அரசின் பள்ளியும், கல்லூரியும் கொடுக்கும் கல்வி , அரசு வேலைக்கு செல்லக்கூட உதவுவதில்லை.. அதனால் தான் தனியார் பயிற்சி பள்ளிகளிடம் கமிஷன் வாங்கி கொண்டு சில குறிப்பிட்ட பயிற்சி பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டுமே முதல் 100 இடங்களை விற்றுவிடுகின்றனர்...
கல்வி என்பது வியாபாரம் என்ற நிலை அடுத்த பரிணாம வளர்ச்சியாக கமிஷன் கொடுத்தால் மட்டுமே வேலை என்று மாறியிருக்கிறது. இந்த மாயவலையால் பல இளைஞர்களுக்கும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்பது தான் வேதனையான உண்மை..
படித்த இளைஞர்கள் கூட, பணம் என்ற பின்வாசல் வழியாக வேலையில் சேர்ந்தால் போதும் என எண்ணும் அளவுக்கு இந்த சமூகமும், அரசியலும் அவர்களையும் கெடுத்துள்ளது. ஏனெனில் அரசாங்க வேலையில் சேர்ந்தால் போதும் நல்ல சம்பளம், கமிஷன் மேலும் அதிக வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை என்ற காரணிகள். இன்று திருட்டுத்தனம் செய்தும் , ஏஜென்ட்களுக்கு கிம்பளம் கொடுத்தும் வேளையில் சேர்பவர்களிடம் நேர்மையும் உண்மையும் எப்படி இருக்கும்..
இளைஞர்களே சுய தொழிலில் சிறுவருமானம் கூட உங்களை நிம்மதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்க வைக்கும் என நம்புங்கள். உங்களின் ஆசை தீயை பேராசையாக மாற்றிவிட்டு அதில் சில ஏஜென்ட்களும், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் குளிர் காய்கின்றனர். ஆனால் அந்த நெருப்பில் உங்களை நீங்களே சுட்டுக் கொண்டுள்ளீர்கள்.. கவனம்.. கவனம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.