13/04/2018

உலகில் உள்ள அனைத்து எழுத்து வடிவங்களையும் உள்ளடக்கிய முதல் எழுத்தைக் கொண்ட ஒரே மொழி.. நம் தமிழ் மொழி...


உலகில் உள்ள எல்லா எழுத்துக்களின் வடிவங்களை காண்போமாயின் அதன் கட்டமைப்பு என்பது படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம் என்று இவற்றில் ஏதோ ஒன்றோ அல்ல இவற்றுள் ஒன்று, இரண்டோ அடங்கிவிடும்.

ஆனால் நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" இவற்றில் எல்லா வடிவங்களையும் ( படுக்கைக் கோடு, செங்குத்தானக் கோடு, வளைவு, வட்டம், அறை வட்டம்) உள்ளடக்கியது என்பது ஆச்சர்யத்தை தருதிறது.

நம் தமிழ் மொழியின் முதல் எழுத்து "அ" என்பதில் உலகில் உள்ள எல்லா எழுத்து வடிவங்களும் இதனுள் அடக்கம் என்பதே குறிப்பதாகும்.

தமிழனின் மொழி ஆளுமை எழுத்தாளுமை என்றுமே வியக்க வைக்கிறது...

வாழ்த்துக்கள் அய்யா...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம்.. பகுதி - 8....

சத்திய யுகம் எனும் வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்கதரிசனப் பகுதி 8-ம் பகுதியாகும். இந்த 8-ம் தீர்க்கதரிசனத்தில் பல முக்கிய நிகழ்வுகள் இடம் பெற உள்ளன. அவைகளைப் பற்றி இங்கு காண்போம்.


இந்த 8-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக காணும் தீர்க்க தரிசனம் என்னவெனில் உலகத்தின் முக்கிய பிரசித்திப் பெற்ற உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய நினைவிடங்களில் ஒன்று, உலக தீவிரவாதிகளால் முழுமையாக அழிக்கப்பட உள்ளது என்றும், இது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு முக்கிய நிகழ்வாக அமைய போவதாகவும், இதனால் உலக நாடுகள் அச்சமடையும் ஒரு தீவிரவாத செயலாக இருக்குமென 8-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு குறிப்பை தருகிறது.


மெல்போர்ன் என்கிற நகரில் மிகப் பெரிய கொடுமையான தீவிரவாத தாக்குதல் மக்கள் மீது நடக்க இருப்பதாகவும், இது வன்மையாக கண்டிக்கதக்க செயலாகவும், செய்தியாகவும் ஊடகங்களில் உலா வரும் செய்தி என 8-ம் தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றது.

நமது உண்மைகள் உறங்குவதில்லை  என்ற தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 8-ம் தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்றுள்ள சில நிகழ்வுகள் தற்போது நடக்கும் காலமாக இப்பொழுது இருக்கும் என்றும், அதே சமயத்தில் தமிழகத்தில் தற்போது புரட்சிகரமான பல போராட்டங்கள் நடைபெற உள்ளதாக சத்திய யுக தீர்க்கதரிசனமான 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


உண்மைகள் உறங்குவதில்லை மற்றும் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதிகளில் நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ள 12-ம் தீர்க்கதரிசனத்தில் வெளியிட்டுள்ள பல நிகழ்வுகள் தற்போது நடக்கும் காலமாக இருக்கும் என்றும், ஒரு நகரமே பூமி அதிர்வினால் பூமிக்குள் அமிழும் சோகச் சம்பவம் ஒன்று இந்தியாவின் வடதேசத்தில் தற்போது நடைபெற போவதாக 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே தெரிவிக்கின்றது.


சத்திய யுகம் எனும் நமது வருங்கால தீர்க்கதரிசனப் பகுதியில் மொத்தம் 16 தீர்க்கதரிசனங்கள் மட்டுமே இடம்பெற உள்ளதாகவும், அதில் 13-ம் தீர்க்க தரிசனம் இடம்பெறும் சமயத்தில் தமிழகத்தில் பல கலவரங்கள் உருவாகிட இருப்பதாகவும், தமிழக அரசியலுக்கு பல நெருக்கடிகள் நேரிடும் என்று 8-ம் தீர்க்க தரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


முக்குலத்தோர் அமைப்பில் பல இன்னல்களும், தடைகளும் உருவாகும் காலமாக தற்போது இருக்கும் என்றும், அதற்கு நடிகர் ஒருவரின் ஆவேசப் பேச்சுகளே காரணமாக இருக்கும் என்றும், இதனால் தென்தமிழகத்தில் சில கலவரங்கள் ஏற்படலாம் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



துப்பாக்கி முனையில் ஒரு நாட்டின் அதிபரை தீவிரவாத கும்பல் ஒன்று திட்டமிட்டபடி கடத்தும் என்றும், இதற்கு பல அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்படும் என்றும், அச்சமயத்தில் பாரசீக நாட்டில் மதக்கலவரங்கள் திடீரென்று வெடிக்கும் என்றும், இதனால் உலகத்தில் பல பதற்றமான சூழ்நிலைகள் உருவாகும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.



மன்னார் வளைகுடாவில் தற்போது புயல் உருவாகும் என்றும், இப்புயலைப் பற்றி நாம் ஏற்கனவே தீர்க்கதரிசனத்தில் வெளியிட்டாலும், தற்போது நாம் வெளியிடும் குறிப்பு என்னவெனில் அந்த சமயத்தில் சீனாவில் பெரும் சேதங்கள் ஏற்படும் என்றும், தற்போது அந்த தேசத்தின் அதிபருக்கு ஒரு புதிய நெருக்கடி ஏற்படும் என்று 8-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய நிகழ்வை இங்கே பதிவு செய்கிறது.


தமிழகத்தின் பல மாவட்டங்களில் போராட்டங்கள் வெடிக்கும் என்றும், இதனால் கர்நாடகாவின் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்பு ஒன்று இறங்கிடும் சூழல் உருவாகும் என்றும், அச்சமயத்தில் நடிகர் ஒருவரின் பேச்சால் மக்கள் சமூகம் கொதித்து எழும் சம்பவங்கள் நிகழும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் முக்கிய நிகழ்வைப் பற்றி இங்கே தெரிவிக்கின்றது.


உகாண்டா மாகாணத்தில் பெரும் சோகச் சம்பவங்கள் நடக்கப் போவதாகவும், அங்கு வாழும் கருப்பு இன மக்கள் மீது இறைவனின் நீயாயத்தீர்ப்புகள் நெருப்பு மழையாக தற்போது இறங்கிட இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.


