என்னடா இது தர்மயுத்த நாயகனுக்கு வந்த சோதனை...
03/12/2017
ஆர்கே நகர் வந்த அதிமுக ஓபிஎஸ் யை வெளியே போ துரோகியே என முழக்கமிட்ட ஆர்கே நகர் மக்கள்...
என்னடா இது தர்மயுத்த நாயகனுக்கு வந்த சோதனை...
டெங்கு காய்ச்சலில் இருந்து தப்புவது எப்படி?
டெங்கு, பகலில் கடிக்கும் கொசுக்களால் பரவுகிறது..
எலிக் காய்ச்சல், பறவை காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று உலகில் உருவெடுக்கும் புது புது காய்ச்சல்கள் அத்தனையும் நம்மை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இப்போது டெங்கு காய்ச்சல் மிரட்டுகிறது.
லேசான உடல் வலி... கொஞ்சம் வெப்பம் உடலில் தெரிந்தாலே டெங்குவாக இருக்குமோ என்ற பயம் தொற்றிக் கொள்கிறது.
டெங்குவை நினைத்து பீதி அடைவதை விட அதைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக கொசுக்களால்தான் பல வியாதிகள் பரவுகிறது. ஆனால் டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும் ஏடிஸ் ஏஜிப்டி என்ற வகையை சேர்ந்த இந்த கொசுக்கள் தென் கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய வெப்ப மண்டல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்யும். சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும்.
டெங்கு வைரசில் டைப்-1, டைப்-2, டைப்-3 மற்றும் டைப்-4 அகிய 4 வகை வைரஸ்கள் உள்ளது. தண்ணீர் தேங்கும் பகுதிகள், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்கள், பாசன பகுதிகளில் ஈடிஸ் கொசுக்கள் உற்பத்தி தாராளமாக இருக்கும். டெங்கு காய்ச்சலாக இருந்தால் காய்ச்சல் திடீரென ஏற்பட்டு திடீரென உடல் வெப்பம் அதிகரிக்கும். தலைவலி, உடல்வலி, எலும்பு மூட்டுகளில் வலி இருக்கும்.
2 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சல் இருந்து கொண்டே இருக்கும். காய்ச்சல் தானே ஒரு மாத்திரை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்று நாமே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும்.
டெங்கு டைப்-1 பாதிப்பால் தொடர்ந்து ஒரு வாரம் காய்ச்சல் இருக்கும். வேறு பாதிப்புகள் இருக்காது. ஒரு முறை டெங்குவால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் இடை வெளியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் வந்தால் 2-ம் நிலையில் இருப்பவர்களாக கருதப்படுவார்கள். ரத்தம் உறைவதற்கு தேவையான ரத்த வட்டுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும், வாய், மூக்கு பகுதிகளில் ரத்தம் வெளிவரும். இதில் நோய் முற்றியவர்கள் டைப்-3க்கு தள்ளப்படுகிறார்கள்.
இவர்களுக்கு ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த அழுத்தம், நாடி துடிப்பு குறையும். மயக்கம் ஏற்படும். உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் ஏற்படும். டைப்-2, டைப்-3 நிலையில் இருப்பவர்கள் தான் அபாயம் ஏற்படும். ஆனால் இப்போது முதல் நிலை பாதிப்பு மட்டுமே இருப்பதால் பீதி அடைய வேண்டியதில்லை.
டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்த...
வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல், அதாவது ரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோ சைட்ஸ் என்ற வெள்ளை ரத்த அணுக்களின் அளவு (4000-10,000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல். எதிர்ப்பு சக்தியை பரிசோதனை செய்யும் ரத்த நிண நீர் பரிசோதனை ஆகியவைகள் இந்த நோயை கண்டுபிடிக்க பயன்படும்.
கொசுக்கடியில் இருந்து காப்பதன் மூலம் டெங்கு வராமல் தடுக்கலாம். எனவே வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். தொட்டிகள், குடங்களில் பல நாட்கள் தண்ணீரை சேமித்து வைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளனவா?
ஆங்கில மருத்துவத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
என்கின்றனர்.
சித்த, ஆயுர்வேத மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன.
நிலவேம்பு கசாயம் தினம் - காலை / மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரஸôல் பரவும் சுரங்களைத் தடுக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும்.
சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன...
பெண்ணின் வயிற்றில் 15 ஆண்டுகளாக இறந்த நிலையில் சிசு... மருத்துவர்கள் அதிர்ச்சி...
15 ஆண்டுகளுக்கு முன் கருக்கலைப்பு செய்த பெண்ணின் வயிற்றில் இருந்து இறந்த நிலையிலேயே சிசு இருந்தது கண்டுபிடிக்க நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் அதனை பெரிதுபடுத்தாமல் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். இதனால், வயிற்று வலியும், கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி வாந்தி எடுப்பதும் என்று பிரச்சனைகள் அதிகரிக்கவே, அவர் மருத்துவரை நாடி எக்ஸ்ரே எடுத்துக்கொண்டார்.
அப்போதுதான் தெரிய வந்தது. அந்த பெண்ணின் வயிற்றில் 15 ஆண்டுகளாக இறந்த நிலையில் சிசு ஒன்று இருந்தது என்று... அதிர்ச்சியடைந்த அந்த பெண், தாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கருவுற்றதாகவும், கணவர் மற்றும் குடும்பத்தாரின் எதிர்ப்பால் அதனை கலைத்தாகவும் கூறியுள்ளார்.
ஆனால், கருக்கலைப்பு செய்தவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், கரு முழுமையாக கலையாமல் கர்ப்பப்பையிலேயே இருந்துள்ளது.
இதையடுத்து, 2 மணிநேர அறுவைச்சிகிச்சைப்பிறகு வயிற்றில் இருந்த சிசு அகற்றப்பட்டது. 4 மாதம் ஆன நிலையில் கருவைக் கலைத்ததே இந்த விபரீதத்திற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள், வயிற்றில் உள்ள சிசு முழுமையாக கலைந்துவிட்டதாக என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளாமல் போவதே இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம் என்றும் மூத்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...
மீனவர்கள் மீட்பு பணி தொடர்பாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கை...
கொச்சியிலிருந்து தென் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் 25 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் ஈடுபட்டுள்ளது.
மேலும் மீனவர்களை தேடி கொச்சியிலிருந்து கப்பல்கள் கிளம்பி சென்றுள்ளன. கொச்சி அருகே 8 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
அலேப்பே அருகே 2 மீனவர்களை ஐஎன்எஸ் நீரேக்சாக் கப்பல் மீட்டது. திருவனந்தபுரம் அருகே 2 இறந்த மீனவர்களின் உடல்களை ஐஎன்எஸ் காகர்வானிகப்பல் மீட்டது.
