08/07/2018

பிரபஞ்ச நாடோடி (Silver Surfer)...


வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.
வேற்றுகிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் எனறே பதிலளித்து வருகின்றனர்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி வேற்றுகிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் பிலெய்டன் என அழைக்கப்படும் வேற்றுகிரகவாசிகள் வடமேற்கு அர்ஜென்டினாவில் இருந்து 70 மைல் தூரத்தில் இருக்கும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பறக்கும் தட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் யுஎப்ஓ சார்ந்த பத்திரிக்கையில் தெரிவிக்கபட்டு உள்ளது. அர்ஜென்டினாவில் மொத்தம் 30 பிரிவினர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மற்ற பிரிவினர் பிரபஞ்சத்தின் மூலைகளில் இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.


வேற்றுக்கிரக புத்திஜீவிகள் தொடர்பிலான ஆய்வுகளும் மர்மங்களும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. ஆனால் அறிவியல் அறிந்த, கண்டுபிடித்த உண்மைகள் மட்டும் வெளிப்படுத்தப்படுவதில்லை.
அந்த வகையில் பூமிக்கு வேற்றுக்கிரக வாசிகளின் வருகைகள் இடம்பெற்று வந்ததாகவே விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்பவர்களின் நம்பிக்கை.
அதற்கான ஆதாரத் தேடல்களுக்கு மட்டும் குறைவில்லாமல் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் சிலி நாட்டு மலைப்பகுதியில் சராசரி மனித உயரம் கொண்ட மனித உடலமைப்பை ஒத்த எழும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. ஆஸ்கர் முனோல்ஸ் என்பவர் இதனை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இது குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதனால் மேலும் பல எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

பின்னர் ஸ்டீவன் கீரீயர் எனப்படும் ஆய்வாளர் மற்றும் எலும்பியல் டி.என்.ஏ நிபுணர் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதில் கிடைத்த ஆய்வு முடிவுகள் ஆச்சரியம் அளித்துள்ளது.

அதாவது குறித்த எலும்புகளோடு பூமிக்கு சம்பந்தப்படாத உலோகம் கலந்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் இதன் ஆய்வுகள் வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்பவர்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டு, வேறு கோணங்களில் ஆய்வுகள் நடாத்தப்பட்டுள்ளன.

அந்த ஆய்வுகள் மூலம் குறித்த எலும்புகள் வேற்றுக் கிரகவாசிகளுடையவை எனவும் அவர்கள் பூமிக்கு வந்து சென்றுள்ளார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த உயிரினம் சிரியஸ் எனப்படும் நட்சத்திரத் தொகுதிக்கு உரியவையாக இருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மிகப்பெரிய ஆதாரம் அதனால் வேற்றுக் கிரகவாசிகள் இருப்பது உண்மை எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...

அதிகாரம்...


அதிகாரம் என்பதுஒவ்வொரு அதிகாரியாலும்,தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட, அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான்.

உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும்.

ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது. தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.

நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான். கூடவே அது எப்படி  உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான்.

மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது.அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே  இருக்கிறான்.

சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான்.

அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.

மொழி, பாவனைகள், நம்பிக்கைகள் மட்டுமல்ல, முகமும் கூட பிறரைப் போல ஆகி விடுகிறது..

வணிகனே அறிகிறான்.. தேர்ந்தெடுக்கிறான்...




திமுக வின் 200 ரூபாய் போராளிகளை தோலுறித்து காட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ்....


தி.மு.க வுக்கு ஆதரவாகவும் மற்ற கட்சிகளுக்கு எதிராகவும்  வலைதளங்களில் பிரசாரம் செய்ய மும்பை நிறுவனம் ஒன்றிடம் தி.மு.க பணம் கொடுத்தது அம்பலமாகியுள்ளது...

வேற்றுகிரக உலோகம்...


உலோகம் – மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மிகவும் முக்கிய பங்கு வகித்தது, அதைதான் வரலாற்றாசிரியர்கள் “உலோக” வயது (Metal age) என்று அழைக்கின்றனர்.
மனித நாகரீகமானது செம்பு,
வெண்கலம் , மற்றும் இரும்பு என்ற வரிசையில் தான் உலோகங்களை கண்டுபிடித்து பயன்படுத்தி வந்துள்ளது. எனினும், ஒவ்வொரு நாளும் பூமிக்குள் இருந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.

பண்டைய ஆதாரங்கள் எல்லாமே நாம் நமது முன்னோர்களை தவறான முறையில் புரிந்துக் கொண்டுள்ளோம் என்பதையும் ஒருபக்கம் நிரூபித்துக் கொண்டே தான் போகிறது..

