பிறரது முயற்சிகளால் விளைந்த மிகச்சிறிய வெற்றிகளையும் கொண்டாட மறவாதீர்கள், அதுதான் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் மந்திரம்.
எப்போதும் அர்ப்பணிப்பும், ஆர்ப்பரிப்பும் நிறைந்த கொண்டாட்ட மனநிலையில் பிறர் செயல்படக் காரணமாக இருங்கள்.
பிறரது தவறுகளுக்கு கடுஞ்சொற்களைப் பிரயோகிக்காதீர்கள், மேலும் தவறுகள் நேராதபடி, இயற்கையின் வினைகளை தெளிவாக எடுத்துரைத்து, மன்னித்து, கனிவாக கண்டியுங்கள்.
பிறரது உதவிகள் சிறிதானாலும், பெரிதானாலும் உங்களது நன்றிகளைச் சிறப்பான வழிகளில் மிக தாராளமாக மனமார்ந்து வெளிப்படுத்துங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.