விழிஞ்சம் கடற்கரை அருகே 15 மீனவர்களை மீட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...
சாகர்மாலா எனும் சவமாலை...
சாகர்மாலா திட்டம் அதாவது கடல்மாலைத் திட்டம் எனும் நாசகார திட்டம் இந்திய ஒன்றித்திலேயே மிகப்பெரிய செலவில் வரவுள்ள திட்டமாகும்.
அதூவது 8 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனிடம் இருந்தும் ரூ.6400 இந்த திட்டத்திற்கு போகிறது.
இது 2003 ல் வாஜ்பாய் பா.ஜ.க அரசால் பெரிதாக வெளியே தெரியாமல் தொடங்கப்பட்டு மன்மோகன் காங்கிரஸ் அரசால் மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று பா.ஜ.க அரசால் முக்கிய கட்டத்திற்கு வந்துள்ளது.
இத்திட்டத்திற்கு மேற்கண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த அத்தனை கட்சிகளும் உடந்தை.
சுருக்கமாக...
இந்திய ஒன்றியத்தின் கடற்கரை ஒட்டி பல வளங்கள் உள்ளன. அவற்றை தொழிற்சாலை அமைத்து சுரண்டு வார்கள்.
வெளிநாட்டிற்கு விற்க வசதியாக கடற்கரை வரை சாலை போடுவார்கள்.
கப்பலேற்ற வசதியாக புதிய துறைமுகங்கள் கட்டுவார்கள்.
அந்த துறைமுகங்களுக்கு மக்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்க வசதியாக ராணுவ முகாம்கள் ஏற்படுத்தி அம்முகாம்களை அகலமான கடற்கரை சாலைகள் அமைத்து இணைப்பர் மற்றும் தீவுகளில் ராணுவ தளங்களை அமைப்பார்கள்.
இவ்வாறு அனைத்து வளங்களையும் கப்பலேற்றி அனுப்பவுள்ளனர்.
ஆனால் கூறுவதோ இந்தியாவின் பழைமையான கடல்வணிகத்தை மறுபடி கொண்டு வருகிறோம் என்று.
அதாவது தமிழர்களின் கடல்வழி வணிகத்தை இவர்கள் இந்தியாவின் பெயரில் போட்டுக் கொள்கின்றனர்.
மேற்கண்ட எல்லாமே மத்திய அரசு பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் கொடுக்க அவர்கள் கான்ட்ராக்டர்கள் மூலம் செய்வார்கள்.
இதனால் வரும் லாபம் மொத்தமும் அவர்களுக்கே.. மக்களுக்கு நட்டம் மட்டுமே..
12 பிரம்மாண்ட துறைமுகங்களும் 200 சிறிய துறைமுகங்களும் கட்டவுள்ளனர்.
1208 தீவுகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.
7500 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலை போடவுள்ளனர்.
1450 கடல்வழி பாதைகளும் 76 ரயில்வழி பாதைகளும் 101 ஆற்றுவழி பாதைகளும் போடவுள்ளனர்.
12 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கவுள்ளனர்.
அதாவது பூர்வகுடிகளை வெளியேற்றிவிட்டு வடயிந்தியரை அனைத்து வசதிகளுடன் குடியேற்றுதல்.
இந்த திட்டம் 4 தலைப்புகளில் பிரிக்கப்பட்டுள்ளது.
1) துறைமுக நவீனப்படுத்தல் : இந்திய கடற்கரை 14 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டும்.
அதில் 3 தமிழக கடற்கரையை முற்றாக விழுங்கியபடி உள்ளன.
முதலில் இந்த பகுதி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படும்.
அதில் தமிழக அரசு எந்த தலையீடும் செய்ய முடியாது.
ஏற்கனவே எல்லைப் பகுதிகளை மலையாளி, தெலுங்கர், கன்னடர் விழுங்கிவிட்டனர். தற்போது கடற்கரையை ஹிந்தியர் விழுங்கவுள்ளனர்.
பிறகு இந்த நிலங்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும்.
இங்கே புரோக்கர் வேலையை மட்டுமே அரசாங்கம் செய்கிறது.
பிறகு மீனவ மக்களின் குடியிருப்புகளைக் காலிசெய்து அவர்களை வெளியேற்றுவர்.
ஏற்கனவே 30 கிராமங்களை வெளியேற்றிவிட்டனர்.
பிறகு துறைமுகம் கட்டுதல், சாலை போடுதல், கடலை ஆழமாக்கல், திட்டத் தொழிலாளர் குடியிருப்பு அமைத்தல் போன்றவை நடக்கும்.
2) துறைமுக இணைப்பு : துறைமுகங்களுக்கு சுரண்டிய வளங்களை கொண்டுவர வசதியாக ரயில், சாலை, ஆறு, பைப்லைன் ஆகியன போடப்படும்.
கடற்கரையை ஒட்டி 60 முதல் 200 மீட்டர் அகலமுள்ள சாலைகள் போடப்படும்.
இது சாதாரண சாலைகளாக இருக்காது.
இராணுவ டாங்கிகள் நகர்வதற்கென்றே உறுதியான அகலமான சாலைகள் போடப்படும்.
இதுபோக ஆங்காங்கே ராணுவ விமானங்கள் இறங்கும் தளங்களும் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியை முதலில் முந்திக்கொண்டு கொடுத்துவிட்டது தமிழக அரசு.
இங்கே செக்யூரிட்டி வேலை மட்டுமே அரசு பார்க்கிறது.
3) துறைமுகங்களை தொழிற்சாலை மயமாக்கல் : ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை நன்கு நவீனப்படுத்தி விரிவாக்குவர்.
அதில் தொழிற்சாலைகளும் கட்டுவர்.
இதன்மூலம் அதானி உள்ளிட்ட பண முதலைகள் ஆஸ்திரேலியாவில் தோண்டி எடுக்கும் நிலக்கரியை சிரமமில்லாமல் இறக்குமதி செய்யும்.
இதிலும் ஒரு கொடுமையான நகைச்சுவை உண்டு..
ஒரு டன் நிலக்கரியை ஆஸ்திரேலியாவிடம் அரச நிறுவனமான கோல் இந்தியா ரூ.25,000 கொடுத்து வாங்கி அதை ரூ.2,500 க்கு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கும்.
இத்தனைக்கும் ஆஸ்திரேலியாவிடம் பணம் வாங்கிக்கொண்டு நிலக்கரியை வெட்டி எடுத்து அனுப்புவது இதே கார்ப்பரேட்கள் தான்.
