06/10/2020
வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள்...
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம் தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதில்லை.
வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே.. கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.
வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.
சோரியாஸிஸ் பிரச்சனையா?
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
மருக்கள் காணாமல் போகச் செய்ய...
மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
சரும அலர்ஜியா?
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
முகப்பருவை எதிர்க்கிறது...
முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.
வெண்மையான பற்கள் பெற...
மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செய்யும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.
காயங்கள் ஏற்பட்டுள்ளதா?
பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.
வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள் தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள்.
வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்...
கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் நேர்மையான இறை மறுப்பாளரா?
நான் எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் என்னுடைய 10-வது வயதிலிருந்தே நாத்திகன்..
சாதி சமய சடங்குளில் நம்பிக்கை இல்லாதவன் - ஈ.வே.ரா (விடுதலை 1.1.1962 ).
ஆனால் ஈ.வே.ரா குடியரசு இதழைத் தொடங்கிய போது வயது 46.
அந்த முதல் இதழில்..
இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்கு போதிய அறிவையும் ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து அருள் பாலிப்பானாக. என்று எழுதியுள்ளார்.
குடியரசு பத்திரிகையை ஞானியர் அடிகள் என்ற சாமியார் மூலம் துவக்கிவைத்து ஈ.வே.ரா பேசிய பேச்சு அதே குடியரசில் 10-ஆம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ சுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.
இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும் படி சுவாமிகளை வேண்டுகிறேன்...
அதாவது 46 வயது வரை இறை நம்பிக்கையுடன் இருந்ததை மறைத்து ஏதோ தான் ஒரு பிறவி மேதாவி என்றவாறு ஈ.வே.ரா எழுதியுள்ளார்..
நன்றி - முதல் குடியரசு சில பிரச்சனைகள், விமர்சனங்கள்.
ஆசிரியர்: முருகு இராசாங்கம்...
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர் வினை உண்டு...
For Every action, there is an equal and opposite reaction...
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்..
பிரபஞ்சத்தில் ஒலி, அதிர்வு இல்லாத இடமே கிடையாது. ஒலியினால் அதிர்வும், அதிர்வினால் ஒலியும் ஏற்படும் அளவிற்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது.
பழங்காலத்தில், விஞ்ஞானம் இல்லாத காலத்தில் நமது ரிஷிகள், ஞானிகள் இயற்கை நியதிகள் பற்றியும், கர்மா பற்றியும் சொல்லிவிட்டு போயிருக் கிறார்கள்.
தற்காலத்தில் விஞ்ஞானி நீயூட்டன் ஒரு கண்டுபிடிப்பை கூறியது அது கர்மா என்னும் நியதியை உறுதி செய்கிறது.
பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒரு வட்டப்பாதையில் ( Circle ) பயணிக்கின்றன. தான் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வரும்போது "போனது திரும்பி வருகிறது" பிரபஞ்சத்தில் ஒவ்வொரு படைப்பும் அதிர்வுகளின் ஆரம்ப புள்ளி.
ஒவ்வொரு மனிதனின் எண்ணம், சொல், செயல்களும் அதன் தன்மைக்கேற்ப அதிர்வுகளை (Action) ஏற்படுத்தும் திறன் கொண்டவை. நமக்குத் தெரியாமலே தானியங்கியாக இது நடந்து கொண்டிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது நடந்து கொண்டிருக்கும்.
இந்த அதிர்வுகள் தனது வட்டப் பாதையில் பல்வேறு இயற்கை நியதிகளுக்கு உட்பட்டு அதன் தன்மைக்கேற்ப நன்மையாகவோ, தீமையாகவோ, பலமாகவோ, பலவீனமாகவோ ஆரம்பமான இடத்துக்கு வருகின்றன. இதை எதிர் சக்தி (Reaction) என்று சொல்லலாம். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது நடந்து கொண்டிருக்கும்.
பொதுவாக ஒருவருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவரை அநியாயமாய் பாதிக்குமானால் அவரது வேதனைகள் கர்மாவை வலிமையாக்கி தண்டிக்கிறது.
அதேபோல் ஒரு வருடைய எண்ணம், சொல், செயல் வேறு ஒருவருக்கு நன்மை செய்து அதனால் அவர் வாழ்த்தும் போது கர்மா வலிய வந்து உதவுகிறது.
