சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது.
இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு பெயர்களும் உண்டு.
நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.
இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
இரத்த குழாய் அடைப்பு நீங்கும்...
அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்..
சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.
நெறிகட்டிகள் குணமாகும்...
சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.
சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்...
போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.
நீண்ட நாள் கப நோய்களுக்கு சங்குப்பூ பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து சிறிதளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வந்தால் எளிதில் நிவாரணம் கிடைக்கும்.
சங்குப்பூ வேர்ப் பட்டையை ஊற வைத்த நீரை கால் டம்பளர் அருந்தி வர, சிறுநீரக நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.
மேலும் இந்த கொடியின் இலைகள் ஞாபக சக்தியை வளர்க்கும் சக்தி கொண்டது. நரம்பு சம்பந்தமான குறைகளையும் போக்கும்...
இதன் இலைச்சாறு வயிறு உப்புசத்தை போக்கும்.. தொண்டை புண்ணை ஆற்றும்...