26/03/2019

இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல.. துருக்கி.. ஆய்வில் கண்டுபிடிப்பு...


சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது.

ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும். அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில் இருந்து ஆசியா மற்றும் ஐரோப்பாவை வெற்றி கொண்டு, குடியேறி வந்தவர்கள் எனவும், அவர்களால் மேற்கூறிய மொழிகள் பரவியது என்றும் அறியப்பட்டு வருகிறது. கருங்கடலில் இருந்து வந்தவர்கள் தேர் ஒட்டுதல் மற்றும் மேய்த்தல் தொழில் செய்தவர்கள், போர் வீரர்கள் என ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், தற்போது இதற்கு முரணான கோட்பாடு ஒன்று ஆராய்ச்சியில் அறியப்பட்டுள்ளது. அதாவது, 9000 ஆண்டுகளுக்கு முன்பே 'அனடோலியா' என்ற பகுதியில் (தற்போதைய துருக்கி) இருந்து இடம்பயர்ந்து வந்தவர்களாலேயே இந்திய-ஐரோப்பிய மொழிகள் உருவாயின என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த மொழிகளைப் பேசுபவர்கள் சாதாரண விவசாயிகள். மேலும், அவர்கள் அமைதியான முறையில் இடம்பெயர்ந்து வந்தவர்களே என்பதும், தற்போதுள்ள துருக்கியை போரினால் யாரும் கைப்பற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம், டச்சு, ஸ்பெயின், கிரேக்கம், ரஷியன் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகள் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத மாதிரி தோன்றினாலும், இந்த மொழிகளின் ஒலி பிறப்பிடம் மற்றும் சொல்லியல் ஆகியவைகளை ஆராயும் போது, மேற்கூறிய ஆறு மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இந்த மொழிகளில் உள்ள பல சொற்கள், ஒரே வேர்ச்சொல்லில் இருந்து வந்தவை என்பது, ஆராய்ச்சியாளர்களின் கருத்தான, 'ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளின் தாயகம் துருக்கி' என்பதற்கு வலு சேர்க்கிறது.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'மதர்' (Mother) எனும் வார்த்தைக்கும் பிற இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்க்கலாம். இதே சொல், ஜேர்மன் மொழியில் 'மட்டர்' (Mutter) எனவும், 'மட்' (Mat) என ரஷ்ய மொழியிலும், 'மடர்' (Madar) என பெர்சிய ( பெர்சியன் என்பது இரானிய மொழி) மொழியிலும், 'மா' (Ma) என ஹிந்தியிலும், லத்தின் மொழியில் 'மதேரி' (Materi) எனவும் அழைக்கப்படுவது, இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்குள் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறிய வார்த்தைகள் அனைத்தும், இந்திய-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் வேர்ச்சொல் 'மெஹ்தர்' (Mehter) என்பதிலிருந்து பிறந்தவை.

இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக் குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

அதிலும், இந்தியாவின் ஆரிய மொழியான ஹிந்திக்கும், ஜேர்மன் மொழிக்கும் இன்னும் நெருங்கிய தொடர்பு உள்ளது. (இதனால் தான், 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை, 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்து வந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது).

இதனாலேயே, ஹிந்தி மொழியில், மற்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் தாக்கம் வெகுவாகவே காணப்படுகிறது.

உதாரணம்: 'UPPER' எனும் ஆங்கில சொல், 'உப்பர்' (மேலே என பொருள்படும்) என ஹிந்தியில் அதே பொருளில் அழைக்கப்படுவதைக் காண்க.

மேலும், தமிழுடன் ஒப்பிடும் போது, ஹிந்தியில் வேர்ச்சொற்கள் மிகக்குறைவு தான். ஹிந்தி மொழி முழுக்க, முழுக்க இந்தோ-ஐரோப்பிய மொழிகள் மற்றும், இந்தோ-ஆரிய மொழியான சமஸ்க்ரிதத்தில் இருந்து கடன் வாங்கி உருவாகியிருக்கும்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.