உகாண்டாவில் வாழும் கருப்பு இனத்தவர்களால் உலக மக்களுக்கு அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் பரப்பபட இருப்பதாகவும், இது திட்டமிட்ட சதியாக இருக்கும் என்றும், அதனாலேயே இறைவனின் கோபத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆளாகப் போகிறார்கள் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை தெரிவிக்கின்றது.


தென்தமிழகத்தில் இனி பல புதுமையான அதிசய நிகழ்வுகள் நடக்க இருப்பதாகவும், அவைகள் தெய்வம் சார்ந்த நிகழ்வுகளாக இருக்குமென 8-ம் தீர்க்கதரசனம் மெய்பட கூறுகின்றது.


வட மாநிலங்களிலும் பல தெய்வீக அதிசயங்கள் நடக்கும் என்றும், பாபா ஒருவரின் அதிசயங்களை இந்திய மக்கள் கண்கூடாக காணும் பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாக 8-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


கேரளாவின் பல பகுதிகள் மழையினால் பலத்த சேதங்களை சந்திக்கும் என்றும், இதனால் பல வாரங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடையும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


தெய்வீக சங்கல்பம் ஒன்று தென்தமிழகத்தின் குடிலில் நடக்க இருப்பதாகவும், இது இறைவன் இந்த பூமியில் தனது இறை ஆட்சியை ஏற்படுத்துவதற்கான முதல் சுவடாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்நிகழ்விற்கு முன்பாக பெரிய ஆன்மீக அமைப்பின் பித்தலாட்டங்கள் மக்கள் பார்வைக்கு முன்வரும் ஒரு நிகழ்ச்சி தற்போது  நடைபெறும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இனி நமது தீர்க்கதரிசனங்கள் மீது உலக மக்களின் பார்வை திரும்பிட உள்ளதாகவும், தமிழ்மொழியில் வெளி வந்துள்ள நமது தீர்க்கதரிசனங்களை பிற ஆன்மீக அமைப்புகள் அவர்களாகவே முன்வந்து தமது தாய்மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவார்கள் என்றும், உலக மக்களிடையே நமது தீர்க்கதரிசனங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் என்றும் 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு கருத்தை இங்கே பதிவு செய்கிறது.


தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இனி “சேலம்“ மாவட்டம் பல சிறப்புகளை பெறும் என்றும், இனி வருங்காலத்தில் தமிழகத்தின் ஆட்சிமுறை சேலத்திலிருந்து துவங்கிடும் என்றும், இது இந்திய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக அமையும் என்று 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

ஏற்காடு உலக மக்களை கவரும் ஒரு ஆன்மீகஸ்தலமாக விரைவில் மாறும் என்றும், உலக மக்களின் கவனம் இனி இங்கு பதியப் போவதாக 8-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


புண்ணிய ஸ்தலங்களில் ஒன்று பூமியில் அமிழும் ஒரு நிகழ்வு தற்போது விரைந்து நடக்க இருப்பதாகவும், இரு மதத்தினருக்கு சவாலாக இருக்கும் ஒரு சம்பவம் இனி நடக்காமல் போகும் என்றும், இது இறைவன் தன் மீது ஏற்படுத்திக் கொள்ளும் நீயாயத்தீர்ப்பாக இருக்கும் என 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

மாற்றான் ஒருவனின் பேச்சால் தமிழக அரசியல் களத்தில் பல பிளவுகள் ஏற்படும் என்றும், தமிழக மக்கள் அரசியல் நாகரியத்தையே வெறுக்கும் பல நிகழ்வுகள் இனி நடக்க இருப்பதாக  8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.

காந்தி என்ற புனைப்பெயரில் உள்ள ஒருவரின் மரணம் தற்போது நடக்கும் என்றும், அச்சமயத்தில் தமிழகத்தில் மிகப் வலுவான புயல் ஒன்று உருவாகி பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் 8-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

இறைவன் வெளிப்படும் அந்த இறுதிசபை ஒரு யோகா அமைப்பாக இருக்கும் என்றும், அந்த அமைப்பில் தற்போதுவரை இறைவனின் அற்புதங்கள் தொடர்ந்து நடந்து வரும் என்றும், அவர்கள் மத்தியில் தற்போது புதுமையான அதிசயம் ஒன்று இறைவனால் நடத்தப்பட இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனம் மிக முக்கியமான நிகழ்வைப் பற்றிய செய்திக் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


இறைவனின் பிரவேசம் இப்பூமியில் முழுமையடையும் சமயத்தில் தென்கிழக்கில் உள்ள ஒரு சிவாலயத்தில் மாபெரும் அதிசயம் நிகழ இருப்பதாக 8-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு அதிசய நிகழ்வைப் பற்றி இங்கே பதிவு செய்கிறது.


இறைவனின் அற்புதங்களை காண நாம் அதுவரை காத்திருப்போம். சத்திய யுகத்தின் நிகழ்கால உண்மைகளை காண அந்த இறைவனின் வருகையை இருகரம் கூப்பி வரவேற்போம்.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்....

கல்பாக்கம் அணுமின் நிலையம்...


இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாக்குமூலம்...


தேர்தல் ஆணையத்திற்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பது வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது, கள்ள ஓட்டுப் போடுவது, கலவரம் செய்வது இவை எதையுமே அடக்கும் அதிகாரமற்ற வாயிருந்தும் பல் இல்லாத ஓர் அமைப்பு இந்திய தேர்தல் ஆணையம் என்பது

மட்டுமல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் உள்ளோரின் தலையீடு அதிகம் இருப்பதால் நியாயமான தேர்தல் நடத்த முடியவில்லை.

----தேர்தல் ஆணையரின் நேற்றைய வாக்குமூலம்.

இந்திய சரித்திரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மற்றும் தேர்தல் ஆணையர் இவர்கள் இருவரும் மத்திய அரசின் அதிகார துஷ்பரயோகத்தை வெளி கொண்டு வந்தது இதுவே முதன்முறை.

இதிலிருந்து தெரிவது நாட்டில் நடப்பது ஜனநாயகம் அல்ல, இது ஒரு சர்வாதிகார ஆட்சி  என்று.

ஏனெனில் அத்துனை அதிகாரிகளும் மிரட்ப்படுகிறார்கள்.

சமீபத்தில் நடந்த 4  மாநில தேர்தலிலும் மோடியின் அதிகார துஷ்பரயோகம் நடந்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது...

இவண்.
இந்திய நாட்டின் அடிமைகளிள் ஒருவன்...

நம் வேதனைகள் அனைத்தும் இவர்களுக்கு இயல்பாக உள்ளது...


