06/06/2018

இயற்கை வாழ்வியல்முறை.. தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை...


1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது.

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்.

3, 6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்.

5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்.

4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.

பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்...

1. அருந்துதல் – மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் – பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் – வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் – நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் – தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் – சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் – நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் – முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் – நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் – பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் – கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் – பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்...

இந்தியாவுடன் போர் என்பதற்கு இடமில்லை - பாகிஸ்தான்...


13 கிலோ மனுக்களை தலையில் சுமந்துவந்த தொழிலாளி.. தூக்கி எறிந்த கலெக்டர்...


மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில்
மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதிப் பதிவு செய்து கலெக்டரிடம் கொடுத்தனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளியான இவருக்கு தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட்  நிலத்தைக் கடந்த 2008 ம் ஆண்டு ரியல் எஸ்டேட்காரர்கள் அபகரித்துவிட்டனர். இது குறித்து முனுசாமி வருவாய்த்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர், அமைச்சர் எனப் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. அவர் தனது நிலத்தினை மீட்டு தரக்கோரி 10 ஆண்டுகளில்  200க்கும் மேற்பட்ட முறை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் முனுசாமி இதுவரை அனுப்பிய அனைத்து மனுக்களை தனது தலையில் சுமந்தபடி வந்து  கலெக்டர்  தண்டபானியிடம் மீண்டும் மனு கொடுத்தார். ஆனால், கலெக்டர் அந்த மனுவைப் படித்துகூட பார்க்காமல் உங்களுக்கு `உங்கள் நிலம் கிடைக்காது' என்று கூறி மனுவைத் தூக்கி எறிந்தார். இதனால் மனமுடைந்த தாய், மகன் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கலெக்டர் அலுவலகத்தில் மனுவைத் தலையில் சுமந்தபடி சுற்றி வருகின்றனர்...

உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்...


நல்லுறவைப் பேண சில நினைவூட்டல்கள்...


பிறரது முயற்சிகளால் விளைந்த மிகச்சிறிய வெற்றிகளையும் கொண்டாட மறவாதீர்கள், அதுதான்  உறவுகளை மேலும் வலுப்படுத்தும் மந்திரம்.

எப்போதும் அர்ப்பணிப்பும், ஆர்ப்பரிப்பும் நிறைந்த கொண்டாட்ட மனநிலையில் பிறர் செயல்படக்  காரணமாக இருங்கள்.

பிறரது தவறுகளுக்கு கடுஞ்சொற்களைப் பிரயோகிக்காதீர்கள், மேலும் தவறுகள் நேராதபடி, இயற்கையின் வினைகளை தெளிவாக எடுத்துரைத்து, மன்னித்து, கனிவாக கண்டியுங்கள்.

பிறரது உதவிகள் சிறிதானாலும், பெரிதானாலும் உங்களது நன்றிகளைச் சிறப்பான வழிகளில் மிக தாராளமாக மனமார்ந்து வெளிப்படுத்துங்கள்...

நீட் தேர்வு எனும் ஆபத்து...


தடை செய்யப்பட்ட குட்கா என்ன ஆச்சி? தடை செய்யப்பட்ட 40 மைக்ரான் பிளாஸ்டிக் கவர் என்ன ஆச்சி?


ஒரு 19 வருஷத்துக்கு முன்னாடி இதே போல பிளாஸ்டிக் கவர் மொத்தத்தையும் தடைசெய்யயப்போகிறேன் என்று கருணாநிதி விட்ட அறிவிப்பு என்ன ஆச்சி??

எதையாவது தடை செஞ்சாதான் வசூல் அதிகமாகும். முதலமைச்சரின் பிளாஸ்டிக் தடை அறிவிப்புக்கு பின் இதற்கு மேல் என்ன காரணம் இருந்து விடப்போகிறது?

பேரம் பேசுவதற்கு அடுத்த 6 மாதம் டைம் வேற தாராளமா கொடுத்திருக்கார்...

விழித்துக்கொள் தமிழகமே...


தரமற்ற முறையில் நடைபெறும் உளுந்தூர்பேட்டை பாதாள சாக்கடை திட்டம்...