அதாவது அரசாங்கம் இங்கே டிரைவர் வேலை மட்டும் பார்க்கிறது.
இந்த வெட்டியெடுக்கும் கான்ட்ராக்ட்டை ஆஸ்திரேலியாவிடம் பேசி அதானிக்கு வாங்கித்தரத் தான் மோடி ஆஸ்திரேலியாவே போனார்.
இதற்கே வாய்பிளந்தால் எப்படி?
ஏற்கனவே 'நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்து தாருங்கள்' என பத்தாண்டுகள் முன்பே டாடா மற்றும் அம்பானிக்கு 45,000 கோடி சென்ட்ரல் வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளது மத்திய அரசு.
அவர்கள் 'நிலக்கரி தாருங்கள் ஆரம்பிக்கிறோம்' என்று இன்றுவரை வேலையைத் தொடங்கவில்லை.
இப்போதே அதானியிடம் 11 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இத்திட்டம் மேலும் 6 துறைமுகங்களை வழங்கும்.
இதில் ஒன்று தமிழகத்தில் வரும்.
இறக்குமதி அதானி என்றால் ஏற்றுமதி கார்ப்பரேட் சாமியாரான பாபா ராம்தேவ்.
ஒரு சைக்கிளில் வாழ்க்கையை ஆரம்பித்த சாமியார் ஹிந்துத்வா சக்தி மூலம் இன்று இந்திய ஒன்றியத்தின் மூன்றில் ஒரு பங்கு உணவுச் சந்தையை கட்டுப்படுத்தும் அளவு வளர்ந்து விட்டார்.
இவர் முக்கியமாக உணவுப் பொருள் மற்றும் சித்த மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து இன்னொரு அதானி ஆகவுள்ளார்.
தமிழகத்தில் முதலில் விவசாய நிலங்களை அழித்து மீத்தேன் அதாவது ஹைட்ரோகார்பன் எடுத்து விற்பார்கள்.
இந்த மீத்தேன் தானே அதற்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க தடையாக இருக்கிறது?
எனவே வேகவேகமாக மீத்தேன் எடுத்தபிறகு மண்ணையெல்லாம் தோண்டி நிலக்கரி, பெட்ரோல் என எல்லாவற்றையும் எடுத்து விற்பார்கள்.
இதுபோக மலைகளை வெட்டி கிரானைட், மணலை அள்ளி தாது, பாலாற்றை நாசமாக்கிய தோல் தொழிற்சாலை உற்பத்தி, நொய்யல் ஆற்றை நாசமாக்கிய துணி உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, மற்றும் இறைச்சி மீன்வகைகளை பதப்படுத்தி உற்பத்தி என தமிழகத்தையே மொட்டையடிக்க உள்ளனர்.
4) கடலோர சமூக மேம்பாடு : பெரும்பாலும் கடல்சார் தொழிலைச் செய்யும் கடலோர மக்களை தொழில் செய்ய விடாமல் கெடுத்து படிப்படியாக இவர்களை காலி செய்து அகதியாக அலைய விட்டுவிட்டு அந்த இடத்தில் இந்த திட்டத்தோடு தொடர்புடையோர் குடியமர்த்தப்படுவர்.
அதாவது ராணுவ முகாம், ராணுவ குடியிருப்பு, எஞ்சினியர் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பு.
இவைகளே ஸ்மார்ட் சிட்டி என்று வசதியான குடியேற்றம்.
இதுபோக லேபர் காலணி, அதற்கான கடைகள், கட்டடங்கள், விடுதிகள் என கடற்கரை முழுக்க பல இனங்களைச் சேர்ந்த கார்ப்பரேட் சமூகம் குடியேற்றப்படும்.
இதுதான் இவர்கள் கூறும் டெவலப்மெண்ட்.
அதாவது இந்திய கடற்கரையை ஒட்டி மீனவ கிராமங்களுடன் ஏறத்தாழ 3600 ஊர்கள் மற்றும் நகரங்கள் உள்ளன.
கடலோரம் 25 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களை ஒழித்து விட்டு 1 கோடி பேருக்கு வேலை தருவார்களாம்.
அதிலும் 10% வரையான வேலைவாய்ப்பு நிரந்தர வேலையாக இருக்கலாம்.
மற்றபடி அனைத்து வேலைகளும் கான்ட்ராக்ட் முறைப்படி தான்.
அதிலும் பெரும்பாலும் எடுபிடி வேலைகள்.
இதுதான் இவர்கள் கூறும் வேலை வாய்ப்பு.
ஏற்கனவே 30 கிராமங்களை காலி செய்து விட்டனர்.
நல்லதண்ணி குப்பம் சமீபத்தில் போலீசை விட்டு அடித்து நொறுக்கப்பட்டு காலி செய்யப்பட்டது.
மாற்றுநிலம் மாற்றுத்தொழில் என எதுவும் வழங்கப்படவில்லை.
200 வீடுகள், பள்ளி, கோவில், வாக்குச்சாவடி கொண்ட தனுஷ்கோடி வாழத்தகுதியற்ற இடம் என்று அறிவித்தது இதனால் தான்.
கடற்கரை அருகே பழமையான ஒரு கோவிலைக்கூட இடித்துள்ளனர்.
தமிழரது பழமைக்கான அகழ்வாராய்ச்சி தளங்கள் கடற்கரையை ஒட்டி உள்ளன.
அவை அனைத்தும் அழிக்கப்படும்.
தீவுகள் தனியாருக்கு சொந்தமாகும்.
தனியாருக்கு பாதுகாப்பாக கடற்படை ராணுவ தளங்களும் அமைக்கப்படும்.
இங்கே ஒரு ரவுடியின் வேலையை மட்டும் அரசாங்கம் செய்கிறது.
சாகர் மாலா எனும் இந்த திட்டம் மக்களை மண்ணோடு சேர்த்து அழிக்க போடப்படும் ஒரு சவமாலை.
இந்தியாவில் தனி ஹெலிகாப்டர் வைத்திருக்கும் சில கார்ப்பரேட் முதலாளிகள், பத்து தலைமுறை ஆனாலும் செலவு செய்யமுடியாத பணமாக பூட்டிவைக்கப்பட உள்ளது இந்த அத்தனை கொடூரங்களின் லாபமும்.
இந்த தாய்த் திட்டத்தின் கீழ் 126 துணைத் திட்டங்கள் உள்ளன.
அவையே கதிராமங்கலம், நெடுவாசல் ஆகிய திட்டங்கள்.
