09/08/2017

மும்பையை அதிர வைக்கும் இன்றைய மராட்டியர்களின் பிரம்மாண்ட அமைதிப் போராட்டம்...


விவசாயிகளின் தற்கொலையை தடுக்க கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் மராட்டியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இட  ஒதுக்கீடு அளிக்க வேண்டும், கற்பழித்து கொலை செய்யப்பட்ட மராட்டிய சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மும்பையில் மாபெரும் அமைதிப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

சிவசேனா கட்சி இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது...

இந்தியமா? திராவிடமா?


தமிழகத்தில் இரண்டு பொய்த் தேசியமாயைகள் கட்டியமைக்கப் பட்டுள்ளன.

ஒன்று நாம் எல்லோரும் இந்தியர், நம்நாடு இந்தியா என்றும்,

இதற்கு மாறாக மற்றொன்று நாம் எல்லோரும் திராவிடர், நம்நாடு திராவிட நாடு என்பதாகும்.

உண்மையில் நாம் இந்தியரா? அல்லது திராவிடரா?

இது புலியை நாய் என்றும் அதற்கு மாறாக பன்றி என்றும் வாதிடுவதற்கும் கீழானதாகும்.

முதலில் ஒரு தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நிலப் பரப்பில் ஒரு பொதுவான பண்பாடு, மற்றும் பொருளாதார வாழ்வுடன் ஒரு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு கூடி வாழும் குடும்பம் தேசிய இனம் என்று வரையறுக்கப்படுகிறது. ஒரு தேசியம் ஒரு மொழியின் அடிப்படையிலேயே அமைகிறது.

இதில் எந்தப் பண்புகளும் இன்றி போலித் தேசியமும், (இந்தியா) போலித் தேசிய இனக் (திராவிட இனம்) கோட்பாடும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதன் உள் நோக்கம் தான் என்ன?

இந்திய தேசியம் என்பது வடநாட்டு பிராமண, மார்வாடி, சிந்தி இனத்தவர்களின் சுரண்டலுக்காகவும்,

திராவிட இனக் கோட்பாடு என்பது தெலுங்கு, கன்னட, மலையாளிகளின் சுரண்டலுக்காகவும், மண்பறிப்பிற்காகவும், கட்டியமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுரண்டலை விட மண்பறிப்பானது மிகக் கேடானது. இன்று இந்திய தேசியத்தை விட திராவிட இனக் கோட்பாடு என்பது மிக மிகக் கேடு விளைவிப்பது ஆகும்.

தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் நம்மைச் சுரண்டுவதோடு மட்டுமல்லாமல் மண்பறிப்பு வேலையில் விரைவாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் கேட்டை உணராத அல்லது உணர்ந்தும் தம் சொந்த நலனுக்காக, திராவிட கோட்பாட்டை ஒரு சில தமிழ் தேசியத் தலைவர்கள் ஆதரிப்பது தமிழர்களுக்கு மிகப்பெரிய அழிவைத் தருவதாகும்.

இவ்விரண்டு அமைப்பிலும் தமிழர்கள் இல்லையா? என்றால் இருக்கின்றார்கள். அவர்கள் தங்களின் நலனுக்காக பால் கொடுத்த தாயின் மார்பையே அறுத்து விற்கும் கருங்காலிகளாகவே இருக்கிறார்கள்.

இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழனின் மண்ணைப் பறித்து, அவன் குருதியை உறிஞ்சுகிறது. இதற்காக இல்லாத போலி ஆரிய திராவிடப் போரை உண்டாக்கித் தமிழரை இரண்டுபடுத்தியுள்ளது.

வங்கக் கடலில் சிங்கள நாய்ப் படையினரால் கொல்லப்படும் தமிழர்களையோ, இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாயிலும் கீழாக நடத்தப்படும் தமிழர்களையோ, மும்பாயில் சிவசேனையால் தாக்கப்பட்ட தமிழர்களையோ இந்திய தேசியம் பாதுகாக்கவில்லை.

கருநாடகத்திலும், கேரளாவிலும், ஆந்திரத்திலும் தமிழர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் உடமைகள் சூறையாடப்பட்டும், துரத்தியடிக்கப்பட்ட போதும் எந்தத் திராவிடரும், தமிழர்களை மதித்து அவர்களை பாதுகாக்கவில்லை.

மாறாக அங்கெல்லாம் தமிழன் பாண்டிக்காரன், கொங்கன் என்று இழிவு படுத்தப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகிறான்.

இந்தியம் நம் புரத்தே இருந்து தாக்குகின்ற எதிரி என்றால் திராவிடம் நம் அகத்தே இருந்து நம்மை அழிக்கும் புற்று நோயாகும்.

இன்று இந்தியா என்பது மாயை என்று தமிழர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் திராவிடமாயை என்பதில்தான் (மக்கள் அல்ல) தலைவர்கள் தடுமாறுகின்றனர். இவர்கள் அறியாமையில் தடுமாறுகின்றனரா? அல்லது செஞ்சோற்றுக்கடனா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? திராவிடத் தலைவர்களின் கயமைத்தனம் தமிழரின் வரலாற்றில் மிகப்பெரிய வடுவுடன் நீண்டு கிடக்கிறது.

நீதிக்கட்சியினரின் ஆந்திராவிற்கு ஆதரவான கயமைத்தனம், ஈ.வே.ராவின் தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான இரண்டகம் நிறைந்த துடுக்குத்தனமான கீழ்த்தரமான செயல்கள், அண்ணாவின் ஏமாற்று, கருணாநிதியின் இரண்டகம், மா.கோ.ராவின் மலையாளப்பற்று, வை.கோ, வீரமணி, கிருட்டிண சாமி, இராசேந்திரன், இராமகிருட்டிணரின் தெலுங்குப்பற்று என்று திராவிட இயக்கங்களின் இரண்டக வரலாறு இன்றளவும் நம்மைத் தொடர்ந்து வருகிறது.