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாகவும் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து தண்ணீர் தேங்கி கழிவுநீர் குடிநீரோடு கலப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிப் பகுதிக்கு பாதாளசாக்கடைத் திட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்காக 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகளும் நடைபெற்று வருகிறது. நகரின் பல பகுதிகளில் இதற்காக கழிவுநீர் தொட்டிகள் கட்டப்பட்டதோடு, அனைத்து தெருக்களையும் இணைக்கும் வகையில் குழாய்களும் பதிக்கப்பட்டு வருகின்றன.

60 விழுக்காடு பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் நடந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் புதிதாக அமைக்கப்பட்ட் கழிவுநீர் தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் குழாய்கள் பதிக்கப்பட்ட இடம் மழை காரணமாக ஆங்காங்கே மண்ணில் புதைந்துள்ளதாகவும் தரமற்ற குழாய்கள் பல இடங்களில் உடைந்துவிட்டதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக பல இடங்களில் குழாய் பதிக்க பள்ளங்களைத் தோண்டி, பாதியிலேயே பணிகளை நிறுத்திச் சென்றுள்ளனர்.

அந்தப் பள்ளங்களில் மழை நீர் தேங்கி, அவற்றுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறும் குடியிருப்புவாசிகள், குடிநீரோடும் அவை கலப்பதால் நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பணிகளை ஆய்வு செய்து தரமாகவும் விரைவாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை மக்கள் கேட்டுக்கொண்டனர்...

சன் டிவி - சாகர்மாலா பேரம் படிந்தது...


நியான்டர்தால் மனிதர்களின் குகை சவ அடக்கங்கள். (Neanderthal Cave Burials)...


சுமார் 100,000 வருடங்களுக்கு முன்பு, பிணங்களை நிலத்தில் சவ அடக்கம் செய்யும் முறையை அறியாத நியான்டர்தால் மனிதர்கள்,  பிணங்களை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் நீண்ட குகைகளில் போட்டு விடுவார்களாம்.

சில அகழ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நியான்டர்தால் மனிதர்கள், ஒருவரின் ஆத்மாவானது இறந்தபின் வேறு உலகத்திற்கு செல்ல ஏதுவான இடம் குகைகளே என்று நம்பினார்களாம்.

http://www.youtube.com/watch?v=gpCned5EYuk

VVTi ஆலையை சுற்றி கழிவு ஆசிட் ஊற்றி வைத்து சேமித்து வைத்துள்ளார்கள்...


இதெல்லாம் பூமிக்குள் தொடர்ந்து இறங்கிக் கொண்டே இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியது போல வைகுண்டராஜன் ஆலையை எதிர்க்கப் போவது யார்..?

தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியில் கட்டப்பட்ட பாலம்.. கடும் எதிர்ப்புகளுக்கிடையே திறப்பு : எட்டு பேர் கைது...


தஞ்சாவூர் நகரின் மையப்பகுதியான சாந்தபிள்ளை கேட் பகுதியில் ரூ 52 கோடி மதிப்பீட்டில் 12மீட்டர் அகலத்திலும், 869மீட்டர் நீளத்திலும் புதியதாக பாலம் கட்டப்பட்டது.
   
இப்பாலம் கட்டும்போது விரிசல் ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தியதையடுத்து பாலம் திறக்கப்படாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பாலம் சரிசெய்யப்பட்டு தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பாலத்தை  திறந்து வைத்தார். இதனையடுத்து தஞ்சாவூரில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பாலத்திற்கு தோரணங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பாலம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த 8பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதிமுக கட்சியினர் வெடிவெடித்து இனிப்பு வழங்கி பாலத்தில் போக்குவரத்தை தொடங்கினர்.

இந்த பாலத்தில் போக்குவரத்தை தொடங்கினால் அருகில் உள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகள் விபத்துக்கு உள்ளாவர் மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் விபத்துக்கு உள்ளாவர் எனவே பாலத்தை மீண்டும் சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
     
இது குறித்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரெங்கசாமி கூறும்போது பாலம் திருத்தியமைக்கப்படாமல் அவசரமாக இந்த பாலம் திறக்கப்படுகிறது, இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர் என்று தெரிவித்தார், ரெங்கசாமி எம்எல்ஏவாக இருக்கும்போதுதான் இந்த பாலத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுரேஸ், காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காந்தி, அறிவுடைநம்பி, சரவணன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...