இந்த திட்டம் சுற்றுசூழலுக்கு முற்றிலும் எதிரான திட்டம்.
எந்த திட்டமாக இருந்தாலும் சுற்றுசூழல் மாசடையாமல் எப்படி கையாள்வது என்று தலைப்பு பெயருக்காவது இருக்கும்.
இதில் சுற்றுசூழல் எனும் வார்த்தையே வரவில்லை.
இத்திட்டத்திற்கு எந்த சுற்றுசூழல் அனுமதியும் வாங்கப்படவில்லை.
வாங்கவும் படாது.
மோடி நியமித்த சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியேற்றவுடன் செய்த முதல்வேலை 'தொழிற்துறை வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் துறை தடையாக இருக்காது' என்றும்
'தொழில் வளர்ச்சிக்கு விரைவாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்' என்றும் அறிவித்து எந்த திட்டத்திற்கும் முதல் அவசியமான சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு தேவையில்லாயல் ஆக்கப்பட்டது தான்.
சாகர்மாலா காற்றை மாசாக்கும், விளைநிலத்தை சாக்கடையாக்கும், நிலத்தை சுடுகாடாக்கும், மழையைத் தடுக்கும், கடலை மாசாக்கும், நிலத்தடி நீரை கெடுக்கும், உணவு உற்பத்தியை பாதிக்கும், இனப்படுகொலை நடத்தும், மழைப்பொழிவைத் தடுக்கும், பஞ்சம் வரவைக்கும்.
கடைசியாக மனிதர் மட்டுமன்றி பல லட்சம் உயிர்களைக் கொல்லும்.
பூமியில் ஒரு பகுதியையே நாசமாக்கும்.
எண்ணூர் பக்கம் கடலில் எண்ணெய் கொட்டியபோதே வாளியால் அள்ளிக்கொண்டிருந்த லட்சணத்தில் எதை நம்பி நாம் சாகர்மாலா போன்ற நாசகார திட்டங்களுக்கு இடம் கொடுப்பது?
இதை நாம் வருமுன் தடுக்கவேண்டும்.
வரும்பொழுது தடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம்.
ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கிவிட்டன.
இன்னும் கொஞ்சநாட்களில் ஹிந்தியாவின் இராணுவ டாங்கிகள் வர ஆரம்பிக்கும்.
அதன்பிறகு நாம் ஒன்றும் செய்யமுடியாது.
பூமித்தாய்க்கு எதிரான இந்த திட்டத்திற்கு நாம் உடன்பட்டால் நம்மைப் போன்ற ஒரு துரோகி யாருமில்லை.
முடிந்த அளவு ஊடகங்களால் மறைக்கப்பட்டு மெல்ல மெல்ல நடந்துவரும் இந்த திட்டம் பற்றி வேறு எந்த இனத்தவருக்கும் விழிப்புணர்வு இல்லை.
தமிழர்களுக்கு மட்டுமே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.
இதை தடுக்க நாம்தான் களத்தில் இறங்க வேண்டும். தலைமை ஏற்க வேண்டும்.
தகவல் : திரு. இங்கர்சால் (Tamil research institute)...
சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு...
வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது. அதிர்ச்சியான செய்தி தானே?
இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது வரலாற்று வல்லுநரான P.N.ஓக் அவர்கள்.
வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற
வார்த்தைகளும் சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
'வாடிகா' மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற
சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த பெயர்களை அவை பெற்றதாம்.
சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு.
அதிசய வைக்கும் ஒற்றுமை இந்தப் படத்தை பாருங்கள்.
லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின் வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு தெரியும்.
அதன் நடைபாதை விரைக்குறியை போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின் பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று பார்க்கையில் மூன்று பட்டையும் (சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.
வாடிகன் - பேரில் என்ன உள்ளது?
'வாடிகா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தான் வாடிகன் அதன் பெயரை பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம் என பொருளாகும்.
கிறிஸ்துவ மதம் தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க வைக்கிறது.
வாடிகனில் ஒரு சிவலிங்கம் தொல்பொருள் ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த
சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள
க்ரெகாரியன் எட்ருஸ்கன்அ ருங்காட்சியில் வைத்துள்ளனர்.
P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்..
கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும்
இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கதோலிக் வாடிகன், காபா, ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில் சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என அவர் கூறியுள்ளார்.
கிறிஸ்துவ மதம் என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய ஒரு வேத மதமாக தான் முதலில் உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதனை முதலில் 'கிருஷ்ண நீதி' அல்லது 'கிருஷ்ண அறவியல்' என்று தான் முதலில் அழைத்து வந்துள்ளனர்.
ஆமன் என்ற வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும் வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது, எனவும் அவர் கூறியுள்ளார்...
மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...
ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப் படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.
வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.
முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது. இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு பயன்படுத்திக் கொண்டு சிறந்த பலன் கண்டவர்கள் ரஷியர்கள்.
ஆழ்மன சக்திகள் குறித்து முதல் முதலில் அதிகமாக ஆராய்ந்த நாடுகளில் முதலிடம் வகித்தது ரஷியா என்றே சொல்லலாம். வாசிலிவ் என்ற ஆழ்மன ஆராய்ச்சியாளர் செய்கையால் கவரப்பட்டு ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின் லெனின்கிராடு பல்கலைகழகத்தில் ஆழ்மன ஆராய்ச்சிக் கூடம் ஏற்படுத்த அனுமதி அளித்து அங்கு நடந்த ஆராய்ச்சிகளில் ஸ்டாலினும், பிந்தைய ஆட்சியாளர்களும் ஆர்வம் காட்டினார்கள்.
1976ல் மாண்ட்ரீல் நகரில் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் மிக அதிகமான கோப்பைகளைத் தட்டிச் சென்ற கிழக்கு ஜெர்மானிய வீரர்கள் ஆழ்மனப் பயிற்சிகளில் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தனர் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அதைப் படித்தவுடனேயே 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாரான ரஷியா தங்கள் நாட்டிலேயே நடக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் மிகச் சிறப்பாக சோபிக்க வேண்டும் என்று எண்ணி தங்கள் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகளுக்கு அந்தப் பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தது. அந்தப் பயிற்சிகளையே ஆராய்ச்சிகளாகவும் மாற்ற எண்ணிய ரஷியர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் விளையாட்டு வீரர்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்தனர்.