தமிழ் மொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது.

எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு இப்போதும் இவை எளிதாக புரியும்.

இந்த கண்டுபிடிப்புகள் மொழி வரலாற்றையே மறு பார்வை செய்யத் தூண்ட வைப்பதாக ஆராய்ச்சி செய்த மொழியியல் அறிஞர் அட்கின்சன் தெரிவித்துள்ளார்...

டிடிவி தினகரனுக்கு இன்னும் ஒரே நாள் தான். கட்சியும் இல்லை, சின்னமும் இல்லை - தேர்தல் ஆணையம்...


https://youtu.be/hrbvgHhvMd8

Subscribe The Channel For More News...

பழந்தமிழர் அளவைகள்...


ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.

ஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.

இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள் மூன்றே முக்கால் குன்றி மணி எடை= ஒரு பனவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.

இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.

ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்).

ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.

ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள் இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.

இரண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.

ஏழரை நாழிகை = ஒரு சாமம்.

ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.

நான்கு சாமம் = ஒரு பொழுது.

இரண்டு பொழுது = ஒரு நாள்.

பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

இரண்டு பக்கம் = ஒரு மாதம்.

ஆறு மாதம் = ஒரு அயனம்.

இரண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்...

திமுக வாக்கு வங்கி சரிவு... மிகவும் மகிழ்ச்சி...


திருட்டு திராவிடத்தை ஒழிப்போம்...


தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவராகவும், வீட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனவும், வெளியில் தமிழும் பேசிவந்த இரு மொழியர் மட்டுமே தங்களை திராவிடர் என அழைத்துக் கொண்டனரேயன்றி...

ஆந்திரர்களோ ,
கன்னடர்களோ,
மலையாளிகளோ என்றுமே
தங்களை திராவிடர்கள் என
அழைத்துக் கொண்டதும் இல்லை, ஏற்று கொண்டதும் இல்லை..

ஆனால் இளிச்சவாய்த் தமிழன் மட்டுமே திராவிடன் ஆனான்...

புதிய வீடியோ வெளியாகி பரபரப்பு.. மீண்டும் வீஷ்வரூபம் எடுக்கும் கோடாநாடு விவகாரம்...


https://youtu.be/-OA_WY1nVyc

Subscribe The Channel For More News...

பிரம்மத்தை நோக்கி - 2...


மரண பயம் இல்லாத மனிதர் எவரும் இல்லாத அளவிற்கு மரணம் நம்மை பயமுறுத்தி வைத்துள்ளது. இங்கு இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும், தான் மட்டுமே இல்லாது போய் விடுவோம் என்கிற அறியாமை தான் அதற்கு காரணம்.

உண்மையில் இல்லாமல் போவது நம் மனதும் உணர்வும் மட்டுமே. மரணத்திற்குபின் இல்லாமல் போவது இவை இரண்டும் தான். உண்மையில் இல்லாமல் இருப்பவை தான் இவை.

உன் உடலை விட்டு உயிர் நீங்கியபின் உடலை எரித்து சாம்பலாக்கியபின் எது உள்ளதோ அதுவே உண்மை. அதுவே நிரந்தரம்.

அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. அது நிலையான ஒன்று. தியானத்தின் மூலம் இந்த நான் என்கிற அறியாமையை கடந்து அந்த உண்மை நிலையில் நீ பிரவேசித்து விட்டால் உனக்கு மரணமில்லை.

மரணம் எதில் நிகழுமோ அதையே தொலைத்த பின் மரணம் எங்கு நிகழும். கடந்தகால எண்ணங்களை நீ என நினைப்பது அறியாமை தானே. அந்த எண்ணங்கள் நீயா?