பாஜக வின் நீட் தேர்வின் தில்லு முல்லுகள்...


கொங்கு நாட்டில் ஒரு மினி ஸ்டெர்லைட்...


கொங்கு மண்டலத்தில் மற்றுமொரு ஸ்டெர்லைட். நாமக்கல்- சேலம் சாலையில் அத்தனுார் ஆயிபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் சில தோப்புகளில் மட்டும் தென்னை மரங்களின் மட்டைகள் கருகிவருவதை சில மாதங்களாக பார்த்து வந்தேன். அருகிலுள்ள மரங்கள் நல்ல நிலைமையில் இருக்கும்போது அவற்றிற்குமட்டும் ஏற்பட்ட பாதிப்பிற்கு என்ன காரணம் என்ன என அறிய முற்பட்டபோது அருகிலேயே ஒரு  சிறு அளவிலான சிங்க் சல்பேட் பாக்டரி இருப்பதைக் கண்டேன்.

அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தடிநீர் செல்லும் வழியே மண்ணுக்கு அடியே  சென்று ஆழ்குழாய் கிணறுகளின் நீர்வழிகளில் இறங்கி அதலிருந்து பாய்ச்சப்படும் தண்ணீரால் அதிகப்படியான( Toxic) சிங்க் பாதிப்பால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கிணற்று தண்ணீரை பாய்ச்சும் ஆலை வளாகத்தில் உள்ள மரங்கள் நல்ல நிலைமையிலேயே உள்ளன.

A thin line separates the basic requirement and toxicity of Micro Nutrients.
அளவிற்கு மீறினால்.. இது அனைத்திற்கும் பொருந்தும்.

அங்க உள்ள மக்கள் விவசாயிகள் உடனே இதற்கு வழி செய்ய வேண்டும் இல்லை என்றால் அங்கு உள்ள விவசாயம் அழிந்து விடும்...

இன்றே புகைப்பதை நிறுத்தி விடுங்கள்...


தமிழக கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு...


கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தினால் கோயிலின் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதனையடுத்து கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய கடை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டது.

இதற்கு எதிப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

பாஜக மோடி கலாட்டா...


பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள்....


பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.

பெருங்காயம், வெப்பத்தை (உஷ்ணத்தைத்) தரக்கூடியது, உணவை செரிப்பிக்கிறது, சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது, பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.

உபயோகங்கள்:

இது ஒரு நல்ல வாய்வகற்றி ; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது.

இது வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீரேற்றத்தையும்-சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தையும் நீக்குகிறது.

சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.

இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாதவிடாயின்போது இரத்தப் போக்கினை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.

நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.

பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

கோழி முட்டை மஞ்சட் கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும்.

எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்...

தண்ணி எங்கன்னு கேக்குறவன் சமூக விரோதி...


பாஜக - அதிமுக அரசின்.. போராடினால் துப்பாக்கிச்சூடு, கண்டித்தால் கைது...


எவ்வளவு வன்மம் நிறைந்த, அரச பயங்கரவாதம்...

அரசின் ரவுடித்தனத்தால் மக்கள் தாமாகவே நாட்டை விட்டு ஒடிவிடுவார்கள்.

மக்கள் வாழ தகுதியற்ற நாடாக  மாற்றி பிறகு வளங்களை கொள்ளையடிக்க முயற்சி..

மக்கள் விழித்தெழுவார்கள்.

பிறகு தெரியும் அரச பயங்கரவாத ஆட்டமெல்லாம்...

கலப்பட பால் ஆபத்து...


கன்னட ஈ.வே. ராமசாமி எனும் பெரியாரைப் பற்றி பல நல்லுள்ளங்களில் பதிந்துவிட்ட தவறான கருத்துக்கள்.. தயவுசெய்து சிறிது நேரம் ஒதுக்குங்கள் தமிழ் தேசிய உறவுகளே...