’ஏ’ பிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு நூறு சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சி மட்டும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ’பி’ பிரிவில் 75 சதவீதம் உடல் ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் 25 சதவீதம் மன ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. அடுத்ததாக ‘சி’ பிரிவில் உடல்ரீதியான விளையாட்டுப் பயிற்சிகளும், மனரீதியான பயிற்சிகளும் 50, 50 சதவீதமாக அளிக்கப்பட்டது. கடைசியாக ‘டி’ பிரிவில் உடல் ரீதியான பயிற்சிகள் 25 சதவீதமும், மனரீதியான பயிற்சிகள் 75 சதவீதமும் அளிக்கப்பட்டது. கடைசியாக 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முடிந்த போது கணக்கிட்டதில் அந்த விளையாட்டு வீரர்களில் மிக அதிகமான வெற்றிக் கோப்பைகளைப் பெற்றது ‘டி’ பிரிவில் பயிற்சி பெற்ற வீரர்கள் தான் என்பதை ரஷிய ஆராய்ச்சி தெரிவித்தது. அதாவது 25 சதவீத உடல் ரீதியான பயிற்சிகளும், 75 சதவீத மனரீதியான பயிற்சிகளும் பெற்றவர்கள் தான் அதிகக் கோப்பைகள் பெற்றவர்கள். மற்ற பிரிவினர்களிலும் மனரீதியான பயிற்சிகள் பெற்ற அதிக விகிதத்தின் படியே அதிகக் கோப்பைகள் பெற்றிருந்தார்கள்.
மன ரீதியான பயிற்சிகளில் பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தியது மனக்கண்ணில் வெற்றியைக் காட்சியாகக் காணும் பயிற்சியைத் தான். இது விளையாட்டு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். அதன் பிறகு மேலை நாடுகளில் சர்வ தேசப் போட்டிகளில் பங்கு பெறும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியளிக்க விளையாட்டு மனோதத்துவ நிபுணர் (sports psychologist) தனியாக நியமிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. 1970 களில் மொத்த விளையாட்டுகளுக்கும் சேர்த்து ஓரிரண்டு விளையாட்டு மனோதத்துவ நிபுணர்களை மட்டும் வைத்திருந்த மேலை நாடுகளில் பல இப்போது ஒவ்வொரு விளையாட்டின் குழுவிற்கும் தனித்தனியாக விளையாட்டு மனோதத்துவ நிபுணரை நியமிக்கின்றன.
டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி அகாசி, கால்ஃப் வீரரான ஜேக் நிக்ளாஸ், கால் பந்தாட்ட வீரர் பீலே போன்றவர்கள் தங்கள் துறையில் சிகரத்தை எட்டி வரலாறு படைத்தவர்கள். அவர்களும், அவர்களைப் போன்ற பல வெற்றி வீரர்களும் visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்பவர்களாகத் தான் இருந்தார்கள்/இருக்கிறார்கள். அது அவர்களுடைய விளையாட்டுப் பயிற்சியுடன் சேர்ந்த ஒரு அங்கமாகவே பிரதான இடம் வகிக்கிறது.
கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார். ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார். (கிட்டத்தட்ட இதையே 53வது அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.).
அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார். அப்படி உருவகப்படுத்தும் பயிற்சியின் போது ஆட்டத்தின் முழு சூழ்நிலையையும் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆட்ட மைதானத்தின் சத்தம், கைதட்டல்கள், தட்பவெப்ப நிலை என்று முடிந்த அளவு எல்லா சின்னச் சின்ன விஷயங்களையும் அந்தக் காட்சியில் தெளிவாகக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இப்படி மனத்திரையில் தொடர்ந்து காட்சியைக் கண்டு ஆழ்மனதில் ஆழமாகப் பதித்தால் நிஜமான விளையாட்டின் போது ஆழ்மனம் அந்தப் பதிவை படபடப்பில்லாமல் நிஜமாக்கிக் காட்டும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல எல்லா இலட்சியங்களுக்கும் மிகச்சரியாகப் பொருந்தி வரும் என்கிறார்கள் ஆழ்மனப் பயிற்சியாளர்கள்.
ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.
பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமானால் நெப்போலியனைச் சொல்லலாம்.
ஒரு சாதாரணக் குடிமகனாய் பிறந்து வறுமையில் வாடி வளர்ந்த நெப்போலியன் இளமையில் ஒதுக்கமான ஓரிடத்தில் கருங்கற்பாறையின் பிளவு ஒன்றில் அமர்ந்து பகற்கனவு காணுவது வழக்கம். மற்ற சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் அவன் மட்டும் அங்கு அமர்ந்து சக்கரவர்த்தியாகத் தன்னை பாவித்து போர்களை வெல்வது போலவும் நாடுகளை ஆக்கிரமிப்பது போலவும் கற்பனை செய்வது வழக்கம். திரண்டு வரும் அலைகளைத் தன் எதிரிகளாகவும், எதிரிகள் தன்னருகே வந்து தோற்றுப் பின் வாங்குவது போலவும் கற்பனை செய்து கொள்வானாம். அவன் ஆழ்மனதில் பதித்த அந்த கற்பனைகள் பிறகு வரலாறாகியது என்பதை எல்லோரும் அறிவோம். நெப்போலியன் அமர்ந்து கற்பனைக் கனவு கண்ட அந்த பாறைப் பிளவு இன்றும் “நெப்போலியனின் அழகுமிகு செயற்கைக் குகை (Napoleon’s Grotto)” என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு வியப்பூட்டும் சம்பவத்தையும் மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்திக்கு உதாரணமாய் சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் மனோசக்தி பற்றிய சில அசாதாரண நிகழ்வுகளைக் காண்பித்தார்கள். அதில் ஒரு நிகழ்வு கான்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுடையது. கான்சர் முற்றிய கட்டத்தில் இருப்பதால் அவன் ஆறு மாதங்களுக்கு மேல் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள். அவனை ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பி அழைத்து வருகையில் அந்த சிறுவன் தாயிடம் தன் உடலுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தாய் அவனிடம் அந்த நோய் பற்றி விளக்கப் போகாமல் “உன் உடலில் நோய்க்கிருமிகள் நிறைய உள்ளன. அதனால் தான் உனக்கு அசுகம்” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள்.
