29/08/2021

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...

மனித மனத்தில் உருவாகிற எண்ணங்கள் சக்தியாகையால் உருவான மறுவினாடியே அது நம் மூளையை விட்டு உடலை விட்டு பிரபஞ்சத்தில் பரவத் தொடங்கி விடுகிறது. இதனை ஒரு உயிருள்ள வானொலி ஒலிபரப்பு நிலையம் செயல்படுவதாக நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

சாதாரணமாக ஒருவர் பேசுகின்றொலி ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் மற்றவர்களுக்கு கேட்பதில்லை. ஒரு ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகிறபோது ஒலியின் தன்மை பல மடங்காக (AMPLIFY) பெருக்கப்பட்டு இன்னும் அதிக தூரத்திற்கு கேட்கச் செய்ய முடிகிறது.

அதே ஒலி நுண் அலைகளாக (Microwave) மாற்றப்படும்பொழுது அது மிக நீண்ட தூரம் சென்று மீண்டும் நுண் அலைகள் சாதாரண அலைகளாக மாற்றப்பட்டு கேட்கச்செய்கிறது.

மனித மனத்தின் எண்ணங்களும் இப்படி நுண் அலைகளாக மாற்றப்பட்டால்தான் அது அதிக தொலைவு ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவும்.

சாதாரணமான எண்ணங்கள் இப்படி பரவினாலும் வேகாமாக வெகு தொலைவிற்கு செல்லாது.

ஒவ்வொரு மனித மனத்திலிருந்தும் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் (FREQUENCY) எண்ணங்கள் ஒலிபரப்பாவதால் அதே அலை வரிசையில் மனத்தை வைத்திருப்பவர்களின் மூளையை அது தாக்கி அங்கு அந்த சிந்தனை தொடர்பான சிந்தனைகள் தோன்றக் காரணமாக அமைகிறது.

இந்த நிகழ்வுகளை ஒரு சோதனைச் சாலையில நிரூபணமாக செய்ய முடியாது. ஆயினும் ஒரு பேருண்மையை நாமனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதாவது ஒத்த எண்ணமுடைய எண்ண அலைவரிசையையுடைய மனிதர்கள் மட்டுமே மனப்பூர்வமான நிறைவான உணர்வுப் பூர்வமான நட்பில் நிலைக்க முடியும்; நண்பர்களாக வாழமுடியும்.

மாறுபட்ட எண்ண அலைவரிசையுடையவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது. சில சமயம் மாறுபட்ட எண்ணமுடையவர்கள் சில காலம் ஒன்றாக இருப்பார்கள்.

ஆனால் அது மனம் இணையாத உடல்கள் மட்டும் அருகில் இருக்கும் போலியான தோற்றம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி, கபட நட்பாகத்தான் இருக்க முடியும்.

ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்பது உலக இயற்கை. விதி, நியதி. இது மாறாதது.

எண்ணங்களைப் பொருத்த மட்டில் தன்னை ஒத்த எண்ணங்களை, தன்னை ஒத்த சிந்தனை உள்ள மனிதர்களை கவர்ந்து இழுப்பது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

“கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்பதும், “பாம்பின்கால் பாம்பறியும்” என்கிற சொற்றொடர்களும் இந்த பிரபஞ்ச எண்ண விதிகளின் படிதான்.

இல்லை, போதவில்லை, வறுமை பற்றாக்குறை, பஞ்சம் என்று வாடிக்கையாகப் பேசுபவர்கள் வறுமை எண்ணங்களையும், வறுமையிலும் பற்றாக்குறையிலும் பரிதவிப்பவர்களையும், ஏழைகளையும், வறுமைச் சூழலையும் வாழக்கையில் கவர்ந்து இழுத்து மேலும் மேலும் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் வளமை எண்ணம் உடைய செல்வந்தர்கள் வளமான வணிகத்தையும் வரப்போகிற வருமானத்தையும் வளமான வணிகம் செய்கிற நண்பர்களையும் பிரபஞ்ச விதிப்படி ஒத்தது ஒத்ததை ஈர்க்கும் என்கிற விதிப்படி ஈர்த்து வசதியான வளமான வசந்த வாழ்க்கை விளைகிறது.