ஆனால் ஒரு பண்டைய கால உலோக பொருள் ஆனது இதுவரையில்லாத அளவிலான குழப்பத்தின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்கிறது அது தான் –
துட்டன்காமன் இரும்பு கத்தி..

துட்டன்காமன் (Tutankhamun) என்பவன் கிமு 1341 –கிமு 1323 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் ஆவான். இவன் கிமு 1333 முதல் கிமு 1324 வரை புதிய இராச்சியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான்.

துட்டன்காமன் தனது எட்டாவது அல்லது ஒன்பதாவது வயதிலேயே பாரோ ஆனான்.

பதவியேற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள்
துட்டன்காமனின் மம்மி கல்லறையில் இருந்து இரண்டு கத்திகளை கண்டுபிடித்தனர்,

அவற்றுள் ஒரு கத்தி மிகவும் விசித்திரமான முறையில்
உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதையும்
கண்டறிந்துள்ளனர்.


அதாவது, அந்த இரும்பு கத்தியானது பூமியில் உருவாக்கம் பெற்றது போல்
இருந்தாலும் அதில் உள்ள உலோகம் பூமியில் கிடைக்கின்ற பொருள் இல்லை, இன்னும் தெளிவாக
சொன்னால் அந்த கத்தியானது
விண்கல் துண்டுகளின் இரும்பில் இருந்து புனையப்பட்டது என்று
கூறுகிறார்கள் தடயவியல் ஆய்வாளர்கள். இது விண்வெளியில் உருவான கத்தி என்பதை நிரூபிக்கும்
வகையில் பண்டைய எகிப்தியர்கள், இந்த உலோகம் என்பது வானத்திலிருந்து வந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒன்று என அவர்களின் பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

விண்வெளி மற்றும் கிரக அறிவியல் ( Meteoritics and Planetary Science) விளக்கத்தின் கீழ் பண்டைய எகிப்தியர்கள் எப்போதுமே மிகவும் அரிதான கூறுகளை கொண்டுதான் பொருட்களை உருவாக்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

மறுபக்கம் சில ஆராய்ச்சியாளர்கள்,
கத்தியின் உயர்தர உற்பத்தி
நுட்பங்கள், அதிநவீன வடிவமைப்பு முறையை கண்டு, இது இரும்பின் கண்டு பிடிப்புக்கு முன்பே உருவான ஒரு கத்தி என்றும் நம்புகின்றன.

35 செ.மீ. நீளம் கொண்ட அந்த கத்திகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் அதில் துருக்கள் படியாமல் இருந்தது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

வேற்று கிரக அமைப்பு (extraterrestrial composition) கொண்ட கத்தியானது
வேற்றுகிரக வாசிகளால்
துட்டன்காமனுக்கு வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும், எகிப்தியர்களுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருந்ததற்கு இதுவும் ஒரு ஆதாரம் என்றும் பல சதியாலோசனை கோட்பாடுகள் உள்ளன.

மத்திய தரைக்கடல் பகுதிக்கு அப்பால் நிகழ்ந்ததாக பல பண்டைய கலாச்சாரங்களில் தெய்வீக செய்தியாக குறிப்பிடப்படும் விண்கற்கள் வீழ்ச்சியில் இருந்து தான் இந்த கத்தி உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற விளக்கமும் உண்டு...

பழைய நாடுகளும் அவறின் புதிய பெயர்களும்...


1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா ஃபாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வானா...

உண்மை என்றும் நிலைக்கும், காலத்தால் சாகாத உண்மையின் ஒளியில் பொய்யென்ற இருள் நீங்கும், பொய்யர்கள் மக்களால் இனங்கண்டு ஒதுக்கப்படுவர் - மேதகு.தலைவர்...


அதிமுக வும் டூபாக்கூர் வேலையும்...


ஒரே நாடு ஒரே வரி திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத அதிமுக, நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத அதிமுக, எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத அதிமுக, இப்படி மத்திய அரசால் கொண்டு வரப்படும் எந்தத் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிக்காத அதிமுகவினர் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். 2019 பாராளுமன்றத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள ஓபிஎஸ் & எடப்பாடி குரூப் எந்த எல்லைக்கும் செல்வர். மோடியையும் எதிர்க்கத் தயங்க மாட்டார்கள்...

5 மணி நேரத்தில் சுரங்கப்பதை அமைத்து ரயிலை இயக்கி சாதனை.. ரயில்வே துறையில் அதிசயம்...