நமது நினைப்பு, பேச்சு, செயல் எல்லாம் ஒரு சக்தி ( அதிர்வு ) உற்பத்தியாக காரணமாகிறது. இந்த சக்திக்கேற்ற எதிர் சக்தி புதிய வேகம், பெறும் தன்மை அடைகிறது. தனது எண்ணம், சொல், செயல் நன்மையை நோக்கும் போது நன்மை ஏற்படும்.
பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
ஒவ்வொரு செயலும் அடுத்த செயலுக்கு காரணமாகிறது. அது அப்படியே தொடர்ந்து, முதல் செயல் கடைசி செயலுக்கு காரணமாகிறது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் சங்கிலித் தொடரானது. செயலுக்கேற்ற பலன் வராமல் போகாது.
செயலின் நோக்கம், அதற்கு செலவிட்ட சக்தி அதற்கேற்ற பலனைத் தரும்.
எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்வோம்.
நமது சூழ்நிலையை நமது ஆழமான எண்ணங்கள் தான் தருகிறது. நமக்கு என்ன வேண்டுமோ அதே எண்ணமாய் இருக்க வேண்டும்...
சனியனே என்று திட்டினால் என்ன நடக்கும் தெரியுமா.?
சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி.
இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு.
வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால், ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு.
மந்தகதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம்.
ஆனால் சனியனே என திட்டக்கூடாது...
இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி...
சனீஸ்வரன் அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்..
மந்தகதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி திருத்துபவர்களுக்கு, சனீஸ்வரனின் அருள் கிடைக்கும்...
தமிழகம் இந்தியத்திற்கு வரி கட்டுவதை நிறுத்தி விட்டு.. தமிழக நலனை காக்க செலவிட வேண்டும்...
இந்தியாவிலே தமிழகம் தான் அதிக வரி செலுத்தும் முதல் மாநிலமும் கூட...
நாம் செலுத்தும் வரி பணத்தை கூட நிவாரணத்திற்கு தருவதில்லை... பிறகு எதற்கு நாம் வரி கட்ட வேண்டும்...
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் தமிழினத்தின் நலனுக்கும் இதுவரை மத்திய அரசு எதாவது செய்துள்ளதா..
அப்படி இருக்க நாம் ஏன் வரி கட்ட வேண்டும்...
இந்தியா வை விட்டு தமிழகம் பிரிந்தால்.. இழப்பு தமிழர்களுக்கு அல்ல... துரோக இந்தியத்திற்கு தான்...
கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்...
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.
இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.
வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.
சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது.
100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது...
பிரபஞ்ச சக்தி...
சித்தர்கள் அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவர்கள். ஆகையால் தான் தாங்கள் கண்டு அறிந்த உண்மை சாராம்சங்களையும் தத்துவ ஞானங்க ளையும் பிரபஞ்ச சக்திகளையும் ஒன்றன்பின் ஒன்றாக தெளிவாக கூறி வைத்தனர்.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கை கோட்பாடு கொண்டவர்கள் தான் சித்தர்கள்.
ஆகையால்தான் அனைத் து ஜீவ ராசிகளும் ஆரோக்கிய மாக வாழ மருத்துவம் கண்டறிந்தார்கள். தாங்கள் அருளிய மருத்துவ ஏடுகளில் மனிதன் உட்பட அனை த்து உயிரினங் களுக்கும் மருந்து எழுதியுள்ளனர்.
அதிலும் மனிதனை ஆறறிவு கொண்ட ஜீவன் என்று குறிப்பிடுகின்றனர். மனிதனால் தான் வாழ்வை பகுத்தறிய முடியும் என்கின்றனர் சித்தர்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மனித இனம் நீண்ட ஆயுளும்,ஆரோக்கியமும் பெற பல வழி முறைகளை குறிப்பிட்டுள்ளனர்.
ஆரோக்கியம் என்பது மருந்து மாத்திரை களைக் கொண்டது மட்டு மல்ல.
மனம் தெளிவடைந்து, புத்தி நன்கு கூர்மையடைந்து, ஆழ்ந்த சிந்தனைகளோடு, அமைதியாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்கின்றனர்.
அமைதியும் ஆனந்தமும் கொண்ட வாழ்க்கை முறை ஆரோக்கியமாக அமையும்.