ஆறுமாதங்கள் கழித்து சிறுவன் இறந்து போவதற்குப் பதிலாக ஆரோக்கியமாய் இருக்க தாய் மறுபடி அவனை அந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள். அவனைப் பரிசோதனை செய்து பார்த்த டாக்டருக்கு பேராச்சரியம். அவன் உடலில் கான்சர் செல்கள் இல்லவே இல்லை. அவர் அந்தத் தாயிடம் என்ன மருத்துவம் பார்த்தீர்கள் என்று கேட்க அவளோ “பெரிய டாக்டர் நீங்களே இனி ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டதால் நான் வேறு சிகிச்சைக்கே போகவில்லை” என்றாள். பின் மெல்ல அந்த சிறுவனை விசாரித்த போது பதில் கிடைத்தது. ’வீடியோ கேம்’களில் மிக ஆர்வம் உள்ள அந்த சிறுவன் தாய் அவன் உடம்பில் இருப்பதாகச் சொன்ன நோய்க்கிருமிகளை எதிரிகளாக பாவித்து தினமும் அவற்றை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவது போலவும் அவை எல்லாம் செத்து விழுவது போலவும் மனதில் கற்பனை விளையாட்டு விளையாடுவானாம். ஆழ்மனம் அவனுடைய கற்பனைப்படியே நோய்க்கிருமிகளைக் கொன்று அவனைக் குணப்படுத்தியே விட்டது. இது நடந்து முடிந்து பல வருடங்கள் கழித்து தான் டிஸ்கவரி சேனலில் இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார்கள். அந்த சிறுவன் அப்போது இளைஞனாக மாறி ஆரோக்கியமாய் இருப்பதைக் காட்டவும் செய்தார்கள்.
சக்கரவர்த்தியாவதும், ஒலிம்பிக்கில் கோப்பைகள் வாங்குவதும், கடும் நோய் குணமாவதும் கூட நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.
இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும். அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள். ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி ..பெருங்காயம் - பெருங்காயமே இல்லை...
பெருங்காயத்தை சமையலில் சேர்த்தால் வாயுத் தொல்லை நீங்கும் நன்கு ஜீரணமாகும் என்று நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால், நாம் கடையில் வாங்கும் பெருங்காயம், ஜீரணத்துக்கு ஆப்பு வைத்து விட்டு வாயுத் தொல்லையைத் தரும் என்று உங்களுக்குத் தெரியுமா?
அந்த கூட்டு பெருங்காயம் ...
இந்த கூட்டு பெருங்காயம் ...
அப்படின்னு விளம்பரங்களில் சத்தமா சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் இது ஏதோ கூட்டில் சேர்க்கும் பெருங்காயம் என நினைப்பதுண்டு. ஆனால் இது அந்த கூட்டு அல்ல. இந்தக் கூட்டு முடிச்சவிக்கி அரசியல்வாதிகள் தேர்தலில் கூட்டு போட்டு மக்களைக் கொள்ளையடிப்பதைப் போன்ற ஒன்றாகும்.
இது கொள்ளையடிக்கப் போவது நம் ஆரோக்கியத்தை. என்னென்ன நன்மைகள் விளையும் என்று நினைத்து உணவில் சேர்க்கிறோமோ, அதற்க்கு நேரெதிர் விளைவுகளை இந்த நம்பிக்கைத் துரோகி ஏற்படுத்துகிறதாம்.
அப்படி என்னதான் இதில் சேர்க்கிறார்கள்?
ஒரு வகையான அராபிய பிசின் 60%,
மைதா 30%,
பெருங்காய வாசனை தரும் ஒரு வித எசன்ஸ் 10%
இவற்றின் மொள்ளமாரி கூட்டே கூட்டுப் பெருங்காயம். இந்த மூன்றில் எதுவுமே பெருங்காயம் இல்லை என்பது தான் விந்தை!! இதை ஏதோ இரகசியமாகவோ, திருட்டுத் தனமாகவோ செய்வதாக நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. "பெருங்காய டப்பாக்களின் மேலேயே கொட்டை எழுத்துகளில் அச்சடிச்சு விற்கிறாங்க, ஆனால் நாம்தான் கவனிப்பதில்லை"-என்று படித்ததும் வியப்பாக இருந்தது. சரி நாமே பார்த்துடுவோம்னு வீட்டில் வாங்கி வைத்திருந்த இரண்டு வெவ்வேறு பிராண்டு பெருங்காய டப்பாக்களை எடுத்து வரச் சொல்லி பார்த்தேன். அட ஆமாங்க அவனுங்க க்ளீனா எழுதி வச்சுதான் நம்ம தலையில் கட்டுரானுவ...
இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
வயிறு புண்ணாகும்....
வயிற்றில் வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..
மயக்கம் வரும்..
பால்காயம்.. என நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பெருங்காயமே நாம் விரும்பும் உடல் ஆரோக்கியத்தை தருமாம்...
மழை நேர உஷார் நடவடிக்கைகள்...
மழை நேரத்தில் அவசர சிகிச்சை அல்லது மருத்துவ உதவிக்கு டாக்டரை நேரில் சந்திக்க முடியாது. அதனால் முன்கூட்டியே உங்கள் குடும்பத்தினர் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
மழை நேரங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்பது உறுதியற்ற நிலை. எனவே தேவையான மளிகை, காய்கறி பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். காய்கறிகளில் சீக்கிரம் அழுகிவிடாத காய்கறிகள் மற்றும் கிழங்கு போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கான அவசர நேர மருந்துகள் மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
சிறுவர்களுக்கு ரமணன் இருக்கிறார். பெரியவர்களுக்கு வழியில்லை. அலுவலகம் சென்றுதான் தீரவேண்டும். அதனால் ஓரளவுக்கு நல்ல மழைக்கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.
கிரைண்டர், மிக்சி போன்ற மின்னணு பொருட்களின் மின் இணைப்பை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் துண்டித்து வைத்துவிடுங்கள். ஷாக் அடிக்காமல் பாதுகாக்க உதவும்.
மழைநேரத்தில் வீட்டின் வெளியே துணிகளை காய வைக்க முடியாது. அதனால் வீட்டின் உள்ளே காயவைப்பீர்கள். ஆனால் படுக்கும் அறையில் காயப்போடாதீர்கள். குழந்தைகளுக்கு அறையின் குளிர்ச்சியால் ஜலதோஷம் உருவாகும்.
மழை நேரம்தான் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும். அதனால் எப்போதும் காய்ச்சிய நீரையே குடிக்க கொடுங்கள். நீங்களும் குடியுங்கள்.
சேட்லைட் சேனல் கனெக்ஷன் இருந்தாலும் முடிந்தால் இந்த மழை சீசன் முடியும்வரை கேபிள் இணைப்பு வாங்கி வையுங்கள். காரணம் எந்த நடிகர் விளம்பரம் செய்த டிடிஎச் ஆக இருந்தாலும் மழை இடி வெள்ள நேரங்களில் டிக்கெட் வாங்கி விடும்..
உலகின் திகில் கிளப்பும் தீவு...
ஸ்ட்ரோமா தீவு (Stroma Island)...