தமிழின அழிப்பிற்கு ஆணிவேராக இருந்த பெரியாரைப்பற்றி ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறிய வேண்டும்.

தமிழினத்தை அழிக்க பெரியார் செய்த துரோகங்கள்! தயவுசெய்து தமிழராய் பிறந்தவர்கள் படியுங்கள

நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர்ந்த ஒவ்வொருவரும் படியுங்கள்.

ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.. வென்றாக வேண்டும் தமிழ்

பெரியார் தமிழினத்தை அழிக்கச் செய்த செயல்களின் தொகுப்பு -1..

சாதி வெறியர், தெலுங்கர் வெங்காய ராமசாமியின் தமிழின விரோத செயல்களின் தொகுப்புகள்..

இவரா தந்தை பெரியார் ?

இவரை தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்..

1. கள்ளுண்ணாமை என்று காந்தியார் சொன்ன போது, ஐனூரு தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்து சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் தமிழகத்தின் இயற்க்கை வளங்களை அழித்த வந்தேறி திராவிட (தெலுங்கர், கன்னடர், மலையாளி)…

2. எழுபத்திஆறு அகவையில் இருபத்திரண்டு வயதுடைய பெண்ணைத் கட்டாய பால்ய விவாகம் செய்து பெண்ணீயம் பேசிய பித்தன்…

3. பெண், விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை கழட்டி எறிந்துவிட்டு வந்தால் தான் முடியும் என்று, இயற்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாத தற்குறி….

4. மேற்படியாரை இரவலாகத் தந்தை என்று கூறுபவர்கள் தங்களை ஈன்றெடுத்த தாய்க்கு களங்கம் விளைவிக்கும் அற்பர்கள்.

வரலாற்றில் விழிப்பு.. எதிர் காலத்தின் மீட்பு...

சாகர்மாலா திட்டத்திற்காகவே அனைத்து திட்டமும் செயல் படுத்தப்படுகிறது...


ஒருமித்த கருத்துக்களால் ஒன்றிணைந்து நீங்கள் உங்கள் அதிகாரத்தை அடையாத வரை...


அவர்கள் அதிகாரம் வலிமையடைந்து கொண்டே இருக்கும்..

அந்த அதிகாரம் உங்களை கொலை கூட செய்யும்...

கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னைக்கு சரியாக பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்... அதிகாரிகளும் அலட்சியமாக பதிலளிக்கின்றனர்...


மனுதர்மம் பார்ப்பனர் படைத்ததா? திராவிடம் படைத்ததா.?


பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய மனு நூல், அது பார்ப்பனரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல.

அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்டநூல்.

மானவக் குலம் என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது.

மானவத் தருமநூல் எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும்.

அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்...

ஆரியனும் திராவிடனும் ஒன்னு.. இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...

எல்லாமே ஒரே திருட்டு கும்பல் தான்...


இலக்கு அடையும் இயந்திரம்...


தனி மனிதன் – தனி மனித கூட்டு பங்களிப்பு கொண்ட சமுதாயம் என பல தளங்களிலும் இந்த கேள்வி மிக எளிதாகவே எழுந்து பிரதிபலிக்கும்.

நாம் நம் மனதில் உருவாக்கியிருக்கும் நம் சுய மதிப்பு உயரம் ( DETERMINATION OF SELF ESTEEM ) அதே அளவில் நாம் எதிர் நோக்கும் இடங்களில் கிடைத்து விடுவதில்லை.

அப்போது நம் மனதில் இந்த கேள்வி எழும்..

பொதுவாகவே மனித மன அமைப்பை இது போன்ற கேள்விகள் ஆக்கிரமித்தால் தொடர்ந்து ஊக்கமுடன்  முன்னேறும் தன்மையை மனம் இழக்கும் என்பதால் இதை உளவியல் அணுகுமுறையோடு ஆராய்ந்து அறிந்து கொள்வோம்.

முதலில், முன்னேற்ற இலக்கு என எதை குறிப்பிடுகிறோம் ? என்பதை நாம் தெளிவுற நிர்ணயிக்க வேண்டும்.