விசாகப்பட்டிணம் அருகே கொட்டவல்சா மற்றும் பெந்திருத்தி இடையே எண் 484 ரயில்வே இருப்புப்பாதை செல்கிறது. இங்கு நான்கு இருப்புப்பாதை செல்வதால், எப்போதும் ரயில்கள் வந்து செல்லும் பரபரப்பான வழித்தடமாகும். இதனால், இப்பகுதி மக்கள் ரயில்வே இருப்புப்பாதையைக் கடக்க முடியாமல், அவதிப்படுவதும், அடிக்கடி ரயிலில் சிக்கி அடிபட்டு மக்கள் பலியாவதும் தொடர்ந்து வந்தது.

இதையடுத்து இந்தப் பாதையில் சுரங்கப்பாதை அமைக்கக் கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரல் 26-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது. சுரங்கப்பாதை அமைப்பதற்கான அனைத்துப் பொருட்களும் தயார் செய்யப்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, சுரங்கப்பாதை அமைப்பதற்காக 1.5மீட்டர் அகலம் கொண்ட சிமிண்டில் செய்யப்பட்டபலமான 20 அடுக்குகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு அடுக்கும், 4.65ஜ்3.65 மீட்டர் உயரம் கொண்டவையாகும். இந்த 20 அடுக்குகளையும் பயன்படுத்தி 4.5மணிநேரத்தில் சுரங்கப்பாதையை ரயில்வே பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

அனைத்து ரயில்களும் சென்றபின், சுரங்கப்பாதை அமைக்க, தொடங்கப்பட்ட பணி அடுத்த சில மணிநேரத்தில் முடிந்து மீண்டும் ரயில் இயக்கப்பட்டதைப் பார்த்து அப்பகுதி மக்கள் வியந்து விட்டனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் வரியும் உண்மையும்...


பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதி பயங்கர ஏரி...


பல்வேறு மர்மங்களைக் கொண்ட இந்த பூமியில் தற்போது நீர் அருந்தும் பறவைகளை கற்சிலைகளாக மாற்றிடும் அதிபயங்கர ஏரி குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புராண காலங்களில் மந்திரவாதிகளும் மாயாஜால வித்தகர்களும் தங்களை எதிப்பவர்களையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்....

இந்த கற்சிலைகளுக்கு உயிர்கொடுத்திட அன்றைய கதாநாயகர்கள் ஏழு கடல், ஏழு மலை தாண்டிச் சென்று கடைசியாக சூட்சுமத்தை கண்டுபிடித்து கற்சிலைகளை அகலிகளாக மீண்டும் உயிர்பெற்று தருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

இந்நிலையில் உலகிலுள்ள மக்களுக்கு உயிரூட்டம் கொடுத்திடும் பல்வேறு ஏரிகள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டிலுள்ள ஏரியொன்று தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றியிருக்கும் அதிபயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

தான்சானியா நாட்டின் வடபகுதியில் கென்யா நாட்டின் எல்லையை ஒட்டிய நாட்ரன் எனும் ஏரிதான் தன்னில் நீரருந்தும் பறவைகளையெல்லாம் கற்சிலைகளாக மாற்றி வருகிறது.

இதனை கண்டுபிடித்து வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் ஆப்பிரிக்காவின் தலை சிறந்த வைல்ட்லைப் புகைப்படகலைஞர் நிக்பிராண்ட்.

இவர் கடந்த 2010-2012 ஆண்டுகளில் நாட்ரன் ஏரியை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்துள்ளார். அப்போது தான் ஏரிக்கரைகளிலும் ஏரியின் நடுவிலும் ஏராளமான பிளமிங்கோ உள்ளிட்ட பறவைகள் கற்சிலைகளாக மாறி உப்புப்பொரிந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் மனம் தளராத நிக்பிராண்ட் மனதை கல்லாக்கிக் கொண்டு கற்சிலை பறவைகளை தனது விலையுயர்ந்த கேமராவில் பதிவு செய்துள்ளார்....

பின்னர் தான் நாட்ரன் ஏரியில் கண்ட அனைத்து சம்பவங்களையும் ஒருங்கிணைத்த நிக்பிராண்ட் Across the ravaged land என்ற புத்தகத்தை எழுதி தற்போது உலகப்புகழ் பெற்றுள்ளார்.

மேலும் நாட்ரன் ஏரியில் நிக்பிராண்ட் எடுத்த புகைப்படங்கள் 2012 ஆண்டின் Best wild animal photography award பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேதியல் விஞ்ஞானிகள் நாட்ரன் ஏரியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகின....