ஒருவேளை உங்களிடம் இன்றைக்கு பணமில்லை என்றாலும் நாளை வரப்போகிற பணத்தை செல்வத்தை எண்ணி வளமான சிந்தனையை மனத்தில் இருத்துங்கள்.

“POVERTY BEGETS POVERTY” “RICH BECOMES RICHER” பிச்சைக்கார வறுமை எண்ணம் ஏழ்மையை கொண்டு வருகிறது. செல்வ மனநிலை வளமான வாழ்க்கையை வருவிக்கிறது.

இந்த எல்லாவற்றையும் தீர்க்கமாக சிந்தித்த “மனவளக்கலை” என்கிற மார்க்கத்தை தமிழ் மக்களுக்குத்தந்த தவசீலர் மகரிஷி வேதாத்திரி அவர்கள் “வாழ்க வளமுடன்” என்று வாழ்த்தி வரவேற்கச் சொன்னதும் வாழ்த்தச் சொன்னதும் இந்த பிரபஞ்ச நியதியையும் விதியையும் விஞ்ஞான பூர்வமாக அறிந்ததன் விளைவே.

மனிதர் தங்களின் ஆசைகளையும் விருப்பங்களையும் அடைய முயற்சி செய்கிறார்கள். முயற்சிகள் தோல்வியடைகிற பொழுது கடவுளிடம் கேயேந்த தொடங்குகிறார்கள்.

இறைவனிடம் கையேந்துங்கள் - அவன் இல்லையென்று சொல்லுவதில்லை உண்மைதான்.

இந்த பிராத்தனையை ஏன் தொடக்கத்திலேயே செய்யக்கூடாது. சொல்லுகிறேன்.

பிரார்த்தனை விஞ்ஞானப்பூர்வமானது விசுவாசியுங்கள், உணர்ச்சிகள் இவையாவும் ஒன்றிணைவதால் இந்தப் பிரபஞ்சம் முழுவது பரவி தக்க நபரைத் தாக்கி அந்த மனிதரின் மூலம் நம் எண்ணங்கள் ஈடேறுவதற்கான சூழல் வாழ்க்கயில் உண்டாகிறது.

அற்புதத்தை உருவாக்குகிற அற்புதங்களை நிகழ்த்துக்கிற ஆற்றல் இப்படித்தான் உருவாகிறது.

பிரார்த்தனையை அமைதியாக தனிமையில் (தியானம் செய்வதுபோல) ஒரு அறையில் அழகாக அலங்கரிக்கப்பட்ட படம் அல்லது இலை முன்பு (சூழல் அழகாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது) மனம் கமழும் சூழலில் ஆச்சார இயம - நியம விதிகளின்படி குளித்துவிட்டு ஈர உடையுடனோ அல்லது குளிர்ந்த உடலுடனோ (அப்போதுதான் ஆழ்மனம் விழிப்படையும்) நினைவு மன செயல்பாடுகள் ஒடுங்க ஆழ்மனம் விழிக்க எண்ண அலைகளின் போக்குவரத்து குறைவாக இருக்கும் பிரம்ம முகூர்த்த வேளைகளில் (அதிகாலை 3.00 மணியிலிருந்து 6 மணிக்குள் சூரியன் உதிப்பதற்கு முன்) நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் உணர்ச்சிபூர்வமாக சங்கல்பிக்கிற ஆசைகள், அபிலாஷைகள் தீர்மானங்கள் விஞ்ஞான விதிகளைப் போல செயல்பட்டு விளைவுகளை உருவாக்கும். நினைத்தது நிறைவேறும்.

டாக்டர் பண்டிட் ஜி. கண்ணைய யோகி என்கிறவர் சென்னையில் வாழ்ந்து மறைந்த ஞானி. “மானச யோகம்” என்கிற தன்னுடைய நூலில் அவர் எண்ணங்களைப்பற்றி அற்புதமான செய்திகளையும் விளக்கங்களையும் விரிவாக தந்திருக்கிறார்கள்.