ஈ.வே.ரா பார்ப்பான் எதிரி என்று சொல்லிக் கொண்டே இராசாசியுடன் கூடிக் குலாவினார். அவரின் ஆலோசனைப்படி நடந்தார்.

அண்ணா டி.வி.ஸ். அய்யங்காரின் நன்கொடையைப் பெற்று அவருக்குத் துணையாக இருந்தார்.

கருணாநிதியோ சாவி, குகன், ராம் போன்றவர்களுடன் தொழிலிலும், குடும்பத்திலும் நட்பு கொண்டுள்ளார். தன் பேரன் தயானநிதிக்கு பாப்பாத்தியை தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

மா.கோ.ரா வடுக பிராமணப் பெண்ணையே தனது பிறங்கடையாக்கினார்.

புரட்சி புழுதியோ சங்கரமடத்தில் ஆசி பெற்று வடநாட்டுப் பிராமணருக்கு பாதக்கழுவல் நடத்துகிறார்.

திராவிட மடத்து பூசாரி வீரமணியோ கருணாநிதி, செயலிலாதா இருவர் காலைக்கழுவிக் குடிப்பதே தனது கடமை என்று அல்லும் பகலும் அவர்களின் காலில் தவம் கிடந்தவர்.

இப்படித் திராவிடத் தலைவர்களும், அவர்களது அடிவருடிகளும் பிராமணருடன் கூடிக் குலாவலாம், கேட்டால் அது ஆரிய திராவிடப் போர் உத்தியாம்.

என்னடா உங்கள் போர் உத்தி?

ஆனால் தமிழர்கள், தமிழ் தேசியவாதிகள் தமிழ்ப் பார்ப்பனர்களுடன் பேசினாலோ அல்லது பழகினாலோ அவர்கள் இரண்டர்களாம்.

தமிழனைப் பழித்தவன்,
தமிழ் மொழியைப் பழித்தவன்,
கன்னடரான பெரியார் தமிழருக்குத் தந்தையாம்

தமிழனை சிங்களவனுக்கு பிடித்து கொடுத்தவன், தமிழரின் நிலத்தை சிங்களவனுக்கு தாரைவார்த்த (கச்சத்தீவு) தெலுங்கரான கருணாநிதி உலகத் தமிழினத்தின் தலைவராம்.

தமிழரைச் சுரண்டி தமிழ்மண்ணில் மலையாளிகளை வளர்த்து விட்டவரான மா.கோ.ரா புரட்சித் தலைவராம்..

தமிழரின் போர்வாள் தெலுங்கன் வை.கோ.வாம்.

இந்த இழிவான நிலை உலகத்தில் எந்த இனத்திற்காவது ஏற்பட்டிருக்கிறதா?

பொய்யாமொழிப் புலவரான வள்ளுவனை தந்தது தமிழினம்.

விடுதலைப் பாவலன் பாரதியை தந்தது தமிழினம்.

மரணத்தைத் தழுவினாலும் தழுவுவேன், மாற்றான் மகவைத் தழுவ மாட்டேன் என்று மரணத்தை தழுவிய மாவீரன் குலசேகர பாண்டியனை தந்தது தமிழினம்.

உலகின் மூத்தக் குடியாம் தமிழ்க் குடி குறித்தும், உலகின் முதன் மொழியாம் தமிழ் மொழிக்குறித்தும் உலகிற்கு உணர்த்திய பாவாணரைத் தந்தது தமிழினம்.

உலகின் தலைசிறந்த கரந்தடிப்படையை தலைமை தாங்கி நடத்தும் பிரபாகரனைத் தந்தது தமிழினம்.

சிந்திப்போம் தமிழர்களே...

தமிழால் ஒன்றுபடுவோம்! தமிழுக்காக, தமிழருக்காக ஒன்றுபடுவோம்!
தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்.

சாதியை அறுத்து சமயத்தை மறுத்து இனத்தால் ஒன்றுபடுவோம்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது அக நலன் ஒளிந்து கிடக்கிறது இது மார்க்சின் கருதுகோள்.

ஒவ்வொரு மனிதனின் சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் அவனது இனநலன் ஒளிந்து கிடக்கிறது இது நடைமுறைப் பாடம்.

இந்தியத்தையும், திராவிடத்தையும் வேரறுப்போம்..

புதிய தமிழ் தேசியத்தை மீளமைப்போம்...

மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்...


நம் முன்னோர்கள் பலன் அறிந்து பயன்படுத்தி வந்த மூலிகைகள் ஏராளம்.

மூலிகைகளை சாறாகவும், கஷாயமாகவும் செய்து சாப்பிடுவதன் மூலம் நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.

இதோ, சில மூலிகைகளும், அதன் பலன்களும்....

அருகம்புல் - ரத்த சுத்தி
இளநீர் - இளமை
வாழைத்தண்டு - வயிற்றுக்கல், மலச்சிக்கல்
வெண் பூசணி - அல்சர்
வல்லாரை - மூளை, நரம்பு வலுபடும்
வில்வம் - வேர்வையை வெளியேற்றும்
கொத்தமல்லி - ஜீரண சக்தி
புதினா - விக்கல், அஜீரணம்
நெல்லிக்காய் - முடி வளர்ச்சி, அழகு
துளசி - தொண்டை சளி, சோர்வு
முடக்கத்தான் - மூட்டு வலி, வாதம்
தூதுவளை - தும்மல், இருமல்
கரிசிலாங்கண்ணி - பார்வை திறன் மேம்படும். கல்லீரல் நோய்
கடுக்காய் - புண்களை ஆற்றும்
அகத்தி இலை - உடல் உஷ்ணம்
ஆடாதொடா - ஆஸ்துமா, குரல் வளம்..

