ஓசூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று ஆய்வாளர் அறம் கிருஷ்ணன் தலைமையில் பிரியன், மஞ்சுநாத், சிவா, காமராஜ், ஜெகன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் வரலாற்று கல்திட்டைகள், கல்வெட்டுகளை கண்டறிந்து வருகிறார்கள்.
ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே தாசனபுரத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் 50க்கும் மேற்பட்ட 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய நமது முன்னோர்களின் ஈமச்சின்னங்களான கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அறம் கிருஷ்ணன் கூறியதாவது..
இந்த கல்திட்டைகள் அனைத்தும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சுமார் 50க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில், உள்ள கல் வட்டங்கள் ஒரு அடுக்கு முதல் 3 அடுக்கு வரையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு அகழாய்வு செய்தால் புதிய வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.
இந்த பகுதியில் உள்ள கல்திட்டைகள் புதையலுக்காக தோண்டப்பட்டு, நமது முன்னோர்களின் வரலாற்று சின்னங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
இதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.