ஸ்காட்லாண்டில் இருக்கும் சிறு தீவு..
1901யில் 375 பேர் வாழ்ந்த தீவில், 1961யில் 12 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இன்று யாருமில்லை.
ஒரேயொருவர் மட்டும் தன்னுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டபடி, அவ்வப்போது வந்து போகிறார்.
ஒரு காலத்தில் இந்த தீவு மக்களின் வாழ்க்கை அவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. தன்னிறைவு பெற்ற தற்சார்பு சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
திடீரென மக்கள் தீவை விட்டு விலகியதற்கான உறுதியான காரணம் இன்று வரை தெரியவில்லை.
வெளியேறிய மக்களும் காரணங்களைப் பேச மறுக்கிறார்கள்.
மக்கள் வெளியேறியத் தொடங்கியது முதல் இந்தப் பகுதியில் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகின.
இன்றும் அலைகள் மிகச் சாதாரணமாக 12 அடி உயரம் வரை எழுகிறது.
ஒரு அமானுஷ்யமான அமைதியோடு தனியே நின்று கொண்டிருக்கிறது ஸ்ட்ரோமா தீவு...
மூலிகை காபி செய்முறை...
இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.
காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..
தேவையான மூலிகை பொருட்கள்...
1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.
இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும். இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.
நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.
காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.
இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.
உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.
குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்) ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்...
தமிழர்களின் வீர விளையாட்டு - மலேசியாவில் முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு...
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மலேஷியாவில் வரும் ஜனவரி 7ம் தேதி தொடங்க உள்ளது.
தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக மலேஷியாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போட்டிக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
மலேஷியாவில் களப மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் மலேசியாவை சேர்ந்த 20 காளைகள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 15 மாநில வீரர்கள் பங்கேற்கின்றனர்.
மலேஷியாவைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்...
உத்திரபிரதேச உள்ளாட்சி தேர்தல்...
பாஜக + தேர்தல்ஆணையம் கூட்டணி மீண்டும் வெற்றி..
EVM பயன்படுத்திய இடங்களில் பாஜக 46% வெற்றி..
வாக்கு சீட்டு பயன்படுத்திய இடங்களில்
பாஜக வெறும் 15% மட்டுமே வெற்றி?
தமிழகத்திலும் வாக்கு சீட்டு இயந்திரத்தில் மிகபெரிய ஊழல் நடைபெற்றே வருகிறது ஆனால் இதைப்பற்றி எந்த அரசியல் இயக்கங்களும் வாயை திறப்பது இல்லை என்பதை பார்க்கையில் , எல்லா கட்சிகளும் கூட்டுக் கலவாணிகளோ என்ற சந்தேகம் வராமல் இல்லை ?
ஓசூர் அருகே 3000 ஆண்டு பழமையான கல்திட்டை கண்டு பிடிப்பு...
ஓசூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், சிவா, காமராஜ், ஜெகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வரலாற்று கல்திட்டைகள், கல்வெட்டுகளை கண்டறிந்து வருகிறார்கள்.
ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே தாசனபுரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நமது முன்னோர்களின் ஈமச்சின்னங்களான கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது..
இந்த கல்திட்டைகள் அனைத்தும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 50க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில், உள்ள கல் வட்டங்கள் ஒரு அடுக்கு முதல் 3 அடுக்கு வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அகழாய்வு செய்தால் புதிய வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.
இந்த பகுதியில் உள்ள கல்திட்டைகள் புதையலுக்காக தோண்டப்பட்டு, நமது முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
இதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..
மாவீரன் தமிழ் மாமன்னன் இராவணன் அரக்கனா.?
பார்ப்பனீய மையம் உருவாக்கிய இராமாயணத்தில் மேலோட்டமாக பார்த்தால் இராவணன் ஒரு பெண் மோகம் கொண்ட அரக்கன் என்றுதான் சொல்லியிருப்பார்கள். அதையும் எமது உறவுகள் இன்று வரை நம்பிக்கொண்டு உள்ளார்கள் என்பது நிதர்சனம் இது உண்மையா இல்லை பொய்மையா என்று சில உறவுகள் விடை தெரியாது உள்ளார்கள் உங்களுக்கான விடை இன்று பார்ப்போம்.
தமிழர்களாகிய நம்மை பார்ப்பனீயர் சூழ்ச்சி செய்யப்பட்டு உளவியல் ரீதியாக தமிழ் இனத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்து நம்பும்படி செய்து விட்டார்கள்.
இதன் வெளிப்பாடே தமிழ் மன்னரான இராவணன் விட பார்ப்பனீய காமுகன் ராமன் நல்லவர் வல்லவர் என்று நினைத்துக் கொண்டுள்ளோம்.
சரி நமது உறவுகளிடம் யார் இராவணன் என கேட்ட்டால்?
இராவணன் ஒரு பெண் மோகம் கொண்ட அரக்கன் என்றுதான் சொல்லுவார்கள்.
சரி நமது உறவுகளிடம் யார் இராமன் என்று கேட்டுப் பார்த்தால் ?
இந்துக் கடவுள் திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இப்படி பார்ப்பனீய கருத்தியலை கக்குவார்கள்.
இந்த தொடர் ஊடாக நீங்கள் உள்வாங்கும் கருத்தியல் எமக்கான விடுதலை கருத்தியலாக அமைய வேண்டும் பார்ப்பனீய உளவியல் யுத்தத்தை ஊடருக்கும் கருத்தியலாக இருக்க வேண்டும்.
இந்த கருத்தியலை ஒவ்வொரு தமிழனும் மாற்றி உண்மையான கருத்தியலை உள்வாங்கிக் கொண்டு உங்களது குடுபத்திற்கு உண்மையை எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர் எழுதப்படுகின்றது.
நமது தமிழ் மன்னர் இராவணன் பற்றி பார்ப்போம்.
இராவணன் காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.
முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை சான்றுகள் இருக்கின்றன.
இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அது போக தமிழ் மன்னர் இராவணன் பார்ப்பனீய காமுகன் இராமனால் கொல்லப்படவில்லை.
உலகத்தின் மூத்த இனம் தமிழினம. தற்போதைய இந்தியாவில் அரப்பா, மொகஞ்சதாரோ என்ற பகுதிவரை பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் எனறும், உலகத்தின் மிகச்சிறந்த நாகரீகமடைந்த மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் எனப் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
ஆனால் இவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினம் இமயம் முதல் குமரிக்கண்டம் வரை பரவி வாழ்ந்த நம் தமிழினம் இன்று தமிழ்நாடு மற்றும் தமிழீழம் என்ற குறுகிய பகுதிக்குள் சுருங்கியது எப்படி என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?
