11/02/2021
இசை அறிவியல்...
மனித உடலில் இருக்கும் ஓர் சுவாரசியமான குணம் என்னவென்று தெரியுமா?
உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் எமது உடலுக்குள் நடைபெறும்போது எமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது.
உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் எமது பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம்.
ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் எமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது.
இதே போன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும்.
அத்துடன் எமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா…?
நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கி விடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விடவில்லை.
போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
டோபாமைன் வெளியிடுவது மட்டும் அல்லாமல் இசை கேட்கும் போது எமது உடலில் மேலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக எமது உடலில் எல்லாமே ஒரு தாளத்திற்கு அடங்கியதாகத் தான் இருக்கிறது. நமது இருதயம் துடிப்பது ஓர் தாளத்தில். நாம் சுவாசிக்கும் போது பிராணவாயு உள்வாங்கி கரியமிலவாயு வெளியேற்றுவது இன்னும் ஓர் தாளம். கடினமான வேலை செய்யும் போது இருதய துடிப்பு மற்றும் சுவாசத்தின் தாளம் அதிகரித்துவிடுகிறது.
அதே போன்று தான் நாம் இசை கேட்கும் போதும் இந்த தாளங்கள் மாறிவிடுகின்றன. அதன் விளைவாக இரத்த அழுத்தம் மற்றும் மூளையின் செயல்பாடும் மாறிவிடுகின்றது.
பொதுவாக நமது இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் துடிக்கின்றது. இந்த துடிப்பை 72 Beats per Minute (BPM) என்று சொல்வர். அதே போன்று தான் இசையின் தாளத்தையும் BPM ஊடாக அளப்பர்.
ஆராய்ச்சியாளர்கள் அறிந்தது என்னவென்றால் இசையின் தாளம் பொறுத்து நமது உடல் வெவ்வேறு உணர்ச்சிகளை உணர்கின்றது என்பது தான்.
72 BPMகு அதிகமாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அதுவே 72 BPMகு குறைவாக இருக்கும் இசை கேட்கும் போது நாம் அமைதி ஆகி விடுகிறோம்.
உதாரணத்திற்கு அம்மாவின் „பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ“ ஏறத்தாழ 200 BPM, அப்பாவின் „வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே“ 80 BPM, மற்றும் இளைஞனின் „விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே“ ஏறத்தாழ 91 BPM கொண்ட பாடல்களாக அமைந்து உள்ளன...
உளவியலில் இருந்து.. மனநோய் அறிகுறிகள்..
பொதுவாக பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்துதான் மனநோய்யை உன்டாக்குகிறது..
மனநோயின் அறிகுறிகள்...
மனச்சோர்வு,
அர்த்தமற்ற புரியாத பயங்கள்,
தாழ்வு மனப்பான்மை,
குற்ற உணர்ச்சிகள்,
தற்கொலை எண்ணங்கள்,
தன்னம்பிக்கையின்மை,
வாழ்க்கையில் பிடிப்பின்மை,
பதட்டமான மனநிலை,
பிரம்மைகள்,
காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள்,
இல்லாத உருவங்கள்,
அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல்,
வேலை, கல்வியில் ஈடுபாடின்மை.
மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும்.
ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள். தோன்றும் மனநோய் அறிகுறிகள்.
அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex, Lesbian-sex, இதெல்லாம் இருக்கும்.
கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல்.
பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன.
உதாரணமாக..
திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம்..
அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும் போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது...
தவம்...
விழிப்பு நிலையிலேயே இருக்க பழகி கொண்டால்...
மற்றவைகளுடைய எண்ண அலைகள் நமக்கு தீமை விளைவிப்பனவாக இருந்தாலும்..
உணர்ச்சிக்கு ஊக்கம் கொடுப்பனவாக இருந்தாலும்..
அவை நம்மை பாதிக்காது..
உதாரணமாக ரேடியோவில் எத்தனையோ அலைவரிசைகள் உண்டு என்றாலும் எதை நாம் தேர்ந்து எடுக்கின்றோமோ அவை மட்டுமே நமக்கு கேட்கும்.