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்கி உத்தரவிட முடியாது - பொது நல வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு...


ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்...


ஹார்ட் அட்டாக் கேள்விப்படும் போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி.... இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம்.

சிகிச்சை, உடற்பயிற்சி... இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் "டிரான்ஸ்ஃபேட்"னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.

சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

"ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்... வேற எதுவும் வேணாம்"னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்: கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்...

இரண்டு விதமான சைஸ் மற்றும் டிசைனில் 500 ரூபாய் நோட்டு, பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய எதிர்கட்சி தலைவருக்கு பேச அனுமதி மறுப்பு...


எதிர்கட்சியை சேர்ந்த கபில் சிபல் இன்று பாராளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்,

நாட்டில் மிகப் பெரும் ஊழல் நடந்துள்ளது எனக் கூறி 2 விதமான சைஸ் மற்றும் டிசைனில் 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது ஒன்று நாட்டிற்கு மற்றொன்று கட்சிக்கு   எனக் கூறினார். மாறுபட்ட விதத்தில் உள்ள நோட்டுக்களை அவர் பாராளுமன்றத்தில் காண்பித்தார்.

அவரின் கருத்தை ஆதரித்து திருனாமுல் காங்கிரஸ் , சமாஜ்வாடி கட்சி , ஜனதாதல் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்றத்தில் பேசின, அவர்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களையும் அவர்கள் காட்டினர்.

அவையில் இருந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இதற்கு பதில் அளிக்க மறுத்து ”கேள்வி நேரத்தை எதிர் கட்சிகள் தவறாக பயன்படுத்துகின்றது, இது போன்று பேப்பரை காட்டி பேசுவதற்கு அவர்கள் முன் கூட்டியே அனுமதி வாங்கி இருக்க வேண்டும்” என தொடர்ந்து கூறி வந்தார்.

இது குறித்து தொடர்ச்சியாக பேச கபில் சிபலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இது குறித்து பேசிய பாஜக அமைச்சர் நக்வி அப்பாஸ் கபில் சிபலுக்கு இந்த நோட்டுக்கள் எங்கிருந்து கிடைத்தது இதன் நம்பக தன்மை என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர் அருண் ஜெட்லி தரப்பில் ” நோட்டுக்களில் சிறிய அளவில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும் ஒரு பிரிண்டிங் பிரஸ் மற்றும் இன்னோரு பிரிண்டிங் ப்ரஸ்சில் அச்சிடப்படும் நோட்டுகளில் சிறு வித்தியாசங்கள் வரத்தான் செய்யும் எனக் கூறப்படது...

அதிமுக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனின் ஒரே மேடையில் நேருக்கு நேர் விவாதம் என்ற சவாலை ஏற்றார் பாமக அன்புமணி...


வரும் 12 ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் மன்றத்தை முன்பதிவு செய்துள்ளார்.

தொலைக்காட்சியில் இதை நேரலை செய்யவும் ஏற்பாடு...

பலிகொடுத்து சந்திரனின் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்தவர்கள் சந்திர வழிபாடு செய்பவர்கள்...


சூரிய வழிபாடு என்பது சூரியனை மிகத்துல்லியமாக கணித்து அதன்படி அந்த சூரியசக்தியை தனக்கு சாதகமாக (இயற்கைக்கு எதிராக)  வளைத்து தனது வாழ்க்கையை அமைப்பது சூரிய குலம்.

இயற்கை மனிதனுக்கு கொடுத்த வாழ்வியல் சந்திர வழிபாடு தான்.

சந்தேகம் இருந்தால் இதுவரை தீவுகளை விட்டு வெளியே வராத பழங்குடி கூட்டங்களை கவனித்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் சந்திரவழி தனது வாழ்க்கையை அமைத்தவர்கள்.

இந்த சூரியகுலம் என பெருமை பேசி கொள்ளும் எந்த இனக்குழுவும் உண்மையான சூரியக்குலம் இல்லை அவர்களுக்கு சூரியனை எப்படி கணிக்க வேண்டும் என்பதே தெரியாது.

எடுத்துக்காட்டு பள்ளர்களில் சிலர் இப்போது நாங்கள் தான் சூரியகுலம் அதாவது இந்திரனின் குலம் என சொல்கிறார்கள், ஆனால் கிராமத்தில் உள்ள பள்ளர்களிடம் கேட்டால் அவர்களின் நாள் கணக்கு வளர்பிறை தேய்பிறை அம்மாவாசை பெளர்ணமி கீழ்நோக்கு மேல்நோக்கு என எல்லாமே சந்திரனை மையப்படுத்தியே இருக்கும். குலதெய்வத்திற்கு பலி கொடுப்பார்கள். அவர்களில் சிலர் தனது சாதி அரசியலுக்காகவும் அரசகுடும்பம் அடிமை பணிக்காகவும் பெருமை என்ற பெயரில் சில தீமைகளை ஒரு இனக்குழுவின் மேல் வழிந்து திணிக்கிறார்கள்.. இதே போல் தான் ஒரு நேரத்தில் தேவர் சாதிகாரர்களுக்கு நடந்தது என்பதை நோக்க வேண்டும்.

எனவே உண்மையான சூரியகுலம் என்பது அந்த அரசகுடும்பம் தான்...

வேண்டுமானால் இப்போது இருக்கும் நகரத்தார் என்ற அரசகுடும்ப எச்சங்களை கொஞ்சம் கவனித்து பாருங்களேன்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


போலி நிறுவனங்கள் மூலம் ரூ. 80 கோடி அளவிற்கு அந்நிய செலாவணி மோசடி... திமுக முன்னாள் அமைச்சர் கோசி. மணியின் மகன் அன்பழகன் கைது....