காவிரிக்காக இளைஞர் தீக்குளிப்பு...


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் என்பவர் இன்று காலை விருதுநகர் விளையாட்டு மைதானம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

உடனே அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

90 சதவிகிதத்துக்கு மேல் தீக் காயம் அடைந்துள்ள அவருக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

விபச்சார ஊடகங்களை நம்பாதே...


ஆஷிஃபாவுக்கு நீதி வேண்டும்...


காவிரி வாரியம் அமைக்காததை கண்டித்து விருதுநகரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி...


80% தீக்காயமடைந்த சரவணன் சுரேஷ் என்பவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதி...

அவ்வளவு வெட்கமா இருந்தால் உன் சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு போயிடு நாயே...


1990 இல் தனித்தமிழ்நாடு மாநாடு...




தமிழகத்தில் தமிழ்தேசிய எழுச்சி ஏற்படும்போதெல்லாம் தமிழ்பேசும் வந்தேறிகள் திராவிடம் என்ற பெயரில் உள்ளே புகுந்து பார்ப்பன வெறுப்பைத் தூண்டி எப்படியெல்லாம் குழப்பி மடைமாற்றுவார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

மேலும்,28 ஆண்டுகளுக்கு முன்பே சுப.வீ திராவிடம்தான் தமிழ்தேசிய உணர்வை மழுங்கடித்து வந்துள்ளது என்பதை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

இப்போது அப்படியே தலைகீழாக மாறி நிற்கிறார்.

என்னவொரு பச்சோந்தித்தனம்?

படம்: துக்ளக் 15.03.1990
தலைப்பு: இலக்கு - பிரிவினை; வழி - வன்முறை...

சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த சென்னை ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்...


சாவு வருவதற்கு முன்னும் வந்த பின்பும் உயிர்களை அச்சுறுத்தியோ அன்பு காட்டியோ அழைத்து செல்லும் அந்த 3 நபர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர்களை எங்கே அழைத்துச் செல்கிறார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வோம்...


இத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரும் துணையாக இருப்பது புராணங்கள் ஆகும்.  புராணங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டால் உண்மைகளை முழுமையாகக் கண்டறிய முடியுமா?  அது நம்பத்தகுந்த வகையிலும் அமையுமா?  என்றெல்லாம் சந்தேகம் எழுவது இயற்கையானதுதான்.

காரணம் மிகைப்படுத்திக் கூறல் என்பது புராணங்களில் மிகுதியாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  ஆயினும் புராணங்கள் முழுமையான கட்டுக்கதைகள் என்று ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. 

காரணம் புராணங்களில் கூறப்பட்டு இருக்கும் பல சம்பவங்களுக்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் பல நவீன விஞ்ஞானத்தால் கண்டறியப் பட்டுள்ளது. 

எனவே புராண விஷயங்களை பக்க சார்பற்று அலசி ஆராய்ந்து எடுத்த பல விஷயங்களை உண்மையென நம்பி அடுத்த விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்துச் செல்ல மூன்று நபர்கள் வருவதாக இறந்தவர்களுக்கும் இறப்பில் இருந்து உயிர்ப்பித்து எழுந்தவர்களும் கூறுகிறார்கள். 

யார் அந்த முன்று நபர்கள்?  கிருஸ்துவம் அந்த 3 பேரையும் தேவதூதர்கள் என்கிறது.  இந்து மதமோ அவர்களை மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள் என்கிறது.

யார் இந்தக் கிங்கரர்கள்?  இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களின் வேலை என்ன?  கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.  அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச் செய்வதே அவர்களின் பணி என்றும் மாறுபடுத்திக் கூறினாலும் பைபிளும் குரானும் இதே மாதிரியான விளக்கங்களையே இவர்களைப் பற்றித் தருகிறது.

மேலும் இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது.  உயிர்கள் புரிந்த நன்மை தீமைகளை விசாரிப்பதும் அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் யக்ஷர்களின் வேலை என்றும் பழமையான நூல்கள் பலவற்றில் காண முடிகிறது.

உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதைக் கருடபுராணம் கவிதா லாவண்யத்தோடு விவரிப்பதைப் பார்ப்போம்.  செடியிலிருந்து மலரைக் கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.  தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த இடத்திலேயே விட்டு வரும் படியும் மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.

உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80 000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக் கொண்டு விட்டு விடுவார்கள்.  இப்படி யமலோகம் சென்ற ஜீவன்  மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.

காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால் மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.  செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள்.  அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள் பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள்.  அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.  தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள். அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். உடல் மீது விழுந்து அழுத்துவார்கள்.  இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும்.  இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள்.

உடல் மயானத்தைச் சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல் வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து பதைபதைத்து துடிக்குமாம்.  மிகப் பழமையான பெயர் தெரியாத ஏட்டு சுவடி ஒன்றில் சில மந்திரங்களைக் குறிப்பிட்டு அம்மந்திரங்களை முறைப்படி உரு ஏற்றினால் சிதைக்கு மேலே நின்று துடிக்கும்  ஆவி உருவை நேரில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.  உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.  காற்றில் மிதக்கும் வெண்மை அல்லது கருமை நிற புகை போன்ற வடிவத்திலேயே ஆவிகள் இருக்கும்.  இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.  ஆவிகளை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்கள் வெண்பனி போன்றோ கரிய புகை வடிவிலோ ஆவிகளைப் பார்த்ததாகத்தான் கூறுகிறார்கள்.  மிகச்சிலர் மட்டுமே பௌதிக வடிவில் ஆவிகளைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள்...

ரீபப்ளிக் ஆஃப் தமிழ்நாடு...


அணுமின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி...


காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்த டில்லி (33) என்ற ஊழியர் பலி...

கர்நாடக காமடி கலாட்டா...


மனோசக்தியின் திறவுக்கோள் ஆல்ஃபா...


நம்மில் பலருக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது? ஆனால் சிலருக்கு மட்டும் வெற்றிகள் தொடர்கிறதே. இது எப்படி சாத்தியமாகிறது? என்று சிந்திக்கும் போது, பலரும் விடையாக கூறும் சொல் அதிர்ஷ்டம்.

ஆனால் அதிர்ஷ்டம் தொடர்ந்து வருமா.. என்றோ, ஒருவரின் தொடர் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை குறித்தோ, யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனெனில் ஒருவரின் வெற்றியும், அதனால் ஏற்படும் விளைவு களை மட்டுமே நாம் கருத்தில் கொள்கிறோம்.