ஒரு உதாரணம்: வீட்டில் குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கித்தரும் மோட்டார் கார், பஸ் போன்ற பொம்மைகள் பாட்டரி மின்சாரத்தினாலோ அல்லது சாவி கொடுப்பதன் மூலமோ இயங்குபவைகள். அவைகளை தரையில் வைத்து இயக்கிவிட்டு அதன் ஒரு பாதையில் ஏதோ மரக்கட்டையோ ஒரு கனமான புத்தகத்தையோ குறுக்கே வைத்து தடையை ஏற்படுத்தினால் அந்த பொம்மை முன்னேறிச் செல்ல முடியாமல் நிற்கும்.

எறும்புகள் செல்லும் பாதையில் இதுபோல தடைகளை ஏற்படுத்தினால் அந்த எறும்புகள் தடையைத் தாண்டி தடையின் மீது ஏறியோ அல்லது வலமாகவோ இடமாகவோ திரும்பி பாதையை மாற்றி தன் பயணத்தை தொடருகிறது.

பொம்மைக்கும் எறும்புக்கும் செயல்பாடுகளில் உள்ள வேறுபாடு எதனால் என்று சிந்தித்தால் ஒன்றை அறியலாம். அதாவது எறும்பின் அறிவு, எண்ணம் செய்லபடுவதால் செயல்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. பொம்மைக்கு ‘எண்ணம்’ இல்லை. செயலில் மாற்றம் ஏற்படுவதில்லை.

வெளியூரில் உள்ள நண்பரின் விலாசத்தை தந்து அந்த ஊருக்கு வேறு ஏதோ ஒரு வேலை விஷயமாக செல்லும் உள்ளூர் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து சேர்ப்பித்துவிட்டு வரச்சொன்னால் உள்ளூர் நண்பர் தன் அறிவாலும் முயற்சியாலும் அவ்வாறு செய்வார்.

இதுபோலவே நம்மூரில் கிடைக்காத ஒரு பொருளை வெளியூரில் வாங்கிவருமாறு உறவினருக்கோ நண்பருக்கோ வேண்டுகோள் விடுத்தால் அவர்கள் அவ்வாறே அந்த ஊர்களுக்குச் செல்லும் பொழுது தேடிப்பிடித்து முயற்சி செய்துத வாங்கிவருவார்கள். அறிவு என்கிற எண்ணமும் முயற்சி என்னும் முனைப்பும் உடலை தூண்டி, இயக்கி அவ்வாறு செய்யத் துணைபுரிகிறது.

இந்த மேற்கண்ட பணிகளைச் செய்த நண்பர்கள், உறவினர்கள் இவர்களுக்கு தகவல்களைத் தந்துவிட்டு, அவர்களின் அறிவாகிய எண்ணத்தில் பணிக்கான முனைப்பை ஏற்படுத்திவிட்டு உடலையும் எண்ணத்தையும் வேறாக பிரித்து கற்பனையாக உடல் இல்லை எண்ணம் மட்டுமே உள்ளது என்ற நிலையில் அங்கே செயல் நிகழுமா என்று நாம் எண்ணிப் பாத்தாலோ அல்லது சோதித்துப் பார்த்தாலோ ஒன்றை நாம் நிச்சயமாக உய்த்துணரலாம்.

தகவல்கள் தரப்பட்ட அறிவுறுத்தப்பட்ட அறிவு செயல்பட முனையும். செயல்படும் உடல் இல்லாத நிலையில் உலகுக்கு வெளிப்படையாக அறிவின் எண்ணத்தின் செயல்பாடு தெரியாது.

ஆனால் அறிவு வெளியூரில் உள்ள நண்பர்களின் எண்ணத்தைத் தாக்கி விளைவை ஏற்படுத்தும். வாங்கிவரச் சொன்ன பொருள் தகவல் தந்தவருக்கு கிடைக்க வழிமுறைகளைச் செய்யும். இதே தத்துவத்தை பயன்படுத்தி ஒரு மனிதரின் உள்ளத்திலிருந்து மற்றொரு மனிதருக்கு செய்தியை அறிவிக்கும் செயல்பாட்டை “மானச தந்தி” (Telepathy) என்று அழைக்கலாம். செய்யவும் செய்யலாம்.