உச்சநீதிமன்ற உச்சி குடிமிகள் ஆரம்பம் எல்லாம் இப்படி தான் தொடங்குவார்கள்.. ஆனால் முடிவு மோடி காலுக்கு சமர்பணம்...



பாஜக மற்றும் அதிமுக இனைந்து தமிழினத்தை அழிக்கும் விளையாட்டை பாருங்கள்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-5...


எட்கார் கேஸ் குறிப்பிட்ட ஆகாய ஆவணங்களை முழுமையாக நம்பிய ஒரு அமைப்பு தியோசோபிகல் சொசைட்டி. அதன் நிறுவனர்கள் ரஷியாவைச் சேர்ந்த எச்.பி.ப்ளாவட்ஸ்கீயும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் எச்.எஸ்.ஓல்காட்டும். கர்னல் ஓல்காட் தன்னுடைய அனுபவங்களை 'பழைய டைரித் தாள்கள் (Old Diary Leaves)' என்ற நூலில் எழுதியுள்ளார். அதில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆகாய ஆவணங்களைப் பயன்படுத்தி 'முகத்திரை அகற்றப்பட்ட ஐசிஸ்' (Isis Unveiled) எழுதிய விதத்தை சுவைபட விவரித்துள்ளார்.

"ப்ளாவட்ஸ்கீ அம்மையார் எழுதும் விதத்தைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும். மேசையில் பக்கம் பக்கமாக மிக வேகமாக எழுதிக் கொண்டே போவார். திடீரென்று ஏதாவது வேறு நூலில் இருந்து குறிப்புகள் தேவைப்பட்டால் கண்களை சுருக்கிக் கொண்டு வெட்ட வெளியைப் பார்ப்பார். பின் அந்த இடத்தையே பார்த்து பார்த்து சில வரிகள் எழுதுவார். தேவைப்பட்ட குறிப்பை எழுதி முடித்தவுடன் மறுபடி மின்னல் வேகத்தில் எழுத ஆரம்பிப்பார்... மறுபடி வேறு குறிப்புகள் தேவைப்படும் போது மறுபடியும் கண்களை சுருக்கிக் கொண்டு வெற்றிடத்தைப் பார்ப்பார்..."

பின் அந்தக் குறிப்பு நூல்களைத் தேடி எடுத்து அந்த அம்மையார் எழுதியதையும் சரிபார்த்தால் அவை வரிக்கு வரி அப்படியே இருந்ததாக கர்னல் ஓல்காட் கூறுகிறார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தனக்கு 'மஹாத்மா'க்கள் என்று அவர் அழைத்த உயர்நிலை சக்தி வாய்ந்த மனிதர்கள் அரூபமாக வந்து சம்பந்தப்பட்ட புத்தகங்களைக் காண்பிப்பதாகக் கூறினாலும் ஆகாய ஆவணங்களை அவர் பயன்படுத்தியதாகவே பலர் கருதினர். அப்படி அந்த அம்மையார் எழுதிய பல நூல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

விவேகானந்தருக்கும் இளமையில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டதை 8-1-1900 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

மனதில் நினைத்த கேள்விகளுக்கு வாய் விட்டுக் கேட்காமலேயே பதில் சொல்லும் ஒரு சாதுவைப் பற்றிக் கேள்விப்பட்ட விவேகானந்தர் தன் இரண்டு நண்பர்களுடன் அவரைப் பார்க்கச் சென்றார். குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணி மூவரும் ஒவ்வொரு கேள்வியை மனதில் நினைத்து அதை எழுதியும் வைத்துக் கொண்டு அந்த சாதுவைப் பார்க்கச் சென்றனர். அந்த மூன்றையும் அவர் சொல்லி அதற்கான பதிலையும் சொல்லி விட்டார். விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே எதையும் எளிதாக நம்பி விடாதவராக இருந்தார். அவரும் அவர் நண்பர்களும் அந்த சாது கேள்வியையும் பதிலையும் சொன்னாலும் இன்னும் சங்தேகம் நீங்காதவர்களாக இருந்தனர்.

அதைக் கண்ட அந்த சாது அவர்கள் மூவரிடமும் ஒவ்வொரு தாளில் ஏதோ எழுதி அதை அப்போது படிக்க வேண்டாம் என்று சொல்லி அவரவர் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவர்களும் அவற்றை அப்படியே படிக்காமல் சட்டைப்பையில் வைத்துக் கொண்டனர். பின் சிறிது நேரம் அவர்கள் மூவருக்கும் அவர்களுடைய எதிர்காலப் பலன்களையெல்லாம் சொல்லிய சாது மறுபடி மூன்று பேரிடமும் "ஏதாவது ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது எந்த மொழியிலாக இருந்தாலும் பரவாயில்லை" என்றார்.

உள்ளூர் மொழியைத் தவிர வேறெந்த மொழியையும் அறிந்தது போல் தெரியாத அந்த சாது அப்படி சொன்னவுடன் விவேகானந்தரும் அவரது நண்பர்களும் தனியாகச் சென்று கூடிப் பேசி கஷ்டமான மொழிகளில் வார்த்தை அல்லது வாக்கியம் நினைக்க முடிவு செய்தார்கள். விவேகானந்தர் சம்ஸ்கிருத மொழியில் ஒரு நீண்ட வாக்கியத்தை நினைத்தார். விவேகானந்தருடன் வந்த ஒரு நண்பர் முஸ்லீம். அவர் குரானிலிருந்து ஒரு வாக்கியத்தை அரபு மொழியில் நினைத்தார். மற்ற நண்பர் மருத்துவர். அவர் ஜெர்மானிய மொழியில் ஒரு மருத்துவச் சொல்லை நினைத்தார். 'இந்த முறை அந்த சாதுவால் முன்பு சொன்னது போல் சரியாகச் சொல்ல முடியாது' என்று திடமாக நம்பினார்கள் விவேகானந்தரும் அவர் நண்பர்களும்.