மற்ற அலைவரிசைகள் வந்து மோதும் , ஆனால் நமக்கு கேட்காது அது போல நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நினைப்போம்.
நாம் எங்கு போனாலும் நமக்காக மற்றவர் தானாக அந்த அலைவரிசையில் கட்டுப் பட்டு நம் மதிப்பை உணர்ந்து அவர்கள் செயல்படுவார்கள்.
எங்கே போனாலும் நமக்கு வெற்றியாகவே இருக்கும்.
அப்படி எங்கேயாவது தடை ஏற்பட்டாலும் அது நமக்கு கெடுதல் இல்லை நம்மை திருப்பி விடுவதனால் தேவையில்லாதவற்றை தள்ளி விடுகிறது.
எந்த நேரத்தில், எந்த காலத்தில், எந்த சூழ்நிலையில் நடக்க வேண்டுமோ அது தானாகவே நடந்து விடும்.
உலகில் எந்த இடத்திலாவது நம் எண்ணிய எண்ணத்திற்குரிய காலமும் நேரமும் வரும் அது தானாக நடந்து விடும்.
எனவே நல்ல சிந்தனைகளையே மனதில் வளர்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும். நாம் நினைப்பது தான் நடக்கும்...
தியானத்தின் நன்மைகள்...
விஞ்ஞானிகள் தியானம் செய்யும் மனிதனுடன் விஞ்ஞானக் கருவிகளை இணைத்து, ஆராய்ச்சி செய்து பின் பல கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள்.
உடலளவில் ஏற்படும் நன்மைகள்...
1. தியானம் செய்வதினால் மூச்சு வாங்கி வெளிவிடும் வேகம் குறைகிறது. இருதயத் துடிப்புக் குறைகிறது. ஆயுள் அதிகரிக்கிறது.
2. (Blood Pressure) இரத்த அழுத்த நோய் குணமாகிறது.
3. எல்லா நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
4. உடலின் உஷ்ணம் சிறிது அதிகரித்துப் பிறகு படிப்படியாகக் குறைகிறது.
5. உடல் முழுவதற்கும் நன்கு ஓய்வு கிடைக்கிறது.
6. ஏற்கனவே கெட்டுப்போன செல்களை நீக்கிப் புதிய செல்களை உருவாக்குகின்றன...
குழந்தைத் திருமணம் திராவிட தெலுங்கர்கள் கொள்கையே...
பெண்கள் மீதான அடக்கு முறைகளிலேயே தலையானது குழந்தைத் திருமணம்.
அதில் முன்னணியில் இருந்தது தெலுங்கு இனமே.
1931 ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கட்தொகை கணக்கீட்டில் உள்ள ஒரு பக்கத்தை இங்கே தருகிறேன்.
அப்படியே ஈ.வே.ரா முதலில் திருமணம் செய்த பெண்ணில் வயதையும்
இரண்டாம் திருமணத்தில் அவரது வயதையும் பொருத்திப் பார்த்தால் உண்மை விளங்கும்.
தமிழினம் எப்போதும் பெண்ணடிமை சிந்தனைக்கு இடமளித்ததில்லை...
ஓஜா பலகை மூலம் ஆவியுடன் பேசுவது எப்படி.?
ஓஜா பலகை பற்றி சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதிர்காலம் பற்றி அறியவும், இறந்தவர்களுடன் பேசவும் உதவும் ஊடகங்களில் பிரபலமானது இது தான். இதை தமிழில் ப்லாஞ்செட் பலகை எனவும் ஓஜா பலகை எனவும் இன்னும் பல விதமாகவும் சொல்கிறார்கள். இப்பதிவில் Ouija பலகை பற்றியும் அதை வீட்டில் செய்வது பற்றியும், பயன்படுத்தும் முறை பற்றியும் இதன் உண்மை தன்மை பற்றியும் சுருக்கமாக இப்பதிவு விளக்குகிறது.