உண்மையில் எல்லா வெற்றியாளர்களும் ஒரே சித்தாந்தத்தை கடைபிடிக்கின்றனர். அது தன்னை உணர்தல். இதற்காக அவர்கள் எந்தவித விசேட பயிற்சியையும் மேற்கொள் வதில்லை. தியானத்தை மட்டுமே பின்பற்றுகிறார்கள். அதிலும் ஆல்பா என்ற தியான பயிற்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்த வெற்றிகளை தொடுகிறார்கள். இதை வாசிக்கும் போதே நம்மில் பலருக்கு ஆல்பா என்றால் என்ன? அறிய ஆவலாக இருக்கும்.

ஆல்பா மைண்ட் பவர் என்றால் என்ன?

நமது மூளையின் குறிப்பிட்ட வேக நிலையைத்தான் ஆல்பா என்கிறோம். நமது மூளை இயங்கி கொண்டிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவில் மின் அலைகளை வெளிப்படுத்துகிறது. இதனை அடிப்படையாக கொண்டு அறிவியலாளர் கள் ஆய்வு செய்து, மூளையின் வேகத்தை நான்கு வகையாக பிரித்திருக்கிறார்கள். இதற்கு பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் பீட்டா என்பது நாம் அனைவரும் வேகமாக பேசுவது, சமைப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளை செய்வதை குறிக்கிறது என்றும், இந்நிலையில் மூளையின் செயல் வேகம் 14 சைக்கிள் வேகத்திற்கு மேல் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். இதே சமயத்தில் நமது மூளையின் வேகம் 14 சைக்கிளிலிருந்து 7 சைக்கிள் என்ற வேகத்தில் இயங்கினால், அதற்கு ஆல்ஃபா என்றும், ஏழு முதல் நான்கு சைக்கிள் வேகத்தில் இயங்கி னால் அதற்கு தீட்டா என்றும், 4 முதல் பூஜ்ஜி யம் வரை இயங்கினால் அதற்கு டெல்டா என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நான்கு நிலைகளில் மனிதனுக்கு சக்தி தரும் நிலை எது எனில் ஆல்பா நிலை தான். ஏனெனில் இந்த நிலை தான் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும். ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலிருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல.

இதை எளிமையாக சொல்ல வேண்டுமா னால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கை யாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத் தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக் கும். ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண்ணற்ற காரியங்களை சாதிக்கலாம்.

ஆல்பா மைண்ட் நிலைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் எவ்வகையான தொடர்பு உள்ளது? மனிதனுக்கு பயம், தயக்கம் ஏற்படும் போதும், தொடர் தோல்விகளை சந்திக்கும் போதும் தன்னம்பிக்கையும், ஊக்கமும் குறை யும். ஆனால் தினமும் 15 முதல் 20 நிமி டம் வரை, இந்த ஆல்பா தியானத்தை தவறாமல் செய்யும் போது, மனதில் சந்தோ ஷமும், தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சி யும் தானாகவே ஏற்படும்.

ஒரு மனிதனின் பலம், பலவீனம் இவற்றில் நீங்கள் கூறுகின்ற ஆல்ஃபா பவர் எதை மேம்படுத்தும்? இரண்டையுமே மேம்படுத்தும். மனம் சோர்வடைந்தால் உடலும் சோர்வாகி விடும். ஆல்பா தியானத்தை பழகப் பழக, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகு வதைக் காணலாம். இதனால் இருமல், ஜுரம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமடைவதாக இப் பயிற்சியை மேற்கொண்டவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது இந்த தியான முறையை பின்பற்றுவதால், உடல்ரீதியாக எந்த குறை வும் ஏற்படுவதில்லை என்று ஊறுதியாக கூறமுடியும். மேலும் மன பலம் அதிக ரித்து, சிந்திக்கும் திறன், முடிவெடுக் கும் திறன் ஆகியவை சிறப்பாக அமை வதை பழகப் பழக உணரலாம். உதாரணமாக மேடைப் பேச்சு என்றாலே ஒருவித தயக்கம் கொண்டவர்கள், இந்தப் பயிற்சியை செய்தால், சரள மாகவும், சாதூரியமாக வும் பேசுவதைக் காணலாம். ஒருவருக்கு எந்த நிலையில் இந்த ஆல்ஃபா தியானம் அவசிய மாகிறது?

தங்களது உடலில் இது போன்ற சக்தி இருக்கிறது என்பதை உணர, தினசரி 15 முதல் 20 நிமிடம் வரை இந்த பயிற்சியை பழகினாலேயே நமக்குள் ஏற்படும் மாற்றத்தை உணரலாம். இதன் மூலம் நாம் எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனோபலம் பெறுவதையும், நமது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு தன்னம்பிக்கை அதிகரிப்பதை யும், நமக்குள் ஏதோ சக்தி இருப்ப தையும், இது உணர்த்துவதால் ஒவ்வொ ருவ ருக்கும் இது அவசியமாகிறது.

ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் ஆகியவற்றிலிருந்து ஆல்பா நிலை எவ்வாறு மாறுபடுகிறது? ஆல்பா நிலை தியானம் இவை இரண்டிலுமிருந்து முற்றிலும் மாறுபட்டது. மெஸ்மரிசம் என்பது பிறர் மனதை தன்வசப்படுத்தி, தான் நினைப்பதை அவர் மூலம் செய்யவைப்பது. இது பெரும்பாலும் நல்லெண்ண அடிப்படையில் செயல்படுத்து வதில்லை. மேலும் இது ஒரு தவறான முறையும் கூட. ஹிப்னாடிசம் என்பது ஒரு மனோதத்துவ சிகிச்சை முறை. மனநல மருத்துவர் தனது நோயாளியின் மனதை அறிந்து, அதற்கேற்ற சிகிச்சை ஹிப்னாடிசம் முறையை அளிப்பதற்கானது. சிலர் ஆல்பா நிலையை செல்ப்ஹிப்னாடிசம் சுயஹிப்னாடிசம் என்கின் றனர். இது தவறு. ஏனெனில் அறிவியல் பூர்வமாக பார்த்தால், ஆல்பாவின் நிலை 7முதல் 14 சைக்கிள், ஹிப்னாடிசத்தின் நிலை என்பது 0 முதல் 7 சைக்கிள், அதாவது தீட்டாவின் நிலை.

ஆல்பா நிலை வெறும் பயிற்சி கிடை யாது. ஆன்மிக வளர்ச்சிக்கும், தன்னை உணர்வதற்கும், நாம் ஏன் பிறந்தோம் உள் ளிட்ட சிக்கலான கேள்விகளுக்கும் தெளி வான முறையில் விடை பெறுவதற்கு உதவுவது.