உலகெங்கிலும் அடக்கி ஆண்டு வாழ்ந்து வந்த நம் தமிழ் இனம், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கனவாய் வழியே துருக்கி பகுதியில் இருந்து புகுந்த ஆரிய இனத்தால் வீழ்ந்தது தமிழினம்.
உள்ளே புகுந்த ஆரிய இனம் மெல்ல மெல்ல நம்மை வஞ்சகமாக புராணம், இதிகாசம் என்ற பெயரில் வீழ்த்தியது.
அப்படி பார்ப்பனீய தமிழர்களுக்கு இடையே நடந்த போரில் ஆரியர்கள் தமிழர்களை வஞ்சகமாக வெற்றி கொண்டதின் குறியீடகாவே, நம் தமிழ் மன்னர்களான இராவணர், நரகாசுரர், இரணியர் போன்றோர்களை அரக்கர்களாக, அசுரர்களாக சித்தரித்தது வந்தேரி ஆரிய பார்ப்பனிய இனம்.
புராணங்களில் வரும் அரக்கர்கள் அசுரர்கள் ஆகியோர் கருப்பாக இருப்பது என்பது அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு எளிய உதாரணம்.
அப்படி ஒன்று தான் ஆரியர்கள் தங்களுக்காக எழுதிக்கொண்ட இராமாயணம்.
பார்ப்பனீய -தமிழர் போரையே இராமாயணம என்றும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் தமிழர்ககளைத் தான் என்றும் பார்ப்பனீய ஜவர்களால் நேரு, விவேகானந்தர், பி.டி.சீனிவாசய்யங்கார் போன்றவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.
அதில் தமிழ் மாமன்னராகிய இராவணன் அவர்களை அரக்கனாக, அசுரனாக சித்தரித்து பார்ப்பனீய இராமனை கதாநாயகனாக சித்தரித்து மகிழ்ந்தது வந்தேரி பார்ப்பனீய இனம்.
தமிழ் இனத்தின் குறியீடாக இராவணன் உயர்ந்து நிற்க்கிறார். அத்தகைய இராவணனை அவரது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கெளுத்தும் இராமலீலாவை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடி அரசாண்ட தமிழ் மக்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.
இராவணன் வீரம் போற்றுதலுக்குரியது மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான்.
முதன் முதலில் இராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொது வெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான்.
இராவணனை தமிழ் மன்னன் என்று ராமசாமி நாயக்கர் சொன்னார். இராமாயன எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது.
சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல. இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன.
நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என முழக்கம் எழுப்பி இருக்கின்றனர்.
விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இராவணன், மகிஷாசூரன் உருவ பொம்மைகளை எரிப்பதற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பத்திரிகை செய்தி பற்றி இங்கு ஏற்கனவே பகிரப்பட்டு இருந்தது.
பழங்குடி மக்களின் திருமணங்களில் இராவணனிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நிகழ்ச்சிகள் இப்போது வழக்கமாகி வருகின்றன.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மே.வங்காளத்தில் பழங்குடி மக்களிடம் எதிர்க் கலாச்சாரம் பரவி வருகிறது. ’மகாராஷ்ட்ரா ராஜ்ய ஆதிவாசி பச்சோ அபியான்’ என்னும் அமைப்பு இராவணன் மீது வாரி இறைக்கப்பட்டு இருக்கும் அவதூறுகளுக்கு எதிராக பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. அவ்வமைப்பின் தலைவர், அசோக் பாகல், ‘இராவண வழிபாட்டை மையப்படுத்தி செயல்பாடுகள் இருந்தாலும், இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு, அவர்களின் ஆதாரங்களை மீட்டெடுப்பதுதான்’ அமைப்பின் நோக்கமாக சொல்கிறார்.
இந்திய வலதுசாரிகளின் பீடமான ஆர்.எஸ்.எஸ்ஸின் நெற்றிப் பொட்டில் விண்ணென்று உறைக்க, துடிதுடித்துக் கத்த ஆரம்பித்திருக்கிறது. அதன் தேசீயத் தலைவர்களில் ஒருவரான அனிருத்தா தேஷ் பாண்டே ‘இராவணனை மகிமைப்படுத்துவது’ என்பது நாட்டின் கலாச்சாரத்தையே பிளவுபடுத்துவதாகும் என அலறி இருக்கிறார். ‘பழங்குடி மக்களை கெடுக்கிறார்கள்’’ என புலம்புகிறார்கள். ஒன்றிரண்டு பழங்குடி மக்கள் பகுதிகளில்தான் ‘இராவணனை’ நாயகனாக கருதுகிறார்கள், பெரும்பாலானவர்கள் இன்னமும் ராமர் வெற்றி பெறுவதைத்தான் கொண்டாடுகிறார்கள்’ என்று தங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் தீப்பற்றி விட்டது. புகைய ஆரம்பித்து இருக்கிறது.
பார்ப்பனியம் காலம் காலமாய் இந்த சமூகத்தின் மூளைக்குள் ஏற்றி வைத்திருந்த பிம்பங்கள், சிந்தனைகளை தகர்த்து எறியும் விதைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.
யோகி ஆதித்தியநாத் 100 மீட்டர் உயரத்தில் இராமருக்கு சிலை வைக்கட்டும். அவர்களின் இதிகாசங்கள், காவியங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இராமரை மையப்படுத்திய அரசியல் அதிகாரங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிய இராவணன் மீண்டும் தோன்றி இருக்கிறார்.
தமிழினம் ஆபத்து வரும் போதெல்லாம் தற்காக்கும் முகமாக இராவண மன்னர் வருவார் அது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபகரனாக இருக்கலாம். தமிழ் நாடு தேசியத் தலைவர் தோழர் தமிழரசனாக இருக்கலாம். இதை படிக்கும் உங்களில் பலராகவும் இருக்கலாம் ஒவ்வொரு தமிழ்மக்களிடமும் நமது முன்னோர்கள் மரபு இணைந்து உள்ளது.
தமிழ் இனத்திற்கு எதிராக பார்ப்பனீயமும் அதன் அடிவருடிகளும் உருவாக்கப்படும் எதிர் வினையாக்கத்தை முறியடிக்க பேர் புகழ், அடையாளம், தவிர்த்து முகம் மறைத்து இனத்தின் அடையாளம் மட்டுமே பெரியதென போராடும் ஒவ்வொரு தமிழனும் இராவணன் தான்...
Subscribe to:
Posts (Atom)