ஆவியுடன் பேச ஒரு அறை வேண்டும். அங்கே விளக்கு, மின்விசிறியை அணைத்து விட வேண்டும். மேலும் குறைந்தது நான்கு பேர் தேவை. தரையில் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு சாக்பீஸால் வரைய வேண்டும். கூடவே ஒரு சிறு எவர்சில்வர் டம்ளரும், ஒரு சிறு மெழுகுவர்த்தியும் தேவை. அந்த மெழுகுவர்த்தி டம்ளரின் அளவிற்கு கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும். சாக்பீஸில் படத்தை வரைய வேண்டும்.
அனைவரும் சுற்றிலும் உட்கார வேண்டும் நடுவில் உள்ள வட்டத்தில் மெழுகுவர்த்தியை வைத்து கொளுத்தவும். பிறகு மெதுவாக எவர்சில்வர் டம்ளரை மெழுகுவர்த்தி மேல் கவிழ்க்க வேண்டும். எவர்சில்வர் டம்ளரின் மையத்தில் அனைவரும் தத்தம் கட்டை விரலை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும். டம்ளரின் மையம் சூடாக இருக்கலாம்.
அனைவரும் சேர்ந்து “ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக! வந்து எங்கள் எதிர்காலத்தை எங்களுக்கு சொல்லுங்கள்! ஆவி தோழரே வருக! ஆவி தோழரே வருக!” என அழைக்க வேண்டும். பிறகு கட்டை விரலை எடுத்து விட்டு உங்கள் கேள்விகளை கேட்டால் ஆவி டம்ளரை நகர்த்தி பதில் சொல்லும்.
உதராணமாக எப்போது திருமணம் நடக்கும் என கேட்டால் அந்த வருடத்தை டம்ளரை குறிப்பிட்ட எண்களுக்கு நகர்த்தி பதில் சொல்லும். அதேபோல் பெயர், இடம் போன்றவைகளை சொல்ல எழுத்துக்களையும், ஆமாம்,இல்லை என சொல்ல yes, noவையும் காண்பிக்கும். ஆவி உங்கள் கண்களுக்கு தெரியாது. அது குரலும் கேட்காது. ஆனால் டம்ளர் தானாக நகர்வது தெரியும்...
பற்கள் கூச்சம்...
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்..
அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்...
ஆழ்மனத்தின் அற்புதம்...
மனித மூளையை பற்றி ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் நம் சித்தர்கள் அதை அன்றே ஆராய்ந்து கூறிவிட்டனர்.
பகவத் கீதையில் யத் பாவம் தத் பவதி என சொல்லப்பட்டுள்ள இந்த ஒரே வரியில் மொத்த பிரபஞ்சமும் அடக்கம்.
எதை எப்படி பாவிக்கிறாயோ அது அப்படியே ஆகும் என்பதே அதன் விளக்கம்.
ஆம் அப்படித்தான் இந்த பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆழ்மனத்தின் தகவல்களால் உங்கள் வாழ்க்கை எப்படி பார்க்கபடுகிறதோ அப்படியே அது அமையும்.
நம் உடலில் உள்ள அனைத்து செல்களும் படிப்படியாக சிதைந்து வளர்ந்து ஒரே வருடத்தில் மொத்த உடலும் புதிப்பிக்கப்பட்டு விடும்.
அப்படி இருக்க சென்ற வருடம் இருந்த அதே நோய் இந்த வருடமும் இருக்க காரணம் உங்கள் ஆழ்மனத்தில் அது ஆழமாக பதிந்ததால் தான்.
அந்த தகவல்கள் மாற்றப்படும் வரை அந்த நோய் ஒரு தொடர் கதை தான்.
அதேபோல் ஏழை மேலும் ஏழை ஆவதற்கும் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும் அவன் ஆழ்மன பதிவுகளே காரணம்.
டேட்டா தெரபியின் மூலம் அதை மாற்றி அமைத்து வாழ்க்கையை கொண்டாடுவோம்...
சுடும் உண்மைகள்...