பல நேரங்களில் இயற்கையாகவே இதுபோல நண்பர்களைப் பற்றியோ உறவினர்களைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கும்போதோ அதற்கு உரியவர்கள் நேரில் வந்த அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பேசும்பொழுது நினைத்தேன் வந்தாய், நூறுவயது என்று வியப்படைக் கூடிய செயல்களை பலமுறை பார்க்கலாம்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் வாசக அன்பர்கள் இந்த தத்துவத்தைப் பயன்படுத்தி சோதித்துப் பார்க்கலாம். உண்மையை அறியலாம்.

உடல் கருவியைப் பயன்படுத்தாமல் உள்ளத்தின் ஆற்றலை மனோ சக்தியால் மற்றவர்களின் மனங்களின் கருத்துக்களைச் செலுத்தி காரியங்களைச் செய்ய முயற்சி செய்யலாம்.

வணிகத்தில், தொழிலில் விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை கவர, விற்ற பிறகு பணத்தைபெறுவதற்கும் முரண்பாடுள்ள மனிதர்களுக்கு இடையே நல்லுறவுகளை உருவாக்கவும், கணவன் மனைவிகளுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும், பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும், முதலாளி தொழிலாளி உறவுகள் மேம்படவும், ஒரு காரியம் நடைபெற உதவி கேட்டு செல்லும்பொது தடையின்றி மற்றவர்களுக்கு உதவவும், ஒத்துழைக்கவும், இந்த மானசீக மனோசக்தி உத்தியைப் பயன்படுத்தி மாற்றங்களை வேண்டும் வகையில் உருவாக்கலாம்.

மனோசக்தியை அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு பயன்படுத்தவும்...

தடுப்பூசி வியாபாரமும்... அரசின் உரிமை மீறலும்...

 


தடுப்பூசி உண்மைகள்...

 


கருப்பட்டியின் பயன்கள்...

 


பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்… இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்குக் கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

ஆண்மையை வீரியப் படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம்.

இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது...

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது...

அதிமுக ஊழல் மன்னன் ஓபிஎஸ் கலாட்டா...

 


நிதர்சனமான உண்மை 😅😂

 


பெருஞ்சீரக லெமன் டீ குடித்தால் இப்படி ஒரு விஷயம் நடக்கும்...

 


உடல் எடை குறைய, தேவையற்ற சதையைக் குறைக்க உதவும் பெருஞ்சீரக லெமன் டீ செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

டீத்தூள் – 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் (சோம்பு) – 2 டீஸ்பூன்

தேன் – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – அரை ஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

செய்முறை :

இஞ்சியை தோல் சீவி ஒன்றும் பாதியாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

பெருஞ்சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

ஒரு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து, டீத்தூளைப் போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக கொதிக்கும்போது, வறுத்த பெருஞ்சீரகம், இஞ்சியை போட்டு அதுவும் சேர்ந்து நன்கு கொதித்தபிறகு, இறக்கி வடிகட்டவும்.

வடிகட்டிய டீயில் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

பயன்கள் :

எடை குறைப்பதற்கு அருமையான பானம் இது.

மேலும், கை, கால்களில் காணப்படும் தேவையற்ற சதையைக் குறைக்கவும் இந்த டீ உதவும்.

தினமும் காலையில் இந்த டீயை குடித்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்...

ஒ... இதற்கு பெயர் தான் காதலா.?

 




அடுத்த வரி கவி 
என்னென்று தெரியவில்லை..

அவள் விழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்..

பஞ்சம் இல்லாமல் 
எழுத்துக்கள் இருந்தும்..

அவள் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்.....

பாலியல் அல்லது நாட்டை விற்கிறது தானடா உங்க கொள்கையே...

 


குண்டலினி...

 


எளிய முறை குண்டலினி...

எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்.

காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம்.

புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும்.

ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.

மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல.

உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது.

அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது.

பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது.

இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினை சக்கரம்..

உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும்.

உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும்.

அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது.

மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்.

தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும்.

மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும்.

ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்...

கணவன் Vs மனைவி கலாட்டா...

 


என் மனைவிக்கு கோபம் வந்தா அவ அம்மா வீட்டுக்கு போயிடுவா..

நீங்க என்ன பண்ணுவீங்க.?

கோபம் வர்ற மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பேன்...

வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குபவனே திறமைசாலி..

🤣🤣🤣

கொரோனா தடுப்பூசி வியாபாரம்...