இல்லை அதே போல் ஒவ்வொரு கனமும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உணர்வுதான் நீயா? இவை இரண்டும் அல்லாத சாட்சி தன்மையாகிய பிரம்மமே நீ. பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

ஜீவன் இருக்கும் பொருட்களை உண்டால் தான் அதோட ஆரா/bio field energy-ன் ஆற்றல் முழுமையாக வீரியமாக கிடைக்கும்...


இப்படி உண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்...

திருட்டு திமுக ஒழிக...


திமுக கருணாநிதி சென்னைக்கு வந்ததோ திருட்டு இரயிலில்..

ஆனால் அவர் பேரனோ தொழில் தொடங்குவதற்கு மட்டும் 20 ஆயிரம் கோடி...

அப்படி என்றால் எத்தனை லட்சக் கோடிகளை கொள்ளையடித்து இருப்பார்கள்... நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்...

புகை பழக்கத்தால் உலகளவில் 10ல் ஒருவர் இறக்கிறார்.. கொடூர நோயே இது தான்...


https://youtu.be/6iXcxgNWDWw

Subscribe The Channel For More News...

தேர்தல் செலவுக்கு கூட பணம் இல்லாமல் தவிக்கும் தேமுதிக வேட்பாளர்கள்.. அதிமுக என்ன செய்யும்....


தேர்தல் செலவுக்கு, கட்சி தலைமை பணம் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன், தே.மு.தி.க., வேட்பாளர்கள் காத்திருக்கின்றனர். லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடுகிறது.

கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். விருதுநகரில், அழகர்சாமி; வட சென்னையில், மோகன்ராஜ்;திருச்சியில், டாக்டர் இளங்கோவன் ஆகியோர் போட்டியிடு கின்ற னர். இதில், சுதீஷை தவிர, மற்ற மூன்று வேட்பாளர்களும் வசதி குறைந்தவர்கள்.

 தர்மபுரியில், ஏற்கனவே நடந்த நகராட்சி தலைவர், லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டதால், வேட்பாளர் இளங்கோவன், நிதி நெருக்கடியில் உள்ளார்.

வட சென்னை வேட்பாளர் மோகன்ராஜ், கடனில் சிக்கி தத்தளித்து வருகிறார். கட்சி தலைவர் விஜயகாந்தின் உத்தரவுக்கு கட்டுப் பட்டு, அழகர்சாமி, இந்த சுமையை ஏற்று உள்ளார். வட சென்னை, கள்ளக்குறிச்சியில், தி.மு.க.,வை எதிர்த்து, தே.மு.தி.க., போட்டி இடுகிறது.

 திருச்சி மற்றும் விருதுநகரில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, களம் காண்கிறது. தி.மு.க., - காங்., கட்சி களுக்கு இணையாக செலவு செய்ய, தே.மு.தி.க.,வின், மூன்று வேட்பாளர்களும் திணறி வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள், பூத் செலவு, தேர்தல் பணிமனை செலவு, பிரசார செலவு என, வேட்பாளர்களை கசக்கி பிழிய ஆரம்பித்துள்ளனர். எனவே, கட்சி தலைமை, எப்போது பணம் தரும் என எதிர்பார்த்து, மூன்று வேட்பாளர்களும் காத்திருக்கின்றன...

பாஜக வேட்பாளர்கள் தோற்கடிப்பட வேண்டியவர்கள்...


பணம், பதவிக்காக எப்படிப்பட்ட கேடுகெட்ட செயலும் செய்ய தயங்காதவர் தான் இந்த பாஜக தமிழிசை என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்....

தாலி அறுத்தான் சந்தை...


குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்து வந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...

நேற்மறை எண்ணங்கள் ஆயுளை வளர்க்கும்...


https://youtu.be/A5ctJ5NtO-g

Subscribe The Channel For More News...

ஒரே பதில் தான் இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சவன் அமைதியா இருக்கான்...


தெரியாதவன் அறியாமையில் இருக்கான்.. ஆனா நமக்கு நடக்குற எல்லா பிரச்சனைக்கும் ஒரே காரணம் தான்...