அரசின் பள்ளியும், கல்லூரியும் கொடுக்கும் கல்வி , அரசு வேலைக்கு செல்லக்கூட உதவுவதில்லை.. அதனால் தான் தனியார் பயிற்சி பள்ளிகளிடம் கமிஷன் வாங்கி கொண்டு சில குறிப்பிட்ட பயிற்சி பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டுமே முதல் 100 இடங்களை விற்றுவிடுகின்றனர்...
கல்வி என்பது வியாபாரம் என்ற நிலை அடுத்த பரிணாம வளர்ச்சியாக கமிஷன் கொடுத்தால் மட்டுமே வேலை என்று மாறியிருக்கிறது. இந்த மாயவலையால் பல இளைஞர்களுக்கும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பது தான் வேதனையான உண்மை..
படித்த இளைஞர்கள் கூட, பணம் என்ற பின்வாசல் வழியாக வேலையில் சேர்ந்தால் போதும் என எண்ணும் அளவுக்கு இந்த சமூகமும், அரசியலும் அவர்களையும் கெடுத்துள்ளது. ஏனெனில் அரசாங்க வேலையில் சேர்ந்தால் போதும் நல்ல சம்பளம், கமிஷன் மேலும் அதிக வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற காரணிகள். இன்று திருட்டுத்தனம் செய்தும் , ஏஜென்ட்களுக்கு கிம்பளம் கொடுத்தும் வேளையில் சேர்பவர்களிடம் நேர்மையும் உண்மையும் எப்படி இருக்கும்..
இளைஞர்களே சுய தொழிலில் சிறுவருமானம் கூட உங்களை நிம்மதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்க வைக்கும் என நம்புங்கள். உங்களின் ஆசை தீயை பேராசையாக மாற்றிவிட்டு அதில் சில ஏஜென்ட்களும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் குளிர் காய்கின்றனர். ஆனால் அந்த நெருப்பில் உங்களை நீங்களே சுட்டுக் கொண்டுள்ளீர்கள்.. கவனம்.. கவனம்...
பேய்களுக்கு கால்கள் உண்டா?
சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும்..
கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது.
பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது.
ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்.
உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது.
இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்.
ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல..
அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை..
ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு..
தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன..
எனவே பேய்களுக்கு கால் உண்டு..
பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்..
நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...
லார்டு காம்பர்மெரி ஃபோட்டோ -1891...
ஆவிகள் குறித்த ஆராய்ச்சியின் மிகப்பழமையான புகைப்படம் இது. 1891ம் ஆண்டு காம்பர்மெரி அப்பே நூலகத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நாற்காலியில் ஒரு உருவம் அமர்ந்திருப்பது போல பதிவானது. இந்தப்படத்தை பார்த்தவர்கள் அது அங்கு வாழ்ந்த லார்டு காம்பர்மெரிதான் என்று உறுதியளித்தனர்.
கூடுதல் தகவல் - இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டபோது லார்டு காம்பர்மெரியின் உடல் அருகிலிருந்த சுடுகாட்டில் எரியூட்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறது...
இசை IQ...
இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம். வார்த்தைகளால் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை விட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும்.
அடிப்படையில் இசை என்பது வேறு ஒன்றும் இல்லை: பல ஒலி அதிர்வெண்கள் (audio frequency) கலந்து விதம் விதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவது தான் இசை என்று கூறுகின்றோம்.
நமது கண்கள் ஒளியை எவ்வாறு செயலாக்கம் செய்கின்றனவோ, அதே போன்று தான் நமது காதுகளும் ஒலியை செயலாக்கம் செய்கின்றன.
உண்மை சொல்லப் போனால் நாம் பிறப்பதற்கு முன்பே இசையைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றோம். என்ன புரியவில்லையா…?
நாம் நமது தாயின் கருப்பையில் இருந்த போது, நமது கண்களால் ஒன்றுமே பார்க்கமுடியாமல் இருந்தோம். ஆனால், நாம் நமது காதுகளால் எப்போதுமே இசையைக் ரசித்துக் கொண்டு இருந்தோம்.
