06/06/2018

தமிழக கோவில்களில் உள்ள கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு...


கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தினால் கோயிலின் பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதனையடுத்து கோயில்களில் உள்ள கடைகளை காலி செய்ய கடை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டது.

இதற்கு எதிப்பு தெரிவித்து கடை உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.