03/12/2017

தமிழர்களின் வீர விளையாட்டு - மலேசியாவில் முதன் முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு...


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மலேஷியாவில் வரும் ஜனவரி 7ம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகறிய செய்யும் முயற்சியாக மலேஷியாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிக்கான அறிமுக விழா சென்னை கிண்டியில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

மலேஷியாவில் களப மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் மலேசியாவை சேர்ந்த 20 காளைகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த 15 மாநில வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மலேஷியாவைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.