இந்த ஆரோக்கிய வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை சித்தர்கள் தெளிவாக வகுத்துரைத்துள்ளனர்.
அதில் தியான முறை, சரசு வாசமுறை, வாழ்க்கை நெறிமுறை போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
சரசுவாசத்தின் மூலம் தான் உடலில் ஒடுங்கியிருக்கும் சூட்சமங்களை கண்டறிய முடியும்.
இந்த சரசுவாசப் பயிற்சி பற்றி வர்ம மருத்துவத்தில் அகத்தியர் தெள்ளத் தெளிவாக குறி ப்பிட்டுள்ளார்.
இது போல் அனைத்து சித்தர்களும் அவரவர் நிலையில் விளக்கமாக கூறியுள்ளனர்.
இருப்பினும் அகத்தியர் தன்னுடைய வர்ம பரிகார முறையில் குறிப்பிடும் முறைகள் மனித உடம் பில் உள்ள நாடி நரம்புகள் உயிர் மூச்சு ஒடுங்கும் இடங்கள், நரம்பு நிதானம், மனநிலை, மனிதனை ஆட்கொள்ளும் சக்தி இவைகளைப் பற்றி மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சரசுவாசத்தினால், உயிர்நிலை ஒடுங்கும் இடங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி தெளிவு படுத்தினர்.
இவற்றில் மனிதன் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகள், இல்லற வாழ்க்கை முறை, ஞானிகள் வாழ்க்கை முறை , தாய் சேய் நலம் முதலான வாழ்க்கை முறைகளையும், அவற்றை எவ்வாறு நெறிமுறைகளுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் அகத்தியர் ஞானவெட்டி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சரநிலை சுவாசம் தெரிந்த வர்களால்தான் நரம்பியல், எலும்பியல் துறைகளையும், அபூர்வ சிகிச்சை முறைகளையும் துல்லியமாக கண்டறிந்து செயல்படுத்தும் வர்ம மருத்துவர்களாக இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
சரநிலை சுவாசம், நரம்பு நிதானம் இவைகளை அறிந்த பின் தான் வர்ம விளக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதாவது சரப்பயிற்சி,
சரநிலை சுவாசம், உச்சந்தலை சுவா சம் சித்தர்களால் கையாளப்பட்டு வந்த மாபெரும் சக்தி வாய்ந்த உன்னதமான நிலையாகும். இந்த நிலையை அறிந்தவர்கள் மிகவும் சிறப்பாக வர்ம மருத்துவத்தை கையாளுவார்கள் என்பது சித்தர் களின் கூற்று.
இதைத்தான் சித்தர்கள்
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்
பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும்
- என்றார்கள்.
வர்ம மருத்துவர்கள் பொதுவாக பிரபஞ்ச சக்தியை உணர்ந்து தான் வர்ம மருத்துவத்தைக் கையாண்டு வந்துள்ளார்கள்.
பிரபஞ்சத்திற்கும், மனித உடலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது மருத்துவ உலகம் கூறும் உண்மை.
மேலும் அகத்திய பெருமான், பிர பஞ்சத்தை அறிந்தவர்களே மனித உடலை அறிய முடியும்.
மனித உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து அவற்றை சீராக்க முடியும் என்கிறார்.
பிரபஞ்ச சக்தி தான், மருத்துவ உலகிற்கு ஒரு மாபெரும் வழிகாட்டியாகும்.
இதனால் சித்தர்கள் பிரபஞ்ச சக்தி கொண்டு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள்...
நாதசுவரம்...
தென்ஆப்பிரிக்கா உலக கோப்பை போட்டியில், உவுசலா என்ற இசைக்கருவியும் முக்கிய இடம் பிடித்துள்ளது. இக்கருவி நாதசுவரம் போன்று இருக்கும். உவுசலா பிளாஸ்டிக்கால் ஆனது. நீல்வான் சால்விக் என்ற 37 வயது தென்ஆப்பிரிக்கக்காரர், 15 வருடங்களுக்கு முன் விளையாட்டாக கண்டு பிடித்த நம் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி நாதசுவரம் போன்ற இருக்கும். நாதசுவரம் வாசிக்க ஞானம் வேண்டும். உவுசலாவுக்கு அதெல்லாம் தேவை இல்லை.
