சூப்பர்மேன் வருவாரென எதிர்பார்த்திருந்த அனிதா சற்று உயரம் குறைவாக வந்தமர்ந்த தலைவரைப் பார்த்து இயக்கத்தைச் சேர்ந்தவர் என நினைத்த அனிதா, ஜன்னலுக்கு வெளியே தலைவரைத் தேடி தன் பார்வையை ஓட்டினார்.
புரிந்து கொண்ட தலைவர்.. சற்று மௌனத்திற்கு பிறகு 'நான் தான் பிரபாகரன்' என்றவரின் மென்மையான குரலைக் கேட்டதும் அனிதா வியந்தாராம்.
அவரது நேர்காணலில்..
எதிர்காலத்தையும் எதிரிகளையும் நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலும், அவருடைய ஒரே இலக்கு தமிழீழத்தை தவிர வேறில்லை என்பதும், அவர் எவ்வளவு கூர்மையாக உன்னிப்பாக நிகழ்வுகளை விடயங்களை உற்று நோக்குகிறார் என்பதும் புரிந்தது.
மேலும் தலைவர் சொன்ன விடயம், (இந்த விடயத்தை அனிதா பிரதாப் வெளியிடவில்லையாம்) என்றாவது ஒரு நாள் நாங்கள் இந்தியாவுடன் போரிடும் நிலை ஏற்படலாம்.
(அதாவது இந்திய அமைதிப்படையுடன் பின்னாளில் ஏற்படப்போகும் போரினை முன்கூட்டியே கணித்திருக்கிறார்).
இதைக் கேட்ட அனிதா அதிர்ச்சியடைந்து
இந்தியா உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சோறூட்டும் கைகளையே கடிப்பீர்களா? என வினவியுள்ளார்.
அதற்கு பதிலளித்த தலைவர், தமிழீழம் அமைவதை இலங்கையை விட இந்தியா விரும்பாது. ஏனென்றால் இந்தியாவில் ஐந்துகோடி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாராம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.