நீங்கள் எந்த கிழமையில் பிறந்தீர்கள்.? இந்த கிழமையில் பிறந்தவர்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்...


https://youtu.be/FdfMBuQfUDk

Subscribe The Channel For More News...

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?


அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.

பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.

இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.

இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.

நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது.

இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.

21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.

2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது.

இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.

உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது.

7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.

மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.

அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.

1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.

அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.

ஆளும் பாஜக கட்சிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.

எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்...

கண்டிப்பாக கடைபிடியுங்கள் உறவுகளே...


கவலை இன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிகள்...


1. Take a 10-30 minute walk every day. And while you walk, smile. It is the ultimate anti-depressant.

தினமும் 10 முதல் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். அதுவும் புன்னகையோடு! இவை இரண்டும் சிறந்த மனச்சோர்வு நீக்கும் மருந்துகள்..

2. Sit in silence for at least 10 minutes each day.

தினமும் 10 நிமிடம் அமைதியாக உட்காருங்கள்..

3. When you wake up in the morning complete the following statement, My purpose is to ______ today.

காலையில் கண் விழிக்கும் போது, இன்று நான் ………. இதைச் செய்து முடிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள்..

4. Live with the 3 E’s — Energy, Enthusiasm and Empathy.

ஆற்றல், ஆர்வம், கருணை இவை மூன்றையும் கைக்கொள்ளுங்கள்.

5. Plan to read at least one book every month .

மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

6. Make time to practice meditation or prayer. They provide us with daily fuel and a mental center to focus on in our busy lives.

கடவுள் வழிபாட்டுக்கும், தியானத்திற்கும் நேரம் ஒதுக்குங்கள். நம் பரபரப்பான வாழ்க்கைப் பயணத்தில் மன ஒருமைப்பாட்டை வளர்க்க இவை உதவும்.

7. Spend more time with people over the age of 70 and under the age of 6.

6. வயதுக்குக் குறைவான குழந்தைகளிடமும், 70 வயதிற்கு அதிகமான முதியோரிடமும் அதிக நேரம் செலவழியுங்கள்.

8. Dream more while you are awake.

விழித்திருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்.

9. Try to eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உணவுகளை விட இயற்கையாக மரம், செடிகளில் விளையும் உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

10. Drink green tea and plenty of water.

அதிகமாக தண்ணீர் மற்றும் மூலிகைத் தேயிலை அருந்துங்கள்.

11. Try to make at least three people smile each day with your humor sense..

உங்கள் நகைச்சுவை உணர்வால், தினம் ஒருவரையாவது சிரிக்க வையுங்கள்.

12. Clear clutter from your house, your car, your desk and let new and flowing energy into your life .

கன்னா பின்னாவென்று கிடக்கும் உங்கள் வீடு, கார், மேசை ஆகியவற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.

13. Don’t waste your precious energy on gossip, OR issues of the past, negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive aspects of the moment.

தேவையில்லாத கிசு கிசுக்கள், மொக்கைகள், எதிர்மறை சிந்தனைகள், உங்களால் கட்டுப்படுத்த இயலாத நிகழ்வுகள் இவற்றில் உங்கள் பொன்னான நேரத்தினை வீணாக்காதீர்கள். நேர்மறை சிந்தனைகளில் உங்கள் நேரத்தை முதலீடு செய்யுங்கள்.

14. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class, but the lessons you learn will last a lifetime.

வாழ்க்கைப் பாடத்தில் பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்… அதை மறந்து விடுங்கள். ஆனால் அது கற்றுத்தந்த படிப்பினையை ஒரு நாளும் மறவாதீர்கள்.

15. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a college going girl .

காலை உணவை ராஜா போலவும், மதிய உணவை ராணி போலவும், இரவு உணவை கல்லூரி மாணவி போலவும் உண்ணுங்கள்.

16. Smile and laugh more. It will keep the negative blues away.

எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருங்கள்.