நம்முடைய அனைத்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் முறையாக கற்றுக் கொண்டு ஸாதகம் செய்தால் மட்டுமே வாசிக்க முடியும். நாம் திருமணம், திருவிழா போன்ற இடங்களில் மிகவும் பரவலாக காணும் ஓர் இசைக்கருவி நாதசுவரம். தவுலும் நாதசுவரமும் ஒன்றாகச் சேர்த்து வாசிப்பர்.
நாதசுவரம் துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி ஆகும். இதனை நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு. சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை, மலேசியா போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது. மிகவும் இனிமையான இசையைத் தரவல்லது இக்கருவி.
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலகரமான இசைக்கருவியாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலன கோவில்களில் இந்தக் கருவி வாசிக்கப்படுவதுண்டு. நேரடியாக இசைக்காவிட்டாலும் பல ஆலயங்களில் இவ்விசைப் பதிவு செய்யப்பட்ட குருந்தட்டுகளைப் வழிபாட்டின் போது ஒலிபரப்புச் செய்கின்றனர்.
இதைத்தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.
நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. இதன் பாகங்கள் வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல் , உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு) அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி. உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.
நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.
பெரியமேளம்நாதஸ்வரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும். இதனால் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல் படுவது வழக்கம். நாதஸ்வரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு: திமிரி, பாரி. திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும். பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்...
திருட்டு திராவிடமே தமிழர் நிலம் 70,000 ச.கி.மீட்டர் பறிபோனது யாரால்?
இன்று அப்பகுதியில் நாடற்றவர்களை போல கோடிக்கோடி தமிழர் வாழ வேண்டிய நிலையை உருவாக்கியது யார்?
மூன்று முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் பறிபோனது யாரால்?
முக்கிய தமிழரின் வழிப்பாட்டுத் தலங்களை பறித்துக் கொண்டு இன்று, அத்தலங்களுக்கு செல்லும் தமிழர் மீது சுடுதண்ணீர் ஊற்றி விரட்டும் நிலையை உருவாக்கியது யார்?
ஒருங்கிணைய இருந்த தமிழரை கன்னடன் மலையாளி என துண்டாடி பிரித்தெடுத்தது யார்?
தமிழ் மூவேந்தரையும் தூக்கி தலையில் வைக்க வேண்டிய தமிழனை.. தூற்ற வைத்து, தூற்ற வேண்டிய இனப்பகையினரை தலையில் தூக்கி வைத்து ஆடும் நிலையை உருவாக்கியது யார்?
2009ல் மாபெரும் ஈழ இன அழிப்பை நடத்தியும் இன்னும் உணர்வற்று கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?
20 தமிழரை துன்புறுத்தி சுட்டுக்கொன்ற பின்னரும் குருதி கொதிக்காமல் முடங்கிக்கிடக்கும் நிலையை உருவாக்கியது யார்?
இது போக இன்னும் ஏராளம் உள்ளது..
தமிழின அழிப்பை துளியும் அஞ்சாமல் திறம்பட செய்து, மாய பிம்பத்தால் பொய்யாக நின்று இன்றும் தமிழர் குடியை அழித்திட துணைபோகும், வடுக இனவெறியன் கன்னட தெலுங்கர் ஈ.வெ. ராமசாமியை அரவணைத்து தமிழர் இன விடுதலை காண்போம் என்பது கானல்நீரே...
காஃப் சிரப் எதற்கு...? கஷாயம் இருக்க.....?
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.
சில துளசி இலைகளை அலசி வைத்துக் கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக் கொள்ளவும். சீரகத்தை சிறிது எடுத்துக் கொள்ளவும்.
600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சீரகத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும்.
பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்...
முன்னேறிய நாடுகளில் வாக்குச்சீட்டு தான்...
உலகில் முன்னேறிய நாடுகள் என்றால் அவை அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்சு, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்றவை...
மேற்கண்ட நாடுகள் 1995 க்குப் பிறகு ஒன்று அல்லது இரண்டுமுறை தேர்தல் வந்தபோது மின்னணு வாக்குப் பதிவினை முயற்சித்து பார்த்து பெரும்பாலும் 2010க்குள் கைவிட்டுவிட்டன.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
கனடா எப்போதும் வாக்குச்சீட்டே பயன்படுத்துகிறது..
பின்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி தவறு நடந்ததாக கண்டுபிடித்து) மின்னணு வாக்குப்பதிவை 2008ல் தடை செய்து வாக்குச்சீட்டு மூலம் மறுதேர்தல் நடத்தியது.