ஏனென்றால், புற ஆசைகளால் உந்தப் பெற்று தானாகவே நம் மனதில் உருவாகும் கவர்ச்சி இலக்குகள் ( ARTIFICIAL ATTRACTED TARGET ) நோக்கி முயற்சி செய்வதால் பலன் ஏதும் இல்லை.

நம் திறன்களை சுமந்து சென்று சரியான இலக்கு நோக்கி பயணிக்கும் மனம் நமக்கு வசமானால் நம் இலக்கு எய்வது நமக்கு சுலபமாகும்.

வழக்கமான நம் தன்னம்பிக்கை புத்தகங்கள் இலக்கு நிர்ணயிப்பது  – செயலாக்க விதிகள் – இறுதி இலக்கு அடையும் வழிகள் என நம்மை இலக்கு அடையும் இயந்திரம் போல பாவித்து கருத்து வடிவம் கொண்டு புத்தகங்கள் தயாரிப்பார்கள்.

அவர்கள் கூறும் விதிகள் படி நாம் பின்பற்ற ஆரம்பமாகும்போது நம் குடும்பத்திலிருந்தும் / சமூகத்திலிருந்தும் அந்நியப்படுவது போல் தோன்றும்.

காரணம், நம் தன்னம்பிக்கை புத்தக எழுத்தாளர்கள் அனைவரும் ஐரோப்பிய வாழ்வியல் அடிப்படை கொண்டு எழுதப்பட்ட சுய முன்னேற்ற நூல்களை நமக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

நம் சமூக / அரசியல் / தனிநபர் ஒழுக்க கள யதார்த்த அடிப்படைகளில் அந்த நூல்கள் அமைவதில்லை.

ஆனால், நம் இணைய கட்டுரைகள், நம் இலக்கு நோக்கி செல்லும் பாதையில் எங்கெல்லாம் கடும் சவால்கள் எதிர்கொள்ளும் என்பதை அடையாளம் காண உதவும்.

நகரின் சிறு கடையில் வேலை செய்வோருக்கும் – இந்த தேசத்தின் விஞ்ஞானிகளுக்கும் இலட்சியம் வெவ்வேறு திசைநோக்கி இருக்கலாம்.

ஆனால் , அவைகளின் உயிர் மதிப்பீடு ஒன்றுதான்...

மதம் செயற்கையாக உருவாக்கப்பட்டதே...


இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்...


இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை.

கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

வைட்டமின் "ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது.

மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ-யில் இருந்து பெறப்படும் ரெட்டினாய்க் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும்.

சருமத்துக்கு பொலிவைத் தந்து தோலில் ஏற்படும் சுருக்கத்தை கேரட் நீக்குகிறது.

மஞ்சள் காமாலை குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவதுநலம்.

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்துகிறது.

உருளைக் கிழங்கை விட ஆறு மடங்க சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகின்றது, எலும்புகள் வலுப்படுகிறது...

பாஜக வின் நீட் படுகொலைகள்​ தொடர்கிறது....


தங்கை அனிதா மன்னித்தாலும் சகோதரி பிரதீபா ஒருபோதும் மன்னிக்க மாட்டாள் நம்மை...

இலுமினாட்டி - மின்சாரமும் நம் முன்னோரும்...


இன்றைய பதிவு நம்மிடம் இருந்து மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட அறிவியலில் ஒன்று. இதைப்போல பல உண்டு...

தெஸ்லாவின் ஆய்வு - நமது பூமியே ஓர் மிகப்பெரிய மின்காந்த மின்சாரம் வலையாக ஒரு காலத்தில் அமைந்திருந்தது. பூமியின் மின்காந்த கோடுகள் இணையும் இடங்களில் பெரிய பிரமீடுகளும் வழிபாட்டு தலங்களும் அமைக்கப்பட்டிருந்தன அக்காலத்தில். அவற்றின் மிச்சங்கள் தற்பொழுதும் காணப்படுகின்றன். அக்கட்டிடங்களில் உச்சியில் சக்தியை கடத்தக்கூடிய கலசங்கள் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கட்டிடங்கள் சக்தியை உருவாக்கி அடுத்ததிற்கு கடத்தின. இவற்றை பற்றிய விரிவான பதிவிடுகிறேன் பின்பு. இதன் மூலம் உலகமே ஓரே மூளையாக செயல்பட்டது. நம் மூளையில் இதை தத்துவத்தின் படி தான் செயல்படுகிறது.