நினைத்து முடித்தவுடன் அந்த சாதுவை உற்சாகமாக அணுக அந்த சாது அவர்களை அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்க்கச் சொன்னார். அவர்கள் எடுத்துப் பார்த்த போது அவரவர் நினைத்தது அந்தந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் 'நான் எழுதிய இந்த வார்த்தைகளை இந்த இளைஞன் நினைப்பான்' என்று
ஒவ்வொன்றிலும் எழுதியிருந்தார். விவேகானந்தரும் அவர் நண்பர்களும் மலைத்துப் போனார்கள்.

இவர்கள் நினைத்ததை அவர் சொல்வார் என்பதற்கு ஒருபடி மேலே போய் அவர் எழுதியதை இவர்கள் அதிசாமர்த்தியமாகத் தாங்கள் நினைத்ததாய் தேர்ந்தெடுக்க வைத்தது பேரதிசயமே அல்லவா? அதுவும் அவரவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் அவரவர்கள் கஷ்டமானது என்று நினைத்த வார்த்தைகளை அவர்கள் நினைப்பதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பே எழுதி வைத்தது எப்படி சாத்தியம்?

பதில் ஆகாய ஆவணங்களில் இருக்கலாம் என்பது பலருடைய அபிப்பிராயம். எல்லாமே அலைகளாக பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்கிறார்கள். மற்றவர்களுடைய எண்ண அலைகளைப் படிக்க முடிவதும், அவர்கள் எண்ணங்களில் ஆதிக்கம் செலுத்த முடிவதும் என்றோ சித்தர்களும், ஞானிகளும் அறிந்திருந்தனர் என்பதற்கு எட்கார் கேஸ், ப்ளாவட்ஸ்கீ, விவேகானந்தர் சந்தித்த அந்த சாது எல்லாம் சாட்சிகள். இந்த மூன்று நபர்களும் 19 ஆம் நூற்றாண்டு இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதஞ்சலி முனிவர் இதை விடப் பெரிய சாதனைகளும் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்து, பயிற்றுவித்தால் சாத்தியம் தான் என்பதை தன் "யோக சூத்திரங்களி"ல் எழுதியிருக்கிறார்.

இன்று விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறி, எத்தனையோ கண்டுபிடிப்புகள் செய்திருக்கும் நாம் முன்னொரு காலத்தில் அறியப்பட்டும் பெரிதும் உபயோகப்படுத்தியும் வந்த மனோசக்தியை அலட்சியப்படுத்தி விட்டோமோ?

இனியும் ஆழமாய் பயணிப்போம்...

தமிழின மூட்டாள்களே.. இன்னுமா திராவிடம் என்று கொடி பிடிச்சிட்டு திரியப் போகிறீர்கள்...


மோடம் இல்லாமல் இன்டர்நெட்... BSNL அதிரடி...


தனியார் தொலைத்தொடர்பு நிறுவங்களின் நெருக்கடிகளை சமாளிக்க பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் மோடம் இல்லாமல் இன்டர்நெட் சேவையை பெறும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த உள்ளது...

பள்ளிகளில் யோகாவை கட்டாயமாக்க கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது...



மேலும், அரசின் கொள்கை முடிவுகளை வரைவு செய்வது உச்சநீதிமன்றத்தின் பணி இல்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்...

தண்ணீர் தராத ஓ.பி.எஸ்.சை கண்டித்து பெரியகுளம் லட்சுமிபுரம் கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...


தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் சென்னை ஐகோர்ட்டில் புகார்...


கிரானைட் முறைகேடு குறித்து ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை நடந்தது. இக்குழு தனது விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் சகாயம் தாக்கல் செய்த மனு...

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்ததால், தனக்கு கொலை மிரட்டல் வருகிறது. தனக்கும், விசாரணைக்கு உதவிய சேவற்கொடியானுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். தனக்கு உதவிய பார்த்தசாரதி விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணை குழுவின் ஆவணங்களை ஒப்படைக்க அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து, விசாரணை அறிக்கையை ஒப்படைக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது...

அமேதி தொகுதி எம்.பி ராகுல் காந்தியை காணவில்லை. கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் - அமேதி தொகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு...


நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் என்றால் என்ன? தெரிய வேண்டிய தெளிவுகள்...


அண்மையக் காலத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் விடயம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எனப்படுவதாகும். பரபரப்பாக பேசப்படும் இவ்விடயம் பலருக்கும் தெரியாத ஒன்றாக - பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? இதனைப் பற்றிய தெளிவினை வழங்கும் கட்டுரை இது.

இன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரசியன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.

நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும்.

காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும்.

இரண்டாம் உலகப்போரில் பல ஜரோப்பிய நாடுகளை இட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது.

1920 ஆண்டில் பெலருசின் என்ற அமைப்பு தனது நாடு பெலரூசால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை, நாடு கடந்த அரசாங்கமாக இயங்கி வருகிறது.

அத்துடன் திபெத்திய பீட பூமியை சீன அரசானது ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா அவர்கள் இந்தியாவுக்குச் சென்று இன்று வரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கி வருகின்றன. அதன் விவரம் பின்வரும் அட்டவணையில்:-

நாடு கடந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள்..

1.அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

2.தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுத்துக் கொள்ளுதல்.

3.தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாத்தல்.

4.ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புதல்.

5.அரசியல் நிலையில் அல்லது அரச தந்திர நிலலயில் நாட்டின் தேசியத்தை ஒன்று படுத்துதல்.

6.தேசிய அடையாள அட்டை வழங்குதல்.

7.ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குதல்.

8.தேர்தல்களை நடத்துதல்.