ஜெர்மனி (ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவை தடை செய்தது.
அயர்லாந்து (ஒருமுறை பயன்படுத்தி பார்த்து) 2009ல் மின்னணு வாக்குப்பதிவு நம்பிக்கைக்குரிய வகையில் இல்லை என்று கூறி வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து அவற்றை அழித்து விட உத்தரவிட்டது.
நெதர்லாந்து (ஒரு முறை முயற்சித்து பார்த்து) 2007 ல் பாதுகாப்பற்றது என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்தது.
நார்வே 2013ல் (இருமுறை முயன்ற பிறகு) மின்னணு வாக்குப்பதிவு செய்து பார்த்து கைவிட்டது.
இங்கிலாந்து தேர்தல் ஆணையம் 2008 ல் மின்னணு வாக்குப்பதிவை கைவிட்டது.
இத்தாலி வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டின் வண்ணம் தேர்தலின் வகையைப் பொறுத்து இருக்கும்.
ஸ்காட்லாந்து வாக்குச்சீட்டை பதிவெடுத்து மின்னணு தரவாக மாற்றும் இயந்திரத்தை பயன்படுத்துகிறது.
(இதிலும் தவறு நடத்ததாக கண்டு பிடித்துள்ளது).
பெல்ஜியம் மின்னணு வாக்கு அட்டையை பயன்படுத்துகிறது.
(நேரடியாக இயந்திரத்தில் வாக்கினை பதிவு செய்வதில்லை).
அமெரிக்காவில் பாதி மாகாணங்கள் வாக்குச்சீட்டையும் பாதி மாகாணங்கள் மின்னணு முறையையும் பயன்படுத்துகின்றன.
ஜப்பான் வாக்குச்சீட்டில் வேட்பாளர் அல்லது கட்சியின் பெயரை எழுதி போடும் முறையை பின்பற்றுகிறது.
(தேர்தலுக்கு முன்பே வாக்களிக்கலாம்).
ஆஸ்திரேலியாவில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. வாக்குச்சீட்டு தான் பயன்படுத்துகின்றனர்.
ரஷ்யா வாக்குச்சீட்டுதான் பயன்படுத்துகிறது. சீட்டை மடிக்காமல் போட வேண்டும்.
ஆக வளர்ந்த நாடுகளே பயன்படுத்தி பார்த்து தோல்வியடைந்தது என பத்தாண்டுகள் முன்பே கைவிட்ட ஒரு தொழில் நுட்பத்தைத் தான் இந்தியா பிடித்துக் கொண்டு தொங்குகிறது.
இதைச் சொன்னால் நம்மை கோமாளி, பிற்போக்குவாதி, கற்கால மனிதன் என்கின்றனர் நவீன முட்டாள்கள்...
நாம் காணும் கனவுகள்...
ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6, ஆகவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகளை காண்கிறான்.
அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும்.
இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா… காலையில் எழும்பும் போது ஒரு கனவே நினைவில் இல்லையாம் அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்..
நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்..
ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளுமே உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை..
ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள்.
மேலும் பார்ப்போம்…
நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும்.
அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாக பார்த்த ஒருவராகத் தான் இருப்பார்.
கற்பனையிலேயே ஒரு புது முகத்தை நமது மூளை தயாரிப்பதில்லை.
நமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் நமது மூளை கனவுகளை உருவாக்கின்றது.
சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்க முடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா?
உண்மை சொல்லப் போனால் அது கூட முடியும்..
Lucid Dreaming என குறிக்கப்படும் முறையை கற்றுக் கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, அசின், தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்…
இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTube இல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது.
University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது.
இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா…?
12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்…
நீங்க என்ன மாதிரி.. Color கனவா Black & White கனவா காண்கிறீங்க...
வெள்ளைச்சீனி பற்றி நாம் அறிந்திடாத பல திடுக்கிடும் தகவல்கள்...
வெள்ளைச்சீனியும் அதன் நச்சுத் தன்மையும்...
இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது.
பதார்த்தத்தில்தான் என்றில்லை. சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
உங்கள் சட்டைக் கொலரொல் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதுகப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது...
தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...
தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...
பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...
சிறிது நேரத்தில் வெள்ளைக் கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...
சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...
தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....
தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....