சுய முன்னேற்றக் கட்டுரை எழுது பவர்கள், படிப்பவர்கள் சொல்வது என்ன வென்றால் இது போன்ற தியானங்களை பழகுவதால் சுய முன்னேற்றம் இருக்காது, போதும் என்ற மனதை உருவாக்கும் என் கிறார்கள். இது எந்த வகையில் உண்மை?

அது உண்மை தான். போதும் என்ற மனநிலை வந்தால் நமக்கு உழைக்கப் பிடிக்காது. முயற்சியும் செய்ய மாட்டோம். ஆனால் ஆல்பா நிலை தியானத்தில், ஆழ் மனது திறந்திருக்கும் போது, மனம் அமை தியடைந்த சூழ்நிலையில், நமது பொருள் ஆசைகள், கனவுகள், பொருள் சார்ந்த இலட்சியங்கள் என்று எதை விரும்பினாலும் நிறைவேறும்.

இதை விட ஆழ்நிலையான தீட்டா, டெல்டா நிலைகளுக்கு நமது சித்தர்கள் சென்றார்கள். டெல்டா என்பது சமாதி நிலை, அவர்கள் ஆசை அற்றவர்கள்.

இந்த ஆல்ஃபா நிலையில் இருக்கும் போது, ஒரு தனி மனிதன் தனக்கு என்னென்ன தேவையோ அது குறித்து சிந்தித்தால், அது ஆழ்மனதில் தங்கி, நமக்கு அந்த இலக்கை அடைய பெருமளவில் உதவும். அதனால் இந்த தியானத்தில் போதும் என்ற மனதை உருவாக்குகிறோம் என்று கூற முடியாது.

ஆல்பா மைண்ட் நிலை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறதா? எம் மாதிரியான விழிப்புணர்வு தேவை?

விழிப்புணர்வு ஓரளவிற்கு வந்துள்ளது. பல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நாம், அதற்குரிய தீர்வை நோக்கி, நமது தேடலைத் தொடருகிறோம். இதற்காக சில சாமியார்களிடமும், மந்திரவாதிகளிடமும் செல்கிறோம். ஆனால் இந்த முறையை விட, ஆல்பா தியானத்தை தொடர்ந்தோமானால், நாம் எங்கும் செல்லாமலே, நமக்குள் உள்ள சக்தியை உணர்ந்து, சுயமாக சிந்திக்கத் தொடங்கி விடுவோம். இதற்குரிய சக்தி ஆல்பாவிற்கு உள்ளது.

ஆல்பா தியானம் எந்த வயதில் பின்பற்றலாம்?

நாம் தியானம் செய்யும் போது, குழந் தையை அருகில் அமர வைத்து, தியானம் செய்வதைக் கவனிக்கச் செய்யலாம். பத்து வயதாகும் போது, முறைப்படி கற்றுக் கொடுக் கலாம்.

ஆன்மிகம், மூட நம்பிக்கை, மதம் இம்மூன்றின் விளைவுகளிலிருந்து ஆல்பா எம்மாதிரியாக வேறுபடுகிறது?

ஆல்பா நிலை, எந்த மதக் கோட்பாடுகளுக் குள்ளும் வராது. மதம் சாராதது. கர்ம வினைகளின்படி தான் நாம் ஒரு குறிப்பிட்ட மதபின்னணியில் பிறக்கிறோம். மதம் என்பது ஒரு டிசிப்ளின். கோட்பாடு. எல்லா மதமும் நல்லனவற்றைத் தான் வலியுறுத்துகின்றன. மதம் மனிதனுக்கு சில சடங்கு, சம்பிரதா யங் களை மட்டுமே கற்பித்திருக்கின்றது. ஆனால் இப்படி தான் சிந்திக்கவேண்டும் என்று வலியு றுத்தவில்லை. பயிற்சி வகுப்புகள் எல்லாமே ஒரே நாள் தான். அது தான் எல்லோருக்கும் சவுகரியமாக இருக்கிறது. ஒரே நாளில் பல வகுப்புகள் எடுத்து, அவர்களையே இதற்கான செயல் முறையை, நடைமுறைப் படுத்த பயிற்சி அளித்து விடுகிறோம். ஒவ்வொரு துறைக்கும் அத்துறை சார்ந்த திறமைகள் வேண்டும். ஆன் மிகம் அப்படி அல்ல. இந்தத் துறையில் ஈடுபடுவது என்பது நான் எடுத்த முடிவு அல்ல. எனக்குள் இருக்கும் சக்தி எடுத்த முடிவு. நான் பல விட யங்களையும், அனுபவங் களையும், தியானத்தால் கற்றுக் கொண்டேன், தியானத்தால் பல விடயங்கள் நடந் தன. இதையே மற்றவர்களுக்கும் சொல் லிக் கொடுத்து அவர்கள் வாழ் க்கை யிலும் மாற்றம் கொண்டு வரலாம் என்ற எண்ணம் 2005-ல் வந்தது. ஏதோ ஒரு சக்தி என்னைப் பயன்ப டுத்திக் கொண்டி ருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது ஏழுவிதமான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கின்றோம்.

ஆயிரக்கணக்கானோர் பயி ற்சி பெற்று பலன் அடை கின்றார்கள். இதற் காகத் தான் நான் பிறந்தேன் என்று எண் ணுகி றேன். மற்ற துறைகளில் நான் ஈடுபட்ட போது இல்லாத திருப்தி, இந்தத் துறையில் தான் ஏற்பட்டுள்ளது. எனக்குள் மாறுபாடான எண்ணம் ஏற்படவில்லை. ஆன்மா, ஆன்மிகம் இரண்டிற்கும் ஆண், பெண் பேதமில்லை, என்னால் வீட்டையும், குடும்பத் தையும் பார்த்துக் கொண்டு, இதையும் பார்த்துக் கொள்வது என்பது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

ஒவ்வொரு எண்ணமும் ஒரு சக்தி பெறுகிறது. அதனால் எண்ணங்களை செழுமைப் படுத்த வேண்டும். தவறான எண்ணங்களுக்கு இடமளிக்கக் கூடாது...

Zambiaவில் புது Stertile ஆலை அமைக்க அணில் அகர்வால் அந்நாட்டு அதிபரை சந்தித்தார்...


டி.எம்.சி என்றால் என்ன தெரியுமா?


Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.
ஒரு  டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.

கன அளவு : ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும். அப்படியெனில் ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.

டிஎம்சி அளவிடும் முறை...

கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள்...

ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.

கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் நன்மை தீமைகள்...

கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.

கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232(சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

தமிழ் நாட்டின் மொத்த விவசாய விளை பரப்பளவு...

தமிழகத்தில் மொத்தம் 22.3 லட்சம் ஹெக்டேர் பாழ்பட்ட நிலம் இருப்பது வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

காவிரி நீரால் தமிழ்நாட்டில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 44,000 சதுர கி.மீ.

காவிரி நீரால் கர்நாடகாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு 34,000சதுர கி.மீ.

காவிரி நீரால் புதுச்சேரி பாசனம் பெறும் நிலப்பரப்பு 148 சதுர கி.மீ.

காவிரி கேரளாவில் பாசனம் பெறும் நிலப்பரப்பு2,800 சதுர கி.மீ.

நெல் பயிர் சாகுபடிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 20,000 முதல் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பான இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கும் நீரின் அளவு 14 டிஎம்சி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதால் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாயம் பாதிக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்...

சிரியாவில் ஏவுகணை போர்...


வெல்டன் சிம்பு...


கடந்த ஞாயிற்றுக்கிழமை திரைத்துறையினரால் காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட்டுக்கு தடை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மெளன போராட்டம் நடைபெற்றது.

இதில் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளவில்லை. மாறாக, பத்திரிகையாளர்களை மாலையில் சந்தித்து பேட்டி கொடுத்தார்.

அப்போது பேசிய அவர், வரும் 11-ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 6 மணிக்குள் கர்நாடகாவில் இருக்ககூடிய எனது தாய், தந்தை, அண்ணன், தம்பி என நினைக்கூடிய அத்துனை கர்நாடக மக்களும் ஒரு கிளாஸ் டம்பளரில் தண்ணீர் எடுத்து தமிழர் ஒருவரிடம் கொடுத்து, தண்ணீர் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று விடியோவாக பதிவிடுங்கள். இதைச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு தண்ணீர் தர விருப்பமில்லை என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

இதை Unite for humanity என்ற ஹெஷ்டாக்குடன் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை உணர்த்தும் விதமாக பதிவிடுங்கள்.

ஏனென்றால் இந்த விவகாரம் தொடர்பாக இங்கு நடைபெறும் போராட்டம், மறியல் போன்ற அரசியல் விளையாட்டுகள் போதும்.

நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்பதால்தான் இதைச் சொல்கிறேன். என் சகோதர, சகோதரிகள் போன்றவர்களான கர்நாடககாரர்களிடம் தண்ணீர் கேட்க சண்டை போட வேண்டுமா? என்று உணர்ச்சிமக்க கூறினார்.

இதைத்தொடர்ந்து சிம்புவின் பேச்சு வைரலாக பரவிய நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் சிம்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் அவர் பேசிய இந்த விடியோவை பரவலாக ஷேர் செய்தனர்.

இதையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு கூறியபடி, தமிழர்களுக்கு தண்ணீர் தர தயாராக உள்ளோம், விரும்புகிறோம் என்ற கூறி ஒரு கோப்பை தண்ணீருடன் கர்நாடக மக்கள் பலர் விடியோவை வெளியிட்டு வருகின்றனர்...

இந்தியாவுலேயே ... ஏன் இந்த உலகத்துலேயே சொந்த நாட்டு மக்களுக்கு பயந்து சந்து பொந்துக்குள்ள கார ஓட்டிட்டு போற ஒரே தலைவன் நம்ம 56 மார்புதான்...


மூட்டுவலியை சரி செய்யலாம் வாங்க...


மூட்டுவலி என்பது இன்று மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

மூட்டு வலி இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று சுண்ணாம்பு சத்து (Calcium) குறைபாட்டால் ஏற்படுவது மற்றொன்று மூட்டின் பசை குறைந்து விடுவதால் மூட்டு வலி ஏற்படுகிறது.

எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே சுண்ணாம்பு சத்து குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சுண்ணாம்பு சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது. 

என்னவெல்லாம் சாப்பிடலாம். பால், முட்டை, மீன், பேரிச்சம்பழம், புளிப்பு சம்மத்தப்பட்ட பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

எனவே சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு மூட்டுவலியை சரி செய்து விடலாம்...

பண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்...


அனைத்து சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டவையாகவே இருக்கின்றன என்றும் அவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு சில விடயங்கள் பொதுவாக இருக்கத் தான் செய்கின்றன என்றும் நாம் கூறினோம் என்றால் அவற்றுக்கு தக்க சான்றுகளையும் நாம் காண்பிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமைகளை நாம் காண்பிக்கத் தவறினோம் என்றால் நமது கூற்றுகள் வெறும் பெயரளவுக் கூற்றுக்களாகவே சென்று விடும். எனவே இப்பொழுது நமது பயணத்தில் மேலும் சில ஒற்றுமைகளை நாம் காண வேண்டி இருக்கின்றது.

ம்ம்ம்ம்... இம்முறை நாம் எங்கிருந்து பயணத்தை தொடங்கலாம்...? சரி... சிந்து சமவெளியில் இருந்தே தொடங்கலாம்... சென்ற முறை நாம் சிந்து சமவெளியை பற்றி கண்டப் பொழுது அந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றும் அங்கிருந்தே சென்ற மக்கள் மேசொபோடமியா மற்றும் சுமேரிய நாகரீகத்தினை உருவாக்கினர் என்றக் கருத்துக்களை மையமாக வைத்தே கண்டதால் அங்கே மக்கள் கொண்டு இருந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி நாம் காண முடியாது சென்று விட்டது. கவலை இல்லை...அவற்றை இப்பொழுது காண்போம்.

சிந்து சமவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாக பல விடயங்கள் நம்முடைய பார்வைக்கு வந்து உள்ளன. முதலில் அந்த இடங்களில் அதிக அளவில் நினைவுக்கற்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் கல்லினை நட்டி வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம் என்று. இதனையே ஆராய்ச்சியாளர் இரா. ஜெசிந்தர் எபினேசர் என்பவரும் அவரது 'நினைவுக்கல் வழிப்பாடும் விவிலியமும் என்ற நூலில் பின் வருமாறு கூறுகின்றார்

அக்கற்கள் ஆனவை பொது நன்மையின் வடிவாக விளங்கும் இறைவனையும் பொது நன்மையின் பொருட்டு தன்னையே தியாகம் செய்த மனிதனையும் நினைத்துக் கல் கட்டி வழிபடுவது நினைவுக்கல் வழிப்பாடாகும்.