17. Life isn’t fair, but it’s still good.

வாழ்க்கை எப்போதும் நியாயமானதல்ல எனினும் சிறந்தது.

18. Life is too short to waste time hating anyone.

வாழ்க்கை மிகவும் குறுகியது. மற்றவர்களை வெறுப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...

தமிழர் வரலாறு - பகுதி 6 / ஐயா ஓரிசா பாலு...


https://youtu.be/9mzpeG38hdk

Subscribe The Channel For More News...

வீட்டு வைத்தியம்...


மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.

திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.

குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய்விட்டு வதக்கவும். வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில் இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும். உடலும் குளிர்ச்சியடையும்.

நெல்லி வற்றல், சந்தனத்தூள், தனியா மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்தபின் வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலை சுற்றல், கிறுகிறுப்பு முதலியன குறையும்.

வெல்லத்தை கெட்டியாகப் பாகு வைத்து அதில் மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு உருட்டி வைத்தால் இருமல் வரும்போது வாயில் அடக்கிக் கொள்ள இருமல் நிற்கும்.

மண் சட்டியில் உப்பை வறுத்துத் துணியில் கட்டி உப்பு ஒத்தடம் இரண்டு மூன்று வேளை கொடுத்தால் கழுத்து வலி நீங்கிவிடும்.

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள பசலைக் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக் குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.

நூல்கோலைத் துருவி ஊறவைத்து பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.

தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் காய்ந்ததும் வேப்பிலையைப் போட்டு பொரித்து எடுத்துவிடவும். கொத்தாகக்கூடப் போடலாம். பிறகு இறக்கி வைத்துக் கொஞ்சம் வெந்தயம் போட்டு மூடிவைக்கவும். இந்த எண்ணெய்யைத் தலையில் தடவிவந்தால் வெயிலால் வரும் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் தாக்காது.

வயிற்றில் பிரச்னை ஏற்பட்டால் கொஞ்சம் சீரகத்தை எடுத்து கொதிநீரில் போட்டு கஷாயமாக இரண்டு வேளை குடித்து வர நிவாரணம் கிடைக்கும்...

பாஜக எச். ராஜா சர்மா தமிழனிடம் எப்படி வாக்கு கேட்பார்...


பெருந் தலைவர் காமராஜர்...


1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால் போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச் சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம் ஞாபகசக்தி மிகுந்திருந்தது.

2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.

3. காமராஜரிடம் பேசும் போது, அவர் "அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி'' என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்..

5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான், திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனி கட்டி போல கரைந்து மறைந்து விடும்.

7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.

8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப் பெரிய தொகையாகும்.

9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி. எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.

11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.

12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால் பெரிய கேக் கொண்டு வந்து வெட்ட சொன்னால், " என்னய்யா... இது?'' என்பார். கொஞ்சம் வெட்கத்துடன்தான் "கேக்'' வெட்டுவார்.

13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காமராஜர், "மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறைய தொடங்க வேண்டும்'' என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் "காமராசர்'' என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.

15. காமராஜருக்கு "பச்சைத்தமிழன்'' என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.

16.காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.

17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.

18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.

19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், "மக்கள் தலைவர்'' என்றே கூறினார்.

21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.

22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார். இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.

23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார்.

24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.

25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. "மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை'' என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.

27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.

28. காமராஜர் எப்போதும் "முக்கால் கை'' வைத்த கதர்ச் சட்டையும், 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.

29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.

30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.

31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.

32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது. `எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை' என்று நேரு குறிப்பிட்டதுண்டு.

33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினை பற்றி மக்களுடன் விவாதிப்பார்.

34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள், இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.

35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்த செயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.

36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.

37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.

38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி' என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி' என்றால் `கறுப்பு காந்தி' என்று அர்த்தம்.

40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.

41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.

42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.

43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.