அதில் நாட்ரன் ஏரியில் எப்பொழுதும் 140 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் இருப்பதால் மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழவழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்ரன் ஏரியில் அதிகளவு கால்சியம், நேட்ரோ கார்பன்கள், தாது உப்புகள் மற்றும் ஏராளமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்தது....

மேலும் நீண்ட நாட்கள் முகாமிட்டு நாட்ரன் ஏரியில் ஆய்வு மேற்கொணட் விஞ்ஞானிகள் பறவைகள் கற்சிலைகளாக உறுமாறுவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அந்த ஆய்வுகளில் நச்சுத்தன்மை கொண்ட தாது உப்புகள் மற்றும் வேதிப்பொருட்கள் கொண்ட நாட்ரன் ஏரியின் நீரை அருந்திய பறவைகள் தங்களின் உடலுக்குள் கலந்துள்ள உப்புக்கள் உறைவதால் உடனடியாக மரணமடைந்து காலப்போக்கில் கற்சிலைகள் போன்று மாறி உப்புப்பொரிந்து போய் உருமாறுவதை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தங்களது உள்ளுணர்வால் தெரிந்து கொண்ட சிலவகை பறவையினங்கள் இந்த அதிபயங்கர ஏரிக்கு வரமுற்றிலுமாக நிறுத்திக் கொண்டு கென்யநாட்டு நன்னீர் ஏரிக்கு தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொண்டு விட்டன.

இருப்பினும் இந்த ஏரியின் தன்மை குறித்து அறியாத சிலவகை பறவைகள் நாட்ரான் ஏரியின் தண்ணீரை குடித்துவிட்டு தங்களது அறியாமையினால் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி பார்வையாளர்களின் காட்சிப் பொருட்களாக மாறிவிடுகின்றன....

மழை மறைவுப்பிரதேசமாக காணப்படும் தான்சானியா நாட்டு வடபகுதியிலுள்ள இந்த எரிப்பகுதியில் எப்போதாவது மழை பெய்யுமானால் மழைநீர் பட்டு ஏரியிலிருந்து நச்சுவாயுக்கள் வெளியேறுவது கண்கூடாகத் தெரியுமாம். அப்போதிலிருந்து சில நாட்களுக்கு மட்டும் நாட்ரன் ஏரி நன்னீர் ஏரியாக நிசப்தத்துடன் காட்சிதருமாம். இப்பொழுது பறவைகள் கற்சிலைகளாக நிற்பதைக் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர்.

இதன் மூலம் தான்சானியா நாட்டின் அந்நிய செலவாணி வருவாய் அதிகமாக கிடைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ இறைவனின் அருட்கொடையான தண்ணீரை நாட்ரன் ஏரியில் அருந்திடும் பறவைகள் உயிரை இழந்து கற்சிலைகளாக மாறி நம்மை சோகத்தில் வைக்கிறது...

மருத்துவ மாஃபியா...


இனி டிஜிட்டல் ஆதார், ஓட்டுனர் உரிம பயன்படுத்தலாம்: ரயில்வே...


ரயிலில் பயணிப்பவர் டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அடையாளமாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ரயிலில் பயணிப்பவர் டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அடையாளமாக பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ரயில்களில் பயணிப்பவர் அரசு வழங்கிய ஏதாவது ஒரு ஒரிஜினல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதில்ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமைம் உள்ளிட்டவைகள் அடங்கும்.

தற்போது இந்த ஒரிஜினல் அட்டைகள் தொலையாமல் இருக்க டிஜி லாக்கர் எனப்படும் இணயப் பெட்டகங்களில் பலர் சேமித்து வைத்துள்ளனர். இந்த ஆவணங்களை அடையாளமாக காட்ட அனுமதி அளிக்க வேண்டி பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனால் ஒரிஜினல் அட்டைகள் தொலைவதை தவிர்க்கலாம் என தெரிவித்தனர்.

இதையொட்டி ரயில்வே துறை, டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள டிஜிடல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை பயணிகள் தங்கள் பயணத்தின் போது காட்டலாம். ரயில்வே அதிகாரிகள் அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அவை ஆவணங்களாக இல்லாமல் படமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது...

நான் ஒரு கடனாளி...


தெரிந்து கொள்வோம்...


உலகிலேயே மிக பெரிய அணை திரி கோரஜஸ் டேம் தான்..

இது சீனாவில் உள்ளது..

இதன் கொள்ளளவு 40 கண கிலோ மீட்டர்
நம் மேட்டுர் அணையின் கொள்ளளவு 3 கண கிலோ மீட்டர்..

இதன் மொத்த மின் உற்பத்தி 2 2 ஆயிரம் மெகா வாட்..

