20/09/2018
சென்னை விருகம்பாக்கம் ரவுடி புறா மணி வெட்டி கொல்ல பட்ட வழக்கில் 6 பேர் கைது...
சென்னை மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டி கொலை செய்ய பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த புறா மணி என்ற மணி கண்டன் என்பவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ளன இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வானகரம் மீன் சந்தை அருகே அவர் கொலை செய்ய பட்டு கிடந்தார்.
இது குறித்து மது ரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மணிகண்டன் கொலை செய்ய பட்டது தெரிய வந்தது இதையடுத்து நெற்குன்றத்தை சேர்ந்த சுல்தான் நாகராஜ் அரவிந்த் அருன் ஆனந்த் மற்றும் விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...
கோவில் கருவறைகள் - தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...
கருவறையை திரை போட்டு மூடி இருக்கும் போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்த ஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.
இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.
இதை கருத்தில் கொண்டு தான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில் பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.
கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டு பிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.
ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.
பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.
எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.
இந்த காந்த அலைகள் தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன் வயர்லஸ் தொடர்பு போல இணைக்கின்றன.
எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.
வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது.
இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்த கல்லால் ஆனது.
இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்ப கிரகத்தை மாற்றும்.
அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்...
கியூபாவின் மருத்துவ சாதனை சில...
தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு கியூபா.
கிடத்தட்ட 100% கல்வியறிவை பெற்ற நாடு கியூபா.
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு கியூபா.
இலவச மருத்துவ வசதி கொண்ட நாடு கியூபா.
ஏழை மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் பயிலும் நாடு கியூபா.
உலக வங்கியின் கணிப்பில் கல்விக்கு செய்யும் முதலீட்டில் உலக நாடுகள் அனைத்திலும் கியூபா முதலிடம்.
நாட்டின் மொத்த ஜிடிபியில் 13% த்தை சுகரத்திர்காக செலவிடும் நாடு கியூபா . இந்த பட்டியலில் டென்மார்க் 8.7%, அமெரிக்கா 5.4%, இந்தியா 2.5%.
உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என பிபிசி 2006-இல் அறிவித்தது.
மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு கியூபாவில் தான்.
உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் கியூபாவில் தான்.
வளமான ஜி8 நாடுகளை அதிகமான மருத்துவர்களை உருவாக்கும் தேசம் கியூபா.
உலகில் குறைவான ஊதியத்தில் மனிதநேய அடிப்படையில் பணி புரியும் மருத்துவர்கள் வாழும் நாடு கியூபா.
1958-ல் கியூபாவின் 1,050 பேருக்கு ஒரு மருத்துவர். அதே 2009-ஆம் ஆண்டில் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு மருத்துவர். மேற்கு ஐரோப்பாவில் மருத்துவர் விகிதம் 330:1 ஆகவும், அமெரிக்காவில் இந்த விகிதம் 417:1 ஆகவும் இந்தியா 2000:1 ஆகவும் உள்ளது.
1984-ஆம் ஆண்டில் பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய ஓர் உரையில் 2000-ஆம் ஆண்டில் கியூபா 75,000 மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறியிருந்தார். 2009-ல் மொத்தம் 74,880 மருத்துவர்கள் உருவாகி இருந்தனர்.
1961-2008-க்கு இடைப்பட்ட காலத்தில் 1,85,000 மருத்துவ நிபுணர்களை உலகின் 103 நாடுகளில் சேவை செய்யக் கியூபா அனுப்பியுள்ளது.
இன்னும் பல..
ஆனால் .. உலகம் கியூபாவிற்கு கொடுத்தது பொருளாதார தடையை..
உலக ரவுடி அமேரிக்கா உலக நாடுகளுக்கு கொடுத்தது அழிவை ..
ஆனால் கியூபா உலகிற்கு கொடுத்தது மனித நேயத்தை..
அனால் அமெரிக்கக் உள்ளிட்ட அதிகார வர்க்கங்களின் பார்வையில் கியூபா தடை செய்யப்பட வேண்டிய நாடாம்...
மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன்...
தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சாமி. இவருடைய மகள் சோபியா. ஆராய்ச்சி மாணவியான இவர் கடந்த 3-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.
அப்போது சோபியா, பா.ஜனதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சோபியாவை பா.ஜனதாவினர் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த புகார் மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதை தொடர்ந்து வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சாமிக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
இதனால் அன்று சாமி, அவருடைய மகள் சோபியா ஆகியோர் ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக, அவர்களின் வக்கீல் ஒருவர் தெரிவித்தார்...
குறிப்பு : பாஜக மற்றும் பிராமணர்களுக்கு மட்டும் சட்டம் பாதுகாப்பு கொடுக்கும்...
மனக்கண் காட்சி...
ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.
முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.
visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.
ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள்.
நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது...
ஆரியமும் திராவிடமும் ஒன்றே...
ஆரியத்தைத் தழுவியதால் தான் , அதாவது சமஸ்கிருதத்தை தமிழில் கலக்க அனுமதித்ததால் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற நீங்கள் பேசுகின்ற திராவிட மொழிகள் பிறந்தன...
ஆரியத்தை ஏற்றுக்கொண்டதால் தான் அம்மொழியினர் தங்களைத் திராவிடர்களாச் சொல்லிக் கொள்வதும் இல்லை..
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆரியத்தை எதிர்துப் போராடியது தமிழினம் ஒன்று மட்டுமே.
தமிழர்கள் எந்தக் காலதிலும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொண்டதே கிடையாது.
அப்படியிருக்கும் போது பெரியார் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்.