முதலான செயற்பாடுகளை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை...

நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்.

நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன பயன்...

1.பல வெளிநாடுகளில் தமது அரசின் அதிகாரப்படியான தூதுவர்களை நியமிக்க முடியும்.

2.வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும்.

3.குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுகான ஏதுவாக இருக்கும்.

4.பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள எமது சமுதாயத்தினை சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் பலப்படுத்துவதற்கும், எமது தாய்மண்ணில் சுதந்திரத் தமிழீழ அரசுரிமையைப் பெறுவதற்கும், உலகச் சவால்களை அனைத்துலக நிலையில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பெரிதும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு பல திறமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு.

நாடு கடந்த அரசாங்கத்திற்கு பாதகம் வருமா?

ஆம். நாடு கடந்த அரசாங்கமானது செவ்வனே செயல்பட ஒரு நாட்டின் தஞ்சம் அல்லது அங்கிகாரம் தேவை. தஞ்சம் தரும் வெளி நாடு தனது ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இதன் அதிகாரம் இழக்கப்படக்கூடிய சந்தர்ப்பமும் உள்ளது.

ஆகவே, மிகவும் பொறுமையுடனும், ஆழ்ந்த அறிவு மற்றும் அரசியல் மதிநுட்பம் கொண்டு கையாளப்படவேண்டிய விடயம் இது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைத்த பின்னரும் வெளிநாடுகள் தாம் விரும்பும் பட்சத்திலேயே இதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதாவது ஏற்பதும் நிராகரிப்பதும் ஒவ்வொரு வெளிநாட்டின் தனிப்பட்ட விருப்பமாகும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டியன?

ஈழத்தில் ஒரு இன அழிப்பு நடவடிக்கை நடந்து முடிந்துள்ள போதும் அதற்காக உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தது தவிர வேறொரு தீர்வையும் பேசவில்லை. ஆகவே, உலக நாடுகள் ஈழச் சிக்கலை இனங்கண்டு, தலையிட்டு, தமிழீழத்தை அங்கீகரித்தால் அன்றி அங்கு அமைதி என்பதையே காணமுடியாது. ஆனால் உலக நாடுகள் தாமாகவே வந்து இதில் தலையிடக்கூடிய நிலை உள்ளதாகத் தெரியவில்லை.

எனவே இப்போதைய உலகத்தைச் செயற்பட வைக்க வேண்டும் என்றால் முதலில் ஈழ மக்கள் இப்போதைய நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று உருவாகுவதற்கும் தனித்துவம், கௌரவம், ஆசைகள், வாழ்வு என்பவற்றைப் பாதுகாப்பது பற்றித் தெளிவு கொள்ள வேண்டும்.

உண்மை நிலவரம் என்னவென்றால் இலங்கையின் தனித்துவத்தை (இறையாண்மை) ஏற்றுக் கொள்ளும்படி கொழும்பு பல முரட்டு வழிகளைப் பின்பற்றும், இந்தியாவும் சில வேறு நாடுகளும் அதற்கு ஆதரவளிக்கும், ஆனால் நாம் நாடுகடந்த தமிழீழ ஆட்சி முறையால் இவற்றை உடைத்தெறிய வேண்டும்.

அனைத்துலக அளவில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக புலிகள் இயக்கம் இருந்த போதும் அதன் உலகளாவிய உட்கட்டமைப்பு மிகவும் வலுவான ஒன்று. புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை ஒற்றுமையாகவும் எழுச்சியுணர்வு உள்ளவர்களாகவும் கட்டிக்காத்து வந்தது புலிகள் இயக்கமே ஆகும். வெளிநாடுகளில் நிறுவப்பட்ட நிருவாக, நிதி அமைப்புகள் யாவும் முழுமையான - முறையான இயக்கத்திலேயே இப்போதும் உள்ளன.

எனவே, தற்போது உள்நாட்டில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் வேறுபாடின்றி மக்களுக்காகச் செயற்பட வேண்டும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தஞ்சம் கொடுக்க ஒரு உலக நாடு தேவை என்பதை விட மிக அவசியமாக இப்போது தேவைப்படுவது உலகம் முழுதும் வாழும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் ஆற்றல் மிகுந்த ஆதரவே யாகும்...

இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்...


1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்...

மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)
பூலித்தேவன் (1715-1767)
வாண்டாயத் தேவன்
பெரிய காலாடி
வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர்
மருது பாண்டியர்
மருதநாயகம் (1725-1764)
விருப்பாச்சி கோபால நாயக்கர்
கட்டபொம்மன் (1760 - 1799)
தீரன் சின்னமலை (1756-1805)
மயிலப்பன் சேர்வைகாரர்
சின்ன மருது மகன் துரைச்சாமி
வீரன் சுந்தரலிங்கம்
வடிவு
ராமச்சந்திர நாயக்கர்
தூக்குமேடை ராஜகோபால்
சுத்தானந்த பாரதி
மோகன் குமாரமங்கலம்
சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
மேயர் டி. செங்கல்வராயன்
சாவடி அருணாச்சலம் பிள்ளை
தூத்துக்குடி பால்பாண்டியன்
முத்துவிநாயகம்
டி. என். தீர்த்தகிரி
ஏ. பி. சி. வீரபாகு
எம். சங்கையா
கல்கி டி.சதாசிவம்
ஸ்ரீநிவாச ஆழ்வார்
தியாகி விஸ்வநாததாஸ்
திருச்சி வக்கீல்ரா. நாராயண ஐயங்கார்
மதுரை பழனிகுமாரு பிள்ளை
ஹாஜி முகமது மெளலானா சாகிப்
தஞ்சை ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார்
அகினி திராவக அபிஷேகம்
கவி கா.மு.ஷெரீப்
எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
பி. சீனிவாச ராவ்
காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
வீரன் வாஞ்சிநாதன்
எஸ். என். சோமையாஜுலு
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
ப. ஜீவானந்தம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
ஐ. மாயாண்டி பாரதி
புதுச்சேரி சுப்பையா
ஜி. சுப்பிரமணிய ஐயர்
வெ. துரையனார்
கோடை எஸ். பி. வி. அழகர்சாமி
வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
சுப்பிரமணிய சிவா
எம். பி. டி. ஆச்சார்யா
ஆ. நா. சிவராமன்
ம. பொ. சிவஞானம் கிராமணியார்
என். எம். ஆர். சுப்பராமன்
அ. வைத்தியநாதய்யர் மதுரை
டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு
செண்பகராமன் பிள்ளை
சேலம் ஏ. சுப்பிரமணியம்
குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
வ. வே. சுப்பிரமணியம்
வ. உ. சிதம்பரனார்
திரு. வி. கலியாணசுந்தரனார்
மகாகவி பாரதியார்
ராஜாஜி
திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
திருப்பூர் பி. எஸ். சுந்தரம்
பி. வேலுச்சாமி
தர்மபுரி குமாரசாமி
க. சந்தானம்
புலி மீனாட்சி சுந்தரம்
சீர்காழி சுப்பராயன்
கு. ராஜவேலு
மட்டப்பாறை வெங்கட்டராமையர்
முனகல பட்டாபிராமையா
பெரியகுளம் இராம. சதாசிவம்
திண்டுக்கல் மணிபாரதி
தேனி என். ஆர். தியாகராஜன்
பழனி கே. ஆர். செல்லம்
மதுரை ஜார்ஜ் ஜோசப்
மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
பி. எஸ். சின்னதுரை
செங்காளியப்பன்
கே. வி. ராமசாமி கோவை
தியாகி வைரப்பன் வேதாரண்யம்
திருச்சி டி. வி. சுவாமிநாத சாஸ்திரி
திருச்சி பி. ரத்னவேல் தேவர்
திருச்சி டி. எஸ். அருணாசலம்
பழனி பி. எஸ். கே. லக்ஷ்மிபதிராஜு
ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
ம. சிங்காரவேலர்
சர்தார் வேதரத்தினம் பிள்ளை
கே. பி. சுந்தராம்பாள்
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பாஷ்யம் என்கிற ஆர்யா
திருப்பூர் குமரன்
காம்ரேட் பி. ராமமூர்த்தி
பி. கக்கன்
தி. சே. செள. ராஜன்
டி. கே. மாதவன்
பூமேடை ராமையா
எம். பக்தவத்சலம்
கு. காமராசர்
ரா. கிருஷ்ணசாமி நாயுடு
சி. பி. சுப்பையான் கோவை
கோவை என். ஜி. ராமசாமி
கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
தீரர் சத்தியமூர்த்தி
தோழர் கே. டி. கே. தங்கமணி
கோ. வேங்கடாசலபதி
கோவை அய்யாமுத்து
முஹம்மது இஸ்மாயில்
ச. அ. சாமிநாத ஐயர்
லீலாவதி
பங்கஜத்தம்மாள்
அம்புஜம்மாள்,
கடலூர் அஞ்சலையம்மாள்
மூவலூர் இராமாமிர்தம்
நீலாவதி இராம. சுப்பிரமணியம்
முத்துலட்சுமி ரெட்டி
அசலாம்பிகை அம்மையார்
கண்ணம்மையார்
நாகம்மையார்
கே.கே.எஸ். காளியம்மாள்
எஸ். என். சுந்தராம்பாள்
வை. மு. கோதைநாயகி
செல்லம்மா பாரதி
மீனாம்பாள்
மணலூர் மணியம்மா
கே. பி. ஜானகியம்மாள்
இலட்சுமி சாகல்
கோவிந்தம்மாள்
ஜானகி ஆதி நாகப்பன்
இராசம்மா பூபாலன்
இராமு தேவர்

எனினும் தென்னிந்தியாவில் அதற்கு முன்னரே பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் பல போர்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றன.

பூலித்தேவன் : நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பூலித்தேவன் மற்றும் பூலித்தேவரின் சுற்று வட்டார பாளையங்களைச் சேர்ந்த வாண்டாயத்தேவன் போன்றவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்டனர். 1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக்கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று அறிவித்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.

பின்னர் 1755 -ல் கப்பம் வசூலிக்க வந்த ஆங்கிலத் தளபதி அலெக்சாண்டர் கெரான் என்பவரோடு போரிட்டு வெற்றி பெற்றார். இதுவே பாளையக்காரர்கள்-ஆங்கிலேயர் மோதல்களில் ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட முதல் தோல்வியாகும். மேலும் பூலித்தேவன் 1750 முதல் 1767 வரை சுமார் 17 ஆண்டு காலம் தொடர்ந்து பல போர்களை நடத்திவந்தார்.

பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன.

இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச்
செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.

முத்துராமலிங்க சேதுபதி : இருபது ஆண்டுகளுக்கு மேலாக கப்பத்தொகையினை யாருக்கும் கட்டாமல் தன்னிச்சையாக இயங்கி வந்த இராமநாதபுரம் சேதுபதியை ஆயுத வலிமை கொண்டு அடக்கிட நாவாப் விரும்பினார். 1772-ல் நவாப் முகமது அலியின் மகனான உம் தத்துல் உம்ரா, கம்பனித் தளபதி ஜோசப் ஸ்மித் ஆக்யோர் தலைமையில் பெரும்படை ஒன்று இராமநாதபுர கோட்டையைக் கைப்பற்றினர். அங்கிருந்த ராணி, அவரது இரு பெண்குழந்தைகள் இளவல் முத்துராமலிங்க சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 1781-ல் நாவாப் சிறையிலிருந்த இளம் சேதுபதி மன்னருடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர் தமது ஆட்சியைத் தொடர வழி கோலினார்.