தற்பொழுது இந்த பழங்கால அறிவியலை மீள் கட்டமைப்பு செய்த தெஸ்லாவை பற்றி பார்ப்போர். ஜெபி மோர்கன் என்ற பிரிமேசன் உறுப்பினரே இதன் முழு பொறுப்பு. மேலும் மோர்கன் தான் டைட்டானிக் மூழ்கடிக்கபட்டதற்கும் காரணம்.

தெஸ்லாவின் கம்பியில்லா மின்சாரம்...

இன்று தொழில்நுட்பம் அபார வளர்சி கண்டுள்ளது என மார் தட்டிக் கொள்ளும் நாம் கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட ஒரு உன்மையை அறியாமலேயே இருக்கின்றோம்.எனினும் 1899 களில் வாழ்தவர்களில் பலர் இவ்வுன்மையை அறிந்திருந்தனர்..


ஆம், வானொலி அலை வரிசையை நாம் பாவிப்பது போலவே மின்சாரத்தையும் எந்தவித இணைப்புக் கம்பிகளும் இல்லாமல் கூரையில் ஒரு அன்டெனாவை பொருத்திக் கொள்வதனூடக நுகர முடியும் என்பதே அந்த மறைக்கப்பட்ட உன்மையாகும்..

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்கள் இம்முக்கியத்துவம் மிக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தி 100 வோல்டேஜ் மின்சாரத்தை கம்பியில்லாமல் 26 மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு வங்கிக்கு கடத்திக் காட்டினார். இந்த மின்சாரத்தைக் கொண்டு 200 மின் விளக்குகளையும் ஒரு பெரிய ஜெனரேடரையும் இயக்க முடிந்தது. இதனால் வெறுமனே 5% மின்சக்தியே செலவானது.

நிகோலாவின் கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் அதிகாரம் செலுத்திய அதனூடாக முழு உலகிலும் அதிகாரம் செலுத்த விரும்பிய மின்சாரத்தை வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த பண முதலைகளுக்கு சவாலாக அமைந்தது.
அதனால் அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். ஜெ. பி. மோர்கன் எனும் முதலாளியை வைத்து நிகோலாவின் கண்டுபிடிப்பை செயற்படுத்த முதலீடு செய்வது போல் கண்டுபிடிப்புக்கான பாவனை உரிமத்தை எழுதி வாங்கினர்.
நியுயோர்க்கில் "வார்டன் கிலீப்" எனும் இடத்தில் திட்டத்திற்கான கட்டடம் அமைக்கப்பட்டு அதில் சுருள் வடிவிலான 200 அடி உயரமுள்ள அன்டெனாக்களும் பொருத்தப்பட்டன.

ஆனால், திடீரென இத்திட்டம் கைவிடப்பட்டது. திட்டத்தில் இருந்து மோர்கன் விலகிக் கொண்டார். உரிமத்தை அவர் வாங்கியதால் வேறு யாராலும் அதை தொடர முடியாமல் போல் கடைசியில் 1917ம் ஆண்டு கட்டடமும் இடிக்கப்பட்டது.

இவ்வளவு பயன் மிக்க திட்டம் ஏன் கைவிடப்படது? எதற்காக இன்று வரை தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது?
பதில் மிக எளிமையானது.

மக்கள் வானொலி சேவையை இலவசமாகவே பெறுவது போல் இலவசமாகவே சேவை முறையில் யாருடைய தலையீடும் இன்றி மின்சாரத்தையும் பெற ஆரம்பித்தால் லட்சக்கனக்கில் கம்பி வழி மின்சாரத்தில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் "பண முதலைகள்" நஷ்டமடைவார்கள் அல்லவா?

இன்னும் இன்னும் மக்களின் பனத்தை சுரண்ட முடியாதல்லவா? அதனால் தான்...

படத்தில் உள்ள நிகோலா தெஸ்லா அவர்களின் ஆய்வு...

http://www.teslasociety.com/tesla_tower.htm