14/10/2020

எப்போது வரை சாதியானது தமிழ் அடையாளமாக இருக்கும்?

தமிழர்களுக்கு என்று முறையான நாடோ அரசோ இல்லை.

இருந்திருந்தால் ஆவணங்களில் 'இனம்' என்பது சேர்க்கப்பட்டு யார் எந்த இனம் என்பதற்கான சான்று இருந்திருந்திருக்கும்.

ஆனால் இன்று நம்மிடம் இனத்தின் உட்பிரிவுக்கான சான்று ஆவணம் மட்டுமே உள்ளது.

ஆக இன்று யாரெல்லாம் தமிழர் என்று அடையாளம் காண சாதி சான்று காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

தமிழர் தாய்நிலம் தமிழரின் (இராணுவக்) கட்டுப்பாட்டில் வந்தபிறகு

இனம் எது என்பதற்கான சான்று வழங்கப்படும் வரை தமிழர் சாதி அடையாளத்தை மறைக்காமல் இருப்பது அவசியமாகிறது.

நமக்கான அரசு அமைந்ததும் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு இனத்தை மட்டும் ஆவணங்களில் குறிப்பிட வேண்டும்.

மற்ற இனங்களுக்கு இனத்தின் மொத்த வரலாறே நீளமாக இல்லாத போது

தமிழரின் சாதி வரலாறு பிற இனங்களின் வரலாறை விட நீளமாயிருக்கிறது.

இது தமிழர்களின் சாதியப்பெருமைக்கு வழிவகுத்து பிரிவினை உண்டாக்கி

வந்தேறிகள் அரசியல் செய்ய வழி ஏற்பட்டுவிட்டது.

அதாவது நமது சாதி பிரச்சனைக்கு காரணம் நமது பழமையே ஆகும்.

அதனால் சாதி அடையாளத்தை விட பழமையான இன அடையாளம் புறக்கணிக்கப்பட்டு போதிய ஆய்வுகள் இல்லாமல் இன அடையாளம் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

50,000 ஆண்டுகள் பழமையான நமது இனம் அதன் பழமையை நிறுவ முடியாமல்...

சில நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான சாதி வரலாற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக முதலில் சாதி அடையாளத்தை ஏற்றுக் கொண்டு..  சாதிய ஏற்றத் தாழ்வை ஒழிக்க வேண்டும்.

பிறகு சாதிகள் அனைத்தும் இணைந்து தமிழர்நாடு அமைக்க போராட வேண்டும்.

பிறகு இன அடையாளத்தை உறுதி செய்து சான்றளித்து விட்டு சாதிய அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.

இதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.

வருங்காலத்தில் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிடும்.தமிழினம் மொத்ததமும் ஒரு தமிழ்ச் சாதியாக மாறித்தான் தீர வேண்டும்..

முப்படை கொண்ட தமிழர் அரசு அமைந்த பிறகு...

இன்று சாதிய வரலாற்றை எவ்வளவு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோமோ

அதே அளவு தீவிரத்துடன் இன வரலாறை ஆய்வு செய்ய வேண்டும்.

சுருக்கமாக...

தமிழர் நாடு தமிழரின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு வரும் வரை சாதி அடையாளமே தமிழ் அடையாளம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.