14/10/2020

இலக்கிய இலக்கணம் (இசை)...

யானை, நாய், பூனை, கிளி, காக்கை, மயில் முதலிய உருவ பேதங்களைச் சிறு குழந்தைகளும் பகுத்து அறிகின்றனர். பின்பு அக்குழந்தைகள் எல்லோரும் பேசுவதிலிருந்தும் அவற்றின் வெவ்வேறு பெயர்களைத் தாமே அறிந்து கொள்கின்றனர். நாளடைவில் அவர்கள் செய்கை, குணம், உருவம் முதலியவற்றை எடுத்துக்கூறவும் முயலுகின்றார்கள்.

இவைபோல இசையுலகாவிய சங்கீத உலகத்தில் நிறப்பண்களின் (இராகங்களின்) விகற்பங்கள், பாட்டின் விகற்பங்கள், இசைக்கருவிகளின் ஒலிவிகற்பங்கள், அவற்றின் உருவம், அவற்றின் உருவம், அவற்றைத் திரும்பச் சொல்லும் திறமை முதலிய இவை, இயற்கையில் பல தடவை கேட்பதனால் அடைய பெறுகின்றன. இந்த அறிவு இலக்கிய அறிவு எனப்பெறும்.

யானைக்கும் பூனைக்கும் என்ன பேதம், ஆட்டிற்கும் மாட்டிற்கும் என்ன பேதம், குதிரைக்கும் கழுதைக்கும் என்ன பேதம், குரங்கிற்கும் மனிதனுக்கும் என்ன பேதம் என்பவற்றை நேரில் பார்த்துக் கவனித்து அறிந்தபடி அவற்றின் வேற்றுமையான அடையாளங்களை ஒருவன் எடுத்து விவரமாய் கூறுவதே இலக்கணப் பாடமாகும்.

இலக்கியமென்பது ஒன்றை மேற்பரப்பாய்ப் (ஸ்தூலமாய்) பார்த்து அறிவதைக் குறிக்கும் போது, இலக்கணமென்பது அதன் வெவ்வேறு பாகங்களின் அங்க அடையாளங்களை எடுத்துக் கூறுவதை குறிப்பதாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.