03/12/2017

மழை நேர உஷார் நடவடிக்கைகள்...


மழை நேரத்தில் அவசர சிகிச்சை அல்லது மருத்துவ உதவிக்கு டாக்டரை நேரில் சந்திக்க முடியாது. அதனால் முன்கூட்டியே உங்கள் குடும்பத்தினர் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும்.

மழை நேரங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்பது உறுதியற்ற நிலை. எனவே தேவையான மளிகை, காய்கறி பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். காய்கறிகளில் சீக்கிரம் அழுகிவிடாத காய்கறிகள் மற்றும் கிழங்கு போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கான அவசர நேர மருந்துகள் மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுவர்களுக்கு ரமணன் இருக்கிறார். பெரியவர்களுக்கு வழியில்லை. அலுவலகம் சென்றுதான் தீரவேண்டும். அதனால் ஓரளவுக்கு நல்ல மழைக்கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.

கிரைண்டர், மிக்சி போன்ற மின்னணு பொருட்களின் மின் இணைப்பை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் துண்டித்து வைத்துவிடுங்கள். ஷாக் அடிக்காமல் பாதுகாக்க உதவும்.

மழைநேரத்தில் வீட்டின் வெளியே துணிகளை காய வைக்க முடியாது. அதனால் வீட்டின் உள்ளே காயவைப்பீர்கள். ஆனால் படுக்கும் அறையில் காயப்போடாதீர்கள். குழந்தைகளுக்கு அறையின் குளிர்ச்சியால் ஜலதோஷம் உருவாகும்.

மழை நேரம்தான் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும். அதனால் எப்போதும் காய்ச்சிய நீரையே குடிக்க கொடுங்கள். நீங்களும் குடியுங்கள்.

சேட்லைட் சேனல் கனெக்ஷன் இருந்தாலும் முடிந்தால் இந்த மழை சீசன் முடியும்வரை கேபிள் இணைப்பு வாங்கி வையுங்கள். காரணம் எந்த நடிகர் விளம்பரம் செய்த டிடிஎச் ஆக இருந்தாலும் மழை இடி வெள்ள நேரங்களில் டிக்கெட் வாங்கி விடும்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.