அது வேறு ஒன்றுமே இல்லை, நமது தாயின் இதயத்துடிப்பு தான். எப்போதுமே நமக்கு தாலாட்டுப் போல் அந்த இதயத் துடிப்பின் இசையில் நாம் உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறோம்.
இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது..
சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள்.
அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள்.
எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்.. அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன...
யோகா ஆசனங்கள்...
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும்.
யோகா நீண்ட ஆயுளையும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகிறது. எவ்வாறென்றால் உடலின் மூட்டுக்கள், முக்கியமாக முதுகுத் தண்டு. இவற்றை யோகா ஆரோக்கியமாக வைக்கிறது. யோகாசனங்கள் உடலின் முக்கிய பாகமான, சுமை தாங்கியான முதுகு தண்டை சீராக்கி, பயிற்சி தருகின்றன. இதனால் முதுகுத் தண்டு காக்கும் நரம்புகளும் வலிமை பெறுகின்றன.
பெரும்பாலான ஆசனங்கள் முதுகுத்தண்டை முன்னும், பின்னும், பக்கவாட்டில் வளைத்தும் பயிற்சி தருகின்றன.
அடுத்த முக்கியமான உடல் அவயம் நாளமில்லா சுரப்பிகள். இவைகள் தான் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை "கன்ட்ரோல்" செய்கின்றன தசைப்பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. தசைகள் வலிமை பெற்று விளங்கும்.
உடலின் ஒவ்வொரு நிலையையும் சுத்திகரித்து போஷாக்கு அளிக்கும்.
வீரியம், வலிமை, ஒருமுனைப்படுவதில் அபிவிருத்தி ஏற்படும்.
உடல் எடையை குறைக்கும். தினசரி, உடலுழைப்பு, வேலைகளால் ஏற்படும் களைப்பை யோகாசனங்கள் போக்கும்.
யோகாவின் சிறப்பு...
அது ஒரே பயிற்சியாக உடல், உள்ளம், ஆத்மா மற்றும் சுவாசம் ஆகியவற்றை இணைத்து பயிற்சி தருகிறது.
யோகா இயற்கையோடு இணைந்தது. தாவரங்கள், விலங்குகளைப் போல பல யோகாசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உதராணம்-விருக்ஸாஸனம், புஜங்காசனம், மயூராசனம் முதலியன மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாக யோகா ஊக்குவிக்கிறது.
உதராணமாக ஆஸ்த்துமாவிற்காக செய்யப்படும் ஆசனங்கள் "சிம்பதெடிக்" மற்றும் "பாராசிம்பதெடிக்" எனும் நரம்புகளை "நார்மல்" நிலைக்கு கொண்டு வருகின்றன. இதனால் நுரையீரல் சுவாச நாளங்கள் நன்கு திறக்கின்றன. மூச்சு வருவது சுலபமாகிறது.
யோகாப்யாசங்கள் (தியானம், பிராணாயாமா) நேரடியாக மனதின் டென்சனை போக்குகின்றன. மனதை, உடலை, ரிலாக்ஸ்.. செய்வதற்கென்றே, பிரத்யேக யோகாசனங்கள்-சவாசனம், சுகாசனம், யோக நித்ரா போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன.
மனச்சுமையை இறக்கி வைக்க யோகாசனங்கள் உதவுகின்றன.
முன்பு சொன்னபடி, இரத்த ஒட்டத்தின் வேகத்தை யோகா அதிகரிக்கிறது. மூளை, இதயம் போன்ற உடலுப்புகள் நல்ல ரத்தத்தால் நிரப்பப்படுகின்றன. இதனால் மனம் மகிழ்ச்சியுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்கும். தன்னம்பிக்கை பெருகும்.
ஆயுர்வேதத்தின் படி உடலை விட்டு வெளியேறாத கழிவுப் பொருட்களால் நோய்கள் உருவாகின்றன. சத்கிரியை, பிராணாயம் கூடிய யோக தியானம், ஆசனங்கள் இவற்றால் கழிவுப்பொருட்கள் சரியாக, சீராக வெளியேறும்...