தமிழ் நாட்டின் மின் தேவை 13 ஆயிரம் மெகா வாட்...

அன்னிய முதலீடும் உண்மைகளும்...


இது தான் இந்தியா... துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்...


BLACK TIGER - Ravindra Kaushik இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர். RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார்.அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார்.PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் . 1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்.. அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார். INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார். இந்தியா , எதுவும் தெரியாதது போல காட்டிகொண்டது. 1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில்...

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார். பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்...

இப்பொழுது இந்தியா உலகின் மிகப்பெரும் சர்க்கரை நோய் ம௫த்துவ சந்தை ஆகும்...


வீரப்பனார் எத்தனை யானைகளைக் கொன்றார்?


1972-85 ஆண்டுகளுக்கிடையில் இந்திய யானைகளின் மொத்தத் தொகையே சுமார் 10,000 தான்.

அவற்றில் தமிழ்நாட்டில் சுமார் 1500 மட்டுமே இருந்திருக்கலாம்.

வீரப்பனின் இருப்பிடம், மொத்த தமிழ்நாடோ, இந்தியாவோ அல்ல.

குறிப்பிட்ட சுமார் 600 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட அடர்த்தியற்ற ஒரு குறுமரக் காட்டுப்பகுதி தான்.

ஏனெனில் ஒரு யானைக் கூட்டத்திற்கு சராசரியாக 100 ச.கி.மீ. காடுகள் தேவை.

ஆக ஆறு யானைக்கூட்டங்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

ஒரு யானைக் கூட்டத்தில் ஐம்பதில் இருந்து அறுபது யானைகள் வரை இருக்கும்.

ஆக அதிகப்படியாக 350 யானைகள்தான் மொத்தமே இருந்திருக்கும்.

வீரப்பனார் வேட்டைக்காரர்தான். ஆனால் அவர் வேட்டையாடிய காலம் மிகவும் குறைவு.

அவர் என்னமோ ஆயிரக்கணக்கான யானைகளைக் கொன்றதாகக் கூறுகின்றனர்...

திருட்டு திராவிடர்ஸ்...

டிஎன்ஏ வங்கிகளை உருவாக்க பாஜக மோடி திட்டம்...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வை நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பு...


அதிமுக அரசின் இந்தச் செயல், ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் வைக்கின்ற வேட்டு.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தான் நடத்திவந்த அரசுத் தேர்வுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

அதோடு, அந்தத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும் முடிவு செய்துள்ளது.

அதிமுக அரசின் இந்த முடிவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாட்டவரையும் புகுத்தும் வேலையை எடப்பாடி பழனிசாமி அரசு செய்தது. அதனால் தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழக மக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதைப் பார்க்கிறோம். இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வை நடத்தும் பொறுப்பையே தனியாரிடம் ஒப்படைக்கும்போது, ஆதாய நோக்கில் தனியார் பணம் பெற்றுக்கொண்டு வெளியாட்களையே வேலையில் அமர்த்துவர். இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும்; இடஒதுக்கீட்டு முறை அடிபட்டு சமூக நீதியும் மறுக்கப்படும்.

இத்தகைய நிலைமை ஏற்பட வேண்டும் என்பதுதான் பாஜக மற்றும் மத்திய பாஜக மோடி அரசின் எண்ணம்; அதனை செயல்படுத்தும் விதமாகவே இந்த முடிவை அதிமுக அரசு எடுத்துள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாமல் சட்டத்துக்குப் புறம்பாக பதவியில் இருந்துவரும் பழனிசாமி தலையிலான அதிமுக அரசு நீடிக்கிறது என்றால் அது மத்திய பாஜக மோடி அரசின் தயவால்தான்; அதனால் மோடியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் எப்படி?

தமிழக அரசின் நிர்வாகப் பணிகளான மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிக வரித்துறை உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகள் மற்றும் குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் என பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது.

முன்பு தேர்வுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுவந்தது. அந்த முறையை மாற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது.

இப்போது ஓஎம்ஆர் தாளில் கொள்குறி இடுவது (டிக் அடிக்கும் முறை) என்கின்ற முறையில் தேர்வை எழுதுகின்றனர். 

இதனை மாற்றி, எழுத்துத் தேர்வை கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படி இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கணினி மூலம் தேர்வுகளை நடத்த தனியாரிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தபுள்ளியை ஆகஸ்ட் 2ந் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் குறித்த விவரங்களை www.tenders.tn.gov.in, www.tnpsc.gov.inல் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கிராமப்புற மாணவர்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பு. கிராமங்களில் கணினிப் பயன்பாடு முழு அளவில் இல்லாதது முதன்மைக் காரணம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வை நடத்தும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைப்பு என்பது தமிழக மக்களுக்கு எதிரான உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையே.