மேலும் இந்த நினைவுக் கல் வழிபாடே இசுலாமிய சமயத்திலும் காணப்படுகின்றது என்றே 'இசுரவேளர் சமயம்' என்ற தனது நூலில் ஞான ராபின்சன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

பழங்கால அரபுக் கோவில்களில் அப்புனிதக் கல், தொழுகைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல் ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பதாக இராமல் அனைத்துக் கடவுளையும் குறிப்பிட்டு நின்றது. கற்களின் மேல் இரத்தம் பூசப்பட்டது.

இந்த நினைவுக் கல் வழிபாட்டு முறை தான் சமணம் மற்றும் புத்த சமயங்களில் 'தூபி' என்று பெயர்பெற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் 'கந்து' என்று பெயர் பெற்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அட என்னய்யா இது நினைவுக் கல் அப்படின்னு கேட்குறீங்களா... அட அது வேற ஒண்ணும் இல்லைங்க இன்று நாம் சிவலிங்கம் என்ற பெயரில் வழிபடுகின்றோமே அதேக் கல் வழிப்பாட்டு முறை தான் அந்தக் காலத்தில் நினைவுக் கல் வழிபாடு என்ற பெயரில் இருந்து இருக்கின்றது.

மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை கல்லினை நட்டி வைத்து வணங்கி வந்தனர். இந்தப் பழக்கம் அனைத்து நாகரீகங்களிலும் பொதுவாக இருந்தமையை நாம் முந்தையப் பதிவுகளில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் சிவலிங்கம் என்றப் பெயர் தோன்றி இருக்காத காரணத்தினால் நாம் அக்கல் வழிப்பாட்டு முறையினை நினைவுக் கல் வழிப்பாட்டு முறை என்றே நாம் இந்தப் பதிவில் அழைக்கின்றோம்.

சரி... நினைவுக் கல் வழிபாடு சிந்து சமவெளி மக்களிடம் இருந்தது... சுமேரிய மக்களிடமும் இருந்தது... அதனைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்திலும் காணப்படுகின்றது என்பதனையும் நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இன்னொரு ஒற்றுமைகளையும் நாம் கண்டு விடுவோம்...

சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் பல பெண் தெய்வங்களின் வடிவங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல உருவங்கள் கொம்பினை உடைய உருவங்களாகவே காணப்படுகின்றன. கொம்புகள் அந்த உருவங்களின் தெய்வத்தன்மையை உருவகப்படுத்துவதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அத்தகைய கொம்பினை உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் சரி விவிலியத்திலும் சரி ஒன்று போலவே நமக்கு கிட்டப்பெருகின்றன. இதனை

சிந்துவெளியில் கொம்புடன் காணப்படும் உருவங்களை ஒத்து, சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் கொம்புடைய உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு இக் கொம்பு அரசனையோ, குருவையோ, கடவுளையோ குறிப்பதாக கொள்ளப்பட்டு இருக்கின்றது. என்று சான் மார்ஷல் அவர்கள் அவரது ; மோகஞ்சடாரோவும் சிந்து சமவெளி நாகரீகமும் என்ற புத்தகத்தில் கூறி உள்ளது மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.

மேலும் இன்றும் கூட இந்தியப் பழங்குடி மக்களுள் தலைவராக உள்ளவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து இருப்பதும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க

இன்றும் நம்முடைய சமுகத்தில் ஒரு சொற்தொடர் நிலவிக் கொண்டு இருக்கின்றது மேலே உள்ள வாக்கியத்தினை மெய்ப்பிப்பது போல.

"நீ என்ன பெரிய கொம்பனா டே...? "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு" என்ற வாக்கியங்கள் தான் அவை. உற்றுப் பார்த்தோம் என்றால் அவற்றின் அர்த்தம் 'நீ என்ன பெரியவனா' என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பெரியவன் என்ற மறைமுகப் பொருளினையே அவை தருகின்றன. இந்தச் சொற்தொடர் என்றில் இருந்து நம்மிடையே இருக்கின்றன... தெரியவில்லை... இருந்தும் இவையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கவையே.

சரி... சிந்துசமவெளியில் கிடைக்கும் கொம்புகள் உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் பாபிலோனிய நாகரீகத்திலும் கிடைக்கின்றன... ஆனால் விவிலியத்திலும் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன என்றுக் கூறினீர்களே அது என்ன என்றுக் கேட்கின்றீர்களா... சரிதான் அதையும் கண்டு விடலாம். முந்தையப் பதிவுகளில் நாம் கண்டது போலவே மீண்டும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பக்கங்களை நாம் இதற்காக திருப்ப வேண்டி இருக்கின்றது.

யோசேப்பின் அலங்காரம் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகள் போலவும் இருக்கும். அவைகளாலே சனங்களை ஏகமாய்த் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான் - உபாமகம் (33:17).

சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; - மீகா (4:13).

அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்; - புலம்பல் (2:3).

மேலே உள்ள இவ்வரிகள் மூலமாக கொம்புகள் ஆற்றலையும் அரசாட்சியையும் குறிப்பதாக இசுரவேலரின் சமயத்திலும் விளங்கியதை நாம் அறியலாம்.

சரி... பழைய நாகரீகங்களுள் நினைவுக் கல் வழிபாடும் ஒன்றுப் போலவே இருக்கின்றது... கொம்பு வைத்த உருவங்களும் சரி அவற்றிற்குரிய அர்த்தங்களும் சரி ஏறக்குறைய ஒன்றுப் போலவே இருக்கின்றது... இவற்றைப் போலவே இன்னும் பல பழக்கங்கள் அந்த பழைய நாகரீகங்களுக்குள்ளே பொதுவானதாக விளங்குகின்றன.

மர வழிபாடு, விலங்குகள் வழிபாடு , இயற்கை தெய்வங்கள் வழிபாடு, மலைகளில் இறைவன் இருப்பதாக நம்பிக்கை... மேலும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் இந்த நாகரீகங்களுள் ஏறக்குறைய ஒன்றைப் போலவே இருக்கின்றன. அட மறந்து விட்டேன்... உலகத் தோற்றக் கதையும் வெள்ளத்தால் உலகம் அழிந்தக் கதையும் கூட இவற்றில் ஒரே போலவே இருக்கின்றன.

இந்த ஒற்றுமைகள் தற்செயலானவையா அல்லது ஒரு இடத்தில தோன்றிய மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தமையால் அவர்களுடனேயே இந்தப் பழக்கங்களும் நகர்ந்தமையால் காணப்படும் ஒற்றுமைகளா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. அது அவர்கள் கடமை... அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.

