து கொண்டு தான் இருக்கும்... மாவீரர்கள் நாள் போற்றுவோம்.....


திலீபனின் இறுதி உரையிலிருந்து…


என்னால் பேச முடியவில்லை, ஆயினும் என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது..

நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன.

நான் திருப்தி அடைகிறேன்.

இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன்.

ஆனால் நீங்கள் தந்த உற்சாகம்தான் என்னை இப்போதும் வாழவைத்துக் கொண்டுள்ளது.

நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.

நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.

நான் மீட்கப்பட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டதை உணர்கிறேன்.

ஆனால் பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.

நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.

நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழ வேண்டும்.

மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்..

இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும்.

எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல் தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்..

எனது மூளை இப்போது எதனையும் நன்றாக கிரகிக்கவில்லை என்பது எனக்கு விளங்குகிறது..

இதில் பிழைகள் இருக்கலாம்.. இதை நீங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்..

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்...