அதிமுக அரசின் இந்தச் செயல், ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேலைவாய்ப்புக்கும் சமூக நீதிக்கும் வைக்கின்ற வேட்டுதான்.

இதனை வன்மையாகக் கண்டிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இந்த நடவடிக்கையைத் திரும்பப்பெறுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறது...

மராட்டிய ரஜினி கலாட்டா...


ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் ஸ்டாராம்....

ஓராமா ஒக்காரவச்சுட்டான் தமிழன்...

அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்பு முனைகளைக் கொண்டது...


இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்.

அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர்.

இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.

இவரது முற்பிறவிகள் குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அகத்திய முனிவர், நாயொன்றை வளர்த்து வந்தாராம். அந்நாய் தேவேந்திரனாக முதல் பிறவி எடுத்ததாம். பின்னர் அர்ச்சுனன், கண்ணப்ப நாயனார், நக்கீரர், அருணகிரிநாதர் என்ற வரிசையில் அந்நாய்க்குப் பிறப்புகள் உண்டானதாகத் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருணகிரி புராணத்தில் காணக் கிடைக்கிறது.

இதனைக் கட்டுக்கதை என்று மறுத்துக் கூறுபவர்களும் உண்டு.

அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர்.

உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம்.

மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம்.

இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம்.

அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.

கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர்.

அவர் கிளி உருவமாக இருந்த போது தான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டுள்ளது...

ஜார்க்கண்டில் உள்ள அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில், இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது...


வேற்றுக் கிரக வாசிகளின் மறைக்கப்பட்ட உண்மைகள்...


வேற்றுக்கிரக வாசிகளா அப்படி இந்த அண்டவெளியில் யாருமே இல்லை என்று நம்மை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள். area 51 என்று சொன்னால் வதந்தி என்று கூறி அங்கு நடப்பவற்றை மூடி மறைக்கிறார்கள்.

இங்கே இருக்கின்ற வீடியோக்கள் பல உண்மையை உலகிற்கு area 51 இல் நடந்தவற்றை சொல்லிகிறது. இந்த வீடியோக்கள் 1950 – 1960 வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்டு இருக்கின்றது.

அன்று எடுத்த வீடியோக்கள் இப்பபொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது. இந்த area 51 யார் வேலை செய்கிறார்கள்,  இதன் உண்மையான திட்டம்தான் என்ன?

மனித குலத்திற்கு தெரியாமல் மறைத்து மறைத்து எடுக்கும் முடிவுகள் இந்த உலகின் அனைத்து உயிரனத்திற்கும் பாதிப்பு வராமல் இருக்கும் வரைக்கும் நல்லாத்தான் இருக்கும்….

வீடியோக்களை பாருங்க.

https://youtu.be/qkGIGTs9l6M

https://youtu.be/loDZCpN-YQI

https://youtu.be/oZanQvY6agE

விழித்துக் கொள்ளுங்கள்... இல்லையெல் அடிமையாவது உறுதி...


உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி...


பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் -- நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8 . பருகல் -- நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9 . மாந்தல் -- ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10 . கடித்தல் -- கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் -- வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் -- முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது...

அதிகரித்து வரும் Test tube baby centre...


உணவுச் சங்கிலியை மாற்றியமைத்து ஆணை மலடாக்கிய மருத்துவ வணிகம்...

இராமாயணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள்...


இராவணன் ஆய கலைகளின் நாயகன். அதிலும் பூதகனங்களுக்கேல்லாம் இருக்கும் பக்தியை விட மகேஸ்வரனின் மேல் இராவணுக்கு பக்தி அதிகம்.

அனுமன் நெஞ்சைபிளந்து தான் தனது உள்ளத்தில் சிதாஇராமன் இருப்பதை காண்பித்தார். ஆனால் தனது மூச்சில் கூட மகேஸ்வரன் வாசம் என்பதை வசிஸ்டரின் வஞ்சனையை எரித்ததில் இருந்தே காணலாம்.

சரி கதைக்கு வருவோம். பக்த பித்தனான இராவணனுக்கு ஏதாவது தரவேண்டும் என அன்னை மகேஸ்வரனிடம் கேட்க அவனுக்கேன்று ஒரு உலகம் தாருங்கள் என அன்னையின் வேண்டுகோள்.