நாம் இப்பொழுது அறிந்துக் கொள்ள வேண்டியது பண்டைய காலத்தில் மக்களிடையே பல பழக்க வழக்கங்கள் ஒன்றுப் போலவே இருந்து இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சிகளை இன்றும் நமது சமுகத்தில் நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதே.

பயணம் தொடரும்....

பி.கு:

இந்தத் தகவல்கள் நான் தெ. தேவகலா என்பவரது 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்னும் ஆராய்ச்சி நூலின் இருந்தே அறிந்து கொண்டவைகளாகும்...

மானங்கெட்ட மராட்டிய ரஜினி...


சில கேள்விகள் சில பதில்கள்...


கேள்வி : தோமா தமிழ்நாட்டில் கிறித்துவம் பேசினால், பிள்ளையார் – கிறிஸ்து ஒன்று என்றால் பிள்ளையார் தமிழ்நாட்டில் தானே தோன்றியிருக்க வேண்டும்? அதுவும் தோமையார் வந்து கொஞ்ச காலத்தில்? ஆனால், பிள்ளையார் தமிழ்நாட்டிற்கு வந்ததே 10-ம் நூற்றாண்டு. இதற்கு என்ன விளக்கம் சொல்கிறீர்கள்?

பதில்: தோமா தமிழகத்திற்கு மட்டுமே வரவில்லை. அவர் 20 வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றி கருத்துக்களை பரப்பி இருக்கின்றார். சரி இப்பொழுது பிள்ளையார் வடக்கில் இருந்து தெற்கே வந்ததன் காரணத்தினைக் காண்போம்.

அதற்கு முன் கீழே உள்ள படத்தைக் காண்போம்...

காண்பதற்கு பிள்ளையாரினைப் போன்றே தோற்றம் கொண்டு இருந்தாலும் இவர் பிள்ளையார் இல்லை. இவர் பார்சுவநாதர்.

சமண சமயத்தின் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர். காலம் ஏறக்குறைய கி.மு ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. இவர் மகாவீரருக்கு முந்தியவர். இவருக்கு சமண சமயத்தில் பல கதைகள் கூறப்படுகின்றன.

அவற்றில் ஒன்றில் இவர் ஒரு பிறவியில் யானையாக பிறந்ததாகவும் அப்பிறவியில் இவரின் பகைவன் பாம்பாகப் பிறந்து இவரின் தலையில் கொட்டி இவர் அமைதியாக மரணமுற்றதாகவும் கூறப்படுகின்றது.

அக்கதையின் படியே இவருக்கு யானைத் தலையும் தலைக்கு மேல் பாம்பு நிற்பது போலவும் வடிவம் அமைந்து இருக்கின்றது. மேலும் யானையை வழிப்பட்ட சில குழுக்களும் வட இந்தியாவில் இருந்து இருக்கின்றனர். நிற்க.

இந்நிலையில் தான் பிற்காலத்தில் கிருத்துவின் கருத்துக்களை சுமந்துக் கொண்டு தோமா இந்தியா வருகின்றார். புது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுவும் அவர்களின் பழக்க முறைக்கு ஏற்றார் போலவே கொண்டு செல்ல வேண்டும்.

இந்நிலையில் தான் இறைவன் மக்களுக்காக தன் உயிரினைத் துறந்தான் என்ற செய்தியை பரப்ப மக்களிடம் அன்று இருந்த யானை வழிபாடு முறையையும் பர்சுவனாதரின் இந்தக் கோலத்தையும் மக்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்றே நாம் கருத முடிகின்றது. இதன் அடிப்படையில் தான் பிள்ளையார் வடக்கே இருந்து தெற்கே வருகின்றார்.

கேள்வி: சைவ வைணவம் மட்டுமே இந்து சமயங்களாக பண்டைய தமிழகத்தில் இல்லை அல்லவா. அப்படி இருக்க அவற்றினை நாம் சைவ வைணவ சமயங்களாக கருத முடியுமா?

பதில்: உண்மை தான் நண்பரே. இந்து சமயங்கள் எனப்படுபவை மொத்தம் ஆறு சமயங்கள் ஆகும். ஆனால் அவற்றில் நான்கு சமயங்களுக்கு சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கின்றார்.

இரண்டிற்கு விஷ்ணு இருக்கின்றார்.

சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்..

சைவம் - சிவன் - அம்மை - மகன்
சாக்தம் - சிவன் - சக்தி - மகன்
கௌமாரம் - சிவன் - சக்தி - குமரன்
காணாபத்தியம் - சிவன் - சக்தி - கணபதி

விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்..

வைணவம் - சிவன் - விஷ்ணு - பிரமன்
சௌரம் - சிவன் - விஷ்ணு - ஐயப்பன்.

அனைத்து சமயங்களும் சிவன் அல்லது விஷ்ணுவையே சார்ந்து இருப்பதால் இவை அனைத்தையுமே நாம் சைவ வைணவ சமயங்களாக கருதலாம்.

கேள்வி: இந்து சமயத்தின் தத்துவம் சித்து - அசித்து - ஈசுவரன் அல்லது பதி - பசு - பாசம் தானே. இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடுக்கு வேறானதாக அல்லவா இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடு எவ்வாறு சைவ வைணவ சமயத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்றீர்கள்.

பதில்: நண்பரே... பதி-பசு-பாசம் என்பதோ அல்லது சித் - அசித் - ஈசுவரன் என்ற தத்துவங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். ஆனால் மூ ஒருமைக் கோட்பாடோ இறைவனின் நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். இதனை விளக்க பின் வரும் பாடல்களைக் காண்போம்.

மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ  செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.  - திருமங்கை ஆழ்வார் (3-1-10).

அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.  - சிவஞானசித்தியார்(1:38)

மேலே கண்ட வரிகள் மூலம் இறைவன் ஒருவன் தான் ஆனால் மூன்று நிலையில் விளங்குகின்றான் என்ற அவர்களின் கருத்து விளங்குகின்றது.

இக்கருத்தும் கிருத்துவத்தின் கருத்தும் ஒன்று போல் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் இந்த ஒற்றுமை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.

சரி... கேள்விகள் இப்போதைக்கு போதும். மற்ற கேள்விகளுக்கு பதிலினை நம்முடைய பயணத்தில் பின்னர் காண முயற்சிப்போம்....

பாஜக மோடியின் முதலாளியான அம்பானி அவர்களே... இன்னும் எத்தனை லட்சம் கோடிகள் தேவைப்படும் உங்க பணவெறி அடங்க...?