தமிழர்களை என்றைக்குமே திராவிடர் என்ற மாயை உருவாக்கி ஆரியர்களிடம் அடிமையாக வைக்கவே திராவிடம், திராவிடர் என்ற நச்சு விடத்தை தமிழர்களிடம் விதைத்தார்..
இதனை தமிழர்கள் உணரத் தொடங்கியதால் திராவிடர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரிகிறது.
சிலரை சில நாள் ஏமற்றலாம்,
பலரைப் பலநாள் ஏமாற்றலாம்.
ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை திராவிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல் தமிழர்கள் நாங்களே புரிய வைப்போம்...
குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது...
குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும்.
குலதெய்வம் என்பது தெய்வங்களக்கு எல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது.
தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.
பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது.
நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.
அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில் தான்.
குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம்.
சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.
குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும்.
ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர்.
அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.
ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம்.
இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது.
குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்து கொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.
பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும்.
குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை.
ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது.
குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.
குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.
அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்...
சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்...
பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..
எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.
பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.
சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.
கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு (Pearlmillet)...
இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.
இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.
சோர்வு நீங்க...
மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
அஜீரணக் கோளாறு நீங்க...
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.
வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
உடல் வலுவடைய....
உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
இதயத்தை வலுவாக்கும்.
சிறுநீரைப் பெருக்கும்.
நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
தாதுவை விருத்தி செய்யும்.
இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதானால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்...
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது...
நாம் பெருமைபடவேண்டிய விசையமா ? இல்லை வெட்கபடவேண்டிய விசையமா?
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.
மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் . தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது...
2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்...
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.
அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.
சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.
மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.
இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.
இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.
அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.
மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.
இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.
மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை).
அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.
2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.
(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்).
கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.
மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.
தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்.
சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்...
சிறைக்கு பயந்து தலைமறைவான நிலானி.. செல்போன் சுவிட்ச் ஆப்.. கதறி அழும் குழந்தைகள்...
சின்னத்திரை நடிகை நிலானி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லலித் குமார் வற்புறுத்துவதாக கூறி போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காதலன் லலித் குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார்.
சின்னத்திரையில் நடிக்க நிலானி வாய்ப்பு தேடிய போது, லலித்தின் நட்பு நிலானிக்கு கிடைத்தது. ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்த போதிலும், நிலானி லலித்தின் பணத்திற்காக அவருடன் பழகி காதலாக பழகி பின் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்துள்ளார்.
லலித்திடம் பணம் தீர்ந்த பின் காதலை முறித்து கொண்டதால், லலித் தற்கொலை முடிவை எடுத்ததாக அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் லலித் காந்தி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீசார் நிலானியை கைது செய்யாமல் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தொடர் விசாரணைக்கு பயந்து பெற்ற குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு நிலானி தலைமறைவு ஆகியுள்ளதாகவும், இவருடைய குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிலானியை போனில் பிடித்து குழந்தைகளை சமாதானம் செய்யலாம் என சிலர் முயற்சித்த நிலையில் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
சித்தர்கள் தேவர்கள் ரிஷிகள் வழிபடும் லிங்கங்கள்...
1. பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்.
2. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்.
3. சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்.
4. ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்.
5. சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்.
6. ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்.
7. வருணன் ஸ்படிக லிங்கம்.
8. சித்தர்கள் மானச லிங்கம்.
9. புதன் சங்கு லிங்கம்.
10. கணேசர் கோதுமை லிங்கம்.
11. கருடர் அன்ன லிங்கம்.
12. அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்.
13. காமதேவர் வெல்லத்திலான லிங்கம்.
14. விபீஷணன் குப்பையிலிருக்கும் மண்ணிலான லிங்கம்.
15. போகர் மரகத லிங்கம்.
16. இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்.
17. ராகு பெருங்காயத்திலான லிங்கம்.
18. நாரதர் ஆகாச லிங்கம்.
19. செவ்வாய் வெண்னையிலான லிங்கம்.
20. நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்.
21. பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்.
22. ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்.
23. டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்.
24. மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்.
25. பரசுராமர் சோளத்திலான லிங்கம்.
26. பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்.
27. பறவைகள் ஆகாச லிங்கம்.
28. வாசுகி விஷ லிங்கம்.
29. கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்.
30. குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்.
இவ்வாறு பலவகையான லிங்கங்களை வழிபடுவதால் சித்தம் தெளிந்த சித்தனாகலாம்.
மேலே கூறியது நூறில் ஒரு பாகமே. இது போல் ஏராளம் உண்டு. அனைத்தையும் இங்கு போட முடியாததால் முடிந்தவரை சொன்னேன்...
குறிப்பு : இதில் பிரச்சனை என்னவென்றால் அவரவர் புரிந்துள்ள கர்மத்தின் படியே பலன் கிடைக்கும்...
தீமையை செய்தவர்கள் இதன் பலனை அடைய எண்ணினால் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
பூர்வ காலங்களில் வேற்றுகிரகவாசிகள் நம்மிடையே நடமாடினார்கள் என்பதை விளக்குவதற்க்கு, பண்டைய கலை படைப்புகளை விட சிறந்த இடம் இல்லை எனலாம்.
உலகில் நூற்றுக்கணக்கான பறக்கும் தட்டுகள் மற்றும் நட்சத்திரங்களுக்கிடையே தோன்றும் வேற்றுகிரகவாசிகளை பற்றி பழைய கலை மற்றும் குகை ஓவியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன...
இந்த வரைபடங்களில் சிலவற்றிலேயே இவர்கள் இருப்பை ஒத்துக்கொள்ள முடியும்...
Subscribe to:
Posts (Atom)