மகேஸ்வரனின் மறுபதில் அவனுக்கேன்று ஒரு உலகம் தந்தால் எங்கும் சிவ சந்நிதானம் அமைத்து தனக்கேன்று இருக்க இடமின்றி சுற்றிவருவான் என்றதும், அன்னை புன்னகைத்து ஒரு திட்டத்தை கூறினார்.

இராவணனை அழைத்து மகேஸ்வரர் இராவனா நீதான் ஆயகலைகளிலும் அற்புதன் ஆயிற்றே உனது அன்னைக்கேன்று ஓர் உலகம் செய் என்றார்.

சிவனாரின் வேண்டுகோள் அல்லவா அதுவும் தனது அன்னைக்கு என ஒரு தாய்க்கு மகன் ஆற்றும் கடமை அத்தனையும் உருக்கொண்டு வந்து அமைத்து முடித்தான்.

முடிந்த உடன் அன்னையை அதைக்காண அழைக்க அதன் அழகைகண்டு வியந்து போனார்கள்.

திட்டப்படி மகேஸ்வரன் இராவணனிடன் இராவணா இவ்வளவு அழகான நகரை படைத்த உணக்கு என்ன வேண்டும் கேள் என்றார்.

அதற்கு இராவணனோ ஐயனே தாய் தந்தை இருக்கும் இக்கயிலையை விட்டு எங்கும் பிரியாவரம் வேண்டும் என கேட்க அதற்கு எம் இருப்பிடம் உனக்கு என்றும் உண்டு. அதே நேரத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடு நாங்கள் கொடுக்கும் எதையும் நீ மறுக்க கூடாது என்பது தான்.

உத்தரவிற்கு இணங்கி வாக்கு கொடுத்தான் இராவணன். இதோ இங்கு உன்னால் அன்னைக்கு ப‌டைக்க‌ப‌ட்ட‌ நாடு உன‌க்காகுக‌ உன‌க்கு த‌ர‌வே அன்னையின் நாட‌க‌ம் என‌ மீன்டும் இராவ‌ணுக்கே அந்த‌ ந‌கரை த‌ந்து உன‌து ச‌ந்த‌தில் இந்ந‌க‌ரில் இருந்து பெருகி உல‌கெங்கும் ப‌ர‌வி உன்னை போல‌வே ப‌ல‌ க‌லைக‌ளில் புக‌ழ்பெற்று விள‌ங்க‌ட்டும் என‌ ஆசீக‌ள் த‌ந்து இல‌ங்கேஸ்வ‌ர‌ன் என்ற‌ பெய‌ரும் இட்டு அனுப்ப‌.

இல‌ங்கேஸ்வ‌ர‌னுக்கு அழ‌கான‌ பெண் குழ‌ந்தை பிற‌க்க இந்த பெண் குழந்தைக்கு அன்பை காட்டும் போது த‌ன‌து அன்னைக்கு காட்டும் அன்பில் குறைவ‌ந்துவிடுமே என‌ அஞ்சி அக்குழ‌ந்தையை பூமாதேவிக்கு வார்த்து விட்டார்.

பூமாதேவியும் அக்குழ‌ந்ததையை ச‌ன‌க‌னிட‌ம் (இன்றைய‌ நேபாள‌த்தின் அன்றைய‌ இராஜா) சேர்க்க‌ அங்கு வ‌ளர்ந்த‌ குழ‌ந்தை இராம‌ண‌னை ம‌ண‌முடிக்க‌ பிற‌கு புத்திர‌கண்ட‌ம் வ‌ந்த‌ த‌ய‌ர‌த‌ன் வாக்குப‌டி இராம‌ன் வ‌ன‌ம் செல்ல‌ த‌னது குழ‌ந்தை காட்டில் ம‌ழையிலும் குளிரிலும் வாடுகிற‌தே என்ற‌ ஏக்க‌த்தில் இல‌ங்கை கொண்டு செல்கிறான்.

இந்த‌ நிக‌ழ்ச்சிதான் வில்ல‌ன் யாரை போடுவோம் என‌ நினைத்த‌ வால்மிகிக்கு கிடைத்தான் இல‌ங்கேஸ்வ‌ர‌ன் பாவ‌ம்.

த‌ந்தைக்கும் ம‌க‌ளுக்கும் உள்ள‌ உற‌வையே கொடூர‌ப‌டுத்தி விட்டான்.

இந்த‌ செய‌லால் தான் வால்மிகி த‌ன‌து வாழ்வின் க‌டைசி நாட்க‌ளில் குஸ்ட‌ ரோக‌ம் வ‌ந்து இற‌ந்தான் என‌ புராண‌ங்க‌ள் சொல்கிற‌து...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


வசியம்....


இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்..

வசியம் என்பது ஒருவர் பிரியமாக இருத்தல் ஆகும்.

வசிய மூலிகைகள் எட்டு. அவை...

புல்லுருவி - சர்வவசியம்,
தேள்கொடுக்கு - இராஜவசியம்,
செந்நாயுருவி - புருஷவசியம்,
நிலவூமதத்தை - ஸ்திரீ வசியம்,
விஷ்ணுகிரத்தி - மிருகவசியம்,
பொற்றலைக்கையான் - சர்ப்பவசியம்,
வெள்ளெருக்கன் - சத்துருவசியம்,
தொட்டாற்சிணுங்கி - லோகவசியம்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


இரத்த அழுத்தமா? குறைக்க எளிய வழி...


ரத்தக் கொதிப்பு என்றால் என்ன? ரத்தம் உடல் முழுவதும் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தம் தேவை. இந்த அழுத்தம் அதிகமாகும்போது, அதையே ரத்தக் கொதிப்பு என்கிறோம். ரத்த அழுத்தம் எவ்வளவு இருக்கலாம்? ரத்த அழுத்தத்தில் சுருக்கழுத்தம் (systolic blood pressure) விரிவழுத்தம் (Diastolic blood pressure) என இரண்டு அலகுகள் உள்ளன.

ரத்த அழுத்தத்திற்கு மன அழுத்தமே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. உடல் எடை அதிகரிப்பைப் பொறுத்து ரத்தக் கொதிப்பு வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. உணவில் அதிகம் உப்பு சேர்த்துக் கொள்ளுதல், அதிகக் கொழுப்பு மற்றும் குறைவான நார்ச் சத்துள்ள உணவுகள், மது மற்றும் புகைப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இன்மை, நீரிழிவு நோய் ஆகியவற்றின் மூலம் இரத்த அழுத்த நோய் வரலாம்.

ரத்தக் கொதிப்பு வருவதற்கான அறிகுறிகள்: பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப் பரிசோதிக்கும்போது இது கண்டு பிடிக்கப்படுகிறது. எனினும் சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலை சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

ரத்தக் கொதிப்பால் ஏற்படும் விளைவுகள்: மாரடைப்பு, இதயத் துடிப்பில் கோளாறு, இதயம் பெரிதாகுதல், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த நாளங்களில் நோய்கள், சிறுநீரகத்தில் பாதிப்பு, மற்றும் கண்களில் பாதிப்பு போன்றவை.

உணவு முறைகள்: அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாகப் பல்வேறு காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக் கொண்டாலே இவை கிடைத்துவிடும். சோடியம் என்னும் தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தப்படும் சோடா உப்பு, சைனீஸ் உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோவில் சோடியம் அதிகம் இருக்கும். எனவே, இவற்றைத் தவிர்க்கவும். வடகம், ஊறுகாய், சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. இவற்றில் உப்பு அதிகம் இருக்கும்.

ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

பாட்டி வைத்தியம்:

1). அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

2). ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

3). ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

4). இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். 

5). இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

6). எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

7). கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

8). பீட்ரூட் சாற்றில் அப­ரி­மி­த­மாக அடங்­கி­யுள்ள நைத்ரேட் (Nitrate) இரத்­தத்தில் நைட்ரிக் ஒக்­சைட்டின் (Nitiric Oxide) அளவை அதி­க­ரித்து உட்­கொண்ட 24 மணித்­தி­யா­லத்­திற்குள் உயர் இரத்த அழுத்­ததைக் குறைக்கும். தினமும் 250 மில்லி லிட்டர் பீட்ரூட் சாறு பருக இரத்த அழுத்தம் என்றும் கட்­டுப்­பாட்டில் இருக்கும். காலையில் வெறும் வயிற்றில் கராம்பு ஒன்றை மென்று சாப்­பிட, கறி­வேப்­பிலை சாறு பருக, தேனுடன் இஞ்சி சாறு பருக இரத்த அழுத்தம் குறையும்.

9). ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், நார்ச்சத்துநிறைந்த பழ வகைகளையும் அதிகம் சாப்பிடவேண்டும்.

10). பூண்டு: இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

11). கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

12). முருங்கைக்காய்: முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

13). நெல்லிக்காய்: நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

14). முள்ளங்கி: இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

15). எள்: சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

16). ஆளி விதை: ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

17). ஏலக்காய்: உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது

உடற்பயிற்சி: ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 முறையாவது, 20 நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேக நடை, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்...