06/06/2018

கொங்கு நாட்டில் ஒரு மினி ஸ்டெர்லைட்...


கொங்கு மண்டலத்தில் மற்றுமொரு ஸ்டெர்லைட். நாமக்கல்- சேலம் சாலையில் அத்தனுார் ஆயிபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் சில தோப்புகளில் மட்டும் தென்னை மரங்களின் மட்டைகள் கருகிவருவதை சில மாதங்களாக பார்த்து வந்தேன். அருகிலுள்ள மரங்கள் நல்ல நிலைமையில் இருக்கும்போது அவற்றிற்குமட்டும் ஏற்பட்ட பாதிப்பிற்கு என்ன காரணம் என்ன என அறிய முற்பட்டபோது அருகிலேயே ஒரு  சிறு அளவிலான சிங்க் சல்பேட் பாக்டரி இருப்பதைக் கண்டேன்.

அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நிலத்தடிநீர் செல்லும் வழியே மண்ணுக்கு அடியே  சென்று ஆழ்குழாய் கிணறுகளின் நீர்வழிகளில் இறங்கி அதலிருந்து பாய்ச்சப்படும் தண்ணீரால் அதிகப்படியான( Toxic) சிங்க் பாதிப்பால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் கிணற்று தண்ணீரை பாய்ச்சும் ஆலை வளாகத்தில் உள்ள மரங்கள் நல்ல நிலைமையிலேயே உள்ளன.

A thin line separates the basic requirement and toxicity of Micro Nutrients.
அளவிற்கு மீறினால்.. இது அனைத்திற்கும் பொருந்தும்.

அங்க உள்ள மக்கள் விவசாயிகள் உடனே இதற்கு வழி செய்ய வேண்டும் இல்லை என்றால் அங்கு உள்ள விவசாயம் அழிந்து விடும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.