சேதுபதி திருவிதாங்கூர் மன்னர் மற்றும் திருநெல்வேலிப் பாளையக்காரர்களுடன் நட்புகொண்டார். மேலும் நவாபுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் எதிராக டச்சுக்காரர்களுடனும் உடன்பாடு செய்துகொண்டார். ஆற்காடு நவாப்பின் இறையாண்மைக்கு உட்பட்ட நிலையில் அவரது சலுகைகளை எதிர்பார்த்து தங்களது வணிக தொடர்ந்து வந்த ஆங்கிலேயர் சேது நாட்டின் வணிகத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்றனர். ஆனால் சேதுபதி மன்னர் மறுத்தார். எனவே பலவகையில் முயன்று ஆற்காட்டு நவாப்பிற்கும், ஆட்சியர் பவுனிக்கும் முறையிட்ட கம்பனியர் போர் தொடுக்க இரகசியத் திட்டம் தீட்டினர். மன்னருக்கு மிகவும் நம்பிக்கையான தளபதி மார்ட்டினிடம் கோட்டை வாசல் கதவுகளுக்கான சாவிகள் இருந்தன.

எனவே 1795 பிப்ரவரி எட்டாம் நாள் கம்பெனியாரது படை இராமநாதபுரம் கோட்டை வாயிலைக் கடந்து அரண்மனையைச் சூழ்ந்து கொண்டது. ஆயுதக் கிடங்கு, வெடிமருந்து இருப்பு, போர்வீரர் எண்ணிக்கை மற்றும் நாட்டுப்புறங்களில் பயிற்சிபெற்ற நாலாயிரம் போர்வீரகள், ஆயுதம் ஏந்தக் கூடிய ஆறாயிரம் குடிமக்கள் ஆகியோர் இருந்தும் மன்னர் வஞ்சகமாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்கு அனுப்பப்பட்ட . மன்னரது தளபதி மயிலப்பன் சேர்வைக்காரன் என்பவர் மன்னரைத் தப்புவிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தபின் மக்களைத் திரட்டி ஆயுதக் கிளர்ச்சியொன்றைத் தொடங்கினார். முதுகுளத்தூர், அபிராமபுரம், கமுதி ஆகிய ஊர்களிலுள்ள கம்பெனியாரது தானியக் களஞ்சியம், கிடங்குகள் ஆகியன சூறையாடப்பட்டன

இப்புரட்சியில், குளத்தூர், காடல்குடி, நாகலாபுரம், பாஞ்சலங்குறிச்சி மக்களும் கலந்துகொண்டனர். நாற்பத்து இரண்டு நாட்கள் நீடித்த இப்புரட்சி கம்பெனியாரது ஆயுத பலத்தினால் ஒடுக்கப்பட்டது. மன்னர் சேதுபதி திருச்சி சிறையிலிருந்து நெல்லூர் சிறைக்கு மாற்றப்பட்டர். அங்கு கொடுமைதாளாது, இரவுபகல் தெரியாமல் பதினான்கு ஆண்டுகள் கழித்தார். குற்றாச்சாட்டுகள், விசாரணைகள் என எதுவுமே இல்லாமல் தமது வாழ்நாளைச் சிறையில் கழித்த சேதுபதி மன்னர் 1809-ல் இறந்தார்.

வேலு நாச்சியார் : 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரு க்கு மனைவியானார். 1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர்
எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது.

அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். ஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் சட்ட படி புதிய முறை (doctrine of lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வயாது வரை சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது, தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.

வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார். 1793ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார்.

மருதுபாண்டியர் : இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 15.12.1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.

பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் அவரது போர்ப்படையில் வீரர்களாக தனது திறமையை நிரூபித்தனர்.

அவர்களின் வீரத்தை கண்டு மெச்சிய முத்து வடுகநாதர் மருது சகோதரர்களை தன் படையின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றியபின் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்து வடுகநாதர் காளையார் கோவில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியார், மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை, மற்றும் மருதுசகோதரர்கள் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி காட்டுக்குத் தப்பிச் செல்கின்றனர்.

1772 க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலு நாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டனர். மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர் அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார். மருது சகோதரர்கள் ஆட்சி மத ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்குக் குறிப்பிடத்தக்கவாக அமைந்தது. இசுலாம் மற்றும் கிறித்தவ மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் வழிபாட்டு இடங்களை அமைத்துக் கொடுத்தனர்.

இளையவரான “ சின்ன மருது” அரசியல் ராஜதந்திரம் மிக்கவராக விளங்கினார். தஞ்சாவூர் முதல் திருநெல்வேலி முடிய மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றைத் தொடங்கி ஆங்கிலேயர்க்கு எதிரான போரட்டதிற்கு வித்திட்டனர் . 1801 ஜுன் 16 ம் தேதி சின்ன மருது திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் வெளியிட்ட அறிக்கை “ ஜம்பு தீவ பிரகடனம்” என அழைக்கப்படுகிறது. அவ்வறிக்கை எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும் நாட்டுப் பற்று மிக்க பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டுமென்றும் அறை கூவல் விடுக்கப்பட்டது. 24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.

இதுவே தமிழகத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக மன்னர்கள் நடத்திய போர். அதன் பின்னர் நடந்ததே வேலூர் புரட்சி, பல தமிழர்களுக்கு இது இன்றும் தெரியாமல் இருப்பதே வேதனை,

இந்த சுதந்திர தினத்திருக்கு முன்பாகவே அணைத்து தமிழர்களுக்கும் இவர்களை பற்றி தெரியட்டும்...