44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும், ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.

45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.

46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.

47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்'டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.

49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும் தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.

50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோ வரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி' என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.

51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.

53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.

54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.

55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.

56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்

57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்', `ஆகட்டும் பார்க்கலாம்' என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.

58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.

59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க' என அனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.

60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.

61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படி பேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.

62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.

63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக் காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.

64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால் 1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.

66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான் ஏற்படுத்தப்பட்டது.

67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.

68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.

69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.

70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.

71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது. விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.

72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.

73. பெருந்தலைவர் காமராஜருக்கு "பாரத ரத்னா" எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.

74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3). நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.

75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.

76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி, முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.

77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.

78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.

80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம்ஆண்டு நினைவு நாளன்று15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.

82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம்அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.

83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச் சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்' என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.

85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.

86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.

87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!

89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!

90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன்அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க' என்றுகமென்ட் அடித்தார்!

91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.

93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒரு போதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.

94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.

95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.

96.அவர் `ஆகட்டும் பார்க்கலாம்' என்றாலே காரியம் முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ' என்று முகத்துக்குநேராகவே சொல்லி அனுப்பி விடுவார்.

97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு எப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.

98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.

99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காது அவருக்கு.

100. சொற்களை வீணாகச் செலவழிக்க மாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவேஅனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.

101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்'எல்லாம் எனக்கு தெரியும்' என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.

102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத்தெரியும்.

103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார். தேவைப்பட்டால்அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை.

104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.

105. ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப்பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.

106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப்படுத்தாலும் காலைஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.

107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.

108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாதகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.

109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.

110. காமராஜர் எந்த வேலையை யும் தள்ளிப் போட்டதில்லை. அன்றையவேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.

111. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச் செல்வார்...

வாக்கு அரசியலால் அடிப்படை கட்டமைப்பு மாறப்போவதில்லை என்றாலும் பலரால் பலமுறை கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிவே இது...


வர்மக்கலை...


ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று.

இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்கக் கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நம் தமிழ்ச்சித்தர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா..?

இந்த வர்மக்கலை ஒரு கடல். இதைப் பற்றி எழுத ஒரு பக்கம் போதாது. அதனால் சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரும், ஞானபண்டிதரான முருப்பெருமானின் முதற் சீடருமான, கும்பமுனி, குருமுனி என அழைக்கப்படுவரும், 1008 அண்டங்களையும் அருளாட்சி செய்பவரும், அகத்தியம் என்ற தமிழ்நூலைப் படைத்தவருமான சித்தபெருமான் அகத்தியர்.

இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ). "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்குச் சாட்சி. சித்தபெருமான் அகத்தியர் கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்", "அகஸ்தியர் வர்ம கண்டி", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ", "அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு", "அகஸ்தியர் வர்மக் கண்ணாடி", "வர்ம வரிசை", "அகஸ்தியர் மெய் தீண்டாக்கலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன்" என்ற மன்னன் தான் இதில் வல்லவனாகத் திகழ்ந்தான். பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்குப் பின்னர் வந்த சோழர்கள் இதனைக் கற்றனர்.

பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி புத்தமதத்தைப் பரப்பச் சீனா சென்றபோது இந்தக் கலையும் அங்கு பரவியது. “Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India" என்ற பொருளைத் தருகின்றது. "ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது "இந்தியா ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். 1793ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது தாங்கள் இந்தக் கலை மூலமாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தமிழக இளைஞர்கள் வர்மக்கலை பயில்வதைத் தடை செய்தனர்.

அன்று ஆரம்பமான அழிவு, இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது. இந்தக் கலையை அனைவருக்கும் கற்றுத்தர மாட்டார்கள். இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார். வர்மக்கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறையைக் கையாள வேண்டும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.

இதை எந்த வயதினரும் கற்கலாம். ஆனால் யார் மட்டுமே கற்க முடியும்? "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே" என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது.

வர்மக் கலைகளின் முக்கியமான வகைகள் " "தொடு வர்மம்", "படு வர்மம்", "தட்டு வர்மம்", "நோக்கு வர்மம்" என வகைப் படுத்தப்பட்டுள்ளது. தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார். இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்தப் பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும். படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பாதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும் கற்றுத் தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது. யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும். உதாரணத்திற்க்குச் சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம். அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம்.

ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரைத் தாக்கும் வல்லமை கொண்டது இந்தக் கலை. ஆனால், இது யாருக்கும் இலகுவாகக் கற்றுத்தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் மட்டுமே இதைக் கற்கலாம். தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை...

டூத் பேஸ்ட் உபயோகிப்பதால் இந்த ஆபத்துக்கள் நிச்சயம்...


https://youtu.be/HnJwKlSgguQ

Subscribe The Channel For More News...

மனதில் தோன்றும் உணர்வு...


நாம் ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் போது வெற்றி மனோபாவத்துடன் ஆரம்பிக்கிறோமா? கண்டிப்பாக அப்படித்தான் ஆரம்பிக்கிறோம்..

ஆமாம் வெற்றி மனோபாவம் என்றால் என்ன? என்று யாராவது கேட்கலாம்.

அவர்களுக்கெல்லாம் நான் இரண்டு வரிகளுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைந்து சொல்ல வருவது என்னவென்றால்..

அந்த செயல் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற உறுதியான உணர்வு நம் மனதில் ஏற்படுகின்றதல்லவா? அது தான்.

நான் உறுதியான உணர்வு என்று தான் சொல்கிறேன். எண்ணம் என்று சொல்லவில்லை.

ஏனென்றால் எண்ணம் என்பது நமது மேல் மட்ட மனதில் தோன்றுவது.

உணர்வு என்பது உள்மனதில் ஏற்படுவது. அதற்கு சக்தி அதிகம்.

அந்த சக்தி நம்மை சரியான வழியில் நடத்திச் சென்று நமது குறிக்கோளை அடைய உதவும்.

சும்மா நமது உணர்வு மனதில் அந்த செயலில் ஜெயித்துக் காட்டுவோம் என்று வற்புறுத்தி நாம் நினைக்கலாம்.

ஆனால் சக்தி வாய்ந்த நமது ஆழ்மனக் கிடங்கில் உள்ள நாம் சேர்த்து வைத்த நமது பழைய குப்பைகள் அந்த நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக இருந்தால் பயனில்லை.

அந்த நீண்ட நாளைய சேமிப்புக்கு தான் சக்தி அதிகம்.

அவை இவரு ஜெயிச்சுருவாரோம்ல…என்ன கொடுமை சார் இது? என கேலி செய்யலாம்.

ஆக அந்த குப்பைகளை காலி செய்ய வேண்டும். எதிர்மறை எண்ணங்களை வேரோடு பிடுங்கி களைய வேண்டும்.

விழிப்புணர்வுடன் இருந்து மேலும் அவை முளைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆழ்மனதில் நன்னம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.

அந்த நல்ல நம்பிக்கைகள் நமக்கு வெற்றி மனோபாவத்தை ஏற்படுத்தும்.
சாதிக்கும் சக்தியை கொடுக்கும்.

வெற்றி மனோபாவத்துடன் நாம் செயல்பட ஆரம்பித்தோமானால் நமது சாதனைகளுக்கு வானமே எல்லை..

திருட்டு திமுக ஒழிக...


திமுக - திருடர்கள் முன்னேற்றக் கழகம்...

சிலம்பம் வரலாறு...


சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும்.

சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.

சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் 'சிலம்பு' ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.
சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய]] முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை , மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயப்படிப்பாக நடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் "சிலம்ப வரலாறும் அடிமுறைகளும்' என்ற நூலை வெளியிட்டுள்ளது...